கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,873 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அறை குளிர்ச்சியாக இருந்தாலும், உதவி இயக்குநர் (விற்பனை) அருணாசலம் சூடாகத் தோன்றினார். தோள் குலுங்காமல் கழுத்தை மட்டும் பக்கவாட்டில் ஆட்டியபடியே, எதிரே நின்ற இந்திராவை, ஒரு பார்வை பார்த்தார். கன்னங்கரேர் உருவத்துடன் கிடா மீசைத்தனமாக உள்ள ‘பாஸை பார்த்து, அவள் பீஸான பல்பானாள். வெறும் வயித்துக்காரியான அவள், பிள்ளைத்தாச்சி போல் இடுப்பைப் பிடித்தபடி நெளிந்தாலும், குனிந்தாலும், அவர் விடவில்லை.

“ஏம்மா. நீ சம்பளம் வாங்குறதை மறக்கிறயா..? மேக்கப் போட மறக்கிறியா..? மாத நாவல் படிக்க மறக்கிறியா..? இந்த டெல்க்ஸ் மெஸேஜை மட்டும், ஏம்மா மறந்தே…? இதை எனக்கு தெரியப்படுத்தணுமுன்னு, உனக்கு ஏம்மா தெரியலை. இமிடியட் என்கிற வார்த்தை எதுக்காக போட்டிருக்கான்? இமிடியட்டைப் புரியாட்டா இடியட்டுன்னு தானே அர்த்தம்? ஏ.டி கேக்குறேன் பதில் சொல்லு.”

“என்ன ஸார் நீங்க ஏ.டி. வாடின்னு.”

“அட நீ ஒருத்தி. நான் என் பதவிய என்ன மாதிரியே கருக்கி சொன்னேன். மீண்டும் சொல்றேன். அவிஸ்டெண்ட் டைரக்டர்னா, உனக்கு இளக்காரமா போச்சு. போம்மா. போய் சீக்கிரமா டெலக்ஸ் செய்திக்கு பர்ட்டிகுலர்ஸ் எடும்மா.”

காபி கலர் புடவையும், ஜாக்கெட்டும் போட்டு, இரண்டு கைகளிலும் அதே கலரில் வளையல்களை அடுக்கடுக்காகப் போட்டிருந்த இந்திரா, வெளியே போனபோது –

பலவேசம் உள்ளே வந்தார். அவரும் ஒரு அளயிஸ்டெண்ட் டைரக்டர்தான். அந்தக் கம்பெனியில் பர்சேஸ் பிரிவைக் கவனிப்பவர். இவருக்கு, அவரோ. அவருக்கு, இவரோ. ராசா இல்லை. இருவருமே தனிக்காட்டு ராசாக்கள். எசமான் எம்.டி. டில்லியில்.

பலவேசத்தை உற்று உற்றுப் பார்த்த அருணாசலம், ஆவேசப்பட்டு பேசினார்.

“ஏய்யா. லீவுல போனிரே… ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னிரா? இவ்வளவுக்கும், நீரு லீவ்ல போனால், உங்க வேலையையும் நான்தான் கவனிக்கணும். அங்குமிங்குமா கேட்ட செய்தியைவச்சு நானே உங்ககிட்டேகேட்டேன். அப்போவும்போகல போகலன்னு புழுகினிரு. கடைசியில டெல்லிக்காரன் சொன்னான். நீரு லீவ்ல போயிட்டதாயும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே லீவ் லெட்டரை அனுப்பிச்கட்டதாயும். தெளிவா சொன்னான். லீவு சமாச்சாரத்தை மறைக்கிறதுல. என்னய்யா உமக்கு கிடைக்கடப் போவுது..?”

அருணாசலம், எந்த அளவுக்குத் துடித்தாரோ, அந்த அளவுக்கு நிதானப்பட்டார் பலவேசம். நெற்றியில் விபூதியும், குங்குமமும் அழியாதபடி கைக்குட்டையால், முகத்தை ஒற்றியபடியே, ஒரு குறுஞ்சிரிப்போடும், அதே சமயம், அருணாசலம் பேச்சால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் போலவும் விளக்கமளித்தார்.

“அற்ப விஷயத்துக்கெல்லாம் ஏன் தலைவரே இப்படிக் குதிக்கீங்க? போட்ட லீவை கேன்ஸல் செய்யறதுன்னு தீர்மானிச்சேன். அதனால்தான் உங்ககிட்டே அப்படி சொன்னேன். ஆனால், உங்க விஸ்டரு. போயே ஆகணுமுன்னு ஒத்தக் காலுல நின்னாள். அதனாலதான், கடைசி நேரத்துல புறப்பட்டேன். உங்ககிட்டே சொல்ல நினைச்சேன், ஆனா, டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். உங்களுக்கு நிதானமே கிடையாது தலைவரே… தாம் துாமுன்னு குதிக்கிறதுதான், உங்களுக்கு எப்போவும் வேலையாப் போச்சு. உங்களுக்கு ஏற்கெனவே பிளட் பிரஷ்ஷர். இப்படிக் கத்தாதீங்க. நான் பொறுத்துக்குவேன். ஆனால், உங்க ரத்தக் குழாய் பொறுக்காது.”

அருணாசலம், தன் மீதே தவறு கண்டவர்போல், பேசாமல், பேப்பர் வெயிட்டை மேஜையில் உருட்டியபோது, பழுத்த ஞானிபோல் தோற்றம் காட்டிய பலவேசம், மெள்ளக் கேட்டார்.

“தலைவரே. உங்க ஸ்டெனோ இந்திராவை, ஒரு அரை மணி நேரம் தர முடியுமா?”

“உம்மஸ்டெனோவுக்கு கண்டபடில்லாம் லீவ் கொடுத்துட்டு, என் ஸ்டெனோவை ஏய்யா இப்படி பிராண்டுறிரு? இப்போ அவள் பிஸி.மத்தியானமாய்பார்க்கலாம்.எங்கய்யாபோறிரு?லீவுல எங்கே போனிரு? உட்கார்ந்து பேகமுய்யா. உட்காருமுய்யா.”

“இதோ வந்துடுறேன் தலைவரே.”

“எங்க போறிங்க…?”

“இதோ இங்கேதான்.பக்கத்துல தான்.பத்தே பத்து நிமிஷம்.”

எட்டிப் பிடிக்கப் போன அருணாசலத்தின் கைகளுக்கு இடம் கொடுக்காமலே, பலவேசம், வெளியே வந்தார். மேஜை மேல் உட்கார்ந்த ஒருவனையும், அந்த ஒருவனின் டியன்கேரியரை திறந்து பார்த்த ஒருத்தியையும், மாத நாவல் படித்த மல்லிகாவையும், வாரப் பத்திரிகை படித்த வசந்தாவையும், அரைமணி நேரமாய் டெலிபோன் செய்துகொண்டிருக்கும் அரசனையும், சினேகப்பூர்வமாய் பார்த்தார். அருணாசலம்தான் வெளிப்பட்டாரோ என்று அலறிப் போன ஊழியர்கள், அப்படி வந்தது ஜென்டில்மேன் பலவேசம் என்றதும் நிதானப்பட்டார்கள். ஸ்டெனோ இந்திராவிடம் வந்து கனிவோடு பேசினார்.

“ஒங்க தம்பி. ஏர்போர்ட் அதாரிட்டியில் ஏதோ ஒரு வேலைக்கு அப்ளை செய்ததாய் சொன்னது நீங்கதானேம்மா..?”

“ஆமாம், ஸார். ஆமாம். மூணு மாதத்துக்கு முன்னால சொன்னதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே. நீங்கதான் ஸார் எப்படியாவது.”

“இல்லாட்டா. வலியக் கேட்பனா..? சரி. பர்டிகுலர்ஸை டைப் அடிச்சுக்கொடு. அப்புறம் ரெண்டே ரெண்டு பக்கம் டைப்பாக்கணும். என் டாட்டர் ஏதோ கான்பரன்ஸ்ல.”

“சாயங்காலமா அடிக்கிறேன் வார். இப்போ அது வேலை வச்சிருக்கு”

“அவளுக்கு மத்தியானமே வேணுமே. கான்பரன்ஸ் மூணு மணிக்காம், ரெண்டே ரெண்டு பக்கந்தான்.”

பலவேசம், இந்திராவுடன் தனது அறைக்குள் போனார். ஒரு காகிதக் கத்தையை நிட்டினார், இந்திரா, அழாக்குறையாய் கேட்டாள்.

“என்ன வார். ரெண்டு பக்கமுன்னு, இருபது பக்கம் தர்ஹீங்க..?”

“எழுத்துல இருபது. டைப்புல இரண்டு தான் பரும். ஓ.கே.”

பலவேசம் போன ஒரு மணி வரை அருணாசலம், பைல்களுக்குள் அல்லாடினார். திடீரென்று, ஒரு டெலிபோன். இந்திரா வடிகட்டி கொடுத்த போன்.

“ஹலோ யார் பேகறது. தெரியுதான்னு கேட்டா, எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்? அடடே. சொக்கரா. என்னப்பா. உன் பிரமோஷனுக்கு லஞ்ச் கொடுக்கிறியா..? என்னை ஏம்பா கூப்புடல? என்னது, பலவேசத்துக்கிட்டே, என்கிட்டே சொல்லும்படியா. பல தடவை சொன்னியா..? ஓ.கே. வாரேன். என்ன. பலவேசமும் அங்கே இருக்காரா.”

மேஜையில் கையூன்றியபடி எழப்போன அருணாசலம், தொப்பென்று நாற்காலியில் விழுந்தார்.

‘எதுக்காக இந்த பலவேசம், என்கிட்டே சொல்லலை? நான் போறதால இவனுக்கு என்ன கஷ்டம்? இப்ப மட்டும் அவன் என் கண்ணுல அகப்பட்டால். கூடாது, கோபப்படக்கூடாது. பிளட் பிரஷ்ஷர் அதிகமாகிவிடும். அதனால லஞ்ச் பார்ட்டிக்குப் போய்ப் பலவேசத்தை திட்டும்படியா ஆகப்படாது.

அந்தச் சமயம் பார்த்து, பியூன் வெள்ளைச்சாமி, உள்ளே வந்தான். அருணாசலம், பிடித்துக் கொண்டார்.

“வாய்யா. வா… பத்து மணி ஆபீசுக்குப் பன்னிரண்டு மணிக்கா வாரே? இந்திரா இங்கே வா. இவனை இன்னிக்கு சஸ்பெண்ட் செய்தாகணும்.”

“என் மகனை ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டுவர்றேன்வார்.”

“மடையா. இதை ஏன் மொதல்ல சொல்லப்படாது? பழையபடியும் பிட்ஸா..?பணம் ஏதும் வேணுமா? இதோ அய்ம்பது போதுமா? டேய். இங்கே வாடா. உங்கப்பானா. இந்த ஜன்னல் திறப்பாரு…? கண்ணாடி ஜன்னலை திறந்து வைக்கணுமுன்னு, ஏண்டா உனக்குத் தெரியலை… முண்டம், முண்டம். முழு முண்டம்.”

மத்தியானத்திற்குப் பிறகு, பலவேசம் பீடா வாயோடு, உள்ளே வந்தார். அருணாசலம், அவர் கழுத்தை நோக்கிப் போன கரங்களை முடக்கியபடியே கேட்டார்.

“எங்கே போயிட்டு வாரீங்க..?”

“அதோ அங்கேதான்.”

“ஏய்யா. இப்படி ரகசியமா நடக்கியரு. சொக்கர் கொடுக்கிற லஞ்ச் பற்றி என்கிட்டே சொன்னால் என்னய்யா?” அதுவும், அவன் என்னை வச்சுத்தான், உங்கள கூப்பிட்டிருக்கான். உம்ம சோத்தையா நான் சாப்பிடுவேன்? கடவுளே. கடவுளே. சீ. இப்படியும் ஒரு.”

“விஷயம் தெரியாம. இப்படிக் குதிக்கிறீங்களே. தலைவரே, எனக்கும் இருதயத்துல இஸ்க்கிமியா இருக்குதா..? செக்கப்புக்குப் போனேனா. அந்த வழியில சோழா ஹோட்டல பார்த்தேனா. பார்ட்டி ஞாபகம் வந்துட்டு.”

“சரி. என்னையும் கூட்டிட்டுப் போறது.”

“நினைச்சேன். ஆனால், அங்கே இருக்கிற அயிட்டங்களைப் பார்த்த பிறகு மனசை மாத்திக்கிட்டேன். விஸ்க்கியைப் பார்த்தா விடுவீரா? அப்புறம் உம்ம உடம்பு என்னாகிறது? என்சிஸ்டருக்கு, நான் எப்படி பதில் சொல்றதாம்.?”

“சரி. சரி. நான் ஒரு உளறு வாயேன். உம்ம வேலையைப் போய்ப் பாரும்.”

“நீங்க இப்படி என்னை இன்சல்ட் செய்யுறதாலதான், டில்லிக்காரனும் இன்சல்ட் செய்யுறான். ஆமாம் தலைவரே! “டிரேட்பேர்ல’ நம்ம கம்பெனிக்கு ஸ்டால் போடுறோம். நடக்கிறது மெட்ராஸ்ல… நடத்த வேண்டியது நான். ஆனால், டில்லி டைரக்டர் ரமணப்பா, பெங்களுர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் லிங்கப்பாவை நடத்தும்படி சொல்லியிருக்கான். எல்லாருக்கும் நான் கேவலமாய்ப் போயிட்டேன்.”

அருணாசலம், அவருக்குப் பதிலளிக்கவில்லை. டில்லிக்கு டெலிபோனை காவடி எடுக்க வைத்தார்.

“ஹலோ. டைரக்டர் ஆப் எக்ஸிபிஷனா.. ஸார். நம் பலவேசம், மெட்ராஸ்ல கல்லு மாதிரி இருக்கப்போ, பெங்களுர் லிங்கப்பாவை கூப்புடுறது சரியில்லைன்னு படுதுஸ்ார். அப்புறம் வோகல் மேனுக்கு மரியாதை கிடைக்காது ஸார். அவரை மாதிரியே. இவரும் டிசைன் எக்பர்ட்தான் ஸார். உங்க மேல கன்னடத்துக்கு கன்னடமுன்னு பழி வந்துடப்படாது ஸார். தேங்க் யூ ஸார். தப்பா எடுத்துக்காதீங்க. நானும் ஒத்தாசை செய்யுறேன் ஸார்…”

அருணாசலம், வெற்றிப் பெருமிதத்துடன் டெலிபோனை வைத்துவிட்டு, பலவேசத்தைப் பார்த்தார். “லிங்கப்பா வர்லப்பா” என்றார் – எதுகை மோனையோடு.

பலவேசம், நன்றி என்று சொல்ல முயன்று, அந்த வார்த்தை வெளிப்படும் முன்பே, வெளியே போனார். எங்கிருந்தோ வந்த டெலிபோனுக்கு, அவர் தனது அறையில் இருந்து பதில் சொல்வது அருணாசலத்திற்குக் கேட்டது. இங்கிருந்தபடியே குரலிட்டார்.

“யாரோட டெலிபோன்.”

“மாத்திரை சாப்பிட்டாச்சா. தலைவரே.”

அருணாசலம், கேட்டதை மறந்து, மாத்திரையை எடுத்தார். அதை வாயில் போட்டு, கண்ணாடி தம்ளர் தண்ணிரை, கழுத்துக் குழாய் மூலம் உட்செலுத்தி விட்டு, வேலையில் கவனமானார்.

“இந்திரா. பர்டிகுலர்ஸ் எடுத்துட்டியா..? என்ன வேலை ஆயிட்டு இருக்குதா.?பர்ட்டிகுலர்ஸ் எடுக்க வேண்டிய சமயத்துல டைப்ரைட்டர் சப்தம் ஏன் கேட்குது? ஒ.கோ. அப்படி அப்படியே. டைப் அடிக்கிறியா? குட். அப்புறம் நான் சொன்னதைப் பெரிசா எடுத்துக்கிட்டு ஓவர் டைம் போடாமல் இருந்துடாதே. என் பிரின்ஸ்பிள் என்னென்னா, நல்லா நாள் பூராவும் விகவாசமாக வேலை பார்க்கணும். அதேசமயம், நிர்வாகம் தருகிற எல்லா சலுகைகளையும் பயன்படுத்திக்கணும்.”

பேசிக்கொண்டே இருந்த அருணாசலம், பியூன் வெள்ளைச்சாமி, நீட்டிய ஒரு டெலக்ஸ் மெஸேஜை ஆங்கிலத்தில் படித்து, தமிழில் உள் வாங்கினார். அவர் பெயருக்கு வந்த டெலக்ஸ். அதன் தமிழாக்கம் இதுதான்.

“சிறிது நேரத்திற்கு முன்பு, பலவேசத்திடம் டெலிபோனில் சொன்னதுபோல், நமது மானேஜிங் டைரக்டர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து டில்லி புறப்படுகிறார். டில்லி பிளைட் வரைக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருப்பார். நீங்கள் அவரைப் போய்ப் பார்க்கவும்.”

அருணாசலம், துடித்துப் போனார்.

“டேய். பலவேசம்..”

“அவரு போய் ஒரு மணி நேரம் ஆகுதே வார். ஆபீஸ் கார்ல போனார்”

“டேய் மடையா. வெள்ளைச்சாமி! உனக்கு மூளை இருக்காடா..? அரை மணிநேரத்துக்கு முன்னால வந்த டெலக்ஸை இப்போ தாறே.”

அந்த அறைக்குகைக்குள்,அருணாசலம்,குறுக்கும்.நெடுக்குமா கத்திக் கொண்டே கற்றினார். இனிமேல், மீனம்பாக்கம் போகமுடியாது. இந்நேரம் எம்.டி. செக்யூரிட்டி ஜோனுக்குள் போயிருப்பார். இந்த பலவேசப் பயல் பேருக்கு ஏத்தபடியே நடத்துக்கிடுறானே. இவனை விடப்படாது.

இரண்டு மணி நேர கொந்தளிப்பிற்கு பிறகு, பலவேசம் அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு அருணாசலம், எழுந்தார். புஷ் டோர்களை வேகமாய்த் தட்டிவிட்டபடியே, பலவேசம் அறைக்குள் பாய்ந்தார்.

“எங்கே போயிட்டு வர்றிங்க..?”

“தலைவரே. உட்காருங்க. மருந்து சாப்பிட்டீங்களா..?”

“எங்கேய்யா போனே..?”

“அதோ அங்கதான். காப்பி சாப்பிடுவோமா..?”

“ஏர்போட்டுக்கு எம்.டி. வந்ததை என்கிட்டே, ஏய்யா சொல்லலை.”

“ஓ அதுவா. இந்த சின்ன விஷயத்துக்கா இப்படிக் குதிக்கிறீங்க..?”

“எதுய்யா, சின்ன விஷயம். நீரு போயிட்டு நான் போகாட்டால் எம்.டி. என்னைப் பற்றி என்னய்யா நினைப்பார்? இவ்வளவுக்கும், உமக்கு டெலிபோன்ல, எனக்கும் சேர்த்துச்சேதி சொல்லி இருக்காங்க…”

“உமக்கு நிதானம் என்கிறதே கிடையாது தலைவரே. முதல்ல சொல்றதைக் கேளுங்க. உடம்பு அசதியா இருக்கேன்னு வீட்டுக்குப் போனேன். நம்ம ஆபீஸ் போன் என்கேஜ்ட் கம்பெனி செக்ரெட்டரி என் வீட்டுக்கு போன் போட்டார். பிளைட் டைமுக்கு முக்கால் மணி நேரந்தான் இருந்துது. உங்களை பிக்கப் செய்தால், எம்டி போகிற பிளேனைக் கூடப் பார்க்க முடியாது. அதனால ரொம்ப ரொம்ப வேதனையோட நான் போனேன். ஆனால், அதுக்குள்ளே எம்.டி. உள்ளே போயிட்டார். கம்மா, கையைத்தான் ஆட்ட முடிஞ்கது.”

“யோவ் பலவேசம்! நீ மனுஷன் இல்லய்யா. நிறத்துல வெள்ளையாய் இருந்தாலும், நீ மனசால கரும்பன்றிய்யா… உனக்கும் தெரு நாய்க்கும் வித்தியாசம் கிடையாது. நீதான் இப்படின்னா. உன் வீட்டுக்காரி அதுக்கு மேல. இந்த ஊருக்குப் போயிருக்கார்னு சொல்லாமல், அவுட் ஆப் ஸ்டேஷன்னு சொல்ற அழுகுணியம்மா. ஒருவேளை என்கிட்டே நடந்துக்கிற மாதிரி, அந்தம்மாகிட்டேயும் நடந்தியோ என்னமோ…? நீ உருப்பட மாட்டய்யா. நீ இரண்டு கால் மிருகம். டிரெஸ் செய்த நரி”

பலவேசத்தைப் பார்த்துத் துாக்கிய கைகளை ஒன்றுக் கொன்றாய்ப் பிடித்துக் கொண்டு, தனக்கு தானே பயந்தவராய், அருணாசலம் அலுவலகத்தை விட்டே வெளியேறினார். அவர் போனதும், அலுவலக ஊழியர்கள், பலவேசம் அறைக்குள் ஓடிவந்தார்கள். இந்திராவின் சப்தமும், வெள்ளைச்சாமியின் குரலும் அதிகமாய் ஒலித்தன.

“என்ன ஸார் இது? அந்தக் காட்டான் அப்படிப் பேசறான். நீங்க பேசாமல் இருக்கீங்களே. பதிலுக்குப் பதில் கொடுத்தா, என்ன ஸ்ார்? ஜென்டில்மேனான. உங்களையே இப்படிப் பேசறான். அப்புறம் நாங்க எம்மாத்திரம்? டில்லிக்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்க ஸார்…”

“பாவம். அவருக்கு வீட்ல என்ன சிரமமோ..?”

“எல்லாருமே கையெழுத்துப் போட்டு, இப்போ நடந்த சம்பவத்தை டில்லிக்கு எழுதப் போறோம். விசாரணை வரும்போது, நீங்க நடந்ததைச் சொல்லணும். சொல்லுவீங்களா? யாரையுமே மனம் நோகப் பேசாத நீங்க இரண்டுகால் மிருகமாம். டிரெஸ் செய்த நரியாம். அன்றைக்கு என்னடான்னா இவங்கள ஏடின்று வேற கூப்பிட்டுருக்கான். சரி. புகார் எழுதப்போறோம். நடந்ததை சொல்வீங்களா..?”

பலவேசம், அவர்களை கண் நெகிழப் பார்த்தார். அதே கண்களைத் துடைத்துப் பார்த்தார். பிறகு, தரையைப் பார்த்தபடியே தான் பேகவது, அதிகமாய் கேட்கக்கூடாது என்பது போல் பதிலளித்தார்.

“விட்டுடலாமுன்னு நினைச்சேன். ஏதோ எப்படியோ. அப்புறம் உங்க இஷ்டம்.”

“இந்தக் காட்டானை விட முடியாது. எழுதத்தான் போறோம். உங்களால நடந்ததை நடந்தபடியே, சொல்லமுடியுமா? முடியாதா..?”

“உங்களுக்கு தெரியாதா…? எனக்குப் பொய் பேசி பழக்கம் இல்லைன்னு. உங்களையும் பார்க்க பாவமாய் இருக்குது. அப்புறம் உங்க இஷ்டம்.”

– கல்கி விடுமுறை மலர் – 1990.

– தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *