கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 3,283 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பராபர பரம்பெருளாய், ஒரு கடலே, முக்கடலாய், முக்கடலே ஒருகடலாய் சங்கமிக்கும் கன்னியா குமரியில் இருந்து வடமேற்காய் ஐந்தாறுகல் தொலைவில் உள்ள சஸ்தா விளை, பூவண்டர் தோப்பாய் பெயர்மாற்றம் பெற்று, அந்தப் பெயரும் ரகசிய ரகசியமான பரம ரகசியமாய் சாமித்தோப்பு என்று அழைக்கப்பட்ட காலம்.

திருவாங்கூர் சமஸ்தான மன்னரும், இசை மேதையுமான கவாதித் திருநாள், சுசீந்திரம் தானுமாலயன் ஆலய வருகையை முன்னிட்டு, மேலே ஆகாய தோரணங்களாய் அகண்ட கொடைகள் விரிக்கப்பட்டு, தாராய் மினுங்கும் மேல்சாதி நெடுஞ்சாலை. இந்த ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் பிரதான சாலையில் கூடும் இடத்தில் தெருமறிச்சான்கள் பொருத்தப்பட்டு இருந்தன. வைக்கோல் புரியில் இடைவிடாது கட்டப்பட்ட வேப்பிலைக் கொத்துக்களைக் கொண்ட இந்த தடுப்பூத் திரை, குறுக்காக வழிமறித்தது. கீழ்சாதிக்காரர்கள், கோவிலுக்குள் போவது இருக்கட்டும், அந்த ஆலயத்தை கண்ணால்கூட பார்த்துவிடக் கூடாது என்பதற்காக நிரந்தரமாக வைக்கப்பட்டவை. இந்த மறிச்சான், உள்ளே நுழையும் மேல்சாதிக்காரர்களுக்கு ஒரு வருடல்… கீழ்சாதிகளுக்கோ, ஒரு துாக்குக் கயிறு. ஒன்றே இரண்டான கொடுமை.

இப்படிப்பட்ட மேல்சாதி சாலையில் இருந்து, இந்த ஆலயத்திற்கு முன்பே ஒருகல் தொலைவில் ஒதுங்கியும் – ஒதுக்கப்பட்டும் போகும் மண் பாதை. கருவேல மரங்களின் வழி மறிப்பாலும், பயமுறுத்தும் கள்ளிப்புதர்களாலும் பிற்படுத்தப் பட்டும், பாதாள பள்ளக்குழிகளால் தாழ்த்தப்பட்டும் போன இந்தப் பாதை, தனது தகுதிக்கு ஏற்ற, அந்த குக்கிராமத்திற்கு, வளைந்தும், நெளிந்தும், பனைமரக் குவியல்களுக்கு வழிவிட்டும், கற்குவியல்களில் மறைந்தும், சமதளத்தில் மீண்டும் தன்னை போன்ற ஆட்களை அழைத்துச்சென்று கொண்டிருந்தது.

இந்தப் பாதையில், ஆண்டிச்சியும், அவள் கணவன் கடலைமாடனும்,வேகவேகமாகஆங்காங்கே தென்பட்ட, இதரஏழை பாளைகளோடு, அந்தக் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஆதரவு தேடும் அனாதைகளாய் கள்ளும், முள்ளும் காலுக்கு செருப்பாய் நடந்து நடந்து, சாமித்தோப்பின் நடுப்பகுதியின் எல்லையோரத்தில் குமைந்துகொண்டு நின்றார்கள்.

உடம்பில் வைரம் பாய்ந்தாலும், உள்ளத்தில் முருங்கை பாய்ந்ததுபோல், ஆறடி உடம்பை நான்கடியாய் கருக்கி, முட்டிக்கு கீழே போகாத மூன்றடி வேட்டியை ஈரடியாய் சுருட்டி, தன்பாட்டுக்கு நின்ற வீட்டுகாரனோடு, அந்தக் கொட்டடியின் வடக்கு வாசல் பக்கம் மொய்த்த கூட்டத்திற்குள் கலக்க முடியாமல், சிறிது தொலைவில் ஆண்டிச்சி நின்றாள். நடந்ததை நினைத்து கோபப்பட்டும், நடக்க போவதை நினைத்து அச்சப்பட்டும், அவள் கண்ணிரும் கம்பலையுமாய் துவண்டாள். அவள் விவரித்த அந்தக் கொடுமையைக் கேட்டும், நெருப்பு பற்றாத கணவனின் முகத்தை பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.

இந்த இடத்திற்குகூட, அவள்தான், அவனைக் கூட்டி வந்தாள். அப்போதும் அவன் அந்த கூட்டத்திற்குள் போகத் தயங்குவதை பார்த்துவிட்டு, அவள், அவனை கோபங்கோபமாக திட்டினாள். அவன் முதுகை, கூட்டத்தை நோக்கி தள்ளி விட்டாள். அவனோ, அவளை ஒரு கற்று கற்றிவிட்டு, பின்பக்கமாய் நின்று கொண்டு, அவளை தள்ளி விட்டான். உடனே, ஆண்டிச்சி, அவனை அடிக்கப்போவதுபோல் கையை தூக்கிவிட்டு, பின்பு அப்படி தூக்கிவிட்ட கைகளை உதறினாள், பின்னர், தனது தலையிலே அடித்துக் கொண்டாள்.

முட்டுக்கு கீழே அரையடி சென்ற சேலையை மேல்நோக்கி இழுத்து, மாராப்பு என்ற பேர்பண்ணி, இடுப்புக்கு மேலே தோள்வரை ஒன்றைச் சுற்றாய் கற்றி இருந்தாள். அவள் தலையிலும், தோளிலும் ஈரச் சொட்டுகள். ஈரம் காயாத, சின்னச் சின்ன மண்பானைச் சிதறல்கள். இடையிடையே சோற்றுப் பருக்கைகள். கருப்பும் அழகு என்ற இழிவும்மையை நீக்கி, கருப்பே அழகு என்னும்படியான ஏகார அழகுத் தோற்றம். புதுவைக்கு அருகே உள்ள வக்கிரகாளி அம்மன் காட்டு வளாகத்தில் உள்ள ஒருவகை மரங்கள், காலப்போக்கில் மரத்தன்மை போகாமலே, இரும்பாகிப் போனது போன்ற, பெண்மை இழக்காத கம்பீரமான உடல் வாகு.

சுசீந்திரம் வளைவு பாலத்தில் இருந்து ஒருகல் கிழக்காவும், மூன்றுகல் வடமேற்காகவும் உடல் உபாதை இல்லாமல், மனோ வாதையுடன் ஒரடியை ஈரடியாய் அரைநாழிகையில் நடந்து முடித்த அவளால், அங்கே உள்ள நூறடி இடைவெளியை கடக்க இயலவில்லை. கண்நோக்கும் பார்வைகுள் சிக்கும் அந்தக் கொட்டடிக்கு முன்னால், மண்டி நிற்கும் ஆண், பெண் அத்தனை பேரும், கழுவிவிட்ட பளிங்கு கற்கள் போல் மினுமினுப்பாகவும், வெள்ளையும், சொள்ளையுமாகவும் காட்சி அளிப்பதை கண்டதும், அவள், தனது அழுக்குத் துணியை பார்த்தும், துளசி துரும்புகள், மண் துகள்கள் மலிந்த நிரம்பிய உடம்பை பார்த்ததும், கூடசிப் போனாள். நெருப்பால்கூட பற்றமுடியாத அளவிற்கு அழுக்கு படிந்த வீட்டுக்காரனின் வேட்டியை பார்த்தும் அவளுக்கு கோபமும் அழுகையும் போட்டிபோட்டு வாயிலிருந்தும், கண்களிலிருந்தும் வெளிப்படத் துடித்தன.

‘அரகர அரகர சிவ சிவ அய்யா என்ற முழக்கம், அந்த கொட்டடி முன்னால் குவிந்த மனிதர்களிடமிருந்து ஒற்றைக் குரலாய் எழுந்தது. அங்கிருந்து கிளை பிரிந்து வெளிப்பட்ட மக்களிடம், குழுச் சத்தமாகவும், தனிச் சத்தமாகவும் கேட்டது. அரகர சிவசிவ என்ற புதுமையான-புரட்சியான முழக்கம் மாடன்களையும், மாடத்திகளையும் வணங்கும் அந்த மக்கள் அதுவரைக் கேட்டறியாத ஒரு அசாதரணமான சாதரண மந்திரம்.

கடலைமாடனையும்,முத்தாரம்மனையும் மனதுக்குள் இருந்து எடுத்துப்போட்டுவிட்டு, நின்ற, ஆண்டிச்சியும், அந்த சத்தத்தை உள்வாங்கினாள். அந்த முழு முழக்கத்தையும் அச்சரம்பிசகாமல் காது வழியாக உள்வாங்கி கட்புலனில் நிறுத்திக் கொள்ள, அவள் சிரமப்பட்டாள். ஆனாலும் அந்த சொற்றொடரின் முற்றுப்புள்ளிச் சொல்லே முதல் சொல்லாய் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அய்யா’ என்ற உச்சரிப்பு அவள் கண்களில் உப்பு நீரை கொட்ட வைத்தது. செயலற்று போய், ஒலைப் பாயில் ஒடுங்கி கிடக்கும், தன்னைப் பெற்ற சொந்த அய்யாவுக்கும் அய்யாவான ஒரு பேரய்யாவை காணத்துடிக்கும் தாக்கத்திலும், இயலாமையிலும், அவள், அரகர சிவ சிவ என்ற கூட்ட உச்சரிப்பு முடிந்து, அய்யா என்ற நாதப்பிரவாகம் துவங்கும்போது, என்னப் பெத்த அய்யா என்று சத்தம்போட்டே பிளிறினாள்.

அந்த உந்தலில், கூட்ட குகைகுள் கொலுவிற்றிருக்கும் வைகுண்டரை தரிசிக்க, பின் பாதங்களை தூக்கி, முன் பாதங்களில் நின்றாள். இரண்டு தலைகளுக்கு இடையே கண் துளைத்து, காவிக் கட்டிலில் சம்மணம்போட்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவத்தை, எப்படியோ பட்டும் படாமலும் பார்த்து விட்டாள். உடனே உள்ளத்திற்குள் உறைந்துகிடந்த ஒருகோடி துயரங்கள், நூற்றுக்கணக்கான கண்ணிர் துளிகளாய் உருமாற்றம் பெற்று, வெளியே விழுகின்றன. தொண்டைகுள் சிக்கிய துக்கம், வாய் வழியாய் வார்த்தைகளாய் விழுகின்றன.

‘என்னப் பெத்த அய்யா… எனக்கா இந்த நெலம?… இல்லாதவன் பொஞ்சாதி எல்லாருக்கும் மயினி என்கிற ஊர் கத என் கதயா ஆயிட்டே அய்யா. இங்கவந்து ஒம்மமகள கூட்டிட்டு போமுய்யா. அய்யா. என்னப் பெத்த அய்யா…’

ஆண்டிச்சி, கண்ணிரும் கம்பலையுமாய் கத்தினாள். அவளை ஆறுதலாய் பற்றப்போன கணவனை, ஒரு உதறு உதறினாள். அதனால், கண் நிறைந்த நீர்த் துளிகள் சொட்டு நீர் பாசனம்போல், அங்குமிங்குமாய் சிதறின.

திடீரென்று, தனது கண்களை, மென்மையாக விலக்கிய கரங்களை முரட்டுதனமாக விலக்கியபடியே, ஆண்டிச்சி கண் திறந்தாள். நடுதர வயதில் ஒரு பெண்ணை பார்த்தாள். அவள் காதுகளில் ஆடும் பாம்படங்கள், ஆண்டிச்சியை வரவேற்பதுபோல் தோன்றின. எதிரே வந்து நின்றவள், அன்போடு வேண்டினாள்.

‘இங்க வந்துட்டா அழப்பிடாது. ஒன்ன அழவச்சவியதான் அழனும்’

கணவன்கார சுடலை மாடனுக்கு, தனிமைத் துயரம் போய், ஒத்தாசைக்கு ஒரு தாய் கிடைத்த ஆறுதல். முதல் தடவையாகப் பேசினான். ‘

அம்மாவுக்கு எந்த ஊரு.? சாமிய பாத்து முடிச்சாச்சா.

‘எனக்கு இந்த ஊருதான். என் பேரு திருமாலம்மாள். நான், அய்யாவோட அத்த மகள். ஊரல் வாய்மொழியில வாக்கப்பட்டு, புருசன பறிகொடுத்திட்டு. ரெண்டு பிள்ளியளோட திரும்புனவள். முத்துக்குட்டிக்கு எட்ட நின்னே சேவகம் செய்யுற பாக்கியம் எனக்கு கிடச்சிருக்கு..’

‘முத்துக்குட்டின்னா. யாரும்மா…’

‘நான் ஒரு பாதகத்தி. ஒண்ணாப் பழகுன பழைய நெனப்புல தெரியாத்தனமா அந்த நாராயண சொரூபத்த பழைய பெயரவச்சி சொல்லிப்புட்டேன்’

தோள்தட்டும் சதைக் குழாயாய் பாம்படங்கள் தொங்கும் காதுகளோடும், கேள்விக் குறி கண்களோடும், நெற்றியில் ஒற்றை செம்மண் நாமத்தோடும், வெள்ளைப் புடவையோடும், கணவன் இறந்தாலும் கழுத்தில் மங்கல நானோடும் தோன்றிய திருமாலம்மாளை, ஆண்டிச்சி, ஆச்சிரியமாகப் பார்த்தபோது, திருமாலம்மாள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து விளக்கம் அளித்தாள்.

‘ஊரு உலகத்துல எல்லா சாதியிலயும் புருசமாரு இறந்துட்டா. பொண்டாட்டிமாரு தாலிய கழட்டனும். நகருட்டு போடப்புடாது. பூவையும் பொட்டையும் தொடக்கூடாதுன்னு. அந்தகாலத்துல இருந்தே வழக்கப்பட்ட இந்த காலத்துமுறைய, நம்ம நாராயண சொரூபம் மாத்திட்டாரு… ‘புருஷன் செத்தாலும் பொட்டச்சுவதாலிய கழத்தப்படாது. மூளியாய் நிக்கப்படாதுன்னு’ உபதேசம் செய்யுறாரு. இதனாலயே அவரு மேல எல்லாருக்கும் கோபம். ஆனா அவர ஒரு தடவ பாத்துட்டா அந்த கோவமே பயபக்தி ஆயிடும். நம்மசாமி அப்பேர்ப்பட்ட சாமி’

ஆண்டிச்சிக்கு எதையும் மாற்றிக் கொள்ளலாம் என்ற புதிய எண்ணம் ஏற்பட்டது.அந்தஎண்ணத்தாக்கத்தில்,திருமாலம்மாளிடம், தான் பட்ட பாட்டை சொல்லத் துவங்கினாள்.

‘ஒங்கள என் அம்மா மாதிரி நெனச்சி… இன்னிக்கி நான்பட்ட பாட்டையும், நாளைக்கு படப் போற பாட்டையும் சொன்னாத்தான் என் தல லேசாகும்மா… சொல்லட்டுமா புண்ணியவதி?’

‘எல்லாத்தையும் மொதல்ல. அய்யாகிட்ட சொல்லு. அப்புறமா நீ சொன்னதையும், அதுக்கு அய்யா சொன்னதையும், என்கிட்ட சொல்லு. இப்பவே சொல்லிட்டா. அப்புறம் அய்யாகிட்ட சொல்லும்போது ஒனக்கு வேகம் குறஞ்சிடப்படாது பாரு’

‘இந்த பன்னாட கோலத்தில எப்படிம்மா போறது?’

‘யாரு ஒன்ன இப்படி போகச்சொன்னது?. ஒன்ன மாதிரி. என்ன மாதிரி எளிய சனங்க ஊருகினத்துலயோ. குளத்துவயோ குளிக்கமுடியாம, மேல் சாதிக்காரனுவ தடுக்கான். சுசீந்திரம் கோயிலையோ. பகவதியம்மன் முகத்தையோ பார்க்க முடியாம தெருமறிச்சான் வச்சி மறைக்கான். இதனாலதான், நம்ம அய்யா. பள்ளுப்பறை பதினெட்டு சாதியும். எந்த தடயும் இல்லாம குளிக்கதுக்கு முத்திரிக் கிணறு உற்பத்தி செய்திருக்காரு. நிழல் தாங்கலுன்னு கோயில்கள ஏற்படுத்தியிருக்காரு. நம்ம சனங்க ஆடுமாடுபண்ணிகளபலியிட்டு, அதுகளமாதிரியே ஆயிட்டுவாரத தடுக்கதுக்கு உயிர்பலி வேண்டான்னு உபதேசிக்காரு. பரம் பொருளுக்கு எதுவுமே தேவையில்லன்னு, அத ஒளி வடிவத்துல கும்பிட வைக்காரு. சரி சரி. நேரா முத்திரிக் கிணறு போயி, ரெண்டு பேரும் துணிமணிகளை கசக்கி துவச்சி குளிங்க நல்ல சமயத்தில வந்தீக. வெண் நீசனான வெள்ளைக்காரன் துணையோட கலி நீசனான திருவாங்கூர்மவராசவோடபட்டாளத்துசிப்பாய்பயலுவ அய்யாவவதைசெய்து சிறைசெய்துவிலங்குபோட்டு, அடிஅடின்னு அடிச்சி இழுத்திட்டு போவும்போது, அந்த முத்திரிக் கிணரையும், முழுசா உப்புபோட்டுமூடிட்டானுவ.போன வாரந்தான் கிணறகத்தி செய்தோம். சீக்கிரமா போயி குளிச்சி முடிச்சி, ஈரத் துணியோட அய்யாமுன்னால போயி நில்லுங்க.ஒங்களுக்குவிமோசனம்தானா வரும்’

திருமாலம்மாள், தான் நிற்பது வரைக்கும் அவர்கள் போகமாட்டார்கள் என்ற அனுமானித்ததுபோல், சிறிது விலகிப்போய் நின்று கொண்டு, அவர்களை போகும்படி வலது கையை ஏற்ற இறக்கமாய் ஆட்டிக் காட்டினாள். உடனே, அந்தப் பக்கமாய் அரகர சிவ சிவ அய்யா என்று ஒதிக்கொண்டே சென்ற கூட்டத்தோடு ஆண்டிச்சியும், கடலை மாடனும் சேர்ந்து கொண்டார்கள்.

முக்கால் கல் தொலைவில் உள்ள எண்கோண கிணற்றைச் கற்றி மனிதச்சுவர்களான எளிய சனங்கள், ஆண்,பெண் வித்தியாசம் இன்றி, தோண்டிப்பட்டைகளின் நடுப்பக்கம் உள்ள பூவரசு கம்புகளின் மேல் குடிசைகளில் செருவை எனப்படும் பனைவோலை வேயப்பட்ட ஒதுக்குப்புறத்தில், மண் பானையில் உள்ள அரைகுறை தண்ணிரை, சிறட்டைகளில் மோந்து, காசை செலவளிப்பது போல், சிறிது சிறிதாய் ஊற்றிக் கொள்கிறவர்கள், அப்போது தண்ணிரை வெள்ளமாக உடம்பெங்கும் வியாபிக்கவிட்டார்கள். ஆனாலும் ஒரு பெரியவர்.’அஞ்சி தோண்டிப்பட்டைகளுக்கு மேல ஊத்தப்படாது. குளிச்சதும் ஒடிடப்படாது. தோண்டிப்பட்டை தண்ணிய அஞ்சி தடவ உள்ளங்கையில ஊத்தி குடிக்கணும். அஞ்சி தடவ அரகர சிவ சிவ அய்யான்னு சொல்லணும். அய்யா நமக்கு கொடுத்திருக்கிற எல்லாமே அஞ்சு என்கிறது ஏழை மக்களோடு பஞ்சாட்சரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்புலன்கள். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள். இந்த நெனப்போட குளிக்கனும் என்றார்.

தும்பைப் பூ வேட்டியோடு பாகவத தலையோடு தோற்றம்காட்டிய அந்தப் புலவரை, சிறுவர்கள் சிறிது விசனமாகப் பார்த்தார்கள். ஆறுமாதமாக குளிக்காத உடம்பில் ஐந்து தோண்டிப்பட்டை தண்ணிர் தலைக்கு மட்டுமே போதாது. ஆகையால் அந்த சிறுவர்கள் தோண்டிப்பட்டை எண்ணிக்கை வரம்புகளை மீறி, குளித்துக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் தங்களோடு வந்த முதியவர்களுக்கு தெரியாமல் கிணற்றின் ஒவ்வொரு கரைக்கும்ப்போய் ஐந்தந்து பட்டைகளாக அள்ளி அள்ளி உடம்பில் படர விட்டார்கள். அதே சமயம் இப்படி குளிக்க வைத்த வைகுண்டரை நினைத்து அரகர சிவ சிவ அய்யா என்ற நாதத்தை ஐந்து தடவைக்கு மேலேயே ஒலி க்கவிட்டார்கள்.

ஆண்டிச்சியும், கடலை மாடனும், ஒரு உபகாரி கொடுத்த தோண்டிப்பட்டையால் குளித்து முடித்து, கட்டிய துணியையும் உடலோடு சேர்த்து கசக்கினார்கள். அவர்கள் உடம்பு, கல் போலவே இருந்ததால், அந்த துணிகளும் கல்லில் உரசப்கட்டப்பட்ட கயிறுகளை கிணற்றுக்குள்விட்டு நீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றினார்கள். ஒலை குடிசைகளில் செருவை எனப்படும் பனைவோலை வேயப்பட்ட ஒதுக்குப்புறத்தில், மண் பானையில் உள்ள அரைகுறை தண்ணிரை, சிறட்டைகளில் மோந்து, காசை செலவளிப்பது போல், சிறிது சிறிதாய் ஊற்றிக் கொள்கிறவர்கள், அப்போது தண்ணிரை வெள்ளமாக உடம்பெங்கும் வியாபிக்கவிட்டார்கள். ஆனாலும் ஒரு பெரியவர்.’அஞ்சி தோண்டிப்பட்டைகளுக்கு மேல ஊத்தப்படாது. குளிச்சதும் ஒடிடப்படாது. தோண்டிப்பட்டை தண்ணிய அஞ்சி தடவ உள்ளங்கையில ஊத்தி குடிக்கணும். அஞ்சி தடவ அரகர சிவ சிவ அய்யான்னு சொல்லணும். அய்யா நமக்கு கொடுத்திருக்கிற எல்லாமே அஞ்சு என்கிறது ஏழை மக்களோடு பஞ்சாட்சரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்புலன்கள். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள். இந்த நெனப்போட குளிக்கனும் என்றார்.

தும்பைப் பூ வேட்டியோடு பாகவத தலையோடு தோற்றம்காட்டிய அந்தப் புலவரை, சிறுவர்கள் சிறிது விசனமாகப் பார்த்தார்கள். ஆறுமாதமாக குளிக்காத உடம்பில் ஐந்து தோண்டிப்பட்டை தண்ணிர் தலைக்கு மட்டுமே போதாது. ஆகையால் அந்த சிறுவர்கள் தோண்டிப்பட்டை எண்ணிக்கை வரம்புகளை மீறி, குளித்துக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் தங்களோடு வந்த முதியவர்களுக்கு தெரியாமல் கிணற்றின் ஒவ்வொரு கரைக்கும்ப்போய் ஐந்தந்து பட்டைகளாக அள்ளி அள்ளி உடம்பில் படர விட்டார்கள். அதே சமயம் இப்படி குளிக்க வைத்த வைகுண்டரை நினைத்து அரகர சிவ சிவ அய்யா என்ற நாதத்தை ஐந்து தடவைக்கு மேலேயே ஒலி க்கவிட்டார்கள்.

ஆண்டிச்சியும், கடலை மாடனும், ஒரு உபகாரி கொடுத்த தோண்டிப்பட்டையால் குளித்து முடித்து, கட்டிய துணியையும் உடலோடு சேர்த்து கசக்கினார்கள். அவர்கள் உடம்பு, கல் போலவே இருந்ததால், அந்த துணிகளும் கல்லில் உரசப்பட்டவைபோல் வெளுத்துவிட்டன, பின்னர், உடம்புகளை காட்டிக் கொண்டிருந்த ஈரத்துணி, அதே மேனிகளை மறைக்கும் அளவிற்கு லேசாய் காய்ந்தபோது, அவர்கள் கூட்டப்பதியை நோக்கி திரும்பினார்கள். எல்லோரையும் போல், அவர்கள் உடம்பிலும் ஒரு மினுக்கம். நடையில் ஒரு வேகம். சுத்தம் ககம் தரும். என்பதை சொல்லாமல் சொல்லும் முத்திரிக்கினரை மாறி மாறி திரும்பி கைக் கூப்பியபடியே ஒருவர் கரத்தை இன்னொருவர் பற்றிக் கொள்ள மனச்கமை குறைந்த தெம்பில் நடந்தார்கள்.

அந்தக் கொட்டடியின் வடக்கு வாசலில் தொடர்ந்து கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ஆனாலும் புதிய வரவுகளுக்கு வழிவிடும் வகையில், நான்கடி அகல, நீள வாக்கிலான இடைவெளியும் இருந்தது. ஈரத் துணிக்காரர்கள், வரிசை வரிசையாக போய்க்கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் கூட்டத்தில் சங்கமித்தனர். சிலர், மனித வேலி கொண்ட அந்த பாதை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

வரிசை வரிசையாக வந்து காய்ந்து போன ஈரமக்களை தள்ளியும் அவர்களால் தள்ளபட்டும், ஆண்டிச்சியும், கடலைமாடனும், வைகுண்டரை பார்க்கும் தொலைவிற்கு வந்துவிட்டார்கள்.

வழக்கமான, நான்கு கால் கட்டிலிற்குப்பதிலாக, ஆறுகால் கட்டில்… அதன்மேல் ஒரு காவிப் போர்வை. காவியுடுத்த வைகுண்டருக்கு நாற்பது வயது இருக்கலாம். நெற்றியில் செம்மண் நாமம் கால்மேல் காலடக்கி உட்கார்ந்திருந்தார். பார்க்கப் பிராயமுமாய், படுக்க கிழவனுமான ஒருவித அத்வைத தோற்றம். சிறுபிராயத்தில் மல்யுத்த, சிலம்பு பயிற்சிகளில் ஈடுப்பட்டதைக் காட்டும் பரந்த மார்பும், ஒரு காளையின் திமில் போன்ற தோள்களும் கொண்ட திருவுருவம். கண் நிறைந்து. அதே சமயம் கண்ணுக்குள் சிக்காத தோரணை. அவரைச் சுற்றி நிற்கும் அத்தனை பேருக்கும் விதவிதமாய், பேருக்கு மட்டுமே காட்டும் மாயத் தோற்றம். அதுவே அவர்களுக்கு யானை தோற்றமாகிறது. திமிறி நிற்கும் பம்பைத் தலையும், தலைமுடியிலிருந்து இரண்டு மூன்று விழுதுகளாய் விழுந்துகிடக்கும் சடைகளும், அவர்களை பயமாக்குகிறது. ஆனாலும் அந்த கண்வெளியிடும் ஒளிக்கற்றைகள் அவர்களின் பயத்தை பாதியாக குறைத்து பயபக்தியாக்குகிறது.

வைகுண்டரின் கட்டிலுக்கு கீழே, ஒரு மனையில் வரம்பெற்றான் பண்டாரம் உட்கார்ந்து, அய்யாவிடம் முறையிடும் எளிய சனங்களின் கோரிக்கைகளை காதுகுவித்து உள்வாங்கி, பின்னர் அய்யாவின் முகபாவனையை பார்த்து அதற்கேற்ப அவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கலயத்தில் உள்ள செம்மண்ணில் ஒரு திரளை எடுத்து, அந்த மக்களுக்கு தொட்டு நாமம் சாத்தினார். அவர்களது உள்ளங் கைகளில், ஒரு பெரிய செப்பு தவலையில் உள்ள முத்திரி கிணற்று நீரை, ஒரு குவளையில் மொண்டு, ஐந்து தடவை ஊற்றி சிறிது மண் எடுத்து அவர்கள் வாயில் போட்டு குடிக்கப் பணித்தார். அய்யா இருக்க பயமேன் என்று அவர்களை ஆற்றுப்படுத்தினார். அவ்வப்போது, வைகுண்டரைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டார். சில சமயம், அவரது வாயருகே காது குவித்தார்.

வைகுண்டரின் பஞ்ச பாண்டவ சீடர்கள் வரிசை மீறும் கூட்டத்தை வழிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அய்யாவின் வாகனக்காரர்கள், அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர், தீராமல் கிடந்த தங்களது வியாதிகள், அய்யாவால் தீர்ந்துபோனதை சத்தம்போட்டே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரகர சிவ சிவ உச்சரிப்பில் அவர்களின் வாய்களில் அவை, மந்திரச் சொற்களாக ஒட்டிக்கொண்டன. அடிக்கடி தரிசனத்திற்கு வந்துக்கொண்டிருப்பவர்கள் குனிந்த நிலையில் நின்று அய்யா நாங்கள் அறிந்து அறியாமல் செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும் என்று ஐந்து தடவை திரும்ப திரும்பச் சொல்லி கைகளால் வாய்களைத் தட்டினார்கள். பின்னர் நிமிர்ந்து நின்று ‘அய்யா பொறுத்து – அய்யா மாப்புத்தந்து-அய்யா வச்சி ரட்சிக்கணும்-அய்யாபொறுமை தரணும்-அய்யா, நாங்கள் ஒண்ணு சொன்னது, ஒண்ணு கேட்டு என்று இருதடவை சொல்லிவிட்டு, மீண்டும்,’ஒண்ணுக்கு ஒண்னு நிரப்பாக இருக்கணும்-அய்யாநல்ல புத்தி தரணும் – அய்யா அன்னமும் வஸ்த்திரமும் தரனும் – அய்யா வச்சிரட்சிக்கணும்-அய்யா எங்களை யாதொருநொம்பலமில்லாமல் – யாதொரு சஞ்சலமில்லாமல் அய்யா வச்சிரட்சிக்கணும் என்று பொதிப்பு (பிரார்த்தனை) செய்தார்கள்.

குனிந்த தலை நிமிராமல், தருமம் தலை கவிழ்ந்ததுபோல் நடந்த ஆண்டிச்சி, வைகுண்டரின் முன்னால், தான் நிற்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்க்கக் பார்க்க கண்கள் குளமாகின்றன. அவர் தனது தந்தையைப் பெற்ற தாத்தா போல ஒரு காட்சிமை. ஒரு தடவை, ஒரு மேல்சாதி சிறுவன், தன்னை கிண்டல் செய்ததை அந்த தாத்தாவிடம் அழுதபடியே அவள் முறையிட்டதும், உடனே அந்த தாத்தா பின் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல், எக்காளமாய் நின்ற அந்தச் சின்னப் பயலின் காதுகளை திருகியதும் நினைவுக்கு வருகிறது. உடனே, பயப்பிராந்தியின் கரைகள் உடைவதுபோல் தோன்றுகிறது. வைகுண்டர் முன்னால் வந்தததும் கண்ணிர் மழையாய் வாய்வெளி இடியாய் கொட்டுகிறது.

‘அய்யா.என்னப்பெத்த அய்யா.நான்பட்டயாட்டகொஞ்சம் கேக்கணும் அய்யா. செத்த நேரத்திற்கு முன்னால, வடகரைக்கு பக்கத்திலுள்ள தேரூர்ல. இருந்து, தலையில கஞ்சிப் பானையை வச்சிக்கிட்டு, கூலி வேலைக்கு போறதுக்கு வயக்காட்டு பக்கமா வழக்கம்போல நடந்தேன். அப்போ எங்க ஊரு வலிய கணக்கெழுத்து என்னை வழிமறிச்சான்.கையிலவச்சிருக்கிற நடைக்கம்ப என்மார்புக்கு நேரா நீட்டி, அய்யோஅய்யயயோ. அந்த அக்கிரமத்த என் வாயல எப்படி சொல்லுவேன்.’

ஆண்டிச்சி, திடீரென்று தரையில் குப்புற விழுந்து வைகுண்டரின் பாதங்களை கண்ணிரால் கழுவிக்கொண்டிருந்தாள்.

வரம்பெற்றான் பண்டாரத்தின் சைகையில், கடலை மாடன், மனைவியை தூக்கி நிறுத்தி, வைகுண்டரின் அருகே அவளை தலை கவிழ்த்தி நிற்க வைத்தான். பிறகு பண்டராத்தின் மவுன ஆணையின்படி அவனே விளக்கினான். ஆரம்பத்தில் வார்த்தைகள் அவனோடு மல்லிட்டன. ஆனாலும், அந்த வைகுண்ட பார்வையில் வார்த்தைகள் கயம்புகளாயின.

“ஆம்பிளையான எனக்கே சொல்லமுடியவன்னா. அவள் பொம்புள. சொல்ல முடியாதுதான். சொல்லுததுக்கே உடம்பு கூகதுய்யா. ஆனாலும் அய்யாகிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல? அந்த மேல்சாதிக்காரன் என் பொஞ்சாதி மார்ய பார்த்து அதோடு பேரே சொல்லச் சொல்லி இருக்கான். இவள். அலறிப் பயந்து. கண்ணிரும் கம்பலையுமா மார்பு சாமி, நெஞ்சு சாமின்னு” தட்டுத் தடுமாறி சொல்லி இருக்காள். உடனே அந்தப்பாவிப்பயல், நடக்கம்புல இருக்கிற கொக்கியவச்சி இவளோடு மார்புமுனையை திருகிக் கிட்டே’இதோட பேரச்சொல்லுன்னு அதட்டி இருக்கான். இவள், கோவத்துல அந்த பிரம்ப பறிச்சி கீழ எறிஞ்சிருக்காள் இதனால கீழ விழுந்த அந்த சீக்காளிப் பய. கீழ கிடந்தபடியே, விழுந்த கம்ப எடுத்து, இவள அடிஅடின்னு அடிச்சிருக்கான். அடிச்சாக்கூட தேவல. நாளைக்கும் வரப்போறதாயும், இவளோட மார்பு முனையை பழையபடியும் கம்புபோட்டு திருகப் போவதாகவும் இவள் முலைக்காம்புன்னு சொல்லுதது வைரக்கும் இவள விடபோறதுல்லன்னும் சபதம் போட்டிருக்கான். அய்யா எங்கள ஒண்னு இங்கேயே சேத்துக்கணும். இல்லாட்டா எங்கள மானத்தோட அனுப்பணும். இதுக்கு மேல, எங்களால தாங்க முடியாதுய்யா,

சுடலை மாடனின் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு கேம்பலாய் வெளிப்படுத்திய ஆண்டிச்சி, இறுதியில் அய்யா. என்ன பெத்த அய்யா. என்னை. இந்த அவமானத்தில இருந்து காப்பாத்துமுய்யா. அய்யாவே அடைக்கலம். புருசனும் வீரமில்ல. போனவீடும் சரியில்ல நான் குலமான். என்ன இப்படி பண்ணிட்டானே அய்யா. உம்மகிட்ட சொல்லாம யாருகிட்டே சொல்லுவேன்? அவன் அப்படி பண்ணும்போது, நான் எங்க குலதெய்வம் உதிரமாடனத்தான் நெனச்சேன் ஆனாகெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி இங்க நடந்தத, ஒன் பனையேறி சாமிகிட்ட சொல்லு. அவன்.என்னத்த கிழிச்சிப்புடுறான்னுபாப்போம்முன்னு: கொக்கரிச்சான். அவனாலதான் இங்க வந்தேன் அய்யா’.

வைகுண்ட மந்திரத்தை மெல்ல வெளிப்படுத்திக் கொண்டிருந்த கூட்டம் மவுனமானது. வண்டுகள் போல் மொய்த்த மக்கள், இந்திய வரைப்படத்தின் தட்சினம்போல் இடைவெளி கொடுத்து நின்றார்கள். வரம்பெற்றான் பண்டாரத்தின் வாயையே பார்த்தார்கள். அவரோ, ஆண்டிச்சியை ஒரு பார்வையாகவும், வைகுண்டரை மறுபார்வையாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வழக்கத்திற்கு மாறாக வைகுண்டர் எழுந்தார். அவர் அடியும், முடியும் ஆடி, பின்னர்பாதாததிகேசம் வரை குலுங்கியது.கண்ணன், ஐந்து தலை நாகத்தின் மேல் நின்று ஆடியது போன்ற ஆட்டம். சிவனின் ஊழியாட்டம் போன்ற உடலாட்டம். மாகாளியின் உக்கிரப் பார்வை. ஆவேசப்பட்டவராய் வரம்பெற்றான் பண்டாரத்தைப் பார்த்து ஒரு நாமக்கட்டியையும் துண்டையும் எடுத்துட்டுவா’ என்றார். அவைவருவதுவரைக்கும் ஆண்டிச்சியைப் பார்த்து, தன் கரத்தை முருகனின் அபயக்கரம்போல் ஆக்கிக் கொண்டார். அவளும் பாரம் இறக்கியவளாய் தனது அண்ணாச்சியின் வயதுள்ள அவரை மூலப் பரம்பொருளாய் காலப் பழமையாவும், புதுமையாவும் பார்த்துக் கொண்டே நின்றாள்.

நாமக்கட்டி வந்ததும், வைகுண்டர், அதில் முத்திரி நீரிட்டு, ஆள்காட்டி விரலால் ஒரு அழுத்து அழுத்தி, ஆண்டிச்சிக்கு வெள்ளை நாமம் சாத்தினார். பிறகு அவள் கணவனுக்கும் அதை சாத்திவிட்டு, பண்டராம் கொடுத்த துண்டை எடுத்து அவன் தலையில் தலைபாகையாய் கட்டினார். பின்னர் அவனையும் கூட்டத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே உச்சக் குரலில் ஒலித்தார்.

“என் மக்கா! இன்று முதல், நீங்கள் வெள்ளை நாமம்தான் சாத்த வேண்டும். செம்மண் நாமம், எதிரிக்கு தெரியவில்லை. இனிமேல் நன்றாய் துலங்கும் இந்த வெள்ளை நாமம் மூலம் சாதியின் பெயரால் ஏழை எளியவர்களை வதை செய்யும் அறக்கேடர்கள், நம்மை இன்னும் அதிகமாகவம்புக்கு இழுப்பார்கள். நான், அவர்களின் வம்பை வளர்த்து, பிறகு அழிப்பேன். இதில் சந்தேகம் வேண்டாம். தோளில் துண்டுசுடட போட்டுக்கொள்ள தடைச்செய்யப்பட்ட என் மக்கா இனிமேல் நீங்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ள வேண்டும். இங்கே உள்ள பதிக்கும் தலைப்பாகை கட்டியே நீங்கள் வரவேண்டும். ஒரு காலத்தில், நமக்கு உரிமையான உருமாக்கட்டில் கிடைத்த கத்தி தேவையில்லை. நெற்றியில் துலங்கும் ஒத்தை வெள்ளை நாமமும் அரகர சிவ சிவ என்ற மந்திரமும் கலி நீசனை பயமுறுத்தும்.”

அரிசி மூட்டைகள், விறகுக் கட்டுகள் போன்றவற்றை எளிதாக கமக்கும் கடலை மாடனுக்கு, அந்த தலைப்பாகை பெருஞ்சுமையாய் வலித்தது. தலையே போனதுபோல் தவித்தான். ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்தான். இதை புரிந்து கொண்ட வைகுண்டர், அவனுக்கும் அவன் மனைவிக்கும் சொல்வதுபோல், அனைவருக்கும் உபதேசித்தார். அவர் உபதேசம் பாட்டாயும், உரையாயும் ஒலித்தது.

“கீழது எல்லாம் மேலது ஆகும். மேலது எல்லாம் கீழது ஆகும். குகையாளப் பிறந்த என் குழந்தாய் எழுந்திரடா. இந்த அய்யா, ஒனக்குன்னு ஒன்றும் செய்யலுன்னு யோசிக்காதே மகளே… உன் ஆமக்கனுக்கு தலைப்பாகை கட்டி, அவன மனுசனாய் ஆக்கிட்டேன் இனிமேல், இவன் உன்மேல் ஒரு துரும்புகூட விழுவதற்கு விடமாட்டான். அய்யா உன்கூடவே இருக்கேன். நடைகம்பு வைத்தவன் நடைபிணமாவான். ‘குலைய விடாதிருங்கோ. குரு நினைவை வை. பக்தி உள்ள மக்களுக்கும். புத்தி உள்ள மக்களுக்கும். பயங்கள் தெளித்து வைப்பேன்.பதறாதே என் மக்கா. நாம ஆடுகள் அல்ல மக்கா. மாடுகள் இல்ல மக்கா. கிருஸ்துவ பெண்கள் வருசக் கணக்கா நடத்துற தோள்.சில போராட்டதுல நீங்களும் கலந்துக்கணும். ஆணுக்கு தலைப்பாகை. பெண்ணுக்கு மாராப்பு. நெஞ்சுக்கு அரகர சிவ சிவ. இந்த அறக்கேடர்கள இந்த மூணுமே வதம்செய்யும். கலங்காதீங்கமக்கா. நடத்திக் காட்ட நான் இருக்கேன்”

சிறிது நேரத்தில் வைகுண்டர் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து, நிதானத்தின் அடிவாரத்திற்கு வந்துவிட்டார். ஆண்டிச்சியையும், அவள் கணவனையும் நான் இருக்கேன் என்ற தோரனையில் பார்த்தார். பின்னர், பின்னால் நிற்கும் அவர்களைப் போன்ற எளியவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆண்டிச்சிக்கு, கடலை மாடனுக்கும் கண்களால் விடை கொடுத்தார்.

எளிய கூட்டம், எரிமலை கூட்டமாகிறது. ஒற்றை மனிதனாய் மாறி, அரகர சிவ சிவ அய்யா என்ற சொற்கள், போராளித் தனமாகின்றன. அந்த மனித தலைகள்மீது எண்ணில்லா கரங்கள் தலைப்பாகைப் போல் கருள்கின்றன. வலது கை விரல்கள் பஞ்சபூதங்களாய் பரிணமிக்கின்றன.

கூட்டத்தில் பெரும்பகுதியினர், தத்தம் தூக்கு பையில் வைத்திருந்த மாற்று வேட்டிகளை எடுத்து, வைகுண்டரிடம் சமர்ப்பிக்கிறார்கள். சிலர், மாற்று வேட்டியில்லாத எளியவர்களிலும் எளியகோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காக, தத்தம் வேட்டிகளை மூன்று துண்டுகளாக்கி அந்த அய்யாவிடம் கொடுக்கிறார்கள்.

வைகுண்டர், அந்த துண்டுகளை உயிர்ப்பித்ததுபோல், ஒவ்வொருவர் தலைக்கும் கிரீடம் சூட்டுவதுபோல் தலைப்பாகைக் கட்டிவிடுகிறார். மூன்று நாழிகை வரை, அவரது கைகள் ஒயவில்லை.

அந்த கூட்டத்திலிருந்து குகையிலிருந்து விடுபட்ட கடுவாய்போல், அய்ந்து விரல்களும் பஞ்சாயுதங்களாக, இரண்டு கண்களும் எரிமலையாக தலைக் கீரிடமான தலைபாகையுடன் கடலை மாடன் படைருடையாய் நடக்கிறான்.

ஆண்டிச்சி-அந்த பெயருக்கு மாற்றாளாய், சொல்லாலும், செயலாலும் மாறியவள்போல், வலியகணக்கு நாளைக்கு வராமல் போய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில், அவனை எதிர்கொள்ளும் தோரணையில் தனக்குள் இருக்கும் ஒரு மகிசாகர வர்த்தினியை கண்டுகொண்டதுபோல், தாய்மையும், தயவுமிக்கபேய்மையும் ஊடும் பவுமாக, ஆண்டிச்சிக்குள் நெசவிட, கணவனுக்கு இணையாக நடக்கிறாள்.

– தினகரன் (பொங்கல் மலர்) – 2001 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *