“எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி.
காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பிட்டா அப்புறம் லேப்டாப்பும் கையுமாய். இருக்கிறாள். குழந்தைகள் நன்றாய் தூங்கும். எழுப்பினால் இடைஞ்சல்தானே. பெரியவன் ஸ்கூல் போவதற்கு கால்மணி நேரம் முன்னால் எழுந்திருச்சு பல்துலக்கி குளிச்சு அதற்குள் ஸ்கூல் வேன் போயிடும். அவனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்தப்புறம் மறுபடியும் லேப்டாப்
சிறியவனை கொஞ்சறதில்ல, குழந்தைகளுக்கு இப்பொழுது பொம்மைகள் எல்லாம் வாங்கிதர வேண்டியதில்லை. இந்தா மொபைல்” என கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு ஒடீவிடும். மொபைல், லேப்டாப்பிடும் காட்டும் ஐக்கியம் குழந்தைகளிடம் காட்டுவதில்லை.
பேச்சு குறைந்து, வீட்டுக்காரர்கிட்ட ஏதாவது பேசணும்ன்னாகூட மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் அவ்வளவுதான். சாயங்காலம் வீட்டுக்காரர் வந்தா அவரும் ஒரு லேப்டாப்பும் கையுமாய் மூழ்கி விடுவார் ஏப்பத்தான் பேசுவாங்களோ யாருக்கும் தெரியாது.
உலக அதிசயம் போல் ஒருநாள் பேச்சு ஆரம்பித்தது “என் தங்கச்சி ஊர்ல இருந்து பேசுனா, அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய அப்பா முயற்சி எடுக்கிறார் . பணத்துக்கு திண்டாடுறாராம் அதனால ஒரு ஐந்து இலட்சம் என்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறாங்க போல இருக்கு..என முடிப்பதற்குள்.
இங்க என்ன கொட்டியா கிடக்கு…. நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அவ்வளவு பணம்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க என்று பொன்னி சொல்ல
“கூடப்பிறந்தவளாச்சே நான்தானே செய்யணும்” என்ற கணவனின் பதில் கேட்டு
“இங்கே நான் கஷ்டபடுறது தெரியலியா? பேச்சு முற்றி ஒருவருக்கொருவா; முகத்தை திருப்பிக் கொண்டனர்
மூன்று நாள் போனபின்னால் தன் மொபைலிpலிருந்து “ஸாரி என்று கணவனுக்கு எஸ்;.எம்.எஸ் அனுப்ப….”இட்ஸ் ஓ.கே” என எஸ்.எம்.எஸ்ஸாகவே பதில் வந்தது
வழக்கம்போல லேப்டாப்பில் தன் குடும்ப உறவுகளை மறந்து விட்டு கரங்களில் முகநூல் என்ற சங்கிலியை மாட்டிக்கொண்டு ஊரில் முகமறியாதவர்களிடம் எல்லாம் பேசி அவர்களின் கருத்துகளுக்கு, ஜோக்குகளுக்கு, கவிதைகளுக்கு “லைக்ஸ்” தட்டிக்கொண்டிருக்கிறாள் பொன்னி
என்னுடைய முகநூல் சங்கிலி- என்ற கதையினை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைத்தளமான http://kavithaigal0510.blogspot.com -லிருந்தும் கதைகளை எடுத்து பதிவிட்டு கொள்ளலாம். மிக்க நன்றி