அவன் செய்த குற்றம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,606 
 

பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக பெருங்கூட்டத்திலும், அந்தப் பச்சை ஜிப்பாவினால் மட்டும் யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. சொக்காயும் தலைப்பாகையும் அணிந்த நாட்டுப்புறத்தார்கள், கோட்டும் தொப்பியும் தரித்த நகரப்புறத் தார்கள், உடலை மறைக்கத் துணியின்றி வெற்றுடம்புடன் காட்சி அளித்த பிச்சைக் காரர்கள், வண்ண வண்ணப் புடவைகள் உடுத்திய பெண்மணிகள் எல்லோரும் கடை களுக்கிடையே இருந்த குறுகலான பாதை வழியே நெருக்கியடித்துக் கொண்டு நகர்த்து கொண்டிருந்தார்கள்.

எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி நெரித்த அந்தக் கும்பலில் சேர்ந்து போகிறவர்கள் ஒருவரையொருவர் பிரித்து விட்டால், திரும்பக் கண்டு பிடித்துச் சேருவது சிரம சாத்தியமான காரியம். ஆனால் அந்தப் பச்சை  ஜிப்பாவைப் பொறுத்த வரை அந்தக் கவலை எழவே நியாயம் இல்லை. ஏனெனில் அதை அடையாளம் கண்டு கொள்ளாமல் தவற விடுவதுதான் சிரமசாத்தியமான காரியம். சந்தை இரைச்சல் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்! ஒருபுறம் பொருளைப்பற்றிய வர்ணனை; இன்னெரு புறம் விலை பற்றிய பேரம்; மற்றொருபுறம் தர்க்கம்: வேருறொருபுறம் குசலப் பிரச்னம். இவற்றையெல்லாம் மேவி கொண்டு தாமோடதேசகரின் குரல் தனித்து ஒலித்தது. அவர் கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினால், இன்னொரு  மூளையிலிருந்து சுகாதார இலாக்காவைச் சேர்ந்த வண்டி யொன்று மலேரியா, காச நோய், க்ஷயம் ஆகியவற்றைப் பெரிது படுத்திக் கொண்டிருந்தது. கடுகை மலை யாக்கி , எல்லை பனையாக்கிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இத்தக் கசமசப்பிலும் சந்தை இரைச்சலிலும் கூவாமல் கூவி, கவராமல் கவர்ந்து, அழையாமல் அழைத்தது அந்தப் பச்சை ஜீப்பா. எத்தன்யோ முயன்றும் ராஜுவினால் அதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. ‘வருந்தி அழைத் தாலும் வாராத வாரா’ என்பதுபோல் அலட்சியம் செய்யும் குணம் ராஜுவுக்கு என்றுமே இருந்ததில்லை. அவன் அந்தக் கும்பலிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தான். முழுக்க முழுக்க விலகி யிருப்பது என்பதும் அவனால் முடியாத காரியம். அதேபோய பகிரங்கமாகக் கூட்டத்தோடு கலந்து கொள்வது என்பதும் அவனால் ஆகாத காரியம். அவன் எங்கு இருந்தாலும், எங்கு சென்றாலும் போலீஸ் காரர்களின் பார்வையில் பட்டு விடக் கூடாதே என்ற பயம் அவனை வாட்டிக் கொண்டே இருக்கும். அன்று அவன் முழங் கால் தெரியும்படி மூலைக்கச்சம் கட்டிக் கொண்டிருந்தான், சட்டை ஏதும் அணியவில்லை. தலையிலே பெரிய முண்டாக ஒன்று சுற்றி இருந்தான். அது முகத்தையே மூடி மறைத்தது. பார்ப்பவர்கள் தன்னைப்  பட்டிக்காட்டிலிருந்து வந்த குடியானவன் என்று எண்ணுவார்கள் என்றே அவன் நம்பினான்.

அவன் ஒரு கடைக்குப் பின்னே , வீசியெறியப் பட்டிருந்த வாழைக் கட்டைகளின்மீது உட்கார்ந்து கொண்டு. போய் வரும் ஜனத்திரரைக் கவனிக்கலானான். அவன் எதைக் கவனித்தாலும், உன்னிப்பாகவேதான் கவனிப்பான். அதுவே அவன் தொழில் முறையுங்கூட. சுபாவமாகவே அவன் சோம்பேறி. ஆனால் கும்பலைக் கண்குத்திப் பாம்பாகக் கவனிப்பதிலும், பிறர் பையில் கைபோடுவதிலும் அவன் ஆற்றல் பெற்றிருந்தான். அவன் மேற்கொண்டிருந்த அந்தத் தொழில் பெரியதொரு சூதாட்டம் என்பதில் ஐயம் இல்லை. சிலசமயம் அவனது துணிச்சலுக்கேற்ற பலன் கிட்டுவதில்லை. பைக்குள் போய் வரும் விரல்கள் பத்திரமாகத் திரும்பி வந்தாலே பெரும் பாக்கியம் என்றுகூடத் தோன்றுவதுண்டு. சில சமயம் அவன் கையோடு பவுண்டன் பேனா வருவதுண்டு. நகராண்மைக் கழகத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு அதை வாங்குபவன். நான்கணா தரக்கூட மீன் மேஷம் பார்ப்பான். அதோடு அந்தப் பேனாவின் உதவியைக்கொண்டே அவனைக் கண்டு பிடித்து விடக் கூடும் என்ற பீதி வேறு இருந்து கொண்டே இருக்கும். ராஜு ஒரு நாள் தனக்குத்தானே, ‘பேனாவை மட்டும் தொடுவதில்ல. அப்படி யாராவது தட்டில் வைத்து வெற்றி, பாக்கு, பழம், தட்சினையோடு கொடுத்தால்கூடக் கண் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை’ என்று உறுதி பூண்டான். இந்தப் பேனா வியாபாரமே ரொம்பத் தொல்லை தரும் வியாபாரம். மசி கசியும், ஒழுகும், நிப்பு குத்தும். அதை வாங்கிக் கொள்பவன் இன்னும் என்ன என்ன வெல்லாம் கோளாறுகள் சொல்வானே. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். கடிகாரங்கள் கூடப் பேனவுக்கு வளப்பந்தான்.

ராஜுவுக்கு ரொம்பப் பிடித்தமான பொருள், மெத்தப் பருமனான பர்ஸ். எங்கேயாவது பார்த்து விட்டால், அதை அவன் எடுத்துக் கொள்ளும் பணிக்கே அலாதிதான். அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, அதைத் தூர எறிந்து விட்டு, அன்றைய வேலையை நன்ரகச் செய் திருப்தியுடன் வீட்டுக்குப் போவான். மூசத்தை ஒரு செம்பு நீர் விட்டுக் கழுவித் தலையை வாரிவிட்டுக் கொள்ளுவான். வீட்டுப்படி இறங்கி நாகரிக மனிதனாக உலாவப் போகுமுன், குழந்தைகளுக்கு மிட்டாய், புஸ் நகம், சிலேட்டு என்று வாங்குவான். ஆடிக்கொரு நாள், ஆவணிக் கொரு நாள் தன் மனைவிக்கும் நல்ல ரவிக்கைச் சீட்டியாக வாங்கி வரு வான். அவனுக்கு எப்பொழுதுமே தன் மனைவியைக் கண் டால் அவ்வளவாக ஆகாது. அவன் எப்பொழுதாவது கையில் கொஞ்சம் அதிகமாகப் பணம் புரள வீட்டுக்குச் சென்சல், மூன் ஜாக்கிரதையாக உறையில் இட்டுக் கூரை போட்டுக்குள் மறைத்து வைக்கும்படி ஆகும். இல்லாவிட் டால் அவள் இல்லாத பல கேள்விகள் கேட்டு அவனத் தொணதொணத்து எடுத்து விடுவாள். அவன் திருந்தி விட்டான், நல்ல முறையில் தாருத் தொகையாகச் சம்பா தித்துள்ளான் என்று காணவே அவள் பிரியப்பட்டாள். தாருத் தொகை எப்படிக் கிடைத்தது. எங்கு கிடைத்தது பல்லாம் பட்டு அவர்தம் அலட்டிக் கொள்வதில்லை. தரகிலே வந்த சம்பாத்தியம் என்றலே அது தலி என்று மகிழ்ந்து வந்தாள்.

ராஜு சட்டென்று வாழைக் கட்டை மீதிருந்து குதித்துப் பச்சை ஜிப்பாவைப் பின் தொடர்ந்தான். ஆதல் மூன்றடி பின் தங் இயே நடந்தான். அது மிக நேர்த்தியான, கணக்கான தூரம்: இயற்கை உணர்வும் அது பவமும் தேடித் தந்த அருஞ் செல்வம். அந்தத் தூரம், முன் செல்லும் ஆசாமியின் கை பர் லக்குப் போய் வருவதை மறைக்காது. அதோடு பார்ப்போருக்குச் சந்தேகத்தை எழுப்பித் தொல்லை தரும் கிட்டமும் இல்லை. தூரமும் இல்லாமல் கிட்டமும் இல்லாமல், ஆகா என்ன கணக்கு வேடன் தன் வேட்டை பின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் போனாலும் உயிருக்கு மறு நேராவண்ணம் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கணக்கிட்டு நடப்பானே, அப்படி இருந்தது. அவன் நடத்து கொண்ட முறை. ஆனால் இவ்வேடனின் வேயை முறை கொஞ்சம் சிக்கலானது. காட் 4லே வேட்டையாடச் செல்பவன், தான் தொடர்ந்து செல்லும் பிராணியை ஒரே போடாகப் போட்டு அடித்து வீழ்த்திவிட்டால் தனக்கு வெற்றி கிட்டி விட்டதாக முடிவு கட்டிவிடலாம். ஆனால் இக்கோ ? உயிரை வைத்துத் தோலை உரிப்பது என்பார்களே, அதுபோல, இவ்வொருவரின் உடலைப் புண் படுத்தாமலே, உள்ள பொருளைக் கவர்ந்து விட வேண்டும்.

ராஜு பொறுமையாகக் காத்திருந்தான். பச்சை ஜிப்பா தேங்காய்க் கடையில் இளநீர் அருந்த நீண்ட நேரத்தைச் செலவிடவே, அவனும் ஏதோ பாய்ச் சுருள்களைப் பார்வை பிடுபவன்போலப் பொழுதை ஓட்டினான். அவன் இளநீர்க் கடையில் நின்றதைப் பார்த் தால், அங்கு விட்டு நகரவே மாட்டானோ என்று கூடத் தோன்றியது. இளநீரை யெல்லாம் குடித்து முடித்தும், அவன் அந்தத் தேங்காயைப் பிளந்து, அதற்குள் இருக்கும் வழுக்கையைக் கடைக்காரன் கத்தியால் றிேத் தரும் வரை காத்திருப்பாள் போலத் தோன் றியது. அவன் நிகாத்தது போலவே, தேங் காய் வழுக்கை அவன் வாய்க்குள் விழுந்து மறைவதை கண்டபொழுது, ராஜுவுக்கும்

நாக்கிலே நீர் மாறிற்று. ஊறி வந்த அந்த ஆசையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் ராஜு, ஒருவன் தன் தொழி லிலே ஈடுபட்டிருக்கும்பொழுது. இன்ஜெரு வன் எதையாவது தின்பதிலும் அருந்துவதி லும் பொழுதைச் செலவிட்டால், அது நியாயமா? காரியத்தில் கண்ணயிருப்பவன் அதைக் கண்ணுற்றுத் தன் காரியத்தில் தவறி விடலாம். அல்லது அவன் கைக்கு எட்டிய பழம் வாய்க்குக் கிட்டாமல் போய்விடலாம்.

பச்சை ஜிப்பாக்காரன் தன் பையிலிருந்து கருத்த பால் ஒன்றை எடுப்பதைப் பார்த்தான் ராஜு, தேங்காய் வியாபாரியுடன் இளநீரின் வியற்றிப் பேரம் பேசுவதையும் கண்டான். அப்புப்பா! என்ன கனத்த கரகரப்பான குரல்! ராஜுவின் கவனத்தைக் குலைத்தது அது. புலி உறுமுவதுபோல் அல்லவா உறுமுகிருன்!

காட்டிலே வேட்டையாடச் சென்று பழக் கப்பட்டவன் உள்ளம் துணுக்குற திடு மெனப் புலி உறுமுகிறதே என்பதற்காகப் பயந்து பின் அடி எடுத்து வைப்பானா? பச்சை ஜிப்பா கடைக்காரனுடன் நடந்து கொண்ட முன்ற ராஜுவுக்குப் பிடிக்கவில்கள். அல்பன்! என்ன கஞ்சத்தனம் | காசிடம் இத்த ஆசையா? இம்மாதிரிக் காசாசை கொண்ட வர்கள் குறுகிய உள்ளம் படைத்தவர்களா யிருப்பார்கள், பெரும் தொல்லைக்காரர்களா பிருப்பார்கள்! பாஸ் தொலைத்து விட்டால் ஊரைக் கூட்டி விடுவார்கள். குய்யோ முறையோ என்று கக்குரலிட்டு அப்பாடா! பச்சை ஜிப்பாக்காரன் ஒரு வழி யாக இடம் பெயர்ந்து நகர்ந்தான். பறக்கும் வண்ண வண்ணப் பலூன் விற்கும் கடைக் கெதிரே போய் நின்றான். கடைக்காரனுடன் முடிவில்லா விவாதம் தொடங்கி முடித்துக் கொண்டு அவன் ஒரு பலூன் வாங்கினான். அவனுடைய அற்பத்தனத்துக்கு இன்னு மோர் அத்தாட்சி அது! “இது ஒரு தாயில் லாக் குழந்தைக்கு அப்பா நான் கட்டாயம் வாங்கி வருவதாகச் சொல்லி விட்டேன், தான் வீட்டுக்குப் போவதற்கு முன்னால் இது உடைந்து போனலும் கெட்டுப் போனாலும், அவன் இரவு முழுவதும் அழுது தீர்த்துவிடு வான். அவன் முகம் சிணுங்குவதை நான் சகிக்கமாட்டேன்” என்றான் அவன்.

அவன் ஒரு குறுகிய நடப்பு வழியே நடந்து கொண்டிருந்த பொழுது, ராஜுவுக்கு அவன் எதிர்பார்த்திருந்த அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. மகாத்மா காந்தி பத்திரிகை படிப்பது போல சமைக்கப்பட்டிருந்த மெழு குச் சிலையைக் காண்பதற்காக மக்கள் முண்டி படித்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். இடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை ராஜு.

***

பதினைந்து நிமிஷங்களுக்குப் பிறகு ராஜு அந்தப் பர்ஸுக்குள் இருந்ததைச் சோதனை பிட்டுக் கொண்டிருந்தான். உபயோகத்தி விராத பாழுங் கிணறு ஒன்றுக்குப் பின்னால் போய்த் தனியாக அமர்ந்து கொண்டான், அதன் இடிந்துபோன கைப்பிடிச் சுவர் அவன் அலுவல்களுக்கு நேர்த்தியான மறைவிடமாக அமைந்தது. அந்தப் பாலில் பத்து ரூபாய் நாணயமாகவும் இருபது ரூபாய் நோட்டாக வும், சில அனக்காசுகள் நிக்கலிலும் இருத் தன. ராஜுஅந்த அணுக் காசுகளை எடுத்து மடியில் செருகிக் கொண்டான். ‘யாராவது பிச்சைக்காரர்களுக்குப் போட்டு விடலாம் இவற்றை’ என்று அவன் தாராள மனத் துக்குத் தோன்றியது. பொருட் காட்சியின் நுழைவிலே குருடன் ஒருவன் ‘கண்ணில்லாக் கபோதி ஐயா’ என்று கதறிக் கொண்டிருந் தான். யாருமே அவளை இலட்சியம் செய்ய வில்யே என்பது அவனுக்கு நினைவு வந்தது. இந்த நாட்களில் மக்க ளுக்கு அநுதாப குணம் என்பது அறவே மரத்துப் போய் விட்டது போலும்! அவன் தன் முண்டாசுத் துணியை எடுத்து முப்பது ரூபாயை ஒரு முனையில் முடி போட்டுப் பழைய படியே முண்டாசைக் கட் டிக் கொண்டான். மாதத் தின் மிருதி நாட்கள் ஓட்ட அது போதுமெனத் தோன் றியது. பதினைந்து நாட் கருக்காவது அவன் நல்ல படியாக உண்டு உடுத்து வாழலாம். மனைவியையும் குழந்தைகளையும் ஒரு படத் துக்குக்கூட அழைத்துச் செல்லலாம். அப்பொழுது அவன் கைக்குள்ளே அந்தப் பர்ஸ் முடங்கிக் கிடந்தது. அதைத் தலையைச் சுற்றிக் கிணற்றுக்குள் வீசியெறிந்து விட்டுக் கையைத் தட்டிக் கொண்டு, ராஜா மாதிரி மிடுக் காக அவன் புறப்பட்டுவிட வேண்டியது தான். கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த் தான். அடி மட்டத்திலே ஏதோ கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பால் மிதக்கலாமே! மிதக்கும் பர்ஸ், உலகத்தில் இல்லாததொல்லை கன்யெல்லாம் கொணர்ந்து சேர்க்கக்கூடுமே! விட்டெறிவதற்கு முன்னால், அதில் கூழாங் கற்கள் இட்டு நிரப்பலாமே என்று எண்ணிப் பாலைத் திறந்தான். அதன் ஒரு புறத்து அறையிலே பலூன் ஒன்று மடித்துச் செருகி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான், ‘அட! இது அவன் வாங்கியதல்லவா? தாயில்லாக் குழந்தையைப் பற்றி அவன் பேசியதெல்லாம் ராஜுவுக்கு நினைவு வந்தது. ‘ கத்த மடை பன். இதைக் கொண்டு போய்ப் பர்ஸுக்குள் வைத்துக் கொண்டிருக்கிமுனே!’ என்று உள்ளம் கூறியதை உதடுகள் எதிரொலித்தன. ‘என்ன அஜாக்கிரதை இந்தப் பெற்றேர் களுக்கு? குழந்தைகள் இப்படியா அல்லல் எருக்கு உள்ளாக்குவது?- என்று மனத்துள் கடித்து கொண்டான். ஒரு கணம் அவன் கண்ணெதிரே சலனப்படம் ஒன்று ஓடியது. புலி போல் உறுமும் தந்தை வீடு திரும்பு கிருன். வாங்கி வருவதாக அவன் சொல்லிச் சென்ற பலூனை எதிர்பார்த்து வாசல் வாசம் படியிலேயே தாயில்லாக் குழந்தை அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருக் கிறது. அவனோ பர்ஸ் பறிபோன ஆத்திரத் தோடு திரும்புகிருன்.. அப்பப்பா தினத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறதே!

தாயில்லாக் குழந்தையின் ஏமாற்றத்தை எண்ணிப் பார்க்கவே, ராஜுவுக்கு தெயம் விம்மி வெடித்துவிடும் போலாகி விட்டது. அந்தக் குழந்தையைத் தேற்றுவார் யாருமே கிடையாது. பலூன் வாங்கி வராததால் ஏமாற்றமுற்ற அந்தக் குழந்தை நீண்ட நேரம் அழுமேயானால், அந்தக் கிராதகன் கண் – மண் தெரியாமல் அடித்தாலும் அடித்து

விடுவான். அந்தப் பச்சை ஜிப்பாக்காரனைப் பார்த் தால், சின்னஞ் சிறு கிள்ள களின் மதயை மொழியைப் புரிந்துகொள்ளும் கற்றல் பெற்றவருகத் தோன்ற வில்லை. அந்தக் குழந் தையை எண்ணி ராஜு வின் மனம் பாகாக உரு கியது. ஒருவேளை அவலு டைய இரண்டாவதுமகனே யொத்தவனாக இருக்க லாமோ அந்தச் சிறுவன்? அந்தச் சிறுவனின் தாயார் இறந்ததுபோல் அவன் மனைவியும் இறந்து விட்டால்…

தனிப்பட்ட முறையில் பார்க்கப்போனால் அவ னுக்கு அதனால் பல அனு கலங்கள் கூட ஏற்பட லாம். முதலாவதாகப் பணம் – காசைக்கரையில் ஒளித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படாதல்லவா?

இந்தத் தகாத எண்ணம் நமகரு எதற்கு என்று அதை மனத்திலிருந்து கிள்ளியெறிய முயன்றான். அவன் மனைவி இறந்துவிட்டால், அவனுக்கு வேண்டாத பல தொல்லைகளும் துயரங்களும் வந்து சேரும். சின்னஞ் சிறு குழந்தைகளைச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும், போது மென்முகிவிடும். புத்தியே பேதலித்து விடக் கூடும். அவனது விரோதிக்குக்கூட அந்த அவல நிலை வேண்டாம். அந்தத் தாயில்லாக் குழந்தைக்கு எப்படியாவது இந்தப் பலூன் கிடைத்துவிட வேண்டும் என்று ராஜு முடிவு செய்தான். ஆனால் சேர்ப்பிப்பது எப்படி? இடிந்த கைப்பிடிச் சுவரின் இடுக்கு வழியே தூரத்திலிருந்த கூட்டத்தை எட்டிப் பார்த் தான், பலூனைக் கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்க முடியாது. வெற்று மணிபர்ஸில் பழைய படியே வைத்து முடியுமானால் அவன் சட்டைப் பைக்குள் போட்டு விடலாம். – பச்சை ஜிப்பாக்காரன் அங்கே நடை பெற்றுக் கொண்டிருந்த தாமோபதேசத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பிரசங்கி தாம் எடுத்துக் கொண்ட பொருகாப் பற்றிக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அரை வட்டம் ஒன்று ‘எங்கே உன் கடவுள்?’ என்று கேட்கவே, அங்கே பேரிரைச்சல் எழுந்தது. ராஜபச்சை ஜிப்பாவை அணுகி நின்று கொண்டான். பலூன் மட்டுமே திணிக்கப்பட்டிருந்த பர்ஸ் அவன் கையில் இருந்தது. அவன் அதை அந்தப் பச்சை ஜிப்பாவின் பையில் மெதுவாகப் போட்டான்.

அடுத்த கணமே ராஜுவுக்குத் தன் தவறு விளங்கிவிட்டது. பச்சை ஜிப்பாக்காரன் அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு. ‘திருடன், திருடன்” என்று உரக்கக் கத்தி விட்டான். தாமோபதேசம் கேட்டுக் கொண் டிருந்தவர்கள் அதன் சுவையை மறந்தனர். எல்லோருடைய கவனமும் ராஜுவின் பக்கம் திரும்பியது. அநாவசியமாகத் தன்னை அவ மானப் படுத்துவதுபோலத் திமிறி அவன் தன்னைத் விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். ‘என்னை விடு’ என்றும் கூவினான். அவன் என்ன செய்யப்போகிரன் என்பதை ராஜுஅறிவதற்கு முன்னதாகவே, பச்சை ஜிப்பாக்காரன் கையை ஓங்கிக் கன்னத்தில் பலமாக ஓர் அறை விட்டான். கண்ணெதிரே கும்மிருட்டுச் சூழ்ந்தது. அரைக் கணம் ராஜுவின் பொறி கலங்கியது. ‘நாம் யார், எங்கு இருக்கிறோம்?’ என்பதை யெல் லாம் மறந்தான். இருள்பனி மூட்டம் பிரித்து அவன் மீண்டும் தன் பார்வையைப் பெற்ற பொழுது, தன்னெதிரே முதன் முதலாகப் பார்த்தது பச்சை ஜிப்பாக்காரனத் தான். தொடுவானத்தையும் தாண்டிக் கொண்டு தூர நிற்பது போன்று தோற்றினான் அவன். அவன் கைகள் மீண்டும் அடிக்கத் தயாராக எழும்பியிருந்தன. அதைக் கண்டதும் ராஜு வெல வெலத்துப் போய்த் தலைகுனிந்தான்.

“நான்… நான் உன் பர்ஸைத் திரும்பவும் உன் பைக்குள் போடத்தான் முயன்றேன்” என்முன். அதைக் கேட்டதும் பச்சைஜிப்பாக் காரன், பற்களைக் காட்டிப் பேயெனக் கட கடவென்று சிரித்துக் கைகள் நந்தறவென்று நெறித்தான். கட்டம் பேரொலி எழுப்பிக் கெக்கெலி கொட்டி நகைத்து அவனைத் துன்புறுத்தலாயிற்று. சிலர் மீண்டும் அவன் தயில் தங்கள் பலம் கொண்ட மட்டிலும் ஓங்கிச் சாத்தினார்கள்.

நீதிபதிக்கு முன்னிலையிலும்கூட ராஜு, நான் பானைத் திரும்பவும் பைக்குள் போடத்தான் முயன்றேன்’ என்று திரும்பத் திரும்ப அதே பல்லவியைத்தான் பாடினான், கேட்ட பாவரும் சிரித்தார்கள். அது போலீஸ் உலகத்திலே நிரந்தர நகைச்சுவைத் துணுக் காகக்கூட நிலைத்து விட்டது. ராஜுவின் மகவி அலகான் சிறைச்சாயிைல் பார்க்க வந்தாள். ‘ எங்ககத் தலைதூக்க வொட் டாமல் அவமானப்படுத்தி விட்டாயோ என்று கூறி அழுது தீர்த்து விட்டாள்,

“ஏன்? தான் திரும்பவும் போடத்தானே முயன்றேன்”-ராஜுஅதே பதிலை அவளுக் கும் அமைதியாகச் சொன்னான்.

அவன் பதினெட்டு மாதங்கள் சிறைவாசம் செய்துவிட்டு மீண்டும் இவ்வுலகுக்குத் திரும்பி வந்தான். என்ன செய்வது. ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப் பட்டவனாகத்தான் வந்தான். ஆனால் தனக்குள் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டான். ‘என்றைக்காவது எதையாவது நான் எடுக்க நேர்ந்தால், அதைத் திரும்பவும் போடக் கூடாது. இதை மட்டும் நான் உறுதியாகக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்’ என்பதுதான் அந்த ஒன்றே ஒன்று. அன்று முதல் அவன் கடவுள் தனக்கு ஒரே ஒரு விதத்தில் மட்டும் சாமர்த்தி பத்தை அனித்திருப்பதாக நம்பினான். தன் விரல்கள். எடுக்கும் பழக்கம் உள்ள விரல்கள் எடுத்தது எதையும் திரும்பப் போடுவதற்காக ஏற்பட்டவை அல்ல என்பதே அவன் முடிவாகக் கொண்ட நம்பிக்கை.

தமிழாக்கம்: ரா. வீ.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *