மெல்ல உடைகள் விலகியது, தன்னுடைய அன்பான கணவனை மார்போடு அணைத்தாள் காவியா,அந்தநேரம் கவின் தன் இமைகளை மூடி மெல்ல தன் கடந்த கால நினைவுக்கு சென்றான்.தன் கல்லூரி நாட்களில் வகுப்புக்கு சென்ற அந்தநாள்களின் ஞாபகம் அவன் முன் காட்சிகளாக ஓடியது.
அன்று வகுப்பு அறையில் மாணவர்கள் போராட்டம் பற்றி பேசி முடிவெடுத்தனர்.டெல்லி பல்கலைகழகத்தில் கொலைசெய்யபட்ட பெஞ்சிமின் என்ற இளைஞன் சுற்று சூழல் குறித்தும் வனங்கள் அழிந்துவரும் நிலைமை பற்றி எழுதியதால் ஒரு மாபெரும் கார்பெரேட் நிறுவனமும் அரசின் அலட்சிய நிலைமையும் தெள்ளதெளிவாக வெளிகாட்டும் அவனதுமுயற்சியின் போதுதான் அவன் மேல் மறைமுக தாக்குதல் தொடர்ந்தது ,அந்த நிலை தீவிர நிலை அடையும் தருவாயில் அவன் ஒரு நாள் பல்கலைகழக வாளகத்தில் கொலை செய்யபட்டான், அவன் கொலை செய்யப்படும் இரண்டுநாள்களுக்கு முன் கவின், காவியா மற்றும் பெஞ்சிமின் கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் பேசிக்கொண்டனர்.
அப்போது பெஞ்சிமின், ‘என் அருமை நண்பர்களே நான் நாம் வாழும் பூமியின் மீது காதல் கொண்டவன் மனிதனுக்காக மட்டும் இந்த பூமி படைக்கபடுவதில்லை,ஒரு சூழல் அழியும் போது “மனிதனுடன் சேர்ந்து பலவிதமான உயிர்கள் மண்வளம் என பலவற்றையும் அழிக்கிறார்கள்”. சில உயிரினங்கள் தன் வம்சம் முடியும் தருவாயில் இருப்பதை எடுத்து கூறினான், நவீன காலத்தில் வசிக்கும் மனிதன் இவையெல்லாம் மறந்துபோய் அல்லவா இருக்கிறான், தான் வேறு! நம்மை சுற்றி உள்ளவை வேறு! என நினைக்கிறான் என்று முடித்தான் பெஞ்சிமின்.
கவின் சொன்னான், ‘நீயோ பிரான்ஸ் நாட்டு மாணவன் ,நீ போய் உங்கள் நாட்டில் மகிழ்சியாக வாழவேண்டும் பெஞ்சிமின்’ என்றான்.
காவியா சொன்னாள் பெஞ்சிமின் இங்க பாதுகாப்பு அதிகமாக இல்லை பார்த்து என்றாள்..
அதற்கு பரவாயில்லை இயற்கை அனைவருக்கும் உலகத்தின் ஒரே கொடைதான்,எங்கு சுற்று சூழல் கற்பழிக்கபட்டாலும் என் எதிர் குரல் இருக்கும் என்றான் பெஞ்சிமின்.
சிறிது டீயை உறிஞ்சிவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தனர். வகுப்பாசிரியர் டேனியல் சில சம்பாஷனைகளை செய்தார் பெஞ்சிமினிடம் ,எழுத வேண்டாம் என வாதாடினார்,பெஞ்சிமின் வகுப்பறையை புறகணித்து வெளியேறினான்.
அன்றிரவுதான் கல்லூரி வளகத்தில் பெஞ்சிமின் இறந்துகிடந்தான். பெஞ்சிமினும் கவினும் பி.எச்.டி சுற்று சுழலியல் இறுதி ஆண்டு மாணவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள்.
பெஞ்சிமின்”இந்திய சுற்றுசூழல்” குறித்த தன் ஆய்வை தொடங்கி முடியும் தருவாயில் தன் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டான் மேலும் அவன் கூறிய உணமைகள் இந்தியர்களை விட அவன் சிந்தனைகள் அனைவரையும் அச்சுறுத்தியது.அதனால் தான் என்னவோ பெஞ்சிமின் படுகொலை செய்யப்பட்டடான்.அந்த நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் பெருமளவில் பேசப்பட்டது,ஆனால் வழக்கம் போல அரசும் அதை சார்ந்தவர்களும் சரி செய்து உயிர்கொலைகள் சுயநலத்திற்காக இல்லாதது போல் காட்டி கொண்ட கபட நாடகத்தையும், உயிர்கொலைகள் சாதரணமாக மாறிவரும்”காலகட்டத்தில் நாம் பயணிக்கறோம்”என்று கவின் தன் போராட்டத்திற்கு தலைமை ஏற்று பிரச்சாரம் செய்தான் மற்றும் கல்லூரி மரியாதையுடன் பெஞ்சிமின் உடல் பிரன்சு நாட்டுக்கு செல்லும் வரை போராட்ட களத்தில் உழைத்தான்.பின்னர் கல்லூரி வளாகத்தில் பெஞ்சிமின் படத்திற்கு மாலை அணிந்துவிட்டு நடந்தார்கள்.சில நாட்களில் வகுப்பறை நோக்கி மாணவர்கள் செல்லும் நிலைக்கு தள்ளினார் பேராசிரியர் டேனியல்.
டேனியல் பெஞ்சிமின் படத்தை பார்த்து புன்முறுவல் பூத்தார் .இதை தீவிரமாக கவனித்தான் கவின்.
சிலமாதங்களுக்கு பிறகு கவினும் காவியாவும் கல்லூரி பேரசிரியர்களாக மாறி காதல் திருமணம் செய்துகொண்டனர்..
இந்த நினைவலையில் மிதந்த கவின் அந்த முழுகாட்சிகளிலும் நினைத்துகொண்டே படுக்கை அறையில் முழுவதும் திருடபட்டுவிட்டதாக உணர்ந்தான்.ஆ….காவியா என கத்தினான்.
கவின் என்ன ஆச்சு என கேட்டாள்..
ஒன்றுமில்லை என தன் விழியில் உள்ள கண்ணீரை துடைத்தான்.
காவியா கவினின் கையை எடுத்து அவள் வயிற்றில் தடவினாள்.ஆம் காவியா கற்பமாக இருந்தாள் . கவினை ஆழமாக முத்தமிட்டாள்.
போன் ஒலித்தது..
எதிர்முனையில் ஒரு குரல்..
ஹலோ கவின்…
“எஸ் ஐ ம் “கவின் என்றான்..
“புரபோசர் டேனியல் கில்டு” என்ற குரல் எதிர் முனையில் அழுத்தமாக கேட்டது..
ஓ.கே ..
நான் அப்புறமாக பேசுகிறேன் என்றான் கவின்..
கவின் காவியாவை பார்த்து புன் முறுவல் செய்தான்..
“கவியா எனிதிங் பிராபளம் என்றாள்”
கவின் நோ டியர்..
“இரண்டு உயிர்களும் தான் எனக்கு முக்கியம்” என்றான் கவின்.
கற்பமான காவியா சற்றே கவின் வார்த்தைகளை ஆழமாக யோசித்தாள்.