புலம்பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 5,835 
 

சந்திரனுக்குப் பயணம் வைத்த பூலோக மனிதனைக் கண்ட அண்ட கோளங்கள், ஒரு கணம் மண்டைகள் நொறுங்க அந்தகாரித்து நடு நடுங்கின.

இவனுக்குத்தான் பூலோகத்தில் எத்தனையோ சோலிகளிருக்கின்றனவே. எல்லாவற்றையும் விட்டு விட்டு, இந்த மூளை கெட்ட வேலையில் இவன் ஏன் இறங்கினான்?’ என்று சலிப் போடு கேட்டது சூரியகாந்தி.

இந்த மனிதனால் நாங்கள் எவ்வளவு பக்தியோடு பூஜிக்கப் பட்டோம். அந்த ‘அந்தஸ்தை’க் கூட இவன் கெடுத்து விட்டானே’ பாவி இதற்கெல்லாம் காரணம் அந்த டார்வீன் தான். அவன் தலையிலே இடி விழ’ என்று சொல்லி ஒரு பாட்டம் அழுதது அம்புலிமாமா.

‘நான் எவ்வளவு சுதந்திரத்தோடு ஏகாந்தமாய்த் திரிந்தேன் தெரியுமா? அதிலே மண்ணைப் போட்டு இந்த மனிதன் என்னைச் சின்னாபின்னமாக்கி விட்டானே’ என்று சற்றுக் ‘கடுகடு’த்தது வாயு மச்சான்.

‘அண்ட கோளங்களுக்குத் திசையையும் ஒளியையும் கொடுத்து வருகின்ற எங்களுக்கே இவன் வழி காட்டத் தொடங்கி விட்டானே?’ என்று ‘நம்பிக்கையிழந்து’ கேட்டன தாரகை முனிகள்.

அயலானை நேசிக்கத் தெரி யாத மடையர்களே நான் மட்டும் ‘பூமாதேவி’ என்ற மனிதனின் ஆசார வாக்கிற்குள் அடைபட்டுச் சித்திரவதைப்படுகின்றேன். அப்படி நீங்களும் இனி அனுபவித்தால் என்னவாம்?’ என்று வியாகுலத்தோடு சற்று ‘ஆவேசமாக’வே கேட்டது பூமித்தாய்.

அப்படி நீ என்ன சித்திர வதைப்பட்டாய்? என்று ஏக காலத்தில் கேட்டன அண்ட கோளங்கள்.

உடனே பூமித்தாய் சொல்விற்று.

மனிதன் பேதமில்லாமல் சமத்துவமாய் வாழ்வான் என்று நம்பினேன். ஆனால், அவன் கால கதியில், ‘தன்னிச்சை’ கொண்டு தனி ஏசு ஆதிக்கம்’ செய்யக் கிளம்பி, நெஞ்சைப் பிளந்தது போல என்னை வெட்டிக் கூறு போட்டுவிட்டதால், ஒருவனை ஒருவன் அடித்துச் சாகத் தொடங்கிவிட்டான். இப்போ அவனுக்குப் புகலிடம் தேவை. அதற்காகவே அண்ட கோளத்தைப் பிடிக்கக் கிளம்பினான். வந்தவனுக்கு இடங்கொடுங்கள், ஆனால், கூறுபோட விடாதீர்கள்.

அண்ட கோளங்கள் இக் கூற்றினை எல்லாம் கேட்டு அசந்து போய் ஏக காலத்தில் பெருங் குரலெழுப்பிக் கேட்டன.

பூமித்தாயே இதெல்லாம் உண்மைதானா? இந்த மனிதன் அப்படிப்பட்டவனா? உனக்கு இது எப்படித் தெரியும்?

பூமித்தாய் அமைதியாகப் பதில் சொன்னாள்.

நான் இந்த மனிதனுடன் தான் அன்றாடம் செத்து வாழ்கிறேன்!?

அண்ட கோளங்கள் ஒன்றும் பேசாமல் ஒன்றையொன்று பார்த்து விழித்தன.

அப்போது அத்த அண்ட கோளங்களெல்லாம் அதிர்ந்து இடியுண்டது போல் ‘திடீ’ ரென்று டார்வீனின் குரல், ஓங்காரித்துக் கேட்டது.

சா பிணங்களே! ஏன் வீணாகப் புலம்புகின்றீர்கள்? மனிதன் இந்த அண்ட சராசரங்களனத்தையும் வெல்வான்.

அண்ட கோளங்கள் ‘மூச்சு’ விடவில்லை.

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *