மிக அவசரம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 6,454 
 

அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான் இருக்கும்

வேகமாக வந்த ராஜேஸின் பைக் அதே வேகத்தில் பறந்தது. எல்.ஐ.சி. சிக்னல் வந்து கொண்டே இருந்தது. சிவப்பு விளக்கு மாறிய அதே நொடியில் ராஜேஸ் சிக்னலைக் கடந்து விட்டான். ஆனல் பச்சை விளக்கு வரும் அதே நொடியில் பார்க் பக்கம் இருந்து வேகமாக வந்த கார், ‘சடர்ன் பிரேக்’ போட்டதால், ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது!

ராஜேஸுக்கு அதை எல்லாம் கவனிக்க நேரம் ஏது?..அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை! அவனுக்கு என்ன அவசரமோ? தலை போகும் காரியமாக எங்கு அப்படி பறந்து போகிறானோ?

உப்பிலி பாளையம் சந்திப்பு. ராஜேஸின் பைக் சிக்னலை நெருங்கு முன்பே சிவப்பு விளக்கு விழுந்து விட்டது!. பச்சை விளக்கைப் பார்த்து மேம்பாலத்துப் பக்கம் இருந்து வரும் வண்டிகளுக்கு முன்பாகப் போய் விட முடியும் என்ற நம்பிக்கையில் வேகமாக சிக்னலை கடக்க முயற்சி செய்தான்!

ராஜேஸைப் போல, ஒரு மாதேஸ் பாலத்திற்குப் பக்கமிருந்து பச்சை விளக்கு விழும் முன்பே பறந்து வந்தான்!

“ டமார்! ”

போக்குவரத்து ஸ்தம்பித்தது! …….இரண்டு டூவீலர்களையும் அப்புறப் படுத்த சிறிது நேரம் ஆனது!……அதற்குள் 108 வந்து விட்டது! அடிபட்டவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைக்குப் போனது!

அங்கு கூட ‘மிக அவசரம்’ பகுதிக்குத் தான் ராஜேஸைக் கொண்டு போனார்கள்.!

டவுன் ஹால் திரை அரங்கில் அன்று ராஜேஸ் வருகையைப் பற்றி கவலைப்படாமலேயே அவனுடைய அபிமான ஹீரோ வின் திரைப் படம் அன்று ரீலீஸ் ஆனது!

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *