மனக் கோட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,610 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடையைத் திறந்து இரண்டு மணிநேரங்கூட ஆகி இருக்காது, பேப்பர்காரர் சிவராமன் வந்து அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுப் போனதில் இருந்து குமாரசாமி மனம் கொள்ளாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. கடையில் கைக்கு உதவியாக இருக்கும் வாசு தனக்கும் தன் முதாலளிக்கும் பசியாற வாங்கி வந்த தோசையும் காப் பியுமாய் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் குமாரசாமிக்கு மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

“வாப்பா… எனக்குக் கொஞ்சம் வேலை வந்துருக்கு. நீ இருந்து கடையைப் பார்த்துக்க நான் அலெக்சாண்டிரா ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வர்றேன்…” அவன் நீட்டிய தோசையையும் காப்பியையும் கையில் வாங்கி மேசையில் வைத்துப் பிரித்தவாறே பையனிடம் விபரத்தைக் கூறுகிறார்.

“ஒன்னா ரெண்டா !முப்பத்தைந்து வருஷப் பழக்கம். கொஞ்ச நாளா பார்க்க முடியாமப் போயிடுச்சு, மக வீட்டோட போய்த் தங்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனவன், இப்ப திடுதிப்புன்னு சேதி சொல்லி அனுப்பியிருக்கான்_ ரொம்ப முடியாம இருக்கானாம்!”

தானாகப் பேசிக் கொண்டே பசியாறும் முதலாளியைப் பார்க்கும் பையனுக்கு அவரது அவசரமும், மன ஆதங்கமும் நன்றாகப் புரிகிறது. முதலாளிக்குத் தன்னால் ஆன மட்டும் மனதிருப்தியைத் தரக் கூடிய அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனாய்ச் சமர்த்தாக அவர் முன் வந்து நிற்கிறான்.

“நீங்க கவலைப்படாம ஆஸ்பத்திரிக்குப் போய் உங்க கூட்டாளியைப் பார்த்துட்டு வாங்க… நான் கடையைப் பார்த்துக்கறேன். கிளம்புங்க முதலாளி… கிளம்புங்க…

பையனின் நம்பிக்கையான உறுதிமொழியால் பூரண திருப்தி அடைந்த குமாரசாமி புறப்பட்டார். சிறிது தூரம் நடந்து வந்து சாலையோரமாய் இருந்த பழக்கடையில் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு பஸ் வந்து நிற்குமிடம் நோக்கி நடக்கிறார். மனதில் நண்பரின் முகம் வந்து வந்து மறைகிறது.

“சேதுராமன்…” உதடுகள் முணுமுணுக்க பஸ்ஸில் ஏறி வசதியாய் உட்கார்ந்து கொள்கிறார். பெண் கண்டக்டர் அருகில் வந்து டிக்கட்டைக் கொடுத்து விட்டுக் காசை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு நடக்கிறார். பஸ்ஸீம் நகர்கிறது, ஒய்வாகச் சாய்ந்து கொண்ட குமாரசாமியின் மனதில் மறுபடியும் சேதுராமன் வந்து நிற்கிறார்.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் மதிய வேளையில் அவசரம் அவசரமாய்க் குமாரசாமி இதே மருத்துவ மனைக்கு நடந்தே வந்தார். அங்கே கண்ணீரும் கம்பலையுமாய்த் தன் ஒரே மகள் ஈஸ்வரியைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு சோகச் சித்திரமாய் நின்ற சேதுராமனை ஆரத்தழுவி அவரது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதே சேதுராமன் தான் இன்றைக்கும் அழைக்கிறார். அன்றைக்கும் இன்றைக்கும் கடந்து விட்ட அந்த இருபது ஆண்டுகளில் நடந்து விட்ட கதைதான் என்ன?

“உனக்குத்தான் வயதிருக்கே சேது, பேசாம நல்ல பெண்ணா பார்த்து ரெண்டாந்தாரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா அவ இந்தத் தாயில்லாப் பிள்ளைக்குத் தாயா, உனக்குத் துணையா இருந்து வாழ்க்கை நடத்துவாளே… போனவள பத்தி நெனைச்சி நீ உருகிக்கிட்டு இருந்தா இந்தப் புள்ளைக்கு யாருப்பா ஆறுதல் சொல்வது?”

சொந்தக்காரர்கள் மட்டுமில்லை, நண்பர்களும் வற்புறுத்தினார்கள். ஆனால் அந்த ஐம்பது வயது சேதுராமன் அழுத்தமாய்த் தலையை அசைத்துத் தன் அருமை மகள் ஈஸ்வரியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

“போங்கடா போக்கத்தப் புசங்களா… இன்னும் அஞ்சு வருஷம் போனா என்னப் பெத்த என் ஆத்தா எனக்குச் சோறு போடும்டா; அப்புறம் அது வளர்ந்து படிச்சுப் பெரிய மனுஷி ஆனப்புறம் என்னை கண்ணுல வெச்சிக் காப்பாத்தும்டா… உங்க பேச்சைக் கேட்டு நான் எவளாச்சும் ஒருத்தியக் கொண்டு வந்தா அவ என் புள்ளையைத் தன் புள்ளையா பார்ப்பாங்கிறது என்னடா நிச்சயம்… என் தங்கத்தை நானே வளர்ப்பேண்டா… என் மகளுக்காக இந்தக் கட்டை சந்தனமாத் தேயும்; போங்கடா…

உள்ளத்து ஆற்றாமை எல்லாம் ஒரு சேர வெடித்துச் சிதற மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்து முத்தமிடும் சேதுராமனைப் பார்த்து, சுற்றமும் நட்பும் மௌனமாய்க் கலைந்து போனது. குமாரசாமியால் கூட எதையும் பேச முடியவில்லை .நண்பனுக்கு ஆதரவாய் நாலுவார்த்தை பேசிவிட்டுப் போனார். ஏதாவது பண்டிகை நாட்கள் வந்தால் தன் மனைவி மக்களுட ன் வந்து ஈஸ்வரி யைத் அழைத்துப்போய் புத்தாடை உடுத்தி அழகு பார்த்து அன்றைய பொழுது பூராவும் அங்கேயே வைத்திருந்து இரவு வந்ததும் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவார்.

ஜுரோங் தொழிற்சாலையில் உடலுழைப்புத் தொழிலாளியாய் வேலைபார்த்து வந்த சேதுராமன் பதவி ஒய்வு பெறும் போது ஈஸ்வரி உயர்நிலை மூன்றில் படித்துக் கொண்டிருந்தாள். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கப் சேதுராமன் ஒரு தள்ளுவண்டியை வாங்கி பாசிர்பாஞ்சாங் பீச் ஒரத்தில் சாப்பாட்டுக் கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினார்.

பகலெல்லாம் நாலைந்து வீடுகளில் தோட்ட வேலை செய்து மாலை வீடு திரும்பியதும் வண்டியைத் தள்ளிக் கொண்டு பீச்சுக்குப் போய் கடையைப் பே6வதுமாய் நாட்கள் ஒடின. வேலை செய்து கொண்டிருந்த போதே சமுதாயப் பிரமுகர் ஒருவரின் அறிமுகத்தால் ஒரு மலிவு வீட்டையும் பெற்று சேதுராமனுக்கு மகளை மேல்படிப்பு படிக்க வைப்பதில் சிரமமும் இருக்கவில்லை. தோட்டவேலையும் சாப்பாட்டுக் கடையும் கைநிறைய வருமானத்தைக் கொடுத்தன. ஒய்வு ஊதியம் வேறு வந்து கொண்டிருந்தது. மகளுக்கு வறுமையின் வாடையே தெரியாமல் வனர்த்து வந்தார். வசதி படைத்த குடும்பத்துப் பிள்ளைகளைவிட ஈஸ்வரி கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொண்டாள். படிப்பில் கவனம் இருந்ததோ இல்லையோ வெறும் பகட்டிலும் ஆடம்பரத்திலும் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

கணினி படித்தாள். தனக்கொரு கணினி வேண்டும் என்றாள். அவள் கேட்டதை மறுக்காமல் வாங்கிக் கொடுத்தார் குமாரசாமி. வேலைகள் முடிந்து ஒய்வாக வீட் நுழையும்போது மகள் கணினியில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து அவருக்கு நெஞ்சில் பெருமிதம் பொங்கும்.

ஒரு சின்ன டிவி பெட்டியை வைத்துக் கொண்டு மகள் என்னென்னவோ வித்தைகனை எல்லாம் செய்வதைப் பார்த்து மலைத்துப் போவார். பாசப்பரிவுடன் பால்கலந்து கொண்டு வந்து கொடுப்பார். மனதில் கற்பனைக் கனவுகள் வளர்ந்து கொண்டே வந்தன.

மழை வெயில் பாராமல் இரவு பகல் பாராமல் உழைத்தார். யாராவது அவரைப் பார்த்து அவர்மேல் பரிதாபப் பட்டு “இந்த வயசான காலத்தில இப்படி ஏன் கஷ்டப்படணும்” என்று கேட்டால், கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல்…

“எல்லாம் என் மகளுக்காகத்தான்” என்று பூரிப்புடன் சொல்லிக் கொள்வார். உயர்நிலைக் கல்வியை முடித்து, பரீட்சை முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சேதுராமனிடம் மகள் இன்னொரு முடிவை வந்து தெரிவித்தாள். சேதுராமன் இடிந்து போனாலும் மகளுக்காக… அவள் விருப்பத்திற்காகத் தன் கனவுகனைக் கலைத்து விட்டார். மகளை ஒரு பட்டதாரியாக்கிப் பார்க்க வேண்டும் என்ப்தற்காக மெழுகுவர்த்தியாய் உருகிக் கொண்டிருத்த சேதுராமன் அவன் விரும்பிய பட்டதாரி பணக்கார மாப்பிள்ளைக்கே மணமுடித்து வைக்க சம்மதம் தந்து விட்டார். மாப்பிள்ளையின் பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் சமுதாயத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருப்பவர்கள் என்ற காரணத்தைக் கூறித் திருமணத்தை வசதியுடன் கூடிய பெரிய ஒட்டலில் நடத்தி முடித்தார்கள். ஒரு சாதாரண ஏழைத் தொழிலாளி, வீடுவீடாய்த் தோட்டவேலை பார்ப்பவரைத் தங்கள் சம்பந்தியாய் ஏற்றுக் கொள்ளவும், தங்கள் உறவுக்காரர்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைக்கவும் அவர்கன் விரும்பவில்லை.

ஈஸ்வரியைத் தங்கள் பிள்ளைக்குப் பிடித்திருந்த காரணத்தினால் அவளை மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கன் ஈஸ்வரியும் அதற்கு ஒத்துக் கொண்டான். பங்களா வீடும் மெஜடிஸ் பென்ஸ் காரும் பளபளக்கும் ஆடை அணிமணிகளும் அவளை முற்றாக மாற்றி விட்டன. கணவனின் காதலில், அத்த அரிய சுகத்தில் பகட்டு வாழ்க்கையில் அவள் மயங்கிப் போனாள்.

கோடிக் கணக்கில் கனவுகனைத் தன் நெஞ்சிலும், கண்களிலும் சுமத்து கொண்டிருத்த அப்பாவித் தந்தை சேதுராமன் அதையும் மன நிறைவோடு சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டார். மகளின் வசதியான வாழிவில் ஒரு குறையும் வரக்கூடாது என்பதற்காக அவர் தூரத்திலேயே ஒதுங்கி நின்றார். தன் மகள் பெரிய படிப்பெல்லாம் படித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல நல்ல சேவையெல்லாம் செய்வான் என்று கனவு கண்டிருந்தவரை அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் பகட்டு வாழ்க்கை ஆதங்கப் படுத்தியது.  தனக்குத்தனே சமாதனம் செய்து கொண்டார். காலம் யாருக்காகவும் காத்திருக்காமல், யாரையும் கேட்டுக் கொன்னாமல் ஒடியது ஒருநாள் ஈஸ்வரி தன் கணவருடன் காரில் வத்து இறங்கினாள்.

அவளை இறக்கிவிட்டு அவள் கணவன் போய்விட்டான். கையில் பெட்டியுடன் வந்த மகள் தகப்பனாரைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

தனிக் குடித்தனம் போக வேண்டும், புது வீடு வாங்க வேண்டும் அதற்குப் பணம் வேண்டும் என்று மாமனாரும் மாமியாரும் அனுப்பி வைத்து விட்டதாகக் கூறித் தேம்பினாள் மகள்!தவித்துப் போனார் சேதுராமன். ஒரு புது வீட்டை வாங்கித் தரும் அளவுக்குத் தன்னிடம் பணவசதி இல்லை என்றாலும் இருக்கின்ற வீட்டையாவது மகளுக்காகக் கொடுத்து விட்டுத் தான் எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து அதை மகளிடம் சொன்னபோது மகள் தயங்கினாள்.

“அவரோட படிப்புக்கும் வேலைக்கும் இந்த மாதிரி வீட்லேயெல்லாம் இருக்க முடியாது அப்பா… தரை வீடா இருந்தா வசதியா இருக்கும். வெலையான கார் வெச்சிருக்காங்க, அதை இங்கேயெல்லாம் போட முடியாது. வேணுமின்னா இந்த வீட்டை வித்துட்டு அந்தப் பணத்தை முன்பணமாப் போட்டு வாங்கலாம்” என்றாள். அதுவும் அவருக்குச் சரியாகப் பட்டது.

“நாம மூணுபேரும் ஒன்னா இருக்காலாம் அப்பா… ரெண்டு மாடி வீடு ஒன்று பார்த்துருக்காரு, முன்பணம் கொஞ்சம் அதிகமாப் போட்டா மாசாமாசம் கட்ற வங்கி லோன் கூட கொஞ்சமாத்தான் இருக்குமாம்…

மகளின் ஆசையை மனதார ஏற்றுக்கொண்டார் சேதுராமன். மாப்பிள்ளையை அழைத்துப் பேசினார். மளமளவென்று வேலை நடந்தது. தன் சொந்த உழைப்பில் வாங்கிய மலிவு விலை வீடு மகளுக்காக விலை பேசப்பட்டது. விஷயம் தெரிந்த நண்பர்கள் அவருக்கு அறிவுரை சொன்னார்கள்.

“வேணாம்பா… இன்னும் நீ இருக்கப் போறது கொஞ்ச காலம்தான்!அதுவரைக்கும் உன்னோட சொந்த வீட்டுல இருந்துட்டுப் போயேன். செத்தாக்கூட உன்னோட பொணம் உன்னோட வீட்டுலே இருந்து போறதுதான் நீ வாழ்ந்ததுக்குப் பெருமை! சொன்னாக் கேளு… உன்னோட பொண்ணுக்குத் தான் புத்தியில்லேன்னா உனக்குமா மழுங்கிப் போச்சு… பணக்காரப் பசங்க… உன்னை வீதிக்கு ஒட்டிடுவானுங்க. “சேதுராமன் சிரித்துக் கொண்டார்.

“எனக்குன்னு யாருப்பா இருக்காங்க, என்னோட பேர் சொல்ல என் பொண்ணு மட்டுந்தானே இருக்கு… !அது கண்ணு கலங்கி நின்னா என்னர்ல் தாங்க முடியுமா? எனக்கப்புறம் இந்த வீடு அதுக்குத்தானே போய் சேரப் போவுது… நான் செத்தப்பறம் சேர்றதைவிட இப்பவே அது சந்தோஷத்துக்காக எடுத்துக்கிட்டு போகட்டுமே…” என்றார்.

குயின்ஸ்வே சாலையில் இருந்த அந்த இரண்டு அறை கொண்ட வீடு விற்கப்பட்டது_ புக்கித்தீமா சாலையில் அழகான வீடு வாங்கப் ப ட்டது. புது வீட்டுக்குக் அமர்க்களமாய் நடத்தப்பட்டது. மாப்பிள்ளையின் நண்பர்கள் உறவுக்காரர்கள் வந்து வாழ்த்தினார்கள்_ மகள் எல்லோரையும் ஒடி ஓடி உபசரித்தாள். தகப்பனார் என்ற உறவு இருப்பதே அவளுக்கு இப்போது மறந்து போயிருந்தது.

புது வீட்டுக்கு வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் போய்விட்டன. மகளும் மாப்பிள்ளையும் வந்து குவிந்திருந்த பரிசுப் பொருட்களை அழகு பார்த்து அடுக்குவதில் ஆர்வமாய் இருந்தார்கள். பெற்ற மகள் வந்து ஒரு வார்த்ஷயாவது பேசுவாள் என்று காத்திருந்த சேதுராமனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேசாமல் தன் உடைமைகனை ஒரு சாக்குப் பையில் திணித்துக் கொண்டு தனது தள்ளுவண்டியைத் தன்ளிக் கொண்டு பீச் பக்கமாய்ப் போய் விட்டார்.

“கரும்பில் இனிப்பு இருக்கும் வரைதான் எறும்பு சுற்றும்.” என்ற நண்பர்களின் வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. மனம் மோசமாய் நொறுங்கிப் போனது. நண்பர்களைப் பார்க்கவோ வேலைக்குப் போகவோ மனமில்லாமல் ஒரு பைத்தியம் போல் கடல் அலைகளையே வெறித்தபடி ஏகாந்தியாய் உட்கார்ந்திருப்பார். பசி மறந்து போனது. கண்களில் தூக்கம் கூட வர மறுத்தது.

எந்த மகளுக்காக மழையிலும் வெயிலிலும் கரைந்தாரோ… எந்த மகளை நினைத்து இரவு பகலாய் உழைத்தாரோ… அந்த மகளையே நினைத்து நினைத்து உருகினார்.

“என்னைப் பெத்த ஆத்தா என்னைக் காப்பாத்துவா” என்ற நம்பிக்கை கனவுகளாய் அவர் கட்டிய மனக்கோட்டைகள் அந்தக் கடலோர மணப்பரப்பில் கட்டப்பட்ட மணல் வீடாய் கலைந்து போனது. சேதுராமனின் மனதில் பட்ட அடி இடது கையையும் வலது காலையும் செயலிழக்க வைத்தது. அடியற்ற மரம் போல் சாய்ந்து கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவ மனைக்குக் கொண்டு போனார்கள்_ அனாதையாய்ப் படுக்கையில் கிடந்தவருக்கு இறுதியாக ஒரு ஆசை…

தாதியிடம் ஒரு பேனாவையும் தாளையும் வாங்கி எதையோ எழுதிக் கொடுக்கிறார். அந்தத் தாதியின் மூலமாய் வந்த செய்திதான் இப்போது குமாரசாமியைத் தூக்கிக் கொண்டு பறக்கின்றது.

குமாரசாமிஒட்டமும் நடையுமாய் மருத்துவ மனைக்குள் புகுந்து தாதியின் மூலம் அறிந்து நண்பரின் படுக்கையை நோக்கி நடக்கிறார். படுக்கையில் சாய்ந்தபடி கண்களால் மேல் தளத்தையே பார்த்திருக்கும் நண்பனின் அருகில் அமர்ந்து கையைப் பற்றித் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அழுகையோடு அழைத்தபோது அவருக்குப் பதில் பேச முடியாமல் கண்களில் நீர் அருவியெனப் பாய்ந்தது. எதையோ சொல்ல விரும்புகிறார். வார்த்தை வரவில்லை தனது கையை நண்பனிடமிருந்து உருவித் தலையணையின் அடியில் இருந்த ஒரு தாளை அவரிடம் கொடுக்கிறார். தன் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அவரைக் கும்பிடுகிறார் அந்தக் கைகளைத் தன் கைகளால் குமாரசாமி பிடிப்பதற்குள் கைகள் துவன்கின்றன. கண்கள் அவரைப் பார்த்தபடியே நிலைகுத்தி நிற்கின்றன. குமாரசாமி அவசரமாய்த் தன் கையிலிருந்த தாளைப் பிரிக்கின்றார்.

“நண்பா. .. என் வாழ்நானில் எல்லாவற்றையும் மகளுக்காகக் கொடுத்து விட்டேன். ஆனால் என் உடலை மட்டும் அவளிடம் கொடுக்க விரும்பவில்லை; என் உடல் உறுப்புகளை நீ எனக்காக தானம் செய்து விடு… இந்த உலகமே என்மகள் தான் என்று நான் வாழ்ந்து விட்ட காரணத் இம்மண்ணில் வேறெதுவும் என் கண்ணில் படவில்லை நண்பா… என் உழைப்பில் ஒரு துளியையாவது நான் ஒரு நல்ல காரியத்திற்காகச் செலவு செய்ததில்லை… எல்லாவற்றையும் என் மகளுக்காகவே கொடுத்து விட்டேன். தன்னையே அழித்துக் கொண்டு தன் பெற்றோர்கனைக் காப்பாற்றும் எத்தனையோ பெண்பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன்… ஆனால் என் மகள் ஈஸ்வரிபோல்…….

அன்பு நண்பா… என் ஆசையை நீ பூர்த்தி செய்வாய் என்று நம்புகின்றேன். எதற்குமே பயன்படாமல் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகப் போகும் இந்த உடல் யாருக்காவது பயன்படட்டுமே…”

நீர் நிரம்பித் ததும்பும் விழிகனைத் தன் விரல்களால் துடைத்துக் கொண்டு டாக்டர் இருக்கும் அறையை நோக்கி விரைகிறார் குமாரசாமி.

சேதுராமனின்ஈமச்சடங்கை முடித்துக் கொண்டு திரும்பிய குமாரசாமியின் கண்களில் சற்றுத் தொலைவில் இருந்த மிகப் பழமையான பாழடைந்த பங்களா ஒன்று சரிந்து வீழிந்து கொண்டிருந்தது தெரிகின்றது.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *