பன்னீர் துளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 10,827 
 
 

நல்ல தாய், தந்தை,. அழகான மனைவி, அம்சமான மனை, கௌவுரவுமான வேலை, சிறந்த நட்ப்பு வட்டாரங்கள் என்று எல்லாமே நிறைகளே வழிந்தோடியது ராகவனின் வாழ்க்கையில்.

இருப்பினும் வாரிசு…. என்று வரும்போது மட்டும் அவனது முகம் கருக்கும். என்னதான் சொத்து பத்து சொந்தங்கள் இருந்தாலும், வீட்டில் கொஞ்சவும், மிஞ்சவும், பிள்ளை பிஞ்சு இல்லை என்பதை நெஞ்சு வலியாகவே அவனுக்குள் அழுத்தியது. இதனாலேயே வெளி விஷேசங்களுக்கு செல்வதற்கு தடை போட்டு வந்தான்.

எத்தனையோ மருத்துவமனை ஏறியாச்சு மருத்துவச்சியை பார்த்து பார்த்து பர்ஸ்சும் காலியா போச்சு, ம்….. என்ன பண்ண ஆண்டவன் படி அளந்தது அவ்வளவுதான். என்று தனக்குள் பெருமூச்சு விட்டுக்கொள்வான்.

இதற்கிடையில் ஊர்வாய்க்கு அவில் கிடைக்க சும்மா இருக்குமா.? சுற்றம்.

உன் மனைவிக்கு தோசம் கீது இருக்கும், நல்ல அதிகாலை வேளையில் பச்சத் தண்ணீரில் குளிச்சு, மஞ்ச ஈர உடைய கட்டி, கருப்பு கருவோ மரத்தை சுட்டினா, வெள்ள வெளேர்னு புள்ள பெறக்குமாம்னு எதிர் வீட்டு அன்னம்மா பாட்டி சொல்லிவிட சரி அதையும் செஞ்சு பார்க்கலாமேன்னு தன் மனைவி ராதையிடம் சொன்னான்.

கணவன் பேச்சை தட்டாமல் அதிகாலை 4.30க்கு எழுந்து, மார்கழி குளிரில் பச்சத் தண்ணீரில் குளித்து மஞ்சள் ஈர உடையை கட்டி, பக்கத்து விநாயகர் கோவிலில் இருக்கும் கருப்பு கருவேள மரத்தை சுற்றினால்.

மூன்றே நாளில் பிறந்தது.

வெள்ள வெளேர்னு மூக்கில் ஜலதோஷம்.

அட ஆமாங்க மார்கழி குளிர்ல போய் பச்சத் தண்ணீரில் குளிப்பாங்களா..? இப்படி புள்ள “வரத்துக்காக” கணவனும், மனைவியும் மாற்றி, மாற்றி பரிகாரங்கள் செய்து வந்தனர்.

ராதை ஏனோ..! கொஞ்ச நாளா ராகவனிடம் சரியா பேசாமல் இருந்தால், அது ஏன்னு தனக்குள்ளே கேட்டுக் கொண்டால். (சரி விடு ஏதாவது பரிகாரமா இருக்கும்). வீட்டு வேலையெல்லாம் செஞ்சுடரா, அப்பா, அம்மாவையும் நல்லாத்தான் பார்த்துக்கிரா, நம்ம சொல்ற வேலையும் மறுக்காம நல்லபடியாவே செஞ்சுடுடரா, என்னவா இருக்கும்? தனக்குள்ளே அசைபோட்டான் ராகவன். சரிவிடு ஏதாவது பரிகாரமா இருக்கும். தன்னையே சமாதனப்படுதிக்கொண்டான்.

அடுத்த நாள்

ராகவன் வேலைக்கு செல்ல அவள் அவசர அவசரமாக புறப்பட்டு, வெளியே செல்ல தயங்கி தயங்கி நின்றவளை, அத்தை அம்புஜம் எதிர் கொண்டாள். ஏம்மா ராதை எங்க புறப்பட்டுட்டே? இல்ல….. இல்ல….. அத்தை நான் கடை தெரு வரைக்கும் போய்க்கிட்டு வந்துடறேன் என்று மருகிகொண்டே சொன்னால்.

சரி…. சரி….. சீக்கிரம் போயிட்டு வந்துடும்மா…. என்று சொன்னாள்….

அவள் போன பாதையை பார்த்தவாரே யோசித்து அமர்ந்தால்…. என்ன? புதுசா இருக்கு? வாசல் தெளிக்க மட்டும்தான் வெளியே வருவா, அப்படியே கடை தெருவுக்கு போகனும்னாலும் ராகவன் கூடத்தான் போவா, சரி ராகவன் ஏதாவது வேலையா போகச் சொல்லியிருப்பான். நேரம் ஆகிகொண்டிருண்டது.

அலுவலகத்தில் ராகவனின் செல்போன் கதறியது. ராகவன் செல்லை எடுத்து அட… அம்மா நம்பர், என்னம்மா.? என்ன விஷயம்..? என்று எதிர்முனையில் கேள்வியை தொடுத்துத்து கொண்டிருந்தான். இல்லடா…, ராகவா இன்னைக்கு ராதைய எங்காவது போக சொன்னியா..?

இல்லையேம்மா ஏன்?

இல்ல காலையிலே நீ போனதுக்குப் பிறகு போனவ இப்ப மணி இரண்டாகுது இன்னும் காணல…. என்று விஷயத்தை ஒரு வித படபடப்புடன் சொல்லி முடித்தால்… என்ன? ராதைய காணோமா?

அவளுக்கு நம்ம வீதி தெரு வழியே சரியா தெரியாது…. அவள போய் எங்கம்மா அனுப்பி.என்று அம்மாவை கடிந்து கொண்டான்.

இல்லடா…. என்று முடிப்பதற்குள் சரி…. சரி….. வைம்மா வரேன்னு படக்கென்று இணைப்பை துண்டித்தான் இப்போது அவனது உள்ளத்தில் சுனாமி வந்து வந்து போனது, எங்கே அவள்..? எங்கே அவள்..? என்று சிறிது நடுக்கத்துடனே வண்டி சாவியை எடுத்து கைக்குள் அழுத்தினான், எங்கே போயிருப்பா..? என்று மீண்டும் மீண்டும் தன்னிடம் கேட்டுக்கொண்டான். அழைப்பு மணியை பட பட வென அழுத்தினான். அட்டண்டர் எஸ் சார் என்று வந்து நின்றான்… நான் ஒரு ஒன்னவர்ல வந்துருவேன். யாரவது? வந்தா ஒரு மணி நேரம் கழித்து வர சொல்லு சரியா..? என்று சொல்லிவிட்டு விறு விறுன்னு கிளம்பி சாவியை வண்டிக்குள் செலுத்தினான். வண்டி பிளிரியது.

நாளாபுறமும் கண்களை ஓடவிட்டு வண்டியை ஓட்டி கொண்டிருந்தவனுக்கு சட்டென அந்த மஞ்சள் நிறம் பூ போட்ட சேலை அவன் கண் முன் வந்து மறைந்தது. வண்டியை திருப்பி பார்த்தான் அட ராதைதான், இங்கு என்ன செய்கிறாள். இந்த கரு வேப்ப மரத்தின் கீழ் வேக வேகமாக சென்று ராதையைப் பார்த்து இங்கு என்ன செய்யற? சற்று கோபமாகவே கத்தினான். ராகவனை கொஞ்சம் எதிர்பாராதவளாய் விறுட்டென பயந்து பின் தன்னை அசுவச படுத்திக்கொண்டால்.

அப்போது அவசர அவசரமாக ஒரு நடுத்தர பெண் வந்து ஒரு பச்சிளம் குழந்தையை அவள் கையில் வைத்துவிட்டு “இனி இது உன் பொறுப்பு”. நீ தான் பார்த்துக்கணும்னு சொல்லி வந்த வேகத்திலேயே சென்றுவிட்டாள்.

என்னடி..? இது என்னென்னமோ நடக்குது..? என்று கோபத்தின் உச்சியிலே நின்றவனாய் கத்தினான்.

இல்லைங்க… இல்லைங்க…. இது வந்து அந்த பெண்ணோட அக்கா குழந்தைங்க, பிரசவத்தின்போது அவளோட அக்கா இறந்துடுச்சாமா..? அவளுக்கு வேற உறவுன்னு யாரும் இல்லையாம்..? நான் கரு வேப்ப மரத்தை சுத்தும் போது இந்த குழந்தையை இங்கே போட்டுட்டு போனவள நான்தான் புத்தி சொல்லி வளர்க்க சொன்னேன். ஆனா அவ இந்த குழந்தை இருந்தா என்னைய யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டங்க, நீங்க வேணும்னா எடுத்து வளர்த்துக்கோங்கன்னு சொன்னா… பயந்து பயந்து சொல்லி கொண்டிருந்தாள், அதான் ஒரு வாரமா இதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டே இருந்தேன். இன்னைக்குத்தான் எதுவானாலும் பரவாயில்லை குழந்தையை உங்ககிட்ட காட்டி பேசிடலாம்னு இங்கு வந்தேன்…. என்று சொல்லி முடித்தவளின் கையில் மேகம் பஞ்சில் குட்டி வெந்நிறப் பன்னீர் நெளிந்தது.

அதைப் பார்த்ததும் ராகவனின் கோபம் பொடி பொடியாய் சிதறியது.

நெளிந்த பன்னீர் துளியை (குழந்தையை) வாரி தன் தோளில் போட்டு கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *