‘’என்னப்பா…நீங்க, உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது தெரிஞ்சும் இத்தனை பழத்தை வாங்கறீங்க…?’’ ஊரிலிருந்து வந்திருந்த தனது டாக்டர் மகள் கேட்க, சதாசிவம் புன்னகைத்தார்.
‘’மாலதி, வழக்கமா வர்ற பழக்கார பாட்டிதான். பாவம், இன்னமும் வயசாகி தள்ளாடீட்ட நம்மள நம்பி எடுத்துட்டு வர்றாங்க’’
‘அவங்களை வாழ வைக்க நீங்க கொஞ்ச கொஞ்சமா சாகணூமா..?’’
‘’நான் சாப்பிட பழம் வாங்கினா அது விஷம்..! அதை நம்ம வீட்ல வேலை பார்க்கிற டிரைவர், தோட்டக்காரன், வேலைக்காரிக்கு கொடுத்தா…அது அவங்களை உற்சாகப்படுத்தும் மருந்து…!’’
ஒரே சமயத்தில் உழைத்து வாழ நினைக்கும் பாட்டியின் நம்பிக்கையையும் காப்பாற்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அப்பாவின் மனசை நினைத்து வியந்து போனாள், மாலதி.
– நா.கி.பிரசாத் (27-10-10)