கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,716 
 
 

சாலையின் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார்கள்.

அவளோடு துணைக்கு வந்த அவளது தோழி கயல்விழிக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமானாள்

இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளமதியன் சட்டென்று வண்டியை நிறுத்தி, ஒரு ஆட்டோவை அழைத்து மயங்கிக் கிடந்த சரண்யாவையும் கயல்விழியையும் ஏற்றி அருகிலிருந்த ஆஸ்பத்திரக்கு அனுப்பிவிட்டு அவனும் பின் தொடர்ந்தான்

ஆஸ்பத்திரியில் சரண்யாவை அட்மிட் செய்துவிட்டு வெளியில் பதட்டத்தோடு நின்ற கயல்விழியிடம் ஆறுதல் சொன்னான்.

பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை, அவங்களுக்கு லோ சுகர். அடிக்கடி இப்படி மயக்கம் போட்டுவாங்க. வெளியே போறதா இருந்தா கையில எப்பவும் சாக்லேட் வெச்சுக்கோங்கன்னு சொன்னா கேக்கறதில்ல..!

அவங்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்க அவங்களுக்கு உறவா…இல்ல நட்பா? ஆச்சரியாமாக கேட்டாள் கயல்விழி.

”இவங்க என்னோட முன்னாள் மனைவி. விவாகரத்தாகி ரெண்டு வருஷமாச்சு…!”’ என்று சொல்லிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுப்போன இளமதியனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்றாள் கயல்விழி

– 29-8-12

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *