குருதி களம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 2,786 
 

ரகு அசந்து துங்கி கொண்டிருக்கையில் அவனது மொபைல் சினுங்கியது. தூக்க கலக்கத்தில் போனை எடுத்து பார்த்தால் சையது.

“ஹலோ” எதிர் முனையில் ஏதோ செய்தி கேட்டு.

“எப்போ?எப்படியாச்சு?”என்ற கேள்விக்கு பதில் கிடைத்த உடனே,

“இதோ உடனே இப்பவே கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு பெட்ருமை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் இருந்த ஸ்ரீநிவாசன்

“ரகு என்னப்பா அதுக்குள்ள எந்திருச்சட்ட.. ராத்திரி லேட்டா தான வந்த.. அதுவும் பஸ் டிராவல் வேற டையர்ட இருக்கும்ல இன்னும் சித்த நாளி தூங்கலாமல்லபா?” ன்னார், சமையலறையில் இருந்து வந்த ஜானகியும் அதையே கேட்டார்.

“நான் உடனே சென்னை கிழம்பனும்” னுனான் ரகு

“சென்னையா…? பொங்கல் லீவுனு நைட்டு தானே வந்தே அதுக்குள்ள எதுக்கு?” னு கேட்டார் ஸ்ரீநிவாசன்.

“அப்பா… சென்னைல இருந்து சையது போன் செய்தான். அங்க கிரிஷ்டோருக்கும் அவன் தங்கை ஜூலிக்கும் ஏக்ஸிடென்ட் ஆகிருச்சாம்”

“ஐயோ பெருமாளே.. என்னாச்சு?

யாருக்கும் எதும் ஆகலைல!? ஜூலி வேற மாசமானோ இருந்தால்” னு படபடப்புடன் கேட்டார் ஜானகி.

“இல்லமா.. ஜூலிக்குதான் அடி பலமாம் இரண்டு பேரும் ஐ.சி.யு ல இருக்கிக்காங்கலாம் ஜூலிக்கு ஆபரேசன் பண்ணனுமாம் அதனால பிளட் வேணுமாம் என் பிளட்டும் ஜூலி பிளட்டும் சேம் அதனால சையது உடனே வரச் சொன்னான் அதான் கிளம்பரேன்”

“ஐயோ பெருமாளே.. இது என்ன சோதனை” என்று கேட்டவாரே எப்ப எப்படி கிளம்பரேப்பா?” னு கேட்டார் அப்பா.

“இப்பவே ரெடியாகி.. 8.30 மணி இன்டர்சிட்டிய புடுச்ச மதியமெல்லாம் அங்கபோயிரலாம்பா”

“சரிசரி அப்ப உடனே கிளம்பு”

ரகு குளித்து ரெடியாகி வருவதற்குள் அம்மா அவசரமாக காலை டிபன் செய்து வைக்க அதை சாப்பிட்டு கொண்டே

“மா அப்பா எங்கே”

“தெரியலே எங்கேயோ வண்டி எடுத்துண்டு வெளியே போனார் நீ சீக்கிரம் சாப்பிடு” என்று கூறிவிட்டு ஜானகி பூஜைஅறைக்குள் சென்றாள்.

அம்மா உள்ளே பூஜைசெய்வதை கேட்டவாறே தானும் மனதினுள் எம்பெருமானே அங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆக கூடாது என்ற வேண்டுதலோடு அவசரமாக இட்லியை சாப்பிட்டு முடிக்கவும் அம்மா பூஜையை முடித்து பூஜை தட்டில் தீபத்துடன் வெளியே வந்து ரகுவிடம் நீட்ட ரகுவும் தீபத்தை தொட்டு வணங்க… ரகுவின் நெற்றியில் பொட்டு வைத்து விட்டு

“அந்த பெருமாள் தயவால் யாருக்கும் எதுவும் ஆகாதுபா” என்றாள் அம்மா.

வெளியே வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டு இருவரும் வெளியே வர அங்க ஸ்ரீநிவாசன்

“என்னப்பா ரெடியா” என கேட்டு கொண்டே தன்சட்டை பாக்கெட்டிலிருந்து சில இரண்டாயிரம் ரூபாய் தாள்களை எடுத்து ரகுவிடம் கொடுத்து விட்டு

“அங்க ஏதும் செலவுக்கு வெச்சுக்கோ மறுபடியும் வேணும்னா போன் பண்ணு நான் ஏதாவது அரேஞ் பண்ணி அக்கவுண்டல கூட போட்டுறேன்.. நீ சாப்பிடுட்டையா? முடிஞ்ச பொங்கலுக்கு வா இல்லைனா அங்கயே இருந்து அவங்களுக்கு துணையா இரு பொங்கல அடுத்த வருஷம் கூட கொண்டாடிக்கலாம்” னு சொல்லும் போதே அவர் வரும் வழியில் வரச்சொன்ன ஆட்டோவும் வந்து நின்றது.

“அந்த பகவான் கருணையால யாருக்கும் எதுவும் ஆகாதுபா நீ அங்க போயிட்டு உடனே போன் பண்ணு” னு சொல்லி ஆட்டோவில் ஏற்றி ரகுவை அனுப்பி விட்டு திரும்பும்போது ஜானகி கண்ணீருடன் நிற்பதை பார்த்து

“ஒன்னும் ஆகாதுடிமா கவலைபாடதே”

“இல்லே..னா எனக்கு ஆபரேசன் பண்ணி சென்னையில இருந்தச்சே ஒரு மக இல்லாத குறையா.. பார்த்துண்டா அந்த ஜுலி, பெட்பேன் வெச்சு எடுத்து பாத்ரும் பொரச்ச… முதல் குளிக்கற வரைக்கும் விடிய விடிய முழுச்சு பாத்திட்டு தினமும் நமஸ்காரம் பண்ண அந்த ரும ஆச்சாரமா வெச்சு எனக்கு தேவையான உணவை எப்படி செஞ்சு கொடுத்திண்டு என்ன எப்படி பார்த்திட்டா..ல் தெரியுமா? பகவானே.. யாருக்கும் எதுவும் ஆக கூடாது.

ஆமா.. ரகுட்ட பணம் இன்னும் கொஞ்சம் சேத்தி கொடுக்கலாமல்ல”

“இல்லமா.. கையில சுத்தமா காசு இல்ல காலையில கடன் கேட்ட யாரும் இல்லேனுட்டா அதான் நேத்து ராத்திரி ஹவுஸ்ஒனர்ட்ட கொடுத்த வீட்டு வாடகை இன்னும் ரெண்டு நாள்ல தரேனுட்டு வாங்கி வந்து கொடுத்தேன் நாளைக்கே வேற எதாவது ஏற்பாடு பண்ணி அவன் அக்கௌன்ட்ல கூட பொட்டுரலாம்” என்று கூறிவிட்டு

“ஜானு டிபன் முடுச்சுட்டு ரெடியாகு கோயிலுக்கு போயிட்டு வருவோம்” என்று கூறிவிட்டு இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

2.20க்கு ஜங்சனைவிட்டு வெளியே வந்த ரகுவிடம் சையது

“ஏன் லேட்”

“சேலத்துல ரைட் டைம் தான். வரவரதான் லேட், இரண்டு பேரும் இப்ப எப்படி இருக்காங்க டாக்டர் என்ன சொன்னாங்க”

“தெரியல இப்பதிக்கு எதுவும் சொல்ல முடியாதுங்கறாங்க. ஜுலி வேற மாசமா இருக்கறதுதான் பயமா இருக்கு இரண்டு உசுரு”

“எப்படி? என்ன ஆச்ச?”

“கிரிஷ்டோபர் அவன் வீட்ல இருந்த ஜுலிய நைட் பத்து மணிக்கு அவ வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கான். அப்ப சிக்னல்ல பிரேக் அடிச்சிருக்கான் பின்னாடி வந்த கார் இடிச்சு தூக்கி வீசிருச்சாம். பக்கதில இருந்தவங்க ஆம்பலென்சுக்கு போன் பண்ணி ஹஸ்பிடலுக்கு அனுப்பியிருகாங்க, கிரிஷ்டோபரின் போன்ல இருந்த என் நம்பர பாத்து ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு போன் பண்ணினாங்க நான் உடனே போயி பார்த்தேன்.. டாக்டர் அப்ப எதுவும் சொல்ல முடியாதுனாங்க. நீயும் நைட்தான் கிளம்புன.! உடனே உனக்கு ஏன் போன் பண்ணனும்னு யோசிட்டு அங்கயே இருந்தேன். தீடீர்னு விடியகாலம் டாக்டர் வந்து ஜுலிக்கு ஆபரேசன் பண்ணனும் பிளடு தேவைனாங்க அதான் உனக்கு உடனே போன் அடுச்சேன்”னு சொல்லிட்டே வண்டிய ஒட்ட

“மச்சி பசிக்குது டீ சாப்பிடலாமா”னு சையது கேட்டான்

“ம் சாப்பிடலாம்டா ஒரு பேக்கரிகிட்ட நிறுத்து… ஆமா நீ சாப்பிடயா இல்லையா?”

“இல்ல டா நைட்ல இருந்தே ஒண்ணும் சாப்பிடல மனசே செரியில.. கையுல காசும் இல்ல… இருந்த காச எல்லாம் ஸ்கேன், டெஸ்ட், மாத்திரைக்குனு கொடுத்துட்டேன்”

“டேய் என்னடா மொதல்லயே சொல்ல மாட்ட அப்ப பேக்கரி வேண்டாம் ஹோட்டலுக்கு விடு”

“இல்லடா சாப்பாடெல்லாம் சாபிட்டா லேட்டாயிரும் ஆஸ்பிடல்ல அங்க கிரிஷ்டோபர் அப்பா,அம்மா, ஜுலி ஹஸ்பன்ட்னு யாருக்கும் ஒண்ணும் தெரிய மாட்டேங்குது அழுதுகிட்டே இருக்காங்க” னு சொல்லிட்டே ஒரு பேக்கரியின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று டீ மாஸ்டரிடம் ஒன் பை டு னு டீ சொல்லிட்டு ஒரு தேங்கா பண்ணை எடுத்து அவசரமாக சாப்பிட்டான் சையது.

மனகவலையோடு இருவரும் டீ சாப்பிடும் போது ரகுவின் போனில் கிரிஷ்டோரின் அப்பா அழைத்து

“ரகு எங்கப்பா இருக்க ஊருக்கு வந்துட்டையா? சையது உன் கூடத்தான் இருக்கானா? அவன் போன் ஏன் சுட்ச் ஆப்ங்குது” என்று கேட்க

“நான் சென்னை வந்துட்டேங்க அன்கிள் ஆஸ்பிடலுக்கு தான் ரெண்டு பேரும் வந்திட்டிருக்கோம் சையது என்கூடதான் இருக்கான் மொபல் சார்ஜ் இல்லம சூட்ச் ஆப் ஆகியிருச்சாம்”

“சரிபா சீக்கரம் வாங்க டாக்டர் வந்து ஏதேதோ சொல்றாங்க பயமா இருக்குபா சீக்கிரம் வாங்க நான் வெக்கிறேனு” தொடர்பை துண்டித்தார்.

டீயை அவசர அவசரமாக குடித்து விட்டு இருவரும் ஆஸ்பிட்டலுக்கு சென்றனர். அங்கே சையதை பார்த்த கிரிஷ்டோபரின் அப்பா

“சையது ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாம் அத வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஜுலிக்கு தீடீர்னு பிக்ஸ் வந்துருச்சாம் மருந்து கேட்டாங்க உடனே வாங்கி கொடுத்திருக்கோம் ஆபரேசன் உடனே பண்ணனுமா..பா பிளட்டு கேட்டங்க என்னனு பாருப்பா”

“சரிங்க அன்கிள் தா உடனே நான் ஸ்கேன் ரிப்போட் வாங்க கிளம்பறேன் தோ ரகு பிளட் கூடுப்பான் ஆபரேசனுக்கு ரெடி பண்ண சொல்லுங்க” என்று சொல்லி விட்டு ரகு விடம்

“நீ பிளட் கொடுத்துட்ட இங்க இருந்து பாதுகாக்கோ நான் போயி ஸ்கேன் வாங்கிட்டு வரேனு” சொல்லிட்டு சையது சென்றான்.

ஐ.சி.யு வின் ஒரு மூலையில் இருந்த கிரிஷ்டோபரின் அம்மா ரகுவை பார்த்ததும் “கண்ணு” என்று அழுது கொண்டே ரகுவிடம் வர அது வரை கண்ணில் வெண்படலம் வரை தத்தளித்த கண்ணீர் ரகுவின் கண்ணில் அருவியாய் கொட்டியது. ஜூலியின் கணவருக்கும் ஆறுதல் சொல்ல… ஐ.ஸி.யு.வில் இருந்து வெளியே வந்த நர்ஸ்

“சத்தம்போடதீங்க பிளீஸ்… பிளட் கொடுக்க ஆள் வந்தாச்சா” என கேட்க

“நான்தாங்க டோனர் நான் ரெடி”னு ரகு சொல்ல

“வெயிட் பண்ணுங்க கூப்பிடறோம்”னு சொல்லிவிட்டு சென்றார் நர்ஸ். மீண்டும் சோகத்தில் விம்பி கண்ணீர் வடிய தலை குனிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்த ரகுவின் முகத்தை உயர்த்தி கண்ணீரை துடைத்தார் சையதின் அம்மா. அவரை கண்ட ரகு,கிரிஷ்டோபரின் குடும்பம் என எல்லோரின் கண்களும் துயரத்தில் கலங்கின. சிறுது நேர ஆறுதல் வார்த்தைகளால் அமைதியான பின் ரகுவிடம்

“சையது எங்கப்பா”னு அம்மா கேட்க

“ஸ்கேன் ரிப்போர்ட் வாங்க போயிருக்கான்மா” சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழுந்த சையதின் அம்மா

“ரகு நான் கிளம்பரேன்பா நான் போயி நைட்டுக்கு எல்லாத்துக்கும் டிபன் ரெடி பண்ணி கூடுத்திடுறேன்”. என்று சொல்ல ரகுவும் எழுந்து நிற்க

“இந்த பா இத சையது வந்த கூடுத்திடு”னுட்டு சில ஐநூறு ருபா நோட்டுகள் கொண்ட ஒரு நோட்டு கட்டை பர்சில் இருந்து எடுத்து கொடுத்தாள். அப்போது அந்த பர்சில் இருந்து ஏதோ ஒரு சீட்டு கிழே விழ அதை குணிந்து எடுத்த ரகு அதை சையதின் அம்மாவிடம் கொடுக்கும் போது பார்த்தான் அது வங்கியில் நகை அடமானம் வைக்கும் ரசீது. அதைஅவன் கையிலிருந்து வாங்கி கொண்டு

“நீ பிளடு கொடுத்துட்டுயாபா..?!

“இல்லைங்கமா”

“சரி பா பிளட கொடுத்துட்டு

நைட் படுக்க சையதோட வீட்டுக்கே வந்திரு ரூமுகெல்லாம் போகதே உனக்கு மெத்தையில ரூம் ரெடிபன்னிறேன்” என்று சொல்லி விட்டு கிரிஷ்டோரின் குடுபத்திடமும் சொல்லி விட்டு சென்றாள் சையதின் அம்மா.

நர்ஸ் ஒருவர் வந்து ரகுவை அழைக்க உள்ளே சென்ற ரகு பிளட் கொடுத்து விட்டு ஜுஸ் குடிக்கும் போது அங்கிருந்த நர்ஸ் ஸார் உங்க நண்பர் “பிழைச்சுகிட்டார்”னு சொல்ல… ஆனந்தத்தின் உச்சத்தால் ரகு குடித்த ஜூஸ் தொண்டுக்குள் இறங்காமல் அடைக்க, கண்ணில் நீர்வடிய.. சையதும் உள்ளே வந்து மகிழ்வை சொல்ல வார்த்தைகள் இல்லாமல் ஆர தழுவி நெகிழ்ந்து வெளியே வந்தனர்.

“ஜுலி ஹஸ்பென்ட் யாரு? டாக்டர் கூப்பிடுறார்”னு நர்ஸ் ஒருவர் கூப்பிட டாக்டரின் அறைக்குள் ரகு,சையது ஜுலியின் கணவர் என மூவரும் சென்றனர்.

“இதுல… ஜுலி ஹஸ்பென்ட்!”

“நான்…ங்க மேம் இவங்க ரெண்டு பேரும் கிரிஷ்டோரின் காலேஜ் மென்ட் அண்ட் பேமலி க்ளோஷ் பிரண்ட் ஜுலிக்கும் பிரதர் மாதரிதான் சொல்லுங்க டாக்டர்”

“ஒ.கே நான் சொல்றத நிதானமா கேளுங்க பதறாதிங்க… ஜூலிக்கு ஆபரேசன் பண்ணறதுல சில சிக்கல் இருக்கு அப்படியே ஆபரேசன் பண்ணினாலும் எப்படி..னு சொல்ல முடியாது. ஏன்னா அவங்களுக்கு இது ஏழாவது மாசம், பிக்ஸ் வந்திருக்கு, அடிவயத்துலயே வேற அடி அதனால பிளட் லேசா லீக் ஆயிகிட்டே இருக்குது, பி.பி.யும் லோ ஆயிட்டே இருக்கு, வயத்துக்குள்ள பேபியும் அசைவில்ல ஆனா ஹாட்பீர்ட் இருக்கு சோ.. ஆபரேசன் பண்ணினாலும் எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா ஆபரேசன் செய்யும்போதோ அல்லது அதற்கு பின்னோ பிக்ஸ் வந்தாலும சொல்றதுகில்ல அதனால… கேரண்டியா எதும் சொல்ல முடியாது. சோ… யோசிங்க இதுக்கும் மேல ஆபரேசன் பண்ணிக்கலாம்னு சொன்னீங்கன்னா அதுக்கு நிறைய செலவாகும்”னு டாக்டர் சொல்ல

“எவ்..வளவு செலவாகும்”னு சையது கேட்க,

“எப்ப..டியும் பை(f)வ் டு சிக்ஸ் லேக்ஸ் ஆகும்.எப்படியும் ஆபரேசன் செலவே டூ லேக்ஸ் ஆகும் அதுக்கப்பறம் பேபி எப்படியும் நாற்பது நாளாவது இன்க் பேட்டரில் இருக்கனும் இதில்லாம மருந்து மாத்திரை டிரிப்புஸ்னு இருக்கு… இதெல்லாம் ஒருவிதமான நம்பிக்கை அவ்வளவுதான். எல்லாம் நல்லதே நடக்கும்னு யோசிச்சு சொல்லுங்க… ஆபரேசன் தியேட்டர் டாக்டர்னு ரெடி பண்ணணும். இல்ல.. பேபிய காப்பாத்தமா.. ஜுலய மட்டும் காப்பாத்திடலானலும் ஆபரேசன் செலவு இருக்கு. கிரிஷ்டோருக்கும் செலவு நிறைய செலவு இருக்கு. நீங்க இங்க செலவு செய்ற அளவுக்கு இன்சூரன்ஸ் கிளைம் ஆகுமானு தெளிவா சொல்லமுடியாது. அதனால.. மனச தேத்திக்குங்க இப்படியே விட்டுடிங்கண்ணா நாளை காலைக்குள்ள எதுவும் சொல்ல முடியாது நீங்க வீட்டுக்கே எடுத்துட்டு போறதுனாலும் சரி”னு டாக்டர் சொல்ல “ஐயோ ஜுலினு” அவள் கணவர் வாய்விட்டு அழுதார்.

“பிளீஸ் அழாதீங்க மனச தேத்திங்குங்க வேறவழியில்ல நமக்கு டைமும் இல்ல.. நீங்க வெளிய போயி உங்க குடும்பத்தோட பேசி யோசிச்சு கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க”னு டாக்டர் சொல்ல மூவரும் எழுந்து வெளியேர

“மிஸ்டர் ரகு நீங்க டொனெட் பண்ணின பிளட் பக்கத்து கேபின்ல இருக்கு அத வாங்கிட்டு கிழ அண்டர்கிரவுன்டுல லேப் இருக்கு அங்க போயி உங்க பெயரையும் ஜுலி பெயரையும் சொல்லி வெயிட்டிங்கல வைக்க சொல்லுங்க ஆபரேசன் பண்ணினா மீண்டும் வாங்கிக்கலாம் இல்லைனா அத வேற யாருக்காவது கொடுத்துடலாம்னு ஒரு சைன் போட்டுட்டு கொடுத்துட்டு வந்திருங்க”னு டாக்டர்.

வெளியே வந்த மூவரும் குடும்பத்தாரிடடம் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்து கேபினில் இருந்த நர்ஸ் ஒருவர்

“மிஸ்டர் ரகு… கொஞ்சம் வாங்க”னு கூப்பிட்டு

“ஸார் இந்தங்க”னு ஒரு பேக்கிஜை கொடுத்து

“இத நீங்களே கொண்டு போயி கிழ ஒரு லேப் இருக்கும் அங்க இத ஷேவ் பண்ணி வைக்க சொல்லி கொடுத்திட்டு ஒரு சைன் போட்டுடிங்க”னு கொடுக்க அதை வாங்கி பார்க்கையில் ஒரு பகுதியின் ஓரத்தில் பிளட் வெளியே தெரிய தன் ரத்ததை தானே ஒரு கவரில் பார்த்து கொண்டே வெளியேற

“ஏன்னபா” னு சையது கேட்டான்.

“இத கிழ குடுக்கனுமாம், நீ அவங்ககிட்ட பேசிட்டிரு நான் இத கொடுத்துட்டு வரேன்” னு சொல்லிட்டு அண்டர் கிரவுன்டுக்கு போயி அங்கிருந்த லேப் அட்டன்டர்கிட்ட அந்த பேக்கேஜை நீட்ட அவர்

“ஒன் மினிட் சார்”னு

சொல்லிவிட்டு லெட்ஜர் புக்கில் ஏதோ எழுத கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டி.வி.யில் பிரேக்கிங் நியூஷ்னு ஏதோ ஒரு மாநிலத்தில் மதகலவரத்தால் மூவர் பலினு தொடர்ந்து போட்டு கொண்டே அந்த நிகழ்வு நடந்த இடத்தில் படிந்த ரத்த கறையை காட்ட, ரகுவின் மனதில் கிரிஷ்டோபர் விபத்து நடந்த இடத்தில் பார்த்தத ரத்தம், கிரிஷ்டோபரின் மீதிருந்த ரத்தம், ஜுலியிடம் வலிந்த ரத்தம், தான் கொடுத்த அந்த பேக்கேஜில் பார்த்த ரத்தம், டிவியில் பார்த்த ரத்தம்னு மாரி.. மாரி… மண்டைக்குள் சூழல சற்று தள்ளாடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

#மதம் போற்றபட்டு.. விளம்பரமாகலாம்
மனிதம் மனதில் போற்றபடுகிறது.#

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *