தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 5,473 
 

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

காயத்திரியும் லதாவும் இதற்கு விதி விலக்கு இல்லையே.அவர்கள் வயற்றேலேயும் இந்த மணி அடிக்க ஆரம்பிந்தது.அவர்கள் இரண்டு பேரும் பங்களாவிலே காலையிலே ஒரு கப் காபி குடித்தது தானே.அப்புறமா மயக்க மருந்தாலே ஏற்பட்ட மூனு மணி நேரம் மயக்கம்.லதாவுக்கு நடக்கக் கூடாத ‘அதிச்சியான’ சம்பவம்.அப்புறமா அழுகை,அழுகை,அழுகை தான்.இது போதாதென்று ‘பஸ் ஸ்டா ண்ட்டில்’ இருந்து வீட்டுக்கு வரும் வரைக்கும் ‘மழை ஸ்னானம்’.

காயத்திரி தன் தலையைத் திருப்பி சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.அது அப்போது ஆறடித்தது.‘இவ்வளவு நேரம் ஆயிட்டதா பகவானே.சாயம் சந்தியா வேளையிலே ரெண்டு பேரும் இப்படி படுத்துண்டு இருக்கோமே.ஆத்லே விளக்கு கூட போடலையே. ஸ்வாமிக்கு தீபம் கூட ஏத்த லையே’ என்று எண்ணி சட்டென்று எழுந்து தன் முகம்,கை,கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்து ஸ்வாமிக்கு தீபத்தை ஏற்றி நமஸ்காரம் பண்ணினாள் காயத்திரி. அவள் லதாவை குரல் கொடு த்து எழுப்பினாள்..ஆனால் லதாவோ படுத்துக் கொண்டே இருந்தாள் ரெண்டு வாரம் முன்னால் வாங்கி வைத்து இருந்த ரவையைப் போட்டு உப்புமா கிளறினாள் காயத்திரி.“லதா எழுந்திரு.எழுந்து கை,கால்,மூஞ்சி,எல்லாம் அலம்பிண்டு வா.காத்தாலே அந்த பங்களாலே ஒரு கப் காபி குடிச்சோம். அப்போ இருந்து ரெண்டு பேரும் பட்டினியா இருக்கோம்.அப்புறமா வயத்தை இழுத்துண்டா கஷ்டம். எழுந்து வந்து,இந்த உப்புமாவை கொஞ்சம் சாப்பிடு”என்று சொ ல்லி லதாவின் தோளைத் தொட்டு எழுப்பினாள் காயத்திரி.

“எனக்கு உப்புமாவும் வேணாம்,ஒன்னும் வேணாம்.நான் இப்படியே பட்டினி இருந்து செத்து போறேன்” என்று கத்தினாள் லதா ”எனக்குப் புரியறது லதா.நீ படற வேதனை.நீ செத்துப் போறதாலே என்ன வரப் போறது.நீ நிம்மதியா கண்ணை மூடி விடப் போறே.அப்புறமா நான் தான் தனி மரமா இந்த லோகத்திலே திண்டாடி வரப் போறேன்.அதை நீ யோசிச்சு பாத்தயா.அப்படி எல்லாம் இனிமே பேசாதே எழுந்திரு”என்று சொல்லி அவளை மறுபடியும் எழுப்பினாள் காயத்திரி.’இனிமே நாம பிடிவாதம் பிடிச்சா பாவம் அம்மா என்ன பண்ணுவா’ ன்னு நினைத்து வேண்டா வெறுப்பாக லதா எழுந்தாள்.தன் கை,கால்,மூஞ்சி,எல்லாம் கழுவிக் கொண்டு வந்து அம்மா கொடுத்த உப்புமாவை பிடிக்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்.சாப்பிட்டுக் கொன்டே “அம்மா நான் என்ன பாவம் பண்ணினேன். .பகவான் ஏன் இந்த ‘அவமானத்தை’ எனக்குக் குடுத்தாரு.நீ தினமும் சுவாமியே வேண்டி வரயே அந்த சுவாமியே கொஞ்சம் கேளம்மா.அவர் என்ன பதில் சொல்றார்ன்னு பாப்போம்.நாம ரெண்டு பேரும் இது வரை யாருக்கும் எந்த துரோகத்தையும் பண்ணலையேம்மா.பின்னே எனக்கு ஏம்மா இப்படி ஆச்சு”என்று அழுதுக் கொண்டே கேட்டாள் லதா.”எல்லாம் நாம பூர்வ ஜென்மத்லே பண்ண பாவம் லதா.நாம அனுபவிச்சுத் தான் வரணும்.நீஅந்த பகவானை விடாம வேண்டி வா லதா.நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்” என்றா ள் காயத்திரி வேதாந்தமாக.

”இனிமே எனக்கு என்ன நல்லது நடக்கனும்.அதான் எல்லா ‘நல்லதும்’ எனக்கு நடந்து முடி ஞ்சி போச்சே”என்று கத்தினாள் லதா.காயத்திரிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.வெறும னே அவள் லதா அழுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உப்புமாவை சாப்பிட்டு விட்டு தண்ணீர் டித்து விட்டு,இருவரும் பாயைப் போட்டுண்டு படுத்தார்கள்.படுத்தாளே ஒழிய காயத்திரிக்கு தூக்கமே வரலே.அவள் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.’இனிமே நாம அந்த பங்களாவுக்கு சமை யல் வேலைக்கு போகக் கூடாது.வேறே எங்காவது தான் வேலை தேடிப் போகணும்.இந்த ஆத்லே நாம ரெண்டு பேரும் இனிமே இருக்கக் கூடாது.இங்கு நாம இருந்தா அந்த பணக்கார மேடம் இன்னும் மூனு நாள்லே திருப்பதிலே இருந்து திரும்பி வந்து,நாம வேலைக்கு வராதாலே,இங்கே வந்து ‘ஏன் வேலை க்கு வரலேன்னு’ன்னு சொல்லி கூப்பிடுவா.அந்த மேடத்துக்கு கிட்டே நம்ம விலாசம் இருக் கே.என் செல் போன் நம்பர் கூட இருக்கே.நம்மை செல்லில் கூப்பிட்டுத் துளைக்கலாமே.நாம என்ன காரணம் சொல்லி மறுக்கறது.’உண்மையான’ காரணத்தை நம்மால் சொல்ல முடியாதே.என்ன பண் ணலாம்’ என்று மூளயைப் போட்டு கசக்கிக் கொண்டாள்.இரவு பூராவும் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தாள் காயத்திரி. .

காலை மணி ஐஞ்சடித்தது.காயத்திரி எழுந்துக் கொண்டாள் பல் தேய்த்துக் கொண்டு வந்து காபி போட்டுக் குடித்தாள்.அவ மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.அவ ஒரு முடிவு பண்ணி னாள்.லதாவை எழுப்பி அவளையும் பல் தேய்த்து விட்டு வரச் சொன்னா.அவள் பல் தேய்த்துக் கொண்டு வந்ததும் அவளுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள்.ராத்திரி பண்ண மீதி உப்புமாவை தானும் சாப்பிட்டு விட்டு,லதாவுக்கும் கொடுத்தாள் காயத்திரி.இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். அவளுக்கு ஒரு உத்வேகம் பிறந்தது.கடைகள் திறந்ததும் செல் கடைக்குப் போய் தன் பழைய செல் ‘போனை’ப் போட்டு விட்டு வேறு புது செல் ‘போனை’ வேறு நம்பா¢ல் வாங்கிக் கொண்டாள். லதாவைப் பார்த்து காயத்திரி “லதா,நாம் ரெண்டு பேரும் இனி இந்த பழைய மாம்பலத்தில் இந்த ஆத்லே இருக்கக் கூடா து.அந்த மேடம் கண்லே படாம,நாம வேறே எங்காவது ஒரு ஆம் பாத்துண்டு போகலாம்ன்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்”என்று அவள் பண்ண முடிவைச் சொன்னாள்.லதா ஒன்னும் பதில் சொல்லாமல சும்மா இருந்தாள்.நாம சும்மா இருந்தால் அம்மா வருத்தப் படப் போகி றாளேன்னு நினைத்து லதா “அம்மா நீ எது பண்ணாலும் சரிம்மா.நான் உன் கூட இருப்பேன்ம்மா.நீ நிம்மதியா இருந்து வா”என்று சொன்னாள்.லதா சொன்னதை கேட்டு கொஞ்சம் சந்தோஷப் பட்டாள் காயத்திரி.

காயத்திரி லதாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கார மாமியிடம் போனான்.அந்த மாமி யை கூப்பிட்டு “மாமி,எங்களுக்கு வேறே இடத்லே சமையல் வேலை கிடைச்சு இருக்கு.அங்கே போய் வர இந்த ஆம் ரொம்ப தூரமா இருக்கும்.அதானாலே நாங்க இந்த ஆத்தை காலி பண்ணலாம்ன்னு இருக்கோம்.தயவு செஞ்சி நீங்க நான் குடுத்த ஆறு மாச ‘அட்வான்ஸ்’ வாடகை பணத்தைத் திருப்பி தர முடியுமா” என்று கேட்டாள் “நன்னா இருக்கு நீங்க கேக்கறது. பாவம் உங்ககாதுக்காரர் திடீரென்று காலமாயிட்டரேன்னு தான் நான் பத்து மாச ‘அட்வான்ஸை’ஆறு மாசமா குறைச்சி வாங்கிண்டேன். இப்ப என்னடான்னா நீங்க இந்த க்ஷணம் நான் காலி பண்ணப் போறேன்,குடுத்த ஆறு மாச ‘அட்வா ன்ஸை’திருப்பிக் குடுங்கோன்னு கேக்கறேளே.இது நியாயமா சொல்லுங்கோ.என் கிட்டே அவ்வளவு பணம் இல்லே.நீங்க இன்னும் மூனு மாசம் இங்கே இருங்கோ.நான் வேணும்ன்னா மூனு மாச ‘அட்வா ன்ஸை’ உங்களுக்கு திருப்பித் தரேன்.நான் என்ன ஆத்லே ஒரு ‘பாங்கா’ வச்சு இருக்கேன்.நீங்க கேட்டவுடனே பணத்தைத் திருப்பி தர.இப்போதைக்கு என்னால் அது தான் பண்ண முடியும்”என்று சொன்னவுடன் காயத்திரி “சரி,நான் இந்த ஆத்லே இன்னும் மூனு மாசம் இந்த ஆத்லே இருக்கேன்” என்று சொல்லி விட்டு தன் போர்ஷனுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வரும் வழியில் காயத்திரி கொஞ்சம் வெண்டைகாய் வாங்கிக் கொண்டு வந்தாள். அந்த வெண்டைக்காயைப் போட்டு ஒரு சாம்பார் வைத்தாள்.வெளி ய போய் கொஞ்சம் தயிர் வாங்கிக் கொண்டு வந்தாள்.சமைத்து விட்டு லதாவுக்கு போட்டு விட்டு தானும் சாப்பிட்டாள்.கொஞ்ச நேரம் ‘கண் அசரலாம்’ என்று எண்ணி பாயைப் போட்டு படுத்துக் கொண்டாள் காயத்திரி.அவளுக்கு படுக்கை கொள்ள வில்லை.’நாமோ இந்த ஆத்தை மூனு மாசத்துக்கு அப்புறமா காலி பண்றோம்ன்னு சொல்லிட்டு வந்து இருக்கோம்.இந்த ஆத்லே நாம மூனு மாசத்துக்கு மேலே இருக்க முடியாதே. உடனே இந்த ஆத்தை காலி பண்ணிட்டு வேறு எங்காவது நாம போனா தான் அந்த பணக்கார மாமி யின் கண்லே படாம இருக்கலாம்.அவ கண்லே படாம இருக்க எங்கே போய் நாம ரெண்டு பேரும் ஒளிஞ்சுக்கறது’ என்கிற கவலை வந்துட்டது காயத்திரிக்கு.அவள் யோஜனைப் பண்ணினாள்.’நாம மயிலாப்பூர் பக்கம் போய் சமையல் வேலைத் தேடி கொண்டு அங்கே வாடகை ஒரு ஆம் எடுத்துண்டு இருந்து வரணும்’ என்று முடிவு பண்ணினாள்.காயத்திரி லதாவைப் பார்த்தாள்.அவள் கொஞ்சம் நார்மலா இருந்தா போல இருந்தது.

உடனே காயத்திரி லதாவை பாத்து “லதா,நான் இந்த ஆத்துக்கு சொந்தமான மாமி கிட்டே நான் இந்த ஆத்தை மூனு மாசம் கழிச்சு காலி பண்றேனு சொல்லிட்டு வந்து இருக்கேன்.அதனாலே இந்த ஆத்தை காலி பண்ணிட்டு வேறே எங்காவது நாம் போனாத் தான் அந்த பணக்கார மாமியின் கண்லே படாம இருக்கலாம்.நாம மயிலாப்பூர் பக்கம் போய் சமையல் வேலைத் தேடிண்டு,அங்கே ஒரு வாடகை ஆம் எடுத்துண்டு இருந்து வந்தா தான்,அந்த பணக்கார மாமி இங்கே வந்து நம்மை தேடினா நாம அவ கண்லே படாம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்,நீ என்ன சொல்றே”என்று கேட்டாள்.லதா “அந்த பணக்கார மேடம் இங்கே வரட்டும்மா.நான் அவளை ‘நார்’நாரா’ கிழிச்சி அவ ‘காமுக பையன்’ பண்ண ‘நய வஞ்சக கற்பழிப்பை’ சொல்லி,நாலு பேர் முன்னாடி,அவளை அவமானப் பட வக்கிறேன்.அப்படி நான் கத்தி இங்கே அமக்களம் பன்ணினா,இங்கே இருக்கிற நாலு பேர் சேந்தா போறும்.நாமபோலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ‘கம்ப்லெயின்’ பண்ணலாமேம்மா”என்று கோவத்தில் கத்தினாள் லதா.அவள் முகம் எல்லாம் சிவந்து இருந்தது.உடனே காயத்திரி “லதா,உன் ஆத்திரம் எனக்கு நன்னாவே புரியறது.நம்மிடம் அதுக்கு சாட்சி இல்லையேடீ அந்த போலீஸ் நம்மைப் பாத்து இதுக்கு ‘சாட்சி’ இருக்கான்னு கேட்டா,நம்மிடம் என்ன இருக்கு சொல்லு.இப்படி கத்தி அந்த பணக் கார மேடத்துக்கு கிட்டே கலாட்டா பண்ணா,வீணா இங்கே இருக்கிறவா கீட்டே எல்லாம் உனக்கு ‘இந்த மாதிரி’ஆயிருக்குன்னுத் தம்பட்டம் தானே ஆகும்.அப்படிப் பண்ணா நமக்கு என்ன லாபம் சொல்லு.நம்ம போறாத வேளை நடக்கக் கூடாதது நடந்துட்டது.நாம ரெண்டு பேரும் அந்த ‘கோர சம்பவத்தை’ மறந்துட்டு,வாழ பழகி வரணும்லதா.நான் சொல்றேன்னு நீ என்னை தப்பா எடுத்துக் காதே.எனக்கு வேறு வழி ஒன்னும் தொ¢யலையே லதா” என்று சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அந்த ‘சம்பவம்’ நம் வாழ்கையிலே நடந்துட்டதேன்னு,நீ ஆத்திரத் லேயோ,கோவத்திலே ‘ஏதாவது’ பண்ணிண்டுடாதே லதா.உன் அப்பா தான் என்னை தவிக்க விட்டு ட்டு போயிட்டார்.நீயும் என்னை வீட்டுட்டு போயிடாதே”என்று சொல்லி அழுதாள்.அம்மா அழுவதை ப் பார்த்த லதா “சரிம்மா நீ இப்போ அழாதே.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.நான் நிச்சியமா ‘அப்படி ஏதாவது’ எல்லாம் பண்ணிண்டு உன்னை தனியா தவிக்க விட்டுட்டு போமாட்டேம்மா.நீ சொன்னா மாதிரி நாம மயிலாப்பூர் பக்கம் போய் சமையல் வேலைத் தேடிண்டு அங்கே வாடகை ஆம் எடுத்துண்டு இருந்து வரலாம்மா” என்று காயத்திரி சொன்ன ஐடியாவை ஒத்துக் கொண்டாள் லதா. இருவரும் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டு இருந்தாகள். படுத்துக் கொண்டு இருந்த காயத்திரிக்கு திடீரென்று மயிலாப்பூரில் தன் கணவரின் ‘பிரண்ட்’ ஒருத்தர் ஒரு ‘மெஸ்’ நடத்தி கொண்டு வருவது ஞாபகத்துக்கு வந்தது.‘அங்கே போய் நாம் அவர் கிட்டே சமையல் வேலைக்குக் கேட்டா என்ன’என்று நினைத்தாள்.லதாவிடம் தன் ‘ப்லானை’ சொன்னாள் காயத்திரி.லதாவும் சம்மதிக்கவே காயத்திரியும் லதாவும் எழுந்து ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு மயிலாப்பூர் கிளம்பிப் போனார்கள்.

‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து மயிலாப்பூர் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துக் கொண்டார்கள் காயத்திரியும் லதாவும்.பஸ் கண்டக்கா¢டம் மயிலாப்பூருக்கு ரெண்டு டிக்கட் வாங்கினாள்.லதா ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு வெளி உலகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். காயத்திரி ’பகவானே,எனக்கு என் ஆத்துகாரர் ‘ப்ரெண்டை’ கொஞ்சம் என் கண்லே காட்டு.அவர் கிட்டே எனக்கு ஒரு சமையல் வேலையை போட்டு குடு.நான் எப்படியாவது சமையல் வேலை பண்ணி வந்து,இந்தப் பொண்ணை ஒருத்தன் கிட்டே பிடிச்ச்சுக் குடுத்துட்டு,என் கண்ணை மூடி விடறேன். எப்படியாவது லதாவுக்கு ஒரு வாழக்கை அமைச்சுக் கொடுக்க எனக்கு உதவி பண்ணு அவரை தான் நீ அழைச்சுண்டுட்டே.நான் தானே லதாவை கடை தேத்தி ஆகணும்’ என்று சொல்லி மனதில் வேண் டிக் கொண்ட போது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.லதா பாக்காமல் இருந்த போது புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் காயத்திரி.

மயிலாப்பூரில் இறங்கி அந்த ‘மெஸ்’இருக்கும் இடத்தை விசாரித்து கொண்டு காயத்திரி அங்கே போனாள்.கடையில் ஒரு மாமி தான் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.காயத்திரிக்கு ‘ஷாக் காக’ இருந்தது.இருந்தாலும் ¨தரியத்தை வரழைத்துக் கொண்டு அந்த மாமி கிட்டேபோய் “மாமி, நமஸ்காரம்.மூனு வருஷத்துக்கு முன்னாடி‘தவறி’ப் போன ‘ஸ்வீட் மாஸ்டர்’ கணேசன் சம்சாரம் நான். என்னை உங்களுக்குத் தொ¢யாது.ஆனா என் ஆத்துக்காரர் உங்க ஆத்துக்காரரைப் பத்தி நிறைய சொல்லி இருக்கார்.நான் நன்னா சமையல் பண்ணுவேன்.நான் வேலை செஞ்சு வந்த இடத்லே,அவா திடீர்ன்னு அமொ¢க்கா கிளம்பிப் போயிட்டா.எனக்கு இப்போ அவா ஆத்து வேலை இல்லே.நீங்க கொ ஞ்சம் பொ¢ய மனசு பண்ணி எனக்கு ஏதாவது சமையல் வேலை போட்டுத் தர முடியுமா.இவ என் பொ ண்னு லதான்னு பேரு”என்று தயங்கி தயங்கிக் கேட்டாள் காயத்திரி.அந்த மாமி ஒரு நல்ல பதிலா சொல்லணுமே என்று அவள் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றுக் கொன்டு இருந்தாள் காயத்திரி. உடனே அந்த மாமி “ஓ,நீ ஸ்வீட் மாஸ்டர் கணேசன் சம்சாரமமா.நான் உன்னை இதுக்கு முன்னாலே பாத்தது இல்லே.அவர் பலசரக்கும்,காய்கறிகளும் வாங்க மார்கெட்டுக்கு போய் இருக்கார்,வர சமயம் தான்.நீ சரியான சமயத்திலே தான் வந்து இருக்கே.இங்கே சமையை வேலெ செஞ்சிண்டு இருந்த ஒரு மாமிக்கு திடீர்ன்னு உடம்புக்கு வந்துடுத்து.அவ ரெண்டு நாளா சமையல் வேலைக்கு வரலே.நானே சமையல் பண்ண ஒரு நல்ல மாமியே தேடிண்டு இருந்தேன்.உனக்கு எல்லா சமையலும் ‘டிபனும்’ நன்னா பண்ண வருமா”என்று கேட்டாள்.

உடனே காயத்திரி “எனக்கு எல்லா சமையலும்,எல்லா ‘டிபன்’ வகைகளும் நன்னா பண்ண வரும் மாமி” என்று சொல்லி விட்டு அந்த மாமி வாயையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.அந்த சமயம் பார்த்து ‘மெஸ் ஓனர்’ ஒரு மினி லாரியில் இருந்து கீழே இறங்கி வந்து பின்னால் வந்த பையன் கிட்டே”எல்லா காய்கறிகளையும்,பல சரக்கு சாமான்களையும் பின்னாலே இருக்கும் ‘ஸ்டோர் ரூமிலே’ இறக்கி வச்சுடு” என்று சொல்லி விட்டு,தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டினால் தன் முகத் தைத் துடைத்துக் கொண்டார்.”இதோ பாருங்கோ,இந்த மாமி உங்க ‘ப்ரண்ட்’ ‘ஸ்வீட் மாஸ்டர்’ கணே சன் சம்சாரமாம்.சமையல் வேலை கேட்டுண்டு வந்து இருக்கா”என்று சொன்னதும் ‘மெஸ் ஓனர்’ ராமு ”எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு மாமி.கணேசன் உடம்பு வந்து காலமாயிட்டார் என்கிற விஷயம் எனக்கு மூனு நாள் கழிச்சு தான் தொ¢ஞ்சது.நான் அவர் ’பாடி’யே பாக்க கூட முடியலே.ஏன்னா என் கிட்டே உங்க அடரஸ்ஸ¤ம் இல்லே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

“இது உன் பொண்னா.பாக்க ரொம்ப லக்ஷனமா இருக்காளே.இவ எங்கச்சும் வேலைக்கு போறாளா,இல்லெ சும்மா இருந்து வறாளா”என்று மாமி கேட்டாள்.”அவ சும்மா தான் என் கூட இரு ந்து வறா”என்று காயத்திரி பதில் சொன்னதும் அந்த மெஸ் மாமி “ஏன்னா,சமையல் வேலை செய்ய முடியலேன்னு சொல்லிட்டு நின்னுப் போனாளே சுமதி மாமிக்கு பதிலா நாம இந்த மாமியை சமையல் வேலைக்கு வச்சுக்கலாமா.இந்த மாமிக்கு எல்லா சமையலும் ‘டிபன்’ வகைகளும் நன்னா பண்ண வருமாம்”என்று கேட்டதும் ராமு உடனே ஒத்துக்கொண்டு “காயத்திரி மாமி,உங்க பொண்ணு சும்மா இருந்து வறான்னு சொல்றேள்.அவ காய்கறி எல்லாம் நறுக்கி தரச் சொல்லி உங்க கூடவே வச்சுண்டு வாங்கோ.காலம் கெட்டு இருக்கு.அவளை நீங்க தனியா எல்லாம் ஆத்லெ விட்டுட்டு வர வேணாம். உங்க கூடவே இருந்து வரட்டும்.நான் உங்களுக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சமபளம் தரேன்.உன் பொண்ணுக்கு மாசம் ஐனுறு ரூபாய் சம்பளம் தறேன் இங்கே எல்லாம் பொம்மனாட்டிகள் தான் சமை யல் வேலை பண்ணி வறா.வெளி ‘டேபிளில்’ நாலு ஆண் சர்வர்கள் இருக்கா.உங்களுக்கு சம்மதமா” என்று கேட்டார்.உடனே காயத்திரிக்கு ‘மெஸ் ஓனர்’ ராமு சொன்னது வயிற்றில் பாலை வாத்தது போல இருந்தது.“ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா.எனக்கு நீங்க இவ்வளவு சீக்கிரமா வேலை தருவேள்ன்னு நான் நினைக்கலே.நாங்க நாளைக்கு காத்தாலேலிருந்து வேலைக்கு வறோம்”என்று சொல்லிட்டு லதாவை அழைச்சுண்டு ‘மெஸ்ஸை’ விட்டு வெளியே வந்தாள் காயத்திரி.லதா “இவ்வளவு நல்லவரா இருக்காரே அப்பா ‘மெஸ் ப்ரண்ட்’ மாமா.நம்ம ரெண்டு பேருக்கும் வேலை குடுத்து இருக்காரே” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.
உடனே காயத்திரி கன் எதிரே தொ¢ஞ்ச கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தைப் பாத்து தன் கன்னத்தில் போட்டுக் கொண்டள் காயத்திரி.”தாயே உன் கருணையே கரு¨ணை.உன் அனுக்கிஹ த்தாலே தான் எனக்கும்,லதாவுக்கும்,இந்த ‘மெஸ்லே’ வேலை கிடைச்சு இருக்கு.உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்”என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டள்.லதாவை பார்த்தாள் காயத்திரி.அவ முகத்லெ எந்த வித சலனமும்இல்லே.”லதா,நமக்கு ஒரு வேலை போனதும் உடனே இன்னொரு வேலையே நமக்கு அருளிய அந்த கற்பகாம்பாளுக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டு போகலாம்” என்று சொன்னதும் லதா வெறுமனே “சரிம்மா,நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்று சொன்னதும் காயத்திரி லதாவையும் கூட்டிண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போ னாள்.கோவிலில் நல்ல கூட்டம் சன்னிதியில் நிறைய பேர் நின்றுக் கொண்டு இருந்தார்கள் கூட்டத் தோடு கூட்டமா லதாவையும் தன் பக்கத்தில் ஜாக்கிறதையா வைத்துக் கொண்டு, நின்றுக் கொண்டு இருந்தாள் காயத்திரி.அப்போது சிறப்பு தரிசனத்திற்கு ஒரு டிக்கட்டை வாங்கிண்டு வந்த ஒரு அம்மா, தர்ம தரிசனம் கியூவில் நின்றுக்கொண்டு இருக்கும் காயத்திரியை ரொம்ப நேரமா பார்த்து கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணிட்டு அந்த அம்மா காயத்திரியின் பக்கத்தில் வந்து தயங்கி தயங்கி நின்றாள்.காயத்திரியும் அந்த அம்மாவை பார்த்தாள்.கொஞ்ச நேரம் கழிச்சு,அந்த அம்மா “நீங்க காயத்திரி தானே,என்னை தொ¢யறதா உங்களுக்கு.நான் தான் வசந்தி.உன் கூட சாரதா வித் யாலயா ஸ்கூல்லே ஒன்னா படிச்சவ”என்று சொன்னாள்.காயத்திரி வசந்தி சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள்.’நம்மோடு படிச்ச வசந்தியா இது’ன்னு யோஜனை பண்ணினாள்.’அவளே என் னை அடையாளம் கண்டுப் பிடிச்சி சொல்லி இருக்காளே’என்று ஆச்சரியப்ட்டு,உடனே காயத்திரி ”நீ.. வசந்தியா,எனக்கு உன்னை அடையாளமே தொ¢யலே வசந்தி.நான் காயத்திரி தான்” என்று சொன்னாள்.”நான் ரொம்ப நேரமா உன்னை கவனிச்சுண்டு இருந்தேன் காயத்திரி.’நீ காயத்திரி தானா இல்லே,நாம வேறே யாரையாவது காயத்திரின்னு தப்பா கூப்பிட்டு விடப் போறோமே’ என்கிற பயம் எனக்கு.நல்ல வேளை.என் ஞாபகச் சக்தி என்னை மோசம் பண்ணலே பாத்தியா” என்று பெரு மை அடித்துக் கொண்டாள் வசந்தி ”ஆமாம் வசந்தி,இத்தனை வருஷத்துக்கு அப்புறமா கூட நீ என்னை சரியா கண்டு பிடிச்சி கூப்பிட்டே.நிச்சியம் உனக்கு நல்ல ஞாபகச் சக்தி இருக்குன்னு தான் அர்த்தம்” என்று தன் தோழி வசந்தியை பாராட்டினாள் காயத்திரி.கொஞ்ச நேரம் கழித்து “உன் கூட நிக்கற இந்த பொண்ணு யாரு காயத்திரி.மூஞ்சி ஜாடையை பாத்தா உன் ஜாடையே இருக்கு.உன் பொண்ணா”என்று கேட்டாள் வசந்தி.

காயத்திரி உடனே “ஆமாம்,இவ என் பொண்ணு தான் வசந்தி. பேரு லதா”என்று பதில் சொன்னாள் காயத்திரி.”ரொம்ப அழகா இருக்கா உன் பொண்ணு காயத்திரி” என்று லதாவின் அழகை புகழந்தாள் வசந்தி.காயத்திரி “ஆமாம் வசந்தி,அவ அப்பா நிறத்தைக் கொண்டு வந்து இருக்கா. ரொம்ப அழகாவும்,நிறமாவும் இருந்தார் அவர்.அதான் இவளும் அழகா இருக்கா” என்று சொன்னாள் காயத்திரி.காயத்திரி தன் நெத்தியில் வெறும் விபூதி இட்டுக் கொண்டு இருந்ததைக் கவனித்தாள் வசந்தி.கூடவே அவள் ஏழ்மையையும் கவனிக்க தவறவில்லை அவள்.என்ன கஷ்டமோ பாவம் அவளுக்கு.‘நாம அவ ஆத்துக்காரரை பத்தி இப்போ ஒன்னும் கேக்க வேணாம்.அவளே அதைப் பத்தி சொல்லும் போது நாம் கேட்டுக்கலாம்’என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.”நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க.நான் உங்க ரெண்டு பெருக்கும் சிறப்பு தரிசன டிக்கட் வாங்கிண்டு வந்திடறேன். நாம சீக்கிரமா சுவாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிண்டு இருக்கலாம் காயத்திரி” என்று சொல்லி விட்டு காயத்திரியின் பதிலுக்குக் கூட காத்திராமல் வசந்தி இன்னும் ரெ ண்டு சிறப்பு தரிசன டிக்கட் வாங்கிக் கொண்டு வந்தாள்.சிறப்பு தரிசன டிக்கட்டுக¨ளை வாங்கிக் கொண்டு வந்து,வசந்தி காயத்திரியையும் லதாவையும் அழைத்துக் கொண்டு சிறப்பு தரிசன வாசல் வழியே கோவிலுக்கு உள்ளே போனாள்.காயத்திரி தன் வாழ் நாளில் சிறப்பு தரிசன டிக்கட் எல்லாம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனமே பண்ணதே இல்லே.சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள் மூவரும்.

வெளிப் பிரகாரத்தில் வந்து உக்கார்ந்து கொண்டார்கள்.”நான் கேக்கறனேன்னு தப்பா எடுத்துக் காதே காயத்திரி.நாம ரெண்டு பேரும் பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம்.அப்புறமா நீ பாதி பத்தாவது படிச்சுண்டு இருக்கும் போது திடீர்ன்னு உன் படிப்பை நிறுத்திண்டு விட்டே.ஏன்னு என க்குத் தொ¢யாது.அப்புறமா நான் உன்னை பாக்கவே இல்லே.இப்போ நீ எங்கே இருக்கே.என்ன பண் ணிண்டு இருக்கே.லதா என்ன படிச்சு இருக்கா”என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் வசந்தி. காயத்திரிக்கு ‘இவ கிட்டே எதை சொல்றது,எதை மறைக்கறது’என்று புரியாமல் தவித்தாள்.கொஞ்ச நேரம் காயத்திரி யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தாள்.”என்ன காயத்திரி,நான் இத்தனை கேள் விகள் கேட்டேன்.ஆனா நீ என்னடான்னா ஒன்னுக்கும் பதில் சொல்லாம சும்மா இருக்கே” என்று விடாம கேட்டாள் வசந்தி.”உனக்கு சொல்ல இஷ்டம் இல்லேன்னா,நீ எனக்கு ஒன்னும் சொல்ல வே ணாம் காயத்திரி.நான் உன்னை வற்புறுத்தலே” என்று சொல்லி நிறுத்தினாள்.

வசந்தி கட்டிக் கொண்டு இருந்த பட்டுப் புடவை பத்தாயிரத்துக்கு மேலே இருக்கும்.அவள் கழுத்திலும் கைகளிலும் போட்டுக் கொண்டு இருந்த நகைகள் ‘அவள் ஒரு பொ¢ய பணக்காரி’ என்று பறை சாற்றிக் கொண்டு இருந்தது.கொஞ்ச நேரம் ஆனதும் “நான் என்னை பத்தி எல்லா விவரமும் சொல்றேன்.நான் இங்கே தான் மயிலாப்பூர்லே ஒரு பொ¢ய ஆத்லெ இருந்து வறேன்.என் ‘ஹஸ் பெண்ட்’ பாஸ்கர்,ஒரு பொ¢ய சிவில் இஞ்சினீயர்.அவருக்கு சென்னையிலே பல ‘சைட்ட்லே’ வேலை நடந்திண்டு இருக்கு.எங்களுக்கு ஒரே பையன்.பேர் சேகர்.இந்த வருஷம் தான் மேல் படிப்புக்காக அமொ¢க்கா போய் இருக்கான்.எனக்கு அடுத்து ஒரு பொண்ணு பேர் உமா.அவ எட்டாவது படிக்கிறா” என்று சொல்லி நிறுத்தினாள் வசந்தி.இவ்வளவு பொ¢ய மனுஷியிடம் நாம நம்ம சோகக் கதையை எப்படி சொல்றது என்று நினைச்ச காயத்திரியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது அவள் தன் கண்களை தன் புடவைத் தலைப்பால் துடைத்து கொண்டாள்.காயத்திரி அழுவதைப் பார்த்த வசந்தி “ஏன் காயத்திரி அழறே,சொல்லு காயத்திரி” என்று அவ கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.கண்களில் கண்ணீர் மல்க காயத்திரி ”எனக்கு இவ ஒரே பொண்ணு தான் வசந்தி” என்று சொல்லிட்டு தான் ஸ்கூலில் பாதி படிப்புபை நிறுத்தினதில் இருந்து கணேனை கல்யாணம் பண்ணிக் கொண்டதில் இருந்து இன்று வரை எல்லா சமாசாரத்தையும் சொல்லி முடித்தாள்.காயத்திரி அதற்கு மேலே ஒன்னும் சொல்லவில்லை.

மிகவும் வருத்தப் பட்டாள் வசந்தி.அவள் கண்களிலும் கண்ணீர் துளித்தது.தன் பால்ய சினேகிதி காயத்திரியின் வாழ்க்கையிலே இவ்வளவு கஷ்டங்களா.அவளுக்கு நாம் ஏதாவது உதவ ணும்”என்று வசந்தி நினைத்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் “வசந்தி,நான் பழைய மாமபலத்லே ஒரு பொ¢ய பணக்காரா ஆத்லே சமையல் வேலை பண்ணீண்டு இருந்தேன்.அவா இப்போ திடீர்ன்னு அமொ¢க்கா கிளம்பி போறா.அதனாலே அவா என்னை இப்போ சமையல் வேலைக்கு வர வேணாம் ன்னு சொல்லிட்டா.அதுக்கு அப்புறமா நான் சமையல் வேலை இல்லாம இருந்துண்டு வந்தேன்.நான் மயிலாப்பூர் வந்து ஒரு சமையல் வேலை தேடினப்ப எனக்கு இங்கே பக்கத்லெ இருக்கும் ‘லக்ஷ்மி மெஸ்ஸில்’ இன்னைக்கு தான் எனக்கும் லதாவுக்கும் வேலை கிடைச்சு இருக்கு.நான் இந்த வேலை க்கு பழைய மாம்பலத்லே இருந்து வந்து போவது ரொம்ப சிரமமா இருக்கும்.உனக்கு இந்த மயிலாப்பூர் லே ஏதாவது ஒரு சின்ன ‘போர்ஷன்’ மாதிரி ஒரு ரூம் வீடு வாடகைக்கு தொ¢யுமா.தொ¢ஞ்சா கொஞ் சம் சொல்லேன்.எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்” என்று கேட்டாள் காயத்திரி.

உடனே வசந்தி “நீ எங்கும் போக வேணாம் காயத்திரி.எங்க ஆத்து பின் பக்கம் ஒரு சின்ன ‘போர்ஷன்’ காலியா இருக்கு.என் கூட என் ஆத்துக்கு வா.நான் அதை உனக்கு காட்டறேன்.உனக்கு அந்த ‘போர்ஷன்’ பிடிச்சு இருந்தா,அதுலே நீயும் லதாவும் தங்கிககலாம்.என் பால்ய சினேகிதிக்கு இந்த உதவி நான் பண்ணக் கூடாதா காயத்திரி.வா என்னோடு” என்று சொல்லி காயத்திரியின் கையைப் பிடித்து தன்னுடன் அழைத்துக் கொண்டு போனாள் வசந்தி.கோவில் வாசலில் வந்து அவள் கார் டிரைவருக்கு செல் போனில் காரை கோவில் வாசலுக்கு கொண்டு வரச் சொன்னாள்.ஐந்து நிமிஷத்துக்கு எல்லாம் ஒரு பொ¢ய கார் கோவில் வாசலில் வந்து நின்றது.கார் டிரைவர் ஓடி வந்து கார் கதவைத் திறந்தான்.வசந்தி காருக்குள் ஏறிக் கொண்டு காயத்திரியையும் லதாவையும் ஏறிக் கொள்ளச் சொன்னாள்.கார் உள்ளே ‘ஜில்’லென்று இருந்தது.டிரைவர் காரை ஓட்டிக் கொண்டு வசந்தியின் வீட்டு வாசலில் நிறுத்தனான்.வசந்தி வீட்டை பார்த்தாள் காயத் திரி.மாடியும் கீழுமா பொ¢ய வீடாக இருந்தது.வீட்டை சுத்தி, நிறைய பூச்செடிகளும்,மரங்களும் இருந் தது.ஒரு ஐஞ்சு கிரவுண்டில் இருந்தது அந்த வீடு.டிரைவர் இறங்கி வந்து கார் கதவைத் திறந்தான். வசந்தி இறங்கிக் கொண்டு காயத்திரியையும் லதாவையும் இறங்கச் சொன்னாள்.வாசலில் இருந்த கூர்க்கா வாசல் கத வைத் திறந்தான்.உள்ளே வந்த வசந்தி “கொஞ்சம் நேரம்,இரு காயத்திரி.நான் பின் பக்க ‘போர்ஷ னின்’ சாவியை எடுத்துண்டு வறேன்” என்று சொல்லி விட்டு தன் வீட்டு கதவைத் திறந்து வீட்டு ககுள் போனாள்.
வசந்தி ‘போர்ஷன்’சாவியைக் எடுத்துக் கொண்டு வந்து,தன் வீட்டுக்கு பின் பக்கம் காலியாய் இருந்த ‘போர்ஷனை’ திறந்து காட்டி“இந்த இடம் போதுமா காயத்திரி உங்க ரெண்டு பேருக்கும்” என் று கேட்டாள்.வசந்தி காட்டின ‘போர்ஷன்’ காயத்திரிக்கு மிகவும் பிடித்து இருந்தது.உடனே காயத்திரி “இந்த இடம் ரொம்ப நன்னா இருக்கு வசந்தி.எனக்கும்,லதாவுக்கும் இந்த இடம் போறும்.நான் இந்த ‘போர்ஷனுக்கு’ என்ன வாடகை தர வேண்டி இருக்கும் வசந்தி“ என்று பயத்துடன் கேட்டாள் காயத் திரி.சிரித்துக் கொண்டே ”இந்த ‘போர்ஷன்’ என் ஆத்லே தான் இருக்கு காயத்திரி.இங்கு இருந்த மாமி போன வாரம் தான் காலி பண்ணிண்டு அவா பையனுடன் நங்கநல்லூரில் ஒரு புது பாளாட்க்கு’ப் போனா.நீ இங்கே உன் பொண்ணுடன் தங்கிக்கோ நீ எனக்கு ஒன்னும் வாடகைத் தர வேணாம்.இந்த ‘ஹெல்ப்’ கூட நான் என் ஸ்கூல் சினேகிதிக்கு பண்ணகூடாதா காயத்திரி”என்று சொல்லி காயத்திரி யைக் கட்டிக் கொண்டாள் வசந்தி.

”ரொம்ப ‘தாங்க்ஸ்’ வசந்தி,இந்த காலத்திலே யார் இந்த மாதிரி பழைய சினேகிதம் எல்லாம் ஞா பகம் வச்சுண்டு இருக்கா.உனக்கு ரொம்ப பொ¢ய மனசு வசந்தி.இந்த உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தொ¢யலே வசந்தி” என்றாள் காயத்திரி.அவள் கண்கள் கலங்கியது. “தாங்க் ஸ்’எல்லாம் நீ எனக்கு சொல்ல வேணாம் காயத்திரி.பேசாம உன் பெண்ணோடு இங்கு தங்கு.தொ¢யற தா.இப்போ என்னோடு முன் பக்கம் இருக்கற என் ஆத்துக்கு வா.ஆத்தையும் பாத்துட்டு,நீயும் உன் பொண்ணும் காபி டிபன் சாப்பிட்டா போதும்.நீ எனக்கு வாடகை குடுத்தா மாதரி.வா என்னோடு” என்று சொல்லி காயத்திரி கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் வசந்தி. உள்ளே நுழைந்த காயத்திரியையும் லதாவையும் ஹாலில் உட்கார சொல்லிட்டு வசந்தி சமையல் அறைக்குள் போனாள். பொ¢ய ஹால்.அதை சுத்தி பல ரூம்கள் எல்லா ரூம்களிலும் ஹாலி லும் ஏ.ஸி போட்டு இருந்தது. தரையில் கம்பளங்கள் போடப் பட்டு இருந்தது.சமையல் ரூமில் இருந்து வசந்தி ‘ஹாட் பேக்கில்’ செய்து வைத்து இருந்த ரவா உப்புமாவை மூனு எவர் சிவர் தட்டுகளில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து காயத்திரிக்கும்,லதாவுக்கும்,கொடுத்து விட்டு,அவளும் ஒரு தட்டை கையிலே வைத்துக் கொண்டு ”சாப்பிடு காயத்திரி,சாப்பிடு லதா”என்று சொன்னாள்..

மூவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.உப்புமாவில் நிறைய முந்திரி பருப்புகள் போட்டு,நெய்யும் விட்டு இருந்ததால்,உப்புமா ரொம்ப சுவையா இருந்தது.காயத்திரியும்,லதாவும்,அந்த உப்புமவை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள்.கொஞ்ச நேரம் வசந்தியுடன் பேசிக் கொண்டு இருந்தாள் காயத்திரி. மணி எட்டடித்தது.காயத்திரி எழுந்துக் கொண்டாள்.”வசந்தி மணி எட்டு அடிச்சுடுத்து.நான் இன்னும் அந்த கோடிக்கு போகணும்.நான் இன்னைக்கு அந்த ஆத்துக்கு போய் ராத்திரி தூங்கிட்டு,நாளை காத்தாலே என் சாமான்களை எடுத்துண்டு வந்து,இங்கே தங்க வறேன்.நீ பண்ண இந்த உதவிக்கு ரொம்ப நன்றி வசந்தி”என்று சொன்னாள் காயத்திரி.வசந்தி உடனே “அந்த ‘போர்ஷனின்’ சாவியே நீயே வச்சுக்கோ.ஒரு வேளை நாளைக்கு நீ இங்கே வரும்போது நான் வெளியே போயிருந்தா,உனக்கு கஷ்டம் இல்லாம இருக்கும்.நீபாட்டுக்கு வந்து ‘போர்ஷனை’த் திறந்துக்கலாம் காயத்திரி” என்று சொல்லி சாவிகளை காயத்திரியை வைத்துக் கொள்ளச் சொன்னாள்.காயத்திரியும் அந்தப் ‘போர்ஷன்’ சாவியை வசந்தியிடம் வாங்கிக் கொண்டு லதாவையும் கூட்டிக் கொண்டு வந்து பஸ் ‘ஸ்ராண்டில்’ வந்து நின்றாள்.அவள் தன் தோழி வசந்தியைப் பத்தியும்,அவ பணக்கார வாழ்க்கையை பத்தியும் யோஜனை பண்ணிண்டு இருந்தாள்.

அவள் பழைய மாம்பலம் போக வேண்டிய பஸ் வந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை. லதா தான் “அம்மா,நாம் போக வேண்டிய ‘பஸ்’ வந்து இருக்கும்மா.வாம்மா சீக்கிரம்.கண்டகடர் ‘விஸிலை’ ஊதிடப் போறான்.அடுத்த பஸ் வர இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ.உனக்கு என்னம்மா அப்படி ஒரு யோஜனை” என்று கத்தின சத்தம் கேட்டு காயத்திரி தன் யோஜனைலே இருந்து விடு பட்டு ‘பஸ்ஸில்’ ஏறினாள்.லதா தன்அம்மாவை பாத்து “ஏம்மா நாம் போக வேண்டிய ‘பஸ்’ வந்தும், நீ அதில் ஏறாம என்ன மோ கோட்டையை பிடிக்கற மாதிரி யோஜனைப் பண்ணிண்டு இருந்தே.அப்படி என்னம்மா நீ யோஜனைப் பண்ணிண்டு இருந்தே” என்று கேட்டாள் லதா.”அது ஒன்னுமில்லே லதா. இந்த வசந்தி என்னோடு படிச்சுண்டு இருந்தப்போ ரொம்ப சாதாரண குடும்பத்தை சேர்ந்து பொண் ணா தான் இருந்தா.தினமும் ஒரு அலுமினிய டப்பாலே வெறும் தயிர் சாதமும் ஊறுகாயும் தான் கொ ண்டு வந்து ‘லன்ச்க்கு’ சாப்பிடுவா.இப்போ பாரு.அவளுக்கு எவ்வளவு பொ¢ய வீடு.வாசலில் கூர்க்கா, வெளியே போய் வர படகு மாதிரி கார்,அவர் ஆத்துக்காரர் பொ¢ய சிவில் இஞ்சினீயர்,பையன் அமொ¢க் காலே படிக்கறான்.பொண்ணு எட்டாம் க்லாஸ் படிக்கிறா.உடம்பிலே பட்டுப் புடவை,கழுத்து கை நிறைய தங்க நகைகள்.எப்படிடீ இவோ இவ்வளவு பணத்லே மிதக்கறா.நாம இங்கே ஒரு வேளை சோ த்துக்கு தாளம் போடறோம்.எனக்கு அவளை பாத்தா பொறாமையா இருந்தது”என்று சொல்லி நிறுத் தினாள் காயத்திரி.

”அம்மா,உன் தோழி பணக்காரியா இருந்தா என்னம்மா.அது அவ வாங்கிண்டு வந்த ‘வரம்’. இருபத்தாறு வருஷம் கழிச்சு உன்னை இன்னும் மறக்காம ஞாபகம் வச்சுண்டு,அவ ஆத்து ‘போர் ஷனை’ நமக்கு ‘ப்¡£யா’ குடுத்து இருக்கா.அதை நினைச்சுக்கோம்மா”என்று சொன்னதும் “ஆமாம், லதா.நீ சொல்றது உண்மை தான்”என்று ஒத்துக் கொண்டாள் காயத்திரி.பஸ் பழைய மாம்பலம் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது.காயத்திரியும் லதாவும் கீழே இறங்கி வீட்டுக்கு வந்தார்கள்.கதவை திறந்து உள்ளே போன காயத்திரி முதல் வேலையா அந்த ‘போர்ஷன்’ சாவிகளை தன் கணவர் போட்டோவு க்கு கீழே வைத்து விட்டு அவருக்கு நமஸ்காரம் பண்ணினாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *