கருக்கொண்ட மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 268 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் ஏழு

களை பிடுங்கியதும் பயிர் ஆரோக்கியமாக வளர்ந்தது. கிராமங்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. இவர்களது இல்லங்களுக்கு வயல் வரப்புகளுக்கு அவர்களும் அவர்களது கிராமாந்திரங்களுக்கு இவர்களும் போய் வரத் தொடங்கினர். 

இரு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு மாலையில் சிங்கள முஸ்லிம் கிராமங்களின் நிர்வாகிகள் முஸ்லிம் கிராமத்து பாட சாலை மண்டபத்தில் கூடினர். 

மூத்த தலைவர்கள் அப்துல் மஜீதினதும், கிரி பண்டாவின தும் தலைமை சபைக்கு மெருகூட்டியது. 

கிரிபண்டாவின் பக்கத்தில் பிங்காமி, புஞ்சிரால ஆகிய மூத்தவர்களும் அமரதாசவும் அவனது நண்பர்கள் பியசேன, காமினி, லால் ஆகியோரும். 

அப்துல் மஜீதின் பக்கத்துக்கு அஹ்மதுலெப்பை, சவால் சமது, ஹலீம்தீன், யாசீன், சேகு, அன்சார்தீன் ஆகியோரும் பிரதிநிதித் துவம் வகித்தனர். பொது மத்தியஸ்தர்களாக பாடசாலை அதிபர் கரீமும் இஸ்மாயில் மௌலவியும் பிரசன்னமாயிருந்தனர். எல்லாமே ஒரு சம்பிரதாயத்திற்குத்தான்

தாம் ஏலவே கலந்தாலோசித்த பிரகாரம் சேர்ப்பவனற்றைச் சேர்த்தும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்ப வற்றை நீக்கியும், இருதரப்பினரதும் பாதுகாப்பு உறுதிப்படுத் தப்பட்ட ஒரு சட்டக் கோவையை சிங்களத்திலும் தமிழிலும் எழுத்தெண்ணி ஊன்றிப் படித்து முக்கிய நிர்வாகிகள் கைச்சாத் திட்டு, ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்டனர். 

அல்லாஹு அக்பர், 

ஜயவேவா… 

இதனால் இனி குளக்காட்டுப் பிரதேசத்தை, இரு கிராமங் களைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்களவர்களும் முஸ்லிம் களும் காடு வெட்டி விவசாயம் செய்யும் உரிமையைப் பகிர்ந்து கொண்டு விட்டனர். சட்டங்களை மீறுபவர்கள் தண்டிக்கப் படுவர். 

பாடசாலை வளவிற்குப் பக்கத்திலுள்ள அஹ்மதுலெப்பை அவர்களின் இல்லத்திலிருந்து பெட்டீஸும் தேநீரும் கொண்டு வரப்பட்டது. 

முக்கியத்துவம் வாய்ந்த அந்த வைபவம் வெற்றியுடன் நிறைவேறியதும் கிரிபண்டன் குழுவினர் மிக்க மகிழ்ச்சியுடன் டிராக்டரில் புறப்பட்டனர். இதர வேலைகளில் அமரவும் ஹலீமும் சகலரது ஒத்துழைப்புடனும் மும்முரமாக ஈடுபடுவர். 

மஃறிப் தொழுகைக்குப் பின் மீண்டும் ஊர் ஜமாஅத்தாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் கலந்துரையாடல் பாடசாலை யிலேயே இடம்பெற்றது. 

ஒரு முக்கியமான வினாவுக்கு விடை காண எல்லாரது உள் ளங்களும் துடித்துக் கொண்டிருந்தன. 

குளக்காட்டுப் பிரதேசத்தில் விவசாயம் செய்யப் போகும் முஸ்லிம் கிராமவாசிகள் யார்…..? 

கொமிட்டி தீவிரமாக ஆராய்ந்தது. 

“முதலில் காடு வெட்டி வெளிசாக்க வேணும், பொறகு குளத்தை திருத்தி நீர்ப்பாசனத்தை பெருக்க வேணும். குளத்த திருத்தும் பணியில இரண்டு பகுதியாரும் சேர வேணும்…..” 

“இவ்வாரம்ப வேலைகளுக்குப், பெருந்தொகையான பண த்த முதலீடு செய்ய வேணும்…..” 

“இப்போதைக்கு குளத்தைத் திருத்த வேண்டிய அவசியம் இல்ல… அப்படியே செய்ய வேணும் என்டா அரசுதான் செய்து தரவேணும்…” 

“குளக்காட்டுப் பிரதேசத்தில எல்லாராலும் பணம் முதலீடு செய்றது முடியாத காரியம்…. 

“இது வசதியுள்ளவர்களால் மட்டும் தான் முடியும்….”

“குளக்காட்டுப் பிரதேசத்தின் உரிமைய எடுத்துக் கொண்டது பணக்காரங்க மேலும் மேலும் தமது செல்வத்தைப் பெருக்கு வதற்காகவே….” என்ற ஊரவன் பழிப்புக்கு நிச்சயமாக ஆளாக நேரிடும். 

“காடு வெட்டவும், குளத்தைத் திருத்தவும் யாருக்கு வசதி யிருக்கோ அவங்க முன் வரட்டுக்கும்…. மறுஹா மறுபேச்சு இல்ல….” 

“இந்த ஊர்ல, விவசாயம் செய்ய இரண்டு ஏக்கர் நிலம் இல்லாதவங்க இன்னும் இருக்கிறாக…”

“…ஆக்கள் கூடக்கூட நிலம் பெருகுவதில்லையே…”

இப்படியாக ஆளுக்காள் முன் வைத்த கருத்துக்கள் ஆழமாக பரிசீலிக்கப்பட்டன. 

சமது விதானை எல்லாருக்கும் பொதுவாக தனது கருத்தை முன்வைத்தான். 

“காடு வெட்ட, குளம் திருத்துவதாயிருந்தா அதற்கும், மற்ற விதைநெல் உரம், மருந்து, உழவு சம்பந்தப்பட்ட எல்லா செலவுகளுக்கும் ஒரு ‘எஸ்டிமேட்’ பண்ணி வீட்டின் பிரதான விவசாயி (குடியிருப்பாளர்) ஒவ்வொருவரிடமிருந்தும் அறவிட வேணும். அத அறவாக்கிப் போடலாம். அது பெரிய தொகை யாக வராது என்று நினைக்கிறன். 

“அறவிடும் போது கொடுக்கத் தவறினால்…?” 

“…அதற்கும் குடியிருப்பாளர்களுக்கு ஒதவியாக ஒரு சட்டதிட்டம் போடலாம்…. கால அவகாசம்…. அதற்கு…. அவருடைய பங்கை இன்னொருவர் பொறுப்பேக்க அல்து பள்ளி நிர்வாகம் பொறுப்பேக்க முடியாத கட்டத்திலதான் அறு வடையில அவருக்குப் பங்கு இல்லாம செய்ய வேணும். இந்த யோசனையை எல்லாரும் ஆதரித்துப் பேசி, சிற்சில திருத்தங்கள் செய்தனர். இது தொடர்பாக ஹலீம்தீன் மற்றுமொரு திருத்த யோசனையை முன் வைத்தான். 

“….எங்கட நடைமுறையால அனைத்து கிராமவாசிகளும் பயன்பெற வேணும்…. நான் என்ன சொல்ல விரும்புறன் என்டா எப்படியும் குளக்காட்டுப் பிரதேசத்தில காடு வெட்ட கூலிக்கு ஆள் சேக்கத்தான் வேணும். பங்குப் பணம் கட்டி பங்குதாரர்களாக சேரமுடியாத சுமக்காரர் எவரும் காடு வெட்ட விரும்பினாக்கா அதில கிடைக்கும் கூலியில தமது பங்குப் பணத்தைக் கட்ட லாந்தானே… 

எமது நோக்கம் பிரதான குடியிருப்பாளர்களான கிராம வாசிகள் பங்குதாரராய் இணைந்து அறுவடை காலத்தில் லாபம் பெற வேணும் என்பதே. 

“ஹலீம்தீனின் திருத்த யோசனை திறமானது, முடிந்த வரை யில் எல்லாரும் இணைய வேண்டும். என்பதற்காகத்தான்…” 

எப்படியோ, சமது விதானை கொண்டுவந்த பிரேரணை திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

”….நாங்க இப்ப கிழடுகள். எங்களால ஓடித்திரிய ஏலாது. இளம் ஆக்கள தெரிவு செஞ்சி ஒரு குழு அமைச்சா…. இது விஷயமா நம்பிக்கையா…. பொறுப்பா வேலை செய்வாங்க…” இப்படி அஹ்மதுலெப்பை அபிப்பிராயம் தெரிவித்தார். அப்துல் மஜீத் அவர்களுக்கும் அந்த யோசனை சரியாகப் பட்டது. 

சமது விதானையின் தலைமையில், முஸ்லிம் கிராமத்திற் குரிய ஒரு ‘விவசாயிகள் கழகம்… அமைக்கப்பட்டது. 

‘ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தர பங்குப் பணமாக ஏற்படுத்தி ஒருவர் எத்தனை பங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்னும் முறை எல்லாருக்கும் வசதியாக இருக்கும்’ என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

எனினும் ‘விவசாயிகள் கழகம்’ எல்லாவற்றையும் முடிவு செய்யும். பங்குப் பணம் யாவற்றையும் கழகத்தின் பொருளாளர் அபூதாலிப் இடம் ஒப்படைத்து முழு விபரங்களுடன் ஒரு ‘ரசீது ‘ பெற்றுக் கொள்ள வேண்டும். செயலாளராகத் தெரிவு செய்யப் பட்ட அதிபர் அப்துல் கரீம் வங்கிக்கணக்கொன்றை ஆரம்பிப்பார். 

ஆழமான கருத்துப் பரிமாறல்களுக்குப்பின், குளக்காட்டுப் பிரதேசத்தில், முஸ்லிம் கிராமத்துக்குரிய காட்டை வெளிசாக்கி, விவசாயம் செய்ய ஏற்படும் முழுச் செலவையும் விவசாயிகள் கழகமே பொறுப்பேற்றது. பங்குகளுக்கு ஏற்ப வருடாந்த அறுவடையைப் பிரித்துக் கொள்ளவும் முடிவாகியது. 

“இது குறித்து சகல விதமான உத்தியோக பூர்வமான நட வடிக்கைகளும் செப்டம்பர் மாதம் அமுலுக்குக் கொண்டு வரப்படும்” என்று ஹலீம்தீன் உறுதியளித்ததும் நிர்வாகக்குழுக் கூட்டம் மகிழ்ச்சியுடன் கலைந்தது. 

பாடசாலை மண்டபத்தில் தங்கியிருந்து இன்றைக்கு மூன்று மணித்தியாலமாவது பாட ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென்று ஹலீம்தீன் நண்பர்கள் தீர்மானித்திருந்தனர். 

இல்லங்களுக்குச் சென்று, வழக்கம்போல் இராப் போசனத் திற்குப் பின்னர்ஹலீம்தீன், யாசீன் அன்சார் போன்ற ஏ.எல்.குழு வினர் தேவையான புத்தகங்கள் குறிப்புகளுடன், பாய் தலை யணைகளையும் சுருட்டிக் கொண்டு அமைதியே உருவான அந்தப் பாடசாலையின் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். 

“பியசீலி பெட்டை சரியாகத் தான் மட்டிட்டிருக்கிறா….” என்றான் யாசீன். 

“எதப்பத்தி……?” 

“…இல்ல அண்டக்கி கேட்டாளே ஒரு கேள்வி. நீங்க படிக்கிறீங்களா அல்லது கிராம முன்னேற்ற வேலைகளச் செய் றீங்களா எண்டு, சரியாகத்தான் அவதானித்து கேட்டிருக்கிறா…”

“என்னப் பொறுத்தவரையில… நான் ஒரு நேரசூசிப்படி திட்டமிட்டுத் தான் வேல செய்றன்… அவ அப்படி ஒரு ‘இன் ஜெக்சன்…’ கொடுத்ததும் நல்லதுக்கு தான்… படிக்கணும்… படிக்கணும் என்ற உசார் வந்துட்டுதுதானே…”

அந்தக் கிராமத்து பாடசாலை கட்டின நாள் தொடக்கம், தஸாப்தங்களாக, ஐந்து வகுப்புகளைக் கொண்ட ஓர் ஆரம்பப் பாடசாலையாகத்தான் இருந்து வந்துள்ளது. முன்னாள் அதிபர் கரீம் ஆரம்பித்த முன்னேற்றச் சங்கத்தினாலும், தற்போதைய அதிபர் ரஹீம் அவர்களின் முயற்சியினாலும் இரு மேலதிக கட்டிடங்கள் கிடைத்ததோடு, பாடசாலையின் தரமும் உயர்த் தப்பட்டுள்ளது. இன்று ஓ.எல்.வரைக்கும் வகுப்புக்கள் நடை பெறுகின்றன. 

இல்லாவிட்டால் ஹலீம்தீன் நண்பர்கள் போல் ஐந்தாம் வகுப்புக்கு மேல் வெளியேற வேண்டும். பெரும்பாலும் வயல் வேலைகளுக்காகத்தான் உந்தப்பட்டிருக்கிறார்கள். சொற்ப விகிதத்தினர் சீனம் சென்று கல்வி கற்றார்கள். அந்த வரிசையில் ஹலீம்தீன் கோஷ்டியினர் அதிர்ஷ்டசாலிகள். கஹட்டகஸ் கிலியா முஸ்லிம் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்கள். இன்று வரைக்கும் கிராமத்திலிருந்து எத்தனையோ கிலோ மீற்றர்கள் அரசாங்க பஸ்ஸில் பிரயாணம் செய்து, பின்னேர மேலதிக வகுப்புகள் எல்லாவற்றையும் முடித்து, மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இப்பொழுது ஏ.எல். சோதனை முடிந்த கையோடு அதற்கும் முற்றுப்புள்ளி கிடைத்துவிடும். சீனப் பிரயாணம் தொடருமா தொடராதா என்பது இவர்கள் இந்தச் சோதனையில் காட்டும் திறமையைப் பொறுத்துள்ளது. 

இரவு ஒன்பது மணிதொடக்கம் பன்னிரண்டு வரைக்கும் படித்துவிட்டு, பாலர் வகுப்பு நீட்டு மேசைகளை ஒன்று சேர்த்து, அதன் மீது பாய்களை விரித்து, அப்படியே சுருண்டு படுத்து விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. ஓய்வுநாள், காலை ஆறு முப்பது வரைக்கும் தூங்கிவிட்டார்கள். ‘சுபஹு கலா வாயிற்று’. பின்னர் அவசர அவசரமாக எழுந்து, பாய்களைச் சுருட்டிக் கொண்டு வீடுகளுக்குச் சென்றார்கள். 

“யாசீன், கிணறுகளெல்லாம் வற்றி, நீர் இறங்கியிருக்கு. ஆற்றுக்குப் போய் வருவமா….?” 

“ஆற்றிலும் நீரோட்டம் மிகக்குறைவு, வாளிகளை எடுத்துக் கொண்டு போவம்….” என்றான் யாசீன். 

”ஹலீம் நான் வரல்ல. எனக்கு மாச்சலாய் கிடக்கு. நான் வூட்டில நித்திரை கொள்ளப் போகிறன்” என்றான் அன்சார்தீன். ஹலீம்தீனும் யாசீனும் ஆற்றை நோக்கி, வயல் வரப்புகளில் நடந்தார்கள். 

அறுவடைக்காலம் முற்றிலும் முடிந்து வயல்களெல்லாம் வரண்டு, வெறிச்சோடிக் கிடந்தன. 

ஒரு பள்ளத்தாக்கில் இறங்கினர். 

அதை ஒரு பெரிய ஆறு என்று சொல்வதற்கில்லை. மழைக் காலங்களிலும் அதனை சலசலத்தோடும் நீரோடை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இப்பொழுது சலசலப்பில்லாமல் நீர் ஆகக் குறைந்த மட்டத்தில் காட்டிக் கொள்ளாமல் அசைந்து கொண்டிருந்தது. மிகவும் சுத்தமான நீர். 

ரஷீத் குளித்துக் கொண்டிருந்தார். 

அவரைக் கண்டதும் யாசீன் மெல்லிய குரலில் “நாசமாகப் போச்சி, எம்டன் குளிக்கிறார்” என்று முணுமுணுத்துக் கொண் டான். கிராமத்தில் எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு எதிர்ப்புக்குரல் காட்டுவதில் அவருக்கு முதலிடம் உண்டு. எதிர்ப்பது அவருடைய சுபாவம். 

ரஷீத் குளித்துவிட்டு கரையேறி விட்டார். ஆற்றங்கரையில் வேறு எவரும் இல்லை. 

ஆனால் இவர்களைக் கண்டதும் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஆற்றிலே நீரின் சலசலப்பு இல்லாவிட்டாலும் இவரது பேச்சில் இருந்தது. குளக்காட்டுப் பிரதேச உரிமையிலிருந்து பங்குப்பணம் வரைக்கும் சலாபிக் கொண்டிருந்தார். அவர்களும் முகம் சுழிக்காமல் அவரைத் திருப்திப்படுத்திக் கொண்டு குளிக்க ஆரம்பித்தனர். 

”தம்பிமார், எல்லாருக்கும் லாபந்தரக்கூடிய விதத்தில குளக்காட்டுப் பிரதேச விவகாரத்த முடிச்சிருக்கிறீங்க….” என்று பாராட்டினார். 

ஆற்றில் நீர் முழங்காலுக்குக் கீழ் ஒரடிக்கும் குறையத்தான் ஓடிக் கொண்டிருந்தது. வாளியை விட்டு அள்ளும் போது குறு மணலும் நீரில் கலந்து வந்தது. மிகவும் நிதானமாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டனர். ஓடும் நீரானாலும் வெது வெதுப்பாக வெம்பியிருந்தது. 

“ரஷீத்தை இப்படி ஆற்றில் சந்திச்சது நல்லதாப் போச்சி” என்றான் யாசீன். 

“ஏன்?” என்று கேட்டான் ஹலீம். அவனுக்குக் காரணம் விளங்கியது. இருந்தாலும் சும்மா கேட்டு வைத்தான். 

“குளக்காட்டுப் பிரதேச விஷயமா முழுக்கிராமத்தையே நாடி பிடித்துப் பார்த்து விட்டாய் தானே…” என்றான் யாசீன் திருப்தியான முகபாவத்தோடு. 

“ஓ நிச்சயமா… ரஷீத் ‘ஓகே’ என்றால் கிராமத்தின் எந்த மூலை முடுக்கிலும் எதிர்ப்பில்லை என்பதில் சந்தேகமில்லை. இனி நாம மேற்கொண்டு காரியங்களில் இறங்கி வேலை செய்ய ‘கடப்பல்’ திறந்து விடப்பட்டிருக்கு.”

குளித்துவிட்டு அவர்களும் கரையேறிய போது சேகு வந்து கொண்டிருந்தான். 

“யாசீன் வாளியைக் குடு….” 

“சேகு நீ வூட்ட போய் பின்னேரம் சமது விதானயக் கண்டு, விவசாயிகள் கழகம் சம்பந்தப்பட்ட ‘பைல்கள்’ எல்லாத்தயும் எடுத்துக் கொண்டு கரீம் மாஸ்டரைக் காணச் சொல்லு….” 

யாசீனும் ஹலீமும் பேசிக்கொண்டே நடந்தனர். 

”யாசீன், நீ ரஷீத்தை ‘எம்டன்’ என்று சொன்னியே…. இந்தச் சொல் நாட்டில் பல பாகங்களிலும் புழக்கத்தில் கிடக்கு… தெரியாமத்தான் கேட்கிறன். இந்த ‘எம்டன்’ என்ற சொல், தமிழ் சொல்லா….? இதன் கருத்தென்ன?” என்று வினவினான் ஹலீம்தீன். 

“இதபற்றி பஹார்தீன் மாஸ்டர் வந்தா தான் கேக்கனும்…. ஆனா நான் ஒண்டு கேள்விப்பட்டன்…. எம்டன் என்பது முன்னொரு காலத்தில், ஒரு கப்பலின் பெயராம். அது கடலில் வந்து காரணமில்லாம தங்கியிருந்த போது அதனைப் பிடிக் கவோ அழிக்கவோ முடியாதிருந்தது. மிகத் தந்திரமாகத் தப்பிக் கொண்டது. ‘எம்டன்’ என்றால் தந்திரசாலி என்று பொருள்படுகிறது.” 

யாசீனைப் பிரிந்து வீட்டிற்குச் சென்ற ஹலீம்தீனுக்கு காலை யுணவு சுடச்சுட புட்டும் புளி ஆனமும், அறுசுவையாக இருந்தது.

ஒரு வாரத்திற்குப் பின், விவசாயிகள் கழக வேலைகளை எல்லாம் கச்சிதமாக முடித்திருந்தனர் கரீம் மாஸ்டரும் சமது விதானையும். 

அத்தியாயம் எட்டு 

வருடத்தின் அறுவடைக்காலம் முற்றாக அஸ்தமித்தபோது எங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம் பிரவகித்தது. 

ஆண்கள் சாரன் சட்டை என்றும்,குமருப் பிள்ளைகள் தொடக்கம் நடுத்தர வயதுப் பெண்கள், பாடசாலைச் சிறார்கள் வரை பல தரத்தினரும் உடுபுடைவை வகையறாக்கள், மற்றும் வீட்டுச்சாமான்கள், சட்டிமுட்டிகள் வாங்கவென்று ஹொரவப் பொத்தானை தொடங்கி கஹட்டகஸ்திகிலியா ஊடாக அனுராத புர நகரம் வரைக்கும் விவசாயக் குடும்பங்கள் குழுக்கள் குழுக்க ளாக படையெடுத்துக் கொண்டிருந்தனர். அறுவடைக்குப் பின் ‘வாங்குவோம்’ ‘செய்வோம்’ என்று இறுமாந்திருந்தவர்கள், வயல்கள் காலைவாரி விட்டிருந்தால் எல்லாமே மனக்கோட் டைகளாகப் போவதுமுண்டு. ஒரு புறம் தங்க சாமான்களை ஈடுவைத்தவர்கள், மறுபுறம் வயல், காணி உறுதிகளை அடகு வைத்தவர்கள்… 

பெறுமதியான உடைமைகளை மட்டுமே அவர்களால் மீட் டெடுக்க முடியும். 

வியாபாரிகளும் அறுவடைக்காலம் தொடங்கும் போதே, கமக்காரர்கள் கேட்கும் வகைகளைக் கொண்டு வந்து குவித் திருப்பார்கள். ஒன்றுக்கு இரண்டு லாப நோக்கில். 

வருடத்திற்கு ஒருமுறை அறுவடைக்குப் பின் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தாமே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பழக்கம். வசதியில்லாதவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 

ஆனால் இந்த முறை ஒரு புதிய ஆசை முளைவிட்டு அதி தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்தது. 

“தேவையில்லாமல் உடுபுடவை மற்றும் சாமான்கள் வாங்கு வதை நிறுத்த வேண்டும்”. 

உணவுக் கஷ்டம் ஏற்பட்ட போது எடுத்த கடன்களை மட்டும் அடைத்து விட்டு… எப்படியும் குளக்காட்டுப் பிரதேசத்துக்குப் பங்குப் பணம் கட்ட வேண்டும் என்ற உந்துதல் எல்லாரது மனங்களிலும் ஆழமாகப் பதிந்து செயற்பட்டுக் கொண்டிருந்தது. 

சிங்கள முஸ்லிம் கிராமவாசிகளிடையே தோன்றிய நெருக்க மான நட்பு நிதானமாக வேரூன்றி வளரத் தொடங்கியது. இனி பிளவுக்கே இடம் இல்லை என்று அப்படி ஒரு புரிந்துணர்வு. எதிர்கால வசந்தத்தின் வருகைக்காகவா அது! 

ஒவ்வொருவருக்கும் தனது அயல் கிராமத்தை நேசிக்க வேண் டும் என்ற மனோபாவம் வந்து விட்டது. 

எங்கோ வாழ்கிற, தூரத்து உறவுக்காரர்களை விட பக்கத்து கிராமவாசிகளே ஆபத்துக்கு உதவுபவர் என்று இரு சாராருமே உணரத் தலைப்பட்டு விட்டனர். 

குளக்காட்டுப் பிரதேச விவசாயத்தில் பங்குதாரராய் சேர்ந்து சகல முஸ்லிம் கிராமவாசிகளும் பயனடையும் திட்டமும் அதற்குப் பொறுப்பேற்றிருக்கும் ‘விவசாயக் கழகமும் சிங்கள கிராமவாசிகளை மிகவும் கவர்ந்தது. இது போன்றதொரு திட் டம் சிங்களக் கிராமத்தில் இன்னும் தோன்றவில்லை. 

குளக்காட்டுப் பிரதேசத்தில் சிங்களவருக்கு ஒதுக்கப்பட்ட காட்டை யார் வெட்டப் போகிறார்கள்? யார் விவசாயம் செய்யப் போகிறார்கள் என்று இன்னும் ஒரு நிரந்தரமான முடிவு எடுக்கப்படவில்லை. 

ஹலீம்தீன் குழுவினரும் அமரதாச குழுவினரும் இது விடய மாக விரைவில் ஆராயவிருக்கின்றனர். 

சிங்கள கிராமத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம் விவசாயி கள் எடுத்திருக்கும் முன்னோடியான திட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்ற னவாம். 

தற்காலிகமாக விரும்பியவர்களின் பெயர்ப்பட்டியல் ஒன் றைத் தயாரித்து, காட்டைப்பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு பகுதியை ஒருவருடத்திற்கு என்ற முறையில் கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிங்கள கிராமத்தைப் பொறுத்த வரையில் இது பொருத்தமாக இருப்பதாக பலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள். வேறு தொழிற்றுறை இல்லாமல் உழவுத் தொழிலை மட்டுமே நம்பியிருப்பவர்களும், வயல் காணி இல்லாதவர்களும் தான் இத்திட்டத்திற்கு உரித்துடையவர் களாக்கப்பட்டு, விவசாயக் காணி பகிர்ந்தளிக்கப்படும். 

“அப்படியும் எல்லாருக்கும் பிரித்துக் கொடுக்க முடியாது போனால்…..?” என்ற கேள்வி எழுந்தது. 

“அவர்களுக்கு நிச்சயமாக இரண்டாம் வருடத்தில் கிடைக் கும் ” என்று உறுதியளிக்கப்பட்டது. 

இது தற்காலிகமானது தான். ஆழ்ந்து ஆராய்ந்து ஒரு நிரந்தர மான நடைமுறை காலப்போக்கில் வகுக்கப்படும். 

ரண்டு கிராமங்களிலும் கிட்டத்தட்ட எல்லா ஆயத்தங் களும் பூர்த்தியாகியிருந்தன. 

ஒரு நல்ல நாளில் மதவைபவங்களுடன் காடு வெட்டும் படலம் ஆரம்பமாகியது. 

இரு டிராக்டர் வண்டிகளில் தேவையான பொருட்களுடன் சென்று இளைப்பாற்றுக் குடில்களை அமைத்துக் கொண்டனர். 

எட்டாம் மாதம் தொடங்கிவிட்டிருந்ததால் ஹலீம்தீன், அமர குழுவினர் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதிலேயே மும்முரமக இருந்தனர். அதனால் சமது விதானையின் தலைமையில் உள்ள குழு, காடுவெட்டும் வேலைக்குப் பொறுப்பாக இருந்து அடிக்கடி போய் கண்காணித்து வந்தது. 

குளக்காட்டுப் பிரதேசத்தில் காடு வெட்டவும், குளம் திருத்த வும் ஆட்கள் தெரிவாகினர். திறமான அறுபது பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது. பதினைந்து பேர்களைக் கொண்ட குழுக் கள் அமைக்கப்பட்டன. 

குளக்காட்டுப் பிரதேசத்தில் காடு வெட்டச் சென்ற முதலா வது குழு ஒரு வாரம் கடுமையாக உழைத்துவிட்டு வந்ததும் மற்றக்குழு சென்றது. இப்படி மாறி மாறிச் செல்வதற்காகவே அக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 

ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஏ.எல்.பரீட்சை ஆரம்பமாகியிருந்தது. 

முஸ்லிம் கிராமத்திலிருந்து, ஹலீம்தீன், யாசீன், அன்சார், சேகு ஆகிய நால்வரும் மிக்க சுறுசுறுப்புடன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர். அமரதாச, பியசீலி நண்பர்களுக்கு ஹொரவப் பொத்தானையிலேயே பரீட்சை நிலையம் அமைந்திருந்தது. 

இரண்டு வாரங்களில் அனைவருக்கும், எல்லாப் பாடங்களும் முடிந்திருந்தன. 

அமரதாசவின் இல்லத்தில் ஒன்று கூடி தத்தமது பாடங்க ளைப் பற்றியும், விடைகள் எழுதியதில் ஒவ்வொருவரும் தத்தமது நிறை குறைகளை ஆராய்ந்தும் பரிசீலித்துப் பார்த்தனர். 

ஒவ்வொருவரும் எழுதி முடித்து வந்த பின்னர் அது பற்றி அலசி என்ன பிரயோசனம்? எழுதியவற்றிற்குத்தான் புள்ளி கிடைக்கும். கலந்துரையாடல் என்பது வெறும் மன ஆறுதலுக் குத்தான். 

எப்படியும் பரீட்சை எல்லாருக்கும் முழுநம்பிக்கையையும், திருப்தியையும் அளித்திருந்தது. அத்துடன் தம்மைவிட்டு ஒரு பெரும் சுமை இறங்கியது போலவும் இருந்தது. 

பத்து நாட்கள் உல்லாசமாகப் பொழுது போக்கவும், ஓய் வெடுக்கவும் கிராம முன்னேற்ற விவகாரங்கள் பற்றி பேசாது விடுபட்டிருக்கவும் விரும்பினர். 

அவர்களது திட்டம் இனிது நிறைவேறியது. அவற்றுள் மலையக விஜயம் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தது. 

பேராதனைப் பூந்தோட்டத்தில், தலதா மாளிகையில் மீரா மக்காம் பள்ளியில்…. மிக அற்புதமாக…. பத்து நாட்கள் எப்படிப் போயின என்று வியந்தனர். அந்த ரம்மியமான பொழுது போக்குகளுக்குப் பின் மீண்டும் கிராம அபிவிருத்தி வேலைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டார்கள். 

‘காலாண்டு குறுகிய கால வேலைத் திட்டம்’ ஒன்றை அமர, ஹலீம் குழுவினர் தயாரித்தனர். அதற்கிடையில் காடுவெட்டி தீ மூட்டும் வேலை மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

அத்தியாயம் ஒன்பது 

“இண்டக்கி நாங்கள் காலாண்டுத் திட்டம் போட்டு வேலை செய்யிற நிலையில இருக்கிறம்… ஆனா எங்கட முன் னோர்…?” என்று கேட்டான் கமர். 

“எங்கட முன்னவங்க கதை வேற. இப்ப காலம் மாறிக் கிடக்கு… சனத்தொகையும் கூட, எங்கட அப்பாமார் குடியிருப் புகளை ஆரம்பிச்சதே மறைவாக இருக்கத்தான். கிராமங்களுக்கு பெயர் வைச்சாங்களோ என்னவோ; பிந்திய சந்ததியினர்தான் பெயர் வைச்சிருப்பாங்க. 

இன்று ஒவ்வொரு கிராமத்துக்கும் பெயர் கிடக்கு. தங்கட வாழ்நாளிலே இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதவங்களுக்கும் எங்கட குக்கிராமங்களின்ட பெயர்கள் தெரியும். தெரியாவிட் டாலும் தேவை ஏற்பட்டா தெரிஞ்சு கொள்ளக்கூடிய பதிவுகள் வசதிகள் கிடக்கு. இந்த நாட்டின் பிரஜைகளான முஸ்லிம் விவசாயிகள் கிராமங்களில குடும்பங்களாய் வாழ்கிறார்கள் என்று மட்டும் தான் தெரியும். குளங்களையும் மழைத்தண்ணி யையும் நம்பி வாழ்ற வாழ்க்கை முறை ஒண்டும் தெரியா….” என்று நீண்டதொரு விளக்கம் கொடுத்தான் ஹலீம்தீன். 

“இப்ப கிராமங்களில கல்விக்கண்திறந்து விடப்பட்டிருக்கு. அதோட கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப்புற நாகரிகம் புகுந்து விட்டது. நாட்டின் ஒவ்வொரு பிரிவுகளிலும் பிரதேசங்களிலும் பல்லின மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று மேலோட்ட மாக அறியக்கிடக்கு. நெடுஞ்சாலைகள், பொதுசன தொடர்புச் சாதனங்கள் மூலம் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விசயங்களை கிராமவாசிகளும் அறிந்து விழிப்படைகிறாங்க. நமது உரிமை களுக்காக நாம் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாழப் போராடுகிறோம். கஷ்டப் பிரதேசங்களில் மிகவும் பின்தங்கிப் போய் வெறும் வயலையும் வரப்பையும், மரங் களையும் காடுகளையும் மிருகங்களையும். மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறம். எங்களுக்கு வழிகாட்டிகள் இல்ல. எங்க ளுக்கு மத்தியில் ஓர் ஒருமைப்பாடு தோன்றவும் சந்தர்ப்பம் இல்ல. எங்கட கிராமங்களை விட்டு வெளியே சென்று புதி னங்கள் பாத்திராத தாய்மாரும் தந்தையரும் சகோதர சகோதரி களும் இன்றும் இருக்கிறாங்க. ” 

இது யாசீனின் மற்றுமொரு விளக்கம். இவ்விளக்கங்களில் எவ்வளவு ஆழமான உண்மைகள் பொதிந்துள்ளன என்பதனை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். 

அமரதாச ஒரு வரலாற்று உண்மையை எடுத்துரைத்தான். 

“முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியது இடைக்காலத்தில்… என்றுதான் நினைக்கிற, ஏனென்டா இலங்கையை சிங்கள மன்னர்கள் ஆண்டகாலத்தில் முஸ்லிம்கள் மன்னனுக்கு ஆலோ சகர்களாகவும் இருந்திருக்கிறாங்க. அந்தக் காலத்திற்கேற்ப அவக கல்வியில் சிறந்து விளங்கியதாலதான் உயர்ந்த பதவி களை வகிக்க முடிஞ்சிருக்கும்…” 

“அமர சொல்வதில் உண்மை இருக்கு. ஆனா அவர்களது வழித்தோன்றல்கள், அடர்ந்த காடுகளில் குடியிருப்புகளை அமைக்க வந்ததால தான் கல்வியறிவற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளனர்… என்பதுதான் உண்மை…” என்று கூறிய ஹலீம்தீன் தொடர்ந்தும் சில கருத்துக்களை முன் வைத்தான். 

அநுராதபுரத்தை பண்டுகாபய மன்னன் அரசாண்ட காலம் தொடக்கம், ஒவ்வொரு சிங்கள மன்னர்கள் அரசோச்சிய கால கட்டங்களிலும் முஸ்லிம்களின் தொடர்பு வலுப்பெற்று வந்துள்ளது. முத்துவிதானை அசனார், விதானைப் பதவி வகித்துள்ளார். அரண்மனை வைத்தியர்களாகவும், ஆலோசகர்களாகவும் பலர் இருந்துள்ளனர். ‘முகாந்திரம்’ என்று சொல்லப்படும் உயர் பதவியை வகித்துள்ளார் அ.கா.பிச்சைத்தம்பி என்பவர். அரச னால் வழங்கப்பட்ட இடைவாள், சீருடை போன்றவற்றை இன்னும் சந்ததியினர் ஞாபகச் சின்னங்களாக, மிகவும் பாது காப்பாக வைத்திருக்கின்றனர். 

ஹலீம்தீனின் விளக்கவுரை பல புதிய தகவல்களைக் கொண் டதாக இருந்தது. பின்னர் திடீரென்று சேகுவைப் பார்த்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான். 

“சேகு… எனக்கு நீண்டநாளாய் உண்ட பெயரில் ஒரு சந்தே கம், ஒங்க வாப்பா ஒனக்கு ‘சேகு’ என்று பெயர் வைத்துள்ளார். அவருடைய பெயரிலும் ‘சேகு வருகுது. ஆக நான் சந்தேகிக்கிற மாதிரி நீ சேகு சிக்கந்தர் வொலியுல்லா பரம்பரையாக இருக்க லாமல்லவா…?” 

“சேகு சிக்கந்தர் வொலியுல்லாவா…?கூடியிருந்தவர்களின் அங்கலாய்ப்பு நீண்ட நேரம் நீடித்தது. 

“என்ன எல்லோரும் ஸ்தம்பிச்சிப் போய்ட்டீங்க… சேகு உனக்கு இயற்கையிலேயே தமிழ்ப்புலமை கிடக்கு…. பழங்காலத்தில் அநுராதபுர பிரதேசத்தில் குடியேறியவர்களில், தென்இந்திய காயல்பட்டின முஸ்லிம் வியாபாரிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். தவிர ஆன்மீகப் பணிபுரிய வந்த சேகு சிக்கந்தர் வொலியுல்லாவின் சேவை பரந்தது. அவரை பல மதத்தவர்களும் சந்திப்பார்கள். அன்னாரை கௌரவிக்கவும், ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும், வருடாந்தம் கந்தூரி வைபவங்களும் இடம்பெறுகின்றன. சிங்கள மன்னர்கள் அன்னாரை அரச அவையில் மரியாதை அளித்து தனக்கு ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார்கள். அரச அவையில் அங்கம் வகித்தாலும் அவரது ஆன்மீகப் பணி பின்நிற்கவில்லை. மக்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டார். 

“ஹலீம், சேகுவை, சேகு சிக்கந்தர் வொலியின் பரம்பரை யாக இருக்கலாம் என்றால்….. மற்றவர்கள்….?” 

“யாசீன் நீ இப்படிக் கேட்பாய் என்று எனக்குத் தெரியும்… அநுராதபுரத்தில் குடும்பங்களாக குடியேறியவர்களில் அ.கா. குடும்பம், சே.கா.குடும்பம், சே.ம.மு.குடும்பம், காட்டு பாவா குடும்பம், கேரள மக்கள் பிரதானமானவர்கள்…. இப்படித்தான் எங்கள் மூத்த தலைமுறையினரை இனங் காண முடியும். 

இன்று சனத்தொகை கூடக்கூட எங்களது விவசாயத்துக்கு, எல்லோருக்கும் போதுமான நிலம் கிடக்கு என்று சொல்வ தற்கில்லை. நிலம் எங்கள் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. எவ்வளவோ போராடி, குளக்காட்டுப் பிரதேசத்தை நாங்களே சுமுகமாகத் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்…. பழங்காலத்தில் ‘நிலம்’ ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. முன் குறிப்பிட்ட அ.கா. குடும்பத்தவருக்கு நூற்றுக்கணக்கான நிலப்பரப்புகள் இருந்தன. சே.ம.மு குடும்பத்தவரும் திஸாவெவ தொடக்கம் ஆமன்ன ரத்மலை வரை ஆயிரக்கணக்கான நிலப்பரப்புகளுக்கு உரித்துடையவர்களாய் இருந்தார்கள். 

சே.கா. குடும்பத்தவர்கள் வியாபாரிகள். கேரளா காட்டு பாவா ஆட்கள் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டிருந்தனர்…. ஒரு வரலாற்றுண்மையை சொல்லப்போனா கி.பி 1882ஆம் ஆண்டுக்கு முன்னர் அனுராதபுர இராச்சியத்துக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் எங்களது மூதாதையரின் ஆதிக்கத்திலதான் இருந்திருக்கு. 1957-1965 காலப் பகுதிகளில் தான் அனுராதபுரம் புதிய நகர அபிவிருத்தி, புனித பகுதி ஒதுக்கம் போன்ற திட்டங் களுக்காக முஸ்லிம்களின் பெருமளவு நிலங்கள் தேசியமயமாக் கப்பட்டன. அவர்கள் தூர இடங்களுக்கு குடியேற்றப்பட்டனர். 

சில குடும்பங்கள் ஏட்டுப் பள்ளம், உடமளுவ, இசுறுமுனிய, திசாவெவ போன்ற இடங்களிலிருந்து புதிய நகருக்குக் குடியேறின. இதனால் புராதன முஸ்லிம் கிராமங்கள் அழிந்து போயின. 

புதிய நகரை அமைப்பதில் பெருமளவு இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களின் பங்களிப்பே முற்று முழுதாக இருந்தது. ஏனெனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கிராமங் களைக் கொண்டிருந்தது அனுராதபுரம். 

சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் ஹலீம்தீன் முன்வைத்த வரலாற்றுத் தகவல்களை அனைத்து கிராமவாசிகளின் உள்ளங் களிலும் ஆழப்பதியச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். 

சமது விதானை தொடக்கம் சவால், ஹலீம்தீன், யாசீன், சேகு, அன்சார், கமர், அபூதாலிப், முபாறக்…. போன்ற சகல இளைஞர் களின் ஒருங்கிணைந்த செயற்பாடு மிகவும் உறுதியாகக் கிளர்ந் தெழுந்தது. 

இதுவரைக்கும் அவர்கள் வரித்துக் கொண்ட திட்டங்கள் வெறும் அரைகுறையாக அமுலாக்கப்பட்டன என்றும் கூறுவதற் கில்லை. ஆகஸ்ட் பரீட்சை ஒரு காரணமாக அமைந்திருந்தாலும், கிராம அபிவிருத்தியை பகைப்புலமாகக் கொண்ட திட்டங்கள், நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே அவை கிராமத்திலும் அயலிலும் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கின்றன அல்லது செல் வாக்குப் பெறுகின்றன. கிராமவாசிகளின் மத்தியில் எவ்வகை யான கருத்துக்கள் தொனிக்கின்றன. அல்லது தாம் எடுக்கும் முடிவுகள் சிறுபிள்ளைத்தனமானவையா? இப்படியான சாதக பாதக கருத்துக்களை ஊன்றி அவதானிக்க அந்த இடைவெளி நல்ல வாய்ப்பாக இருந்தது. 

அந்த வகையில் ஹலீம்தீன் குழுவினர் கொண்டுவரும் பிரயத் தனங்கள் தொண்ணூற்றைந்து சதவீத ஆதரவையும் ஒத்துழைப் பையுமே பெற்றன. குளக்காட்டுப் பிரதேசம் ஒரு சிறப்பு உதாரணம். இதில் கிராமத்தின் ஒவ்வொரு பிரதான குடிமகனும் இலாபம் பெற வேண்டும் என்னும் உயரிய நோக்கம் ஒன்றுக்கே ஹலீம்தீன் குழுவினரின் கொள்கைகளுக்கும், செயற்திட்டங்களுக்கும் பேரா தரவு பெருகி வழிந்தது. அவர்களும் முனைப்புப் பெற்றனர். 

– தொடரும்…

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *