சுட்ட கதை..

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 13,515 
 

ஓப்பன் பண்ண…. டிரங் பெட்டியில் பழைய பட்டு புடவையின் கீழிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்த விரல்கள் லேசான நடுக்கத்துடன் நீள்கின்றது வாசலில் கத்திருக்கும் போலிஸ்காரரிடம்…..

போட்டாவை உற்று பார்த்தவாறே…”பொண்ணை கடைசியா எப்ப பார்த்திங்க?

“நேத்து கலம்பற பள்ளியோடத்துக்கு போனவ இன்னும் வரலீங்க” எனும்போது முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்க முயற்ச்சித்து தோற்று போனார் பால்ராஜ்

பால்ராஜ் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, மொழிவரியக பிறிக்கப்படதா இந்தியாவில்,தமிழகத்தின் கோவை அருகே சூலூர் கிராமத்தில் மனைவி எஸ்தருடன் வாழ்ந்து வந்தார்,பிழைப்புக்காக தற்பொழுது கேரளாவில் இணைந்திருக்கும் வாளையார் பகுதிக்கு விவசாயப்பண்ணை பணிக்கு தன் மனைவியுடன் வந்தவர்.

பிற்பாடு இங்கேயே இருந்து விட்டார் பால்ராஜ் எஸ்தர் தம்பதிக்கு பதிமூன்று ஆண்டு தவத்திற்கு பிறகு பிறந்தவள்தான் நேற்று காலை முதல் காணாமல் போன மேரி பிரசவத்தில் எஸ்தர் இறந்துவிட,பெண் பிள்ளையுடன் நிற்கதியாய் நின்றவரை அரவணைத்துகொண்டது சந்திராபுரம் தேவாலயமும் அங்கு பாதிரியாராய் அப்பொதிருந்த திரு பீட்டர் அவர்களும்தான்.

அன்றிலிருந்து. பால்ராஜ் கர்த்தரின் காலடியில் ஊழியம் செய்வதை தன் முழு நேர பணியகக்கொண்டு பாதிரியாருக்கு தேவையான பனிவிடைகள் செய்து கொடுக்களானான்.

மேரியும் தேவாலயத்திலேயே வளர்ந்தாள்,தேவாலயத்தால் நடத்தப்படுகின்ற பள்ளியிலேயே படித்து வந்தாள்,பால்ராஜ் தற்பொழுது வசித்து வரும் வீடும் மறைந்த பாதிரியார் பீட்டர் அவர்களால் பால்ராஜுற்கு வழங்கப்பட்டதே…..

தேவாலயதினால் வழந்கப்படுகின்ற குறைவான வருமானத்தில் நிறைவாக வாழ்ந்து வரும் பால்ராஜின் மகள் மேரியின் படிப்புக்கான அனைத்து தேவாலத்தின் வாயிலாகவே வழ்ங்கபடுகிறது.

“சரி வழக்கமா உங்க பொண்ணு எத்தனை மணிக்கு பள்ளிக்ககூடம் விட்டு வீட்டுக்கு வருவா?”என்றார் போலீஸ்காரர்

“பள்ளியோடம்விட்டு அரை மணிக்குள்ள வ்ந்திருவாங்க,நான் சர்சிலதாங்க இருப்பேன் நேரே அங்கதான் வருவா,எங்குட ஒத்தாசையா வேலைபார்த்திட்டு இருப்பா,ரெண்டு பேரும்தான் வீட்டுக்கு வருவோம்……”என்றார் பால்ராஜ்.

“உங்களுக்கு யார்மேலயாவாது சந்தேகம் இருக்கா? பொண்ணுக்கு நண்பர்கள்னு யாரும் பசங்க இருக்காங்களா?……இல்ல சமீபத்தில் யார்க்கிட்டயும் ஏதும் பிரச்சனைனு ஏதாவது ?” என்று கேள்விகளைஅடுக்கிக்கொண்டே போன போலிஸ்காரரை இடை மறித்து,”அப்படி யாரும் எம்பொண்ணுக்கு பழக்கமில்லைங்கய்யா, எனக்கு யார் மேலயும் சந்தேகம் இல்லைங்க”என்று சொல்லிக் கொண்டிருந்த பால்ராஜ் வீட்டின் முன்பாக அக்கம் பக்கம் வீட்டார் சிலர் கூட நேர்ந்தது….

“சின்ன பொண்ணுங்க…,யார்கிட்டையும் வம்பு,வழக்குனு போனதில்லைங்க” எனும் பொழுது அக்கம் பக்கத்தினர் பார்க்க அவமானத்தோடு தலைகுனிந்து அழத்தொடங்கினார்.

“கவலைபடாதீங்க பெரியவரே.. கண்டுபிடுச்சடலாம் நம்ம அய்யாவும் இன்ஸ்பபெக்டரை பார்த்து பேசினாரு அதான் இன்ஸ்பெக்ட்டர் கையோட போய் போட்டோ ஏதும் இருந்தா வாங்கி வர சொன்னாரு … நாங்க விசாரிக்கறது உங்க பொண்ணா சந்தேகபடறதுக்காக இல்லை ,காலம் கெட்டு கிடக்கில்ல அதான்…நீங்க பயப்படாம இருங்க …தகவல் கிடைச்சா உடனே வந்து சொறேன்..பொண்ண தேடறனு நீங்க வெளியேஎங்கேயும் போயிடாதிங்க….சரி நான் கிளம்பறேன் “என்று தன் சைக்கிளை கிள்ப்பினான் அந்த போலீஸ்காரர்.

சுற்றியிருந்த மனிதர்களை முகம் பார்க முடியாமல் தலை கவிழ்த்து ,மெளனமாய் ,மனதுக்குள் அழுது கொண்டே நின்றிருந்தார் பால்ராஜ்.பின்னே கல்யாணம் ஆகாத இள்ம்பெண் காணாமல் போயிருந்தாள் என்றாள் இந்த சமூகத்தின் பார்வை அவர் மீது முட்களையே வீசும் மேலும் அவளுக்கு கல்யாணம் என்பதே கடினமாகிவிடும் என்பதெல்லாம் பால்ராஜின் மனாதை சல்லடையாய் துளைத்துக்கொண்டிருந்தது.

நிலைகுலைந்து நின்ற பால்ராஜிர்க்கு போவதே தெரியவில்லை.. எல்லோருடைய வாழ்விலும் ஒரு தருணம் மெளனங்களால் மட்டுமே நிறப்படுகிறது, அது பெரும்பாலும் உறவுகளின் பிரிவாலும், இழப்பாலுமாகவே இருலக்கிறது. பிரிவும் இழப்பும் வாழ்வின் தவிர்க்க இயலாதவை என வெவ்வேறு வடிவங்களில் காலம் காலமாக சொல்லப்பட்டாலும் கூட அதை அனுபவிப்பவர்களுத்தான் அதன் வலி புரியும். வலிகள் உணர்வுகளின் மையத்திலிருந்து பிறப்பவை.போலீசஸ்காரர் சென்று சிறிது நேரம் கழித்து, அவர் குறிப்பிட்டு பேசிய ஐயா வந்தார்.

ஐயா… பத்து வருடங்கள் முன்பாக வாளையார் செக்போஸ்ட்-ல் ஆர்.டி.ஒ வாக பணிக்கு வந்தவர், இந்த ஊரின் அழகு, செழுமை மற்றும் தனக்கு இந்த பகுதி மக்கள் கொடுக்கின்ற அதிகபடியான மதிப்பு ஆகியவற்ரை மனதில்வைத்து தனக்கு கிடைத்த மாற்றல்களை தவிர்த்து ஒரு சமயத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொன்டு இங்கேயே செட்டில் ஆனவர். பகுதிவாழ் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் முன் நின்று தீர்த்துவைப்பவர்.பணத்தினால் மட்டுமல்ல மனதளவிலும் ஐயா பெரிய மனிதராகத்தான் இருந்தார். ஓடை பாலமும், படித்துறையும் ஐயாவின் பெருமுயற்சியில் மக்களுக்கு கிடைத்தது. பால்ராஜிக்கும், மேரிக்கும் ஒவ்வோர் வருடமும் கிறிஸ்துமஸ் அன்று அணிய புது ஆடைகள் அவர் பயன்படுத்திய சில வீட்டு உபயோக பொருள்கள் தருவதும் ஐயா தான். தேவாலயத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் ஐயா என அழைக்கபடுகிற ஸ்டீபனின் பங்கு கட்டாயம் இருக்கும். ஸ்டீபனுக்கு ஒரே செல்ல மகன் படிப்புக்காக பெங்களூருவில் இருக்கிறான்.

வாசலில் வந்து நின்ற ஐயாவின் வண்டியை பார்த்ததும், கண்களை துடைத்துக்கொண்டு எழுந்துவந்த பால்ராஜிடம்,

“ஸ்டேசன்ல இருந்து ஆள் வந்தாங்களா?” என்றார்.

“ஆமாங்கய்யா.. போட்டோ கேட்டு வாங்கிட்டு போயிருக்காங்க”..

“நான் ஸ்டேசனுக்கு போயிருந்தேன், ஆள் அனுப்பியிருக்கறதா சொன்னாங்க.. இன்ஸ்பெக்டரையும் பார்த்து பேசிட்டுத்தான் வாரேன்.. நீ பயப்படாம இரு தகவல் கிடைச்சதும் நான் வந்து உன்ன கூட்டி போரேன்” என்று சொல்லி சென்றார்.

முழுதாய் மூன்று நாட்கள், கவலையில் உறைந்திருந்த பால்ராஜை உருக்குலைத்து உடைத்தது அந்த செய்தி. வாளையாரின் ஆற்றங்கரை ஓரம் புதருக்குள் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக…

அது…… மேரிதான்… மேரியேதான்..

“கட் பண்ணா அங்க இன்டர்வெல் வைக்கரோம் சார்….. என்றான்” குமார்.

குமாரையே உற்று பார்த்துக்கொன்டிருந்த நாகராஜ், சினிமா தயாரிப்பாளர். என்.ஆர் பிக்ச்சர்ஸ் என்ர பெயரில் பத்து வருடங்களில் எட்டு திரைபடங்கள் தாயாரித்தவர் அதில் ஐந்து படங்கள் நூறு நாட்கள் ஓடியவை. திறமைக்கும் புது முயற்சிக்கும் வாய்பளிப்பவர்.

இயக்குனர் கனவோடு ஸ்டுடியோகளில் திரிகிற ஆயிரக்கணக்கான உதவி இயக்குனர்களில் குமாரும் ஒருவன். கடந்த நான்கு ஆண்டுகளில் இரு பெரும் இயக்குனர்களிடம் அஸிஸ்ட்டன்டா இருந்த தகுதியின் அடிப்படையில் நாகராஜ் குமரை கதை சொல்ல வருமாறு அழைத்திருந்தார்.

“நல்லாருக்கு தம்பி கிராமத்து சப்ஜெட், கூட சஸ்பென்ஸ்.. அப்பா மகள் பாசம்னு சென்டிமென்ட் டச்” எனும் போது.. இன்டர்காம் அழைத்தது. போனை எடுத்தவர் “சரி உடனே வர சொல்லுங்க” என தொடர்பை துண்டித்தார்.

“தம்பி ஒரு பத்து நிமிக்ஷம் நீங்க வெயிட்டிங் ஹால்ல இருங்க கூப்பிடுறேன்”..

“சரிங்க சார்”..

மனதில் ஒரு இனம் புரியாத சந்தோக்ஷம், ஒரு பாரம்.. எத்தனை அவமானங்கள், நிராகரிப்புகள்.. எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற ஒரே நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ளவேண்டும். காத்திருப்பு அறை குமாரின் நினைவுகளை பின் நோக்கி அழைத்துசென்றது. சென்னைக்கு வந்திறங்கிய முதல் நாள், நண்பர்களுடன் திருவல்லிகேனியில் சுற்றி திரிந்த நாட்கள், ஒரு டீ குடித்துவிட்டு நாள்முழுவதும் டிஸ்கஸனில் இருந்த காலங்கள், உதவி இயக்குனராக கிடைத்த வாய்ப்பு, ராணியுடனான நட்பு அது எதிர்பார்த்தார்போல் காதலாய் மாறிய தருணம் என.. குமார் தன் சென்னை வாழ்வின் நினைவுகளின் வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தான்.

ராணி சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடிவந்த ஒருத்தி. என்றேனும் ஒரு நாள் தன் கனவு நினைவாகும் எனும் ஆசையிலும், அது வரை சும்ம இருந்தால் வாழ்வதற்கே வழி இல்லாமல் போய்விடும் என்ற நிதர்சன உண்னையாலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த துணை நடிகை. குமாருக்காக பலரிடம் சிபாரிசு செய்திருக்கிறாள். ஆனாலும் குமார் இன்று ஜெயித்தாலும் அதை காண ராணி உயிருடன் இல்லை.

மூன்று மாதந்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் ராணி இறந்துவிட, இனி வாழ்வதில் அர்த்தமே இல்லையென இருகிப்போய் முடங்கிகிடந்த குமாரை.. அவன் நண்பர்கள் தான் தளர்த்தி நீ எதற்காக சென்னை வந்தாய்?, ராணியை சந்திக்கும் முன்பே உன் லட்சியம் உறுதிசெய்யப்பட்டது, அதுமட்டுமில்ல நீ ஜெயிக்க வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பமும், என்றெல்லாம் சொல்லி இயங்கவைத்தனர். இதோ இன்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறான். நாளை குமார் ஒரு இயக்குனர். காலம் போடுகிற எல்லாக்கணக்குகளுக்கும் மனிதனால் விடைகான முடிவதில்லை. சிந்தனையில் இருந்தவனை அலுவலகப்பணிப்பெண் அழைத்தாள் ” சார் பிளீஸ் கம்”.. என்று.

கதை விரிகிறது இடைவேளையிலிருந்து..

புதரில் கிடந்த மேரியின் உடல் போலீஸாரின் உதவியுடன் மீட்க்கபடுகிறது. பால்ராஜின் கண்ணீரும் கதறலும் திரையில் பதியபடுகிறது. சோகத்தை மட்டுமே சொல்லுகிற ஒரு பாடல். அதன் வரிகளில்லெல்லாம் வலி.. மீட்கப்பட்ட மேரியின் உடல் பிரேதபரிசோதனைக்காக மருதுவமனை எடுத்து செல்லப்படுகிறது. மகளின் உடலைக்கண்டு கதறுகின்ற பால்ராஜை மக்களும், ஐயாவும் சேர்ந்து சமாதானப்படுத்துகின்றனர்.

இரு தினங்களில்-

பிரேத பரிசோதனை முடிவுடன் ஒரு போலீஸ்காரர் பால்ராஜை தேடி வருகிறார். மேரி கொலை செய்யபட்டதாகவும், அவள் கொலைசெய்யும் முன் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இதை கேட்ட பால்ராஜ் கதறி அழுகிறார்.

“குற்றவாளி யார்னு தெரியாததால் நீங்க வெளியூர் எங்கயும் போகாதிங்க இது உங்கபொண்ணு போட்டிருந்த நகைகளானு பார்த்து சொல்லுங்க” என்றார் வந்த போலீஸ்.

“என் பொண்ணே போனதுக்கப்புறம் இந்த நகைய வெச்சு நாயென்னையா பன்னப்போரேன்”.

“அதுக்கில்லங்க நான் ரிப்போர்ட்ல எழுதனும் இல்ல அதான் கேட்கிறேன், கொஞ்சம் பார்த்து சொல்லுங்க”.

“நகையை வாங்கி உற்று பார்தவாறே இந்த மோதிரம் அவளுடையதுதான்” என்றார்.

ஆனால் அந்த சிலுவை அவலுடையதல்லவே.. கர்த்தரின் கை, கால், மார்பில் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட அந்த சிலுவை எங்கோ பார்த்தமாதிரியாகத்தான் இருக்கிறது ஆனால் நினைவில் இல்லை. அதனால் சிலுவையை பற்றி போலீஸில் சொல்லாமல் விடுகிறார். சில நிமிடங்களில் சிலுவையை பற்றி நினைவு வந்தவறாக வேகமாக கிளம்பி ஐயாவை பார்க்க செல்கிறார் பால்ராஜ்..

இங்தான் சார் கிளைமேக்ஸ் ஸ்டாட் ஆகிறது.. என்று ஆர்வமாக குமார் சொல்ல மிக ஆவலோடு கேட்க்க துணிகிறார் நாகராஜ்.

ஐயா வீட்டின் முன் பால்ராஜ் அரிவாளுடன்.. கோபமாக கத்துகிறார்..

வெளியே வந்த ஐயா பால்ராஜை சமாதான படுத்த முயல..

“கர்த்தருக்கு ஊழியம் செய்யும் நீயே ஒரு உயிரை கொல்ல துணியலாமா? அமைதியாய் இரு குற்றவாளியை போலீஸ்ல ஒப்படைப்போம்” என்கிறார் ஐயா.

கர்த்தருக்கு ஊழியம் செய்ததால்தான் கர்த்தரே சாட்சி சொல்ல வந்திருக்கார் என்று சொன்ன பால்ராஜை வியப்புடன் பார்கிறார் ஐயா.. ஐயாவின் கழுத்தை எட்டிபிடித்து அவர் அணிந்திருந்த சிலுவையை பறிக்கிறார் பால்ராஜ்..

பயத்தில் உறைகிறார் ஐயா!!!..??

இருபது நொடி மெளனம்…

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளே நுழைகிறாள் அலுவலக பணிப்பெண்.

புகைந்துகொண்டிருக்கும் துப்பாக்கியுடன் குமார்.

நாகத்தின் படம் பொறிக்கப்பட்டு அதன் கண்களுக்கு சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் … மேஜை மீது..

அறுபது நொடி மெளனம்.. காட்சிகள் விரிகிறது திரையில்.. ராணியின் சிபாரிசு முயற்சி, அதற்கான விலையாய் ராணியின் மானமும்,மரணாமும், மேஜைமீது கிடக்கின்ற மோதிரம் நாகராஜின் மோதிரம் என்று..

நான் முழுக்கதையும் சொல்லி முடிக்கும் பொழுது… தயாரிப்பாளர் ஸ்டீபன் சார் முகத்தில் ஓர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்… ஆனால் என் கையில் அரிவாளோ, துப்பாக்கியோ சாட்சியாக எண்ணிடத்தில் மோதிரமோ, சிலுவையோ இல்லை…

புன்னகைத்துக்கொண்டே கேட்கிறார் ஸ்டீபன் சார், “கண்டிப்பாக பண்ணலாம்…. டைட்டில் என்ன சொன்னீங்க..?”..

“சுட்ட கதை…” சார்….

(சுட்ட கதைதான்… கதை சுட்டதல்ல…)

Print Friendly, PDF & Email

1 thought on “சுட்ட கதை..

  1. கதையில் நிறைய எழுத்துப்பிழைகள் — கலம்பற, முயற்ச்சித்து (ச் கிடையாது), பிறிக்கப்படதா (பிரிக்கப்படாத என்றிருக்க வேண்டும்), இன்னும் பல. வட்டார வழக்கு வேறு, எழுத்துப்பிழைகள் வேறு. பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *