ஒரு பிள்ளையாரின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 10,422 
 
 

பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது.

கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம்.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன் மன்றாடிச் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவரைக் கூட இன்று அயலில் காண முடியவில்லை.

ஓ…வென்று வானம் பார்த்த வெறுவெளி. மனிதர்கால் படாமற் போனதால் குத்துச்செடிகள் ஆங்காங்கு பூமியைப் பிளந்து வானத்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு சிறிய ஓலையால் வேய்ந்த கொட்டிலில் பிள்ளையார் வெயிலையும் மழையையும் தன்னிச்சையாய் அனுபவித்தபடி விழித்துக் கொண்டிருந்தார். முன்னால் போடப்பட்ட திரைச்சீலை காற்றில் அலைந்து ஒதுங்கிக்கிடக்க, ஏ-9 வீதியால் செல்கின்ற பேருந்துகளையும் பயணிகளையும் பிள்ளையார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த்தார்.

ஆம்.பிள்ளையாரின் வசிப்பிடம் கண்டி வீதிக்கு அண்மையிற்தான். கைதடியில் பனைவள ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள பெரியவளவின் ஒரு ஓரத்தில்தான் உட்கார்ந்திருக்கிறார் பிள்ளையார். சின்னதாய்ச் சுவர் எழுப்பி மூன்று பக்கங்களையும் மறைத்து, செங்கட்டிச் சிவப்பிலும் வெண்மையிலுமென வரிவரியான வர்ணம் தீட்டி அந்தக் குட்டி இடம் ஆலயமாக்கப்பட விளைந்த ஆர்வத்தின் வெளிப்பாட்டை காட்டியது. முன்னே திரைச்சீலை விலகலினூடு பிள்ளையாருக்கு அவ்வப்போது வெளியுலக தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது.

பிள்ளையார் அங்கு ஆலயம் கொண்ட கதை சுவாரசியமானது. ஆலயங்கள் உருவாகுவதற்கு வரலாறுகள் இருக்கும். இங்கேயும் அப்படித்தான். கூட்டம் கூட்டமாக வாழ்பவர்கள் தமக்கென்று நம்பிக்கை ஊட்டவும், மகிழ்வையும், துக்கத்தையும் பகிரவும் சிறு சிறு குழுக்களிடையே இவ்வாறு ஆலயங்களை உருவாக்கிக் கொண்டமை வரலாறு. கோவில் இல்ல ஊரில் யாரும் குடியிருக்கவும் மாட்டார்கள். ஆனால்,கோவில் இருந்த ஊர்களில் வசித்தவர்கள் கூட குடி எழும்ப வேண்டியதாயிற்று. போர் விரட்ட விரட்ட அவர்கள் கோவிலென நினைத்த சொந்த மண்ணைவிட்டு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்தலின் முடிவில் கூட்டம் கூட்டமாய் சிறுசிறு நிலப்பகுதிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள். ஒருநாள், இருநாள் என மாறி வாரங்கள் கழிந்து, மாதங்களான போது பொறுக்க மாட்டாமல் அவர்கள் கேட்டே விட்டார்கள்.

‘சாப்பாடுவேண்டும்’, ‘தண்ணீர்வேண்டும்’, ‘மருந்துவேண்டும்’ எனக்கேட்டவர்கள் ஒருநாள் கேட்டார்கள். ‘எங்களுக்குக் கடவுள் வேண்டும்’, ‘கோவில் வேண்டும்’ என்று. தொடர்ச்சியான அவர்களின் வேண்டுகைக்குப் பிறகு பிள்ளையார் அங்கு எடுத்து வரப்பட்டார். சுற்றி வரச்சின்னச்சுவர் எழுப்பி, வர்ணமடித்து கூரை எழுப்பி, மணியொலிக்க அந்தச் சனங்களுக்கு அருள் பாலிக்கவென்று எழுந்தருளினார்.

மற்றையகடவுளரைவிடப்பிள்ளையார்மிகஇலேசானவர்.எங்கேயாவதுஒருமரமோ,கல்லோஇருந்துவிட்டால்போதும்.அடியார்களின்வசதிக்கேற்ப,அவ்வவ்இடங்களில்குடியிருக்கஆரம்பித்துவிடுவார்.ஆலடி,அரசடிஎன்றுஎங்கெங்குமரம்இருக்கின்றதோஅங்கெல்லாம்இந்தவிக்னவினாயகர்அமர்ந்திருப்பதைக்காணலாம்.ஆனால்,அப்படிமரங்களுக்குக்கீழ்அமர்ந்திருக்கின்றபிள்ளையார்கள்நீண்டகாலச்சரித்திரத்திற்குள் உட்படக்கூடியசாத்தியம்குறைவு.அப்படித்தான்இருவருடத்திற்குமுன்ஏற்பட்டநிஷாபுயலிலும்அதிகப்பிள்ளையார்கள்அடையாளம்இல்லாமல்போனார்கள்.நுணாவில்பகுதியில்
வீதியோரம்மருதமரத்தின்கீழ்சிறியதொருகோபுரஅறைக்குள்அருள்பாலித்துக்கொண்டிருந்தபிள்ளையார்,அப்படியேஅந்தப்புயலில்சிக்கி,பிடரிஅடிபட்டதுபோல்மல்லாந்துவிழுந்துகிடந்தார்.இரண்டு,மூன்றுநாட்களுக்குள்அவரைஅவரதுபக்தகோடிகள்நிமிர்த்திவிட்டார்கள். வெள்ளத்துக்குள்உடைமைகள்இழந்துதவித்துக்கொண்டிருந்தஏழை,எளியவர்கள்இழந்தவற்றைமீளப்பெறுவதற்கிடையில்பிள்ளையாரின்பக்தகோடிகள்திரும்பவும்சுவர்எழுப்பிகோபுரமாக்கிகம்பிக்கதவுவைத்துஅவரைஉள்ளேஅமர்த்திவிட்டார்கள்.அங்குவிடிகாலையில்எப்போதும் ‘செம்பரத்தம்பூ’ கிடைத்துக்கொண்டிருந்ததுபிள்ளையாருக்கு.

இங்கென்றால்பிள்ளையார்வறண்டுபோய்க்கிடந்தார்.சிறுபூ,தீர்த்தம்எதுவும்கிடையாது.வெயிலிலும்காய்ந்து,மழையிலும்அபிஷேகம்கண்டுஆனந்தம்கண்டுகொண்டிருந்தார்.எப்போதேனும்வீசுகின்றகாற்றில்எற்றுப்படுகின்றசருகுகளேஅவர்முன்பூக்கள்போலவிழுந்துகொண்டிருந்தன.ஒருதீபம்…வெளிச்சம்…ம்ஹும்…எதுவும்இல்லை.கற்பூரவாசம்,ஊதுபத்தி,சந்தனம்,குங்குமம்,விபூதிஇவற்றின்கலவை
மணங்கண்டுரொம்பவேநாளாயிற்று.

நிறையவர்ணங்கள்பூசிய,மூன்றடியில்நிமிர்ந்திருக்கும்அந்தநுணாவில்பிள்ளையாருக்கும்,கன்னங்கரேல்என்றிருக்கும்இந்தக்குட்டிப்பிள்ளையாருக்கும்தான்எத்துணைவித்தியாசம்?இவருக்கும்எண்ணெய்கிடைத்திருந்தால்கறுப்பென்றாலும் ‘பளபள’வென்றுஇருந்திருக்கலாம்.முன்பென்றால்ஆட்கள்சூழஇருந்தபோதுபரவாயில்லை.பிச்சைக்காரன்தனக்குக்கிடைப்பதில் ‘சொச்சத்தை’த்தன்பின்னேஒட்டித்திரியும்நாய்க்dகுப்போடுவதுபோல்,அவர்களும்தமக்குஎதுவும்இல்லாவிட்டாலும் தங்கள்நிலைக்கேற்றாற்போல்பிள்ளையாரையும்அவ்வப்போது
கவனித்துக்கொண்டார்கள்.பிச்சைக்காரன்வசதிகிடைத்துப்போய்விட்டதுபோலஅவரோடுஇருந்தவர்கள்,இப்போதுதமக்குஉரித்தானஏதோஒருஇடத்துக்குப்போய்விட்டார்கள்.அவர்கள்இடம்பெயர்ந்துவந்தபோதுஅவர்களுக்காகஇங்குகுடிவந்தவர்தானேபிள்ளையார்.அவரவர்தங்கள்,தங்கள் இடத்துக்குப்போகமுடியாவிட்டாலும்ஏதோஒருஇடத்திற்குப்போனபிறகுபிள்ளையார்இப்படித்தான்தனியேவிடப்பட்டார்.

‘சுள்’ளென்றுவெயில்எரித்தது.அனல்தகிக்கும்வெயிலைஇப்போதுதான்அதிகமாய்உணரமுடிகிறதுபிள்ளையாருக்கு.முன்புவெயிலாய்இருந்தாலும்ஆட்பஞ்சம்இருக்காது.மாறிமாறியாராவதுவந்துகொண்டேயிருப்பார்கள்.அப்படிப்பிள்ளையாரையாரும்தனியேவிட்டுவிட்டாலும்கூடஅவருக்குப் பொழுதுபோக்கிற்குப்பஞ்சம்
இருக்காது.

எந்தக்கிராமத்திலுள்ளகோவிலிலும் இப்படி நிறைந்தசனம்திருவிழாக்காலத்திலன்றிஒருபோதும்கூடியிருக்காது.அந்தவிதத்தில்இந்தப்பிள்ளையாரைச்சுற்றிஎப்போதுமேகலகலவென்றுஒரேகூட்டம்.எப்போதும்ஆரவாரித்திருக்கும்அவ்விடம்அந்தநாட்களில்
முட்கம்பிகளால்சுற்றிவரவளையமிடப்பட்டிருந்தது.யாரும்வெளியேபோகமுடியாது.

உள்ளேயாராவது
வெளிஆட்கள்வரவேண்டிஇருந்தாலும்,உரியஅனுமதிஎடுக்கப்பட்டேவரமுடிந்தது.சிலபெரிய ‘தலைகள்’
இலகுவில்வந்துபோகமுடிந்ததுஎன்பதுவேறுவிடயம்.ஆனால்,பிள்ளையார்அங்குவந்துகுடிஏறுவதற்கேவிசேடஅனுமதிஎடுக்கவேண்டிஇருந்தது.எப்படியோமிகுந்தசிரமப்பாடுகளுக்குஅப்பால்அங்குகுடிவந்தபிள்ளையாருக்குஆரம்பத்தில்அங்குஇருந்தால்பைத்தியம்பிடித்துவிடும்போலவேதோன்றிற்று.ஏனெனில்ஒவ்வொருவரதுபுலம்பலும்அப்படி.

“பிள்ளையாரப்பா…உன்னைமட்டும்தானையப்பா,கடைசிவரைக்கும்நம்பிஇருந்தன்.என்ரைபிள்ளையை என்ரைகண்ணுக்குமுன்னாலைசிதறவைச்சிட்டியேப்பா…”

அதுசீதேவிப்பாட்டிஅழுதஅழுகை.இராமநாதபுரத்தில்இருந்தபிள்ளையாரோடுசீதேவிப்பட்டிவலுசிநேகம்.

எல்லாப்பிள்ளைகளையும்கரைசேர்த்தபிறகுதனதுவலதுகுறைந்தவாய்பேசமாட்டாதமுப்பதுவயதுமகனைக்காப்பாற்றுமாறுசீதேவிப்பாட்டிஎத்தனையோமுறைபிள்ளையாரைஇறைஞ்சியிருக்கிறாள்.

“அதுபாவம்,வாயில்லாதபூச்சி,அந்தச்சீவனைஎடுத்துப்போட்டியேப்பா…” பிள்ளையார்மௌனித்துப்போயிருந்தார்.சீதேவியின்கேள்வியில்நியாயம்இருந்தது.ஆனால்கர்மவினை…

“கர்மவினைஎண்டால்அங்கைசெத்தஎல்லாருக்கும்ஒரே
கர்மவினைதானோ…? நீஎன்னவிசர்க்கதைகதைக்கிறாய்…?

பாட்டிஉரிமைகொண்டுகுரல்உயர்த்திவிடுவாள்.அதனால்பிள்ளையார்எதற்கும்பதில்சொல்வதில்லை.

ஒவ்வொருவர்திருப்திக்கும்பதில்சொல்லவெளிக்கிட்டால்அதுகடைசியில்வாதப்பிரதிவாதமாகி அதன்காரணத்தால்அவர்கள்பிள்ளையாரைஅப்படியேபெயர்த்துப்போய்அப்பால்வீசிவிடவும்கூடும்.அதனால்பிள்ளையார்பேசாமலேஇருந்தார்.அத்தனைபேரின்அழுகையையும்காதில்வாங்கிக்கொண்டு.

ரதிமலரும் நாளும்பொழுதும் பிள்ளையாரின்காலடியிலேயேவந்துஉட்கார்வாள்.அவளும்,தேசிகனும்சுதந்திரபுரத்திலேசேர்ந்துவாழ்ந்ததுஐந்தாறுமாதங்கள்தான்.அதற்குள்சண்டைவலுத்துவிட்டது.எப்படியோ,ஷெல்லுக்கும்,குண்டுக்கும்இடையில்தவழ்ந்து,தவழ்ந்துவெளியேறிவிட்டார்கள்.அவர்கள்இயக்கத்தில்பயிற்சிஎடுத்தவர்கள்தான்.அப்போதுஅங்கேவாழ்ந்தவர்களில்யார்தான்பயிற்சிஎடுக்கவில்லை.யாரோகாடிக்கொடுத்ததன்பலன்,அவனைத்தடுப்புமுகாமுக்குஅனுப்பிவிட்டார்கள்.அவள்கதறக்கதற,அவனைவிட்டுவிடுமாறுகெஞ்சக்கெஞ்சவிசாரித்துவிட்டு,விட்டுவிடுவதாகக்கூறிக்கூட்டிக்கொண்டுபோனார்கள்.ஆனால்,இன்னும்விடவில்லை.இவள்இங்கேஇந்தமுகாமுக்குள்அடைபட்டுக்கிடந்தாள்.முன்பென்றால்பிள்ளையாருக்குஒருஅறுகம்புல்எடுத்துவைக்கக்கூடஅலட்சியம்காட்டுபவள்.இப்போதுநுணாவிலிலிருந்து இடையிடையேசாப்பாடுகொண்டுவரும்சித்தியிடம்பூக்கள்கொண்டுவரச்சொல்லிமாலைகட்டிப்பிள்ளையாருக்குச்சாத்துகிறாள்.

“இவ்வளவுநாளும்உன்னைநான்ஏறெடுத்துக்கூடப்பாக்கேல்லைஎண்டோ,என்ரைபுருசனைப்பிரிச்சுப்போட்டாய்…என்ரைமனிசனைவிடப்பண்ணு.நான்வெளிலைவந்தவுடனைஉனக்குநூற்றெட்டுத்தேங்காய்உடைப்பன்…”

பிள்ளையாரின்மௌனம்இன்னும்கலையாமல்இருக்கும்.

“குட்டிப்பிள்ளையாரப்பா…” மெல்லியமழலைக்குரல்ஒன்றுகேட்பதுபோலிருந்ததுபிள்ளையாருக்கு.தலையைச்சிலிர்த்துக்கொண்டுவிழித்தார்.

யாருமில்லை…

அப்படியானால்,யாருடையகுரல்அது? ஓவியா
… கூப்பிடுகிறாள்.நாலுவயசுப்பச்சைமண்.

“எனக்குஎன்ரைஅம்மாவேணும்.பிள்ளையாரப்பா….”

அங்குஇருந்தகாலத்தில்அவளும்,அவள்அக்காகாவியாவும்மனதுருகிக்கேட்டவிடயங்கள்.மனைவியும்,குழந்தையும்காயப்பட்டுஅனுராதபுரம்ஆஸ்பத்திரிக்குஅனுப்பப்பட்டுவிட,

இந்தஇருசிறிசுகளோடும்தனியேசரிக்கட்டமுடியாமல்மல்லாடும்செங்கீரன்.பாசம்நிறைந்தஅந்தப்பிள்ளைகள்,சீரும்சிறப்புமாயும்
வாழவேண்டியவயதில்
அந்தமுகாம்வாழ்வில்

உபத்திரவப்பட்டாலும்அவர்கள்பிள்ளையாரைமறக்கவில்லை.

இப்படிப்பலவிதமானகதைகளையும்கேட்டுக்கேட்டு,மனநிம்மதியைத்தொலைத்திருக்கும்பிள்ளையார்,தனதுஅடுத்ததந்தத்தையும்பிடுகிஎழுதத்தொடங்கினால்இந்தஉலகத்திற்கேஒருதுயரகாவியம்கிடைத்துவிடும்.ஆனால்,அதனால்எந்தஒருபயனும்விளைந்துவிடப்போவதில்லைஎன்பதுதெரிந்ததுபோல்பிள்ளையார்பேசாமலேஇருந்தார்.

இந்தத்துன்பதுயரங்களிலேயேஒரேயடியாய்அடிபட்டுப்போகாமல்மீளவும்தங்கள்வாழ்நிலைகளைக்கட்டிஎழுப்பும்எண்ணம்கொண்டவர்களும்அவர்களுக்குள்இருக்கத்தான்செய்தார்கள்.

“கெதியிலைவெளிலைபோடோணும்பிள்ளையாரப்பா…இந்தநரகத்திலையிருந்துவிடுதலைகொடு” என்றுவேண்டாதஆட்கள்இல்லை.எல்லாரதுஆவலும்விடுதலைஎன்றஒன்றைக்குறிப்பதாகவேஇருந்தது.ஆனால்,அவர்கள்நினைத்ததும்தான்என்ன?வெளியில்போகக்கூடியசாத்தியம்தான்வாய்க்கவில்லை.மதியம்வரைவயிற்றுப்பாட்டுக்காககூட்டுச்சமையல்நடந்துகொண்டிருப்பதுபிள்ளையாரின்கண்களில்படும்.எத்தனைகோயில்களில்அன்னதானம்வைப்பதற்கென்றுபெரியகிடாரங்களில்சமையல்செய்வதைபிள்ளையார்வேடிக்கைபார்த்திருப்பார்.அப்படித்தான்இங்கும்.ஆனால்,ஒவ்வொருநாளைக்கும்ஆட்களைமாற்றிப்போட்டுசமைத்தார்கள்.எப்போதும், கோயிலில்நடக்கும்அன்னதானங்களில்மரக்கறிவாசத்தையேஅறிந்துபழகியபிள்ளையாருக்குஇங்குபக்கத்தில்நிகழும்கூட்டுச்சமையல்வாசமாக ‘மச்சமாமிசத்’தின்வாசமும்எட்டத்தொடங்கியிருந்தது.பிள்ளையாருக்குஆரம்பத்தில்அந்தவாடைஒத்துக்கொள்ளாமலிருந்தாலும்,நாளடைவில்அந்தவாடைபழகிப்போயிற்று.முகாமில்இருக்கின்ற ‘சுப்பிரமணியஅய்யர்’ குடும்பம்தான்அதனால்கொஞ்சம்கஷ்டப்படுவதாகபிள்ளையாருக்குஒருஉறுத்தல்.’நெடியகாட்’டில்பூவைத்துப்பூசைசெய்தஅந்தஅய்யருக்குஏதாவதுஒருவிதத்தில்உதவிசெய்துவிடவேண்டும்என்றுதான்துடித்தார்.ஆனால்,எதுவுமேசெய்துவிடமுடியவில்லை.

மதியம்தாண்டிமாலைப்பொழுதானால்இளைஞர்கள்பந்தடித்துவிளையாடுவார்கள்.

“நல்லம்,நல்லம்,சாப்பிட்டுசும்மாதூங்கக்கூடாது.இப்பிடிஇருந்தாத்தான்வெளியிலைபோனாப்பிறகுநல்லவேலைசெய்யலாம்
…”

அங்கிருந்தபுலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த ‘சோமபால’ அவர்களைஊக்குவித்தபடியேசொல்லுவான்.

அடிக்கடிஅங்கிருப்பவர்களைஅவன்விசாரணைசெய்வான்.அவனதுவிசாரணைஎவ்வளவுகாலத்திற்குநீளும்என்றுஅவனுக்கேதெரியாதுஎனச்சிலஇளைஞர்கள்பெருமூச்செறிவார்கள்.

பிள்ளையார்அந்தவிளையாட்டுக்கூச்சலுக்குள்கொஞ்சம்உற்சாகம்பெறவிழைவார்.சிலவேளைகளில்பந்துஇவரதுமுற்றத்தில்விழும்.ஓடிவரும்இளைஞர்கள்சத்தமாய்ஆர்ப்பரித்துப்பந்தைப்பொறுக்கிக்கொண்டுபோவார்கள்.சிலபெரிசுகள்பிள்ளையாரின்முற்றத்தில்அமர்ந்துவிளையாட்டைஆறஅமரப்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.எல்லாக்கதைகளும்பிள்ளையார்
கேட்டுப்பழகியஒரேவிதமானகதைகளாயிருக்கும் .

பிறகு,கொஞ்சம்கொஞ்சமாய்அந்தஇடத்தில்ஆட்கள்குறையத்தொடங்கினார்கள்.அறுபது,எழுபதுஎன்றுஆட்களைஇடைக்கிடையேவந்துபெரியபேருந்துகளில்ஏற்றிக்கொண்டுபோனார்கள்.

சிலரைமுகாம்மாற்றப்போவதாய்சொன்னார்கள்.மற்றும்சிலரைவிடுவிக்கப்போவதாய்சொன்னார்கள்.

விடுவிக்கப்பட்டவர்கள்,பிள்ளையார்முன்வந்ததோப்புக்கரணம்போட்டுக்குட்டிக்கும்பிட்டுவிட்டுகுதூகலமாய்வெளியேறினார்கள்.சுதந்திரக்காற்றினைச்சுவாசிப்பதென்பதன்அர்த்தம்இதுதானோ…?

விடுவிக்கப்படாதவர்கள்வந்துமுறையிட்டார்கள்.

பிள்ளையாரால்என்னதான்செய்யமுடியும்?

பேசாதிருந்தார்.

மீண்டும்,கொஞ்சம்கொஞ்சமாய்அந்தஇடத்தில்ஆட்கள்விடப்பட்டார்கள்.ஆயிரக்கணக்கில்தங்கியிருந்தவர்கள்நூறாய்,பத்தாய்,ஒன்றாய்சுருங்கிஒருவருமேஇல்லைஎன்றாயிற்று.

முன்னேஅமைக்கப்பட்டிருந்ததற்காலிகப்பாடசாலைஒவ்வொருகுடில்குடிலாய்அகற்றப்பட்டது.இந்தமுகாமுக்குள்ளும்,ஓலைக்கூரைகளாலும்,தறப்பாள்களாலும்போர்த்தப்பட்டகுடிசைகள்ஒன்றொன்றாய்கழற்றப்பட்டன.முட்கம்பிகள்அகற்றப்பட்டன.சீருடைகள்அப்பால்போயின.

பிள்ளையாரின்குடில்அப்படியேஇருந்தது.மேல்கூரைவெயிலிலும்,மழையிலும்இற்றுப்போனது.சுவரின்கடுஞ்சிவப்புவண்ணக்கோடுகள்நிறம்மங்கித்தோன்றின.காற்றிலும்,வெயிலிலும்வெளுத்துப்போனதிரைச்சீலைஒதுங்கிஆடியது.

பிள்ளையாரைவிடுவிக்கயாரும்இல்லை.

முட்கம்பிவேலிஇல்லை.

சீருடையுடன்இராணுவத்தினர்இல்லை.

குடில்கள்கிளப்பப்பட்டஇடத்தில்மக்கள்விடுவிக்கப்பட்டுஒருவருடமானபிறகுகுத்துச்செடிகள்குபீரெனப்புறப்பட்டுஅந்தஇடத்தில்ஒருகாலத்தில்ஆயிரக்கணக்கானமக்கள்ஒருசேரக்குவிந்திருந்ததைமறைக்கமுயற்சித்துக்கொண்டிருந்தன.

வெறும்கட்டடமாகவேபலகாலமாய்வெறித்திருக்கும்பனைவளஆராய்ச்சிநிலையம்குறுங்காலக்கலகலப்போடு,மீளவும்அந்தமயானஅமைதியில்மூழ்கிக்கொண்டது.

பிள்ளையாருக்குஇப்போதுதனிச்சிறைக்குள்இருப்பதுபோலானபிரமை.

தனவலதுகுறைந்தபிள்ளையைபறித்துவிட்டதற்காகசீதேவிப்பாட்டிஎந்தப்பிள்ளையாரிடம்இப்போதுதனமனக்குறையைக்கொட்டிக்கொண்டிருக்கிறாளோதெரியாது.

தடுப்புமுகாமில்வைக்கப்பட்டிருந்தரதிமலரின்கணவன்முகாமிலிருந்துவிடுவிக்கப்பட்டுவிட்டனா? இல்லையா?அதுவும்தெரியாது.

அனுராதபுரம்ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்கெனஅனுப்பப்பட்டஓவியாவின்தாயும்,தம்பியும்சுகமாகத்திரும்பிவந்துஇவர்களோடுசேர்ந்தார்களோ…?அதுவும்தெரியவில்லை.

எல்லாவற்றையும்அறிவதற்குஊரைஒருசுற்றுச்சுற்றிவரவேண்டும்போலிருக்கிறதுபிள்ளையாருக்கு.

அவரையாரும்விடுவிக்கவுமில்லை.விடுவிக்கப்போவதுமில்லை.

தூரத்திலிருந்தகிணற்றில்நாலைந்துபெண்கள்குடத்தோடுவந்துதண்ணீர்எடுத்துக்கொண்டுபோகிறார்கள்.

கொழும்பிலிருந்து வருகின்ற பேருந்துகள்,  வீதிப்பள்ளங்களில் ஏறி இறங்கித் தயங்கி நகர்கின்றன.

பிள்ளையாரின் திரைச்சீலை ஆடி அசைகிறது.

எல்லோரையும் விடுவித்த பிள்ளையாரை விடுவிக்கப் போவது யார்…?

பிள்ளையார் எப்போதும் போல ஒன்றுமே பேசாமல் வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

-ஜனவரி 2011 ,தினக்குரல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *