பணம் பந்தியிலே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 3,180 
 
 

(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐந்து நட்சத்திர ஹோட்டல்…தலை நகரிலே மிக விசாலமான மண்டபம்…அங்கே….ஜெப்பார் ஹாஜியாரின் மகளின் கல்யாணம்.

ஜெப்பார் ஹாஜியார்….எங்கள் ஊரில் பெரிய புள்ளி……. நாலைந்து ஃபெக்டரிகளுக்கு சொந்தக்காரர். – ஊருக்கு வெளியே பல விளை நிலங்களுக்கு அதிபதி. கணக்கில்லாத வாகனங்கள்… நிறைய எடுபிடி வேலையாட்கள், ஜனாதிபதியைச் சந்திக்கலாம்; அவரைச் சந்திப்பது மிகவும் கஷ்டம். இப்படியான ஒருவரின் மகளுக்கு திருமணம் என்றால் சொல்லவும் வேண்டுமா!

SUTHE -மாப்பிள்ளையும் சளைத்தவரல்ல; பெரிய இடத்துப் பையன். இலண்டனில் குடியுரிமை உள்ளவர்…அங்கும், இங்கும் தொழில் அகங்களுக்கு தலைவர்…இலண்டனில. இராணி மாளிகைக்கு பக்கத்திலே மாளிகை மாதிரி வீடு உள்ளவராம்…..

இவர்களின் கலியாணம் எப்படி இருக்கும்….?

ஜனாதிபதி, பிரதமர் உட்பட மந்திரிமார்கள், வெளிநாட்டு தூதுவர்கள், பயர் நீதியரசர்கள்…… ப்பா எஸ்டேட் ஓனர்கள், பெக்டரி உரிமையாளர்கள், அரசாங்க அதிபர்கள் அரசாங்க உத்தியோகத் தர்கள், ஹாஜிமார்கள்….. இப்படி முக்கியஸ்தர் கலந்து கொள்ளும் திருமண வைபவத்துக்கு எனக்கும் அழைப்பிருந்தது. சென்றேன். பொலிஸ், காவல் படையினர் நிறைய இருந்தனர். வீடியோ, ஓடியோ கமராக்கள் சுழன்று கொண்டிருந்தன.

பொல T உள்ளே காலடி எடுத்து வைத்தேன்….. ா வெளியே இருந்த உஷ்ணக்காற்று எங்கே சென்றது என்பதை அறிய முடியவில்லை. இதமான

குளிர் காற்று வீசியது…மங்கலான வெளிச்சம் மனதைக் கவர்ந்தது….விசாலமான மண்டபம்…வரவேற்புக்கு நின்றவர் என்னையும் என்னுடன் சென்றவர்களையும் வரவேற்று ஓரிடத்தை காட்டி அங்கே அமரச் செய்தார். நாங்கள் அமர்ந்தோம்……

ஆறுபேர் அமர்ந்து உண்ணும் மேசை…… குஷன் செய்யப்பட்ட இருக்கை…… இருக்கையில் அமர்ந்த நான்….. மேசையை நோட்டமிட்டேன்….. முக்கிய உணவு சகனைத் தவிர; உப உணவுப் பொருட்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன…… குறைந்தது ஓர் ஆளுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாவுக்கு மேல் மதிப்பிடக் கூடிய உணவு, குளிர்பானங்கள் வைக்கப்பட்டிருந்தன….. சுற்றுமுற்றும் பார்த்தேன்….. ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருந்தனர். முந்நூற்றைம்பதுக்கு மேல் கலன்கள் வைக்கக்கூடிய விதமாக மண்டபம் அமைந்திருந்தது. –

ஆண்கள் பக்கத்தை நோட்டமிட்டேன்; தலைப்பாகை, ஜுப்பா.. மேலை நாட்டு கோட் – சூட்……. நவீன இளைஞர்களின் நவீன ரக ஆடைகள்;

ஆரிய சிங்ஹல உடைகள்…… இப்படி பல ரகங்களில் ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

பெண்கள் பக்கத்தில் முகமூடிய பர்தாக்கள், ஜன்னல் போட்ட ஹிஜாப்புகள், இறுக்கமான நவீன அபாயாக்கள்; அரைகுறை உடல் தெரியும் ஆடை, ஓசரி…. இப்படியாக பெண்கள் அமர்ந்திருந்தனர்…..

எங்கும் நிசப்தம் நிலவியது. பெண்ணின் தகப்பனாரும் மாப்பிள்ளையின் தகப்பனாரும் ஒவ்வொரு மேசையாக வந்து குசலம் விசாரித்தனர்……

“எனக்கு மாப்பிள்ளையின் வாப்பாவை தெரியும்…..” – நிசப்தத்தை கிழித்துக் கொண்டு மாரிப் மாஸ்டர் என் காதில் ஊதினார். –

கட்டை “எப்படி?” என்றேன்…..

“ஏறக்குறைய இருபது வருஷத்துக்கு முன்பு ஜீ.சி.ஈ எக்ஸாமுக்கு என்னுடன் சுபவைஸராக இருந்தார்…..” என்றார்.

“அப்படியென்டால் அவரொரு மாஸ்டராக இருக்க வேணும்” என்றேன்….

“எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. பெரிய கோடீஸ்வரராக இருக்கிறாரே!” என்றார் உவைன் மாஸ்டர்…கப்படாகாயப்an

“இதில் புதினப்பட ஒன்றுமில்லை ; ஹாஜியார் சொல்வது உண்மைதான்” என்றார் என் பக்கத்தில் இருந்தவர்…..

எனக்கு அவரை முன்பின் தெரியாவிட்டாலும் கதை கேட்கும் ஆசையில் “எப்படி அவர் இந்த நிலைமைக்கு உயர்ந்தார்…?” எனக்கேட்டேன். இப்பதா ஒரு காலத்தில் நானும் அவரும் நல்ல நண்பர்கள். நான் படிப்பித்த அதே பாடசாலையில்தான் அவர் படிப்பித்தார்…. பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்… அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. 11 பாடசாலை விட்டதும் விட்டுக்கு போக மாட்டார்…. நேரே ரேஸ் புக்கிக்கு போவார்…… இதனால் அவருக்கும் வீட்டாருக்கும் சரியான கரைச்சல்…… அவர் சம்பளம் வீட்டு செலவுக்கே காணாது. அவர் மச்சான்மார் கவனித்துக் கொள்வார்கள்….. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு இலட்சம் ரூபா ரேஸில் கிடைத்தது…. மனுஷன் அதை வைத்துக்கொண்டு வெளிநாட்டு பிஸ்னஸ் செய்தார்…. கொஞ்ச நாளில் பாடசாலைக்கு லீவு போட்டு இலண்டன் போனார்…. அவருக்கு பிஸ்னஸ் கைகொடுத்தது. குடும்பத்தோடு அங்கே சென்றார்…. இன்று பெரிய கோடீஸ்வரர்…. அவரே அறியாத பணம் அவரிடம் புரளுகிறது….. சிலர் பணம் வந்தால் நட்பை மறப்பார்கள்…… ஆனால் இன்றும் என்னுடன் நட்பாய் பழகுகிறார் என்றார். பாரம்மா பக்கம் “சான்ஸ் இருந்தால் எல்லாம் தேடிவரும்” என்ற மாரிப் மாஸ்டர் “இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா……” என்றார்.

“சொல்லுங்க… தெரிய வேண்டிய செய்தி என்றால் தெரிந்து கொள்கிறேன்…

“இது ஒருவரை குறைவாக மட்டிடும் செய்தியல்ல; – தனி மனிதனையும், சமுதாயத்தையும் சீர்படுத்தும் விடயம்……” என்றார். ப

“புதிர்போட்டு… ஆசையை வளர்க்க வேண்டாம்… விஷயத்தை சொல்லுங்கள்” என்றேன்.

“அவர்…. நாசுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்றார்.தை

“நாசுவ குடும்பம் என்றால்… உவைன் மாஸ்டர் ஆச்சரியத்துடன் கேட்டார்…

“பாபர்… அதாவது முடி வெட்டுவோர் என்றார்….. “இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லையே” என்றேன்…

“அதனால்தான் நான் சொன்னேன்….. அவரும் தொழில் ரீதியாக தங்களை இனங்காட்டி கொள்ள தயங்க மாட்டார் என்பதால்தான் நான் சொன்னேன்” என்றார்……

சபையில் சலசலப்பு ஏற்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் வந்து கொண்டிருந்தனர்….சம்பந்தி இருவரும் அவர்களை வரவேற்று மாப்பிள்ளை இருக்குமிடம் அழைத்துச் சென்றனர்….. இக்காட்சிகள் மண்டபத்தில் நான்கு பக்கமும் பொருத்தப்பட்டிருந்த திரைகளில் விழுந்தன…மணமகள்

வீற்றிருக்கும் சிங்காசன மேடையும் திரையில் காண்பிக்கப்பட்டது.

மௌலவி இராக தாளத்துடன் நிகாஹ் மஜ்லிஸை நடாத்தினார். மஜ்லிஸ் முடிய….. தாலி கட்டும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. பாக ஆண் பெண் பேதமின்றி அவரவர் அழகுகள் திரையில் வண்ண வண்ணமாக காட்சி தந்தன. இவ்வேளை வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல, வெய்ட்டர்மார்கள் ஒவ்வொரு மேசையிலும் சுடச்சுட புரியாணி சகன்களையும் கோழிக்குறுமாவையும் வைத்தனர்.

எங்கள் எல்லாரினதும் கவனமும் சாப்பாட்டில் இலயித்தது. வான்கோழி புரியாணி; அதற்கு மேலே முட்டைகள், பழங்கள்; வைக்கப்பட்டிருந்தன.

விருந்து சாப்பாடு, மருந்து சாப்பிட்டு செரிக்க வைக்க வேண்டிய அளவுக்கு இருந்தது. சாப்பாடு முடிந்தது. எல்லாரும் எழுந்து வெளியே செல்லலாயினர். நானும் வெளியேறினேன். ஒவ்வொரு மேசையிலும் மிகுதியான உணவு வகைகள் நிறைய இருந்தன. ஏழை, பசியாளிகள் இல்லாத சாப்பாடு; புளிச்சேப்பகாரர்கள் இருந்து சாப்பிட்ட இடம் இப்படித்தான் இருக்கும்.

“ஏழைகள் அழைக்கப்படும் விருந்தே இறைவனின் அருள் நிறைந்த விருந்தாகும். ஏழைகள் அழைக்கப்படாது விரட்டப்படும் விருந்து இறைவனின் வெறுப்புக்குரிய விருந்தாகும்” – நபிகள் நாதரின் மொழியின் உட்பொருளை

அறிய முடியாதவர்கள் என்று எண்ணியபடியே ஆட்டோவில் ஏறினேன்…..

கண்களுக்கழகிய பெரிய எயார்கன்டிஷன் வாகனங்கள் நிறைந்திருக்கும் இடத்துக்கு நாங்கள் மூவரும் கூலி ஆட்டோவில் வந்தோம்.

அதுவும் ஒரு வித ஆடம்பரந்தான்.

“எப்படி சாப்பாடு?” உவைன் மாஸ்டர் பற்களை கிண்டிய படியே கேட்டார்.

பாமஸியில் மக்னீஸியா நான்கு ஐந்து டெப்லட்டை வாங்கி குடிக்க வேண்டும்” என்றார் மாரிப் மாஸ்டர்.

“கலியாணம் என்றால் தீனுக்காக செய்யப்படவேண்டிய காரியம்; இங்கே வீணுக்காக செலவழித்துள்ளார்களே…..” என்றேன்…

– இங்கு மட்டுமா? இன்று, இருப்பவர் – இல்லாதவர் என்றில்லை . எல்லாரும் இப்படித்தான். போதனைகள் பலிந்து விட்டன. செயல்களும் மலிந்து விட்டதே; அல்லாஹ்தான் காப்பற்ற வேண்டும்” என்றார் நீண்ட பெருமூச்சுடன் மாரிப் மாஸ்டர்.

“ஏன்…. குர்ஆனில் நூற்றி முன்றாம் அத்தியாயமான அல்-அஸ்ர் சூறாவில் அல்லாஹுத்தஆலா காலத்தின் மீது சத்தியம் செய்து நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் எனச் சொல்லி இருப்பதை மறந்து விட்டீர்களா?” என்றேன்.

மறக்கவில்லை…அதோடு..நான் இதையும் மறக்கவில்லை ; அன்டைக்கு அவர், அவராலே ஒதிக்கிய பாபர் குடும்பமொருவரையே இன்டைக்கு மாப்பிள்ளை ஆக்குகிறாரே…” என்றார் ஆதங்கத்துடன் மாரிப் மாப்டர்…

தன் காலத்தின் கோலங்கள்…இடையில் குறுக்கிட்ட ஆட்டோ டிரைவர் கூறினான்.

“இந்தக் காலத்தை போலல்ல…அந்தக் காலத்தில்… நான் ஸ்கல் போற்காலம்…எனக்கு அப்பொழுது ஒரு பதினைந்து வயது இருக்கும்…..ரபீயுல் அவ்வல் – அதாவது நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் – வந்தால், வீடு வீடாக போட்டிக்கு சுபுஹான மௌலுத் ஓதி கந்தூரி கொடுப்பார்கள்…ஜெப்பார் ஹாஜியார் வீட்டு கந்தூரி விசேஷமானது… நானும் அவர் கொடுக்கும் கந்தூரிக்கு விருப்பமுடன் செல்வேன்…ஒரு முறை நான் இருந்த சகனுக்கு நாசுவ சபீர் நாநா வந்து இருந்தார்…..இதைக் கண்ட ஜெப்பார் ஹாஜியார்…… “டக் கென்று அங்கே வந்தார்…நீங்க எழும்புங்கோ என்று அவரை எழுப்பி ஒரு மூலையில் உட்கார வைத்தார்….. எனக்கு ஒன்றும் புரியவில்லை . பிறகுதான் விளங்கியது…நாசுவ ஆட்கள் தீண்டத் தகாதவர்களாம்….அவர்களுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாதாம்…. என்ன நீதியோ …?”

பெருமூச்சொன்றை விட்ட மாரிப் மாஸ்டர்… “ஆனா ஒன்று… எங்கள் ஆறுபேருக்கு ஒரு கலம் வைக்கப்பட்டது. சபீர் நாநாவுக்கு தனியே ஒரு கலம் வைக்கப்பட்டது; அவர் எல்லாவற்றையும் பார்சல் பண்ணி வீட்டுக்குக் கொண்டு போனார்” என்றார்.

“உண்மைதான்…… இஸ்லாம் எதை ஒதுக்கும்படி சொல்கிறதோ…… அதைப் பாவம் என்று அறியாது செய்கிறார்கள்….. ஓர் இறை, ஒரு மறை….. ஒரே இனம் என்ற கொள்கையுடைய சமதர்ம சன்மார்க்கம் இஸ்லாம்….. இப்படியும் மனிதர்கள் இருப்பதனால்தான் இஸ்லாத்தில் இல்லாததைக் கூறி தப்பர்த்தம் கதைக்கிறார்கள் இஸ்லாமிய விரோதிகள்….” என்றேன்.

“இஸ்லாத்தின் விரோதிகள் வெளியில் அல்ல; முதலில் உள்ளே இருப்பவர்களை திருத்த வேணும்” என்றார் மாரிப் மாஸ்டர்…

“அப்போ ….. இன்று நடந்தது…… பணக்கார கலியாணம் அல்ல; புரட்சிக் கல்யாணம்” என்றார் நக்கலாக உவைன் மாஸ்டர்.

“அதிகம் சந்தோஷப்பட வேண்டாம்; இங்கே பணந்தான் பேசுகிறது….புரட்சியாம் புரட்சி…ஒரு தமிழ் பாட்டு இருப்பதை நீங்க கேட்தில்லையோ..கேளுங்க…காசாலே ஆகாத காரியம் இல்ல; காசு இல்லேன்னா கோயில் குளம் பூஜையும் இல்ல…..” என்றார் மாரிப் மாஸ்டர்…

அவர் பேச்சில் வேகம் இருப்பதை அறிந்த நான் அப்படி என்றால் – பணம் பந்தியிலே” என்றேன் ராகத்துடன்…… டிரைவர் உட்பட எல்லாரும் சிரித்தனர்…..

– மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *