வழித்துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,971 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அழகிய நீல நிற கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. மலைக் குன்றியிருக்கும் அந்த வீடும் அழகானதாகவே இருந்தது.

ரவி காரை விட்டு இறங்கினான். இரண்டு பாட்டிமார்களும் ஒடி வந்து காரின் கதவருகே நின்றார்கள். வழமையாக அவர்கள் அவனது ஆபீஸ் பேக்கையும், வீட்டுக்கு ஏதாவது சாமான்கள் வாங்கி வந்திருந்தால், அந்த பொட்டவங்களையும் எடுத்துச் செல்வதற்கு சின்னப் பிள்ளைகளைப் போல கல கலப்பாக வந்து நிற்பார்கள்.

ரவி அவர்களை அன்பாக அணைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான். அவன் ஒரு பாட்டியை ‘அப்பாயி’ என்றும், இன்னொரு பாட்டியை ‘அம்மாயி’ என்றும் அழைப்பதில் ஆசை கொண்டான். அப்பாவுடைய தாயாரும், அம்மாவுடைய தாயாருமே பெரிய கட்டைகளாக அந்த வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவன் வந்ததும் வராததுமாக தனது ஆபிஸ் பையைத் திறந்து அதற்குள்ளே இருந்த படத்தை எடுத்து முன்னறை வாசல் நிலைக்கு மேலே மாட்டினான். அந்தப் படம் ஒர் அழகிய, வசீகரம் நிறைந்த மனிதரின் புகைப் படமாகத் திகழ்ந்தது. ராஜ பார்வையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் அவர் அமரராகி விட்டவர் என்பதை அறிய முடிந்தது. படத்தை மாட்டிவிட்டு, நாற்காலியிருந்து இறங்கிய ரவி, தன் வாடிய முகத்தோடு வணக்கத்துக்குரிய பார்வையை அப்படத்தின் மேல் செலுத்தினான் .

Valithunai - MSivalingam - 15_08_2010_034_001-picஅந்த உயர்ந்த மனிதர் எங்கள் ஊர் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தொழில் புரிந்தவர். அவரின் மரணத்தின் போது ஊரே கூடி அழுதது. ஒர் மக்கள் வெள்ளத்தைப் போன்று, ஊர் மக்கள் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு நல்லாசிரியரின் இழப்பு ஒரு சமுதாயத்தின் இழப்பாக இருந்ததை என்னால் அறிய முடிந்தது.

அவரிடம் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த ரவிக்கு அவரின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இவரும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக இருக்கின்றான்.

ரவி ஒரு பொறியியலாளராக நீர் மின் திட்ட நீர்மான வேலைத்தளவொன்றில் தொழில் புரிகின்றான். சென்ற வருடம்தான் இந்த அழகிய புதிய வீட்டை வாங்கியிருந்தான்.

பிறந்த காலத்திலிருந்து வசதியற்ற சூழலில், அவமானத்துக்குரிய நாமத்தில் பிரிட்டிஷ் பெருந் தோட்ட வியாபாரிகளால் அன்று கட்டிப் போட்ட இருட்டு முகாம் அறைகளில் குடியிருந்த அப்பா, அம்மா, தம்பி, தங்கை, பாட்டிமார்களுக்கு இந்த வீடு சொர்க்கபூரி யாகத் தோன்றியது. இப்படியொரு வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்குமா என்று கனவு கூட காணாத அவர்களுக்கு, ரவியின் சாதனை இன்னும் புதிராகவே இருக்கின்றது. இந்தப் பெருமைக்கெல்லாம் அந்தப் படத்திலுள்ளவரே காரணமாவார்.

ரவி அடிக்கடி அப்பா அம்மாவிடம் ஜோக் அடிப்பான, ‘தவமாய் தவமிருந்து’ என்ற சினிமா படத்தின் கதாநாயகன் சேரனை விட ஒருபடி தான் உயர்ந்த சாதனை செய்திருப்பதாக சொல்வான். அந்த படத்தின் ஞாபகம் திடீரென எல்லா ரசிகர்களுக்கும் வரும். 75 வருடத்துச் சினிமா வரலாற்றில் ஓர் உருப்படியான சமூக செய்தி சொன்னா படம் அதுவாகத் தான் இருக்க முடியும்!

இன்றைய இளைஞர்கள் ஊதாரிகளாக மாறாமல், குடும்பத்துக்கும், பெற்றோருக்கம் செய்ய வேண்டிய கடமைகளைச் சித்தரித்தும் காட்டிய அந்த சினிமாப் படம், ஒரு சினிமாப் பாடமாகயே இன்றும் நினைவில் இருக்கின்றது.

அந்தப் படத்தின் கதாநாயகன் தன்னை ஏழ்மை நிலையிலும் படிக்க வைத்து, உருவாக்கிய பெற்றோருக்குப் புதிய வாழ்க்கை மாறுதலை கொடுத்து, அழகு பார்க்கிறான்.அவர்களை வறிய கிராம வாழ்க்கையிலிருந்து விலக்கி, நகர வாழ்க்கைக்கு அழைத்து வருகின்றான். அம்மா, அப்பாவுக்கு மருத்துவ சோதனைகள் செய்து கவனிக்கின்றான். அழகிய காட்டில், மெத்தைகள், மின்சார விளக்குகள் அலங்கரித்த படுக்கை அறை. அழகிய மகான் கூடம். இதுவரை காலமும் உண்டு சுவைக்காத பெறுமதியான உணவு வகை என்ற ஒரு தாழ் நிலை குடும்பத்தினருக்கு துயரம், வறுமையைத் தவிர வேறொன்றும் அறிந்திராத அவர்களுக்கு ஓர் உயர் மத்தியதர குடும்பத்தின் சொகுசு வாழ்க்கையைக் கொடுத்து மகிழ்ந்த இந்த சேரனின் கதையை தனது குடும்பத்திலும் நடைமுறைப்படுத்தியதில் ரவி பூரிப்படைந்தான்.

சேரன் கதையில் பெற்றோரை மட்டும் கவனிக்கும் ஒரு கதாநாயகன் காட்டப்படுகின்றான். ஆனால் ரவி பெற்றோர்களோடு இரண்டு பாட்டிமார்களையும் கவனிப்பதில் ஒரு படி உயர்ந்து நிற்கின்றான்.

“பேராண்டி.. இது கக்கூஸ் காம்பா சாமி, ஐயையோ பீங்கான் கோப்ப மாதிரி பள பளக்குதே..! கண்ணக் கூசுதே!. இதுல போயி வெளிக்குப் போகலாமா? முடியயே முடியாது சாமி!” என்று வெட்கப்பட்ட அம்மாயியை பலவந்தப்படுத்தி கொமட்டில் உட்காரச் செய்து, “அம்மாயி…! கக்கா இருந்ததும், இதப் புடிச்சி அமுக்குங்க ! தண்ணி வந்து எல்லா சரக்கையும் கொண்டு போயிடும். அப்புறம் அந்த கோப்பையில் ஒக்காந்து அத அழுக்குங்க! தண்ணி பூ மாதிரி வந்து கழுவிடும்..!” என்று அப்பாயிக்கும், அம்மாயிக்கும் டொயிலட் பாடம் சொல்லிக் கொடுத்த நிகழ்வுகள்…சேரனை மிஞ்சிவிட்ட நிகழ்வாக தனக்கு ஏற்பட்டுள்ள சமூக மாறுதலின் திருப்பத்தை உணர்வதில் ரவி பெருமையடைந்தான்.

***

அவனது நிலைமை உயர்ந்து விட்டதற்கு சில காரணிகள் உயர்ந்து நிற்கின்றன. அவனைப் பட்டினியோடு, தங்களது தினக் கூலி வாழ்க்கையை இழுத்துக் கொண்டு, தங்களது வீட்டுத் தோட்டத்து மரக்கறி வருமானத்திலேயே தன்னைப் படிக்கவைத்த பெற்றோரின் சாதனைகள். தன்னை வழி நடத்திய அந்த ஆசிரிய மனித தெய்வத்தின் அறிவுக் கொடையாவும் அவன் முன் வந்து நின்றன்.

ரவி திடீரென தாது பள்ளி வாழ்க்கையை பின்னோக்கி அசை போடத் தொடங்கினான்.

சாதாரணதர பரீட்சையைச் சொந்த ஊரில் முடித்துக் கொண்டு, உயர்தரக் கல்விக்காக நகரப் பாடசாலைக்கு வந்து விட்ட பிறகு அவனது குடும்பப் பொருளாதார நிலை தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது. அவன் இன்னும் இரண்டு வருடங்கள் பாட்தை முடியும் வரை போராட வேண்டியிருக்கின்றது. தனது படிப்போடு, தம்பி தங்கையின் படிப்பு நிலையும் தன்னால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. என்று வேதனையோடு யோசித்தான்.

ரவி நகரப் பாடசாலையில் சேர்ந்ததும் ஒரு சாதாரண வீட்டில் போர்டிங் கிடைத்தது. அந்த வீட்டுக்காரர்கள் போர்டிங் பிள்ளைகளின் வருமானத்தில்தான் தங்கள் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் வாழ்வது வேறு.. வாழ்க்கையைத் தள்ளுவது வேறு… ரவி தூக்கத்திலும் சிரித்தான்.

இது மழைக் காலம். ஆடி மழை தொடங்கிவிட்டது. காற்று சீறிக் சீறி வீசுகின்றது. மண் சரிவுகள்.. பாதை, பாலங்கள் சேதம், மரங்கள், மின் கம்பங்கள் உடைந்து விழும் விபத்துக்கள். இவை மழைக் காலத்து சாதாரண சம்பவங்கள்.

Valithunai - MSivalingam - 15_08_2010_034_001-pic2ரவி போர்டிங் வீட்டு வாசலில் நின்று தூரத்துப் பாதையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். இன்று ஞாயிற்றுக் கிழமை, அம்மா குளிரில் நடுங்கிக் கொண்டு, அந்த உடைந்து போன் சின்னக் குடையைப் பிடித்துக் கொண்டு, மரக்கறி பார்சலோடு வரும், அதை மரக்கறி பார்சல் என்று சொல்ல முடியாது. மூட்டை என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா சுமந்து வரும் அந்த மரக்கறி மூட்டை இன்றைய மார்க்கட் விலைக்கு ஐநூறு, அறுநூறு ரூபா பெறுமதியாகும். மரக்கரி வகைகளோடு தேயிலைத் தூள் பாக்கெட்டுகளையும் போர்டிங் வீட்டுக்கு அம்மா கொண்டு வரும்..இவைகளோடு போட்டிங் பீஸ் மூவாயிரம் கொடுக்கும். போர்டிங் வீட்டுக்காரர்கள், மற்ற மாணவர்களை விட என்னோடு கொஞ்சம் அதிகக் கதை வைத்துக் கொள்வார்கள்..!

பாடசாலை செலவு போர்டிங் செலவு இவைகளுக்கு மத்தியில் குடும்பம் எனக்காகத் திணறுவதை நான் நன்றாக பார்த்தேன். இந்த நிலைமையில் தான் கணிதப் பாடத்தில் வீழ்த்து விட்டது என் மார்பை அடைத்தது. கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பாடங்களில் ஏ. பி. எடுத்தும், இன்னும் ஒரு பாடத்துக்கு இன்னும் ஒரு வருஷத்தை வீணடிக்க விரும்பவில்லை. செகண்ட் ஷையும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம். இன்னொரு புதிய ஜூனியர் பெட்சோடு உட்கார்ந்து டியூஷன் படிப்பது எனக்கு மானப் பிரச்சினையாகவிருந்தது. வேலை தேடிவது என்ற முடிவுக்கு வந்தேன்.

‘பல்லக் கடிச்சிகிட்டு இன்னும் ஒரு வருஷத்த ஓட்டப் பாரு சாமி’ என்று அம்மா கெஞ்சவும் ‘பாதியில் படிப்ப நிப்பாட்டப் போறானே’ என்று அப்பா கலங்கவும் என் மனதை மாற்றிக் கொண்டேன்.

கண்டியில் ‘ஓஹோ’ என்று ஒரு டியூஷன் சக்கரவர்த்தி இருப்பதாக அறிந்து கண்டிக்கு எடுக்க சென்றேன். கொட்டக்கலையிலிருந்து விடிய நான்கு மணிக்கு கொழும்பு பஸ்சில் ஏறி, கினிகத்தேனையில் இறங்கி, கண்டி பஸ் பிடிக்க வேண்டும். அதி காலை யிலே சென்றால்தான் டியூஷன் மண்டபத்தில் டியூஷன் ஆசிரியர் அருகில் அமரலாம். இல்லா விட்டால் மைக் செட்டில் லெக்சர் பண்ணும் அவரது ஓசையை தூர இருந்துதான் கேட்க வேண்டும். டவுட் கேட்பது டியூஷன் சேருக்கும், எங்களுக்கும் அசௌகரியமாக இருக்கும். மூன்று மாதங்கள் பஸ் பயணத்தில் எனது டியூஷன் வகுப்பு நடந்தது. எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பாடங்களைப் புரியும்படி கற்பிக்கும் ஆற்றல் அநேக ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை! கல்வி தொழிலாகவும், கடமையாகவும், தர்மமாகவும் இருந்த நிலை மாறி வருவாய் தேடும் வர்த்தகமாக திசை மாறிய போது, டியூசன் மாஸ்டரும் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரி ஸ்பெஷலிஸ்டாக நம்பர் வழங்கி, நோயாளியைப் பார்ப்பவராகவே மாறிவிடுகிறார். மாணவருக்கம், ஆசிரியருக்கும் பாரம்பரியமாக இருந்து வந்த ஒட்டுறவு, டியூஷன் வர்த்தகத்தால் காணாமல் போய் விட்டது..!

டியூஷன் கடைகளின் விளம்பரம் சுவரொட்டிகள். தேர்தல் காலச் சுவரொட்டிகளை மிஞ்சியிருப்பதை காணக் கூடியதாகவிருக்கின்றது. பாட ஆசிரியரின் பெயர் கண்ணைப் பதிக்கும் வண்ண எழுத்துக்களால் போஸ்டரில் அச்சிடப் பட்டிருக்கும்.

ஒரு டியூஷன் ஆசிரியர் பாடசாலை வகுப்பறையில் கடு கடுப்பாகவே இருப்பார். தான் செய்யும் வேலைக்கு அதிகமாகவே அரசாங்க சம்பளம் வாங்கும் அவர், ஏதோ தர்மத்துக்கு வந்து உதவுவது போல் வகுப்பறையில் நடந்து கொள்வார். அவரது பாட விளக்கங்கள் வகுப்பறையில் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கும். அவர் அங்கே அடக்கியே வாசிப்பார். விளங்காதவர்களுக்கு பின்னேர வகுப்பில் விளக்கப் படுத்துவேன் என்று பீரியட் முடியுமுன்பே எழுந்து போய் விடுவார். அவரது டியூஷன் வகுப்பில்…அகமும், முகமும் மலர்ந்து முதலாளியாக அமர்ந்திருப்பார்..!

விடிய இரண்டு மணிக்கு எழும்புதல், பஸ் பிடித்தம். பயணமாதல். வீடு திரும்பதல். இந்த அலைச்சல் எனது உடல் நிலையைப் பாதித்தது.

“படிக்கப் போகிறேன்” என்று புத்தகம் சுமந்த ஐந்து வயதிலிருந்து, பத்தொன்பது வயது வரை பாடப் புத்தகங்கள், பள்ளிகூடக் கட்டிடங்கள், பயமுறுத்தும் ஆசிரியர்கள் என்பதைத் தவிர, வேறு உலகம் தெரியவில்லை . வாரத்தில் ஏழு நாட்களும் அரைகுறை சாப்பாட்டோடு பாடசாலையே கதியென்று காலம் கழிந்தது. இந்தக் காலத்தில் உடல் அசதி, மன அசதி என்று போராடும் ஒவ்வொரு மாணவரும் பாதி மன நோயாளராகவே உருவாகிறார்கள். விளையாட்டு, குதூகலம், குறும்பு என்ற வயதுக்கேற்ற இன்பச் செயல்பாடுகள் எதுவுமே பத்தொன்பது வயது வரை கிட்டுவதில்லை.

ஒரு பள்ளிக் காலம் இருந்ததாம். டியூஷன் வதையொன்னும் ஒரு பயங்கரவாதம் தோன்றாத காலத்தில், கும்மாளம், தாகத்தோடு இருந்த ஒரு கல்வி முறை, மாணவர் சமூகத்தை கரை சேர்த்ததாம்…! இதை அறிந்துதான் “மலை வாழை அல்லவே கல்வி ” என்று பாவேந்தர் பாரதிதாசன் கல்வியைத் தித்திக்கும் இனிப் பென்று அன்று சொல்லியிருக்கின்றார்…!

நான் கண்டிக்கு நடு சாமத்தில் பஸ் ஏறி டியூஷன் படிப்பதை நிறுத்திட்டேன். ஒரு நாள் வெறுப்பு, விரக்தியோடு, பசி மயக்கத்தில் வரும்போது தலைவலியும் தலைக்குள் ஏறிக் கொண்டது.

அந்த பேஸ்ட்ரி ஷொப்புக்கும் நுழைந்து, கண்ணாடிக்குள் கண்களைத் துளாவி, விலை விபரத்தைப் பார்த்து, எனது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஒரு பெட்டிசை எடுத்தேன். எனக்கு நெஸ்கபே குடிக்க ஆசை…!! அது முடியாத விஷயம்!! பெட்டிசைக் கடித்துக் கொண்டு தேநீர் கோப்பையில் தேயிலைப் பக்கெட்டின் நூலை அசைத்து, சாயத்தை இறக்கிக் கொண்டிருந்தேன்.

எனது ஓ.எல் பாடசாலை நண்பன் சுரேஷ் கலகலப்போடு கடைக்குள் நுழைத்தான். அன்று அவனைச் சந்தித்த நேரமே எனது வாழ்க்கையைச் சோதிக்கும் ஏ.எல். சோதனையில் ஒரு புதிய பாதையைக் காட்டியது.

இலங்கைக் கல்வி முறையில் ஏ.எல். பரீட்சை என்றும் ஒரு பெருந் தடையைக் கடந்து விட்ட பிறகுதான், பள்ளி மாணவர்கள் தங்கள் மனதோடும், உணர்வோடும், உடலோடும் விடுதலையடைகின்றார்கள். இந்தத் துரதிஷ்டமான தடைக்குப் பிறகுதான் சுதந்திரக் காற்று அவர்களது இளமை முகத்தை வருடத் தொடங்குகிறது.

ஏ.எல் பரிட்சைக்குத் தயாரிக்கும் கேள்வி கணைகளுக்கு ஈடு கொடுக்கும்ப்படியாக, ஆசிரியர்கள் கற்பிப்பதில்லையா? அல்லது மாணவர்கள் வல்லமை பெற வில்லையா…?. அல்லது இருசாராருக்கும் திராணியே கிடையாதா? அல்லது வேண்டும்மென்றெ கல்வி திணைக்களம் கஷ்டமான வினாக்களைத் தயாரித்து மாணவர்களின் பெறுபேறுகளை கட்டுப்படுத்துகின்றதா? என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை…!

சுரேஷ் இறுதியாக எனக்கு அந்த ஆசிரியப் பெருந்தகையைப் பத்தி விவரமாகச் சொன்னான். கல்வி வர்த்தக வயைமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பழைய பண்பாட்டோடு தொழில் தர்மம், ஆத்ம உணர்வு, மாணவர்களோடு ஒட்டுறவோடு, கற்பிக்கும் ஒரு நெருக்கமுள்ள ஆசான் என்று அந்த மனிதரை சுரேஷ் வாயூரச் சொன்னான்.

பாடசாலையின் பெயர் பிரபல்யத்துக்காக பெற்றோர்கள் படையெடுத்த காலத்துக்குப் பதிலாக, ஆசிரியரின் பெயர் பிரபல்யத்துக்காக படையெடுத்த ஒரு பொற்காலத்தை உண்டாக்கிய புதிய மனிதன் என்று அவரைப் பத்தி ரவியும் அறிந்தான்.

பல நூற்றுக் கணக்கான மாணவர்களைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய மனிதர் என்றும் அவரைப் பற்றி அறிந்தான் . கல்வியில் நமது சமுகம் ஐம்பது ஆண்டுகள் பின் தங்கியிருக்கும் இந்தக் காலத்தில், இப்படியொரு ஆசிரியர் கிடைப்பதற்கு நாம் தவமிருக்க வேண்டு மென்று சுரேஷ் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.

சுரேஷ் கூறியதைக் கேட்ட ரவிக்கு திடீரென் ஏறுக்கு மாறான ஒரு பாடசாலை அதிபரின் வித்திரமான கல்வி வியாபாரம் நினைவுக்கு வந்தது. அந்த அதிபர் தொழில் புரியும் கல்லூரியில் கணிதம், விஞ்சானம், வர்த்தக பிரிவுக்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. வகுப்புகளுக்குப் போதுமான துறைசார் பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே அதிபரின் கபடமான காரியங்கள் தொடர்ந்து நடக்கும். சில இலட்சங்களைப் பெற்றுக் கொண்டு, வெளியூர் மாணவர்களை உயர்தர வகுப்பில் சேர்த்து கொள்வார்…! மாணவர்களின் பெயர்கள் மட்டுமே இடாப்பில் இருக்கும். அவர்களோ சொந்த ஊரில், சொந்த நகரங்களில் டியூஷன் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பார்கள்.

வேட்டுப் புள்ளி அதிகமாக எதிர்பார்க்கப் படும் மாவட்டங்களிலிருந்து நழுவி வந்தவர்கள். பின் தங்கிய கல்வி மாவட்ட பாட சாலைகளில் கிடைக்கும் வேட்டுப் புள்ளிகளை எளிதாகப் பெற்று, பல்கலைக் கழகம் செல்வதற்கு அந்த அதிபர் உடந்தையாக இருப்பார்.

ரவி கசப்பான நினைவுகளிலிருந்து தன்னை பலவந்தமாக விடுவித்துக் கொண்டான்.

சுரேஷ் மூலமாக ரவி அந்த நல்லாசியரிடம் டியூஷன் வகுப்பில் இணைந்தான். முடிந்து போன மூன்று வருடங்களில் முப்பது டியூஷன் ஆசிரியர்களை சந்தித்திருப்பான்…! இருந்தும் கனிதாபி பாடம் சூனியமாகவே காணப்பட்ட அவனுக்கு, இவர் ஒளியாகத் தோன்றினார். பச்சை மரத்தில் ஆணி இறங்குவது போல, இவரது பாடங்கள் மனதில் பதிந்தன. அவரது நாவிலும், பார்வையிலும் சரஸ்வதி தெரிந்தாள்.

ஓராண்டு கழிந்தது. பனி எழுதிய பரீட்சைமில் அவனுக்கு குரிய பாடத்தோடு இரண்டு ஏ யம், ஒரு பி யம் கிடைத்தது…! அவன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொறியியல் பட்டத்தைப் பெறும் வரை அவனது முதுகில் பின்னாலேயே அந்த பெருந்தகை ஆசிரியர் நின்றார்.

ரவி இதுவரை கானமும் தனது அடி மனதுக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை, அவர் அமரத்துவம் அடைந்தப் பின்னரே நண்பர்களிடம் வெளியில் சொன்னான். அவனது குடும்ப நிலையறிந்த அவர், அவனிடம் ஒரு மாதமேனும் டியூஷன் பீஸ் வாங்கியது கிடையாது . அவன் தயங்கி நின்ற போதெல்லாம் ‘நீ பொறியியலாளனாக பட்டம் வாங்கி வந்த பிறகு எனக்கு ஒரு சொக்கலேட் வாங்கிக் கொடு.. அது போதும்..!’ என்று தன் அழகிய முகத்தில் புன்னைகையோடு உதிர்த்த வார்த்தைகள் இன்றும் ஜீவநாதமாக ஒலிக்கின்றது..!

அவனது பெரும் குடும்பம் இன்று இன்பமாக வாழ்வதற்கு வழி காட்டிய அந்த ஆசிரியப் பெருந்தகை. அவனது வீட்டின் முன்னறை நிலை வாசலின் மேலே சொந்தம் நிறைந்த சித்திரமாகக் காட்சித் தருதை ரவி மீண்டும் பார்த்து மகிழ்ந்து போனான்.

– 15-08-2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *