விடிவிளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 5,128 
 

நன்றாக விடிந்த பிறகும் குளிர்காற்று ஜன்னல் வழியாக படுக்கையறையை முற்றுகையிட்டிருந்தது.ஸ்டேல்லா எழுந்து சோம்பல் முறித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்து விட்டுப் பதறிப்போனாள்.

நைஜீரியா வந்து திடீரென்று வேலை போய் மூன்றுமாதங்கத் தவித்தாகி விட்டது. இன்று ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு எட்டு மணிக்கு அழைத்துள்ளார்கள். இப்போது மணி ஏழரை ஆகி விட்டது. இனி புறப்பட்டு டாக்ஸி பிடித்துப் போவதற்குள்… தலையை உசுப்பிக்கொண்டவள் காலண்டரைத் திருப்பிப் பார்த்து விட்டு, “ஓ நாளை கிறிஸ்துமஸ், என் யேசு பெருமான் பிறந்த நாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவையாவது என் தேவன் என்னைசந் தோசத்தோடு கொண்டாட வைத்து விடுவார்” என்று ஜெபித்துக் கொண்டே புறப்பட ஆரம்பித்தான்.

ரோட்டுக்கு வந்து எந்த டாக்ஸியும் கிடைக்காததால் எந்ந்ரம் போவதை உணர்ந்து பதறிப்போய் செல்போனில் ஆலிவரை அழைத்து “கொஞ்சம் கார் கொண்டு வர முடியுமா? எனக்கு ஒரு இண்டர்வியூவிற்கு போக வேண்டு” என்று கேட்டாள்.

“ஸாரி ஸ்டெல்ல, நான் இங்கே டர்பன் துறைமுகத்தில் நின்று கொண்டி ருக்கிறேன். என்னாச்சு எதாவது வேலை கிடைத்ததா?” என்று கேட்டான் ஆலிவர்.

“அதற்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன், இந்த ஒரு வாரத்திற்குள் வேலை கிடைக்கா விட்டால் இந்தியா திரும்ப வேண்டியதுதான். விசா வேறு முடிவடைகிறது. வேலையில்லாமல் விசா தர மாட்டார்கள். மூன்று வருடங்களாக சின்ன சின்ன வேலைகள் பார்த்து இந்த ஆண்டேனும் சந்தோசமாக இருக்கு மென்று நம்புகிறேன். ஊரில் இருந்த வீட்டைக் கூட விற்று விட்டு, அண்ணன் சென்னையில் தங்கி விட்டார். அண்ணியோடு தகராறு செய்து விட்டு வந்ததால் அங்கேயும் போக முடியாது. ஊரில் என்னை வரவேற்கவோ, ஏற்றுக் கொள்ளவோ யாருமில்லை.

மாமா வீட்டிற்கு போகலாம் ஆனால் அவர் போனமுறை நான் ஊருக்குப் போயிருக்கும் போதே என்னைத் தன்னுடைய சின்ன வீடாக வைத்துக் கொள்ள முயன்றார். அந்த மிருகத்திடமிருந்து தப்பி வந்ததே அதிசயம். ‘விசா’ முடிந்து இந்தியாவிற்கு எங்கே போவது?”

நைஜீரியா மூன்று வருடத்திற்கு முன்பு சந்தோசமாகத்தானிருந்தது. பணியாற்றிய கம்பெனி மூடிவிட.. பழைய கதைகள் மனதிற்குள் நொடியில் வந்து போக.. சட்டென நிகழ் காலம் வந்தாள். “ஆலிவர் அப்புறம் உங்கள் அப்பா அம்மாவிடம் பேசினீர்களா?” கொஞ்சம் ஏக்கத்தோடு கேட்டாள்.

கொஞ்சம் பொருமூச்சு விட்டுக் கொண்டே ஆலிவர் ‘’ஸ்டெல்லா உனக்கே நன்றாகத் தெரியும். என் அம்மா அப்பா இங்கு வந்து இருபது வருடங்களாகி விட்டாலும் இன்னும் இந்திய பிடிவாதத்தோடு இருந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இன்னும் சாதி வெறி பிடித்தாடுகிறது என்றும் புரிய வில்லை. இதிலே வேறு உனக்கு இன்னும் வேலையும் கிடைக்க வில்லையா? என்னால் எதையும் பேச முடிய வில்லை. அவர்கள் பேச்சை மீறி விட்டு வெளியே வந்து உன்னைத் திருமணம் செய்து கொண்டால் என்ன நிலை என்பது உனக்கே நன்றாகத் தெரியும்.

“எல்லாமே தேவன் விட்ட வழி. எப்படியாவது வேலை கிடைக்க பிறக்கப் போகும் யேசு பாலன் உதவி செய்வார். நாளை வரப்போகும் கிறிஸ்துமஸ் விழாவேனும் உனக்கும் எனக்கும் வாழ்வில் திருப்பத்தையும் மகிழ்சியையும் தரட்டும். போய் வா. பொறுமையாக நன்றாக தெளிவாக பதில் சொல். பல முறை பதட்டப்பட்டு இன்டர்வியூக்களில் தோல்வியுற்று வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறாய்”

“என்னைக் குத்திக் காட்டுகிறீர்களா?”

“இல்லை ஸ்டெல்லா. வேறு தேசம், வேறு மொழி மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பதட்டங்களையும் எரிச்சல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நம் வருங்காலத்தைச் செம்மைப்படுத்த ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக உனக்கு இந்த வேலை கிடைக்கும். போய் வா. வாழ்த்துகள்” தொடர்பைத் துண்டித்தான் ஆலிவர்.

ஸ்டெல்லார் வந்த டாக்ஸியை நிறுத்தி “செயின்ட் மேரீஸ் கான்வென்ட்” என்றாள்.

டாக்ஸி பள்ளிக்கு வந்து நிற்க, பதற்றத்துடன் நேர் முகத்தேர்வுக்கு தயாரித்தவைகளை நினைவு படுத்திக் கொண்டே உள்ளே சென்றார்.

சாயங்காலம் அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரியல் ஆலிவரின் அம்மா ரெஜினா பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தாள். சட்டென திரும்பிய போது உள்ளே வந்த ஸ்டெல்லாவைப் பார்த்து “எப்படியிருக்கிறாய்?” என்று மகிழ்ச்சியோடு கேட்டாள்.

ஸ்டெல்லாவிற்கு ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. “நன்றாக இருக்கிறேன். எனக்கு செயின்ட் மேரீஸ் கான்வென்டில் உதவி தலைமை ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. மிட்டாய் சாப்பிடுங்கள்” என்று பையிலிருந்து எடுத்துக் தந்தாள்.

‘மிக்க மகிழ்ச்சி, நானும் கூட உன்னை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆலிவருக்கு உன்னையே திருமணம் செய்து விடலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். வா, நாளை கிருஸ்துமஸ் திருப்பலிக்கு எல்லோரும் நம் வீட்டிலிருந்தே கிளம்பிப் போகலாம். இந்த வருடம் கிறிஸ்துமஸ் பெருவிழாவை

நம் வீட்டிலேயே கொண்டாடலாம்.” என்று ஸ்டெல்லாவின் கையைப்பற்றிக் கொண்டாள் ரெஜினாள்.

“ரொம்பா மகிழ்ழ்சி அத்தை. நாளை இரவு கண்டிப்பாக வருகிறேன்.” என்றவள் ஆலிவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது “ஸாரி ஸ்டெல்லா, நீ சொன்ன விசயங்களெல்லாம் மைகிழ்ச்சியைத் தருவதுதான் இருந்தாலும் எனக்குத் துறைமுகத்தில் வேலைகள்அதிகமாக இருப்பதால் நான் நாளை வருவது கஷ்டம். நீ அம்மாவுடன் தேவாலையம் போய் கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு வா.” என்றான்.

பொங்கிய மகிழ்ச்சியெல்லாம் வடிந்து போக “என்னம்மா..? என்னாச்சு? என்று கேட்ட ஆலிவரின் அம்மாவிடம் “ஆலிவருக்கு வேலை இருக்கிறதாம். அவர் கிறிஸ்துமஸுக்கு இங்கு வரமுடியாதாம். நான் நாளை வருகிறேன் அத்தை “ என்று சொல்லி விட்டு கிளம்பினாள் ஸ்டெல்லா.

மறுநாள் நகரே கிறிஸ்துமஸ் விழாக்கோலம் பூண்டு எங்கும் பலூன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆலயத்திற்குப் போக விருப்பம் இல்லாமல் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவை தொலைபேசி மணி அழைத்தது.

எதிர் முனையில் ஆலிவர். “என்ன ஸ்டெல்லா! நீ இன்னும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. இரவு தேவாலைய பூசைக்கு போக வேண்டாமா?” கேட்டான்.

“ப்ச் நீங்கள் இல்லாமல் இந்தக் கிறிஸ்துமஸும் விருப்பமில்லாமல் போய் விட்டது. நீங்கள் வந்திருந்தால் மகிழ்ச்சியாக…” என்று முடிப்பதற்குள் “ஏய்… எனக்கு விடுமுறை கிடைத்து நான் வீட்டிற்கு வந்து வீட்டிலிருந்துதான் பேசுகிறேன். உனக்கென்று டர்பனில் இந்திய துணிக்கடைக்குப் போய்பட்டுச் சேலை வாங்கி வந்திருக்கிறேன்” என்றான் ஆலிவர்.

மகிழ்ச்சியில் குதித்த ஸ்டெல்லா “ஓ! நடுநிசி கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்ல இறைவன் நம்மை இணைத்தே அழைத்துள்ளார். “இப்பொது புறப்பட்டு வருகிறேன்” என்றாள். அப்போதே அவளுக்குள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பமாகி இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *