உனக்கும் எனக்கும் இல்லேடா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,959 
 

விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும்.

அவருக்கு நாலு சிஷ்ய கோடிகள் இருந்தார்கள்.சாஸ்திரிகள் காலக்ஷபம் முடிய ஒரு அரை மணி நேரம் இருக்கும் போது, அவர்கள் நாலு பேரும் ஒரு பொ¢ய தாம்பாளத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு,அந்த சபையிலே காலக்ஷபம் கேட்க வந்தவர்களிடம் எல்லாம் காட்டிக் கொண்டு வருவார்கள்.

காலக்ஷபப் பிரியர்கள் அவர்கள் தாம்பாளத்தில், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐந்து ரூபாய் என்று போட்டு வருவார்கள்.தாம்பாளத்தில் கொஞ்ச பணம் சேர்ந்ததும்,அந்த சிஷ்யர்கள்,கொஞ்ச பணத்தை எடுத்து அவர்கள் கொண்டு வந்து இருக்கும் ஒரு பையில் போட்டுக் கொண்டு,மறுபடியும் தாம்பாளத்தை காலக்ஷபப் பிரியர்களிடம் காட்டிக் கொண்டு போவார்கள்.

அந்த நாலு சிஷ்யர்கள் கடைசியிலே வா¢சையில் இருப்பவர்களிடம் போய்க் கொண்டு இருக்கும் போது சாஸ்திரிகள் ‘மங்களம் பாடி’ கால க்ஷபத்தை முடித்து விடுவார்.
எல்லோரும் போன பிறகு அந்த நாலு சிஷ்யர்களும்,அன்று காலக்ஷபத்தில் சேர்ந்த பணத்தை சாஸ்திரிகள் இடம் கொடுப்பார்கள்.நிறைய பணம் ‘கலெக்ஷன் ஆனாலும்,கம்மியாக ‘கலெக்ஷன் ஆனாலும் சாஸ்திரிகள் அந்த நாலு சிஷ்யர்களுக்கு, நூறு ரூபாய் மட்டும் கொடுத்து வந்தார்.

அந்த நாலு சிஷ்யர்களும் ‘சா¢ போகப் போக அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் குடுப்பார்’ என்று நீனைத்து ஒரு வருஷம் பொறுத்துப் பார்த்தர்கள்.
ஆனால் சாஸ்திரி எவ்வளவு ‘கலெக்ஷன் ஆனாலும்,அந்த நாலு சிஷ்யர்களுக்கும் அதே நூறு ரூபாய் தான் கொடுத்து வந்தார்.

கோவம் வந்த அந்த சிஷ்யர்கள்சாஸ்திரியிடம் ”நாளாக நாளாக நீங்கோ எங்களுக்கு இன்னும் பணம் கூட்டிக் குடுப்பேள்ன்னு நினைச்சோம்.ஆனா தினமும் தாமாம்பாளத்லே எவ்வளவு பணம் ‘கலெக்ஷன்‘ஆனாலும், நீங்கோ எங்களுக்கு அதே நூரூ ரூபாய் தான் தந்துண்டு இருக்கேள்.நாங்க நாளையிலே இருந்து உங்க கூட காலக்ஷபத்துக்கு வர மாட்டோம்” என்று சொன்னவுடன் சாஸ்திரி கோவம் அடைந்து “நீங்க எல்லாம் என் காலக்ஷபத்துக்கு வராட்டா என்ன.தாராளமா போய்க்கோங் கோடா.நான் நாலு புது பசங்களே அந்த வேலைக்கு வச்சுக்கறேன்” என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டார்.

சாஸ்திரி நாலு புது சிஷ்யர்களை அந்த வேலைக்கு ஏற்பாடு பண்ணீனார்.அந்த புது சிஷ்யர் களிடம் சாஸ்திரி “ நான் எல்லா காலக்ஷபமும் சா¢யா ரெண்டு மணி நேரம் தான் பண்ணுவேன். நீங்கோ நாலு பேரும் நான் காலக்ஷபம் ஆரம்பிச்சு,சா¢யா ஒன்னறை மணி நேரம் ஆனதும் ஆளுக்கு ஒரு தாம்பாளத்தை எடுத்துண்டு காலக்ஷபம் கேக்க வந்தா கிட்டே எல்லாம் ‘சாஸ்திரிக்கு தக்ஷணைப் போடுங்கோ’ன்னு சொல்லிண்டு போங்க.தாம்பாளத்லே கொஞ்சம் பணம் சேந்தவுடனே, நீங்கோ கொஞ்ச பணத்தை எடுத்து இந்த பையிலே போட்டுண்டு,மறுபடியும் காலக்ஷபம் கேக்க வந்தாவா இருக்கற கடைசி வா¢ வரைக்கும் போய் கேளுங்கோ.நான் காலக்ஷபம் முடிச்சவுடனே காலக்ஷபம் கேக்க வந்தா எல்லா போயிடுவா.அவா எல்லாம் போன பிறகு நான் அன்னைக்கு என்ன ‘கலெக்ஷன்’ ஆயி இருக்குன்னு பாத்துட்டு, உங்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் தறேன்” என்று சொன்னதும் அவர்கள் ஒத்துக் கொண்டு சாஸ்திரியுடன் அவர் காலக்ஷபத்துக்கு வந்து அவர் சொன்ன மாதிரியே செய்தார்கள்.

சாஸ்திரி சொன்னபடியே அந்த நாலு புது சிஷ்யர்களுக்கும் காலக்ஷபம் முடிந்த பிறகு வந்த பணத்தில் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தார்.

அந்த நாலு சிஷ்யர்களும் சந்தோஷப் பட்டார்கள்.

அன்று காலக்ஷபம் நடந்துக் கொண்டு இருந்தது. நாலு சிஷ்யர்களும் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு காலக்ஷபம் கேடக வந்தவர்களிடம் ‘சாஸ்திரிக்கு தக்ஷணை’ ‘சாஸ்திரிக்கு தக்ஷணை’ என்று சொல்லி தாம்பாளத்தில் பணம் போடச் சொன்னார்கள்.

நாலு சிஷ்யர்கள் தாம்பாளத்திலும் நிறைய பணம் சேர்ந்து இருந்தது.அவர்கள் கொண்டு வந்த பையிலும் நிறைய பணம் சேர்ந்து இருந்தது.அவர்கள் கடைசி வா¢யிலே வந்துக் கொண்டு இருக்கும் போது சாஸ்திரிகள் காலக்ஷபம் முடிய இன்னும் பத்து நிமிஷம் இருக்கும் போது உரக்க:

“இந்த பாழாய்ப் போன பணத்தை மனுஷன் சேத்தே வக்கக் கூடாது.அந்த பணத்தே நிறைய பிச்சைக்காராளாக்குக் குடுக்கணும்.அந்த பிச்சைக்காரா சிரிச்சா பகவான் சிரிச்சா மாதிரி” என்று சொன்னதைக் கேட்டார்கள்.

சிஷ்யர்களைப் பார்த்ததும் சாஸ்திரிக்கு தூக்கி வாரிப் போட்டது.

” என்னடா,இன்னிக்கு காலித் தாம்பாளத்தையும்,காலிப் பைகளையும் எடுத்துண்டு என்னமோ ‘ஸ்டைலா’ வந்துண்டு இருக்கேள்.காலக்ஷபம் கேக்க வந்தவன் ஒத்தனும் கலணா கூட போடலையா” என்று கோவத்தோடு கேட்டார்.

அந்த நாலு சிஷ்யர்களும் பயந்துப் போனார்கள்.அந்த நால்வா¢ல் கொஞ்ச ¨தா¢யம் உள்ள ஒரு சிஷ்யன் ”இல்லே மாமா,காலக்ஷபம் கேக்க வந்தவா,நிறைய தான் பணம் போட்டா.நாங்க கடைசி வா¢யிலே தாம்பாளத்தைக் காட்டி கேட்டுக் கொண்டு இருகும் போது நீங்கோ உரக்க:

‘இந்த பாழாய்ப் போன பணத்தை மனுஷன் சேத்தே வக்கக் கூடாது.அந்த பணத்தே நிறைய பிச்சைக்காராளாக்குக் குடுக்கணும்.அந்த பிச்சைக்காரா சிரிச்சா பகவான் சிரிச்சா மாதிரி’ ன்னு சொன்னதே கேட்டுட்டு,நாங்க நாலு பேரும் ‘கலெக்ஷன்’ ஆன மொத்த பணத்தையும் வாசல்லே இருந்த பிச்சைக்காராளுக்குப் போட்டுடோம்.அவாள்ளால்லாம் ரொம்ப சிரிச்சா மாமா.இந்த சந்தோஷ சமாசாரத்தே உங்க கிட்டே……”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சாஸ்திரிக்கு வந்ததே கோவம், அவர் உடனே சொன்ன சிஷ்யன் கன்னத்திலே ‘பளார்’ என்று அரையை விட்டார்.

சொன்னவனும் மற்ற மூனு சிஷ்யர்களும் ஒன்னும் புரியாமல் பயந்துக் கொண்டே நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

காலகக்ஷபம் பண்ண வந்த போது கீழே போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கோவமாக “மட சாம்ப்ராணிகளா, நான் காலக்ஷபத்லே சொன்னது உனக்கும் எனக்கும் இல்லேடா.காலக்ஷபம் கேக்க வந்தவாளுக்குடா, ‘மக்கு ப்ளாஸ்திரிகளா’. இனிமே நான் காலக்ஷபத்லே என்ன சொன்னாலும்,அதே நீங்க காதிலே வாங்கிக்காம கால்க்ஷபம் கேக்க வந்தாவா பணத்தை மட்டும் எடுத்துண்டு வந்து சேருங்கோ. இன்னிக்கு உங்க யாருக்கும் நான் காலணா கூடத் தறப் போறதில்லே.நீங்க எல்லாம் இப்ப போய் நாளைக்கு சாயங்கால காலஷேபத்துக்கு வந்து சேருங்கோ.காலக்ஷபம் கேக்க எல்லார் கிட்டேயும் சாஸ்திரிக்கு ‘தக்ஷணை’ப் போடுங்கோ தவறாம கேளுங்கோ,தொ¢யறதா ” என்று சொல்லி அனுப்பினார் சாஸ்திரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *