கமலா காலை நேர அவசரத்தில் இருந்தாள். கணவர் ஆபிசுக்குப் புறப்படும் நேரம். எங்கே டிபன்? என்று குதித்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் எட்டு மணிக்கு ஸ்கூல் வேன் வந்துவிடும்.
பையனை ரெடி பண்ணி அவனுக்குச் சாப்பாடு கட்டி அனுப்ப வேண்டும்.
இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிற குழந்தைக்குப் பசி வந்தால் கத்துகிற கத்தில் வீடு இரண்டாகிவிடும்.
கமலாவுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது.அப்போது காம்பவுண்டு சுவருக்கு வெளியே வாசல் அருகே பிச்சைக்காரனின் குரல். சட்டென்று எரிச்சல் வந்தது.
“அட போப்பா நீ வேற? நேரங் காலம் தெரியாமல்” என்று கத்தினாள்.
பிச்சைக்காரன் அப்படியும் போகவில்லை. வெளியே கோபத்துடன் வந்தவளிடம், பிச்சைக்காரன் சொன்னான்:
“அம்மா இங்க தனியா விளையாடிக்கிட்டு இருக்கிறது உங்க குழந்தையா?”
ஓடிப் போய் பதற்றத்துடன் தூக்கினாள் தனது கைக்குழந்தையை கமலா.
– வை.கிருஷ்ணன், காரைக்கால் (ஜனவரி 2012)