பிம்பம் துரத்துமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 3,676 
 
 

தன் ஊரின் கோயில் திருவிழாவுக்காக குனிந்து நிமிந்து வேலை பார்த்து கொண்டிருந்தான் அண்ணன் சேது. அவனுக்கு பந்தியில் சாம்பார் ஊற்றும்வேலை. “மாமா இந்த வாழைஇழைய எடுத்துட்டு பக்கத்துக்கு ரூமுக்கு போங்க, அங்க நரையா பேர் காத்துட்டு இருக்காங்க” என்று பொறுப்போடு தன் மாமாவுக்கு கட்டளை இட்டான். அவன் மாமா முத்து, அண்ணனுக்கும் தம்பிக்கும் பத்தாண்டு முன்பே தாயாகி விட்டார். முத்துவின் அக்கா பத்தாண்டுகளுக்கு முன்பு நோய்வாய் பட்டு இறந்து போனாள். அப்போது சகோதரர்கள் இருவருக்கும் வயது பதினாலு, பனிரெண்டு மட்டுமே. அப்போது முத்துவுக்கு திருமணம் செய்துவைக்க பேச்சு இருந்ததால் தாயில்லா பிள்ளைகளுக்காக தன் கல்யாணத்தை நிறுத்தி தாயாக மாறினார் முத்து. பந்தியின் காரசார பேச்சுக்கும் ‘இட்லி எங்க, சாம்பார் எங்க, சட்னி எங்க,’ என்று கேட்ட எல்லோருக்கும் காற்றை போல் வேகமாக ஓடி ஓடி பரிமாறிய அண்ணனை ஒருவன் நாட ஓடோடி வந்தான். அவன் வந்த வேகம் அண்ணனை விட அதிகமாக இருந்தது. அவன் வந்த வேகத்தில் அருகே இருந்த சட்டிசாமான் விழுந்த சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை. நேராக ஓடி அண்ணன் சேதுவை நாடினான்.

“அண்ணே உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.” என்றான் உடலில் வியர்வை சொட்டசொட்ட சொன்னான். வேலையில் மும்முரமாக இருந்த சேது அவனை திடுக்கிட்டு பார்த்து “என்னடா தம்பி, ஏண்டா இப்படி ஓடி வர.” என்று கேட்டான்.

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னே.” என்று ஓடிவந்த இரைச்சலில் மூச்சு வாங்கி வாங்கி பேசினான். அண்ணன் அவனை கையோடு பக்கத்தில் உக்கார வைத்து, “முதல்ல தண்ணிய குடிச்சுட்டு மூச்ச நல்ல வாங்கு. அப்படி என்னதான் விஷயமோ இப்படி ஓடி வரதுக்கு.” என்று சொல்லி ஒரு சொம்பு தண்ணியை எடுத்து தம்பி கையில் கொடுத்தான். “அண்ணே அது இருகட்டும்னே….” என்று பேச ஆரம்பித்தவனை நிறுத்தி, “அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் எனக்கு இப்ப நரையா வேல இருக்கு எதுவா இருந்தாலும் ராத்திரி பேசிக்கலாம்.”: என்று சொல்லி பக்கத்தில் இருந்த கேசரி சட்டியை எடுத்து கிளம்பிட்டான் சேது. பந்தியில் சாப்பிட்டு எழுந்த நால்வர் நல்லா மொசமொசவென தாடியும் மீசையும் வைத்து தம்பியையே முறைத்து முறைத்து பார்த்தனர். தம்பியும் பயத்தில் அவர்களை பார்த்து தண்ணியை அவசர அவசரமாக குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

முதல்நாள் உடற்பயிற்சியில் வெறிகொண்டு செய்து சோர்வடிவது போல் மாமா முத்து பன்னண்டு மணி வாக்கில் தரையில் துணி விரித்து படுத்துவிட்டார். கொஞ்ச நேரம் கலித்து யாரோ இருவர் பேசும் சத்தம் கேட்டது. தூக்கத்தில் கண் விளித்து இடது புறம் திரும்பி பார்த்தார், மங்கலாக தெரிந்த கண்களை கசக்கி பார்த்தால் கதவருகே சேது யாரிடமோ பேசிகொன்டிருந்தான். பேசிகொண்டிருந்தவனின் குரலும் பரிச்சயமாக இருந்தது. “என்ன மாப்ள என்ன இந்த நேரத்துல.” என்று கேட்டார். சேதுவிடம் பேசிகொண்டிருந்த நபரின் உடல் கதவில் மறைந்து கொண்டிருந்ததால் யாரெண்டு தெரியவில்லை. குரல் பரிச்சயமாக இருந்ததால் தம்பி என்று ஊகித்துகொண்டார்.

“அது ஒன்னு இல்ல மாமா நீங்க தூங்குங்க.” என்று பதிலளித்தான் சேது. மாமா முத்துவும் களைப்பில் இருந்ததால் அதனை பெரிசாக பொருட் படுத்தாமல் வலதுபுறமாக திரும்பி படுத்துவிட்டார். பின்பக்கத்தில் அவர்கள் பேசிய குரலில் அங்கங்கே கேட்டது. “இங்க பாரு, அதெல்லாம் ஒன்னு பிரச்சன இல்ல. நீ போய் நிம்மதியா தூங்கு, நாம காலைல பேசிக்கலாம்.” இந்த இறுதி வாக்கியங்களை கேட்டதும் மாமா அது தம்பிதான் என்று உரிதிபெற்று தூங்கினார். கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருவன் எதையோ தொழில் சுமந்து சென்றதை பார்த்தார் அது அந்த வீடு வேலைகாரந்தான்.

“என்னய்யா இது.” என்று கேட்டதற்கு “வாழஇழை அய்யா.” என்று வேலைக்காரன் பதில் சொன்னதும் அவனை அனுப்பி விட்டு மீண்டும் கதவருகே பார்த்தார். இப்போது கதவில் யாரும் இல்லை.

கோழியின் கூச்சலோடு காலை விடிந்தது. விசாலமான கொட்டாவியுடன் கிணற்றிலே தண்ணீர் எடுப்பதற்கு, வேலைக்காரன் வாலியை கிணற்றில் போட்டு கைற்றால் இழுத்துகொண்டிருந்தான். இரண்டுவாளி தண்ணீர் எடுத்ததும் கிணற்றில் எதோ வித்யாசமாக தெரிய, கண்களை கசக்கி பார்த்தான். அதிர்ச்சியில் திடுகிட்டு “சின்னையா…….” என்று அலறிக்கொண்டு ஊரை கூப்பிட்டான். “அய்யா இங்க யாராவது வாங்களேன் அய்யா சின்னையா, முத்தய்யா, நா என்ன பண்ணுவேன், இந்த பாவி கன்னுலையா இது படனும்.” என்று கூப்பிட்டு வீட்டிற்குள் ஓடினான். ஓடி சேது இருக்கும் அறையை தட்டி, “அய்யா இங்க வந்து பாருங்கையா தம்பிய….” என்று அலறினான். அவன் சத்தத்தை கேட்ட எல்லோரும் ஓடிவந்தனர். சேது வருவதற்குள் நிறைய வேலை ஆட்கள் கிணற்றருகே கூடிவிட்டனர். “என்னனே ஆச்சு தம்பிக்கு, ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க.” என்று சேது தூக்கத்தில் இருந்து எழுந்த அதிர்ச்சியில் கேட்டான். “அய்யா தம்பி கெனத்துகுள்ள கெடக்காருய்யா.” என்று அழுதுகொண்டே சொன்னான். சேது அலறியடித்து ஓடி கிணற்றருகே சென்றால் அங்கே சில வேலை ஆட்கள் கைற்றை போட்டு தம்பியை தூக்கிகொண்டிருன்தனர்.

“எப்டினே ஆச்சு.” என்றான் சேது.

“காலைல தண்ணி எடுக்க வந்தேய்யா, வந்து பாத்தா இப்டி இருக்கு….. ஐயோ நா என்ன பண்ணுவேன்…..” என்று அழுது தலையில் அடித்துகொண்டிருந்தான். அந்த சமயத்தில் முத்துவும் சேதுவின் அப்பாவும் வர, முத்து, “மாப்ள என்ன மாப்ள ஆச்சு, ஐயோ……” என்று தம்பியை பார்த்து அலறினார். கைற்றால் தூக்கி தம்பியை வெளியே தரையில் படுக்க வைத்தனர். நிறையா சினிமாவை உள்வாங்கிய முத்து தம்பியில் வயற்றில் அழுத்தி அழுத்தி வாய்வழியாக தண்ணீர் வருகிறதா என்று பார்த்தார். ஆனால் பலன் இல்லை. இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த அப்பா தவசிபாண்டி நெஞ்சிலே கைவைத்து பக்கத்தில் இருந்த மதிலை பிடித்து கீழே உட்காந்தார். உக்காரும் வரியல் முகத்தில் அதிர்ச்சியை தவிர எந்த பாவனையையும் காட்டாதவர் உக்காந்ததும், “ஐயோ என் புள்ள, என் புள்ள,” என்று அழ ஆரம்பித்துவிட்டார். “டேய் எதாவுது பண்ணுங்கடா.” என்று சேதுவை பார்த்து சொன்னார்.

அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே போலீஸ் வந்துவிட்டது, போலீஸ் வந்த அரைமணி நேரத்தில் பிரேத பரிசோதனைக்கு உடல் கொண்டு செல்ல பட்டது. பிறகு தவசி, சேது, முத்து ஆகிய மூவரிடமும் போலீஸ் விசாரணை நடந்தது. “உங்களுக்கு யார் மேலயாவுது சந்தேகம் இருக்கா.” என்று போலீஸ் கேட்டதுக்கு மதிக்கத்தக்க பதில் ஏதும் வரவில்லை. “நெத்தியில என்ன காயம்.” என்று போலீஸ் சேதுவிடம் கேட்டதுக்கு, “கீழ விலுந்துடேன்.” என்று சொன்னான். பிறகு போலீஸ் அங்கிருந்த எல்லோரிடமும் விசாரித்தனர். விசாரித்ததில் நேற்று பந்தியில்தான் தம்பியை கடைசியாக பார்த்ததாக எல்லோரும் சொன்னார்கள். பிறகு தம்பியை கடைசியாக பார்த்தவர்களிடம் மட்டும் விசாரித்ததில் ஒரு சிலர்மட்டும் தம்பியை நால்வர் நோட்டமிட்டதை குறிப்பிட்டனர், கூடவே அந்த நால்வரை பார்த்து தம்பி பயந்து போனார் என்பதையும் கூறினர். இதனை கேட்டு கொண்டிருந்த சேதுவுக்கு ‘நேற்று தம்பி எதையோ சொல்லவந்தான், நாம அத காதுகொடுத்து கேட்கவே இல்ல. ஒருவேள இத பத்திதான் சொல்ல வந்தானோ.’ என்று நினைத்தார்.

பிரேத பரிசோதனைக்கு சென்ற உடல் வீட்டுக்கு வந்துசேர, குடும்பத்தார் சடங்கு சம்பிரதாயங்களை செய்து தம்பிக்கு இறுதி அஞ்சலி செய்தனர். காரியங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய தவசியின் காதுபடும் படி சிலர் பேசினர், “அண்ணனும் தம்பியும் இணைபிரியா சகோதரர்களாக பாசத்த பொலிஞ்சுட்டு இருந்தாங்க. அது எந்த கலுசடைக்கோ பொறுக்கல, அதான் கண்ணு வச்சுட்டான்.” என்று பேசினார்கள். தம்பியின் குணம் தெரிந்த பலர் இதனை தற்கொலை என்று நம்பவில்லை, தம்பி மிக தைரியமானவர் என்றும் அவர் தற்கொலை செய்துகொள்பவர் இல்லை என்றும் ஆணித்தனமாக நம்பினார். அதனால் போலிசார் ஒருபக்கம் விசாரிக்க சேது தனக்கு தெரிந்த நபர்களிடம் சென்று எதாவுது துப்பு கிடைக்குமா என்று விசாரித்தான். சென்று விசாரித்த ஒவ்வருவரும் தன்னுடைய ஆழ்மனதில் இருந்து, “கவலையே படாதிங்க தம்பி நம்ம தம்பிக்கு இப்படி ஆனதுக்கு யார் காரணமோ அவனை இதே ஊர்ல நடு மண்டைய பொலந்து தவசி அய்யாவுக்கு படிக்கிறோம்,” என்றனர் ஆக்ரோஷமாக. முத்து மாமாவுக்கு நடுஜாமத்தில் வாழஇழை எடுத்து சென்ற வேலைக்காரன் மீது சந்தேகம் வந்தது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பிரேத பரிசோதனையின் முடிவுகள் தம்பியின் தலையில் பலமாக அடி பட்டதால் உயிரிழந்தார் என்று சொல்லிவிட்டது. இதனை உறுதி படுத்த இதனை விசாரித்த இன்ஸ்பெக்டர் கிணற்றிற்கு சென்று பார்த்தால் கிணற்றுக்குள்ளே தண்ணீர்க்கு கொஞ்சம் மேலே ஒரு செங்கல் செவுற்றில் இருந்து நீட்டி இருந்ததும் அதில் கொஞ்சம் ரத்த கரை இருந்ததும் கண்டுபுடிதனர். ஆகையால் தம்பி கிணற்றிலே தற்கொலை செய்துகொள்ள முயன்று கிணற்றில் குதித்த போது தண்ணீரில் மூழ்கி இறப்பதற்கு முன்பு செங்கலில் அடிபட்டு இறந்த பின்னரே அவர் தண்ணீரில் விழுந்திருக்கார் முடிவு வந்தனர். தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த பொது விசாரணைக்கு வேலை வைக்காமல் தம்பியின் உடலே காரணத்தை சொல்லியது. தம்பியின் நெஞ்சில் ‘ரேணுகா’ என்று பச்சை குத்தி இருந்தது. ரேணுகா என்பது தாயின் பெயரா என்றால் இல்லை. அது அதே ஊரில் உள்ள ஒரு பெண்ணின் பெயர். இதனை தெரிந்துகொண்ட ரேணுகாவின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஏற்கனவே ரேணுகாவின் தந்தை மில்ட்ரி மணிக்கும் தவசிக்கு முன்பகை இருப்பதால் ரேணுகா, தம்பியின் காதலுக்கு ஒத்து கொள்ளாததால் தற்கொலை செய்துகொண்டார் என்று கேஸை முடித்தனர். இதனை பிரச்சனை செய்து பெரிதாகாமல் இருதரப்பு வீட்டிலும் அமைதி காத்தனர். ஆனால் ரேணுகா வீட்டில் கதை வேறு. தம்பியின் சாவில் ரேணுகா பெயர் அடிபட்டதால் அந்த ஊரில் எல்லோரும் ஒன்னுக்கு ரெண்டக பேசினர். அது ரேணுகா பெற்றோர் காதுகளில் விழுந்தது. அதனால் ரேணுகாவை சில மாதங்கள் வெளியே விடாமல் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். இதனை தெரிந்துகொண்ட சேதுவும் தவசியும் மில்ட்ரி மணி வீட்டுக்கு சென்று சமாதானம் பேசினர். “யோவ் மில்ட்ரி உனக்கும் எனக்கும் இருக்க பகைய ஏன்யா பொம்பள பிள்ள மேல காற்ற.” என்றார் தவசி.

“உணகென்னையா….. நீ ஆம்பள பிள்ளைய பெத்துருக்க ஆனா எம்பொண்ணு நாளைக்கு இன்னொரு வீட்ல வாழ போற பொண்ணு, அதத்தான் உன் ரெண்டாவுது மகேன் கெடுத்துட்டு போய்ட்டானே……” என்று ஆக்ரோஷ பட தவசி மல்ட்ரி சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். அப்பாவை தடுத்த சேது, “அப்பா….. மறுபடியும் சண்ட போடதிங்க. ஆனது ஆகிபோச்சு.” என்று பேசிகொண்டிருந்தவன் மில்ட்ரியையும் அவன் மனைவியையும் பார்த்து, “இங்க பாருங்க….. உங்க பொண்ணு இப்படி இருக்குறதுக்கு என் தம்பி காரணமான்னு எனக்கு தெரியல, ஆனா நீங்க எங்க மேலதான் குறை சொல்றிங்க. நாங்க தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச தப்ப நாங்களே செரி செய்றோம்.” என்று சொல்லி எச்சிலை விழுங்கி, “உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ண நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று சொன்னான்.

“டேய் என்னடா நீயும் அவான்கூட சேந்துகிட்டு பேசுற.”

“அப்பா, நம்ம செய்யாத தப்புக்கு வாழ்நாள் பூராம் தண்டன அனுபவிக்கிறதுக்கு இது எவ்ளோவோ நல்லது.” என்று சொல்லி ரேணுகா பெற்றோர்களை பார்த்து, “தம்பிக்கு ஒரு வருஷம் நினைவு முடிஞ்சதும் நா உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன், நீங்க சீக்கரத்துல முடிவ சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

காலம் கடகடவென ஓடியது தம்பி இறந்து ஓராண்டு ஆனது. தம்பியின் நினைவுக்கு செய்யவேண்டிய சடங்குகளைஎல்லாம் அன்று அந்த வீட்டில் செய்துகொண்டிருந்தனர். அதற்கு ரேணுகா வீட்டில் இருந்தும் வந்திருந்தனர் ஆனால் ரேணுகா வரவில்லை. காலையில் நேரம் பார்த்து சடங்கினை முடித்து சாயங்காலத்தில் மூவரும் ஒரே அறையில் உறங்கிகொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் சேவல் கொக்கரிக்க மணி ஆறாகிவிட்டது என்று தூக்கத்தில் இருந்து எழுந்தனர்.

அவ்விருவருக்கும் முன்னே முத்து எழுந்துவிட்டார். கொஞ்சநேரத்தில் தவசியும் சேதுவும் எழ தவசி முத்துவிடம் பேசினார், “முத்து…. நம்ம தம்பி இல்லாததால இந்த வருஷம் திருவிழாவ செய்யமுடியல.”

“ஆமா மாமா, நானூ அதத்தான் சொல்லவந்தேன்.”

“பொறு…. நா சொல்லிக்கிறேன். அதனால நம்ம சேதுவோட கல்யாணத்த திருவிழா மாதிரி செஞ்சுறணும். எனக்கும் இப்ப இருக்குறது ஒரே புள்ளதான், இவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமச்சுகொடுதுட்டு நானும் என் புள்ள போய் சேந்த எடத்துக்கு நிம்மதியா போயிருவேன். இவன் வாழ்கையாது நல்ல இருக்கனும்,” என்று பேசி முடித்து கண்களை துடைத்தார். “அதனால ஒரு நல்ல சாப்பாடு காண்ட்ராக்ட புடி. எவ்ளோ செலவானாலும் பரவால.”

“கண்டிப்பா மாமா. முதல்ல என் தாய்தகப்பன இழந்தேன், அப்றம் என்ன தாயா பார்த்த அக்காவ இழந்தேன், அப்றம் நா புள்ளையா நினச்ச என் ஒரு மாப்ளைய இழந்தேன், இருக்குற இவனுக்கவுது முழுசா வாழணும்னு தோணுது.” என்று சொன்னவாறு முத்து அங்கிருந்து எழுந்தார்

அறையின் ஒரு மூலையில் சேதுவும் மற்றொரு மூலையில் தவசியும் உக்காந்திருந்தார்கள். அவ்விருவருக்கும் பொதுவாக செவுற்றில் ஒரு நீண்ட முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது, அதை பார்த்துகொண்டு முத்து தலைசீவி, அந்த அறையை விட்டு வெளியேறினார். தலைசீவி கொண்டிருந்தபோது முத்துவையே பார்த்துகொண்டிருந்த இருவரும் அவர் சென்றதும் அந்த கண்ணாடியில் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அப்போது அங்கு மௌனம் குடிகொண்டது. அந்த கண்ணாடியில் அவர்கள் பார்த்துகொண்ட விதம் ஒரு தகப்பனும் மகனும் பார்க்கும் பார்வையாக இல்லை. தவசி அந்த மௌனத்தை உடைக்க முயன்றார்.

“இனிமே நமக்கு எந்த பிரச்சனையும் இல்லைடா சேது.” என்றதும் ஆக்ரோஷமான சேது, “ஷ்ஷ்ஷஷ்….. சும்மா இருய்யா செய்யிறதையும் செஞ்சுட்டு நீயே காட்டிகொடுத்துருவ போல.” என்று அதட்டினான். அவன் கோபத்தை பார்த்ததும் பயந்துபோன தவசி அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. என்னதான் ஆனது அந்த ராத்திரியில்…….

முத்து தூங்கிய பிறகும் அவ்விருவரும் பேசிகொண்டிருன்தனர்.

“அண்ணே எனக்கு அப்பாவ நெனச்சா பயமா இருக்குனே.” என்றான் தம்பி.

“அதெல்லாம் ஒன்னு பிரச்சன இல்லடா தம்பி, எல்லாத்தையும் காலைல பேசிக்கலாம்.” என்று சொன்னதும் அதிர்ப்தியில் திரும்பி சென்ற தம்பியை அழைத்து, “சேரி வா இப்பவே போய் அப்பா கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.” என்று அழைத்துசென்று தவசி அறைக்கு வெளியே நின்றார்கள். தவசி உள்ளே அன்றைய கணக்கு வழக்கினை பார்த்துகொண்டிருந்தார். தம்பி உள்ளே வர தயங்கினான்.

“சேரி பரவால, நீ இங்கே இரு நா போய் பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அறையின் வாசப்படி தரையை விட ஒரு அடி உயரமாக இருந்ததால், கால்தடுக்கி விழுந்தான் சேது. நாற்காலியில் அமர்ந்து மேஜையில் கைவைத்து கணக்கினை பார்த்துகொண்டிருந்த தவசி, திடுக்கிட்டு எழுந்து, “என்ன சேது…… பாத்து வரகூடாதா…….” என்று அவனை கீழிருந்து தூக்கிவிட்டார். “:இங்கப்பார் நெத்தியில வேற அடிபட்டு ரத்தம் வருது…… நா போய் மருந்த எடுத்துட்டு வரேன்.” என்று சொன்னதும் அவரை தடுத்து, “அதெல்லாம் ஒன்னு வேணாம்பா நா அப்பறமா போட்டுக்குறேன், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்குதான் வந்தேன்.”

“என்னப்பா விஷயம், சொல்லு.”

“தம்பி ஒரு பொண்ண காதலிக்ராம்பா, அத உங்ககிட்ட சொல்ல பயந்து வெளில நிக்குறான்.”

“எது….. காதலிக்குரானா…. யார.”

“அந்த மில்ட்ரி காரர் பொண்ண.” என்று சொன்னதும் தவசி முகத்தில் கொலைவெறியை கண்டான் சேது.

“அந்த வெலங்காம போறவன் பொன்னையா இவன் காதலிக்குறான். இந்த கழுதைக்கு என்ன திமிரு இருந்தா என்கிட்டே வந்து சம்மதம் பேச சொல்வான். எங்க அவன.” என்று கத்திவிட்டு வெளியே வந்தால், தம்பி ஒரு மூலையில் தூனைபிடித்து முதுகை காட்டி நின்றான். தவசி கோபத்தில் வேட்டியை மடித்துக்கட்டி “ஏண்டா எலவெடுத்தவனே, என் மான மரியாதையெல்லாம் போகுறதுக்குனே உங்கம்மா உன்ன பெத்துபோட்டாலா……” என்று கத்தி அவனை இடுப்பில் எத்தினார். தம்பி திரும்புவதற்குள்தவசி எத்திவிட்டதால், அவன் நேராக ஜன்னலில் இடித்து விழுந்தான். இருந்தும் ஆக்ரோஷம் தீரவில்லை, அவனை அவர் காலால் இரண்டு மூன்று முறை பலமாக மிதித்தார் தவசி. அதனை தடுக்க சேது ஓடிவந்தான் அப்பா காலில் விழுந்து தம்பிக்கு விழும் அடியை தடுத்தான். இப்போ எதுக்குப்பா இவன அடிகிரிங்க என்று கேட்க ஆரம்பித்து அவர்கள் இருவருக்கும் கால்மணி நேரம் உரையாடல் நிகழ்தது.

கால்மணி நேரம் கழித்து, தவசிக்கு கோபம் குறைய குறைய தம்பியை பார்த்து, “டேய் எந்திரிடா, செய்யிறதையும் செஞ்சுட்டு படுத்துகெடக்குரத பாரு கழுத கழுத.” என்று சொல்லி சேதுவை எழுப்ப சொன்னார். சேது அவரை பார்த்து,
“அப்பா…. தம்பி எந்திரிக்க மாற்றான்பா.”

“என்னடா சொல்ற.”

“மூச்சும் இல்லபா.” என்று சொல்லி நெஞ்சில் காதைவைத்தான். “அப்பா எதுவும் கேக்கலபா. தம்பிய கொன்னுடிங்கபா….” என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

“என்னடா சொல்ற, நா எதும் பண்ணலடா.” என்று தவசி குரலும் தழுதழுக்க ஆரம்பித்தது. சேது முகத்தை மறைத்து தேம்பி தேம்பி அழுதான். தவசி தலையில் கைவைத்து குத்தவைத்து உக்காந்தார். அரைமணி நேரம் அங்கே அதுதான் காட்சி. சேதுவிற்கு அழுகை குறைய, “இப்போ என்னபா பண்றது.” என்றான்.

“பேசாம நம்ம தோட்டத்துல போதச்சுரலாமா.” என்றார் தவசி.

“மடையன் மாதிரி பேசாதைய்யா, தம்பி எங்கனு கேட்டா என்னய்யா பதில் சொல்வ.” என்று திட்டினான். அப்போது யோவ் என்று அழைத்ததை தவசி கண்டுகொள்ளவில்லை. ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி தவசி அவர் அறையில் இருந்து ஒரு கைற்றை எடுத்து வந்தார். “இந்த கைத்துல கட்டி தொங்க விட்டி தற்கொலைன்னு சொல்லிருவோம்.” என்று சொன்னார்.

“தற்கொலைனுதான் சொல்லணும் பின்ன கொலைன்னு சொல்லுவியா…. ஆனா கயிறு வேணாம் அடிச்சா அடியில உன் செருப்புதடம் கைரேக எல்லாம் பதிஞ்சிருக்கும். பேசாம கெணத்துல போற்றலாம். வீடுக்கெனத்துல வேணாம் தோட்டத்துல ஒன்னு இருக்குல அங்க போற்றுவோம்.” என்று சொல்லி அந்த திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் அவர்களே எதிர்பார்க்காத திருப்பம் அவன் நெஞ்சில் ரேணுகா பெயர் இருந்தது. பிறகு எல்லாமே அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

கொஞ்ச நாட்களிலே சேதுவிற்கு ரேணுகாவுடன் திருமணம் நிச்சயிக்க பட்டு நடந்தது. மணநாள் அன்று பிற்பகலில் விருந்து சாப்பிட்ட பிறகு மணமக்கள் அறையில் ஒய்வு எடுத்துகொண்டிருன்தனர். அப்போது ரேணுகா கட்டிலில் உறங்கிகொண்டிருக்க சேது கழிவறைக்கு சென்றான். அவன் அப்போதுதான் தூங்கி எழுந்தான். குழாயை திறந்து முகத்தினை கழுவினான். கழுவிக்கொண்டு எதிரில் இருந்த சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்தான். நெற்றியில் அன்று ராத்திரி கீழே விழுந்த அடி தழும்பாக மாறியது. அந்த தழும்பை தொட்டுபார்த்து புன்னகிதான். உண்மையில் அவன் புன்னகிக்கவில்லை. அந்த கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பம் புன்னகித்தது.

“கெட்டிக்கார ஆள்யா நீ.” என்றது சேதுவின் பிம்பம்.

“என்னசொன்ன.” என்றான் உண்மையான சேது.

“இல்ல…. கெட்டிக்கார ஆள்னு சொன்னே. ஒருபொன்னுகாக உன் தம்பிய நீயே கொன்னுட்டு அந்த பழிய உன் அப்பா மேல போட்டுட்டு நீ இம்மாதியா இருக்க, ஆனா செய்யாத தப்புக்காக உங்கப்பா வாழ்நாள் பூராம் குற்ற உணர்ச்சியோட இருக்க வச்சுடேல.” என்றது அந்த பிம்பம்.

“எது நான் கொன்னனா.” என்று சொன்னதும் அவன் கண்ணில் அந்த காட்சிகள் நினைவுக்கு வந்தது.

ராத்திரி வந்து பேச சொன்னதால் தம்பி சேதுவை பார்க்க வந்தான்.

“வாடா தம்பி, அப்போ என்னமோ பேசணும்னு சொன்ன, நா வேலையா இருந்தேன், இப்போ சொல்லு என்ன சொல்லணும்.” என்றான் சேது.

“அது…. அதுவந்து…… நா ரேணுகாவ காதலிக்குறேனே அவளதான் கல்யாணம் பண்ணனும்னு ஆச படறேன்.” என்றான் தம்பி. சேது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான்.

“எது ரேணுகாவா, யார் அந்த மில்ட்ரி காரர் பொன்னையா. அவருக்கும் நம்ம அப்பவுக்கும்தான் ஆகாதேடா. அப்பா கண்டிப்பா ஒதுக்கமாட்டாரு.” என்றான் சேது.

“அண்ணே அது அந்த மில்ட்ரி காரர் இல்லனே அது வேற மில்ட்ரி காரர், அது மில்ட்ரி ஜெனகராஜ். அவருக்கு பொண்ணு இல்ல ரெண்டு பசங்கதான். நா சொல்றது மில்ட்ரி மணி, அவரோட பொண்ணு ரேணுகாவ.” என்றதும் அவனை மேலும் கீழும் பார்த்து, “சேரி போ பாத்துக்கலாம்.” என்றான் சேது.

“நீதானே அப்பகிட்ட பேசணும்.” என்றதும் உல் அறையில் உறங்கி கொண்டிருந்த முத்து எழுந்து என்ன மாப்ள இந்தநேரத்துல என்று கேட்டார், சேது அவரை பார்த்து அது ஒன்னு இல்ல மாமா நீங்க தூங்குங்க, என்றதும் தம்பியை பார்த்து ஒன்னும் பிரச்சன இல்ல காலைல பேசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினான், பிறகு திடீர் என்று ஒரு யோசனை வந்தது, இந்த விஷயத்தை அப்பாவிடம் உல்டாவாக சொல்லி இதை நடக்க விடாமல் ஆக்கணும் என்று நினைத்தான். “சேரி வா அப்பகிட்ட பேசி இன்னிக்கே ஒரு முடிவு கட்டிருவோம் என்று சொல்லி தம்பியை அழைத்து சென்றான்.

போகும் வழியில் பக்கத்தில் ஒரு அறையில் ஒரு பொருளை வைப்பதற்கு நின்று உள்ளே சென்றான் சேது. சென்று கையில் அவன் வைத்திருந்த சாக்கினை வைத்துவிட்டு சுற்றி முற்றி பார்த்தான். அது ஒரு குடோன் போல் ஒரு அரை, அதில் ஓரத்தில் ஆணியில் தங்க பதக்கங்களும் பலகையலும் அதில் தம்பியின் பெயர் பொருந்தியதையும் பார்த்தான் சேது. ‘இது மாதிரி எந்த பதக்கக்களையும் என் பெயர் இல்லை. உனக்காக என் வாழ்கையவே கொடுதேநேடா….. ஆனாலும் நா ஆசைப்பட்ட பொண்ணும் உனக்கு வேணும்னு கேக்குறியே இது ஞாயமா…..’ என்று நினைத்து பக்கத்தில் இருந்த ஒரு கட்டையை எடுத்தான். தம்பியை அறைக்குள் அழைத்தான். தம்பியும் வந்தான். “டேய் தம்பி நா உன்கிட்ட முன்னாடியே சொல்ல்லிருக்கனும்டா….. தப்பு பண்ணிட்டேன். ரேணுகாவ நா ரெண்டு வருஷமா காதலிக்குறேண்டா. உனக்காக என் உயிரையே கூட தருவேன் ஆனா இது அதுக்கும் மேல. என்ன மன்னிச்சுருடா.” என்று சொல்லி அவன் நடு தலையிலே அந்த கட்டையால் ஓங்கி ஒரு அடி அடிதான். தம்பி வாங்கிய அடியில் “அண்ணே….” என்று கத்திக்கொண்டு மயங்கினான். தம்பியை சேது அவன் மடியில் போட்டு, “எனக்கு வேற வழி தெரியலடா தம்பி உன்னையும் வச்சுக்கிட்டு அந்த பொண்ணுகூட என்னால நிம்மதியா வாழ முடியாதுடா.” என்று சொன்னதும் தம்பி அர மயக்கத்தில் கையை கொண்டு சேது முகத்தில் பிடித்து கீறினான். “ஏண்ணே இப்டி பண்ண…..” என்று சொன்னவாறு மயங்கினான். என்று அந்த பிம்பம் பேசி முடித்தது. “ஆமாம் அதுகென்ன இப்போ.” என்றான் சேது பிம்பத்தை பார்த்து.

“சேரி…… அதுக்கப்றம் தம்பிய என்ன பண்ண….” என்று கேட்டதிற்கு காட்சி மீண்டும் தொடர்ந்தது……. ரேணுகாவின் பெயர் தம்பி விஷயத்தில் சம்மதபட்டிருந்தால் ரேனுகா வீட்டில் உடைந்து போய் விடுவார்கள். அப்போது ரேனுகாவிற்கு வாழ்க்கை தருவது போல் நாம் அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டான் சேது, மயக்கத்தில் இருந்த தம்பியை என்ன செய்வது என்று யோசித்து பழியை தன் வாழ்க்கையில் தன்னை விட எல்லாவற்றிலும் அதிகமாக தம்பிக்கு கொடுத்து அழகுபார்த்த அப்பா மேல் போட ஒரு கச்சிதமான திட்டத்தை யோசித்தான், அதுவே இதுவரை நீங்கள் படித்தது….

இறுதியாக அந்த பிம்பம் அவனிடம் ஒன்று சொல்லி முடித்து. “அவசரப்பட்டு தம்பிய கொன்னுட்டியே சேது…..” என்றது. அவன் நெத்தியில் இருக்கும் தழும்பு அவன் கண்ணாடியை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பிம்பம் குற்ற உணர்ச்சியாய் அவனை துரத்திகொண்டே இருக்கும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *