தொலைந்த கனவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 7,099 
 
 

வேகமாக வந்த அந்த போலீஸ் ஜீப் கீறீச்சிட்டு அந்த வீட்டின் முன் நின்றது …விறு விறுவென நான்கைந்து போலீஸ்காரர்கள் இறங்கினர்…

வீட்டின் முன் சூழ்ந்திருந்த கூட்டத்தினரை பார்த்து ” கலைஞ்சி போங்கய்யா” வேலை செய்ய விடுங்க, வேடிக்கை பாக்காதீங்க …என ஏட்டு கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே போக முயன்றார்…

“பாடி “எங்கைய்யா கிடக்கு ..பாருய்யா என்றார் இன்ஸ்பெக்டர்..

இங்கே தான் சார் கிடக்கு…

“அந்த வெப்பனும் இங்க தான் ஸார் இருக்கு ” எனறார் ஏட்டு..

ஒரமாக அந்த அரிவாள்மனை ரத்த சுவடுகளுடன்…

ரத்தவெள்ளத்தில் மிதந்தபடி பிணமாக கிடந்தான் சேகர்…ஆவென வாயை பிளந்த படி…

ஒரு ஓரத்தில் பயந்தபடி அழுது கொண்டிருந்தாள் திவ்யா…அருகில் திக் ப்ரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் அக்கா செல்வி குழந்தைகளை அணைத்தபடி…

அந்த பாடியை வளைத்து வளைத்து பி.சி.ஶ்ரீராம் போல் போட்டோ எடுத்து கொண்டிருந்தார் அந்த டிபார்ட்மெண்ட் போட்டோகிராபர்…

யோவ் ஏட்டு !! பாரன்ஸிக் ஆளுங்களை வரச்சொல்லி போன் பண்ணியா….

சொல்ட்டன் சார்….

இன்னா சொல்றாங்கய்யா …அந்த ரெண்டு லேடிஸீங்க…..

“எதுவுமே சொல்லாம” அழுதுட்டிருக்காங்க சார்…

செத்தவன் பேர் …என்னய்யா..

சேகராம் சார்…புல் மப்புல இருந்திருப்பான் போல…ஏட்டு

அந்த பொண்ணுங்களை வரச்சொல்லுய்யா…இன்பெக்டர்..

பயந்தபடி வந்த செல்வி …சார் எந்தங்கச்சிய உட்ருங்க சார்…வாழவேண்டிய பொண்ணு…அது பாவம் சார்…தெரியாம பண்ணிடுச்சி….என்று கதறிளாள்..

அருகில் மருண்ட விழிகளில் திவ்யா 20 வயது தானிருக்கும்…விழிகளில் மரண பயம்

செல்வி தான் பேசினாள் இல்லை கதறினாள்…

சார் எங்கப்பா, அம்மா சில வருஷம் முன்னாடி போய் சேய்ந்துடாங்க..

நான் தான் சார் , ஆதரவில்லாத இவளை பொண்ணு மாறி வளக்குறேன்…

இந்த குடிகார பாவி போதையில என் தங்கச்சியை கெடுக்க பாத்தான் சார்..

“அவள காப்பாத்திக்க “தான் சார் பாவிபுள்ள இப்படி பண்ணிட்டா…வாழ வேண்டிய பொண்ணு சார்..வுட்ருங்க சார்… என்று அரற்றினாள்..

‘இங்கே வாம்மா’ என திவ்யாவை அழைத்தார்..இன்பெக்டர்….

மிரட்சியான விழிகளுடன் ஒடுங்கி வந்து நின்றாள் அந்த சின்ன பெண் பரிதாபமாக …

என்னம்மா நடந்தது…என்றார் இன்ஸ்பெக்டர்

நான் தூங்கிட்டிருந்தேன் சார்…எங்கக்கா தண்ணி பிடிக்க தெருமுனைக்கு போய்யிருந்துச்சி…

திடீர்னு முழிச்சி பாத்தா இந்த குடிகார நாய் எங்கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்னான் சார்..

எவ்ளோவோ போராடி பாத்தேன் சார் ..அவன் விடலை..ஆத்திரத்துல பக்கத்துல கிடந்த அரியாமனையை எடுத்து தூக்கி போட்டுட்டேன் சார்…

அந்த படுபாவி சாவான்னு நினைக்கலை..என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டானே சார்… என்று முகத்திலடித்தபடி அழுதாள் திவ்யா…

சார்..அந்த பொண்ணே கொலையை ஒத்துகிட்டு வாக்குமூலம் குடுத்துடுச்சி ..அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல ப்ரொடியூஸ் பணணிடலாம் சார்…என்று தன் மேலதிகாரியிடம் போனில் அனுமதி வாங்கி கொண்டார்..இன்ஸ்பெக்டர் கௌதமன்..

அதற்குள் திபுதிபுவென சில வேன்கள் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய நபர்கள் கேமரா, மைக் சகிதம் சூழ தொடங்கினர்….

குற்றம் நடந்தது என்ன!! என லவ் போட ரெடியாகின சில சேனல்கள்..

போங்கய்யா.. “ஒரு எழுவு விழக்கூடாதே மைக்கை தூக்கிட்டு வந்திடுவானுங்களே”…என புலம்பினார் ஏட்டு..

செல்வி , திவ்யா மற்றும் இன்பெக்டர் என மூவர் முன்பும் மைக் நீட்ட முண்டியடித்தது கூட்டம்..

யோவ்! பாவம் சின்ன பொண்ணுய்யா..உங்க அக்கா தங்கச்சின்னா இப்படி பண்ணுவீங்களாய்யா.. என கத்தினார் இன்ஸ்பெக்டர்…

தலைகுனிந்தபடியே வழிவிட்டனர் ….

தன் கைகளோடு ….எதிர்கால லட்சியங்களையும், ஆசைகளையும் சேர்த்து விலங்கிடபட்டு நீதிபதியை பார்க்க அழைத்து செல்லபட்டாள் திவ்யா.. கலங்கிய கண்களுடன் கனவுகளை தொலைத்தபடி…

நேற்று…

சுரேன்…இந்த வருஷத்தோடு டிகிரி முடிய போகுதுடா…

ஏற்கனவே IAS பரிட்சைக்கு கோச்சிங் போய்டிருக்கேன்….காலேஜ்க்கு பணம் கட்டவே ரொம்ப கஷ்டபடுறா எங்கக்கா…இதுல கோச்சிங் பீஸ் வேற…

ம்ம்ம்… என்றான்

எப்டியாவது சீக்கிரமே IAS பாஸ் பண்ணி கலெக்டர் ஆகிடணும்..டா

நீ கட்டாயம் ஆய்டுவேடா திவ்யா ..இது சுரேன்

நான் கலக்டரான போடுற முதல் கையெழுத்து மதுவிலக்கா தான் இருக்கணும்டா…

எங்கக்கா மாதிரி கஷ்டபடுற பெண்களோட கண்ணீரை துடைக்கணும்டா….

சுரேன்…உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா..

எங்க மாமா இப்பல்லாம் என்ன பாக்குற பார்வையே சரியல்லடா… பயம்மாயிருக்குடா..

அச்சச்சோ.. என்றான் சுரேன்..

அதுவும் டெய்லி குடிச்சிட்டு வந்து போதையில் கண்டமாதிரி பேசுறான்…அக்கா குழந்தைகள் கிட்டயும் சண்ட போடுறான்..

அங்க இருக்கவே பிடிக்கலை ,அக்கா இருக்குற கஷ்டத்துல என்னையும் வளர்த்து படிக்கவைச்சி ஆளாக்குறா..இதை அவகிட்ட சொல்லவே பயிமாயிருக்குடா ..என்றாள் திவ்யா..

விடு திவ்யா..இன்னும் கொஞ்சநாள் தானே…நீ IAS பாஸான டெல்லி போய்டுவ…ட்ரேயினிங் முடிச்சதும் நம்ம கல்யாணம் தான்..அதுக்குள்ள நானும் செட்லாகிடுவேன்…

கொஞ்ச நாள் பொறுத்துக்கடா..என்றான் சுரேன்…

இதுக்கு முன்னாடி எங்கமாமா நல்லா தான் இருந்தாரு..இந்த பாழா போன குடி தான் …எங்கக்கா , குழந்தைங்க வாழ்க்கையை நாசமாக்குறது போதாதுன்னு …இப்ப என் வாழ்க்கைக்கும் குறி வைக்குதுடா…என்றான் திவ்யா கவலையுடன்…

நேரமாச்சுடா..கிளம்புறேன் ..அக்கா தேடுவா…பை பை சுரேன்..

நேற்று மாலை…

என்ன செல்வி ….மறுபடியும் இருவதாயிரம் கேக்குற…எப்படி வட்டி.. அசல் திருப்பி தருவ…ஏற்கனவே வட்டி கட்ட முடியலங்குற…அந்த குடிகார பயலை நம்பி….என்னத்தை கட்டுவ..என்றான் கந்து வட்டி முருகேசு…

அண்ணே ..தங்கச்சி படிப்பு செலவு.. குடும்ப செலவு இருக்குண்ணே…சீக்கிரம் கட்டிடுரேன்ணே என்று கெஞ்சினாள்…

பத்து வட்டி ..சரியா…வட்டிய ஒழுங்கா கட்டிபுடணும் …”இல்லைனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”.என்றான் கறாராக

சரிண்ணே!!!

வரும் வழியில் எதிர் வீட்டு சுமதி தென்பட்டாள்..

செல்விக்கா எங்க போற…

வூட்டுக்கு தான்டீ..வட்டிக்கு பணம் வாங்கியாறேன்..

ஏங்க்கா…என்றாள் சுமதி

இந்த குடிகார பாவி சரியிருந்தா நான் ஏண்டீ கடன் வாங்குறேன்…

உங்கிட்ட சொல்ல என்ன சுமதி.. வர வர இந்த மனுஷன் எந்தங்கச்சிய பாக்குற பார்வையே சரியில்லைடி….திவ்யாவை பக்கத்துல ஹாஸ்டல்ல போடலாம்ன்னு இருக்கேன்…

தாயாட்டம் வளத்துட்டேன்…தாயில்லா பொண்ணு… தனியா ஹாஸ்டல்ல இருன்னு எப்படி சொல்றதுன்னு ஒரே கலவரமா இருக்குடி..

இந்த படுபாவி தினமும் குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றான்…குழந்தைகள வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் சொல்லி மாளாது சுமதி..

சரியாயிடும்க்கா..திவ்யாட்ட நான் பேசுறன்க்கா…என்றாள் சுமதி

என்னவோ போ சுமதி…பெரியவ வேற வளர்ந்துட்டே வரா..சின்ன குட்டியும் நிறைய கேள்வி கேக்குது..

இந்த சண்டாள குடிகார பாவிக்கு குடிச்சா உலகமே புரிய மாட்டேன்குது..

பொட்ட புள்ளைகள வைச்சிட்டு நான் செத்து செத்து பொழைக்கிறேன்…ஒரே கலவரமா இருக்கு மனசு..

திவ்யாக்காவது நல்ல வாழ்க்கை அமையணும்னு அந்த முண்டகன்னியம்மனுக்கு
விளக்கு போடுறேன் சுமதி…கடவுள் கண் தொறக்கணும்..

எனக்கு எப்ப தான் விடியுமோ என அலுத்து கொண்டாள் செல்வி..

இன்று

திவ்யாவை அரெஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றினார் …இன்ஸ்பெக்டர் கௌதமன் மனசே சரியில்லை..

காக்கிசட்டை கடமை என்றாலும் மனசு என்ற ஒன்று இருக்கே.. என மனதுக்குள் குமுறினார்..

திவ்யாவை கூர்ந்து பார்த்தார்…

பக்கவாட்டு சாயலில் தன் மகளை நினைவுபடுத்தினாள் திவ்யா…

தற்காப்பிற்காக கொலை செய்ததால் குறைந்த பட்ச தண்டனையுடன் வந்துவிடலாம்…ஆனால்…

அவள் IAS கனவு…..

வேலை…

சமூகம் அவளை பார்க்கும் விதம்…

அவள் எதிர்கால திருமண வாழ்வு…

எல்லாவற்றையும் விட அவளின் தற்போதைய நிகழ்வுக்கான மன பாதிப்பு காலம் முழுவதும் துரத்துமே…

மீண்டு வருவாளா திவ்யா …என கவலையுடன் பார்த்தார் கௌதமன்…

யோசித்தபடி ஜீப்பிற்கு வெளியே நோட்டமிட்டார்…

அந்த அதிகாலை வேளையிலும் நிறைய பேர் வரிசையாக காத்திருந்தனர் பொறுமையாக.. டாஸ்மார்க் என்ற போர்டின் கீழே

விடை கிடைக்கவில்லை கௌதமனுக்கு..ஏன் நமக்குமே!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *