பால்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 10,505 
 
 

இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு.

ஆமாம் அதற்கென தனி ஊருக்குத்தேடிப்போய்வாங்கு என்கிறான் நண்பன்,

இருக்காதாபின்னே,,?இப்படியானதை வாங்க அப்படித்தானே போக வேண்டியிருக் கிறது பஸ் ஏறியோ,அல்லது இரு சக்கர வாகனம் கொண்டோ/

இரண்டு,அறுபது போடவேண்டும்என்றார்கடைசியாய் இரு சக்கரவாகனத்தை சர்வீஸ்பார்த்தஒர்க்ஷாப்க்காரர், அதற்கர்த்தம் இரண்டு லிட்டர் பெட்ரோலும்,அறுபது மில்லிஆயிலும்போடவேண்டும்என்பதே/அவரதுசொல்லைஅமலாக்கினால் அது வந்துவிடுகிறது150ரூபாய் கணக்கிற்கு. இருசக்கரவாகனத்தைநகர்த்தினாலே இரண்டுலிட்டர்பெட்ரோல்,60மில்லி ஆயில்,,,,,,,எனகணக்கில்வந்துவிடுகிறது.

மில்லியைநினைக்கையில்ஹெஹெஹே,,,,,,,சிரிப்புத்தான்வருகிறது,,,,நேற்றை க்குமுன்தினம்டீக்குடிக்கப்போன இடத்தில்பரபரப்பு கொஞ்சம் மட்டுப் பட்டுத்தெரிந்தமாதிரிஇருந்தது.

டீக்கடைக்குஎதிர்த்தாற்ப்போல்இருக்கிறஒயின்ஷாப்அன்றைக்குத்திறந்திருக்கவில்லை,காரணம்கேட்டபோதுநண்பர்சொன்னார்.கேலியாக””அதைஏன் நீங்க கேக்குறீங்கஇப்ப,ஒங்களுக்கும்அதுக்கும்என்னசம்பந்தம்,தண்ணியிலஒட்டாத தாமரையெலபோலஇருக்குறநீங்க எதுக்கு,,,,?”என்றவாறே” வாங்க ஒங்களுக்குன்னு ஏற்பட் டது இந்தடீதான்.அதுக்குமேலயெல்லாம் யோசிக்கப்படாது”,என்றவரை நோக்கி இவன்சொன்னபதில்அந்த காலனுக்கும் அடுக்குமாஎனத்தெரியவில்லை.” இப்பி டியே திரிய வேண்டியதுதான் நண்பா ஒரு போத்தல்சாராயமும்இரண்டு பாக்கெட் சிகரெட்டுமாக,,,,,,,எனச்சொன்ன போது அவரின் சிரிப்பலைகள் அடங்க வெகுநேரம்ஆனது.”அதுக்கு எங்களப் போலானஆட்களச்சொல்லுங்க செல்லும், கூடஅவரையும்சேத்துக்கங்க,,,அவருன்னா அவுங்க ஊரு மந்தையில போத்தல பொதச்சிவச்சிகுடிக்கிறஆளு,தெள்ளியரம்மு,ஜின்னு,ஒயின்னுபோறஆளு,,, பழரசங்கள்லயிருந்துநேரடியாதயாரிக்கப்பட்டசரக்குகள்லபோதயேத்திக்குடிக்கிற வுங்கஅவுங்களபோலானஆட்களச் சொன்னாக்கூடஏத்துக்கிறலாம், போயும், போயும்ஒங்களப்போயிகடைக்காரே ஒங்களப் பாத்துட்டுபக்கத்துல கூட விட மாட்டாரு,நீங்க போயி,,,,,எனபேசிக் கொண்டே டீவாங்கிய போதுஅந்தக்கடையின் டீக்கு தனிருசி இருக்கும் எனவும் டீ பண்ணி ரெண்டு ரூபாய் எனவுமாய்ச் சொன்னார்.

காலையில நாலரை மணிக்கு வந்துருவேன் டீக்குடிக்க ,இங்கஒரு டீ ஸ்டார ங்கா,அப்பிடியே ஒரு நீளமான வாக்கிங்க்,முடிஞ்சதும் வீடுஆபீஸ், சாய்ங்கால நேரங்கள்ல எப்பயாவது ஒருக்கா இப்பிடி,,,,,வந்துர்றது, இன்னைக்கி ஒங்களோட,,,,சேந்து எனச் சொன்னவர் டீக்கப்பைகையில் வைத்துக் கொண்டேபேசிக்கொண்டிருந்தார், அவரது பேச்சுக்கு இவனும்,இவனது பேச்சுக்கு அவருமாய் இசைவுற்றும் அது அல்லாததுமாய் பேசிக் கொண்டிருந்த நேரங்களில் கடைக்கு வந்து போய்க் கொண்டிருந்த பலரில் இவனது கவனம் கலைத்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்

அனேகமாய்கணவன் மனைவியாய் இருக்கலாம். ஆணுக்குவயது எப்படியும்65கடந்தும்பெண்ணுக்குஎப்படியும்50கடந்துமாய்இருக்கலாம், கூட வந்தவரின்கைபிடித்துக்கொண்டுதான்அந்தப்பெண்வந்தாள்,கொஞ்சமல்லநிறையவேஉப்பிக்காணப்பட்ட அவள் தன் கனமான உடல் தூக்கி நடந்து வர மிகவும் சிரமப்பட்டாள்/

கடையின்முன்பாகஅப்பொழுதுதான்போடப்பட்டிருந்தஒருமுழஉயர சிமிண்ட் காங்க்ரீட் சுவரின் உயரம் தாண்ட மிகவும் சிரமப்பட்டாள், கூட வந்த ஆண் அவளுக்குகைகொடுத்தும்கூடசுவரின்காங்கீரீட்தடுப்புக்கட்டைதடுக்கிவிழுந்து விடுகிறாள்கீழே/

பதறிப்போன ஆண் அவளை தூக்குகிறேன் என தூக்க முடியாதவனாய் நின்ற போதுஇவனும் நண்பனுமாய் போய்தான் தூக்கி விட்டார்கள். எழுந்தவள் நன்றி சொல்லிவிட்டு கடையின் நடைஏறி அங்கிருந்த சோபாவில் படுத்து விட்டாள். பதறிப்போனார்கணவர்.

டீமாஸ்டர்தான்தண்ணீர் ஜக்குடன் வந்து அந்தப்பெண்ணின் முகத்தில் தண்ணீ ரடித்து எழுப்பி அமர வைத்தார், அதற்குள்ளாய் கணவர் ஆட்டோ, ஆஸ்பத்திரி எனப்பேசிக்கொண்டிருந்தார். அவரை ஆற்றுபடுத்தி அந்தப்பெண்ணுடன் அமர வைத்துவிட்டு டீக்கொண்டு வந்து கொடுத்தார் மாஸ்டர்,நாங்கள் ஜீஸ் சாப்பிட வந்தோம்,டீசாப்பிட அல்ல அந்த ஆணும் பெண்ணுமாய் சொன்னபோது இருக் கட்டும் சார்,என்ன இப்பொழுது குறைந்து போனது கீழே விழுந்த அதிர்ச்சிக் கும்,இந்தடீக்குடித்தலுக்கும்சற்றுநன்றாகஇருக்கும்குடியுங்கள் என்றார், மாஸ்டர், தவிர இது போர்டிங் லாட்ஜிங் என இருக்கிற ஹோட்டல்தானே, தோதுப் பட்டால்ஒருநாள்இருந்துதங்கிச்செல்லுங்கள்சார்என்கிறார்.

இல்லைதங்குகிறதருணமோ,இல்லையானால்ஓய்வுஎடுத்துப்போகிறஅவசியமோஇல்லைஎங்களுக்கு,இந்தஊரில்தான்திருமணம்செய்துகொடுத்த எங்களது பெண் வீடு இருக்கிறது.அவளது வீடு செல்ல இன்னும் இருக்கிறது இரண்டு கிலோமீட்டர்தூரம்.போவதற்குள்ளாய்இது போலான ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பரஸ்பரம் மனிதமுகம்பார்த்து பேசிவிட்டும்ரிலாக்ஸாகி விட்டுமாய் போகலாம்என்கிறநினைப்புடன் வந்திறங் கியஇடம்தான்இது.அதுஎன்னவென்றால்இப்படியாகிப்போனது,அதனால் என்ன நடப்பதெல்லாம் நன்மையும் தீமை யும் கலந்தே எனபேச்சிறிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு ஹோட்டலுக்குள் ளாய்ப்போனார்கள்அவர்கள்,டீ மாஸ்டர்தான் சொன்னார், சார் அவுங்க கோயம்புத்தூர்ல இருக்காங்க, மாசத்துக்கு ஒருக்கா இந்த ஊருக்குவருவாங்கமகளப்பாக்க,அப்பதவறாம கடைக் கி வந்துபோவாங்க,என்னதான் உள்ளூர்ல மக வீடு இருந்தாலும் இங்க வர்ரப்ப எப்பயாவதுஒருதடவை இங்க லாட்ஜில தங்கிப்போவாங்க.அப்பப்பாத்திங்கன் னாஅவங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது வயசான தம்பதி மாதிரி இருக் காது.அவருசின்னப்பையன் மாதிரி டவுசர் போட்டுக்கிருவாரு,அந்தம்மா பாத்தீ ங்ன்னா சுடிதாரு போட்டுக்கிருவாங்க,அவுங்க வாட்டுக்கு கோயில் ,கொளம் ன்னுபோவாங்க,சுத்திப்பாக்கஇந்த ஊர்ல என்னமும் இல்லையின்னாலும் கூட அவுங்கவாட்டுக்கு சும்மா போயி திரும்புறதுலஅவுங்களுக்கு ஒருமனதிருப்தி, கேட்டா உள்ளூர்ல மக வீடு இருந்தாலும் கூட இப்பிடி இருக்குறதுல இருக் குறபிரீனெஸ்வேறஎதுலயாவதுகெடைக்குமான்னாகெடைக்காதுபாத்துக்கங்க, தவுர மக வீட்டுக்குள்ள போனம்ன்னா வீடேகதின்னு அடைஞ்சி கெடக்கணும். இங்கைன்னா அப்பிடி இல்ல,நாலு தரப்பட்ட மனுசங்களப் பாக்க,பிரியப்பட்டா அவுங்களோட பேச,பழகன்னு ஒரு புது ஒலகம் இருக்கு,எங்களூக்கும் மனசு கொஞ்சம் சிக்கல் எடுத்து விட்ட மாதிரி இருக்கும்.அதுனாலதான் இப்பிடி மக வீட்டுக்குவர்றப்பயெல்லாம்இப்பிடிதங்கீட்டுப்போறதுதான்என்பார்.அவுங்க அங்க கோயம்பத்தூர்லதனியாத்தான்இருக்காங்க, அவருவேலை பாக் குற ஊரு கோயம்புத்தூரு,மகளஇங்ககட்டிக்குடுத்துருக்காரு.

ஊருலயாரோஒருபையனோடசேத்து வச்சி பேசிட்டாங்கன்னு அவசர அவசர மாஇங்ககொண்டுவந்துகட்டிக்குடுத்துட்டாரு.

தெருவுலகூடப்படிக்கிறபொண்ணுவீட்டுக்குபோயிவரஇருக்கும் போது அவளு க்குசொந்தக்காரப்பையன்ஒருத்தன் இவகூடகள்ளம் கபடம் இல்லாம பேசவைக்க இருந்துருக்கான்,இத்தனைக்கும்அவளவிடரெண்டுவயசுகம்மியானவன்.அவனப் போயிஇவகூட சேத்து வச்சிபேச ஆரம்பி ச்சிட்டாங்க,

அவன்சினிமாரசிகர்மன்றத்தலைவரோஇல்லைஅபிமானியோபோலயிருக்கு.

அவருக்குப்பிடிச்ச நடிகர் படம் போட்ட முதல் நாளு முதல் ஷோவுக்குப் போயிருவான்.டிக்கெட்எவ்வளவுஎன்னங்குறதுபத்தியெல்லாம் யோசிக்கவெல்லாம் மாட்டான்.மத்தப்படிதியேட்டர்முன்னாடி பிளக்ஸ் பேனர் கட்ட அதுக்காக போர்ட்அடிக்க,பிரிண்ட்பண்ணஊர்பூராம்போஸ்டர் ஒட்டன்னுதிரியிறதோடமட்டும் இல்லாமபடத்தப்பாத்துட்டுவந்தகையோடஉள்ளூர்தினசரிப் செய்திப்பேப்பர்ல விமர்சனம் எழுதிருவான்,அப்படி எழுதிக்குடுத்துட்டு வந்துக்கிட்டு இருந்த ஒரு மத்தியான வெயில்ப்பொழுதுலஒருநாஇவவீட்டக்கடக்கும் போது மயக்கம் வந்து சாஞ்சிட்டான். தற்செயலா வீட்டுக்கு வெளியில வந்த அவரோட மக இதப்பாத்துட்டுசுத்திமத்திவீட்டுகள்லஇருக்குறஆட்களகூப்புடப்போயிருக்காப்புல,யாருமே இல்ல, மத்தியான வேளைங்குறதாலஎல்லாரும் வீட்டப்பூட்டீட்டு தூங்கீட்டாங்க, இல்லைன்னா வீட்டுக்குள்ளயே மொடங்கீட்டாங்க/ இவ அப்பா வேலைக்குப்போயிட்டாரு அம்மா சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டாங்க, வேற வழியில்லஇவதான் தண்ணி தெளிச்சி எழுப்பிவிட்டிருக்கா, அரை மயக்கத்துல எந்திரிச்சஅவனும்பேசமறந்துவெக்கப்பட்டுக்கிட்டுஓட்டமும் நடையுமா தலையக் கவுந்துட்டுபோயிட்டான், சும்மாச்சொல்லக் கூடாது,அவனு ம் நல்லக் கலரு. சுண்டிவிட்டா ரத்தம் வரும் அளவுக்கு இல்லாட்டிக்கூட கலராகளையா இருப்பான்.அவளுக்கும்அவன்மேல்ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செஞ்சது. ஆனா அவனுக்கு அதெல்லாம் இல்ல,அவளப்பாத்ததும் தூரத்து ஒறவுல இருக்குற அக்காநெனைப்பு வருதுன்னு சொல்லீட்டான்.

இந்தபேச்சோடயும்நெனைப்போடயும்தான்அவுங்கரெண்டுபேருக்கும்பழக்கமானது.அது அவபிரண்டு வீட்ல வச்சி அவன் வரும்போது வளந்தது தான். அத வச்சி அப்பிடியே கதை பண்ணீட்டாங்க.ரெண்டு பேரையும் யெனைச்சி வச்சி/

அப்பிடிபேசுறவுங்கலையும் தப்பு சொல்ல முடியல,நடப்பு அப்பிடி இருக்கயில என்னதான் பண்ணுவாங்க,இதுல ரெண்டு பேச்சு கூட, ரெண்டு பேச்சு கெறை யன்னு ஊடாடிக்கிட்டு இருந்த நேரத்துல ஒரு நா அவ பிரண்டுவீட்லஇருந்து வர்றதுக்குஒருஒரு மணி நேரம் லேட்டாகவும் கோகொல்லேன்னு ஆயிப் போ ச்சு தெரு,அதுல ஒருத்தர் ஒழுக்கமா அவுங்க ரெண்டுபேரையும்கண்டு புடுச்சி கல்யாணம்பண்ணி வைங்க, இல்லபிரிச்சிவைங்கன்னுசொல்லிக்கிட்டுஇருந்த நேரத்துலமகவந்துட்டா,என்னஏதுன்னுகேக்கும்போதுதான்தெரிஞ்சது, ரெண்டு பேரும் சேந்து இன்னுரு பிரண்டு வீட்டுக்குபோயிட்டாங்கன்னு.அதுக்குள்ள இங்கஆகிப்போனகளோபரத்தஉணந்தவவீட்டுக்குள்ளபோயிகதவப்பூட்டிக்கிட்டு பேன்லதொங்கப் போயிட்டா,அப்பறம் நாலைஞ்சி பேரு சேந்து போயி அவளக் காப்பாத்துனாங்க, அன்னைக்கிலயிருந்து கரெக்டா ரெண்டு மாசத்துல இங்கன வந்துபையனப்பாத்துகட்டிக்குடுத்துட்டும்போயிட்டாங்க,இதுலஎன்னவிசேசம்

ன்னா,கல்யாணமானகொஞ்சநாகழிச்சிமாமனார்வீட்டுக்குபோனப்பஅந்தப்பொண்ணப்பத்தியெசக்கேடாபேசுனவுங்களப்பாத்துசண்டபோட்டுருக்காரு,

அப்பிடியான நல்ல மனசுள்ள மருமகன்கெடச்சிப்போன சந்தோசத்துல இப்பிடி மாசத்துக்கு ஒருதடவ வந்து போறாங்க,நல்லமனுசங்க அதிர்ந்து கூட பேச மாட்டாங்கபுருசன்பொண்டாட்டிரெண்டுபேரும்.

அவரு ஏதோ கௌவர்மெண்டு வேலையில பெரிய போஸ்ட்டிங்குல இருக்காறாம்.ஆனாபாத்தாஅப்பிடித்தெரியாது,ரொம்பஎளிமையா இருப்பாரு அந்தம்மாவும் இவருக்கேத்தாப்லதான் இருப்பாங்க.நல்ல மனசொத்தஜோடிஇங்க கடை க்கி வந்துட்டாஏங்கிட்டதாவருவாரு, அவருக்கும்,அவுங்க வீட்டம்மாவுக் கும் என்ன வேணும்ன்னுகேக்க மாட்டாரு அவரோட ஒரு பார்வை என்ன சொல்லு துன்னுஎனக்குத்தெரியும், இங்க டீப்பட்ட றைல இருந்துக்கிட்டுஹோட்டல்க்குள்ள ஆர்டர்பண்ணி சொல்லீருவேன், அவுங்கஇங்கனவெளியிலவச்சிதான் சாப்புடு வாங்க, பொதுவா இங்க வெளியில உக்காந்துசாப்புடுறவுங்கஎல்லாம் என் னையமாதிரிசாதாரணப்பட்டவுங்களாத்தான்இருப்பாங்க,இல்லன்னா காலேஜ் பசங்க வந்தா கொஞ்சம்அலட்டலாஉக்காந்து சாப்புடுறதுக்காக இருக்குற இந்த யெடத்துலஒக்காந்துசாப்புடுறதுஅவுங்களுக்குப் பிடிக்கும்.பொதுவா அவுங்கள மாதிரி ஆட்கள் வந்து ஆட்கள் உக்காந்து சாப்புடுறதுகுஎல்லாம்கடைக்குள்ள இருக்குபாருங்கஅந்தகண்ணாடி ரூமூக்குள்ளதான்யெடம் ஒதுக்கு வோம் ஆனா அதமீறி இவுங்க இங்க வெளியில் இங்க ஒக்காந்து தான்சாப்புடுவாங்க/ நாங் களும்ரெண்டொருதடவைசொல்லிப் பாத்தோம், அவுங்கபதிலுக்குஎன்ன சொல் றாங்கன்னாஇங்கவெட்டவெளியில்உக்காந்துசாப்புடறவுங்ககிட்டஇருக்குற மனசுஎங்களுக்குரொம்பப் புடிச்சிருக்கு. அதுனாலஇங்கஉக்காந்துசாப்புடுறோம் ன்னு சொல்ற அவுங்க சாப்பு ட்டு முடிச்சி போகும் போது மறக்காம மகளு க்கும் மருமகனுக்குமா சாப்புட பார்சல் வாங்கீட்டுபோவாங்க,அதுல முக்கி யமாஏதாவதுஒருஇனிப்புகண்டிப்பாஇருக்கும்.

அதுபோலானதொ ருஇனிப்புதான்இப்போதுஇவன்கண்ணில்பட்டதாகவும்இவன் வாங்கியதாகவும்இருந்தது,

அதை பால்பன் என்று சொன்னார்கள்.இவனுக்குவிபரம்தெரிந்த நாளிலிருந்து அப்பண்டத்தை பார்த்திருக்கிறான்.எப்பொழுதேனுமாய் சமயம் வாய்க்கையில் வாங்கியும்சாப்பிட்டிருக்கிறான்.அப்பொழுதும்அதன்பெயர்பால்பன்தான்.

பாலில் செய்து அதை பன்னாக்கினார்களா அல்லது பன்னாய் செய்துஅதில் பாலை சேர்மானம் செய்தார்களா தெரியவில்லை.ஆனால் இவன் புரிந்து கொ ண்டதுபந்துபோல்சற்றுஉருண்டையாகசப்பட்டைவடிவம்கொண்டுஇருப்பதால் அதன்பெயர்பால்பன் என பெயர் வந்திருக்கவும் வாய்ப்புண்டு என புரிந்து கொண்டான்.

பிய்த்துப்பார்த்ததில் வெள்ளையாகவும்,வெளியே பிரவுன் கலர்தோல்போர்த்தியதுபோலவுமாய்காணப்பட்டஅந்தபண்டம் அந்தடீக்கடையில் அந் நேரம்இருக்க இவன்பார்த்ததில்லை.

அலுவலகம்முடிந்துபோனது.முடிந்துபோனதுஎனக்கூடஇல்லை.இவனதுவேலை முடிந்து போனது,மணியைப் பார்க்கிறான்வட்டவடிவில் பெரிய முள் சின்ன இரண்டையும் சுமந்து கொண்டு கூடவே இரண்டின் நடுநாயகமாய் விநாடி முள்ளொன்றையும் துணைக்கழைத்துக் கொண்டவாறு சுற்றும் வட்டவடிவ அலுவலக கடிகாரம்அலுவல்முடிப்புநேரத்திற்கு ஒரு மணி முன்பாய் முன்தள்ளிக் காண்பித்தது.

அதுவும்சரிதான்உடலும்மனதுவேலைசெய்தபிஸியிலிருந்துவிலகி லேசாகிப் போகிறது.உடல் அமர்ந்திருக்கிறது ,மனசுபறக்கிறது. இருக்கையை விட்டு/

எங்காவதுபோகலாமேஇந்தஒருமணிநேரத்திற்கு.கையில்இருசக்கரவாகனம்தான் இருக்கிறதே,சுற்றி வரலாம் கொஞ்சம் இஷ்டத்திற்கு, என்ன கொஞ்சம் பெட்ரோல்தானே செலவாகும் ஆகி விட்டுப் போகிறது.மனசும் அது சார்ந்த நிம்மதியும் முக்கியமில்லையா,தவிர அலுவலகம் கம்ப்யூட்டர்,அதன் கரடு தட்டிப் போன தனம்,வம்புப்பேச்சுகள், பொறாமை சுட்டெரிப்பு,,,,,,,என இன்னும் இன்னுமானதாண்டி துள்ளிக்குதித்தோடு கிற சிறு பிள்ளையின் உற்சாகத்துடன் அலுவலகத்தைவிட்டுவெளியேவருகிறான்.ஒருமணிமுன் அனுமதி வாங்கிக் கொண்டு/ நேரம் காட்டியகடிகாரத்திடமும்நேரத்தைமுன்னறிவித்த முட்களிட முமாய்சொல்லிக்கொண்டு/

ஆயிரத்திச்சொச்சம்சதுரஅடியில்பரந்துவிரிந்திருந்தஅலுவலகத்தில்ஒவ்வொரு இடத்தையும்,அந்தஇடம்சூழ்கொண்டிருந்தசகஊழியர்கள் அலுவலர் களைத் தாண் டிவந்தபோதுஉடல்தொட்டமாலை வெயிலும் மெல்லென வீசிச்சில்லிட்டிட்ட காற்றும்,உடல்பட்டும் விழிபட்டும் சற்றே கூசச் செய்ததாய்/விலகாதகூச்சத்தை

யும் பட்டுத்தெரித்தவெயிலையும்சுமந்துகொண்டவனாய்வந்துஇருசக்கரவாகனத்தையும் எடுத்தபோது சூல்கொண்டஎண்ணம்செயலாய் உருமாறிதோற்றம் கொள்கிறது.

பக்கத்து ஊரில் படிக்கிற பையனை கூட்டி வந்து விடலாம் என,அதென்ன அங்க போய் படிக்கப்போட்டுக்கிட்டு,இங்க டவுனையெல்லாம் விட்டு விட்டு,,,,, எனக்கேட்டவர்களிடமெல்லாம் இவன் சொன்ன ஒரே வார்த்தை நல்ல குரூப் கிடைத்தது,அதனால்என்கிறவார்த்தையைத்தான், அதற்கு முலாம்பூசிஇன்னுமாய் பத்திரமாகவைத்துள்ளான்.முன்புபடித்தபள்ளியில்படிப்பு மட்டும் என இல்லை. பழக்க வழக்கங்களிலும் கொஞ்சம் மாற்றம் ஆனது.நடவடிக்கை களில் மாற்ற ங்களைக் விதைக்கிற வயதுதான் இது என்றாலும் கூட நம்பி விட்ட பள்ளி கொஞ்சம்கூட அக்கறை எடுத்துக்கொள்ளாததுகவலையாகிப் போக தக்கதருணம் பார்த்து காத்திருந்தவன் போல ஒன்பதாம் வகுப்பு முடியவும் பத்தாம்வகுப்பி ற்குஇங்குகொண்டுவந்துசேர்த்துவிட்டான்.

இப்பொழுது11ஆம்வகுப்புபண்ணிரெண்டாம்வகுப்புப்பாடங்களைஎட்டிப்பார்க்கிறஅளவுதெளிவைமகன்பெற்றுவிட்டநிம்மதியுடன்இருக்கிறான்,எடுத்தவண்டியை எந்தப் பக்கம்திருப்பஎன தீர்மானித்து வலப்பக்கமாய் திருப்பி வேகமெடுத்து 20 திலும்,30திலும்40திலுமாய்பயணிக்கையில்வேலைன்ரோடு,பகவதி அம்மன் கோ யில்,பஜார் மார்க்கெட்மேம்பாலம்,,,,எனக்கடந்து மதுரை ரோட்டில் விரைகிறவனாய்ஆகிறான். அதஎன்ன அப்படிஒருவிரைவு எனத் தெரியாதபடிக்கும், யாரிட மும் சொல்லாமல்க்கொள்ளாமல்வெகுரகசியமாய்வந்ததுபோல்வந்துசேர்ந்த இடம்இந்தக்கடையாகிப்போனது.

கடைக்காரர்கூட கேட்டார், என்ன சார் இன்னைக்கி பையனக்காணோம், என/ கேட்டவரிடம் பையனஇனிதான்கூட்டி வரவேண்டும், அதற்கு முன்னாய் தங்களது கடையின்டீயை ஓரிருமடக்குகள்குடித்துவிட்டுப் போகலாம்எனவந்தேன், வந்த நோக்கமும் வருகையும் சரிதானே,என கேட்ட கேள்விக்கு சிரிக்கிறார் டீக் கடைக்காரர்.

நேற்றைக்கு இன்று மெலிந்ததுபோல்காணப்பட்டார்.கொஞ்சமாய் தலையைச் சாய்த்து பார்த்தபோதுதான் தெரிந்தது,கொஞ்சம் தலை கலைந்து கசலையாய் தெரிந்ததில்அப்படியாய்காட்சிப்பட்டுத்தெரிந்தார்எனத்தெரிந்தது,

அண்ணனும் தம்பியும் இப்படித்தான் இருக்கிறார்கள்.பஸ்ஸில் ஓடும் போது நீட்டாகவும், கடையில் இருக்கிற போது கசலையாகவும் காட்சிப் பட்டுத் தெரி கிறார்கள்.என்னதான்இருந்தாலும்சோறுபோடுறதொழில்இல்லையா?நல்லாத்தான இருக்கணும், இல்லையா, இதுநம்ம சொந்தக் கடை எப்படிஇருந்தாலும்ஏத்துக்கி ரும்,அங்கஅப்பிடிஇல்ல.எனச்சொல்லும்அண்ணன்தம்பிஇருவரும்தனியார் பஸ்ஸில் கண்டக்டராக ஓடுகிறார்கள்.ஒருவர் ஒரு ரூட் என்றால் இன்னொருவர் எதிர் ரூட்டில் ஓடுவார் என்பதுதான் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றதாய் இரு க்கும்,குணத்திலும்கூடஅப்படித்தான்.ஏதோகடைவியாபாரத்திற்காக பிழைப்பிற் காய்,,,,,,கதையாய்ஓடுகிறது என்கிறார்கள் ஊர்க்காரர்கள் சிலர். இப்பிடியேவா இருந்துருவாங்ககாலம் முழுக்க,பாத்துருவோம்எனச்சொல்பவர்களும் இருக்கத் தான்செய்கிறார்கள்,

கண்ணாடிச்சுவர்மீதுஒரேநேரத்தில்பூவும்விழுந்தது.கல்லும்விழத்தான்செய்தது. ஏற்றுக்கொண்டு ஓடிக்கொண்டுதான் இருந்தார்கள் சளைக்காமலும் திகுடுதிம் பாயும்/

அவர்களதுஓட்டமும்நடையும்நிதானப்படுகிறநேரங்களில்கடை இருக்குமோ இருக்காதோஎன்கிறஎண்ணம்சுமந்துநிற்கிற வேளையில் சில்வர் தாம்பாளத்தில் அடுக்கப்பட்டிருந்த இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *