கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 2,038 
 
 

ரேவதி… வேலைக்காரி கெளம்பரா பாரு. என்ன மெனு னு அடுப்பையே பாத்துட்டிருக்கா வெச்சகண்ணு வாங்காம. நேத்து உப்புமா இருக்கு பாரு குடுத்தனுப்பு சீக்கிரம். ஒரே நெஞ்சடைச்சுது. நேத்து சாப்பிடவே முடியல.

பாமா விழியோரம் லேசான கண்ணீர். சரி விடு, அவங்க அப்பிடித்தான். இன்னிக்கி நேத்தா பாக்கிற. அந்த உப்புமா காய்கறி தோல் வாசல்ல இருக்க பக்கட்ல கொட்டிடு. அதற்க்காகவே காத்திட்டிருந்தது போல் இரண்டு பசுக்கள் ம்ம்ம்மா என்று கத்தின வழக்கம்போல். வெயிட் பண்ணு தாளிச்சிட்டிருக்கேன். தரேன்.

பாமா பையனுடன் வாசலில் தாழ்வாரத்தில் போய் உட்க்கார்ந்தாள். அவளது பையன் வெளியில பசங்க கிரிக்கட் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ரேவதியின் பையன் பரணைமேல் ஏறி உபயோகம் இல்லாமல் இருந்த இவனது சிறுவயது பேட்,ஸ்டம்ப் எடுத்துட்டு வந்து பாமாம்மா இந்தாங்க அவனுக்கு குடுங்க என்றான்.

பழைய துணி வாங்கறது எவர்சில்வர் பாத்திரம் என்று சொல்லிக்கொண்டே வியாபாரி சென்றார் தெருவில்.

கொஞ்சம் இருப்பது. அம்மாடி ரேவதி… பசங்களோட பழையட்ரெஸ் எடுத்து வெச்சியே எடு மாமியார் கத்தினாள்.

பாட்டி அதெல்லாம் நேத்தே எடுத்துட்டுபோய் குடுத்தாச்சு ஆஸ்ரமத்துல என்றாள் ரேவதியின் காலேஜ் படிக்கும் பெண். எப்படியோ போங்க என சலித்துக்கொண்டாள் பாட்டி.

அப்பா வாசல்ல எலக்ட்ரீசியன் uncle வந்திருக்கார். வாங்க uncle. அப்பா உள்ள தான் இருக்கார்.

வேலையை முடிச்சிட்டு வெளியில் போகும்போது எலக்ட்ரீசியன் uncle அப்பாவிடம் ஏதோ கேட்டுக்கொண்டே இருந்தார்.

சார் அதோ அங்க இருக்கே அந்த சைக்கிள் உங்க பொண்ணோடதா. ஆமாம்பா ஏன். தூசி படிந்து டயர் பஞ்சர் ஆக நிக்க வைக்கப்ப ட்டிருந்த சைக்கிளை பாத்து கேட்டார். புதுவண்டி 6000 ரூபாய் கேக்கறான். அவளோ வசதி இல்ல. அதான்…

காயத்ரி.. இங்க வா.. இவர் ஏதோ கேக்கிறார் பாரு.. அய்யோ அங்கிள் எடுத்துக்கோங்க ஒண்ணும் வேணாம். நான் ஓட்றதே இல்ல. வேஸ்டாதான் நின்னுட்டிருக்கு. யாருக்காவது use ஆகும்.

ஓகே எடுத்துக்கோப்பா. அவளே சொல்லிடரடா. use ஆனா போதும். மிகவும் மகிழ்ச்சியானார் எலக்ட்ரீசியன் அங்கிள்.

அம்மா நான் last year engineering books லாம் போய் காலேஜ்ல குடுத்துட்டு வரேன். என் friend கேட்டான்.

ஏண்டி பழையபேப்பர் காரனுக்கு போட்டா காசாவது கிடைக்கும் இல்ல பாட்டி கேட்டாள்.

வரேன் பாட்டி… டாட்டா என்று கன்னத்தில் கிள்ளிவிட்டு கிளம்பினாள். ஈவ்னிங் நாம வெளியில போறோம் என்னோ பர்த்டே celebration ரெடியா இரு பாட்டி..

அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் அனைவரும் பிறந்தநாள் கொண்டாடினர். தன்கையாலேயே பரிமாறினாள் உணவை எப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் inmates களுக்கு.

(இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *