வாழ்க்கை என்பது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 2,973 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோதையம்மாள் படைபதைக்கும் வெயிலேக்கூடப் பாசாமல் கையில் அப்பளம் வைத்திருக்கும் கூடையைச் சுமந்தவாறு எங்கோ விாைந்து கொண்டிருந்தாள். தெருவெங்கும் குடை கவிழ்ந்தாற்போல் கொன்றை மாங் களன் நிழல் கவிந்திருந்தது. அவள் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கம் கிடையாது. அப்பளம் இங்கு விற்பதில் கணிசமான லாபம் இல்லாவிட்டாலும், குடும்பத்தின் பற்ருக்குறையை ஈடு செய்ய முடிந்தது.

வெயிலில் இப்படிக் கால் கொப்ப விளக்க நடக்கிறாயே அம்மா. செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்’ என்ருள் மகள் வத்சலா. அவள் மட்டும் என்ன? நைலானும், ஹவாய் செருப்பும் போட் டுக் கொண்டு குலுங்குகிருளா? இடையில் சாயம் போன வாயில் புடவை – சில இடங்களில் தையல் பரிந்து மேலும் தைக்கமுடியாத நிலையில் விக்கை. அவளும் பொரியும் வெயிலில் பாதங்கள் சிவக்க தையல் வகுப்புக்குப் போகிறவள்தான்். தன்னுல் எல்லாவத் றையும் தாங்கிக் கொள்ளமுடியும் என்கிற எண்னம்.

ஹைரோட் கிருப்பம் வந்ததும் கார் என்று வெயில் மண்டையைப் பளக்க ஆாம்பாத்தது. ஒரு மாம்மட்டை எதுவும் இல்லை. தாகம் நாவை வறட்டியது. எதசே ‘ஐஸ்ஸ் என்று கூளிய படி ஆனநதமாக வெளியில் நடைபோடும் சிறுவன் வருவதைக் கண்டான் கோதை. ‘இளம் சத்தம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நடந்தாள்.

இன்னும் கொஞ்சதுரசம் நடந்தால் வக்கீல் சாம்பசிவத்தின் வீடு வந்து விடும். அந்த வீட்டில் பத்து ரூபாய்க்குக் குறையாமல் வியாபாரம் நடக்கும். அத்துடன், வத்சலாவுக்கென்று அவர்கள் வீட்டில்ரவிக்கைகள், புடவைகள் ஏதாவது கொடுப்பார்கள்.

சில்லென்று இந்த வெயிலுக்கு இதமாக ப்ரிஜடேரில் வைத்த மோர் கொடுப்பாள் வக்கீலின் மனைவி.

கோதை வேகமாக நடந்தாள் வக்கீல் வீட்டை நோக்கி. வழக்கம்போல பத்து ரூபாய் வியாபாரமும், குளிர்ந்த மோரும் கிடைத்தன. வீடு திரும்புகையில் வத்சலாவுக்கென்று இரண்டு ரிப்பன்கள், பாளாஸ்டிக் வளையல்கள் வாங்கிக் கொண்டு வந்தாள் கோதை. வெயிவில் நடந்துவந்த களைப்பு வேறு. வாசல் திண்ணையில் அலுப்புடன் உட்கார்ந்து கொண்டாள்.

அந்த வீட்டில் ஏகப்பட்ட குடித்தனங்கள். புற்றீசல்கள் போல காலை நேரத்தில் அவ்வீட்டிலிருந்து குழந்தைகளும், பெரியவர்களுமாக வெளியே வந்துகொண்டிருப்பார்கள். எதெது யார் யார் வீட்டுக் குழந்தைகள் கண்டு பிடிப்பதே கஷ்டமாக இருக்கும். காலம் மாறிவிட்டது என்று கருதுகிறவர்களும், மக்களின் நடை உடை பாவனைகள் யாவும் பண்பட்டுவிட்டன என்று நினைக்கிறவர்களும் கோதையம்மாள் குடியிருந்த திருமகள் ஸ்டோர்ஸ் ஒண்டுக் குடித்தனங்களை எட்டிப் பார்த்தார்களானால் மனிதன் இன்னும் மிருகப் பிராயத்கைத் தாண்டவில்லை என்பது புலனாகும்.

தெருத்திண்ணைக்கு அடுத்தாற்போல் இருந்த அறையிலிருந்து ஒருத்தி எட்டிப் பார்த்தாள் வெளியே.

“கோதை வந்துட்டியா நீ?” என்று மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயித்தாள்.

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதோ? உன் பெண் வத்சலாவைத் தேடிக்கொண்டு ஒரு பையன் வந்திருந்தான்.”

“பையனா” என்று அதிர்ந்து போனாள் கோதை.

இதற்குள் மற்றக் குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். ‘பையனா! பையன்’. அவர்கள் முகத்தில் வினாக் குறியைவிட வியப்புக் குறிதான் மிஞ்சி நின்றது.

‘யாராம்? வத்சலா தையல் வகுப்புக்குப் போகவில்லை?’ என்று கேட்டவாறு கோதை உள்ளே செல்ல பரபரத்தாள். ஜானகி மற்றவர்களைப் பார்த்துத் தலையை ஆட்டவும், அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும் அதைப் பார்க்கக் கோதை அங்கு இல்லையே என்று ஏங்கியபடி அவரவர் தத்தம் அறைகளுக்குப் போய்விட்டார்கள்.

உள்ளே வத்சலா காப்பி போட்டுக் கொண்டிருந்தாள். துடைத்துவிட்ட சிலையாக, கண்களும், மூக்கும் அளவோடு அமைத்து வறுமையிலும் இளமை பொங்க அவள் அடுப்பில் நீரை கொதிப்பதைக் குனிந்து பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தாள். பக்கவாட்டில் தெரிந்த அவள் முகம் கள்ளமற்ற குழந்தையைப்போல் இருந்தது.

“வத்சு!” என்று அதட்டிக் கூப்பிட்டாள் அன்னை. திடுக்கிட்டு நிமிர்ந்த அவள் முன்பு உழைத்து, ஒடாகிப் போன கோதை பூதாகாரமாக வெடுத்து நிற்பதுபோல் நின்றாள்.

“ஏண்டி! உன் அப்பா சோற்றுக்கு வந்தாரா இல்லை சீட்டாட்டத்திலேயே அழுந்திப்போய் இருக்கிறாரா? ஆமாம்…இங்கே யாரோ வந்தார்களாமே? யாரடி அது?”

வத்சலாவுக்குக் தாயின் கோபத்தைப் பற்றி நொடியில் புரிந்துவிட்டது. அம்மா வெயிலில் களைத்துப் போய் வந்திருக்கிறாள். வந்ததும் வராததுமாக அவளிடம் யாரோ இல்லாததும், பொல்லாததும் ஒதி இருக்கிறார்கள். பதுமை ஒன்று அசைவதுபோல் தாயின் முன்பாக ஒரு டம்ளரில் காப்பியை எடுத்து வைததாள்.

‘சாப்பிடம்மா-‘ அன்னையின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். இமைகளை அழுத்தும் கண்ணீரை மிகுந்த பிரயாசையுடன் அடக்கிக் கொள்ள முயன்றாள். படபடத்த கோதை இரண்டே விழுங்கில் காப்பியைக் குடித்துவிட்டு, ‘இதற்குள் காப்பிக்கு என்னடி அவசரம்? யார் வந்திருந்தது’ என்று கேட்டுவிட்டு நிமிர்ந்ததும் பூஜை மாடத்தில் வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கதம்பமும், ஒரு சீப்பு மலைவாழைப் பழமும் தெரிந்தன.

‘நீ அடிக்கடி சொல்லுவாயே. என்னுடைய அத்தை ஜபல்பூரில் இருக்கிறாள் என்று. அவளுடைய பிள்ளை யாம். வேலையாகப் பட்டணத்துக்கு வந்திருக்கிறாராம். அப்பாவையும், உன்னையும் பார்க்கவேண்டுமென்று வந்தாராம். போகிறேன் என்றுதான் சொன்னார். நான்தான் காப்பி சாப்பாட்டு விட்டுப் போகலாம் என்று கொடுத்தனுப்பினேன்.’

‘வாசுவா வந்திருந்தான்? கல்யாணிக்கு மூத்தவன்தான் பிள்ளை. அப்புறம் இரண்டோ மூன்றோ பிறந்ததாகச் சொன்னார்கள். முதல் பிரசவத்துக்குத்தான் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போ உன் தாத்தா, பாட்டி எல்லோரும் இருந்தார்கள். அப்புறம் இடையிலே தாத்தா, இறந்ததற்கு வந்துவிட்டுப் போனவள். பிறகுதான் போக்குவரத்தே இல்லையே.’

வத்சலாவுக்கு எங்கோ வசிக்கும் தன் அத்தையை உடனே பார்க்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது.

‘வாசு எப்படியிருக்கிறான் அவன் திரும்பவும் வருவதாகச் சொன்னானா?’

வாசு எப்படியிருக்கிறான் என்று வத்சலாவினால் வர்ணிக்க முடியவில்லை. நெஞ்சில் நிறைந்துபோன உருவமாக அவனே மனத்தால் நினைத்து மகிழ்ந்க வண்ணம், ‘போ அம்மா! அவரை நான் சரியாகப் பார்க்கவில்லை’. என்று விட்டாள்.

சீட்டாடுவதற்காக முதல் நாள் போன மனிதர் மெதுவாக அன்றுமாலை திரும்பி வந்தார். மனைவியின் அலைச்சலோ, தனக்குக் கல்யாண வயசில் ஒரு மகள் இருப்பதோ எதுவுமே உறைக்காத அந்த ஜடம் ராமஸ்வாமி ஒரு கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தார். புகையிலை, சீட்டாட்டம் இதைக் தவிர உலகத்தில் அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தாலும் அவைகளில் அக்கறையும் கிடையாது. ராமஸ்வாமி சாப்பாட்டு முடித்ததும் இரண்டு மலைப் பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள் கோதை, அதை உரித்து விழுங்க வைத்தார். மறுபடியும் அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு சீட்டாடக் கிளம்புகிறதற்குள் கோதை ‘பழம் ஏதென்று கேட்கவில்லையே’ என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“ஆமாம்…பிரமாதம். ஏதோ ஆஸ்திரேலியா ஆப்பிள் வாங்கிவிட்ட நினைப்பு உனக்கு..ஏதென்று கேட்டாக வேண்டும்…”

கணவரின் இந்தக் குத்தல் மொழிகள் அவளுக்கு சகஜமானவை. ‘உங்கள் தங்கை பிள்ளை வாசு வந்திருந்தானாம்…’. ராமஸ்வாமி தம் வழுக்கைக் தலையைத் தடவிக் கொண்டார். எதையோ நினைவுக்குக் கொண்டு வருபவர்போல் சித்தனையில் ஆழ்ந்தார்.

இருபது வருஷங்கள் என்ன ஒரு மனிதனின் வாழ்க்கையில் சாமானிய மானதா? எத்தனை மாற்றங்கள் ஏற்ற இறக்கங்கள்? தாமும், தம் குடும்பமும் கல்யாணியின் குடும்பத்தைவிட எத்தனையோ படிகள் கீழே இறங்கி இருப்பதை நினைத்துப் பார்த்தார். புருஷனுக்குக் கைநிறைய மணிமணியாகக் குழந்தைகள். ஆணும், பெண்ணும் ஒத்து நடத்தும் இல்லற வாழ்க்கை. காலணா கறிவேப்பிலையிலிருந்து அந்தக் குடும்பத்தில் கணக்காக, ஒழுங்காகச் செலவு செய்வார்களாம். இதெல்லாம் காற்று வாக்கில் கேள்விப்பட்டவை. இவர் மட்டும் எப்படியோ சூதாட்டத்துக்கு அடிமையாகி விட்டார். மாதச் சம்பளத்தில் பாதிக்கு மேல் ஆட்டத்தில் தொலைத்துவிட்டு, கோதை வேகிற வெயிலில் அப்பளம் இட்டு விற்றுக் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றுவதையும் உணர்ந்திருந்துதான் இருந்தார்.

“பையன் பெரியவனாக வளர்ந்திருப்பானே, நீ பார்த்தியோ?’

‘நான் வீட்டில் இல்லை. வத்சலாதான் காப்பி போட்டுக் கொடுத்தாளாம். உங்களையும், என்னையும் பார்க்கவேண்டுமென்றானாம்’.

‘திரும்பியும் வருகிறேன் என்றானாமா?’

“நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறான். நீங்கள் பாட்டுக்கு உங்கள் ரம்மியோ பொம்மியோ அந்த ஆட்டத்தில் போய் உட்கார்ந்து விடாதீகள்.’

ராமஸ்வாமி அன்று ஏனோ சீட்டாடப் போகவில்லை. சட்டைப் பையைத் துழாவினர். பத்து ரூபாய் இருந்தது. ‘கோதை! வீட்டில் சாமான்கள் இல்லை யென்றால் வாங்கிக் கொள். நல்ல சமையலாகச் சமைத்து வை…நான் அவனைப் பார்த்தபோது இத்தனுண்டு இருந்தான். இப்பொழுது எப்படியிருக் கிறானோ? யாரைப்போல இருக்கிறானாம்? கல்யாணி நல்ல சிவப்பு…’

‘நான் தான் பார்க்கவில்லை என்கிறேனே’ என்ற கோதை வத்சலாவை அழைத்துக் கேட்டாள்.

‘நல்ல சிவப்பாக அப்பா மாதிரிதான் இருக்கிறார் அம்மா என்றாள் அந்தப் பெண்.

“என்னைப் போலவா இருக்கிறான்? என்று முணுமுணுத்தார் ராமஸ்வாமி. கண்களில் தளும்பிய நீரை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.

2

அடுத்த வெள்ளிக்கிழமை. கிழக்கு வெளுக்குமுன்பே வத்சலா எழுந்துவிட்டாள். சின்னஞ்சிறிய அந்த வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு சமையல் வேலைக்கு ஆயத்தமாகிவிட்டாள் அவள்.

கோதை பரபரத்த மனசுடன் வாசலுக்கும், உள்ளுக்கும் பல தடவைகள் அலைந்துவிட்டாள். எட்டு மணி சுமாருக்கு டாக்சியில் வாசு வந்து சேர்ந்தான். கூடைநிறைய பழங்களும், புஷ்பம், வெற்றிலை முதலிய மங்கலப் பொருள்களும் வாங்கி வந்திருந்தான்.

ராமஸ்வாமியை, ‘மாமா’ என்று கட்டிப் பிடித்துக்கொண்டு கரைந்துவிட்டான்.

‘கல்யாணி எப்படியப்பா இருக்கிறாள்? என்று முகம் மலர விசாரித்தாள் கோதை. இத்தனையூண்டு பையனில் பார்த்தவள் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுமாக அவள் எதிரில் நிற்கும் அழகுத் தோற்றத்தை விட்டு அவள் கண்கள் வேறு பக்கம் நகர மறுத்தன.

அலைஅலையாகப் புரளும் கூந்தலை ரிப்பனால் முடிந்துகொண்டு எளிமையும், அழகும கூடிய வத்சலா காப்பி கொண்டுவந்து வைத்தாள்.

‘அசப்பல் பார்த்தால் அம்மா மாதிரியே இருக்கிறாள் மாமி. நேற்றுதான் எப்படி நடுங்கிவிட்டாள் என்கிறீர்கள்?’

‘ஏன்’

“நான் இந்த வீட்டுக்குள் நுழைந்தேனே இல்லையோ ஏதோ மாஜிக் மாதிரி ஒவ்வொரு அறையிலிருந்தும்: ஒவ்வொரு தலை வெளியே பார்த்துவிட்டு உள்ளே கொண்டுவிட்டது.’

வத்சலா கன்னங்குழிய களுக்கென்று சிரித்தாள்.

‘அம்மா எப்படியடா இருக்கிறாள்’ இந்தத் தடவை ராமஸ்வாமி கேட்டார். மலர்ச்சியும், குறும்பும் நிறைந்த வாசுவின் முகம் வாடியது.

‘அம்மா…அவள் எனக்கு-ஏன் எங்களுக்கு அம்மா என்கிற உறவு எங்களுக்கு மட்டும்தான் புரியும். அவளுக்கு நாங்கள் குழந்தைகள் என்பது தெரியாது மாமா…’

அங்கிருந்த எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

‘அவளுக்குப் புத்தி சுவாதனைமில்லை மாமா…’ சிறிது நேரம் ராமஸ்வாமி பிரமை பிடித்தவர்போல் இருந்தார் அவர் தோளில் தூக்கி வளர்த்தவள் பைத்தியமாக இருக்கிறாள். பைத்தியம்!

திடீரென்று வெறிபிடித்தவர்போல் கத்தினார் அவர். ‘டேய்! அவள் பைத்தியமாக இருக்கிறாள் என்று யாராவது ஒரு வரி எழுதியிருப்பீர்களா? காற்று வாக்கிலே யாரிடமாவது சொல்லியிருப்பீர்களா? இப்பொழுது என்னடா புது உறவு முளைத்துவிட்டது? வெளியே போடா! அவளிலிருந்து, அவளுக்கப் புறம்தானே உன்னுடைய உறவெல்லாம். – போ.போ…’

‘மாமா’ என்று ஏதே ஆரம்பித்தான் வாசு. அங்கே அவள் முன் நின்றிருந்தவரின் பயங்கரமான வெறியைப் பார்த்தவன் தலையைத் தாழ்க்கிக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.

‘வாசு! வாசு’ என்று அழைத்த கோகையின் செவிகளில் அவன் அசை குறையாக முணுமுணுத்த சொற்கள் விழுந்தன. அவன் வத்சலாவைப் பெண் கேட்க வந்திருந்தானாம், நொடித்துப் போன அந்தக் குடும்பத்தை ஒழுங்கு படுத்தி வத்சலா நிம்மதியைத் தேடித் தருவாள் என்கிற நம்பிக்கையில் வந்தவனின் முன்னர் வருங்காலம் ஒரே இருளாகக் காட்சி அளித்தது.

ராமஸ்வாமி பழைய நிலையை அடைந்து அமைதியுற்றவுடன் வழக்கம் போல துண்டை உதறிக் தோளில் போட்டுக்கொண்டு சீட்டாடக் கிளம்பி விட்டார்.

கோதைக்கு அவள் பிழைப்பு காத்துக்கிடந்தது. அப்பளக் கூடையுடன் பொரியும் வெயிலோ, கொட்டும் மழையோ கால்கள் தேய நடந்தாக வேண்டும். கூடையுடன் புறப்பட்டுவிட்டாள்.

வத்சலா கண்களிலிருந்து வழிந்த நீரைச்சுண்டி எறிந்தாள். உணர்ச்சியற்றவளாகச் சமையலை முடித்தாள்.

தையல் வகுப்புக்காக அவள் தெருவில் இறங்கி நடந்தபோது, அவள் உள்ளத்தில் மோகிய எண்ணங்கள் இவை, ஒர் ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்கை என்பது விடியாத இருளா? அல்லது வாழ்க்கை என்பது அயராத உழைப்பா? அல்லது வாழ்க்கை என்பது வெறுமையா? சற்றுமுன் பரபரத்த இந்தக் குடும்பம் தன் பாதையிலிருந்து விலகி, சுபிட்சத்துக்குக் திரும்பிவிடுமோ என்று அங்கலாய்த்தவர்கள் தத்தம் அறைகளிலிருந்து வெளியே எட்டிப் பார்த்து நிம்மதியாக மூச்சுவிட்டனர்.

– 08-03-1964

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *