தொழிலாளியும்முதலாளியும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 7,660 
 
 

ராஜசேகர் இல்லம், விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து அவர் தங்கை,கணவர்,மற்றும் அவர்கள் குழந்தைகள் உடன் அவரின் இரு குழந்தைகள் அனைவரும் வால்பாறை செல்வதற்காக ஒரு ஆடம்பர வேனில் கிளம்பினர். அவரின் மனைவி மட்டும் இவருக்காக தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார், ராஜ சேகருக்கும் ஆசைதான் இவர்களுடன் செல்ல வேண்டும் என்று, ஆனால் இன்று கம்பெனி விசயமாக ஒரு பெரிய புள்ளியை பார்க்க வேண்டும், ஆதலால் அவர் செல்லவில்லை,அனைவரையும் அனுப்பிவிட்டு ஒரு சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தார். போன் மணி அடித்தது, எடுத்து ஹலோ என்றவர் சிறிது நிமிடத்தில் முகம் மாறினார், அவசரமாக போனை வைத்தவர் உடனே கிளம்ப ஆயத்தாமாவ்து போல் குளியறைக்குள் நுழைந்தார்.

எப்போதும் மனைவியிடம் போய் வருகிறேன் என்று சொல்பவர் இன்று எதுவும் சொல்லாமல் விர்ரென்று கிளம்பி வாசலுக்கு வந்தார். அவரின் வருகைக்காக முன்னரே காரின் கதவை திறந்து காத்திருந்த டிரைவரிடம் கூட எதுவும் பேசாமல் உள்ளே உட்கார்ந்தார், டிரைவர் நல்ல அனுபவசாலி அவரை சிறு வயது முதலே தெரியும் ஆகவே முதலாளி இன்று கோபமாக உள்ளார் என்பதை புரிந்துகொண்டு, காரின் கதவை சாத்திவிட்டு முன்னே வந்து வண்டியை எடுத்தார்.

“ராஜசேகர் இண்டஸ்ட்ரீஸ்” கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையில் இருந்தது. கோவை மாநகா¢ல் இது ஒரு பெயர் பெற்ற நிறுவனம்,500 தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்து வந்தனர்.சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் மரங்களும், புல்வெளித்தளங்களும் அமைக்கப்பட்டு,ஊழியர்களுக்கு தனியாக் ஒரு ஓய்வறை, கழிவறை மற்றும் காண்டீன் வசதிகள் போன்றவைகள் இருந்தன. வெளியிலிருந்து கம்பெனிக்கு தனியான பாதையும், அலுவலகத்துக்கு தனியான பாதையும் இருந்தன.

ராஜசேகரின் கார் அலுவலகப்பாதை வழியாக அலுவலகம் வந்து நின்றது, டிரைவருக்காக காத்திராமல் இவரே காரின் கதவை திறந்து வெளியே வந்தவர் இவருக்காக காத்திருந்த மானேஜரின் குட் மார்னிங்கை ஏற்றுக்கொண்டு விறு விறு அவரது அறையை நோக்கி நடந்தார், மானேஜரும் அவருடனே நடந்து வர இருவரும் ராஜசேகர் எம்.டி என்ற அறைக்குள் வந்து அவரது நாற்காலியில் உட்கார்ந்தார். மானேஜரையும் உட்காரச்சொல்லி ம்.. சொல்லுங்க என்ன பிரச்னை காலையில போன் பண்ணியிருந்தீங்க.எம்பிளாயீஸ் எல்லாம் வேலை செய்யமாட்டேங்கறாங்கன்னு.

சார் நாம ஊதிய உயர்வு சம்பந்தமா எப்பவும் ஐந்து வருசத்துக்கு ஒருமுறை ஒரு ஒப்பந்தம் போடுவோம், அது போன வருசத்தோட முடியுது, இந்த வருசம் இதுவரைக்கும் அவங்களை இது சம்பந்தமா பேச்சுவார்த்தைக்கு கூப்பிடலைன்னு இன்னைக்கு ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யறோம்னு சொல்லி காலையில எட்டு மணி ஷிப்டுக்கு வரவங்களை உள்ளே வர விடாம தடுத்து நிறுத்திட்டாங்க நான் போய் கேட்டதற்கு உங்களை வரச்சொல்லி பேச்சுவார்த்தைக்கு ஒரு தேதியை அறிவிக்கச்சொல்லனும்னு சொல்றாங்க..

சா¢ போய் பார்க்கலாம் வாங்க என்று எழுந்தவரை மானேஜர் தடுத்தார், வேண்டாம் சார் அங்க கேட்டுக்கு முன்னாடி ஒரே கூட்டமாக இருக்காங்க, ஏதாவது ஏடா கூடமா பேசுவாங்க, நான் முதல்ல நம்ம ஸ்டாப்சை அனுப்பிச்சு அவங்கல்லயிருந்து நாலு முக்கியமானவங்களை வரச்சொல்லி பேசுவோம், அதுவும் நல்லதுதான் உடனே போங்க என்று மானேஜரை அனுப்பி வைத்தார்.

மானேஜர் வெளியே சென்று பத்து நிமிடத்தில் நால்வரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார், இவர் பெயர் ராமசமி ஷீட் மெட்டல் டிபார்ட்மெண்ட், இவர் பேர் குமாரசாமி டிரில்லிங்கில இருக்கறாரு, இவங்க செல்வம், முஸ்தபா இவங்க இரண்டு பேரும் பேப்ரிகேசன்ல இருக்கறாங்க..அறிமுகப்படுத்தினார்

சொல்லுங்க இப்படி தீடிருன்னு ஸ்ட்ரைக் அப்படீன்னு வேலெய நிறுத்திட்டிங்கன்னா எவ்வளவு நஷ்டம் தெரியுமா? இந்த மாசம் கூப்புடுலயின்னா அடுத்த மாசம் கூப்பிடாம போயிடுவாங்க? எதுக்காக இந்த முடிவை எடுத்தீங்க? இதுக்கான் நஷ்டத்தை நீங்க ஏத்துக்குவீங்களா?குரலில் உஷ்ணம் ஏறியது

ராமசாமி சார் எங்க மேல தப்பு சொல்லாதீங்க இப்பவே ஆறு மாசம் ஆச்சு, நீங்க இப்படியே வருசத்தை ஓட்டிடுவீங்க, நாங்க ஒண்ணும் வேலையே செய்யலேன்னு சொல்லலீயே, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்தான் பண்ணியிருக்கோம்,இப்ப உங்களுக்கு நஷ்டம்ன உடனே எங்களை கூப்பிட்டு பேசறீங்க இல்லையா? இதத்தான் நாங்க எதிர் பார்த்தோம், இதை நிர்வாகம் ஏன் முன்னாலேயே செஞ்சுருக்க கூடாது

ராஜசேகருக்கு கோபம் வந்தது, இந்த மாதிரி வேலை நிறுத்தம் பண்ணா நிர்வாகம் பயந்துக்கும்னு நினைச்சுட்டீங்களா? இந்த கம்பெனி ஆரம்பிச்சு நிமிர்ந்து நிக்கறதுக்கு இருபது வருசம் நான் பாடுபட்டிருக்கேன், இப்ப நீங்க எல்லாம் நிம்மதியா வாழ்க்கை ஓட்டறீங்கன்னா அதுக்கு இந்த கம்பெனி கொடுக்கற சம்பளம் தான் காரணம் இதை மறந்திடாதீங்க ! உங்களுக்கு தேவையான எல்லா வசதிகளும்தான் கம்பெனி செஞ்சு கொடுத்திருக்கே ஒண்ணூ தெரியுமா? ஒவ்வொரு எம்பிளாயுக்கும் கம்பெனி வருசத்துக்கு ஒரு லட்சம் செலவு பண்ணுதுண்ணூ.

குமாரசாமி சார் நீங்க இந்த கம்பெனிய உழைச்சு முன்னுக்கு கொண்டு வந்தீங்கன்னு சொல்றதை ஒத்துக்கறோம் அதுக்கு எங்களை மாதிரி தொழிலாளிகள் உங்களோட இருந்து உழைச்சதனாலதான் கம்பெனி இந்த அளவுக்கு வளர்ந்துருக்கு அதை நீங்க ஒத்துக்குங்க, நாங்க கேக்கறது எங்களுக்கு நியாயமா வரவேண்டிய ஊதிய உயர்வைத்தான் கேட்கிறோம் அதுக்கு உண்டான பேச்சுவார்த்தைய தொடங்குங்க அப்படின்னுதான சொல்றோம்.

இருந்தாலும் ராஜசேகரால் அறிவிக்காமல் செய்த இந்த வேலைநிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால் விவாதம் அனல் பறந்தது,அப்பொழுது அவரது அந்தரங்க காரியதரிசி அவரது அனுமதியில்லாமல் உள்ளே வந்து மானேஜரின் காதில் ஏதோ சொல்ல மானேஜரும் அதை பதட்டத்துடன் ராஜசேகா¢டம் சொல்ல அவர் முகம் வெளுத்து கை கால் பட படக்க வெளியே வந்து வெளியே ந்¢ன்று கொண்டிருந்த காரில் ஏறினார், டிரைவர் காரை வேகமாக எடுக்க கார் பறந்தது.

அலுவலகம் முழுவதும் பரபரப்பானது, முதலாளியோட சொந்தக்காரங்க போன வேன் மலைமேல ஏறும்போது பிரேக் பிடிக்காம ரோட்ல இருந்து பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சாம்.

விபத்து நடந்த பகுதிக்கு ராஜசேகர் சென்றடையும் போது வேடிக்கை பார்க்கும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது, பக்கத்தில் ஊர் எதுவும் இல்லாததால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள் மட்டுமே கூடி நின்று வேடிக்கை பார்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் இறங்கியும் இருந்தனர், ஆனால் கீழே மரத்தின் மீது மோதி நின்று கொண்டிருந்த வேனையும் அதனுள் உள்ளவர்கள் இடும் கூச்சலையும் பார்த்து பயந்து அடுத்து என்ன செய்யலாம் என திகைத்து நின்ற்கொண்டிருந்தனர்.அப்படியே ஒரு அரைமணி நேரம் ஓடி இருக்கும் அப்போது ஒரு வேன் வந்து நின்றது, அதிலிருந்து ராஜசேகர் இண்டஸ்ட்றீ தொழிலாளர்கள் விறுவிறுவென இறங்கினர்.விபத்து நடந்த பகுதியை மேலிருந்து பார்த்தனர், அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்,

அதற்குள் கயிறுகள் நிறைய கொண்டுவரப்பட்டன. ஒரு தொழிலாளி பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றை கட்டினான், பின் இடுப்பை சுற்றிக்கொண்டு முதலில் கீழே இறங்க அதன் பின்னால் ஒவ்வொருவராக இறங்கினர், ஒருவருக்கொருவராக நன்கு காலை ஊன்றி நின்று கொண்டு முன்னர் சென்ற இருவர் மிச்சம் உள்ள கயிற்றால் வேனின் பக்கவாட்டைச்சுற்றி கயிற்றால் கட்டினார்.அதற்குள் உள்ளுர்வாசிகளும் இந்த கயிற்றின் மூலமாக இவர்களுக்கு உதவ வந்துவிட்டனர், தீயணைப்பு வீரர்களும் இவர்களுடன் சேர வேனில் இருந்து ஒவ்வொருவராக இறக்கப்பட்டு வரிசையாக நின்றுகொண்டிருக்கும் தொழிலாளிகளின் மூலமாக மேலேற்றப்பட்டனர்.

அனைவருக்கும் கடுமையான காயம், அனைவரையும் ஆம்புலன்ஸ், மற்றும் காரில் ஏற்றி மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர், ராஜ சேகருடன் அவர் அலுவலக ஊழியர்களும் உடன் வந்தனர். இதற்குள் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவர்கள் கேட்ட பதினைந்து பாட்டில் இரத்தம் தர சுமார் இருபது தொழிலாளர்கள் தயாராகினர்.

இனி உயிருக்கு ஆபத்தில்லை, மருத்துவ சிகிச்சை எடுத்தால் போதும் என மருத்துவர்கள் சொல்லும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதை கேட்டபின்னரே தொழிலாளர்கள் அனைவரும் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டனர்.

காவல்துறையின நடைமுறைகளை முடித்துவிட்டு கடைசியாக மானேஜர் மற்றும் அலுவலக ஊழியர்களை தகுந்த வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு மனைவிக்கு பயப்படவேண்டாம் காலை தானும் மற்றவர்களும் வந்துவிடுவோம் என தகவல் தந்துவிட்டுமருத்துமனையின் ஹாலில் உள்ள சோபாவில் சற்று கண்ணயர்ந்தார்.

பதினைந்து நாட்கள் ஓடி விட்டன ராஜசேகர் அன்றுதான் கம்பெனிக்குள் நுழைந்திருந்தார்.அதுவரை தினமும் மானேஜரிடமே கம்பெனி விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டிருந்தார்.அடையாள வேலை நிறுத்தம் முடிந்த மறு நாள் முதல் கம்பெனி எந்த பிரச்சினையும் இன்றி தினமும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர்.இவர் வந்தஅன்றே தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே வந்த நால்வரே அவர் அறைக்குள் நுழைந்தனர்.ராஜசேகர் எழுந்து நின்று அவர்களை வரவேற்று நான் நம்முடைய அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

செல்வம் உடனே நீங்கள் எங்களிடம் வந்து பேசுவதற்கு எங்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை, அதே நேரத்தில் நன்றி என்று சொல்லி எங்களை பிரித்துவிடாதீர்கள், எங்களை பொறுத்தவரை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம் நீங்கள் நன்றாக இருக்கும்பட்சத்தில் நாங்களும் நன்றாக இருப்போம் ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை போராடித்தான் பெற வேண்டுமென்று வந்தாலும் கண்டிப்பாகப் போராடுவோம்.

உண்மைதான் என்பது போல புன்னகைத்தார் ராஜசேகர்.

Print Friendly, PDF & Email

1 thought on “தொழிலாளியும்முதலாளியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *