மனதில் இடம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 11,636 
 

டேய்ய்ய்….! அருளுளுளு….

ஊருக்கே கேட்டும் அளவுக்கு கத்தினாள் அலமேலு வீட்டிலிருந்தபடி.

எங்க போய் தொலஞ்சானோ இந்த கடங்காரன் பெத்த மவன்…என்று முனுமுனுத்துக் கொண்டே அரிசி புடைத்த முரத்தை தூக்கி கோபமாக வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளிவந்தாள்.ஊரிலே மகா கஞ்சன் இந்த நாமக்காரன் அவன் பொண்டாட்டி குப்பாச்சி இப்பவோ அப்பவோனு இழுத்து கிடக்குது வயசென்னமோ அறுபது அஞ்சு தாண்டியிருக்கும்.

…கம்மி தான்…

ஆனா,பாவம் இந்த நாமக்காரன் சிக்கனமென்ற பேர்ல அந்த பொம்பளைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாம சாகடிச்சுபுட்டானு ஊரே பேச்சு.உப்பும்,சக்கரையும் சேர்ந்தா உசுருக்கு உத்திரவாதம் இல்லியா பின்ன.நாமக்காரனோ கஞ்ச பிசினாரி உப்பும்,சக்கரையும் ஊட்டுக்கே வாங்கி போட்ருக்கமாட்டான் பாவி.ஆனா குப்பாச்சி ரொம்ப நல்லவ நாளுக்கு ஒரு வேல கூட சாப்பிடாமலே புள்ள இல்லமா போச்சு.தங்கச்சி பையன் தான் ஈம கடன் பண்ண காலைலே ஆஜறாயிருந்தான்.ஊரு ரோடு ஒட்டினது சுடுகாடு அத சுத்தி மூனு ஏக்கர் நிலம் தீபகற்பம் மாதிரி அமைஞ்சுயிருக்கு சும்மா வித்தாகூட கோடி ரூபாய்க்கு மேல போகும்.சுடுகாட சுத்தியிருக்கறதால வாங்கறதுக்கு ஆள் இல்ல.அந்த நிலத்துல ஒருத்தனையும் கால் கூட வைக்க விடமாட்டான் நாமக்காரன்.

சுடுக்காடோ நாற்பதுக்கு நாற்பதுக்கு அடி தான்.ஊர்ல யார் செத்தாலும் சுடுக்காட்ல இடமில்லாதனால பழைய குழிய தோண்டிடுவானுங்க குழிவெட்ற குடிகாரனுங்க.
இன்னிக்கு மதியத்துக்குள்ள குப்பாச்சி சத்தியமா போய்டும்னு குழிவெட்ட அனுப்பிட்டான் நாமக்காரன்.ஒரு ரேடியோ செட்டு வச்சுயிருந்தா பக்கத்து ஊர் பொம்பளைங்க வந்துயிருப்பாங்கனு ரெண்டு பேரு பேசிட்டு போறாங்க.அவங்ககிட்ட அலமேலு ஏப்பா…என் பையன் குப்பாச்சி வீட்டானா இருக்கானானு கேட்க.
…பாக்கலம்மா…

அதில் ஒருவன், குப்பாச்சிக்கு நல்ல சாவு ! எமகண்டம் பத்திர மணிக்கு
உசுரு போனதோ பத்து மணிக்குனு சொல்ல.

…அலமேலு,ரேடியோ செட்டு கட்டியிருந்தா நல்லாந்துருக்கும்னு சலித்து கொண்டாள்.சாவு பாட்ட மைக் செட்டுல்ல பாடி ஜெயிக்கறத்துக்கு ஆளில்ல அலமேலுகிட்ட.கடன் தொல்ல தாங்க முடியாம எட்டிக்கொட்ட தின்னு செத்து போன புருஷன ஊர் அறிய மைக்ல திட்ட அவளுக்கு ஒரு சந்தர்ப்பமா பயன்படுத்திப்பா.என்னமோ ! குப்பாச்சி சாவுல மைக் வச்சு சொர்கத்திலோ,நரகத்திலோ இருக்கற புருஷன திட்ட முடியாம போனதுக்கு அவ புருஷன் செஞ்ச புன்னியம்.
கடங்காரன் பெத்த மவன்… !!!

எங்க போய் தொலஞ்சானோ….

மீண்டும் முனுமுனுத்துக் கொண்டாள்.

அடுத்த ஆறில் அத்தை மகளை முடிக்க நோட்டமிட போயிருந்தவன்
அலமேலு எதிரே படிரென வந்து நின்றான் அருள்.ஏன் ஊரே நார்ர மாதிரி கத்துற…
கடங்காரன் பெத்தவனே…!

உங்கொப்பன் குழிய தோண்டி குப்பாச்சிய போடுறதா ஒரு பேச்சி என் காதுக்கு எட்டுச்சி
ஓடிபோயி சுடுக்காட்ல குழிய வெட்டவிடாதனு கிசு கிசுத்தாள்.

ம்…நான் சாவு ஊட்டான போறேன் நீ போடா சீக்கிரமா சுடுக்காட்டுக்குனு நகர்ந்தாள்.
சரி…சரி…அங்க உக்காந்து பாட்டு பாடிட்டு கெடக்காத சீக்கிரம் வந்து சோறாக்கு.
சீக்கிரம் போடா…என்று பல்லை கடித்துக் கொண்டாள்.

டேப் பிடித்து சுடுகாட்டை ஒட்டி சிலர் நிலத்தை அளந்து கொண்டிருந்தார்கள்.

வக்கில் கையில் சில நில பத்திரங்களை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஊராரிடம்
மேற்கில் இருந்து கிழக்கு வரை பத்தாயிரத்து சொச்சம் சதுர அடியும் வடகில் இருந்து
தெற்கு வரை பத்தாயிரத்து சொச்சம் சதுர அடியும் குப்பாச்சி தன் நிலத்தை புதூர் சுடுகாட்டுக்கு உயிலாக எழுதியிருந்ததாக சொல்லிக் கொண்டிருக்க சற்று தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தான் அருள்.தன் அப்பாவின் குழியை பார்த்தான் செடி கொடிகள் படர்ந்திருந்தது அடையாளமில்லாமல்.குப்பாச்சியின்
முகம் நிழலாடியது அடையாளமாய் அவன் மனதில்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மனதில் இடம்

  1. உங்கள் சிறு கதையை படித்தேன் நன்று. மேலும் இதுபோல் கதையை போஸ்ட் செய்யுங்கள் வேலு. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *