கதைக்கலாம் வா.!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 6,243 
 
 

சில்லரைக்குத் தேராத

விஷயம் முதல்,

விருப்பம் விடியல்

கோபம் கண்ணீர் வரை

அனைத்தையும் கதைத்தேக்

கதை சேர்க்கலாம்..

‘டா. எங்க இருக்க நீ.? நா உங்க வீட்டுக்கு கீழ நிக்கிறேன். ஏற்கனவே நேரமாச்சு சட்டுனு வா போவோம். லேட் பண்ண மவனே செத்த’ என்று படபடவென பேசிய கண்மணியிடம் ‘அடியே! மூச்சுவிடு. செத்துராத. நேராப் பாரு. ஓய் இங்க’ என்று செபா கத்த அழைப்பைத் துண்டித்துவிட்டு அவனை நோக்கி நடந்தாள் கண்மணி. ‘அப்பறம் கண்ணா, இன்னைக்கு எந்த பார்க் டா போவோம்’ என்று செபா கேட்க, ‘நம்ம பார்க்-க்கு தான்’ என விளையாட்டாய் சொல்லிச் சிரித்தாள் கண்மணி.

சில வாரங்களாகவே நிதமும் அந்திகளில் அருகில் உள்ளப் பூங்காக்களுக்கு சென்று சற்று நேரம் கதை பேசி வருவது கண்மணிக்கும் செபாவிற்கும் வழக்கமாக இருந்தது. அதில் ஒரு பூங்கா இருவருக்குமே மிகவும் பிடித்தமானது. அங்கு செல்ல நடையை கட்டினர்.

‘என்ன செபா தலையிது பேக்கு பேக்கு னு வச்சிருக்க’ என்று கண்மணி திட்ட அது ‘காஞ்சிரும் கண்ணா, அதோட நம்மள யாரு டா பாக்க போறா’ என்று செபா சொல்ல இருவரும் சிரித்தனர். ‘அந்த பொண்ண பாரு கண்ணா செம்மையா இருக்கால்ல’ என்று செபா வியக்க ‘ஊருல ஒரு பொண்ணாச்சி மிச்சம் வை டா எல்லார் மேலையும் உன் கண்ணு தான்’ என்று கண்மணி கேலி செய்தாள். இப்படி பேசிக் கொண்டே ஒருவழியாக பூங்காவிற்கு வந்துவிட்டனர்.

‘டா செபா வா நம்ம எடத்தப் புடிப்போம்’ என்றாள் கண்மணி. ‘அடி, நம்ம இடத்த ஒரு தாத்தா புடிச்சிடாரு’ என்று செபா சொல்ல, ‘ஆமா டா, வட போச்சே’ என்றாள் கண்மணி. ஒரு நிமிட அமைதிக்கு பிறகு, சரி. ‘ரெண்டு ரவுண்டு நடப்போம்’ என்ற கண்மணியிடம் பாவமாக முகத்தை வைத்து கொண்டு ‘ரொம்ப நடக்க விடாதடி’ என்று கெஞ்சினான் செபா.

நடக்க துவங்கியவுடன் ‘டேய், நம்ம ஐஸ்கிரீம் கதை நியாபகம் இருக்கா’ என்று கேட்டாள் கண்மணி. ‘அத மறக்க முடியுமா கண்ணா, இட் வாஸ் தி ஃபயின் இவினிங்’ என்றான் செபா. ‘அன்னைக்கும் இதே போல வெதர் தான்ல. நாளு வருசம் ஆகிடுச்சி’ என்றாள் கண்மணி.

‘பஸ்காக அவ்வளவு நேரம் வெயிட் பண்ணது வீண் ஆகல, ஒரு எவர்கிரீன் மொமண்டா ஆகிடுச்சில கண்ணா, ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு சொன்னதும் உன்னோட மூஞ்சில சந்தோஷத்த பாக்கனுமே’ என்று சிரித்தான் செபா. ‘ஆமா அப்போ எனக்கு ஒலுங்கா ரோடு கூட க்ராஸ் பண்ண தெரியல ரிமெம்பர், நீ தான் கை பிடிச்சி கூட்டிட்டு போன’ என்றாள் கண்மணி.

‘ஹேய் கண்ணா நமக்கு என்னடா ஆச்சு அப்போ, அவ்வளவு நல்ல கணெக்ட் இருந்தும் நம்ம அதுக்கு அப்பறம் க்ளோஸா இல்ல’ என்று செபா கேட்க, சிரித்து கொண்டே ‘நெறையா பேர் நம்ம வாழ்க்கையில வந்துடாங்க செபா, உனக்குலாம் நேரமே இல்ல நானும் புஷ் பண்ணல அப்படியே நாலு வருஷம் போயிடுச்சி எடையில சின்ன சின்ன மனகசப்பு வேற’ என்றாள் கண்மணி.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு கண்மணியே மீண்டும் தொடங்கினாள், ‘எது எப்படியோ டா இப்போ நம்ம நல்லா இருகோமே அதான் முக்கியம்’. பதிலுக்கு தலையை ஆமாம் என்ற தொனியில் அசைத்துவிட்டு ‘ப்ரோக்கன் ஹாட்ஸ் (Broken hearts) டா’ என்றான் செபா. மீண்டும் அமைதி. ‘செபா….’ என்று இழுத்தாள் கண்மணி பதிலுக்கு ‘ கண்ணா….’ என்று இழுத்தான் செபா. இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

‘டா. அந்த தாத்தா போயிட்டாரு. வா உக்காரலாம்’ என்றான் செபா.

Print Friendly, PDF & Email

1 thought on “கதைக்கலாம் வா.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *