நம்ம பொண்ணு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 11,016 
 
குமாரவேல் ஆபிஸுலேந்து வந்த உடனேயே கவனித்தார், தன் மனைவி பங்கஜத்தின் முகத்தில் ஓடிய புதிய கவலை ரேகைகளை. வரும் சொல்ப சம்பளத்தில், எப்படியோ குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. படிக்காதவளாக இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பதில் பங்கஜத்திற்க்கு பெரும் பங்குண்டு. விவரம் தெரிந்து, அவரின் தனியார் கம்பெனி வேலை பளு புரிந்து, இதுவரை அவரிடம் எந்தப் பிரச்சினையையும் அவள் எடுத்துக் கொண்டு போனதே இல்லை. எப்படியோ சமாளித்து விடுவாள். அப்படிப்படவளின் முகத்தில் தெரிந்த கவலை தான் அவரை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. ஆபீஸ் அலுப்பும், முதுகு வலியும் சேர்ந்து அவரை இது பற்றி எதுவும் மேலும் கேட்கத் தூண்டாமல் தடுத்தது.

அவருக்கிருப்பதோ ஒரு பெண்ணும் , பிள்ளையும் தான். பெரிய பெண் அனிதா, இஞ்சினீயரிங் காலேஜில் மூன்றாம் வருஷம். நன்றாகப் படிக்கக் கூடிய சுட்டி. சில சமயங்களில் இளம் மனம் அலை பாய அவ்வப்பொழுது மார்க்குகளைக் கோட்டை விடுவாள். குமாரவேலின் துரதிர்ஷ்டம், தேவையான நேரத்தில் அந்த அலை, ஸ்கூல் கடைசி வருஷத்தில் மீண்டும் சுனாமியாய் பாய மார்க்கு குறைய, கஷ்டப் பட்டு, யார் யார் காலையோ பிடித்து இஞ்சினீயரிங் சேர்த்து விட்டார். அதற்க்கப்புறம் ஒன்றும் பெரிய மாற்றமில்லை, அதே விளையாட்டுத்தனம், டீ வீ, சினிமா இவைகள்தான். எது இருந்தாலும் தன் பெண் மீது அபார நம்பிக்கை அப்பாவுக்கு, எப்படியும் தனக்குப் பேர் வாங்கித் தருவாளென்று.

ஆனால் பங்கஜத்துக்கோ பக்கத்து வீட்டு உமாவைப் போல் இவளும் அமைதியான பெண்ணாக நடந்து கொள்ள வேண்டுமென்பது ஆசை. உமா எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். அப்பா கூப்பிட்டால் கையில் இருப்பதை போட்டு விட்டு ஓடுவாள். காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தால் எங்கேயும் போக மாட்டாள், போனாலும் ஏழு மணி அடிப்பதற்க்குள் வந்து விடுவாள். இப்படி அம்மா சொன்னதாலோ என்னவோ, உமாவை சாமர்த்தியமாகத் தவிர்க்க ஆரம்பிதிருக்கிறாள், அனிதா. இந்தக் காலப் பசங்களுக்குச் சொல்லியா தரணும் – நைஸாக வாழைப் பழத்தில் ஊசி ஏத்த!.

சின்னவன் இந்தக் காலத்து எட்டாம் வகுப்பு மாணவன். சதா சர்வ காலமும் கையில் கிரிக்கெட் பேட்டுடன், சைக்கிளில் அந்த ஏரியாவையே வட்டமடித்து கொண்டிருப்பான். அரும்பி வரும் மீசை பற்றி ஏகப் பெருமை.

அன்று சனிக்கிழமை- சாதாரண மக்களின் சந்தோச நாள். இரவு தூங்கப் போகும் முன் சற்று டல்லாக இருந்த மனைவியிடம் கேட்டார் “ஏன் ஒரு மாதிரி இருக்கே? வழக்கமான கல கலப்பு தெரியல்லயே?”.

மறைக்க முயன்று உடனே தோற்றுப் போய் மடை திறந்தாள்.

“நம்ப அனிதாவை நினைச்சால் ரொம்ப கவலையாயிருக்கு”

“ஏன் என்னாச்சு அவளுக்கு”

“கொஞ்ச நாளா அவ போக்கே சரியில்லை”

“சஸ்பென்ஸ் எல்லாம் போடாம விவரத்தச் சொல்லு”

“இப்பல்லாம் காலேஜுலேந்து வந்தா முன்ன மாதிரி பேசரதுல்லே. கேட்ட கேள்விக்கு பதில். கதவக் கதவ சாத்துண்டுடறா.

போறாக்குறைக்கு இப்ப ஏதோ இங்க்லீஷ் நாவல் வேற படிக்க ஆரம்பிச்சிருக்கா போல. காலேஜ் லைப்ரரி நாவல் எப்போதும் கையில. முந்தா நேத்திக்கு அப்படித்தான் விடாப்பிடியா ஒரு கதையை எனக்குச் சொல்லி அதோட முடிவை கண்டு பிடிங்கறா. கேட்டா இந்த கடைசீல சஸ்பென்ஸ் வர மாதிரி கதைதான் அவளுக்கு ரொம்ப இஷ்டமாம். எனக்கென்னவோ ரொம்ப பயமாயிருக்கு”.

“இதிலென்ன பயம். இந்தக் காலத்துப் புள்ளைங்க பண்றது தானே”

“போன வாரம் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். இவ ரூம்ல லைட் எரியறதே, படிச்சின்றுக்காளோன்னு போய் பாத்தா, விட்டத்த பாத்துண்டுருக்கா. என்னடின்னு கேட்டா சிரிச்சுட்டு லைட்ட அணச்சுட்டா”.

“எப்பப் பாத்தாலும் அந்த செல் போனை நோண்டிண்டே இருக்கா. மெஸேஜ் வந்தூண்டே இருக்கு, போயிண்டே இருக்கு. என்னடி பிஸினஸ் பண்ற உங்க மாமாகூட இவ்வளவு செல் பேசறதில்லன்னு சொன்னா, ஓல்ட் ஸ்கூல்ன்னு பழிச்சுட்டு போறா. கொஞ்சம் பேசிக் கண்டிக்கக் கூடாதா ”

“இந்தக் காலத்துப் பசங்கள கொஞ்சம் விட்டுத்தான் புடிக்கணும். நம்ப காலமில்லை இது தேங்கா ஒடச்ச மாதிரி உடனே கேக்கரதுக்கு”.

“முன்னெல்லாம் பக்கத்தாத்து பொண்ணு உமாவோடதான் போவா வருவா, அப்பெல்லாம் எனக்கு நிம்மதியா இருந்தது. இப்ப தனித் தனி. கேட்டா அவ வழி ஒத்து வரலேங்கறா”

“எதுக்கும் அந்த உமா கிட்டா சொல்லி வெக்கட்டுமா, இவ மேல ஒரு கண் வெச்சுக்கச் சொல்லி?”

“வேண்டாம், வேண்டாம். அவளுக்கு தெரிஞ்சா பொங்கிடுவா. ஏம்மா, நம்ப பொண்ண நம்பளே நம்பாட்டா எப்பிடி. இந்த மாதிரி ஸ்பை வேலையெல்லாம் தேவை இல்லை. மனச போட்டு அலட்டிக்காம பேசாம படு”

“என்னவோ கீரத் தண்டு மாதிரி வளர்ந்த பொண்ண வெச்சுண்டு எப்படித்தான் நிம்மதியா தூங்குறீங்களோ. இதுல எனக்கு வேற அட்வைஸ்” என்று ஒருக்களித்துக் கொண்டாள்.

அவள் வாயை அடச்சாலும், அவருக்குள்ளே ஏதோ ஒண்ணு நம நமன்னுது. கட்டுப்படுத்திண்டு தூங்க முயற்ச்சித்தார்.

இது முடிஞ்சு ரெண்டு நாள் அவரும் தினமும் அனிதாவுடன் பேச்சுக் குடுத்துப் பார்த்தார். சாதாரணமாகத் தான் பதில் சொன்னாள், ஆனால் அந்தப் புன்னகையில் ஒரு ஏளனம், நக்கல் தெரிந்தது.

அன்று அவர் ஆபிஸ் முடிஞ்சு லேட்டா 9 மணிக்கு வீடு திரும்பும் போது, தெரு முனையில் பார்த்தார், வீட்டு வாசலில் கொஞ்சம் ஒரு அஞ்சாறு பேர் கூடி நிக்கறதை. துரிதமாக நடையக் கட்டி விட்டுக்கு வந்தால் பங்கஜம் சொன்னாள் ” பக்கத்து வீட்டு உமாவைக் காணுமாம்”

“என்ன, எப்படி” என்று பதறிய போது, “ஏதோ லெட்டெர் எழுதி வெச்சுட்டு வேற போயிருக்காளாம். கேபிள் டீ வீ விஷயமா அடிக்கடி வரும் ஒரு பையனோட” என்றாள்.

“என்னது, அவ அப்பா, அம்மா, யாருக்குமே தெரியாதா” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட போது, உள்ளேருந்து வந்த அனிதா சொன்னாள் ” ஏன் தெரியாம. இது ரொம்ப நாளா ஓடுது. நான் அந்த ஆன்டி கிட்ட போன மாசமே சொன்னேனே”

“என்ன தான் இருந்தாலும் உமா எனக்குப் பிடிச்ச ஆதர் மாதிரி, கடசி வரைக்கும் யாருமே யோசிச்சுக் கூட பாக்காத மாதிரி ஒரு ட்விஸ்ட் குடுத்துட்டா. நீ வேணா பாரேன், அவ பின்னாடி ஒரு பெரிய எழுத்தாளரா வரப் போறா” என்றாள்.

குமாரவேலின் பார்வையை தாங்க முடியாமல் பங்கஜம் சமையலறைக்கு நழுவினாள்

எழுதியவர்: கபாலி (mail2kapali@gmail.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *