ஆதிகேசவா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் அப்பா உன் வீட்ட பார்த்துட்டு வந்ததில் இருந்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லார் வீட்டிலேயும் மாமியாரும் மருமகள் சண்டை போட்டுத் தான் நான் பார்த்திருக்கேன் உன் வீட்டிலே அந்த மாதிரி எதையும் காணோமே என்றான் புருசோத்தமன்.
மௌனமாக சிரித்தார் ஆதிகேசவ்
என்னப்பா சிரிக்கிற அங்கு நான் பார்த்தது நாடகமா என்றும் கேட்டார்.
அதற்கும் மௌனமாக சிரித்தார் ஆதிகேசவ்
என்னப்பா இப்படி சிரிக்கிற பதில் எதையும் காணேமே
சில முத்தான வார்த்தைகளை உதிர்க்க ஆராம்பித்தார் நீ பார்த்தது நீஜம் என் வீடு சந்தோஷமானது தான்
என் மனைவி மராகதம் நல்ல பெண் கல்யாணமான அன்றே பொறுப்புகளை ஏற்றவள் என்றார்.
என் அம்மாவின் மாமியார் அதாவது என் பாட்டி கல்யாணமான அன்றே ஒரு உண்மையை விளக்கிவிட்டார்கள்; “இளம்பெண் சுதந்திர சிந்தனையுடையவள் அவள் வளர்ச்சியடைவது ஒரு இடத்தில் பழக்கவழக்கத்தின் அடிப்படையை வளர்ந்த வீட்டில் கற்றுக்கொள்கிறாள் அதுதான் அவளது பயிற்சி எடுப்பதன் முதல் படி ஆண்பிள்ளைகள் எப்படி வேலைக்கு பயிற்சி எடுக்கின்றனரோ அவ்வாரே பெண்கள் தன் பிறந்தகத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர். திருமணம் ஆனவுடன் வேலைக்கு செல்ல தயார் நிலை இருக்கும் ஆண்பிள்ளையின் நிலையை அடைகின்றனர்”
என்னப்பா வேலைக்கு போறவங்களோட பெண்களை தொடர்பு படுத்துகிறாயே அவங்க என்ன வேலைக்கா போய் சம்பளமா வாங்கப்போராங்க என்றார்.
பயிற்சி பிறந்த வீட்டில் எடுத்து கொண்டு பெண்கள் புகுந்த வீட்டிலே புருஷன் நிலை என்ன செய்யனும் புரிந்து கொள்ளும் நிலை அடைகிறார்கள் அதைத்தான் ஆண்பிள்ளை பயிற்சியுடன்; இணைத்து சொல்கிறேன் என்றார்.
திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போது மருமகள் என்ற ஸ்தானத்தை அடைகிறார்கள். ஸ்தானம் என்பது பதவி. பதவி பிராமணத்தை கல்யாண சடங்கில் நிறைவேற்றப்படுகிறது. மருமகள் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் பொறுப்புக்களாக பெரியோரை மதித்து அவர்களை பாதுகாத்து புருஷனின் தேவைகளை அறிந்து நடந்து கொண்டு அவர்களின் குலத்திற்கு வாரிசு பெற்று கொடுப்பதும் அவளின் கடமையில் ஒன்று.
அவளை ஆதாரித்து சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு அவளை சந்தோஷமாக வைத்து கொள்வது புருஷன் கடமையாகிறது.
மனைவியை பத்தி சொல்லிட்டே உங்க அம்மா எப்படி என்றார்.
அம்மா ஓரு பக்கம் மனைவி இன்னாரு பக்கம் இருவரும் இரண்டு கண்களாக பாவிக்கிறது தான் ஆண்மகனின் கடமை. புதவி உயர்வு பெற்ற அதிகாரியின் நிலை என் அம்மாவுடையது.
புதவி உயரஉயர பொறுப்புக்கள் அதிகம் ஆகின்றது அதிகாரி கோபத்தையோ வெறுப்பையோ வெளிக்காட்டாமல் தன் வேலையை எவ்வாறு செய்ய வைக்கின்றாரோ அந்நிலையை மாமியார் என்ற பதவியில் அடைகிறாள் என் அம்மா
நான் நன்றாக இருக்க வேண்டும் என்னை மனைவியுடன் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவள் தாய் மருமகள் என்ற ஸ்தானத்தை மாமியார் என்ற நிலைக்கு கொண்டு செல்ல பயிற்சியளிப்பவள் அவளே என்ற உண்மையை உணர்ந்தால் மருமகள் மாமியாரிடையே சண்டை நிகழாது.
குழந்தை பிறப்பதற்காக தாய் எவ்வளவு சந்தோஷத்துடன் அக்கஷ்டத்தை ஏற்கிறாளோ அந்நிலையை மாமியார் ஸதானத்தை வகிக்கும் ஒரு வயதான தாயும் ஏற்கிறாள். என்பதற்கு அத்தாட்சியாக கருவிலேயே உருவாகும் குழந்தையை நினைத்து சந்தோஷப்படும் முதல் ஆள் அவளாகத்தான் இருக்கவேண்டும். வெனியே தோன்றிய குழந்தையை தகப்பன் பாட்டியுடன் நெருக்கம் கொள்வதும் இதனாலேதான்.
மருமகள் ஸ்தானத்தை மாமியார் ஸ்தானத்துக்கு உயர்த்த படிப்படியாகத்தான் முயற்சிகள் மேற்கொள்கிறாள். தான் இறந்த பிறகு தன் நிலையில் மருமகள் இருந்து குடும்ப பாரத்தை சுலபமாக கையாள வேண்டும் என்று நினைப்பவள் அவளே இதை புரிந்து கொண்டால் வீட்டில் சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காது என்றார்.
இதை எல்லாரும் புரிஞ்சிக்கிற நாள் வரும் என்று மனநிறைவுடன் தன் இல்லம் நோக்கி சென்றார் புருஷோத்தமன்.