கம்போடியா 596 கிலோமிட்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 769 
 
 

தாய்லாந்து. வழக்கம் போல இப்போழுதுதான் விடிந்தது, மாலை 6 மணி.பகல் முழுவதும் பெரிதாக உற்சாகம் இழந்து தான் கானப்படும். மாலை விடிந்துவிட்டால் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் விடிய விடிய நடந்து கொண்டே இருக்கும். பகலில் இம்மக்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எழுவது வழக்கம் தான். இங்கு வருபவர்களில் 80 சதவிகிதம் பேர் என்னை போன்ற இந்தியர்கள் தான். இவர்களுக்கு இந்தியர்கள் மீது பெரிய ஆர்வம் எதுவும் இருந்ததாக இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் எதற்க்கு எடுத்தாலும் பேரம் பேசுவதுதான் முதன்மையான காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

முதல்முறையாக பயணமாக இங்கே வந்ததும். என் மண்டைக்குள் படிந்து கிடந்த நினைவுகள், தினமும் பார்த்த முகங்கள்,தினந்தோறும் பார்த்த அதே இடங்கள் அனைத்தும் மறைந்து புதிய பார்வை,புதிய இடம், ஒரே மாதிரியான முகங்கள் கொண்ட மனிதர்கள். மண்டைக்குள் இருந்த பழைய மெமரி ரிசெட் (memory reset) செய்தது போன்ற ஒரு உணர்வு. அதுக்கும் வாழ்நாள் நான்கு நாட்கள் தான். பின்பு பழைய மெமரி கார்டை மண்டைக்குள் புகுத்திக்கொண்டு அலுத்து போன வாழ்க்கை ஆமை வேகத்தில் நகர்த்த வேண்டும்.

கழுத்து வலிக்க அன்னார்ந்து பார்க்கும் டி பீச் ஹோட்டலில்.எனது அறை 17வது மாடி அறை என்1736. இரண்டு படுக்கை கொண்டது. ஆனால் நான் மட்டுமே பெருபலான நேரங்களில் தனியாக இருப்பேன். என்னோடு இருப்பவன் எங்கே போவான் எப்போது வருவான் என்று தெரியாது. அவன் பார்வையில் இந்த ஊரை அனுபவித்து கொண்டு தான் இருந்தான். செல்போனை அதிகமாக பயன்படுத்துவதுயில்லை ரூமில் இருக்கும் போது மட்டும் இலவச wifi வசதியை பயன்படுத்தினேன். இதானல் தொல்லை தரும் போன் கால்கள் இல்லாமல் நிம்மதியா இருந்தேன். ரூமை விட்டு வெளியே சென்றால் செல்போனுக்கு முழுநேரமும் ஓய்வுதான். தனிமை பிரகாசத்தை கொடுத்தது.

அன்று பகல் முழுவதும் ரூமில் படுத்து தூங்கிவிட்டு இரவு எங்காவது வெளியே போகலாம் என இருந்தேன். இரவு வெளியே சென்றால் விடிய காலை ஐந்து மணிக்கோ ஆறு மணிக்கோதான் வருவேன் எங்கே போனாலும் ரூம்க்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை.கிளம்பி சென்று லிப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்துக் கொண்டு இருந்தேன். லிப்ட் 25 மாடியில் இருந்தது. சிறிது நேரத்தில் தளத்துக்கு வந்தது. அதில் கூட்டமாக இருந்ததால் ஏற இடம் இல்லை. சிறிது நேரத்தில் அருகில் உள்ள லிப்ட் திறந்தது அதில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தாள். உள்ளே சென்றேன், அவள் என்னை பார்த்ததும் பொதுமொழியான சிரிப்பை வெளிபடுத்தினாள். நானும் பொதுமொழியை வெளிபடுத்தினேன்.

இதுவரை அந்த ஊரில் உள்ள பெண்களின் முகங்கள் ஒரே மாதிரியான முகமாகதான் தெரிந்தது. இவளின் முகம் அப்படியில்லை இந்திய பெண்ணின் முகம் நேர்த்தியான முகம் எளிதில் மனதில் பதிய கூடிய முகம். பிறந்த குழந்தையின் பிங்க் நிறம். பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும் பேரழகு. பார்ப்பதை கவனித்து அவள் மொழியில் ஏதோ சொல்லி சிரித்தாள். என்னைதான் நக்கலாக சொல்லி சிரிக்கிறாள் என்று தெரிந்தது. லிப்ட் தரை தளத்திற்கு சென்றது கூட தெரியாமல் அவளையை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவளுக்கு நாய் வெறிக்க பார்த்துக் கொண்டுயிருகின்றது என்று தோன்றியிருக்க கூடும். லிப்ட் திறந்தது முதலில் வெளியே சென்றாள் பின் அவள் பின்னால் நான் சென்றேன். எங்கே போவது என யோசித்தேன், எங்கே போவது என தெரியவில்லை, சரி இவள் பின்னால் போவோம் என முடிவு செய்தேன். அவள் பின்னாலே நடக்க ஆரம்பித்தேன். சிக்கன ஆடை ஆணிந்த பெண்கள் ஆடிக் கொண்டும் கூட்டமாக சிரித்து கொண்டும் ஆண்களை கட்டி பிடித்துக் கொண்டு முத்தம் பரிமாறி கொண்டும் இருந்த தெருவை கடந்து அவள் பின்னாலே சென்றேன். அதில் சில பெண்கள் என் கையை பிடித்து இழுப்பதை கூட கவனிக்காமல் பின்னாலே போனேன். பெரிய தார் சாலையை அடைந்தோம். இந்த இரவும் அவளும் ஒருவித போதையாக இருந்தது.

சிறிது நேரத்தில் டுக் டுக் வண்டி வந்தது. நம்ப ஊர் சேர் ஆட்டோ போன்றது. ஆனால் வண்டியின் அமைப்பு சேடான் காரின் முகஅமைப்பில் ஒரு பிணம் வண்டி எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. இரு புறமும் கட்டையில் இருக்கைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு உட்கார்ந்து சொல்வது போன்று இருக்கும்.இருக்கைகள் நிறைந்துவிட்டால்,பின்னால் கம்பியை பிடித்து நின்று கொண்டும் போகலாம். இருவரும் ஏறினோம். அந்த வண்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். வண்டி கிளம்பியது என் கண்கள் அவளை தவிர வேற எதையுமே பார்க்கவில்லை, போனை பார்த்துக் கொண்டும் அப்ப அப்ப என்னை பார்த்துக் கொண்டு இருந்தால். அவளை தவிர, அந்த இரவில் வேற எதையும் சிந்திக்க தோன்றவில்லை. இவளும் என்னை பார்க்கிறாள் என்ற ஒரு நிம்மதி. நீண்ட தூரம் சென்றது வண்டியின் மேலே இருக்கும் ஒரு பட்டனை அலுத்தினாள். அது சத்தம் எழுப்ப பிணம் வண்டி நின்றது. அவள் இறங்கினாள், நானும் இறங்கினேன். அவள் தன் கை பையில் இருக்கும் 10பாத் எடுத்து கொடுத்தாள். அவள் பின்னால் நின்று கொண்டு என் பேண்ட் பாக்கெடில் பர்ஸை தேடினேன் காணவில்லை. சட்டை பையில் பார்த்தேன் பணம் இல்லை. பர்ஸை ரூமில் மறந்து வைத்துவிட்டேன் என ஞாபகம். அந்த வண்டியின் டிரைவரை பார்த்தேன். அவள் ஒரு பெண். என்ன செய்வது என தெரியாமல் குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றேன். அவளுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்க கூடும் என்னிடம் பணம் இல்லை என்று. அவள் என்னை பார்த்து மீண்டும் புன்னகை செய்துவிட்டு கை பையில் இருந்து மேலும் பத்து பாத் எடுத்து கொடுத்தாள். வாங்கி கொண்ட அந்த பெண் டிரைவர் பிணம் வண்டி கிளப்பினாள். திரும்ப எப்படி போவேன் என பயம். ஒரு நிமிடம் என்ன செய்வது என தெரியாமல் அவள் முகத்தை பார்க்காமல் அவளின் கால்களை பார்த்து யோசிப்பது போல இருந்தேன்.

என்னை பார்த்து அவள் மொழியில் பேசினாள் எனக்கு புரியவில்லை என்று அவளுக்கு தெரிந்துயிருக்கும். நான் இங்கிலீஸ்(thanks) சொன்னேன். இவளுடன் ஆன இரவு இத்துடம் முடிவுக்கு வர போகுகின்றது என தோன்றியது. திரும்ப நடந்துதான் ரூமுக்கு போக வேண்டும் இவளிடமே மேலும் பத்து பாத் கேட்கலாம என தயங்கி நின்றேன். அவளுக்கு தெரிந்த இங்கிலீஸில் பேசினாள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஸில் பேசினேன் அவளின் முகசொலிப்பு சொல்லியது சத்தியமா அவளுக்கு புரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. என்று.இறுதியாக அவள் ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள். எனக்கும் நன்றாக புரிந்தது come. முடிவை நோக்கி இருந்த இரவு மீண்டும் நிலை பெற்றது. வீசும் குளிர்ந்த காற்று மேலும் ரசிக்க தூண்டிவிட்டது. இருவரும் நடந்தோம் அவள் கையை இறுக்க பற்றி கொண்டாள். வேற்று நாட்டு பெண் என்பதை மறந்தேன். நாடுகளுக்கு நடுவே எல்லை கோடுகள் எதற்கு, எல்லை பாதுகாப்புகள் எதற்கு. பொருளாதாரத்தில் பெரும்பகுதியே பாதுகாப்புக்கு பயன்படுத்துவதும் எதற்கு, உலக பொது மொழி புன்னகை இருக்கும் போது. அவளின் பிரகாச முகத்தை பார்த்தால் கவிதை எழுத தெரியாதவன் கவிதை எழுதுவான்.

அவளின் வீடை அடைந்தோம். கடலின் அலைகளை போல அவளின் முகத்தில் புன்னகை தோன்றி கொண்டே இருக்கின்றது. ஒரு சிறிய அறை போன்றது அதில் ஒரு கட்டில் அதன் மேலே மெத்தை. அந்த அறை உள்ளே பாத்ரூம், ஒரு ஏசி சமையல் அறை உள்ளதா என்று கவனிக்கவில்லை. கண்டிபாக அவளின் சொந்த வீடு இல்லை என தோன்றியது. அவள் கை பேக்கை ஒரு மேசையில் வைத்துவிட்டு என்னை கட்டிலில் உட்காரும்படி செல்லிவிட்டு, ஏசியை ரிமொடில் ஆன் செய்துவிட்டு, ஒரு பெரிய துண்டை எடுத்து கொண்டு பாத்ரூக்குள் சென்றாள். கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவளின் எளிய வீட்டை சுற்றி பார்த்து கொண்டுயிருந்தேன். திடிரென மண்டைக்குள் இருக்கும் புதிய மெமரி கார்டு எவ்வளவுஅழகானது என தோன்றியது. அவள் குளித்துவிட்டு துண்டை கழுத்துவரை காட்டிக் கொண்டு வந்தாள். பிங்க் நிற ரோஜாவில் அங்கே அங்கே இருக்கும் பனிதுளிகள் போல நீர் துளிகள் அவளின் முகத்தில் இருந்தன. மீண்டும் என்னை பார்த்து கடல் அலை போல புன்னகை செய்தாள். என்னுடன் இவ்வளவு எளிதாக பழகும் அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டேன் என யோசித்தேன். கை பேக்கில் இருக்கும் கீரிமை எடுத்து முகத்திற்க்கு பூசினாள் உதடுக்கும் சாயம் பூசினால். அவளின் கடவு சீட்டு(passport) வெளியே தெரிந்தது அதை நான் பார்த்தேன். கடவு சீட்டு சிகப்பு நிறத்தில் இருந்தது. கட்டிலில் என் அருகில் வந்து உட்கார்ந்தாள். என்னிடம் உற்சாகமாகவும் குழந்தைதனமாகவும் எதோ பேசி கொண்டுயிருந்தாள். அவளுக்கு ஒரு ஆணிடம் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு தூளியுமே இல்லை. அவள் சிரித்து கொண்டுடே என் வயிற்றை தொட்டு பார்த்து உனக்கு தொப்பை இருக்கின்றது எனக்கு இல்லை என்று அவளின் துண்டு கட்டியிருந்த வயிறை காட்டினாள். அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க தண்ணிர் கொடுத்தாள். அதை வாங்கி குடித்துவிட்டு அவளிடம் கொடுத்தேன் மீதி இருந்த தண்ணிரை குடித்துவிட்டு பாட்டில் இருந்த இடத்தில் வைத்தாள். அவளின் முகத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை அவ்வளவு சந்தோசமாக இருந்தது. என் கண்கள் கூசும் அளவிற்கு முக பொலிடன் இருந்தாள். எழுந்தேன் அருகில் இருந்த கண்ணாடி முன்பு நின்று என் முகத்தை பார்த்தேன். சிறிது நேரத்தில் என் பின்னாலே வந்து என் கழுத்தின் மேல் அவள் முகத்தை வைத்தாள், சிரித்து கொண்டு கண்ணாடியை பார்த்தாள். இருவரும் கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்தோம். அவளின் முகத்தில் அருகில் இருக்கும் என் முகத்தை அருவருக்க செய்தது. எனக்கு அவள் மீது காமம் தோன்றவில்லை, காரணமும் தெரியவில்லை. அவளை வீடியும் வரை பார்த்துக் கொண்டுயிருந்தாலே போதும். அவளின் அழகை ரூசிக்கவோ, அவளை ரூசி பார்த்து திருப்தி அடைந்துவிட்டோம் என ஆண்மை பெருமை அடையவோ விருப்பம் இல்லை. அவள் முகத்தை திருப்பி என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அவளின் முத்ததை எதிர் பார்க்கவே இல்லை. என் கண்கள் அகண்டு விரிந்து இருபுருவத்தின் ஓரத்திலும் ஒரு துளி நீர் மெல்ல வெளியே வர காத்துக் கொண்டுயிருந்தது. என் முகத்தை திருப்பி அவளின் கண்கனை பார்த்துக் கொண்டே இருந்தேன். அது கண் இல்லை மிக பெரிய நீலகடல் அன்பின் பேரருவி. அவள் குழந்தையாக பிறந்து அவள் இன்னும் மனிதன் ஆகாமலே இருக்கிறாள் என தோன்றியது. அவளை இறுக்கி அணைத்து கொண்டேன். அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள். இருவரும் ஆண் பெண் என மறந்து நீண்ட நேரம் இறுக்கி அணைத்து இருந்தோம்.

இருவரும் கட்டிலில் அமர்ந்தோம். நிறைய பேச வேண்டும் போல தோன்றியது, மொழியும் தெரியவில்லை. எப்படி பேசுவது எனவும் தெரியவில்லை. மணியை பார்த்தேன். வீடியல் காலை மூன்று மணி. அவள் தன் கைபேசியை எடுத்து google translate யில் அவள் மொழி கெமெர் மொழியில் பேசி அதை தமிழ் மொழிபெயற்ப்பு செய்து காட்டினாள். உன் பெயர் என்ன? என்று கேட்டுயிருந்தாள். போனை வாங்கி திரையை பார்த்தேன். கெமெர் மொழியின் வடிவம் குழந்தைகள் பீல்டிங் கட்டி விளையாடும் டாய் போன்று இருந்தது. பேச ஒரு ஆயுதம் கிடைத்த சந்தோசத்தில் அவளுடைய போனை வாங்கி என் பெயர் வாசு என சொல்லி அவள் பெயரை கேட்டேன். மெரி நித் என்றாள். எந்த மொழி தெரியாதவர்களையும் பேசி பழக வைக்கும் technology எவ்வளவு வலிமைமிக்கவை..ஏசி ரொம்பவும் குளிர செய்தது. ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இவள் மட்டும் எப்படி சாதாரனமாக இருக்கிறாள் என் தோன்றியது. அவளும் என் கேள்விக்கு காத்துக் கொண்டு இருக்கிறாள் என தெரிந்தது. போனில் பேசினேன்.

என் மீது என் இவ்வளவு அன்பு செலுத்துகிறாய். உன்னிடம் நான் நீண்ட நாள் பழகியவனும் இல்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி உன்னால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது அதுவும் உன் வீட்டிற்க்கு கூட்டி வந்து.

அவள் சிரித்து கொண்டுயிருந்தாள்…

அவளின் பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் போனை வாங்கி மீண்டும் கேட்டேன் பதில் சொல் என்று.

விடாமல் நீ என்னை பார்த்துக் கொண்டே இருந்த, எனக்குள்ளும் ஒருவித பரவசம் ஏற்படுத்தியது. உன்னுடைய பர்ஸை காணாமல் பயத்தில் நின்று இருந்த உன்னை மீண்டும் பத்து பாத் தருகிறேன் டுக் டுக்கில் உன் ஹோட்டலுக்கு போ என்று சொன்னேன். உனக்கும் அது புரியவில்லை அப்பொழுது. உன்னை பார்க்கவும் பிடித்து இருந்தது. மீதி இருந்த இரவை உன்னுடன் கழிக்கலாம் என நினைத்தேன். உன்னை போன்று யாரும் என்னை இப்படி பார்த்ததே இல்லை. இரவு முழுவதும் நீ என்னை பார்த்துக் கொண்டே இருந்தாள் ஒருவித ஆறுதலாக இருக்கும் என நினைத்தேன் என சிரித்து கொண்டே சொன்னாள்..உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது பிடிக்கவில்லை என்றால் சொல்லு ரோட்டில் போய் இருக்கலாம்.

பார்த்த முதல் கணத்தில் அவள் மீது காம ஆசையில் அவளின் அழகை அனுபவித்து விட வேண்டும், பேரழகியை அனுபவித்து விட்டோம் என ஆண்மை பீத்திக் கொள்ள வேண்டும் என தோன்றியிருக்கலாம். காமத்தை தாண்டிய பார்வையை எப்படி எனக்குள் செலுத்தினாள். அவள் மீது இருந்த காமம் மறக்க அதீத பரவசமான அன்புதான் காரணமோ.

கேள்விகள் அடுத்து அடுத்து மேல எழும்பி கொண்டே இருந்தது. ஆனால் அவளுக்கு என்னை பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு கேள்வியும் கேட்கவில்லை. தெரிந்து கொண்டு நம் என்ன செய்ய போகிறோம் என்று கூட இருக்கலாம்.

எந்த ஊர், உன்னை பற்றி சொல்.

என் ஊரு கம்போடியா, ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான், சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து பெற்றேன்.

என்னது கல்யாணம் ஆகிடுச்சா! என்று அதிர்ச்சி அடைந்தேன். கல்யாணம் ஆனது கான எந்த அறிகுறியும் இல்லை. கன்னியாகவே தெரிந்தாள். போதும் இனி எந்த கேள்வியும் கேட்க வேணாம் என முடிவு செய்தேன். சிறுது நேரம் அமைதியாக இருந்தோம்

சிரித்து கொண்டே எப்பொழுது பயணம் என்றாள்.

நாளை இரவு 8 க்கு don mueang international airport.

அவளின் முகத்திலும் சின்ன மாற்றம் அடைவதை கவனித்தேன். அதை கட்டுபடுத்துக் கொண்டு சிரித்தாள்.

முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. இந்த முத்தம் பிரிவின் ஆறுதலாக இருக்கலாம் என நினைத்தேன்.

இதுவே இறுதி கேள்வியாக இருக்கட்டும் என்று இந்திய புத்தி கேள்வி ஒன்றை கேட்டேன்

De beach ஹோட்டல்க்கு எதுக்கு வந்த?

வாக்கிங் ஸ்ரிடில்(walking street) நின்று கொண்டு இருந்தேன். உன்னை போன்ற ஒரு இந்தியன் என்னிடம் வந்து பேசினான், அவன் பேசுவதை யூகத்தின் அடிபடையில் புரிந்து கொண்டேன். என் போனை எடுத்து என் விலையை சொன்னேன் 1000பாத் என்று, போனை வாங்கி அவன் 600பாத் கேட்டான். இறுதியாக 750 பாத் கேட்டேன் சிரித்து கொண்டு தலையாட்டினான். ரூம் எங்கே என்று கேட்டேன் அவன் ஹோட்டலின் கீயை காட்டினான். டுக் டுக் வண்டியில் ஏறினோம்.

இருவரும் கட்டிலில் படுத்து மேற்கூரை பார்த்தவாரு படுத்துயிருதோம். இரவு வேகமாக ஓடிக் கொண்டுயிருந்தது. இனி கேள்விகள் எதுவும் இல்லை .அவளை பற்றி பொதுமானவரை தெரிந்து கொண்டதால் திரும்பி அவள் முகத்தை திருப்பி பார்த்தேன். முதல் முதலில் பார்த்த பார்வைக்கும் இப்போது அவளை பார்க்கும் பார்வைக்கு வித்தியாசம் இருக்கின்றதா என என்னை பரிசோதித்தேன். அவள் பிறந்த வெள்ளை குழந்தையின் பிங்க் நிறமும், குழந்தையாக பிறந்து மனிதன் ஆகாத அவளின் குணமும் அப்படியே இருந்தது.வீடியட்டும் என்று அமைதியாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவள் போனை எடுத்து பேச ஆரமித்தாள்.

இங்கு வேலைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகுகிறது. என் பையனும் அம்மா உடன் ஊரில் இருக்கிறான். பெரும்பாலான பேர் பிடிக்காத வேலையை செய்வது போல நானும் இந்த வேலையை செய்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே என் கணவருக்கும் என்னையும் என் குடும்பத்தையும் பிடிக்கவே இல்லை. காரணம் அவருக்கும் பொருளாதாரம் தான் பிரச்சனை. என்னை பார்த்து சிரித்தாள். எப்படி இவளாள் இப்ப கூட சிரிக்க முடிகிறது என்று யோசித்து அமைதியாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். உலகத்தில் மிக கொடிய நோய் பொருளாதாரத்தை விட வேற என்ன இருந்துவிட முடியும். அவள் இவற்றையலாம் சோகமாகவோ தன் மீது கவனம் பெற வேண்டும் என்ற நோக்கமோ அவளிடம் இல்லை. அவள் எப்பொழுதும் போல மகிழ்ச்சியாகவே தான் இருந்தாள். அப்பொழுது அந்த பிண வண்டியின் பெண் டிரைவர் ஞாபகத்திற்கு வந்தாள், ஏன் என்று தெரியவில்லை. பணம் இல்லாமல் அவள் முன் நின்ற போது அவள் தனது ஆறு மகனை மடியில் சொகுசாக படுக்க வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாள். இப்போதும் அவள் வண்டி ஓட்டிக் கொண்டுயிருப்பாள், அவளின் மகன், அவள் மடியில் தூங்கி கொண்டுயிருப்பான் என தோன்றியது. மணியை பார்த்தேன் நான்கு. அவளுக்கு என்னிடம் கொடுக்க ஒன்றுமே இல்லை. இந்த தருணத்தில் என்னிடம் கொடுக்க வார்த்தைகள் மட்டும் தான் இருந்தது.வார்த்தைகள் அந்த நேரத்தின் சமலிஃபிகேஷன்.

உன் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி இருக்கட்டும், இந்த வாழ்க்கை சக்கரத்தில் உள்ள உன் கஸ்டங்கள் அடுத்த வாழ்க்கை சக்கரத்தில் சரி ஆகி, உனக்கு பிடித்த வாழ்க்கை விரைவாக அமையட்டும். என்றும் உன்னை என்னால் மறக்க முடியாத அனுபவத்தை எனக்கு தந்தாய் அதற்கு என் நன்றிகள். மீண்டும் ஒரு முறை இங்கு வந்தால் உன்னை கண்டிபாக என் கண்கள் தேடும். கம்போடியா என் நாட்டு அண்டை மாநிலமாக இருந்துயிருக்க கூடாத என்று எண்ணுகிறேன். இந்த இரவு இனிமையானது. நீ பேரழகி. போனை அவளிடம் கொடுத்தேன். படித்துவிட்டு மெய்சிலிர்த்து, படுத்துயிருந்த என்னை தலையை பிடித்து உதட்டோடு உதட்டில் இருக்கமாக முத்தம் செலுத்தினாள். அவளின் கண்ணை பார்த்தேன், கண்களில் நில பெருகடலும் அன்பின் பேரருவி தெரிந்தது.

மணி காலை ஐந்து. துண்டை கழட்டிவிட்டு மாற்று உடை அணிந்து கிளம்பி கொண்டு இருந்தாள். ஏசியை ஆப் செய்தேன், கைபையை எடுத்து அதில் இருக்கும் வாசனை திரவியத்தை எடுத்து அவளுக்கு அடித்து கொண்டாள் என்னை அருகில் வர சொல்லி எனக்கும் வாசனை திரவியத்தை அடித்துவிட்டாள். இருவரும் வீட்டை விட்டு கிளம்பினோம். என் கையை இறுக்க பற்றிக் கொண்டாள். சாலையை நோக்கி நடந்தோம். டுக் டுக் வண்டிக்கு காத்துக் கொண்டுயிருந்தாள். நான் பிணம் வண்டிக்கு காத்துக் கொண்டுயிருந்தேன்.வண்டி வந்தது. நான் மட்டும் ஏறினேன், வேறு யாரும் வண்டியில் இல்லை. என் கையில் பத்து பாத் கொடுத்தாள். வண்டி கிளம்பியது. அதே சிரிப்புடன் கையை வானத்திற்கு தூக்கி ஆட்டிக் கொண்டுயிருந்தாள். பிண வண்டி கிளம்பியது, நான் பிணமாக அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *