பாவ மன்னிப்பும் கிடைச்சுது, கூடவே மூணு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 3,680 
 

லண்டனுக்கு முப்பது மைல் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி.அந்த கவுண்டியிலே வசித்து வந்தான் ஜான். அந்த கவுண்டியிலே மொத்தம் முப்பது வீடுகள் தான் இருந்தது.ஒரு ‘சர்ச்’ம் இருந்தது.

அந்த ‘சர்சி’ல் ஒரு ‘பாதர் சுபீரியரும்’,இன்னொரு ‘பாதரும்’ இருந்தார்.’பாதர் சுபீரியர்’ ‘சர்சு’க்கு பாவ மன்னிப்பு கேட்பவர்களுக்கு ‘ஜீஸஸை’ வேண்டிக் கொண்டு ‘பாவ மன்னிப்பு’ அருள் புரிந்து வந்தார்.

வயது அதிகம் ஆகி விடவே ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பாவ மன்னிப்பு அருள் புரிந்து விட்டு,மற்ற நாட்களில் ‘பாதரை’ அந்த வேலை செய்யச் சொல்லி வந்தார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.ஜான் பாவ மன்னிப்புகாக் ‘சர்ச்’க்குப் போய்க் கொண்டு இருந்தான்.

அவனை வழியிலே பார்த்த ஜோஸப் “எங்கே போறே ஜான்” என்று கேட்டான்.

உடனே தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு “ஜோ, நான் ஒரு தப்புப் பண் ணிட்டேன். ’சர்சு’க்குப் போய் ‘பாதர்’கிட்டே போய் ‘பாவ மன்னிப்பு’க் கேக்க போய் கிட்டு இருக்கேன்” என்று சொன்னான்.

”சரி ‘பெஸ்ட் ஆப் லக் ஜான்’” என்று சொல்லி விட்டு போய் விட்டான் ஜோசப்.

ஜான் ‘சர்சு’க்குப் போய் பாவ மன்னிப்பு அறையில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் ‘பாதர் சுபீரியர்’ தான் எல்லோருக்கும் பாவ மன்னிப்பு அருள் புரிந்துக் கொண்டு இருந்தார்.

ஜானுக்கு முன்னாலே காத்துக் கொண்டு இருந்த ரெண்டு பேர் ‘பாவ மன்னிப்பு’ வாங்கி க் கொண்டு போன பிறகு, ஜான் ‘பாதர் சுபீரியர்’ முன்னால் போய் தன் தலையை குனிந்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

‘பாதர் சுபீரியர்’ ஜானைப் பார்த்து “தம்பி,நீ என்ன தப்பு பண்ணினே” என்று கேட்டார்.

ஜான் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு “ ‘பாதர்’ நான் ஒரு வயசு பொண்ணு கிட்டே தவறா நடந்துக்கிட்டேன்” என்று தலையை குனிந்துக் கொண்டேசொன்னான்.

உடனே ‘பாதர் சுபீரியர்’ ஜானைப் பார்த்து “எனக்குத் தொ¢யும்.அந்த கோடி விட்டு ‘கார் பென்டர் பொண்ணு கிட்டே தானே” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஜான் தன் தலையை நிமிராமலே “இல்லே ‘பாதர்’ “என்று சொன்னான்.

உடனே ‘பாதர் சுபீரியர்’, “ஓ அப்படியா.அப்போ நம்ம கோவிலிலே மணி அடிக்கிறானே பீட்டர் அவன் பொண்ணு கிட்டே தானே” என்று கேட்டார்.

ஜான் இன்னும் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே “இல்லே ‘பாதர்’ “ என்று சொன்னான்.

‘பாதர்’ “அப்படின்னா, அந்தப் பொண்ணு ‘ப்ளம்பர் ‘ ஜார்ஜ் பொண்ணாத் தான் இருக்கணும்.வா எனக்கு மணி ஆவுது.உனக்கு ‘பாவ மன்னிப்பு’ அளிக்க, நான் ‘ஜீஸஸை’ பிரார்த்தணை பண்றேன். நீயும் உன் கண்களை நல்லா மூடி கிட்டு ‘ஜீஸஸை’ பிரார்த்தணை பண்ணு” என்று சொல்லி விட்டு பிராத்தணையை செய்து முடித்து ஜானுக்கு ‘பாவ மன்னிப்பு’ அருளினார்.

ஜான் ‘சர்ச்’சை விட்டு சந்தோஷமாக வெளியே வந்தான்.

அன்று சாயந்திரம் ஒரு ‘மாலில்’ ஜானைப் பார்த்தான் ஜோஸப். ஜானைப் பார்த்ததும் “என்ன ஜான், உனக்கு ‘பாவ மன்னிப்பு’ கிடைச்சுதா” என்று கேட்டான் ஜோஸப்.

ஜான் சிரித்துக் கொண்டே “ஜோ, எனக்கு ‘பாவ மன்னிப்பு’ம் கிடைச்சுது. கூடவே மூணு புது விலாசமும் கிடைச்சுது” என்று சொன்னான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *