கிராமத்தின் பெரும் பணக்காரரான முத்து சிறுவயதில் இருந்தே தானம் செய்வதில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. எப்போதும் யார் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பான் முக்கியமாக தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி புரிவான் இதனால் அவ்வூரில் உள்ள பெருந்தலைகளுக்கு அவனைப் பிடிக்காது ஆனாலும் இவன் உதவி நிக்காது.
வருடாவருடம் தன் தந்தையின் பிறந்தநாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்து அந்த ஊரிற்கு மட்டுமல்லாது பக்கத்து ஊர்களுக்கும் விருந்து வைப்பான். இந்த வருடம் திருமணம் நடந்திருந்தால் வெகு சிறப்பாக விருந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது உதவியாளரை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்.
அவனது புது மனைவி ஏங்க வருடா வருடம் இத செய்கிறீர்களா என கேட்க ஆமாம்மா.. அப்ப இந்த வருசம் கோயில்ல வேண்டாங்க அது மட்டுமல்லமால் பக்கத்து சுத்து பட்டி கிராமத்தையும் அழைத்து நம்ம வீட்டு களத்துலயே எல்லாருக்கும் விருந்து போட்டு கூட வேட்டி, சேலையும் கொடுக்கலாங்க எங்கப்ப நமக்கு சீர் செய்யறன்னு சொன்னாறு அதையும் வாங்கி சிறப்பா செய்யலாங்க என்றாள்.
நீ சொன்ன சரி நல்ல செய்யலாம் என்று கூறி அதற்கான ஏற்பாட்டுக்கு விரைந்தான்…
புதுமனைவி மனதில் சிரித்தாள் இந்த வருடம் இந்த ஊர் தலைவர் தேர்தலுக்கு பெண்களுக்கு ஒதுக்கி இருக்காங்கன்னு சொன்னாங்க.. இத்தனை வருசம் செலவா செஞ்சாறு மனுச தேர்தல்ல நாம நின்னா வெற்றி வாய்ப்புக்கு இந்த விருந்தில் இருந்தே ஓட்டு வேட்டைய ஆரம்பிச்சுடவேண்டியதுதான்…
நச்சின்னு இருக்கு.