கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 2,595 
 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாதுகா எனப்பட்ட கிராமம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்றரை மைல். அந்தக் கிராமத்துக்கு அரைமைல் தூரத்திலுள்ள ரோட்டு வழியாய் மோட்டார் பஸ்ஸுக்கள் ஓடுகின்றன. ரோட்டில் பஸ் நிற்கிற இடத்தில் இறங்கி கிராமத்துக்கு நடந்துபோக வேண்டும்.

சுமார் நான்கு வருஷங்களுக்கு முன் பத்மநாபனும் அவனுடைய மாமா கோபாலாச்சாரி யாரும் ஒரு நாள் அந்தக் கிராமத்திற்குப் போவதற்காக காலையில் ஐந்து மணிக்கு ரயிலை விட்டு இறங்கினார்கள். வெளியில் வந்து பஸ்ஸைப் பார்த்தால் ஒரு பஸ்ஸைக் கூட காணோம். பஸ் ஓட்டுகிறவர்களெல்லாம் இரண்டு தினங்களாக அவர்களுடைய எஜமான்கனிடம் சம்பள விஷயமாகத் தகரார் செய்து கொண்டு வேலைநிறுத்தம் செய்து விட்டார்களாம். தகரார் முடிகிற வரையில் பள்ஸுக்கள் ஓடாதென்று தெரியவந்தது. ரயில்வே ஸ்டேஷனில் சத்தத்துக்கு ஓடும் வண்டிகளையும் காணோம்.

“கிராமக்களுக்குப் போவதென்றால் இது தான் பெரிய தொல்லை. சென்னப்பட்டணம் ஆகாது மாமா. எந்த சமயத்தில் எது வேண்டுமானாலும் தயாராய் அகப்படும். எல்லோரும் கிராமத்தை அடைய வேண்டுமென்கிறார்களே. கிராமங்கள் அழகு இந்தமாதிரி இருந்தால் எப்படி வந்து இருக்க முடியும்?” என்றான் பத்மநாபன்.

“பஸ் கிராமத்தைச் சேர்ந்ததல்லடா. அது பட்டணத்தைச் சேர்ந்தது. பஸ் அழகைச் சொல்வதை விட்டு விட்டு கிராமத்தை ஏன் பழிக்கிறாய்? பட்டணம் பட்டணம் என்கிறாயே, பட்டணம் அழகைச் சொல்லட்டுமா? அன்றைய தினம் பதினைந்து நிமிஷங்கள் பட்டணம் பூராவும் இருட்டாய்ப் போய் விட்டதடா. எலெக்டிரிக் ஸ்டேஷனில் ஏதோ கோளாறு ஏற்பட்டதாம். ஒரே விஜ டியில் பட்டணத்திலிருக்கிற எல்லா வீடுகளி ஓம் விளக்குகள் அணைந்து விட்டன. எல்லா ஜனங்களும் தெருவில் வந்து கத்த ஆரம்பித்து விட்டார்கள். டெலிபோன் மூலியமாகக் கேட்கலாமென்றால் டெலிபோனும் வேலை செய்யவில்லை. அதற்கும் அதே விசை தானே. கிரயனாயில் விளக்கு என்பது ஒரு வீட்டிலுமில்லை. அன்றைய தினம் என் மச்சினன் வீட்டில் கலியாண விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைந்து விட்டது. அப்புறம்? அப்புறத் தான்! யுத்தம் வந்தால் எதிரி எலெக்டிரிக் ஸ்டேஷன் மேல் ஒரு குண்டு போட்டு, ஜலத்தில் விஷங் கலந்து விட்டால் பட்டணம் அரோஹரா தான். குழாயில் ஏதாவது ஒரு பிரகு ஏற்பட்டு இரண்டு மணி நேரம் குழாய்கள் நின்றுவிட்டால் பட்டணம் படுகிற பாட்டைப் பார். விளக்கு, தண்ணீர், இவைகளைப் போல் எல்லாம் அகனவன் வீட்டில் தனித் தனியா யிருக்குமானால் ஒருநாளும் ஆபத்தில்லை. ஒருவன் வீட்டிலில்லாவிட்டால் மற்றொருவன் வீட்டிலிருந்து கொண்டு வரலாம். ஒரு பட்டணம் பூராவும் ஒன்றையே நம்பி விருந்தால் என்றைக்கும் மோசந்தான். பைகாராவிலிருந்து விசை வருகிறதாமே? அப்புறம் பட்டணங்கள் பட்டணங்களாய் இருட்டாக்க வேண்டியதுதான். குழாய்களையும் ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு இடத்திலிருந்து என்றில்லாமல், ராஜதானி பூராவுக்கும் மேட்டூர் அணைக்கட்டு மாதிரி கட்டி அங்கிருந்து குழாய்கள் வைத்தால் பட்டணத்தார்கள் கதி இன்னும் வேடிக்கையா யிருக்கும். இது புது நாகரீகமடா. ‘நீ ஒன்றும் பண்ணிக் கொள்ளாதே. நான் எல்லாம் உனக்குப் பண்ணி விடுகிறேன்! நீ நிர்க்கதியாய் நில். பணத்தை மாத்திரம் கட்டி விடு’ பணம் சம்பாதிக்கிற வழிதான் தெரியவில்லை. ஒவ்வொன்றுக்கும் பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டுமானால் பணத்துக்கு எங்கே போகிறது? பஸ் இல்லை என்றாயே, அதுவும் அந்த நாகரீகத்தைத் சேர்ந்தது. பஸ் வந்து ஒரு வண்டியில்லாமல் ஒழித்துவிட்டது. பஸ் நின்று விட்டதே, இப்பொழுது என்ன செய்கிறது? நடக்கவேண்டியதுதான். நட..” என்றார்.

“உங்களுக்குப் பட்டணங்களைக் கண்டாலே பிடிக்கலில்லை” என்றான் பத்மநாபன்.

“உனக்கு கிராமத்தைக் கண்டால் பிடிக்கவில்லை. நல்ல காற்று, நல்ல ஊற்று ஜலம், விசாலமாகப் பரந்த பூமி, விருஷன்கள், பஷிகள், கண்ணுக்கு ரம்மியமாய் மரகதம்போல் பச்சை பசேலென்று பயிர் நிறைந்த வயல்கள், இவைகளைக் கண்டால் உனக்குப் பிடிக்கவில்லை. சைனா பஜார்த் தெருவு, வால்டாக்ஸ் தெருவு, ஆனை கவுனி, மூலைக் கொத்தளம் இவைகளைக் கண்டால் உனக்கு ஆநந்தமாயிருக்கிறது. போலீஸ் ராகவாச்சாரியார் தெருவில் குடியிருக்கிறவனுக்கு எதில் ஆநந்தம் வரும்? சரி, இப்பொழுது என்ன பண்ணுறது? கிளம்பு, நடக்கலாம்” என்றார் மாமா.

“இந்த பூட்ஸ் ஒன்று காலைக் கடிக்கிறது, அதற்காகத்தான் யோசனை செய்கிறேன்” என்றன் பத்மநாபன்.

“பூட்ஸை கையில் எடுத்துக்கொள்ளுகிறது. அது நம்மை சுமக்கிறதோ இல்லையோ? பொழுது அதை நாம் சுமக்கிறது.”

“அதைக் கையிலெடுத்துக் கொண்டு போகிறதென்றால் வெட்கமாயிருக்கிறது, மாமா” என்றான் பத்மநாபன்.

“கிராமத்திலிருப்பவர்கள் செரூப்பைத் கையில் எடுத்துக்கொண்டு போக வெட்கப் படுகிறதில்லை. பட்டணத்தானே இல்லையோ! சரி. வெளியில் தெரியவொட்டாமல் அதை ஒரு துணியில் சுற்றி எடுத்துக் கொள்ளுகிறது. ஹும். ஆகட்டும். கிளம்பு” என்றார் மாமா.

இருவரும் கால்நடையாகக் கிளம்பினார்கள். பத்மநாபன் ஷர்ட்டு, கோட்டு, இடுப்பில் துணிக்குமேல் பெல்டு, மூக்கில் கண்ணாடி, கையில் ரிஸ்டுவாச்சு, தலையில் ஒரு அழகான குல்லாய், காவில் பூட்ஸ் இந்தக் கோலத்தில் இருந்தான். அவன் மாமா கோபாலாச் சாரியார் அரையில் ஒரு வேஷ்டி, மேலுக்கு ஒரு அங்கவஸ்திரம், கையில் ஒரு மடிசஞ்சி, காதில் சுற்றிய பூனூல், இந்தக் கோலத்துடனிருந்தார். பத்மநாபன் தங்கையினுடைய கலியாண விஷயமாய்ப் பிள்ளையின் தகப்பனார் பாதுகா கிராமத்திலிருப்பதால் அங்கு வந்து தகப்பனாருடன் பேசி முடிவு செய்வதற்காகப் பத்மநாபனும் அவன் மாமாவும் சென்னைப் பட்டணத்திலிருந்து கிளம்பி வந்தார்கள். இருவரும் அந்த கிராமத்திற்கு இதற்குமுன் வந்ததில்லை. பத்மநாபன் எந்தக் கிராமத்துக்குமே இதற்குமுன் போனதில்லே. பட்டணத்தில் அவன் தகப்பனார் கார்ப்பொரேஷனில் வேலையாயிருந்தார். பத்மனாபன் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்தவன். பத்மனாபன் பச்சையப்பன் காலேஜில் சேர்ந்து படித்து பி.ஏ. பாஸ் செய்தான். அவன் தகப்பனார் இறந்து விட்டார். இவனுடைய தாயார் தங்கை இவன் ஆகிய மூன்று பேர்களுந்தான் வீட்டில், உத்தியோகத்திலிருக்கும் அநேகர்களைப் போல் அவர் தகப்பனார் இருந்த வரைக்கும் சம்பாதித்தார். செலவு செய்தார்; கையில் காலணா இல்லாமல் இறந்துவிட்டார். சொத்தும் ஒன்றும் கிடையாது. பிணத்தை எடுப்பதற்கே தாயார் கையில் போட்டிருந்த இரண்டு வளையல்களை விற்றுக் காரியம் நடக்க வேண்டியிருந்தது. உத்தியோகத்தில் சம்பாதிக்கிறவர்கள் கதி அநேகமாக இப்படித் தான். பத்மனாபன் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமையில் வந்துவிட்டது. போதாதற்கு கலியாணம் செய்து கொடுக்கவேண்டிய தங்கை ஒருத்தியிருந்தாள். வருஷங்களாக எங்கெங்கேயோ நான்கு வேலைக்குப் பிரயத்தனப்பட்டுப் பார்த்தான். அங்கே வேலை கொடுக்கிறேன் என்கிறார்கள்; இங்கே கொடுக்கிறேன் என்கிறார்கள் என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு வந்தானே யொழிய, ஒரு வேலையும் கிடைக்கவில்லை. என்ன செய்வான் பாபம்! எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறது, பி. ஏ. பாஸ் செய்திருக்கும் ஒருவனால் மாதம் இருப்து ரூபாய் கூடவா சம்பாதிக்காமலிருக்க முடியும் என்று சொல்லலாமே, ஒழிய, சொல்லுகிறவர்கள் இருபது ரூபாய் தான் எப்படி சம்பாதிகிறது? வேலை செய்ய பத்மனாபன் தயார்தான். வேலை எங்கே கிடைக்கிறது. வேலையகப்படாமல் சம்பாத்தியமில்லாம விருப்பவன் படும் கஷ்டத்தை பிறத்தியார் சாதாரணமாய்த் தெரிந்து கொள்ளமுடியாது, அவர்வர்களுக்கு அம்மாதிரி கஷ்டம் வந்தால்தான் தெரியும். கொஞ்ச நாள் கால் அரை என்று தெரிந்த சிநேகிதர்கனிடத்திலெல்லாம் கடன் வாங்கினான். இவனுக்குக் கடன் கொடுத்திராத சிநேதனே இல்லாமற் போய்விட்டது. இனி யாரையுங் கடன் கேட்பதற்கில்லை. கடைகளில் சாமான்கள் கடனாய் வாங்கி வந்தான். ஒரு கடையில் கணக்கு அதிகமாய் ஏறிவிட்டால் அதைவிட்டு வேறு கடையில் கடன் வாங்குகிறது. இம்மாதிரி கொஞ்சநாள் காலத்தைக் கழித்தான். கடன் கொடுத்த கடைக்காரர்கள் கடன் கேட்க வீட்டிற்கு வந்தால் என்ன செய்வான்? விட்டிலிருந்துகொண்டே இல்லை என்று சொல்லச் சொல்லுகிறது. அவர்கள் தெருவில் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். நேருக்கு நோய் அகப்பட்டுக் கொண்டால் ‘புதன்கிழமை ஒரு இடத்திலிருந்து பணம் வருகிறது, கட்டாயம் பைசல் செய்தவிடுகிறேன்’ என்று புளுகுகிறது. ஆஹா! பி.ஏ. பாஸ் செய்த பிள்ளை! எவ்வளவோ நாணயமாகவும் கௌரவமாகவும் பிழைக்கவேண்டியவன் படிப்பின் அழகு சம்பாதிக்கிறதற்கு யோக்கியதையில்லாமல் செய்ததுடன் புளுகும் புனைசுருட்டும் தலைப்பா மாற்றி போமும் செய்யும்படிக்காகவா கொண்டு வந்துவிடுகிறது. அவன் வேண்டுமென்று இந்த அற்ப வழிகளி ல் இறங்கினான்? இது அவன் செய்த விணையா, படிப்பு என்று எழுதினார்களே அவர்கள் செய்த கொடுரமா? பதிமனுபனுக்கு நிலைமை சகிக்கமுடியாமற் போய்விட்டது. ஆனால் படிப்பு ஒன்று இருக்கிறதோ இல்லேயோ, அதனுடைய குணம் பேச்சு மாத்திரம் ரொம்ப அழகாய் கிளம்பும். ‘வேலையில்லாதவர்கள் கிராமத்துக்குப் போய் இருக்கிறது’ என்கிறார்களே அது முடிகிற காரியமா? கிராமத்தில் போய் நான்கு நாளிருந்தால் அவனுக்குப் பயித்தியம் பிடித்துவிடும். வாயால் வக்கணையாய்ச் சொல்லிவிடலாம். கிராமத்தில் நம்மோடு பேசுவதற்குத் தகுதியான ஆள் ஒருவன் இருப்பானா? காந்தி சொல்லுகிற மாதிரி காந்தி ஒருவர்தானிருக்கலாம்.” என்று இம் மாதிரியாக எந்த விஷயத்துக்குமுண்டான சாதகபாதங்களை ரொம்ப சுவாரசியமாய் எடுத்துச் சொல்வான். அவன் பேச்சைக் கேட்டாலே என்ன புத்திசாலி என்று தோன்றும். இம்மாதிரிப் பேசிப்பேசி தானே நம் தேசம் இந்த நிலைமையிலிருக்கிறது!

சாப்பாட்டுக்குக் கஷ்டம். போதாமல் தங்கைக்குக் கலியாணம் செய்யவேண்டிய கஷ்டம் வேறு. இவன் மாமா பெண்ணுக்கு வயதாய் வீட்டுத என்று கவலைப்பட்டு, தான் ஐநூறு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லிப் பெண்ணுக்குக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். மாமா ஒரு கிராமஸ்தர், சொற்ப நிலங்களை வைத்துக்கொண்டு கஷ்டப் பட்டு ரொக்கத்தில் இரண்டாயிர ரூபாய் வரையில் சம்பாதித்து வைத்திருந்தார். தங்கைப் பெண்ணாச்சுதே, கலியாணம் செய்யச் கஷ்டப்படுகிறார்ளே என்று மனமிரங்கி ஐநூறு ரூபாய்க் கொடுப்பதாக முன்வந்தார். அந்தக் கலியாண விஷயமாய்த் தான் இருவரும் பாதுகா கிராமத்திற்கு வந்தார்கள்.

ரயில் ஸ்டேஷனைவிட்டுக் கிளம்பும்போது மணி ஐந்தரை. காலையில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இவர்கள் சென்ற ரோட்டில் இரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய ஆலவிருக்ஷங்கள் ஓங்கி வளர்ந்து ஒன்றையொன்று கவ்விக்கொண்டிருந்தன. பணித்துணிகள் பன்னீர் தெளிக்கிற மாதிரி இவர்கள் மேல் பொழிந்து கொண்டிருந்தன. காலை நேரத்துக்குண்டான அலாதி வாசனை வீசிக் கொண்டிருந்தது. அந்த வாசனையை என்ன வாசனையென்று சொல்லுகிறது? காலைவேளை வாசனைதான் அது. அந்த வேளையில் வெளிக் கிளம்பிப் போகிறவர்களுக்குத் தான் அது தெரியும். ஆலை மரங்களில் பஷிகள் கலகல வென்று சப்தம் செய்து கொண்டிருந்தன. வழி கடப்பது உற்சாகமாக இருப்பதாகத் தன்னையறியாமலே பத்மனாபன் உணர்ந்தான். குளிர்ந்த காற்று மேலே வீசவும் பக்ஷிகள் தொணி செவிக்கு இனிப்பாய் இருக்கவும், சுற்றுப் புக்கங்களில் கயல்கள் பசுமையாய் கண்ணுக்கு ஒரு ஆனந்தத்தைத் தாலம், பத்மனாபன் மனதிற்கு சொல்ல இயலாத ஒரு குதூகலம் ஏற்பட்டு, ” இந்த இடங்களெல்லாம் எவ்வளவு அழகாய் இருக்கிறது மாமா!” என்றான்.

“உனக்குக் கூடத் தெரிகிறதாடா? பி.எ. பாஸ் பண்ணவர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதே” என்றார் மாமா.

வழியில் ரோட்டில் பாலம் கட்டி பாலத்துக்கு அடியில் ஒரு கால்வாய் போய்ச் கொண்டிருந்தது. தண்ணீருக் கடியிலிருந்த மணலும் அதில் விளையாடிக் கொண்டிருந்த மீன்களும் பளபளவென்று தெரியும்படியாய் ஜலம் பரிசுத்தமாய்க் கால்வாயில் ஓடிக்கொண் டிருந்தது.

“இவ்விடத்தில் பல் தேய்த்துவிட்டுப் போகலாம்” என்றார் மாமா.

பத்மனாபன் தண்ணீரில் கைவிட்டதும் ரேகைகளுன்பட கை பூராவும் கண்ணாடியில் தெரிகிற மாதிரி தெரியவே, சிறிய குழந்தைகள் மாதிரி” தண்ணீரின் கையை விட்டு அனைந்தான். சிறு மீன்களெல்லாம் மிரண்டு ஒடுவதைக் கண்டு அவைகளை இன்னும் விரட்டி அவைகளுடன் விளையாடிஞன்,

“கால்வாய் ஜலம் எவ்வளவு தாலன்னியமா யிருக்கிறது பார்த்தீர்களா மாமா!” என்றான்.

“பாவம். இந்த மாதிரி ஜலத்தைக் எக்கே பார்த்திருக்கிறாய்!” என்றார் மாமா.

“இந்த அழகையெல்லாம் பார்த்தால் இங்கேயே இருந்துவிடலாமா என்று இருக்கிறது. மாமா” என்றான்.

”இருந்து வீடேன். பட்டணத்தில் சம்பாத்தியம் என்ன முழுகிப் போகிறது. ஆனால் உனக்கு வேண்டியதெல்லாம் இங்கே என்ன இருக்கிறது? காபி ஹோட்டலிருக்கிறதா? காலையில் ஐந்து மணிக்கெல்லாம் இட்டிலி சாம்பார் அகப்படுமா? ஐஸ் போட்ட கிரஷ் அகப்படுமா? நீ போட்டுக்கொள்ளுகிற காலர் நெக் டை இந்த அழகுகளையெல்லாம் பார்க்கிறதற்கு இங்கே எந்த மனுஷியர்களிருக்கிறார்கள்?”

“பரிகாஸம் பண்ணுகிறீர்களோ மாமா?”

“பரிகாஸமென்னடா? வாஸ்தவத்தைத் தான் சொல்லுகிறேன்” என்றார் மாமார்

பல் தேய்த்துக்கொண்டு, ரோட்டிலேயே கொஞ்சதூரம் போனதும் இன்னும் அடர்த்தியான ஆலமரச்சாலை ஒன்றிருந்தது. அப்பொழுது இன்னும் சரியாக விடியவில்லை. அந்த சாலைக்குச் கொஞ்ச தூரத்தில் போய்க் கொண்டிருக்கும்பொழுதே, பெண் பிள்ளைகள் குரல் கேட்டது. அதில் ஒருத்தி எதோ ஒரு பாட்டைச் சொல்லவும் மற்றவர்கள் அதைக் கற்றுக்கொள்ளுகிற மாதிரியும் காதில் விழுந்தது. கிட்ட நெருங்கினதும் சுமங்கலிகளும் அமங்கலிகளும் சிறு பெண் வயது வந்தவர்களுமாக சுமார் இருபது பேர்கள் ஆலமரங்களின் கீழ் உதிர்ந்து விழும் பழுத்த இலைகளைப் பொறுக்கிக் கொண்டே கிருஷ்ணனுடைய லீலைகளைப் பாட்டாக ஒருத்தி சொல்ல மற்றவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

“பொல்லாத கோபிமாரம்மா – அவர்கள்
இல்லாத வார்த்தைகளைச்சொல்லுராரம்மா
நீ நம்பாதே நம்பாதே யம்மா…”

என்ற பாட்டுக் காதில் விழுந்தது. இருபது பெண்பிள்ளைகள் குரல் சேர்ந்து ஒரே சுரமாய்க் காதில் விழவே பத்மனாபன் மனதில் பெருத்த ஆனந்தமுண்டாயிற்று, பத்மனுபனும் அவன் மாமாவும் ரோட்டோடு வருவதைக் கண்டு “யாரோ புருஷாள் வராப் போலிருக்கிறதடி” என்றாள் ஒருத்தி. உடனே பாட்டு நின்றுவிட்டது. ஒவ்வொருத்தியின் மடியிலும் கோணிப்பை கட்டித் தொங்கவிட்ட மாதிரி மடி நிறைய ஆலைப் பழுப்புகள் இருந்தன. இவர்களுக்கெல்லாம் பாட்டுக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது பதினைந்து வயதிருக்கும் ஒரு பெண். குரல் மனதை அபஹரிக்கும்படியாக மதுரமாயிருந்தது. அவளுடைய அழகு பத்மனாபன் மனதை உடனே கொள்ளை கொண்டது. அவளும் இலை பொறுக்குவதை விட்டு இவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். இவர்களையென்றால் பத்மனாபனை. சிறுபெண் பார்வை கிழவர் பேரிலா போகும்!

பத்மனாபனும் மாமாவும் கொஞ்ச தூரம் போனபிறகு இலை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள் பாட்டை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டே பழுப்புக்களைப் பொறுக்கினார்கள்.

“போகிறவர்கள் யாரோ தெரியவில்லை. நம்மவர்களாட்டமா இருக்கிறது. நம்ம ஊருக்குத்தான் போகிறார்களோ?” என்றாள் ஒருத்தி.

“யாரோ தெரியவில்லை. புதியவர்களாயிருக்கிறார்கள். அந்தப் புள்ளை லக்ஷணமா யிருக்கிறான். முகத்தில் நல்ல களை. கலியாணமாகாத பிள்ளையாயிருந்தால் நம்ம அலமுவைக் கொடுத்து விடலாம். என்னடி சொல்லுகிறே அலமு?”

“போ, அம்மாமி”

“போ என்னடி? யாரையாவது கலியாணம் பண்ணிண்டு தானே ஆகணும். அந்த பிள்ளை அழகாய்த் தானிருக்கிறான். கூடப் போகிற கிழவர் அப்பா போலிருக்கிறது”

“அவமுவைச் கலியாணம் பண்ணிக் கொண்டுபோவதற்குத்தான் வந்திருக்கிறானோ என்னவோ?”

“வெறுன்ன இருங்கோ அம்மாமி” என்று சாஹசம் செய்தாள். அலமு என்றது முதலில் கிருஷ்ண லீலைப் பாட்டுப் பாடிய பதினைந்து வயதுள்ள பெண்தான். இவர்கள் பேசிக் கொண்டது பத்மனாபன் காதில் விழுந்தது. மாமா கேட்டுச் கொண்டிருந்தாரோ இல்லையோ தெரியவில்லை. காலையில் அடங்கிய குரலில் சுப்ரபாதம் சொல்லிக்கொண்டே போய் கொண்டிருந்தார்.

“அலமுவைப் பண்ணிக்கொண்டு போவதற்கு கசக்கிறதா என்ன? அவ்வளவு அழகும் புத்திசாலியும் யாரிருக்கிறார்கள்? இன்னும் வயது பதினைந்தாக வில்லை. அவள் கையால் ஆயிர ரூபாய் சம்பாதித்து வைத்திருக்கிறாளே!”

“ஆயிர ரூபாய் எங்கே மாமி? ஆயிரம் சேருவதற்கு இன்னும் மூன்று வருஷங்களாவது ஆகும்” என்றாள் அலமு.

“நீ நடுவில் அந்தப் பணத்தில் எடுத்து வளை சங்கிலி பண்ணிக் கொண்டாய். இல்லாவிட்டா, இப்போ ஆயிர ரூபாயிராதா?”

“எப்படியிருக்கும் மாமி? இப்போ ஏழு வருஷங்களாய் இலை தைக்கிறேன். மாதம் நாற்பது கட்டுக்களே ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாற்பத்திக்கால் பத்து ரூபாய் ஆச்சு. அதில் துணி, ரவிக்கை, என்று இருபது ரூபாய்க்கு வாங்கிக்ளெண்டு விடுவேன். வருஷத்தில் நூறு ரூபாய்தானே ஆகிறது. ஏழு வருஷத்தில் ஆயிர ரூபாய் என்னமா ஆய்விடும்?”

“அது என்னமோ அம்மா, உன்னைப் பண்ணிக்கொள்கிறவன் அதிர்ஷ்டசாலிதான்”

இதற்குள் மாமா கொஞ்சதாரம் போய் நின்றுகொண்டு, “ஏண்டா பின் தங்கிவிட்டாய். வாயேண்டா ” என்று உரக்கக் கத்தினார். பதமனாமன் எழுந்து போனான்.

“ஏன் மாமா, அங்கே இலை பொறுக்கிச் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பிராம்மணப் பொம்மனாட்டிகளாட்டமாயிருக்கே அவாள்கூட இப்படி கண்டபடி வெளியில் இலைக்கென்றும் மற்றொன்றுக்கென்றும் வருகிறார்களா என்ன?” என்றான் பத்மனாபன்.

”போகாமல் என்ன? கொஞ்சம் நாகரிகம் ளெண்டாட ஆரம்பித்தால் தான் பெண்னை உள்ளே போட்டுப் பூட்டி வைக்கிறார்கள். கிராமங்களிலெல்லாம் சாதாரணமாய்ப் பொம்மனாட்டிகள் இரண்டு மூன்று போராய்ச் சேர்ந்து குளத்துக்குப் போகிறது, கோயிலுக்குப் போகிறது என்று தனியாய்ப் போய்க்கொண்டு தானிருக்கிறார்கள். அந்தப் பொம்மனாட்டிகள் இருக்கிறார்களே, அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் இந்த ஷணம் ரொக்கம் ஆயிர ரூபாய்க்குக் குறையாது. காலையில் இதோ இலை பொறுக்கிக் கொண்டு போகிறார்களா, இதை முதலில் அப்படியே உலர்த்துவார்கள். இராத்திரி பணியிலிருந்த பிறகு, இலைகள் வணங்கி யிருக்கும்போது எடுத்து அடுக்கி விடுவார்கள். இப்பொழுது வீட்டுக்குப் போன் வுடன் வீட்டு வேலையை முடித்துக்கொண்டு, எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து இலை தைக்க உட்காருவார்கள். சாயந்திரம் ஐந்து மணிவரைக்கும் தைப்பார்கள். யாராவது ஒரு பெண் இராமாயணமோ வேறு ஏதாவது கதையோ படித்துக்கொண்டிருக்கும். அதைச் கேட்டுக்கொண்டே இலை தைத்துக் கொண்டிருப்பார்கள். பட்டணத்திலிருந்து கடைக்காரன் வந்து நூறு நூறு கட்டுகளாக விலைக்கு வாங்கிக் கொண்டு போய்விடுவான். எருமுட்டை இவைகளை விற்றே ஒவ்வொரு பொம்மனாட்டியும் மாதம் இருபது ரூபாய் சம்பாதிப்பாள்…”

“நீ பி.ஏ. பாஸ் செய்துவிட்டு காலணா சம்பாதிக்க முடியவில்லையே என்று என்னைக் கேட்கிறீர்களோ மாமா?” என்றான் பத்மனாபன் சிரித்துக்கொண்டே.

“நான் கேட்கவில்லை. நீயேதான் கேட்டுக் கொள்ளுகிறாயே” என்றார் மாமா.

பத்மனாபன் மனநில் என்னன்னவோ புதிது புதிதான யோசனைகளெல்லாம் கிளம்பின. என்னென்னவோ தீர்மானங்களையெல்லாம் செய்தான். அவன் யோசனைகளின் குறுக்கே அலமு அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தாள், “அலமு கிராமப் பெண்ணான தினாலே நம்ம யோசனைக்கு ஒத்தமாதிரி யிருக்கும். பட்டணவாஸப் பெண்ணாயிருந்தால் பிய்த்துக் கொண்டு ஓடி விடுவாள்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

இருவரும் போகிற வழியில் கிராமத்தைச் சேர்ந்தாற்போல் ஒரு தோட்டமிருந்தது. அதில் நிறைய கத்திரி, வெண்டை, புடல் பாவை, கலியாணப் பூஷிணி இவைகளெல்லாம் போட்டிருந்தது. தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டு ரோட்டுப் பக்கம் திறந்த வழியிருந்தது, அங்கே கூடைக்காரிகள் அநேகம் பேர்கள் கரிகாய் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பிராம்மணர் தூக்குக்கோலால் நிறுத்துக் வாங்கிக் கூடைகளில் கொட்டிப் கொண்டிருந்தார். கூடைகளை யெல்லாம் தூக்கிக்கொண்டு கூடைக்காரிகள் போய்விட்டார்கள். அங்கிருந்து பிராம்மணர் கீழே வைத்திருந்த பணத்தைத் திரட்டி எடுத்துக் கொண்டெழுந்து, “ஸ்வாமிகள் எந்த ஊரோ?” என்று பத்மனாபனையும் மாமாவையும் கேட்டார். கிராமத்தில் யார் வந்தாலும் இப்படித் தான் விசாரிப்பார்கள். இவர்கள் தங்கள் விருத்தாந்தத்தையும் வந்த விஷயத்தையம் சொன்னார்கள். அந்த பிள்ளை நல்ல பிள்ளை, தகப்பனாரும் பரம சாது. பெண்ணை நன்றாக வைத்துக்கொண்டிருப்பார்கள். கட்டாயம் பண்ணிலாம்” என்று சொன்னார்.

பத்மனாபன் தோட்டத்துக்குள் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து அந்தப் பிராம்மணன் தோட்டம் எத்தனை ஏக்ரா விஸ்தீரண மென்றும் தோட்டப் பயிர் லாபகாந்தானா, செலவு மாதம் என்ன ஆகிறது, என்று இம் மாதிரி விசாரித்தான். “இதோ விற்றது. பாருங்களேன். இன்றைக்கு இரண்டரை ரூபாயகப்பட்டது. ஒவ்வொரு நாளைக்கு மூன்றும் அகப்படும். நான்கும் அகப்படும். ஒவ்வொரு தினம் ஒன்றுமில்லாமலும் போய் விடும். எல்லாம் நாம் படுகிற பாட்டின் பேரிலிருக்கிறது” என்றார்.

பத்மனாபன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். கபாவத்தில் படித்த நல்ல புத்திசாலி யானதால் அவன் யோசனைகளெல்லாம் சுவரஸியமான கேள்விகள் பூர்வமாக வெளிக் கிளம்பினது.

“ஏன் மாமா, சாப்பாட்டுக்கில்லை யென்று எவனெணையோ வேலைக்கு வியர்த்தமா யுருகுகிறோமே, கீழே குனிந்து பூமியைப் பார்த்து சாப்பாட்டுக்குக் கொடு என்றால் கொடுக்குமா இல்லையா?”

“கொடுக்கும்.”

“ஒரு புடல் விரையை நட்டால் இருநூறு புடலங்காயாய்க் கொடுக்கிறேனென்று பூமி சொல்லுகிறதா யில்லையா?”

“சொல்லுகிறது. அதே மாதிரி தாவும் தருகிறது”

“பூமி எப்பொழுதாவது ‘நோ வேகன்ஸி’, ‘வேலை காலியில்லை’, என்று சொல்லிவிடுமோ?”

“சொல்லாது.”

“மகா தயாளுவாய் பூமி தன் பொக்கிஷத்தைத் திறந்து வைத்துக்கொண்டு நமக்கு க்ஷேமத்தைக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறபொழுது, அந்த பொக்கிஷத்தை விட்டுவிட்டு வேலையகப்படவில்லை, சாப்பாடகப்படவில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் முட்டாளா இல்லையா?”

“சர்வ முட்டாள்.”

”நானும் அந்த சர்வமுட்டாளில் சேர்ந்தவன்தானே என்கிறீர்களோ?”

“உனக்குத் தான் விவேகம் உதித்துவிட்டதே. நீ எப்படி முட்டாளாவாய்” என்று மாமா சிரித்தார். பத்மனாபனும் சிரித்தான்.

– 1938 – பாரதமணி

எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார்; எஸ்.வி.வி: ஆகஸ்ட் 25,1880 - மே, 31, 1950) தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர். 40/50-களில் விகடனில் இவருடைய  கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஆங்கிலத்திலும் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தம் வாழ்வின் இறுதிக்காலம் வரை ஹிந்து மற்றும் ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதிய எஸ்.வி.வி., உடல்நலக்குறைவால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *