கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 5,489 
 
 

பாவய்யாவின் பூர்வீகம் சரியாகத் தெரியவில்லை. அவனைக் கோட்டுக்காரன் என்று சொல்லுவார்கள். கிழக்கே விளாத்திக்குளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊர். இந்தக் கிராமத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போகும்போது இவனை, இங்கேயே கிட என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்களாம்.

பயலுக்கு அப்பொழுது தாலைஞ்சி வயசிருக்கும். இடுப்பில் அரணாக்கயிறு ஒன்றுதான்; உருட்டைக்கட்டைப்போல இருப்பான். நல்ல கரிசல் நிறம், பிரகாசமான பெரிய்ய கண்கள். யாருக்கும் அவனைப் பார்த்தவுடனேயே பிடித்துவிடும். முகராசியான பயல். என்ன கஞ்சி ஊத்தினாலும் கழிக்காமல் சாப்பிடுவான். பச்சை மிளகாய், வெங்காயம் எது கொடுத்தாலும் வாயில் போட்டு ஆற அமர மென்று கஞ்சியை எடுத்துக் கும்பாவிலிருந்து உறுட் உறுட் என்று உருஞ்சிச் சாப்பிடும்போது, பார்க்கிறவர்களுக்கு தாக்கில் நீர் பாறும்; நாமும் அப்படிச் சாப்பிட்டால் என்ன என்று தோணும்.

இராமத்தில், சதா நச்சு நச்சு என்று அழும் குழந்தைகள், சாப்பிடா மல் முரண்டுபண்ணும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் ‘பாவய்யாவைப் பார், எப்படிச் சமத்தா அழாமல் நன்றாகச் சாப்பிடுகிறான் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த அசட்டுக்குழந்தைகளோ, தங்களுக்குக் கிடைக்கும் திண்பண்டங் களைக்கூட ஒருத்தருக்கும் தெரியாமல் பாவய்யாவிடம் கொண்டு போய்க் கொடுத்து, எப்படி அவன் அதை ஆவலோடு சாப்பிடுகிறான் என்று பார்த்து அதிசயமும் ஆனந்தமும் படுவார்கள்!

அவனிடம் ஒரு குணம்; எது கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பான். கொடுக் கிறவர்கள் பார்த்து திறுத்தினால்தான் உண்டு.

எட்டாவது வயசில், பாவய்யாவின் அரணாக்கயிற்றில் ஒரு கோவணம் – நாலுவிரல் அகலத்தில் ஒருமுழ நீளத்தில் – தென்பட ஆரம்பித்தது. அப்போது அவன் மணியம் நாயக்கர் வீட்டில் மாடு மேய்க்க ஆரம்பித்திருந்தான். வீட்டில் பொம்பினைகள் சண்டைக்கு வருவார்களே என்றுதான் அவன் அந்தக் கோவணத்தை வைத்துக் கொண்டான். மாடுகளைப் பத்திக்கொண்டு, அவருக்குக் கொஞ்ச தூரம் வெளியே வருவதற்குள் கோவணத்தை உருவித் தலையில் கட்டிக் கொண்டு விடுவான்.

‘என்னலே பாவய்யா, கோமணம் தலைக்குப் போய்விட்டது! என்று அவனோடு மாடு மேய்க்கும் பையன்கள் கேட்டால்,

‘எனவு’ சீயபிண்ணு இருக்கு. என்பான். அரணாக்கயிற்றுக்கு மட்டும் பழகிப்போன அவனது ‘அரை’, கோவணத்திற்குப் பழக வில்லை இன்றும்

சாயத்திரம் ஊருக்குள் நுழையும்போதுதான் தலையிலிருந்த கோவணம் திரும்பவும் ‘அரைக்கு வரும்.

பாவய்யாவிடம் சில, கிறுக்குத் தானங்கள்’ உண்டு, வருஷத்தில் சில நாட்கள் ஊர் மடத்தில் வந்து பேசாமல் குப் புற அடித்துப் படுத்துக் கொள்வான். சாப்பிடாமலும் யாருடனும் பேசாமலும் நாள் கணக்கில் படுத்துக்கொண்டே கிடப்பான்.

ராத்திரிக்கு ஊர் மடத்தில் படுத்துக்கொள்ள வருபவர்களில் இளவட்டங்களும் உண்டு. அவர்களில் சிலர் பாவய்யாவைச் சீண்டுவார்கள். இப்படிப்பட்ட சமயங்களில் அவனைப் பேசவைக் கிறதே பெரும்பாடாக இருக்கும். யாராவது அகதிகள் அகாலதேரத்தில் வந்து ஊர்மடத்தில் படுத்திருப்பார்கள். அவர்களை இனவட்டங்கள் “யாரு எந்த ஊரு’ என்ற கேட்டுச் ‘சாப்பிட்டாச்சா’ என்று விசாரிப் பார்கள். இல்லை’ என்று அவர்கள் சொன்னால் இளவட்டங்களே நாலு வீடுகள் போய் தருமச்சோறு’ கேட்டு வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்குப் படைத்துச் சாப்பிடச் சொல்லுவார்கள். சிலசமயம் எடுத்துக்கொண்டு வந்த சோறு மிஞ்சிப்போகும். பாவய்யாயை எழுப்புவார்கள் சாப்பிடச் சொல்ல; ஆனால் பாவய்யா விழித்துக் கொண்டுதான் இடப்பான். அவனை எழுப்பி உட்கார வைப்பதற்குள் அவர்கள் படும்பாடு

அவளைச் சாப்பாட்டில் கைவைக்கச் செய்ய இவர்கள் ரொம்பப் பிரயாசைப்படுவார்கள், ஒரு இளவட்டம் அவனை சிரிக்கவைக்க ஒரு நகைச்சுவை மிகுந்த கெட்டவார்த்தைக் கதையைச் சொல்ல ஆரம்பிப்பான். அப்போது பாவய்யா சிரிப்பை மறைப்பதற்கு உதடு களால் பற்கள் தெரியாமல் இருக்க இறுக்கி மூடுவான், ‘ஓ பாவய்யா சிரிச்சிட்டான்; சிரிச்சிட்டான்டோய் என்று கூப்பாடு போட்டு அதில் ஒருத்தன் தரையில் படுத்து உருளுவான். அவ்வளவுதான்; பாவய்யா சமாதானமாகி மனம் விட்டு நிஜமாகவே – கொஞ்சம் பொய்க் கோபத்துடன் பிகுபண்ணி – சிரித்துச் சாப்பாட்டில் கைவைத்துச் சாப்பிடத் தொடங்கிவிடுவான்.

அப்படி அவன் சமாதானமாகிச் சாப்பிடும் போது இனவட்டங்கள் பாவய்யாவின் முதுகில், பதிலுக்குப் பழி வாங்குவது போலக் கையைப் பொத்திக்கொண்டு ஓசை வரும்படியாகப் பொய் அடி கொடுப்பார் கள், மத்தியில் நிஜமான அடிகளும் ரெண்டு விழும் பாவய்யாவின் அகலமான முதுகுக்கு இந்த அடிகளெல்லாம் கொசுக்கடி மாதிரி.

பாவய்யா குணத்துக்கு வந்துவிட்டான் என்று கேள்விப்பட்டதும் மறுநாள் காலையில் ஊர்க்காவல் நாயக்கர் மடத்துக்கு வந்து ‘பாவய்யா.’ என்று கூப்பிடுவார். விசுவாசமுன்ன தாய்க்குட்டி மாதிரி அவன் மறுபேச்சு சொல்லாமல் அவருக்குப் பின்னால் போவான். பிறகு அவர் சொல்லுகிற ஏதாவது ஒரு வீட்டில் அவன் பழையபடியும் மாடு மேய்யக்கத் தொடங்கிவிடுவான்.

பாவய்யா இப்பொழுது வளர்த்துவிட்டான். கொண்டிக்காவல்கார தாயக்கர் சொன்னமாதிரி, பயலுக்கு கக்கத்தில் ரோமம் முளைத்து விட்டது. ஆனால் அவன், அதே கோவணத்தான். வேட்டியை இருப்பில் கட்டிக்கொள்வதற்குப் பதில் போர்த்திக்கொள்வான். உச்சத் தலையில் அப்பளம் அகலத்துக்கு வட்டமாக ஒரு விரல் கடை உயரத் துக்கு விட்டு தலைமுடியை, சுற்றிலும் நன்றாக மழிக்கப் பட்டிருக்கும்.

வேலை செய்யும் தேரங்கனில்மட்டும் போர்த்திக்கொள்ளும் வேட்டியை எடுத்துத் தலையில் கட்டிக்கொள்வான். யாராவது ‘பாவய்யா, கொஞ்சம் கோமணத்தை சரியாக – இறுக்கமாக – வச்சிக்கோ’ என்று சொல்வார்கள். அதுக்குக் கொண்டிக்காவல் நாயக்கர் சொல்லும் பதில்,

‘சர்த்தாங்கெ; வேலைக்காரன் இது வெளியிலெ’ங்கிற பளமொனி தெரியாதா உனக்கு? அதுபாட்டுக்குக் கிடத்துட்டுபோகுது. நீ அதை கண்டுக்காதே’.

ஒரு நாள் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது பாவய்யா, கொண்டிக்காவல்காரரிடம் தன்னுடைய உடம்பில் ஊருகிற ஒரு பேன் ஒன்றை எடுத்துக் காட்டினான். அந்தப் பேன், தலையிலுள்ள மாதிரி இல்லாமல் வட்டமாக இருந்தது!

‘அடப் பாவிப்பயலே!’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு ‘சரி சரி; இண்ணைக்கு சும்மாயிலே மாட்டைப் போட கரைக்கு வருவெ வில்லெ! அப்பொ, குடி மகன்ட்டெ சொல்லி உடம்பு பூராவும் நல்லா வளிச்சி விட்டுரச் சொல்வோம்’ என்று சொன்னார்.

அன்று திங்கட்கிழமை கண்மாய்க் கரையில் குடிமகனைச் சுற்றிக் கூட்டம் இருந்தது. கொண்டிக்காவல் நாயக்கர் பாவய்யாவைக் குடிமகனிடம் ‘தள்ளிக்கொண்டு போய்’ விசயத்தைச் சொன்னார். அவன், ‘அதுக்குத் தேங்காய் பழம் கால் ரூவாய் தட்சனை எல்லாம் வேணுமே” என்று சொல்லி எகத்தாளமாய்ச் சிரித்தான். அப்பொழுது அவன் ஒரு பெரியவருக்கு மழித்துவிட்டுக் கொண்டிருந்தான். அவர் பின்பக்கம் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிச் சாய்த்து கொண்டு கால்களை அகட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார். குடி மகனின் பேச்சைக் கேட்டு அந்தப் பெரியவர் உள்பட எல்லாரும் சிரித்தார்கள். பாவய்யா கொஞ்சம் பின்வாங்கினான்! அட, அவன் அப்படித்தான் சொல்லுவான் நீ ஓம் பாட்டுக்கு இரு’ என்று இன வட்டங்கள் சொன்னார்கள்.

பெரியவர் எழுத்து வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டார். எல்லோரும் ஒருமனதாக பாவய்யாவை அந்த இடத்தில் அமர்த்தி னார்கள். இப்பொழுது கூட்டத்தில் ஒரு சின்னக் குஷி பரவியது.

முதலில் தலை; அப்புறம் பக்கம், முடித்தது. குடிமகன் இடது கையை, நனைப்பதற்காகத் தண்ணீர் கிண்ணத்தில் முக்கினான். பாவய்யாவினால் சிரிப்பை அடக்கமுடியவில்லை; உடம்பெல்லாம் கச்சத்தினால் தெளித்தது. குடிமகன் தன்னுடைய சிரிப்பை மறைக்கக் கூடி நின்றவர்களிடம் கோபப்படுவது போல் பேசினான்! போங்களே அந்தப் பக்கம்; பார்த்ததே இல்லையாக்கும்!

பேசிக்கொண்டே குடிமகன் தொழிலைச் செய்தான். பேச்சு அவன் தொழிலுக்கு வெஞ்சனம்! ‘பாவய்யா, உமக்கு உம்ம பொண்டாட்டி அடங்க இருப்பா. எப்படி வாய்ச்சி இருக்கின்று பாரும்! சரியான ஆளுதான் தீரு!” என்று சொல்லிவிட்டு, சிரிக்கும் கூட்டத்தைப் பார்த்து ஒரு பொய்ச்சிறல் சீறினான்.

பாவய்யாவினால் சரியாக இருக்க முடியவில்லை. கூச்சத்தினால் உளத்தினான். ‘இந்தா, உளத்தாத்ரும் சொல்லிட்டேன்; கத்தி விழுத் துரும். பிறகு அவ்வளவுதான் கல்யாணம் செய்ய முடியாது என்று அதட்டினான். கூச்சத்தை அவனால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. சிரிப்பதன் மூலம் அதைக் குறைத்துக்கொள்ளப் பார்த்தான். அப்படி இடைவிடாமல் சிரிப்பதனால் அவன் வாயிலிருந்து ஜொள்ளு

இப்படிச் சமயங்களில், சவரம் செய்து கொள்பவர்களைக் குடிமகள் தன் கத்தியை மாற்றிப் பிடித்துக்கொண்டு அவர்களுடைய கணுக்கால் எலும்பில் கணார் என்று ஒரு குடுப்புக் கொடுப்பான்! அந்தத் தாங்கமுடியாத வலி அவர்களை ஒரு நிதானத்துக்குக் கொண்டுவரும்!

இப்படியாகப் பாவய்யாவுக்கு, கொண்டிக்காவல்காரர் சொன்ன மாதிரி பயலுக்கு ‘பிறந்தமுடி’ இறக்கப்பட்டது. கம்மாய்க்கரையில் எப்பவாவது நிகழும் இந்த ‘முதல் பகல்’ நிகழ்ச்சி ஒரே கலகலப்பாய் அமையும்.

கம்மாய்க்கரை நிகழ்ச்சிக்கு அப்புறம் பாவய்யா கொஞ்சம் ‘ஒரு மாதிரியாக’ இருந்தான்.

வழக்கம் போல இவனிடம் வயசுவந்த பெண்கள் விளையாட்டுக்கு வாயாடுவார்கள். இவனால் அவள்களுக்குப் பதிலடி கொடுக்க இயலாது. அதோடு ரகர தார உச்சரிப்புகள் இவனுக்கு சரியாக வராது. உணர்ச்சிவசப்படும் போது வாய்வேறு திக்கும். ஆகவே உதட்டை இழுத்து இறுக்கி மூடிச் சிரித்துக்கொண்டே தழுவிவிடுவான். அன்று மறுநாள், அதிகாலையில் நல்ல தண்ணீர் எடுக்க பாகிணற்றில் சுற்றிலும் பெண்களும் ஆண்களுமாக நல்ல கூட்டம். பாவய்யாவுக்குப் பக்கத்தில் சுப்பாலு. அவளுடைய தோழிகள் தண்ணி இறைத்துக் கொண்டு இருந்தார்கள்.

சுப்பாலு ஒரு வாயாடிப் பெண். அந்தக் கிராமத்தின் பெருந்தனக் காரரின் செல்லமகள், தான் பெரிய்ய பணக்காரி என்கிற அகம்பாவம் அவளுக்கு உண்டு. அதனால் அவன் யாரையுமே மதிக்கிறதில்லை. எப்பப் பார்த்தாலும் பாவய்யாவை விரட்டிக்கொண்டே திரிவாள். இதில் அவளுடைய தோழிகளின் சிரிப்பு அவனை மேலும் உற்சாக மடையச் செய்யும்.

அவள் அன்றும் தனது தோழியரின் ஆதரவுடன் அங்கே பாவய்யாவைச் சீண்ட ஆரம்பித்தாள். அவனோ ஒதுங்கி இதுங்கிப் போனான். அவளை அன்று ஏதோ ஒன்று குறுகுறுக்கச் செய்தது. அவன் விலகிப் போகப்போக இவளை மேலும் அதிகப்படியாக அவனை விரட்டச் செய்தது. ‘ஒடுகிற நாயைக் கண்டால் விரட்டுகிற நாய்க்குத் தொக்கு’ என்பதுபோல.

பாவய்யா குடத்தை வேகமாக நிரப்பினான். தலையில் கட்டி பிருந்த வேட்டியைத் திரும்பவும் ஒருதரம் இறுக்கிக் கட்டினான். குடத்தை எடுத்துத் தலைக்குக் கொண்டுபோகக் குனித்தான்; அவ்வளவுதான் இமை தட்டுவதற்குள் அந்தச் செயல் நடந்து விட்டது!

அவனுடைய மௌனம், அவளின் வாயாடித்தனத்தை அவமானப் படுத்துவதுபோல் அவளுக்குப் பட்டதோ என்னவோ. அவளால் அதைத் தாளமுடியவில்லையோ என்னமோ அவன் குடத்தை எடுக்கக் குளித்தபோது அவனுக்குப் பின்பக்கம் அரணாக்கயிற்றில் சொருகி இருந்த கோவளத்தின் துளியை மட்டும் லேசாக உருவினாள், ஆனால் இப்படி ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை; கோவணம் பூராவுமே கையோடு வந்து தரையில் விழுந்துவிட்டது.

அவ்வளவுதான்; கிணறே வாய்விட்டுச் சிரித்தது. திடுக்கிட்டவர் கள் சுப்பாலுவும் பாவய்யாவும் தான்.

அவன் அப்படியே நின்றது பெண்களுக்குமுன் ஆண்களுக்கு நாண மாகவும், ஆண்களுக்குமுன் பெண்களுக்கு தாணமாகவும் இருந்தது.

இளவட்டங்கள் ‘டேய் தலைவேட்டியை எடுத்து இடுப்பில் கட்டிக்கோ’ என்று குரல் கொடுத்தார்கள். பாவய்யாவுக்கு அது கேட்க வில்லை. அவனுடைய கண்கள்தான் சிவப்பாகின,

பெண்கள் சிரித்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். ஆண்களுக்கு சிரித்து வயிற்றை வலித்தது; பாலய்யா அப்படியே அதே மேனியில் நின்றுகொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவன்கிட்டை வந்து, இழே விழுந்து தனைந்து கிடந்த கோவணத் துணியை எடுத்து அவளிடம் நீட்டினார். அவன் அவரையும் அந்தத் துணியையும் மேலும் கீழும் பார்த்தானே தவிர வாங்கி அணிந்து கொள்ளவில்லை.

டேய், இந்தா வாங்கி வச்சிக்கோ’ அந்தக் குரலில் கொஞ்சம் அதட்டல் அதிகமாகவே இருந்தது.

பாவய்யா அதற்கு தீர்க்கமாக பதில் சொன்னான் “ம்மு.மு. முடியாடு அவர் அவனை அதிசயத்தோடு பார்த்து ‘ஏண்டா?

‘அ.அ. அப்படிட்டாள்; முடியாடு’

எனக்கென்ன போ என்ற சொல்லி அவர் அதை எறிந்துவிட்டுப் போய்விட்டார்.

திரும்பவும் கொஞ்சநேரத்தில் ஒரு பெரியவர் வந்தார் பாவய்யா விடம். இது நல்லாயில்லை என்றும், அவனுடைய தலைவேட்டியை எடுத்து அவரே அவனுடைய இடுப்பில் சுற்றிக் ‘கட்டிக்கோப்பா’ என்றும் சொன்னார். ஆனால் அவனோ வேட்டியை உருவிப் பத்து போல் சுருட்டி எறித்துவிட்டான்.

“என்னடா இது; வம்பா பண்ரே பொம்பளைகள் பிள்ளைகள் வந்து தண்ணி எடுக்கிற இடத்தில் இப்படி திண்ணா என்னடா அர்த்தம்?

பாவய்யா இப்போது நிதானமாக அவருக்குப் பதில் சொன்னான், ‘ம்… மாமா, என்பேடில் ஒடு டப்பும் இள்ளை, இண்டா இவுகட்டே வேணும்னாளும் கெ. கேட்டுப்பாடுக்கெ… நாணா கொ. கோமணட் டுணியெ எடுட்டு எடுஞ்சிடளே.

‘சரி, சரி; இப்பொ அதுக்கு என்னடா செய்யணும்னு சொல்ரே? – ‘கொ…கோமணட்டை எடுட்டு தா வச்சிக்கிடமாட்டேண். அவடாளோ அவடாணே அவுட்டா; அவடாண் வண்டு வச்சி விடணும்!

இதைக் கேட்ட இளவட்டங்கள் ‘ஓஹோ ஹோ’ என்று ஆர்ப்பரித்தார்கள்.

துெ நல்ல வழக்குடா அப்பா! என்று அந்தப் பெரியவர் நடத்து விட்டார். கொஞ்சதேரத்தில் ஊருக்குள் ஒரு பெரியய பரபரப்பே உண்டாகிவிட்டது.

பெரும்பாலானவர்கள் பாவய்யாவைத்தான் தப்பு சொன்னார்கள். ‘அவன் என்ன கோமணமா வச்சிருந்தான்! அதைவிட பேசாமல் இருக்கிறது எவ்வளவோ மேல்!! ‘அது சரி, அவன் எப்படி வச்சிருந்தா இவளுக்கு என்ன? இந்தக் கோட்டிக் கமுதை அதைப்போயி என்ன மயித்துக்கு தோண்டலும்,

‘சரி தோண்டிட்டாய்யா: வச்சிக்கிடுவோம். அவ வத்துதான் எனக்குக் கோமணத்தை வச்சிவிடனும்று இவன் சொல்றது மப்புதானே”

இப்படிப் பலமாதிரியாக ஜனங்கள் தாக்கித்துக்கொண்டு இருக்கை யில், சுப்பாதுவின் சித்தப்பா ஒரே கோபாவேசமாக பாவய்யாயைப் பார்த்து வத்தார்.

வத்தவர் அவனைப் பார்த்து, கெட்டவார்த்தைகள் கலந்து அனாதைப்பயலே, வத்தட்டிப்பயலே அது இது என்று தாறுமாறாக ஏசினார். அவருடைய ஏச்சும் ஆத்திரமும் பாவய்யாமீதுகூட அவ்வளவு காரம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவள் இப்படி நடந்து கொள்ளப் பின் தூண்டுதலாக யாரோ இருப்பதாகக் குற்றம் சாட்டினார். ‘ஒன்னை இப்போ செருப்பைக் களத்தி அடிக்கேன்; தூண்டி விட்ட கார்ப்பய புள்ளைகள்ளெ எவன் வந்து இப்பொ ஒனக்கு உதவுதாண்ணு பாப்போம்’ என்று ஓங்கினார்.

ஓங்கிய அந்தக் கையை வந்து ஒருகை பிடித்துக்கொண்டது. அப்படிப் பிடித்துக்கொண்ட அந்தக் கைக்கு உடையவர் கேட்டார். “திரு செய்யிறது இது ஓமக்கே நல்லாயிருக்கா? திரு பெரிய்ய பணக்கார குண்ணா அது ஒம்மோட இருக்கட்டும். அதை விட்டுவிட்டு மனர்க் காரன்தான் இதுக்கு காரணம்ண்ணு சொன்னா அதை உம்மாலே புரு பண்ணமுடியுமா? முத்தி இப்படித்தான், பாவம் அனந்தப்ப நாயக்கரைக் கோழி பிடிச்சான்று சொல்லி அதியாயமா உம்ம மகளும் திரும் அவரு குடும்பத்தையே வரைவிட்டு துரத்திட்டஹ; இப்பொ என்னடாண்ணா ஊர்க்காரங்கதான் இப்படித் தூண்டிவிட்டாங் கண்ணு சொல்ரிரு, சும்மா இப்படி வாய்புளிச்சதோ மாங்காய் புளிச்சதோண்று பேசாதீரும். இப்பொ உம்ம மகள் செய்த ஏழைக் குறும்பு மட்டும் ஞாயமா

இதைக்கேட்ட சுப்பாலுவின் சித்தப்பாவுக்கு உடம்பெல்லாம் வெடவெட என்று ஆடியது. ‘டேய் வெங்கம்பய புள்ளைகளா, இருங்க உங்களைப் பார்த்துக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார். உடனே அங்கிருந்த விடலைகளின் எக்காள ஒலி அவரைத் திரும்பிப் பார்க்காதபடி வழியனுப்பி வைத்தது!

எனர்க்காரர்களின் தூண்டுதலால்தான் பாவய்யா இப்படி நடந்து கொண்டான் என்ற சுப்பாலு சித்தப்பாவின் பேச்சு, இப்பொழுது பவருக்குள் பாவப்பாவுக்கு ஆதரவாகத் திரும்பியது. இளவட்டங்கள் பாவய்யாவின் நிலையை பலமாக ஆதரித்துப்பேசி ஒரு மின்னல் வேகம் பிரச்சாரத்தையே முடுக்கிவிட்டார்கள். ‘கப்பாலு வந்துதான் பாவய்யா வுக்குக் கோவணத்தை வைத்துவிடனும்” என்று அவர்கள் கோஷம் தான் போடவில்லை! தேரம் ஆகிக்கொண்டே போனது.

சம்சாரிகளுக்கு இதுவா வேலை? அவர்கள் சீக்கிரம் தண்ணீர் எடுக்கனும்; கஞ்சி குடிக்கணும், காட்டுக்குப் போகணும்; இப்படி எத்தனையோ வேலைகள் காத்துக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இடைஞ்சலாக இந்த சனியம் பிடிச்ச சங்கதி வந்து சேர்த்திட்டதே என்ற முகச்சுளிப்பு ஒரு பக்கம்.

இந்தமாதிரிப் பாவய்யா சொல்லிக்கொண்டு கிணற்றடியில் இன்றும் அதேபடியாக நின்று கொண்டிருக்கிறான் என்று கேள்விப் பட்டதிலிருந்து சுப்பாலுவேறு அழுகையாய் அழுதுகொண்டிருந்தாள்,

விஷயம் மாரியம் நாயக்கர் காதுவரைக்கும் போய் எட்டிவிட்டது. அவருக்குச் சத்தம் போட்டுத்தான் எதையும் சொல்லாலும், காது அப்படி! நடந்ததைக் கேட்டு அறிந்து கொண்ட அவர் நல்லகத்துதான் போ” என்று சொல்லிச் சிரித்தார். அப்புறம் சுப்பாலுவின் சித்தப்பா வத்து சொன்னதைக் கேள்விப்பட்டதும் அவர் சிரிப்பதை நிறுத்திக் கொண்டார், நிறுத்திக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தலையை ஆட்டினார். கிழவர் ஓணான்மாதிரி தலையை ஆட்டினார் என்றாய் பழி வாங்காமல் விடமாட்டார் என்று அர்த்தம். ஒரு காலத்தில் இவர் எரிலேயே செழிப்பான புள்ளியாக வாழ்ந்து இப்போது பொருளா தாரத்தில் மிகவும் நொடித்துப் போனவர் என்றாலும் இன்றும் அவருக்கு கிராமத்தில் சொல்சக்தி குறைந்துவிடவில்லை. –

இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று மணியம் நாயக்கர், இன்றும் சில கார்ப்பெரியவர்களுடன் கிணற்றடிக்குப் போனார். அங்கே உள்ளவர்களிடம், நடந்தது என்ன என்பதைப்பற்றித் தீர விசாரித்தார்கள். பிறகு அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனாரையும் கூட்டத்துக்கு வரவழைத்தார்கள்,

தப்பிதம் பூராவும் சுப்பாலுவின் பேரில்தான் இருக்கிறது என்றும், அவன் ஒரு ஆணை, ஒரு தண்ணீர்த்துரையில் பலபேருக்கு முன்னால் பகிரங்கமாக வைத்து இப்படி பெரும் அவமானப்படுத்திய தப்பிதத்துக்காக அவளேதான் அவனுக்குக் கோவணம் வைத்துவிட வேண்டும் என்று மணியம் நாயக்கர் உள்பட பெரியாட்கள் தீர்ப்புச் சொன்னார்கள். இதைக் கேட்டதும் பெண்டுகள் திடுக்கிட்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு உண்டானது. சுப்பாலு ஓவென்று அழுதாள். மீசைக்கார சிங்கப்பூர் நாயக்கர், அவன் அழுவதைப் பார்த்து அவள் மாதிரியே உதடு கோணலாக வைத்துக்கொண்டு அழகு காட்டிவிட்டு சீ அழுகை வேரையா உனக்கு? இது முதல் லெயில்லெ தெரிஞ்சிருக் கணும் பொம்பளே; அமுதா போ; போ’

சுப்பாலு தயங்கினாள். என்ன செய்வதென்று தெரியலை. தனது கண்ணீரால் மன்றாடினாள் அங்குள்ளவர்களை. அந்தக் கொடுமை யான ‘வாயாடிக்’காரிக்கு இதுதான் சரி என்று அங்கிருந்த விடலைப் பிள்ளைகள் மனசுக்குள் கறுவிக்கொண்டார்கள்.

சுப்பாலு அழுதுகொண்டே கிணற்றடிக்குப் போனாள். கூட்டம் அவளைப் பின்தொடராமல் இருக்க கொண்டிக் காவல்காரரும் தலையாரியும் தடுத்து நிறுத்தியும்கூடப் பலர் அங்கே கூடிவிட்டார்கள்.

முகத்தில் கண்ணீர் வடிய அவன் கிணற்றடிக்குப் படி ஏறி நடந்து போவதையே வர் கவனித்துக்கொண்டிருந்தது. அவள் குளித்து இழே நனைத்து கிடத்த அந்தக் கோவணத்துணியை இடது கையின் இரண்டு விரல்களால் பிடித்து எடுத்துத் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு பாவய்யாவிடம் நீட்டினாள்,

பாவய்யா அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவளும் முகத்தை மறுபக்கம் திருப்பியபடி கோவணத் துணியை நீட்டிக்கொண்டிருந்தாள். திடீரென்று அசரீரிமாதிரி எங்கிருந்தோ ஒரு இளவட்டத்தின் வாயிலிருந்து அந்தச் சொல் வந்தது. ‘பாவய்யா வாங்கிக்கோ’. உடனே சொல்லி வைத்தமாதிரி அங்கிருந்த பலர் அதை வாங்கி எதிரொலித்தனர் ‘வாங்கிக்கோ, வாங்கிக்கோ பாவய்யா’ என்று எதிரொலித்தனர்.

முதலில் கூட்டத்தில் ஒரு குறுஞ்சிரிப்புப் படாத்து, அது வளர்ந்து பெரிசாகிக்கொண்டே வந்தது. பாவய்யா பற்களை உதடுகளால் இழுத்து மூடிக்கொண்டு தன் கோவணத்தை வாங்கிக்கொள்ள சுப்பாதுவிடம் கையை நீட்டினான், கூட்டம் இப்பொழுது சந்தோஷ ஆரவாரமே செய்தது. மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த சுப்பாலுவும் சிரித்தான். அவள் உடம்பை நாணத்தோடு ஆட்டிச் சிரித்தது அழகாகவே இருந்தது.

அப்பாடா; ஒரு மட்டுக்கும் முடிந்ததே. என்று நினைத்தார்கள். அது முடிவு இல்லை ; ஒன்றின் ஆரம்பம் என்பது பலருக்குத் தெரியாது!

– வேள்வி ஏப்ரல் 1974)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *