வன்னி அடங்காப்பற்று குருவிச்சை நாச்சியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,271 
 
 

முன்னுரை

நாச்சியார் என்பது அரசாட்சி செய்யும் ‌மன்னனின் மனையாளை அல்லது அவன் விரும்பி காதலித்த பெண்ணைக்குறிக்கும் ஒரு உயர்ந்த உன்னத பண்டைய பெயர். இது ஒரு சமூகம் சார்ந்த பெயர் இல்லை. நாச்சியார் என்றாலே வீரம் செறிந்த பெண் எனப்படும்

மாவீரன் பண்டாரடவன்னியனின் சகோதரிக்கும். அவன் காதலிக்கும் பெண்ணுக்கும் நாச்சியார் என்று முடிவடையும் பெயர்கள் இருந்தாக சொல்கிறது வரலாறு இரு நாச்சியார்ளுக்கும் ஒரு தனிக காதல் கதை உண்டு

***

பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக நிலவிய குறுநில அரசுகளே வன்னிமைகள் என்னும் சிற்றரசுகளாகும். மானிய முறையிலான சமுதாய அமைப்பு நிலைபெற்ற காலத்தில், இலங்கையின் அரசியலிலும், பொருளாதார அமைப்பிலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொதுவாக அவை இலங்கையின் வரட்சி வலயங்களிலேயே அமைந்திருந்தன. அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் முல்லைதீவு கிளிநொச்சி வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதிகள் தமிழ் வன்னியர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.

சோழர்களின் ஆட்சிக் காலத்திலே தொண்டை மண்டலத் தொடர்பின் காரணமாக இலங்கையில் வழக்கில் நிலவின. வேளைக்காரப் படைகளின் தலைவர்கள் பிரதேசங்களின் தலைவர்களாகியதன் விளைவாகவே குறுநில அரசுகளை வன்னிமைகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். இந்த குறு நில மன்னர்கள் சோழர்களின் வேளைக்காரப் படைவீர்கள் வழி வந்தவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டிலே ஆரியச்சக்கரவர்த்திகள் பாண்டி நாட்டிலிருந்து வந்து இலங்கையைக் கைப்பற்றி ஆதிக்கத்தைப் பலப்படுத்திய போது, அவர்களுக்கு ஆதரவாக இருந்த பிரதானிகள் பலர் வன்னி நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியினை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதிலிருந்து அடங்காப்பற்று வன்னிமைகளிலே ஒரு புதிய அதிகாரவர்க்கம் தோன்றியது. பதினேழாம் நூற்றாண்டிலே பனங்காமம், மேல்பத்து, முள்ளியவளை, கருநாவல்பத்து, கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி, செட்டிகுளம் ஆகிய ஏழு வன்னிமைகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைக்குள் இருந்தன

வன்னியின் சரித்திர நாயகனின் முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா, வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லைஎன்று. டச்சு வரலாற்று எழுத்தாளர் ஒருவர் குரிப்பட்டுள்ளார். ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன் 1777 ஆம் ஆண்டு, குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன், வன்னிப் பிராந்தியத்தின் முல்லைத்தீவில் பிறந்தான்.. வன்னியில் உள்ள பண்டாரிக் குளத்தில்தான் பண்டார வன்னியனின் ஆட்சிபீடம் இருந்தது! வன்னியை சில மாவட்டங்களாக அவன் பிரித்து ஆட்சி செய்தான். தன் மூத்த சகோதரியான, நல்லாஞ்சிக்கு திருகோணமலை மாவட்டத்தையும், இளைய சகோதரியான ஊமைச்சி நாச்சிக்கு பனங்காமத்தையும் ஆட்சி செய்ய அவன் பிரித்துக் கொடுத்தான் அப்போதைய கண்டிய அரசன் ஸ்ரீவிக்கிரம ராசசிங்கனுக்கும் பண்டார வன்னியனுக்கும் இடையில் சிறந்த நட்பு இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக அவன் போராடியபோது, தன் படைகளுடன் சென்று அந்த மன்னனுக்கு பேருதவி புரிந்திருக்கிறான் பண்டார வன்னியன்! பண்டார வன்னியனின் படைகள் 1803ஆம் ஆண்டு, ஆவணி மாதம், முல்லைத் தீவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டன! முல்லையில் இருந்த ஆங்கில அரச நிர்வாக அலுவலகமும், கோட்டையும் பண்டாரவன்னியனால் அழிக்கப்பட்டன! அந்தச் சண்டையின்போது பண்டார வன்னியனுக்கு உதவி புரிந்தனர் என்பதற்காக, குமரேச முதலியார் என்பவரும், அவருடைய நண்பர்கள் சிலரும் ஆங்கிலேயர்களால் தூக்கில் இடப்பட்டனர். பின்னர் அந்தப் பகுதி ‘தூக்கு மரத்தடி’ என்று அழைக்கப் பட்டு வருகிறது!

ஒரு நாள் பண்டாரவன்னியன் தனது குதிரையில் தன் ஆட்சிக்கு கீழ் இருந்த கிராமங்களை பார்த்து வரும் போது குருவிச்சை சிற்றாறருக்கு அருகே ஓரு அழகிய பெண் ஒருத்தி பாலப் பழங்களை மரத்தில் ஏறி ஆய்வதைக் கண்டான் .

பண்டாரவன்னியன் அந்த பெண்ணின் வீரத்தை கண்டு அந்த பெண்ணிடம்” ஏய் பெண்ணே இந்த மிருகங்கள் உள்ள இந்த காட்டில் எப்படி பயமின்றி பாலப் பழங்களை ஆய்கிறாய். உனக்கு பயமிலையா ‘? என்று கேட்டான்

குதிரையில் கம்பீரத்துடனும் உறையில் வாளுடனும் . முறுக்கு மீசையுடன் இருந்தவனை கண்ட அந்த பெண்னுக்கக்கு தன்னிடம் கேள்வி கேட்டவன் ஒரு வீரன் என்று தெரிந்தது. குதிரையில் இருந்தவனை மேலும் கீழ் பபார்த்து உடனே அந்தப் பெண் ” எனக்கு பயமா அதுவும் வீரம்செறிந்த பண்டாரவன்னியன்ஆட்சியில் பெண்களுக்கு பயம் என்றால் எது வென்று தெரியாதே” என்றாள் அவள் சிரித்தபடி.

” ஓகோ நீ சொல்லும் அந்த வீரனை முன்பு சந்தித்து இருக்கிறாயா”?

“என் அண்ணன் அவன் படையில் ஒரு போர் வீரன் மன்னரின் வாள் வீக்சை பற்றியும் அவரின் வீரத்தை பற்றி பல கதைகள் சொல்லியிருக்கிறான்”

“அப்படியா. அப்போ நீ ஒரு வீர குடும்பத்தில் பிறந்தவள் போல் எனக்கு தெரிகிறது”

” என் தந்தை சிறுத்தை போராடி அதைகொன்றவர் . என் அண்ணன் குறி பார்த்து ஈட்டி எறிவதில் வீரன் .என் மூதாதையர் சோழர்களின் மறவர் வழிவந்தவர்கள் ”

“நல்லது பெண்ணே இவ்வளவு வீரத்துடன் பேசும் உன் பெயர் என்ன என்று நான் அறியலாமா”?

என்னை என் கிராமத்தில் குருவிச்சை நாச்சியார் என்று சொல்வர் . இந்த கிராமமே என்னை நன்கு அறியும் ”

“எனக்கு பசி எடுக்கிறது நீ ஆய்ந்த பாலப் பழத்தில் கொஞ்சம் தருவாய”?: குதிரையில் இருந்து இறங்கிய படியே வந்தவன் கேட்டான்

:”உன் பசிக்கு இந்த பழம் போதாது. என்னிடம் கட்டு சோறும் பொரி விலாங்காயும் இருக்கு நாம் இருவரும் பகிர்ந்து உண்டு இந்த குருவிச்சி ஆற்றின் நீரை குடிப்போம் . என்னசொல்கிறாய்”? .

“பொரி விளாங்காயா அது என்ன உணவு”?

“பொரி விளாங்காய் என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புச் சிற்றுண்டி ஆகும். இதனை நீண்ட காலம் வைத்து உண்ண முடியும் என்பதால் போருக்குப் போகிறவர்கள் இதனை எடுத்துச் செல்வர். இது அரிசிமா, உழுத்தமா, பயத்தம்மா, சீனிப்பாணி உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி செய்வர்.”

“அப்போ என்னகு அடுத்த முறை உன்னை சந்திக்கும் போது பொரி விளாங்காய் சிலவற்றை எனக்கு செய்து கொண்டு வருவாயா ”

“ஏன் நீ போருக்குப் போகப் போகிறாயா” ?

“போருக்குப் போகும் சந்தர்ப்பம் கிட்டினால் அந்த உணவு உதவும் அது நான் யோசித்தேன் ‘ என்று சொல்லியவாறு ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள குன்று ஒன்றில் போய்அமர்ந்தான். அவளும் போய் அவன் அருகில் அமர்ந்தாள் இருவரும் உணவை பகிர்ந்து உண்ணஆரம்பித்தனர்.

“நாக்சியார் உன் உணவு மிக சுவையக இருக்கிறது அதுவும் உன் கைப்பட உண்பது தனி சுவையைத் தருகிறது ” அவன் சொன்னான் :

“நான் செய்த பொரி விலாங்காவை உண்டபின் எப்பாடி இருகிறது ஏற்று சொல்லேன் என்று தன முந்தானையில் முடிச்சு வைத்த பொரி விலாங்காவை எடுத்துக் கொடுத்தாள் குருவிச்சி நாச்சியார்

பண்டார வன்னியன் சுவைத்து ஆறுதலாக அவசரப் படாமல் உண்ணும் விதத்தை கண் வேட்டாமல் பார்த்துக்கு கொண்டு இருந்தால் நாச்சியார்.

“என்ன என்னை இப்படி கண் வெட்டாமல் பார்க்கிறாய் பெண்ணே “?

“இல்லை நீ அவசரப் படாமல் உண்ணும் விதம் நீ பொறுமைசாலி என்று எனக்குக காட்டுகிறது உன் போன்ற வீரனுக்கு பொறுமை அவசியம் தேவை .எதையும் சிந்தித்து செயல் படவேண்டும் .அனால் அதே நேரம்….”

” நீ எனக்கு என்ன சொல்ல வருகிறாய் என்று சொல் “?

“எல்லோரையும் உடனே நம்பி விடாதே வீரனான உனக்கு பல எதிரிகள் இருக்கலாம் கவனமா செயல் படு “.

“சரியாக சொன்னாய் நாச்சியார் யார் உணக்கு இதை சொன்னது”?

“என் சகோதரன் மன்னரின் படைகளில் பேசிக் கொண்டார்கள் என்று எனக்கு சொன்னான் என்ற எங்கள் மன்னருக்கு பகைவர்கள் அதிகம் காரணம் வெள்ளையன் மன்னரின் ஆட்சியை கைபற்ற எங்கள் இனத்துக்குள் பிரிவினையை வளர்க்கும் யுக்தியை கொண்டவன் “: என்றாள் நாச்சியார்

”உன் ஆலோசனனைக்கு நன்றி நான் மிகவும் கவனமாக இருப்பேன்”

“நீ அப்படி என்றால் எங்கள் மன்னர் பண்டாரவன்னியனா” ?

“சரியாக ஊகித்தாய் நாச்சியார் . உன்னை சந்தித்ததில் எனக்குபெரும் மகிழ்ச்சி நீ தந்த ஆலோசனைக்கு நன்றி. நாங்கள் இருவரும் இந்த ஆற்றங் கரையோர்தில் ஓரத்தில் அடிக்கடி சந்திப்போம். உன்னை எனக்கு பிடித்துக் கொண்டது அது சரி உன் வீடு எங்கே இருக்கிறது ” ?

“அதோ தெரிகிறதே ,அந்த மண் குடிசை தான் என் வீடு ”

” பார்க்க உன் வீடு அழகாக ரஇருக்கு நான் உன்னை சந்தித்ததை உன் வீட்டில் ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் ,” என்றான் பண்டாரவன்னியன் இருவரும் ஊர் விசயங்கள் பல பேசிய பின் பிரிந்தனர் அதுவே அவர்களின் முதல் சந்திப்பு

அந்த சந்திப்பு நாளடைவில் காதலா மலர்ந்தது. அந்த வீரமங்கையின் ஆலோசனைகள் பண்டரடாவன்னியனுகு மிகவும் பிடித்துக் கொண்டது. தன்மனதுக்கள் அவளே தனக்கு ஏற்ற துணைவி எனத் தீர்மானித்தான்.

அரண்மனை திரும்பிதும் தன் சந்திப்பைப் பற்றி ஒருவரிடமும் மன்னன் சொல்லவில்லை

*****

தமிழ் மன்னனின் காதலி!.. குருவிச்சை நாச்சியார்! வீரம் நிறைந்த பண்டார வன்னியனை தன் உயிருக்கு உயிராக .பண்டார வன்னியனை நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாத ஆங்கிலப் படைகளின் நரித்தந்திரம் காதலியுடன் பண்டார வன்னியன் இருக்கும் வேளை பார்த்து, அவனைத் தீர்த்துக் கட்ட காக்கை வன்னியனின் உதவியை நாடினர்.. ஆனால்… அதற்கு முன்பாகவே திருகோணமலையில் இருந்து ஓர் படைப்பிரிவும், மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து இரு படைப்பிரிவுகளும் பண்டார வன்னியன் தன் காதலியுடன் இருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.. அந்த இடம் உடையாவூர்’ என்பதாகும். அந்தச் சுற்றி வளைப்பின்போது பண்டார வன்னியன் கடுமையாக ஆங்கிலப் படைகளை எதிர்த்துப் போரிட்டான். அப்போது அவன் படுகாயம் அடைந்தான்.. அந்தக் காயத்தில் இருந்து அந்தப் பெரு மன்னனைக் காப்பாற்ற அவனது படையினர் அவனைப் பனங்காமத்துக்கு கொண்டு சென்றனர். ஆயினும் அங்கே அந்த வீரப் பெரு மன்னன், வீர மரணத்தை 1811 இல் 34 வயதில் தழுவிக் கொண்டான்!

மன்னன் இறந்த செய்தி கேட்ட அவனது காதலியான குருவிச்சை நாச்சியாரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். பண்டார வன்னியனின் வீரம் பற்றி வாய் கொள்ளாது போற்றிப் புகழ்ந்த வன்னித் தமிழர்கள், அவனது இனிய காதலையும், அந்தக் காதலின் நாயகியைப் பற்றியும் கூட பேச- நினைக்க மறக்கவில்லை. குருவிச்சை நாச்சியார் வசித்த இடம் ‘காதலியார் சம்மங்குளம்’ என்று அழைக்கப்படுகிறது! அதுபோல்.. காதலியின் இனிய நினைவாக, பண்டார வன்னியன் தன் ஆருயிர்க் காதலியை அடிக்கடி சந்தித்த அந்த ஆற்றுப் படுக்கையும், அதன் பின்னர் ‘குருவிச்சை ஆறு’ என்று அழைக்கப்பட்டு வருகிறது! பேராற்றின் ஓர் கிளை ஆறுதான் இது! ஆங்கிலேயர்களால் தனக்கு தொல்லைகள் வரும் என்று உணர்ந்த பண்டார வன்னியனின் சகோதரியான நல்ல நாச்சியும், பின்னர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்! பண்டார வன்னியனை தோற்கடித்ததாக சொல்லப்படும், கப்டன் வான்ரேயன் பேர்க் , என்பவன் பண்டாரவன்னியனை தோற்கடித்த இடம் அப்போது, ‘கர்பூரபுல்லு’ என்னும் இடத்தில் உள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் இருந்து பண்டார வன்னியன் தப்பிவிட்டான்.

தண்ணீரூற்றில் இருந்து ஆறாவது மைல் கல்லில் புளியங்குளம் வீதியில் அது உள்ளது.! 1803 ஆண் டு, ஒக்டோபர் மாதம், 31ஆம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது! அந்த தோல்விக்கு பின்னர்தான் அந்த இடத்தை மக்கள் ‘கற்சிலை மடு’ என்று அழைக்கத் தொடங்கினர்! யாராலும் போரில் வெல்ல முடியாத தமிழ் மன்னன் என்று அழைக்கப் பட்ட, பண்டாரவன்னியனை தோற்கடித்து விட்டேன்.. என்பதால்தான் அந்த ஆங்கிலேய தளபதியே, பண்டார வன்னியனை வென்றதன் நினைவாக, அந்த இடத்தில் ஓர் வெற்றிக்கான நடுகைக் கல்லை நிறுவினான் என்பது குறிப்பிடத் தக்கது! அந்த இடத்தில்தான் பண்டார வன்னியனின் நண்பனாகிய கண்டிய (கண்ணுச்சாமி என்னும் இயற் பெயருடைய விக்கிரம ராஜசிங்கன்) அரசனால் பண்டார வன்னியனுக்கு கொடுக்கப்பட்டிருந்த பீரங்கி ஒன்றை ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றின! அந்த தாக்குதலின் தளபதிக்கு ஆங்கிலேயர்களால், பண்டாரிக்குளம் என்னும் பகுதி பரிசாக வழங்கப் பட்டதாம்! ஆயினும் அந்த தோல்விக்கு பின்னரும் பண்டாரவன்னியன், கிழக்கு மூலை, தெற்கு மூலைப் பகுதிகளில் இருந்து படைகளைத் திரட்டி வந்து மீண்டும் ஆங்கிலேயர்களோடு மோதினான். எனினும் வவுனியாப் பகுதியில் தம் படையினரை வலுவாக்கி கொண்ட ஆங்கிலேயர்கள் மீது படையெடுப்பை நடாத்த முயன்றபோது, செப்.1810 ஆம் ஆண்டு, கதிர்காம நாயகம் முதலியார் என்பவர், ஓர் முக்கிய உளவுச் செய்தியை அனுப்பினான் என்றும், அதில் வவுனியாவை பண்டார வன்னியன் தாக்கப் போகிறான் என்றும் குறிப்பிட்டு இருந்தான். அதனால் வவுனியாவை ஆங்கிலேயர்கள் நன்கு பலப்படுத்திக் கொண்டு போரிட்டனர்… அதன் விளைவாகவே.. அந்தச் சண்டையின்போது. அப்போது பண்டார வன்னியன் படுகாயம் அடைந்து பணன்காமத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு வீர மரணம் அடைந்தான் என்பது குறிப்பிடத் தக்கது! ஆனால், பண்டார வன்னியன் உயிரோடு இருக்கும் வரை வன்னி அரசின் முழுப்பகுதியையும் ஆங்கிலேயர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது!

****

(புனைவு கலந்த வன்னி வரலாறு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *