கடவுள் கண்லே தென்பட்டா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 6,227 
 
 

மதுரைக்கு பக்கத்திலெ இருக்கும் சோழவந்தான் என்கிற சின்ன ஊரில் நான் பொறந்தேன். என் பேர் ராதாகிருஷ்ணன் என்று இருந்தாலும் என்னை ஏன் அம்மா அப்பா ‘ராதா’ ‘ராதா’ன்னு தான்னு கூப்பிட்டு கிட்டு வந்தாங்க.நான் பாக்க ரொம்ப, கலரா அழகா இருந்தேன்.

எனக்கு புத்தி தெரிஞ்ச வயசில் இருந்து எனக்கு பெண் பிள்ளைங்களோடு தான் ஆடி வர பிடிச்சு இருந்தது.நான் அவங்க கூட பாண்டி,ஸ்கிப்பிங்க்,கண்ணா மூச்சி,பல்லாங்குழி,நொண்டி ஆட்டம் இவைகளை தான் ஆடி வந்துக் கிட்டு இருந்தேன்.

என் வயசு ஆம்பிளை பசங்க ஆடி வரும் கிரிகெட்,புட்பால்,கோலி,கில்லி தாண்டு,காத்தாடி விடுவது போன்ற எந்த ஆட்டத்திலும் எனக்கு நாட்டமே இல்லை.என் அம்மா என்னைப் பாத்து “ஏண்டா ராதா,இப்படி பொட்டை பிள்ளைங்க கூட எப்பவும் ஆடிகிட்டு வறே.ஆம்பிளை பசங்க கூட போய் ஆடி வாடா” என்று பல தடவை திட்டுவாங்க.ஆனா அதை காதிலே போட்டுக்காம பொம்பளை பசங்க கூட தான் ஆடிக் கிட்டு வந்து கிட்டு இருந்தேன்.என்னை என் அம்மாவும் அப்பாவும் செல்ல மாக வளத்து வந்தாங்க.நான் சந்தோஷமா இருந்து வந்தேன்.நான ரொம்ப நல்ல படிச்சுக் கிட்டு வந்தேன்.என் கை எழுத்து முத்து முத்தாக மிகவும் ரொம்ப நல்லா இருக்கும்.நல்லா படிச்சு முடிச்சுட்டு ஒரு இஞ்சினியராகவோ,டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆவணும்ன்னு நான் ரொம்ப ஆசையா இருந்து வந்தேன்.

என் அப்பா ஒரு தச்சராக வேலை செஞ்சு வந்தார்.என் அம்மா வீட்டிலே ஒரு தையல் மெஷினை போட்டு கிட்டு அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்களுக்கு “ப்ளவுஸ்” குழந்தைகளுக்கு சட்டை,பாவாடை,கிழிஞ்ச துணீகளை தைப்பது,என்று செஞ்சு வந்து குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் சம்பாதிச்சு வந்தாங்க.

எனக்கு ஒன்பது வயசு ஆகும் போது என் அம்மாவுக்கு ரெட்டை குழந்தை பொறந்தாங்க. அவங்களுக்கு ஒரே மாதிரி இருக்கும் ஒரு பையனும்,ஒரு பொண்ணும் பொறந்தாங்க.ரெண்டு சின்ன குழந்தைங்க பொறந்ததாலே கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் இருந்த செல்லம் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குறைஞ்சு கிட்டே வந்தது.நான் கவலைப் படலே.என் இஷ்டம் எப்பவும் போல என் வயசு பெண் பிள்ளைங்க கூட தான் விளையாடிக் கிட்டு வந்தேன்.ஏன்னு எனக்கு புரியலே.என் வயசு ஆமபிளை பசங்க என்னைப் பாத்து அடிக்கடி கிண்டலும் கலாட்டாவும் செஞ்சு வந்தாங்க. எனக்கு கோவம் வந்தாலும் அதை பொருத்து கிட்டு நான் என் இஷ்டபடியே விளையாடிக் கிட்டு வந்தேன்.

எனக்கு ரொம்ப தெய்வ பக்தி உண்டு.நான் தினமும் தவறாம என் வூட்டு கிட்டே இருந்த முருகன் கோவிலுக்குப் போய் அங்கே இருந்த முரூகப் பெருமானை நல்லா வேண்டிக் கிட்டு அந்த குருக்கள் குடுக்கும் திரு நீரை என் நெத்தியிலெ இட்டு கிட்டு வருவேன்.இதை தவிர நான் எந்த வேலை செய்வதறகு முன்னாலும்,அந்த முருகப் பெருமானை நல்லா வேண்டி கிட்டு தான் செஞ்சு வந்தேன்.

எனக்கு பதிமூனு வயசு ஆகும் போது என் மார்பின் வளர்ச்சி கொஞ்சம் அதிகமாக ஆகி வந்தது அப்போது நான் எட்டாவது படிச்சு கிட்டு இருந்தேன்.என் அப்பா காத்தாலெ ஏழு மணிக்கு வேலை க்கு போனால் வூட்டுக்கு வர ராத்திரி எட்டு மணி ஆவும்.என்னை அடிக்கடி கிட்டத்திலெ என்னை பாத்து வந்த என் அம்மா ‘இதை’ பத்தி என்னை அடிக்கடி கேட்டு கிட்டு வந்தாங்க.நான் பதில் சொல்ல தெரியாம முழிச்சேன்.அவங்களுக்கு புரிஞ்சு இருக்கும் போல இருக்கு.அவங்க உடனே என்னைப் பாத்து “ராதா,நீ இனிமே போட்டு கிட்டு வரும் ‘ஷர்ட்டுங்களே’ போட்டு கிட்டு வர வேணாம்.நான் தர ஷர்ட்டுங்களே மட்டும் போட்டு கிட்டு வா”என்று சொல்லி ரொம்ப பொ¢ய என் அப்பா ‘சைஸ்’ ஷர்ட்டுங்களே கொடுத்தாங்க.நான் அந்த ஷர்ட்டுங்களே கையிலே வாங்கி பார்த்தேன். எனக்கு தூக்கி வாறிப் போட்டது.

என் அப்பா தொப்பையும் தொந்தியும் நல்ல பெரிய உருவம்.நான் என் அம்மா கிட்டே ஒன்னும் சொல்லாம “சரி”ன்னு சொல்லி விட்டு அந்த ‘ஷர்ட்டுங்களே’ தினமும் போட்டு கிட்டு வந்தேன். அந்த ‘ஷ்ர்ட்டுங்க’ எல்லாம் என் உடம்புக்கு ரொம்ப பெரிசாவே இருந்திச்சு.கூடவே என் அம்மா “டேய் ராதா, நீ எப்பவும் கூடிய வரைக்கும் உன் ரெண்டு கைங்களையும் கட்டி கிட்டே மத்தவங்க கிட்டே பேசி வா” என்று சொன்னாங்க.நான் அதுக்கும் “சரிம்மா”ன்னு சொல்லி விட்டு அவங்க சொன்னா மாதிரியே பள்ளி கூடத்திலெ செஞ்சு வந்து கிட்டு இருந்தேன்.

ஆனா என் ‘·ப்ரெண்ட்ஸ்’ நான் செய்வதை பாத்து ரொம்ப கலாட்டா பண்ணீ வந்தாங்க. “ஏண்டா ராதா,எப்பவும் என்னமோ கையை கட்டிக் கிட்டு ஒரு வேலைகாரன் போல பேசறே. ஒரு ஆம்பிளை பையன் போல நெஞ்சை நிமித்தி கம்பீரமா பேசேண்டா” ன்னு கிண்டல் பண்ணுவாங்க. என் கூட படிச்சு வந்த பொம்பளை பிள்ளங்க என்னை ஒரு மாதிரி பாத்து நமுட்டு சிரிப்பு சிரிச்சு கிட்டு வந்தாங்க.எனக்கு என்னவோ போல இருந்திச்சு.நான் ரொம்ப வருத்தத்தோடு பள்ளிக்கு போய் வந்து கிட்டு இருந்தேன்.கால் ஆண்டு பரிக்ஷயிலே நான் ரொம்ப நல்ல மார்க் வாங்கி இருந்தேன்.

பள்ளியில் அரை ஆண்டு லீவு விட்டார்கள்.

என் அம்மா என்னை அடிக்கடி பாத்து கிட்டு வந்தாங்க.என்னவோ அடிக்கடி என்னை என் அம்மா அழைச்சு என்னை நான் போட்டு இருக்கிற ஷர்ட்டை கழட்டி பார்த்து கிட்டு இருந்தாங்க. எனக்கு என்னவோ போல இருந்திச்சு.அம்மாவும் அப்பாவும் தனிமையிலெ என் உடம்பு வளர்ச்சியை பத்தி பேசி வந்து இருப்பாங்க போல எனக்கு மனசிலே பட்டிச்சு.நான் அதை பத்தி ஒன்னும் கேக்காம ‘எப்படா இந்த லீவு முடியும் நாம மறுபடியும் பள்ளிக்கு போய் படிச்சு வரலாம்’ன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் பாட புத்தகங்களை நல்லா படிச்சு வந்தேன்.

ஒரு வழியாக அரை ஆண்டு லீவு முடிஞ்சது. நான் பள்ளிக்கு போக என்னை தயார் பண்ணி கிட்டு இருந்தேன்.என் அம்மா “ராதா,நீ இனிமே பள்ளிக்கு போக வேணாம். சமையல் வேலை,மீதி நேரத்திலெ இந்த தையல் வேலே எல்லாம் செஞ்சு வரதாலே,எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. அதனால்லே நீ சேகரையும்,ரமாவையும்,பள்ளி கூடம் கொண்டு போய் விட்டுட்டு,அங்கேயே இருந்து அவங்க பள்ளி கூடம் விட்டவுடனே வூட்டுக்கு இட்டு கிட்டு வா” என்று சொல்லி விட்டாங்க.

எனக்கு தலை மேலே இடி விழுந்தது போல இருந்திச்சு.நான் எவ்வளவோ என் அம்மா கிட்டே ‘எனக்கு பள்ளிக்கு போய் படிச்சு வர ரொம்ப ஆசையா இருக்குது’ன்னு சொல்லியும் அவங்க என்னை பள்ளி கூடம் நிச்சியமா போவக் கூடாதுன்னு சொல்லி விட்டாங்க.இது போதாதுன்னு என்னை பாவா டை தாவணி போட்டு கிட்டு தான் வெளியே போவணுன்னு கட்டாய படுத்தி என்னை போட வச் சாங்க.நானும் வேறே வழி ஒன்னும் தெரியாம அவங்க சொன்னதைப் போல செஞ்சு வந்தேன்.என் குரல் கொஞ்சம் கட்டையாக இருந்ததால் நான் எலோர் கிட்டேயும் ரொம்ப மெதுவாக தான் பேசி வந்தேன்.அது வரைக்கும் நான் தினமும் மனதார கடவுளை வேண்டி வந்தவன்.இப்போது என் மனம் ‘என் படிப்பை இப்படி பாதியிலெயே நிக்க வச்சுட்டயே’ன்னு மனம் உடைஞ்சு நான் தினமும் வேண்டி வந்த கடவுளை நல்லா திட்டினேன்.

எல்லா சித்திரை மாசமும் மதுரை தமுக்கம் மைதானத்திலே பெரிய அளவில் “சித்திரை திருவிழா” நடக்கும்.வருஷா வருஷம் எங்க அம்மா,அப்பா, நான்,மூனு பேரும்,என் தம்பி தங்கைங்க பொறந்த பிறகு நாங்க ஐஞ்சு பேரும் தவறாம அந்த திரு விழாவுக்கு போய் வருவோம்.

இந்த வருஷமும் நாங்க எல்லோரும் அந்த திரு விழாவுக்கு கிளம்பிப் போனோம்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.திரு விழாவிலே என் அம்மா என்னைப் பாத்து “ராதா,நீ அந்த ரங்கராட்டினத்திலே ஆடி கிட்டு இரு.நான் சேகரையும்,ரமாவையும் அழைச்சு கிட்டு அவங்களுக்கு பிடிச்ச பலூனை வாங்கிக் கொடுத்துட்டு வந்து,உன்னை இட்டு கிட்டுபோறேன்” என்று சொன்னாங்க. நானும் ரங்க ராட்டினம் ஆடற சந்தோஷத்திலெ “சரிம்மா நான் ரங்க ராட்டினம் ஆடி கிட்டு இருக்கேன் நீங்க சேகருக்கும் ரமாவுக்கும் பலூன் வாங்கி குடுத்து விட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டு ரங்க ராட்டினத்திலெ ஏறி கிட்டேன்.ரங்க ராட்டினத்தை சுத்த ஆரம்பிச்சாங்க.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.நான் சந்தோஷமாக ரங்க ராட்டினம் ஆடி வந்தேன்.பதினைஞ்சு ரவுண்டு முடிஞ்ச தும் ரங்க ராட்டினத்தை அதை சுத்தி கிட்ட இருந்தவர் மெதுவாக சுத்தி,அது நல்லா நின்னவுடன் நாங்க ஒருவர் ஒருவராக கீழெ இறங்கினோம். நான் இறங்கி நின்னு கிட்டு இருந்தேன்.

ஒரு மணி’ ,‘ரெண்டு மணி’, ‘மூனு மணி’நேரம் ஆகியும் என் அம்மா அப்பா வரலெ.நான் பயந்து போனேன்.எனக்கு என்ன செய்றதுன்னு புரியலே.எனக்கு அழுகை அழுகையா வந்திச்சு. கொஞ்ச நேரம் ஆனதும் நான் புரிஞ்சி கிட்டேன்.என் அம்மா அப்பா ‘என்னை அவங்க வூட்லே வச்சுக்க பிடிக்காம இந்த திரு விழாவிலே வுட்டுட்டு அவங்க சோழ வந்தான் போயிட்டு இருப்பாங்க’ ன்னு முடிவு பண்ணேன்.கொஞ்ச நேரம் அழுது முடிச்ச பிறவு யோசனை செஞ்சேன்.

வூட்டுக்கு போவ என் கிட்ட காலணா கூட இல்லே.அப்படியே நான் போனா கூட அவங்க என்னை அவங்க வுட்லே வச்சுக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா விளங்கிடிச்சு.நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.‘இப்படியே எங்காச்சும் போய் நாம பிழைச்சு கிடணும்’ ன்னு நினைச்சு திரு விழாவை விட்டு வெளியே வந்தேன்.எதிரே ஒரு பெரிய மாதா கோவில் தெரிஞ்ச்சிச்சு.’எப்படியாச்சும் அவங்க நம்பற மாதிரி ஒரு பொய்யை சொல்லி அங்கெயே தங்கிடணும்’என்று தீர்மானம் பண்ணேன்.

அந்த மாதா கோவிலுக்கு போய் மெல்ல உள்ளே நுழைந்தேன்.என் கண் எதிரே ஒரு முழு நீள வெளை கவுனை அணிந்துக் கொண்டு ஒரு அம்மா போய் கிட்டு இருந்தாங்க.அவங்க கழுத்திலே வெள்ளியினால் ஆன ஒரு பொ¢ய சிலுவை தொங்கி கிட்டு இருந்திச்சு.நான் மெல்ல அவங்களெ பாத்து “சிஸ்டர் என் ஊர் சோழவந்தான்.என் அப்பா ஒரு தச்சரா வேலை செஞ்சு கிட்டு வறார்.என் அம்மா ஒரு சித்தாளா வேலை செஞ்சு கிட்டு வறாங்க.ரெண்டு பேரும் வூட்லே இல்லாத போது என் தாய் மாமன் குடிச்சு விட்டு என் கிட்ட ‘விஷமம்’ பண்ண அடிக்கடி வறாரு.மூனு தடவையா ஏதோ கையிலே இருந்த சாமானை அவர் மேலெ விட்டு ஏறிஞ்சிட்டு,வூட்டை விட்டு வெளியே ஓடியாந்து ட்டேன்.இந்த விஷயத்தே அம்மா வூட்டுக்கு வந்தவுடன் சொன்னேன்.அதுக்கு அவங்க கொஞ்சம் கூட கவலைப் படாம ‘அவன் உன் தாய் மாமன் தானே.அதிலெ ஒன்னு தப்பு இல்லே’ன்னு சொல்லி என் வாயை மூட வச்சுட்டாங்க.அந்த குடிகாரன் மாமனை எனக்கு சுத்தமா பிடிக்கலைங்க.நான் வூட்டை விட்டு ஓடியாந்திட்டேன்.நீங்க தான் எப்படியாச்சும் எனக்கு உதவி பண்ணனும்ங்க” என்று பொய்யே சொல்லி அவங்க கால்லெ விழுந்து அழுதேன்.

உடனே அந்த சிஸ்டர் அவங்க மேலிடத்திலெ என் சோகக் கதையை சொல்லி அப்புறமா என்னை அந்த சர்ச்சிலே பெருக்கி துடைக்கும் வேலைக்கு சேர்த்து கிட்டாங்க.அன்னையிலெ இருந்து நானும் அந்த் சர்ச்சிலே அந்த வேலை செஞ்சு வந்து கிட்டு இருதேன்.அப்போதில் இருந்து நான் ‘கடவுள் ஜீஸசை’ தவறாம வணங்கி வந்தேன்.எப்படியாவது அவர் அருளினால் இங்கெயே என் வாழ் நாள் பூராவும் இருந்து கிட்டு வரணும்ன்னு ஆசைப் பட்டேன்.

ஆனா வாழ்க்கையிலே ஒரு கலெக்டராகவோ,டாக்டராகவோ, இஞ்சினியராகவோ, ஆவணும் ன்னு ரொம்ப ஆசை பட்ட எனக்கு ஒரு பெருக்கும் வேலை கிடைச்சதை எண்ணி நான் ரொம்ப வருத்தப் பட்டு கிட்டு இருந்தேன்.’என் கை எழுத்து நல்லா இருந்து என்ன,நான் ரொம்ப புத்திசாலியா இருந்து என்ன,என் தலை எழுத்து சரியா இல்லையே’ ன்னு நினைச்சு அடிக்கடி அழுதுகிட்டு இருந்தேன்.

ஒரு நாள் என்னை கடைத் தெருவுக்குப் போய் ஏதோ சாமான் வாங்கியாற சொன்னாங்க.நான் உடனே கடைத் தெருவுக்குப் போய் அவங்க சொன்ன சாமானை வாங்கி கிட்டு இருக்கும் போது ஒரு நாலைஞ்சு ‘பொண்ணுங்க’ ஆம்பிளை குரல்லே பாட்டு பாடி விட்டு,கடைக்காரர் கிட்டே “ஏதாச்சும் பணம் குடுங்க.நாங்க உங்களுக்கு ‘டான்ஸ்’ கூட ஆடி காட்டரோம்ன்னு” சொல்லி விட்டு நாலு பேரும் ‘டான்ஸ்’ ஆடி காட்டி கிட்டு இருந்தாங்க.அந்த கடைக்காரர் அவங்களுக்கு கொஞ்சம் பணம் குடுத்து விட்டு “இனிமே இந்த பக்கமெ வராதீங்க” என்று சொல்லி விரட்டினார்.ஆனால் அந்த பொண்ணுங்க “அப்படி சொல்லாதீங்க. நீங்க இப்படி எல்லாம் ஏதாச்சும் பணம் குடுத்தா தாங்க நாங்க கால் வயிராவது ஏதாச்சும் சாப்பிட முடியும்” என்று சொல்லி விட்டு ஓயிலாக நடந்து அடுத்த கடைக்குப் போனாங்க.

‘நானும் இவங்க மாதிரி தானே.ஏதோ போன ஜென்மத்திலெ பண்ண புண்ணீயம், நாம ‘சர்ச்சிலே’ கண்ணியமாக இருந்து வரோம்’ என்று நினைத்து மறுபடியும் கடவுள் ஜீஸசுக்கு என் மனமார்ந்த நன்றியை சொன்னேன்.நான் சாமானை வாங்கி கிட்டு வழி நெடுக அந்த பொம்பளைங்க ளையும், அவங்க ‘டான்ஸ்’ஆடினத்தையும்,பணம் கிடைச்சவுடனே அவங்க சொன்னதையும் நினைச்சு பாத்து கிட்டே ‘சர்ச்சுக்கு’ வந்து நான் வாங்கியாந்த சாமானை சிஸ்டர் கிட்டே குடுத்து விட்டு என் வேலையை கவனிக்கப் போனேன்.

ஒரு வருஷம் கூட ஆகி இருக்காது.

என் கூட வேலை செஞ்சு கிட்ட வந்த ஒரு பொம்பளே என்னை பத்தின “விவரத்தை” சிஸ்டர் கிட்டே சொல்லி விட்டாங்க.உடனே அந்த சிஸ்டர் என்னை கூப்பிட்டு “நீ எங்க கிட்டே ஒரு பெரிய பொய்யே சொல்லி இங்கே தங்கி இருக்கே. உன் முழு “விவரம்” எங்களுக்கு இப்போ தெரிஞ்சு போச்சு. நீ இனிமெ இங்கு இருக்க லாயகில்லை. வேறே எங்காச்சும் போய் பிழைச்சுக்கோ” என்று சொல்லி என்னை ‘சர்ச்சில்’ இருந்து விரட்டி விட்டாங்க.

அன்னியிலெ இருந்து ‘என்னை அந்த சர்ச்சிலே இருக்க விடாம, இப்படி வெளியிலெ துரத்தி விட்ட கடவுள் ஜீஸசை நல்லா திட்டினேன்.

சர்ச்சில் இருந்த என் துணிமணிகளை எல்லாம் எடுத்து கிட்டு சர்ச்சை விட்டு வெளி உலகத் துக்கு வந்தேன்.எனக்கு என்ன பண்ணுவது,எங்கெ போவது,ன்னு ஒன்றும் புரியலெ.என் கண் எதிரி லெ ஒரு பெருமாள் கோவில் தென்பட்டுச்சீ.அங்கெ போய் அங்கெ இருந்த ஒரு பட்டர் கிட்டே என் கதையை வேறு விதமா ஒரு ‘பொய்யை’ சொல்லி அவர் அனுதாபத்தை மெல்ல வாங்கி அங்கெ பத்து பாத்திரம் தேய்க்கும் ஒரு வேலையை வாங்கி கிட்டு, கொவில்லே குடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு கிட்டு என் வயத்தை கழுவி கிட்டு வந்தேன்.

நான் தினமும் அந்த இருந்த வெங்கடேசப் பெருமாளை தவறாம வேண்டி கிட்டு வந்தேன்.

‘பெருமாளே எப்படியாவது என்னை இங்கெயே என் வாழ் நாள் பூராவும் இருந்து வர வழி பண்ணு. என்னை மறுபடியும் எங்கெயும் வெளியே துரத்தி விடாதே’ன்னு வேண்டி கிட்டு வந்தேன். ஆனா ரெண்டு மாசம் கழிச்சு இங்கெயும் என் கூட பத்து தேய்க்கும் ஒரு பொம்பளே என் உடல் ‘விஷயத்தே’ பட்டர் கிட்டே சொல்லி விட்டாங்க. உடனே அந்த பட்டர் என்னை கூப்பிட்டு “உன்னே மாதிரி ‘ரெண்டாங்கட்டானை’ நான் இந்த கோவிலிலே வச்சுண்டு இருக்கக் கூடாது. அது ரொம்ப தப்பு. நீ வேறே எங்கேயாவது வெளியெ போய் பிழைச்சுக்கோ, உடனே இங்கு இருந்து போ“ன்னு சொல்லி என்னை வெளியே அனுப்பி விட்டாரு.

நான் மிகவும் மனம் நொந்து அந்த பெருமாளை திட்டினேன்.

பெருமாள் கோவிலை விட்டு மனம் உடைஞ்சு போய் கொஞ்ச தூரத்தில் தெரிஞ்ச ‘பார்க்கை’ நோக்கி போனேன்.அங்கே காலியாக இருந்த ஒரு சிமெண்ட் ‘பென்ச்சில்’ உக்காந்து கிட்டேன் எனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நினைச்சு அழுது கிட்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு அன்னைக்கு கடை வீதியிலெ பாட்டு பாடி கிட்டு ‘டான்ஸ்’ ஆடி கிட்டு இருந்த ‘பொண்னுங்க’ ரெண்டு சிமெண்ட் ‘பென்ச்’ தள்ளி ஒரு ‘பென்சிலெ’ வந்து குந்தி கிட்டாங்க. அவங்க அன்னைக்கு கடை வீதியிலே கிடைச்ச பணத்தை பங்கு போட்டு கிட்டு இருந்தாங்க.’நமக்கு வெளி உலகத்திலெ கண்ணியமா வாழ்ந்து வர ஒரு வழியும் தெரியலேயே. ஆனா எப்படியாவது இந்த உலகத்திலே நாம வாழ்ந்து வரணுமே’ ன்னு யோஜனை பண்ணி விட்டு மெல்ல அவங்க கிட்டே போய் “நானும் ‘உங்க மாதிரி’ தாங்க. என்னையும் உங்க கூட கொஞ்சம் சேத்துக்கிறீங்களா” ன்னு மெதுவாக கெஞ்சி கேட்டேன்.

அதில் இருந்த தலைவி உடனே என்னைப் பாத்து “இதோடா புதுசா வந்து இருக்கிற கிராக்கி” என்று சொன்னவுடன் மத்த ‘பொண்னுங்க’ கையை கொட்டி சிரிக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு என்னவோ போல இருந்திச்சு.நான் பொறுத்து கிட்டு,சும்மா நின்னு கிட்டு இருந்தேன்.

கொஞ்சம் நேரம் யோஜனைப் பண்ணீன அந்த தலைவி “இதோ பாரு.எங்க கூட சேரணும் ன்னா நான் ‘சொல்றதை’ எல்லாம் நீ செய்யணும். இங்கெ சேந்து கிட்டு அப்புறமா நான் ‘இதை செய்ய மாட்டேன்’ ‘அதை செய்ய மாட்டேன்னு’ எல்லாம் சொல்லக் கூடாது, புறிதா” என்று மிகவும் கண்டிப்பான குரலில் சொன்னாள்.

நான் வேறு வழி ஒன்னும் இல்லாம அந்த தலைவி சொன்னதை ஒத்துக் கிட்டேன். அன்னை யிலே இருந்து அவங்க “சொன்னதை” எல்லாம் செஞ்சு கிட்டு கேவலமான ஒரு வாழ்க்கையே வாழ்ந்து கிட்டு வந்து கிட்டு இருந்தேன். அந்த தலைவி வாங்கி படிச்ச தமிழ் பேப்பரை, அவங்க படிச்சுட்டு கீழே போட்ட பிறவு, நான் எடுத்து படித்தேன். எனக்கு ஆச்சரியம் தாங்கலெ. என்னை போல இருப்ப வங்க சென்னையிலே போலீஸ்லே சேர்ந்து இருக்கிற செய்தியும், கண்ணியமன வேலை செஞ்சு வருவதாயும், என்னைப் போல இருப்பவங்கஎல்லாம் ஒரு சங்கமும் நடத்தி வருவதை படிச்சசேன். அங்கே எல்லாம் போக நான் வேறும் எட்டாவது தானெ படிச்சு இருக்கேன். எனக்குன்னு என்ன வேலை கிடைக்கும். அவங்க எனக்கு என்ன வேலை வாங்கி குடுப்பாங்க. தவிர சென்னைக்குப் போக என் கிட்டே அவ்வளவு பணம் கையிலே இல்லியே’ என்று நினைக்கும் போது எனக்கு அழுகை அழுகையாக வந்திச்சு. நான் என் மனசுக்குள் அழுது தீர்த்தேன்.

எவ்வளவோ ‘நல்ல விதமாக’ வாழ்ந்து வர ஆசை பட்ட எனக்கு இந்த ‘அவல வாழ்க்கை’ ஏன் குடுத்தே. என்னை ஏன் அந்த பட்டர் ஐயா சொன்ன மாதிரி ‘ரெண்டாங்கட்டானா’ ஏன் படைச்சே’ன்னு கடவுளே நல்லா திட்டினேன். வேறே வழி இல்லாம இந்த ‘ஜான் வயத்தை’ கழுவி வர நான் அந்த தலைவி சொல்ற எல்லா ‘வேலைங்களையும்’ செஞ்சி வந்தேன்.

ஒரு நாள் அந்த தலைவி என்னையும், எனை போல அழகா இருக்கும் ஒரு ‘பொண்ணையும்’ ஒரு ‘விடுதிக்கு’ அழைச்சு கிட்டு போனாங்க. அந்த விடுதி தலைவி கிட்ட “இந்த பசங்களை நீங்க உங்க ‘தொழிலுக்கு’ வச்சுக்கங்க” என்று சொன்னவுடன் அந்த தலைவி என்னை ஏற இறங்க பாத்து ட்டு “பொண்ணு லட்டு மாதிரி இருக்காளே” ன்னு சொல்லி விட்டு என்னை பாத்து “உன் பேர் என்னம்மா” என்று கேட்டாள். நான் தயக்கப் பட்டு கிட்டே” ராதாங்க”ன்னு சொன்னேன். உடனே அந்த தலைவி “ரொம்ப நல்ல பேர் உனக்கு” என்று சொல்லி என் கன்னத்தை கிள்ளி விட்டாங்க. அப்போது எனக்கு ஒன்னும் புரியலே. நான் சும்மா நின்னு கிட்டு இருந்தேன். எனக்கு என்னவோ போல இருந்திச்சு. உடனெ அந்த விடுதி ‘தலைவி’ எங்க ‘தலைவிக்கு’ நிறைய பணம் குடுத்து அனுப்பினாங்க.

அடுத்த மூன்று நாளைக்கும் அங்கு வந்த “கஸ்டமர்களின்” பொம்மையாக, கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். விடுதிக்கு வந்த ‘கஸ்டமர்கள்’ என்னை ‘ஒரு குழந்தை தன் கையில் இருக்கும் இருக்கும் ஒரு ‘பொம்மையை’ அதன் இஷ்டம் போல இப்படியும் அப்படியும் ஆட்டி விளை யாடி வருவது போலவும்,பொம்மையின் கைகளையும் கால்ககளையும் இஷ்டப் படி ஆட்டி, மகிழ்வது போலவும்……..எனக்கு மெலே சொல்லவே பிடிக்கலே ,அவங்க இஷ்டப்படி செஞ்சு சந்தோஷப் பட்டு வந்தாங்க. நான் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். என்னை படைத்த கடவுளை மனசு வந்தது போல திட்டினேன்.என் மனதுக்குள் அழுது தீர்த்தேன்.அந்த விடுதியில் மூனு நாள் தான் நான் இருந்தேன்.

ஒரு நாள் சாயந்திரம் மணி ஆறு இருக்கும்.வாசலிலேயே குந்தி கிட்டு இருக்கும் அந்த விடுதி தலைவி ஓரு ‘பொண்ணுக்கு’ உடம்பு சரி இல்லாம இருந்ததாலே, அவங்க ரூமுக்குப் போனாங்க. நான் மெதுவா என் ரூமை விட்டு வெளியே வந்தேன். வாசலிலெ குந்தி கிட்டு இருந்த கூர்க்கா அந்த நேரம் பாத்து ‘பாத் ரூமுக்கு’ போய் இருந்தான். ’இது தான் நல்ல சமயம்ன்னு நினைச்சு நான் மெல்ல ஓசைப் படாம அந்த விடுதியை வுட்டுட்டு வெளி உலகத்துக்கு ஓடி வந்து விட்டேன். ரெக்கை முளைச்ச ஒரு பறவை போல இருந்திச்சு எனக்கு. எங்காச்சும் பறந்து போக நான் ஆசைப் பட்டேன். ஒரு முருகன் கோவிலுக்கு வந்து அவங்க குடுத்த பிரசாததை வாங்கி சாப்பிட்டேன். இரவு எங்கெ தங்குவதுன்னு நான் முழிச்சேன். நான் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து வருவதுன்னு எனக்கு புரியலே.மறுபடியும் நான் வாழ்ந்து வந்த நரக வாழ்க்கைக்கு போக எனக்கு பிடிக்கவே இல்லே. நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

மதுரை ஜங்ஷனில் இருந்து சென்னைக்கு போகும் ரயில் தண்டவாளத்தை ஒட்டியெ நடந்தேன். ஒரு பத்து கிலோ மீட்டர் நடந்து வந்து இருப்பேன். கோவில்லெ ஐயர் கொடுத்த பிரசாதம் என் வயித்தில் ஜீரணம் ஆகி மறுபடியும் பசி எடுக்க ஆரம்பிடுச்சுச்சு. இந்த ஜான் வயித்துக்கு மறு படியும் யாரு சோறு போடுவாங்க. ஒரு முடிவுக்கு வந்தவளாய் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் வந்தேன். சென்னைப் போகும் எக்ஸ்பிரஸ் வண்டி மதுரை விட்டு கிளம்பி வேகமாக வந்து கிட்டு இருந்தது.

நான் யோஜனை பண்ணவெ இல்லெ. வண்டி என் கிட்ட வர இன்னும் இருபது அடிதான் இருந்திச்சு. நான் இத்தனை நாளா வேண்டி வந்த எல்லா கடவுளையும் நல்லா வேண்டி கிட்டு தண்டவாளத்தின் நடுவிலெ கண்ணை நல்லா மூடி கிட்டு படுத்து விட்டேன். அடுத்த மூணாவது நிமிஷம் என் உடலை விட்டு என் ஆவி ஒரு பத்தடி மெலெ போய் அவ வாழ்ந்து வந்த ‘ரெண்டாங்க ட்டான்’ உடலை கீழே பார்த்தது. தண்டவாளத்துக்கு ஒரு பக்கம் என் தலை தனியாகவும், என் நடு உடல் ரெண்டு தண்ட வாளத்துக்கு நடுவிலெயும்,என் ரெண்டு கால்கள் தண்டவாளத்துக்கு அடுத்த பக்கமும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருப்பதை பாத்து ஒரு நிமிஷம் அழுதது. பிறகு மூனு துண்டாகி ரத்த வெள்ளத்திலே மொதக்கிற உடமபை பாக்க சகிக்காம என் ஆவி மெலே மெலெ போய் கிட்டு இருந்தது.எப்படியாச்சும்,எல்லா இடத்திலெயும் நல்லா தேடி பிடிச்சு,அதன் கண்லெ தென்படுகிற முருகனையோ, இல்லை ஜீஸஸையோ, இல்லை வெங்கடேச பெருருமாளையோ பாத்து ‘எனக்கு ஏன் இந்த மாதிரி ‘ரெண்டாங்கட்டான்’ உடம்பை குடுத்து ஒரு ‘அவல வாழ்க்கையே’ இத்தனை வரு ஷம் வாழ வச்சேன்னு ‘நறுக்கு’ன்னு நாலு கேள்விங்களே கேக்க என் ஆவி போய் கிட்டு இருந்திச்சு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *