ஜன்னலும் கண்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 10,648 
 
 

எதிர்பாராமல் இழுக்கப்பட்ட போர்வை காலை நேரத்தில் எரிச்சல் தந்தது. அப்படி செய்த ஜீவனை இழுத்து வைத்து நாலு அû விடலாம் போல வேகம். லீவுநாளில்கூட தூங்கவிடாமல் என்ன இது. எழுந்து உட்கார்ந்து சுருங்கிக்கிடந்த போர்வையை மீண்டும் போர்த்திக் கொண்டு லேசான குளிருக்கு அடங்கிக் கொண்டு, சுருண்டபோது, சூடாக டீ குடித்தால் நன்ாக இருக்குமென்று தோன்றியது.

பொட்டச்சி காலைல எழுந்து எறும்பு மாதிரி ஓடி ஆடி வேலை பார்க்க தேவல்ல. வீட்டிலேயே கிடன்னு காலை ஒடிச்சி வெச்சிருந்தா சரிப்பட்டிருக்கும். வெளிய போய் படிடீன்னு சொன்னது தப்பா போச்சு.

அம்மாவின் குரல் எல்லா வீட்டிற்கும் கேட்டிருக்கும். எறும்பு என்ன வேலை செய்யும்?

வீட்டுச் சுவர் வழியே சிவப்புகோடாய் போகும் வரிசையினை பார்க்கவேண்டும் என் தோன்றியது. ஆனால் இதற்கு மேல் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தால் போச்சு. சோம்பலாய் போர்வையை மடித்துவைத்துவிட்டு எழுந்து வந்து வாசலைப் பார்க்கையில், கிரிம்சன் சிவப்பில் சூரியநிலா. பல் துலக்கிவிட்டு மாடிஜன்னல் பக்கம் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

காலைல எழுந்ததும் படிக்கி புக்கைபாரு. என்னதான் லீவுன்னாலும் இப்படியா? ஜன்னலே கதின்னு!

ம்ப்ச். எது செய்தாலும் இந்த வீட்டில் கேள்விதான். ஜன்னல்திரையை விலக்கி விட்டுவிட்டு உட்கார்ந்தேன். எதிர்வீடு கண்ணில்பட்டது. பரபரப்பாய் இருந்தது. அந்த பையன் முகத்தில் அவ்வளவு கலவரம். அங்கிருந்து நேரே, வீட்டுக்குள் நுழைந்தான். மேலே மாடியிலிருந்தாலும் கீழே அவன் பேசுவதைக் கேட்க முடிந்தது. ஏன், இவ்வளவு பதட்டம் அவன் குரலில்?

மாமி கொஞ்சம் போன் பண்ணிக்கúன் ப்ளீஸ். எங்க போன் அவுட் ஆஃப் ஆர்டர்.

பண்ணிக்கோயேன்பா. ஏன் இப்படி பதட்டமாயிருக்கே? இப்படி வியர்க்கிதே. அய்யோ, ஏண்டாப்பா அழ? அழாம சொல்லுப்பா என்ன ஆச்சு?

அம்மாவின் குரல் அவன் குரலைவிட பதட்டமாய் கேட்டது. ஆண் அழுதால் எப்படி இருக்கும்? போய் பார்க்கலாமா? வேண்டாம். இதற்கென்று கீழே போகணும்.

“”அப்பா எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டாரு மாமி”

அய்யோ. என்னப்பா இப்படியாகிபோச்சே? அழாதப்பா. கடவுளே! நல்ல மனுஷங்களை எல்லாம் ஏன் இப்படி கூப்பிட்டுக்கிறியோ தெரியலயே. சரி நீ நம்பர் சொல்லுப்பா. நானே பேசúன். அழாத. ஈசுவரா..

நம்பர் சொல்வதும் டயல் செய்வதும் நீண்டநேரம் கேட்டுக் கொண்டிருந்தது.

மழை மிக அதிகம். இதற்கு மேலும் இந்த மண் குடிசையில் உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம். நைந்து ஒரு பக்கமாக குடிசை சரிந்துவிட்டது. கைக் குழந்தைவேறு. காலெல்லாம் சேற்றுப்புண் எரிச்சல். பசியும் லேசாக அவ்வப்போது வயிற்ûக் கிள்ளியது. இன்னும் இரண்டு குழந்தைகள் வெளியே சேற்றில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. கூப்பிட்டு நாலு சாத்து சாத்தினால்தான் சரிப்படும். அவன்மேல் உள்ள ஆத்திரம் எல்லாம் இதுகள் மேல் காட்டி என்ன புண்யிம்? அவன் இன்னும் வரவில்லை.

எங்காவது குடிச்சிட்டு விழுந்து கிடக்குதோ என்னமோ? நேத்துகூட போதைலதான் வந்து விழுந்தான். மழை இன்னும் பலமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் எதிர் வீட்டுத் திண்ணையில் ஒண்டிக்கொண்டிருக்க முடியாது. அந்த வீட்டு அம்மா நேத்தே திட்டிச்சு. கைக்குழந்தையை புடவைக்குள் இடுக்கியபடி இரண்டு குழந்கைளையும் இழுத்துக் கொண்டு தூலிலேயே எட்டி நடைபோட்டு திண்ணை விளிம்பை அடைந்தாள்.

அவன் வருகிானோ இல்லையோ கிளம்பி விழுப்புரம் பக்கம் போய்விட்டால்கூட பழனிம்மா வீட்டுபக்கம் ஒண்டிக்கலாம். சொல்லிக்கி மாதிரி நாலு சொந்தபந்தம் அங்கேயிருக்கு. வெளிறிக் கிடந்த சாக்கு பையில் பரபரவென தட்டுமுட்டுச் சாமான்களை அடைக்கத் தொடங்கினாள்.

யக்கா! யக்கா! கொஞ்சம் நில்லு அங்கேயே. பள்ளிக்கூட வாசலில் ஐஸ் வண்டியோட நிற்பவன்தான் கூப்பிட்டான். இவன் கூடத்தானே அது சுத்திக்கினு இருக்கும். லேசான படபடப்போடு அவனைப்பார்த்தாள். அவனுக்கு எதுனா ஆயிடுச்சா?

அவன் அவசரமாக நெருங்கிக் கொண்டிருந்தான், சாலையின் குண்டு குழிகளை தாண்டியபடி.

ஜன்னல் வழியே பார்க்கும்போது எதிர்வீட்டு வாசலில் நடப்பவை எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. அவள் மட்டும்தான் விட்டிலிருந்தாள். வீட்டில் மற் எல்லாரும் அங்குதான் போயிருக்கிார்கள்.

வெறிச்சென் வீடு கொஞ்சம் அசாதாரணமான அமைதியுடன் இருந்தது. புத்தகத்தை மூடிவிட்டு கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து டீவியை போட்டாள். எவளோ ஒரு காம்பியரர், அரைகுû உடையோடு உடைந்த தமிழில் பேசிக் கையாட்டிக் கொண்டிருந்தாள். அசட்டுத்தனமாக இருந்தது அவளது கேள்விகள். டீவியின் குரலை குûத்துவிட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தாள்.

யோவ், ஐஸ் வண்டி, இன்னா ஆச்சு? ஏன் பதர்?

யக்கா மோசம் போயிட்டியே. மச்சான் உன்னையிப்படி நட்டாத்துல உட்டுடுச்சே யக்கா!

அய்ய.. என்னா சொல் நீ? அலமுடியாமல் தொண்டை கமலாய் கீச்சிட்டது.

யக்கா, பக்கத்தூர்ல, ரயில் பாலத்துமேல வர்ப்போ கவுந்துக்கிச்சு. விழுந்தவங்கள எடுத்துப்போட்டா துட்டு குடுக்கிானிட்டு அங்க போய் மச்சான் குதிச்சது. ஓர் ஆள இஸ்தாந்து வரப்ப, அப்படியே முங்கிப் போயி, அதையும் சேர்ந்து வெளியே எடுத்து போட்டுட்டானுங்க. உன்னை விட்டுட்டு போயிடுச்சிக்கா!

அய்யோ! அய்யோ! போனியே என்னைவிட்டு.. தலையில் அûந்து கொண்டு தூடிலையும் பொருட்படுத்தாமல், ரோட்டிலேயே குத்துகாலிட்டு அழத்தொடங்கினாள். கைக்குழந்தை வீறிட்டு அலறியது. மற் இரண்டும் விவரம் புரியாமல் அம்மாவைப் பார்த்து அழத்தொடங்கின.

பொணத்தை பொது ஆஸ்பத்திரில போட்டிக்காம். வா யக்கா! வந்துபாரு. எந்திரி! அவனும் அழுதான்.

யப்பா என்னை விட்டுட்டியே பாவி.. குழந்தைகளை அள்ளிக்கொண்டு அவள் பேய் போல ஆஸ்பத்திரியை நோக்கி ஒடந் தொடங்கினாள்.

பின்னாலேயே ஐஸ்கிரீம்காரனும் இன்னொரு குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடினான்.

ஜன்னல் வழியே, எதிர்வீட்டின் காம்பவுண்டுக்கு உள்ளே கிடத்தியிருந்த பிணத்தை பார்த்தாள். அதற்குள் ஷாமியானா போட்டு, ஏகப்பட்ட சிவப்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நியைபேர் வந்திருந்தார்கள். சிலர், வாசலில் உட்கார்ந்து கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

டிவியை முழுவதுமாக நிறுத்திவிட்டு, ஜன்னல் பக்கம் சேர்போட்டுக் கொண்டாள். நினைவு தெரிந்து இதுமாதிரியான சடங்குகளை பார்த்ததேயில்லை. அந்த வீட்டில் நின்று கொண்டு அம்மாவும், அப்பாவும் கூட அழுதார்கள். ஏதோ மனசுக்கு கலக்கமாயிருந்தது முதன்முûயாக.

பிணத்தை நெருங்கி வந்தவர்கள் கும்பிட்டு, மாலை போட்டுவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். அழுகை வராதவர்களுக்கும் அந்த சூழ்நிலையில் அழுகை வரும் போலிருந்தது. சிலர் வெறுமனே துண்டை வாயில் பொத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

கார்கள் அந்தத் தெருவினை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன. சாலையின் ஓரத்தில் இவளது வீட்டின் அருகே நின் கொண்டிருந்த 2 பேர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆங். அதே ரயில்தான். அப்படியே உருண்டுடுச்சாம்..பாரு.. எல்லா ஜனமும் அங்க நின்னு பார்க்கி போட்டோகூட இன்னைக்கு பேப்பர்ல போட்டிருக்கான். இவரும் அந்த ரயில்ல போனவர்தான். கூட இருந்த ஆளுங்களும் பொழைக்கல. எண்பது பேருக்குமேல செத்துட்டாங்களாமே. பிரபலமா இருக்கத்தொட்டு, இவரு பாடியை அடையாளம் கண்டுட்டு உடனே அனுப்பிச்சிட்டாங்க. அதுலபாரேன்.. செத்தவங்கள தூக்கி கரையில போடப்போன ஆளும் தண்ணியில முங்கி செத்துட்டானாம்.. விதிதான்.

மாலையின் பூக்கள் வாடிக் கொண்டிருந்தது. புதுசாக பூக்களோடு வெளியே பாடை கட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக தண்ணீரில் மூழ்கும்போது என்ன நினைத்திருப்பார் இந்த மனிதர்? பிணம் தூக்க வந்தவர்கள், கூட்டாமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கண்கள் சிவப்பாய் பயமுறுத்தியது.

பிணத்தை கிளப்பிக் கொண்டு போயாகிவிட்டது. வீடு கழுவப்பட்டு, சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. சில பெண்குரல்கள் அவ்வப்போது வெடித்து அழுவதும் அடங்குவதுமாக கேட்டுக் கொண்டிருந்தது. தெருவிலும் நடமாட்டம் குûந்திருந்தது. ஜன்னல் மூடப் போனபோது கவனித்தேன்.

ஒரு பெண் இரண்டு குழந்தைகளோடு அழுதபடி தெருவில் ஓடிக்கொண்டிருந்தாள். பின்னாலேயே ஒரு பரட்டை தலை ஆள் ஒரு குழந்தையை பிடித்தபடி ஓடிவந்து கொண்டிருந்தான்.

ஜன்னல் திரையை மூடிவிட்டு திரும்பினேன். டிவியை ஆன் செய்து கட்டிலில் உட்கார்ந்தேன். ஏதோ சினிமாவில், அபத்தமாய் ஒரு பெண் முழுமேக்கப்பில், சிளிசரின் உபயத்தில் தாலியை காட்டி வசனம் பேசிக் கொண்டிருந்தாள். அம்மா கொண்டு தந்த பஜ்ஜியை சாப்பிட்டபடி டிவி பார்க்கத் தொடங்கினேன். இன்னும் பொன்னியின் செல்வனை முடிக்கமுடியவில்லை.

– நவம்பர் 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *