கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,344 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறிவந்த ரங்கையாக் கிழவன்; கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக் கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் அவன் எறியதில், அவனுடைய கிழட்டுக் கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்கின. தன் லயத்து வாசலை நோக்கி நடந்த வன் சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவது உணர்ந்து நின்று நிதானித்துப் பார்த்தான்.

அவனுடைய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் சிவசாமியின் வீட்டிற்குள்ளிருந்து ஒளி வெள்ளம் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது. அந்தலயத்தின் ஒன்பது வீடுகளிலும் சிணுங்கிக் கொண்டிருந்த லாந்தர் வெளிச்சத்திலும், சின்னப் போத்தல் விளக்குகளின் மங்கிய ஒளிக்கும் மத்தியில் அந்த ஒரு வீட்டு வெளிச்சம் மட்டும் வாசலை நோக்கி வைரச் சுடரை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

ஒளியின் சக்தி மகத்தானதுதான்.

கிழவன் விட்டிலாக அந்த வீட்டு வாசலில் போய் நின்று எட்டிப் பார்த்தான். உள்ளே அறையின் மேல் பகுதியில் ஓடும் பெரிய கம்பியில் ‘பெட்ரோமாக்ஸ்’ லைட் ஒன்று ‘உஸ்’ என்று பலமாக இரைந்தவாறு தொங்கிக் கொண்டிருந்தது,

வாசலில் நின்றவாறே ‘ஏலே செவசாமி…’ என்று குரல் கொடுத்தான் கிழவன். ‘யாரது?…’ என்றவாறு வெளியே வந்தான் சிவசாமி. வெளிச்சத்தில் கிழவனைக் கண்டதும் ‘யாரு தாத்தாவா……? வாங்க’ என்றான்.

‘லைட்டா வாங்கி இருக்கே?…..’

‘ஆமா தாத்தா……’

‘அடி சவாசு……’

‘ரொம்ப நாளா ஓர் ஆசை. இப்பத்தான் வாங்க முடிஞ்சது. வாங்கிப் போட்டேன்……” என்றான் சிவசாமி. குரலில் பெருமிதம் தொனித்தது.

காஸ் லைட் கிழவனை காந்தமாக இழுத்தது. உள்ளே போய் நெற்றியில் இடிப்பது போல் தொங்கிக் கொண்டி ருந்த லைட்டை விழிகள் மின்ன மெள்ளத் தொட்டான். அது லேசாக ஆடியது.

“ஐயய்யோ ஆட்டாதே தாத்தா ‘மெண்டலு’ கொட் டிப் போகும்” என்று கூக்குரலிட்டான். சிவசாமியின் பையன் ஒருவன். “யார் ராது? .. என் று திரும்பிய கிழவன் பையனின் விழிகளில் தெரிந்த பரபரப்பை ரசித்த வாறு “அடேங்கப்பா, பெரிய இவுக” என்று அவனை நோக்கி நாக்கைத் துருத்தியவாறு கையைங்கினான்.

வீட்டுக்குள்ளிருந்த குஞ்சு குளுவான் எல்லாம் ‘கொல்’ லென்று சிரித்தன. கிழவனும் பல்லில்லாத முரசு தெரியச் சிரித்தான். குழந்தையினது போல அந்தச் சிரிப்பு மோகன மாக இருந்தது.

ஒளியில் திளைத்த அந்த அறையை சுற்று முற்றும் பார்த்து விட்டு மீண்டும் லைட்டை ஏறிட்டுப் பார்த்தான். வெள்ளி மாதிரி மின்னிய லைட்டின் கீழ்ப்பகுதியில் அவன் முகம் நீளவாட்டாக நீண்டு விகாரமாக பிரதிபலித்தது. ‘இது எம் புட்டு செவசாமி?’ என்றான்.

‘வெலை தானே? … அது தலையை தின்னுருச்சு … நூத்தி இருவது ரூவா’ என்றான் சிவசாமி. கிழவனுக்கும் அது பெரி யத் தொகைதான். ஆனாலும் அது ஒரு பொருட்டாகவே பட வில்லை. ‘எம்புட்டு குடுத்தாத்தான் என்ன?… சீதேவியே வீட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்கு’ என்று பரவசமாகக் கூறினான். வெளியே நடந்தவன் வாசலில் இறங்கி நின்று பார்த்து விட்டு, ‘செவசாமி’ என்று உள்ளே பார்த்தவாறு ‘நம்ம லயம் இப்ப எப்பிடி இருக்கு தெரியும்ல ஒம்பது கெழ விக நடுவே கொமரிப் பொண்ணு ஒருத்தி இருக்கிறமாதிரி இருக்கு ஒன் வீடு.’ என்று கூறிச்சிரித்தவாறு நடந்தான்.

கிழவன் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் கண் களில் முதல் பட்டது, அழுது வடிந்து கொண்டிருந்த தகர லாம்புதான். விரல் நீளத்துக்கு சுடரும், முழ நீளத்துக்கு புகையுமாக எரியும் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் தான் இவ்வளவு கால வாழ்க்கையும் ஓடியிருக்கிறது என்பதை இப்போது நினைக்கும்போது, நம்ப முடியாத அதிசயமாகப் பட்டது. இதே சமயத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை இதே வெளிச்சத்தில் கழிக்கப் போவதும் சகிக்க முடியாத கொடுமையாகப்பட்டது.

உள்ளே சாப்பாட்டுக்கடை நடந்து கொண்டிருந்தது.

நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனாகிவிட்ட கிழவனின் மகன் வேலு, சிறிதும் பெரிதுமான பேரப்பிள்ளைகள் எல் லோரும் கோப்பையை வழித்துக் கொண்டிருந்தார்கள். கிழ வனைக் கண்டதும் அவனுடைய வெங்கலப் கும்பாவை எடுத் துக் கழுவினாள் கிழவனின் மருமகள். ‘ஆமா ஆத்தா எனக் கும் என்னமாவது கஞ்சித் தண்ணி தா…’ என்றவாறு தலை முண்டாசை எடுத்து உதறி, அதே கையோடு தரையையும் தட்டுவிட்டு உட்கார்ந்தான்.

மருமகள் கொண்டு வந்துவைத்த சோற்றைப் பிசைந்து உருட்டி உருட்டி, பொந்துக்கள் கூழாங்கற்கள் வீசுவதுபோல வாய்க்குள் போட்டு குதப்பும் போது; தாடையும் மீசையும் ஒழுங்கு இல்லாமல் நெளிந்து வளைந்தன.

சாப்பாட்டுக்கிடை யில் ‘செவசாமி லைட்டு வாங்கியிருக் கான்’ என்று கூறினான். அவன் சொல்லித்தான் அவர்களுக் குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆயினும் அந்த ஆனந் தத்தை தனக்கே மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதுபோல கூறினான். வாய்நிறைந்த சோற்றுடன் ‘உம்’ மென்று முன கிக் கொண்டான் வேலு. ‘லைட்டு போட்டப் பொறகு எப் படி இருக்குங்கிறே… அடடா … சீதேவி வெளையாடுது …’ என்று பரவசமாகக் கூறிய கிழவன், சற்றுநேரம் அந்த பரவ சத்திலேயே லயித்து வெறித்தவாறு இருந்து விட்டு ‘செல வோட செலவா நமக்கும் ஒண்ணு வாங்கிப்புடு வேலு … நல்லாருக்கும்’ என்றான்.

வேலு சட்டென்று தலையைத் தூக்கி மனைவியைப்பார்த்து விட்டு. கிழவனைத் திரும்பிப்பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த ஏளனத்தைக் கண்டு கிழவன் தலையைக் குனிந்து கொண்டான். அதுவரை நிலவிய சகஜ நிலை மாறி ஓர் அசா தாரண மௌனத்தை உணர்ந்த கிழவன், தான் ஏதும் உளறி விட்டோமோ என்று எண்ணிக்கொண்டான்.

லைட்டா … ஹும் … அது மட்டுந்தான் நமக்கு கொறைச் சல்’ என்று எரிச்சலாக சிரித்த வேலு, ‘செவசாமி செவசாமி லைட்டு வாங்குறான்னா அவனவன் என்னத்தையோ பண்ணி வாங்கு றான். நாம எங்கே போறது?’ என்றான். சிவசாமிக்கு சாராய பிஸ்னஸ் உண்டு. ஒளிவு மறைவாகத்தான்; கிழவனுக்கும் அது தெரியும். எப்போதாவது வசதிப்படும் போது இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஊற்றிக்கொண்டு ‘என்னலே காட்டமாவே இல்லே? …’ என்று உள்ளங்கையால் மீசையை ஒதுக்கிக் கொள்வான்.

வேலுவின் பதில் நியாயம் தான் ஆனாலும் கிழவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. ‘முடியாட்டி என்ன பன்றது… வாங்கினா நல்லா இருக்குமேன்னு சொன்னேன். அம் புட்டுத்தான் …’ என்றான் குரல் ரொம்பவும் இறங்கி போயிருந்தது.

‘அம்மான் சொல்றதும் நெசந்தான். வெளிச்சம் இருக் கிற எடத்துலே தான் ‘லெச்சுமி இருப்பா… ‘ என்றாள் கிழவனின் மருமகள். கிழவன் மனம் புண்படாமல் இருக்க ஐஸ்

‘யாரு இல்லேங்கிறா? நெசந்தான் இந்த வீட்டுலே சம்பா திக்கிற நீ … நானு, ஒம்மகன் மூணு பேருட்டு சம்பளம் அப் பாவுட்டு ‘பெஞ்சன்’ காசும் தான் மாசத்தை ஓட்டவே என் னைப்புடி, உன்னைப்புடிங்குது அதுலேயும் சின்னவுக … இப் பல்லாம் காசை கண்ணுலேயும் காட்றாக இல்லை’ என்றவாறு கிழவன் பக்கம் திரும்பி ‘ஒங்க பேரப்புள்ளே ரெண்டு மாசமா. ஒத்தைச் சதங்கூட வீட்டிச்செலவுக்கு குடுக்கிறதில்லை என்றாள்.

சாப்பிட்டு முடிந்து திண்ணையில் கால்மேல் கால்போட்ட வாறு கிழவன் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த போது, அவனுடைய பேரன் வெளியே இருந்து உள்ளே வந்தான். அவனோட குப்பென்று பீடி மணமும் வந்தது. கறுத்த ஒல்லி யான உடம்பை மேலும் ஒல்லியாக்கிக் காட்டும் கையில்லாத பெரிய பனியனும் கணுக்காலுக்கு மேல் கெண்டைச்சதை வரை இறங்கியிருந்த சாரமும் அணிந்து, சிறுவனுமில்லாமல் வாலிபனாகவுமில்லாத இரண்டுங்கெட்டான் பருவம். அவனைக் என்னலே கண்டதும் ‘ஏலே, நில்லு’ என்றான் கிழவன். ஙொப்பன் என்னமோ புகாரு பண்றான்.

‘என்னவாம்?’

‘வீட்டுச்செலவுக்கு ஒத்தைச்சதங்கூட குடுக்கிறது இல்லியாம்? …’

‘அதெல்லாம் இன்னம் ரெண்டு, மூணு மாசத்துக்கு யாரும் சல்லிப் பேச்சுப் பேசப்படாது.

அடி ஆத்தே; என்ன விசயம்?’

‘நான் கைக்கு உருலோசு ஒண்ணு வாங்கப் போறேன் … என்றவாறு உள்ளே நுழைந்து படுக்கையைச் சுருட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

‘எலே நேரா நேரத்துக்கு மட்டும் வந்து திங்கிறியே … சல்லி குடுக்க வாணாமா .. ?’ என்றான் கிழவன்.

‘அதான் என்னோட கூப்பன் அரிசி, மாவு எல்லாம் வருதே, அப்புறம் என்னா? …’ என்றவாறு இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் நண்பனோடு படுத்துக்கொள்ள சென்றுவிட் டான். எரிச்சலோடு ‘ஆங்’ என்று அவன்போன திசையைப் பார்த்தவாறு ‘என்னா அடக்க ஒடுக்கம் – முருகா … ருகா … முருகா என்று முனகியவாறு வெற்றிலையை இடிக்கத்துவங்கினான்.

மறுநாள் மாலை

சிவசாமியின் வீட்டின் முன்னால் அந்த லயத்துப்பிள்ளை களின் பட்டாளமே குழுமி இருந்தது. எல்லோருக்கும் தலைமை வகிப்பதுபோல கிழவன் திண்ணையில் அமர்ந்திருந்தான். எதிர்த் திண்ணையில் சிவசாமி அமர்ந்து லைட்டைத் துப்பரவு செய்து கொண்டிருந்தான். கிரீடம் மாதிரி மேலே இருந்த மூடியைத் திறந்து, உள்பகுதியை பைப்வளையங்களில் மெண் டல் இடிபட்டு பஸ்பமாகிவிடாமல் ஜாக்கிரதையாக எழுந்து உள்ளே வாயால் ஒரு ஊது ஊதினான். பின்னர் அவைகளை மீண்டும் பொருத்தி உள்ளேயிருந்த கிண்ணத்தில் ஸ்பிரிட்டை ஊற்றி தீப்பற்ற வைத்தான்.

சற்று சூடேறியதும் காற்று அடிக்கும் பம்ப்பை இழுத் திழுத்து அமுக்கும் போது சத்தம் ‘விக் விக்’ என்று உச்சஸ் ‘ தாயியை நோக்கி ஏறியதை, கிழவன் ரசித்தவாறு ‘வெள்ளைக் காரன் வெள்ளைக்காரன் தாண்டா … காத்தை புடிக்க முடி அடைச்சுப் யுமா … ? … சட்டியிலே அடைக்கமுடியுமா? … புட்டான் பாரேன்’ என்று வியந்து கொண்டிருந்தான்.

சிவசாமி மேல் பகுதியை தொட்டுப்பார்த்து விட்டு வளை யத்தை முன்புறம் பின்புறமாக திருகினான். அதுவரை அழுக்கு மஞ்சள் நிறத்தில் எரிந்து கொண்டிருந்த சுடரை ‘டப் டப்’ பென்று அடித்துக்கொண்டு, குபீரென்று குளுமையான வெள்ளி ஒளி பரவியது. குழந்தைகளும் கிழவனும் காரண மில்லாமல் படபடவென்று கை தட்டினார்கள் ‘செத்தவனைத் தான் பொழைக்க வைக்க முடியுதில்லே, என்னென்ன வேலை பாரு? … என்றவாறு எழுந்தான் கிழவன். எப்பாடுபட்டேணும் தங்களுக்கும் ஒரு லைட் வாங்கிவிட வேண்டுமென்ற உறு அவன் மனதில் பிறந்தது. லைட் வாங்குவதென்றால் று யாரை நம்பியும் பயனில்லை. தன்கையே தனக்குத்துணை என்று எண்ணிக்கொண்டு காய்கறித்தோட்டத்துக்குள் இறங்கினான். தோட்டமென்றால் அது ஒன்றும் பெரியசேனையல்ல சரிவான பூமியில் புதைந்த மண்மேடு மாதிரி ஏழெட்டுப்பாத்திகள் ஆகக்கீழ் பாத்தியின் ஓரமாக வேலியைத்தொட்டுக்கொண்டு, இரண்டு வாழை மரங்கள். இன்னொரு இடத்தில் அவரைக் செடி ஒன்று, ஆதரவுக்காக நட்டிருந்த மர அலம்பலில் தாறு மாறாய்ப் பின்னிக்கிடந்தது. ஒரு பாத்தியில் வெங்காயச்செடி கள் நுனியில் மஞ்சள் பூத்து புல்களுக்கு மத்தியில் தலை நீட் டிக்கொண்டிருந்தன. மற்றும்படி ஒரே புற்காடு.

தனி மனிதன் ஒருவன் முழுநேரம் பாடுபட்டால் மாதம் ஐம்பது ரூபா காணலாம் என்ற நம்பிக்கையோடு ‘அப்பனே சம்முகா’ என்று முனகிக்கொண்டு மண்வெட்டியைத் ஓங்கி ஓங்கிப் போட்டான்.

இப்போதெல்லாம் பொழுது விடிந்தால் கிழவனுக்கு காய்கறி தோட்டத்துக்குள் தான் வேலை ஒளியைத்தேடும் வேட்கையில் அவனுக்குள் அசுர வெறியே ஏற்பட்டிருந்தது. காடாக மண்டிப்போயிருந்த புல் பூண்டுகளை அழித்து, பாத் திப்பிடித்து, பளீரென கேழ்வரகுப் பிட்டுபோல கருமண் ஜொலிக்க இரண்டு வார காலத்துக்குள் அற்புதத்தையே விளைவித்திருந்தான். மேலே இருந்த இரண்டு பாத்திகளில் பத்து நாளைய போஞ்சிக்கன்றுகள் மண்ணைப் பொத்துக் கொண்டு குஞ்சு இலைகளும் பிளந்த விதையுமாக நின்றன.

‘தாத்தா’ என்ற குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். மேலே வேலி ஓரமாக சிவசாமியின் தலைமட்டும் வேலிக்கம் பில் வெட்டிச்சொருகியது மாதிரி தெரிந்தது.

‘என்ன தோட்ட வேலையா?…’

‘ஆமா’

பல்லில்லாத முரசு தெரியச்சிரித்து விட்டு தலைத்துண்டை எடுத்துமுகத்தைத் துடைத்துவிட்டு வியர்வை கசகசத்த கழுத்தையும் மார்பையும் துடைத்துக்கொண்டான் கிழவன்.

‘ஒரு அஞ்சாறு பாத்தி தக்காளி போடுங்க, அப்பத்தான் காசைப்பாக்கலாம்’ என்றான் சிவசாமி.

இன்னும் பயிரிடப்படாத வெற்றுப் பாத்திகளைப்பார்த்து விட்டு ‘பாப்பம்’ என்று தலையை ஆட்டிக்கொண்டான். சிவ சாமியின் யோசனை உருப்படியான யோசனையாகத்தான் பட்டது.

மழை பெய்யும் போலிருந்தது. டப்டப் பென்றுமழைத் துளிகள் கையிலும் முதுகிலும் விழத்துவங்கின. மேலே அண் ணாந்து பார்த்தான். சூல் கொண்ட கருமேகக் கூட்டம் பரவி வந்து கொண்டிருந்தது. துளிதுளியாக விழ ஆரம்பித்த மழை சரம் சரமாக இறங்கத் துவங்கியவுடன் கிழவன் மண்வெட் டியை தோளில் வைத்தவாறு தோட்டத்தை விட்டு வெளியே வந்தான். கையோடு பீலியடிக்குப் போய் கை கால்களைக் கழு விக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது கூரைத்தகரத்தின்

மீது கணகணவென்ற பேரிரைச்சலோடு மழை கடுமையாகப் பெய்யத்தொடங்கியது. கிழவன் வேறு உடை அணிந்து கொண்டு சிவப்பு கரைப்போட்ட கறுப்புப் போர்வை ஒன் றைப் போர்த்தியவாறு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். மழையில் நனைந்து கொண்டிருந்த வெளி உலகம் வாசல்வழி யாக மங்கிய ஓவியம் போல் தெரிந்தது.

கிழவன் தோட்டத்தை நினைத்துக்கொண்டான். பூமி நன்றாக குளிர்ந்துவிடும். இன்னும் சில தினங்களுக்கு தண் ணீர் போட வேண்டிய அவசியம் இராது. இல்லாவிட்டால் அதுவேறு சிரமம். பீலியடியிலிருந்து தண்ணீர் கொண்டு போவது அதுவும் பத்துக் குடித்தனங்களுக்கு மத்தியில் என் பது பிரச்சனை அல்ல. சாதனை. வேலுவே ஒருநாள் சலித்துக் கொண்டான். கிழவனோடு சேர்ந்துகொண்டு அவனுடைய சிறுசுகள் செம்பிலும் குடத்திலும் தண்ணீர் கொண்டுபோவ தைப் பார்த்துவிட்டு ‘“இஞ்சே, ஒங்களுக்கெல்லாம் என்ன புடிச்சிருக்கு?” என்று பல்லைக் கடித்தவாறு தோட்டத்துக் குள் எட்டிப் பார்த்துவிட்டு ‘ம்க்கும்’ என்று வெறுத்துச் சலித்துக்கொண்டான். தோட்ட வேலையால் அவனுக்கு ஏதும் நஷ்டமில்லை ‘லைட் லைட்’ என்று சாவதுதான் அவனுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் சில தினங்களிலேயே அவனும் தோட்டத்தைப்பற்றி அக்கறை காட்டத் தொடங்கினான்.

கிழவனின் மருமகளின் கைங்கரியம் அது.

“ஒங்களுக்கித்தான் வாங்கிக் குடுக்க முடியல்ல, கஷ்டப் பட்டு நாலுகாசு சேத்து வாங்குறவுக வாங்கட்டுமே என்று அவள் சொன்னது அவனுக்கு நியாயமாகப் பட்டிருக்க வேண்டும். இப்போதெல்லாம் குடும்பத்தின் அன்றாடப் பேச் சுக்களில் தோட்டத்தைப் பற்றியும் சில பேச்சுக்கள் இடம் பெறுவதும், எல்லோரும் அக்கறை காட்டத் துவங்கி இருந்ததும் கிழவனுக்கு ஆறுதலாகவும் தெம்பாகவும் இருந்தது.

ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு என்றிருந்தால் நிலை மையே வேறு..

தை, மாசி மாதங்களில் கொழுந்துக்காலம் ஆரம்பித்து விட்டால் கிழவனும் அந்தத் தோட்டத்திலே வேகமாக கொழுந்து எடுப்பதில் தேர்ந்தவர்களான இன்னும்சில ஆண் களும் அனுமதி கேட்டுக் கொண்டு கொழுந்து வேலைக்குச் செல்வார்கள். மூன்று மாதங்களில் யாரும் எடுக்காத சம்ப ளம் வாங்கிக்கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் இந்த ஆசை வந்திருந்தால் ஒரே மாதத்திலேயே வீட்டில் லைட் தொங்கி இருக்கும்.

கிழவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஒருமுறை தோட்டத்திலேயே அதிக சம்பளத்தையும் பாராட்டாக பத்து ரூபாயும் பெற்றுக் கொண்டு வந்த அன்று, இறந்து போன அவன் மனைவி ‘திட்டி’ சுற்றிப் போட்டது ஞாபகம் வந்தது… தனது ஓங்கார இரைச்சலோடு மழை பொழிந்து கொண்டிருந்தது.

விடியற் காலையில் கிழவனுக்கு விழிப்புக் கண்டபோது அப்போதுதான் படுத்து உடனே கண்விழித்தோமா என்று ஒருகணம் எண்ணிக்கொண்டான். இரவு பெய்த கடுமை சற்றும் குறையாமல் அதே இரைச்சலோடு பெய்துகொண்டி ருந்தது. கிழவன் எழுந்து உட்கார்ந்தான். சற்று நேரத்தில் ‘ம்ஸ்டரு’க்காக மணி அடிக்கும் சத்தம்கேட்டது. கொஞ்சம் நேரம் தொடர்ந்த அந்த மணிச்சத்தம் நிறுத்தப்பட்டு சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிக்கத் துவங்கியபோது கிழவன் கிடந்த அறையின் உட்புறம் நோக்கி “இன்னைக்கி வேலே இல்லே போலேருக்கு…” என்றான்.

குளிருக்காக அடுப்பருகில் உட்கார்ந்திருந்த வேலு “இந்த மழையிலே எப்படித்தான் போறது?'” என்றான். அநியாயம், ஒருநாள் சம்பளம் போச்சு” என்று சலித்துக்கொண் டாள் கிழவனின் மருமகன்.

வாசல்புறம் ஏதோ சத்தம் கேட்டது. கிழவன் எட்டிப் பார்த்தான். படிகளின் அருகில் குடையோடு நின்ற ஒரு வன் ஏதோ சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தான்.

தை, மாசி மாதங்களில் கொழுந்துக்காலம் ஆரம்பித்து விட்டால் கிழவனும் அந்தத் தோட்டத்திலே வேகமாக கொழுந்து எடுப்பதில் தேர்ந்தவர்களான இன்னும்சில ஆண் களும் அனுமதி கேட்டுக் கொண்டு கொழுந்து வேலைக்குச் செல்வார்கள். மூன்று மாதங்களில் யாரும் எடுக்காத சம்ப ளம் வாங்கிக்கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் இந்த ஆசை வந்திருந்தால் ஒரே மாதத்திலேயே வீட்டில் லைட் தொங்கி இருக்கும்.

கிழவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஒருமுறை தோட்டத்திலேயே அதிக சம்பளத்தையும் பாராட்டாக பத்து ரூபாயும் பெற்றுக் கொண்டு வந்த அன்று, இறந்து போன அவன் மனைவி ‘திட்டி’ சுற்றிப் போட்டது ஞாபகம் வந்தது… தனது ஓங்கார இரைச்சலோடு மழை பொழிந்து கொண்டிருந்தது.

விடியற் காலையில் கிழவனுக்கு விழிப்புக் கண்டபோது அப்போதுதான் படுத்து உடனே கண்விழித்தோமா என்று ஒருகணம் எண்ணிக்கொண்டான். இரவு பெய்த கடுமை சற்றும் குறையாமல் அதே இரைச்சலோடு பெய்துகொண்டி ருந்தது. கிழவன் எழுந்து உட்கார்ந்தான். சற்று நேரத்தில் ‘ம்ஸ்டரு’க்காக மணி அடிக்கும் சத்தம்கேட்டது. கொஞ்சம் நேரம் தொடர்ந்த அந்த மணிச்சத்தம் நிறுத்தப்பட்டு சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிக்கத் துவங்கியபோது கிழவன் கிடந்த அறையின் உட்புறம் நோக்கி “இன்னைக்கி வேலே இல்லே போலேருக்கு…” என்றான்.

குளிருக்காக அடுப்பருகில் உட்கார்ந்திருந்த வேலு “இந்த மழையிலே எப்படித்தான் போறது?'” என்றான். அநியா யம், ஒருநாள் சம்பளம் போச்சு” என்று சலித்துக்கொண் டாள் கிழவனின் மருமகன்.

வாசல்புறம் ஏதோ சத்தம் கேட்டது. கிழவன் எட்டிப் பார்த்தான். படிகளின் அருகில் குடையோடு நின்ற ஒருவன் ஏதோ சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தான்.

– சிந்தாமணி 9-12-67

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *