தீர்மானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 3,868 
 
 

மார்கழி மாதம். கடும் குளிர். தூக்கமே பிடிபடல எனக்கும் என்னவருக்கும். கட்டிலில் போர்வைக்கு போர்.

மெலிதான பஜனை ஓசை பக்கத்து தெருவில் பாடுவது தெளிவாக கேட்கிறது. மொபைலில் டைம் பார்த்தேன். காலை 4.30 மணி. வாசலில் டூ வீலர் சத்தம்.

அது சரி, எப்படி அவரால் மட்டும் இவ்வளவு காலையில் வீட்டுக்கு வீடு பால் போடமுடிகிறது என்று பலநாள் நினைத்து இருக்கிறேன்.

கேட் திறக்கும் சத்தம்..அத்தை எழுந்தாச்சு.. Help பண்ணலாம் என்று வெளியில் வந்தேன். Happy new year அத்தை..

லேசான தூரல். வாசல் தெளிக்கிற வேலையை வருணன் எடுத்து ஓய்வில் இருந்தான். காரில் முத்து முத்தான வியர்வை துளிகள்.

பொத்துக்குட்டு ஊத்தியது வானம்.. மார்கழியில் மழையா. ஆமாம் இப்போது பெய்கிறதே..

Mettalorgical dept. Radar எல்லாம் ரிப்பேராம். பாவம் அவர்கள் என்ன பண்ணுவார்கள்.

பக்கத்து வீட்டு ஆன்ட்டி Almost கோலம் போட்டு முடித்து கலர் பொடி தூவிட்டு இருந்தாள்.

நான் புள்ளி வைக்க அத்தை கோலம் போட்டாங்க எங்கள் வீட்டு வாசலில்.

அதிகாலை பொழுது என்பதே, தினம் ஒரு அதிசயம் தான்..

கா..கா.. என கூட்டமாக கரையும் சத்தம். பேப்பர் போடும் பையனின் சைக்கிள் களிங்..க்ளிங்..

கோயிலில் மணி அடிக்கும் சத்தம்.. அல்லாஹு இல்லல்லா என்று தூரத்தில் முழக்கம்..

சூரியன் உதிக்கும் முன்பே தெரியும் செவ்வானம். இன்னும் எவ்வளவோ..

அத்தை க்ளிக்கினாள். ஆன்ட்டி வீட்டு கோலம் முன்னால் குனிந்து ஒரு pose..எடுத்துக் கொண்டேன்.

மார்கழி கோலப்போட்டி Group இல் போட்டு அசத்தத்தான். யார் வீடுன்னு யாருக்கு தெரியப் போவுது!

மீனாட்சி, இந்தா Recharge பண்ணு TV வர்ல பாரு. ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட. Sunday தான.

தலைவலி.. அத்தை. Wait. டிகாக்‌ஷன் அடிச்சி Fresh. ஆ தரேன். காலையில் மட்டும் கடிகார முள் ஏன் வேகமாக சுழல்கிறது..

மார்கழி மஹா உற்சவம்.. Jaya TV இல் Sid sriram. What a voice..

சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அத்தை school teacher. சமையல் கிங். Sorry.. Queen.. அக்காரவடைசல் பண்ணா அடிச்சிக்கவே முடியாது..

போன வாரம் தவல தோசைன்னு ஒரு Dish. What a recepie. குக் வித் கோமாளி தாமோதரனும், வெங்கடேஷ் பட் டும் பிச்சை வாங்கணும்.. எங்கம்மாவும் வாங்கிட்டு போயி try பண்ணாங்க.. சொதப்பல். But this is unique!

வீட்டில விசேஷம்னு வந்துட்டா, ஆர்பாட்டமே இல்லாம அத்தனை item பண்ணி.. அசத்துவாங்க அத்தை..No chance.. போன மாசம் கால் fracture ஆயி ஒரு வாரம் rest. நாங்க பட்ட பாடு.. அப்பப்பா சொல்லி மாளாது. Google சமையல் தான் daily நானும் அவரும்.. காச்சு மூச்சுன்னு ஓரே சத்தம் கிட்சன்ல. பாத்திரம் தேய்க்க shift. Big boss மாதிரி..

வேலைக்கும் போயிட்டு.. ருசியா செஞ்சும் வெச்சிட்டு, kitchen cleanliness பாக்கணுமே.. Family maintenance All rounder.. அசத்துவாங்க.. எனக்கு இப்பவே முடியல. தாயாராக தயார் ஆயிட்டு இருக்கேனே அதனாலயோ..

மீனாட்சி..உக்காந்துட்டே தூங்கற பாரு.. போய் Rest எடு 8 மணிக்கா எழுப்பறேன்..

இல்ல தூங்கல அத்தை. தூக்கமும் வர்ல. கண் மூடிகிட்டு உங்கள பத்திதான் நினைச்சிட்டிருக்கேன்!

இன்னிக்கி என்ன மெனு.. சொல்லுங்க நான் செய்றேன். Just instruction மட்டும் குடுங்க அத்தை.

ஏம்மா.. உன்னால முடியாது.. சொன்னா கேளு..

No.. No.. வித்யாதரன் Sun Tv ல சொல்லிட்டார். எல்லா விதத்திலியுமே இந்த வருஷம் ஜெயிச்சிக் காட்டுவேன்னு. உங்கள மாதிரி வந்து காட்றேன்.

My resolution..

என் முயற்சி, திருவினை ஆக்க வாழ்த்துங்கள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *