அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
அப்போது அங்கு வந்துக் கொண்டு இருந்த சுரேஷிடம் “சுரேஷ்,உனக்கு நான் ‘நெட்டில்’ ஒரு நல்ல பொண்ணா ப் பாத்து இருக்கேன்.இந்த பொண்ணு நன்னா படிச்சு இருக்கா.நம் அந்தஸ்த்துக்கு ரொம்ப ஏத்த பொ ண்ணு.அவ சென்னையிலே அடையார்லே இருக்கா.நீ ஓ.கே.ன்னு சொன்னா,நான் அவளுக்கு ‘போன்’ பண்ணி உன்னை ‘ஸ்பென்சரில்’ இருக்கும் ‘காபிடே’லே, நாளை ‘ஈவினிங்க் ஸிக்ஸ்’ க்கு ‘மீட்’ பண்ண வரச்சொல்லட்டுமா.நீ போய் அவளை ‘மீட்’ பண்ணி பேசிப் பாரேன்.அவ உன் ‘டேஸ்ட் டுக்கு’ ஏத்தவளா,உனக்கு அவளைப் பிடிச்சி இருக்கான்னு சொல்லேன்.அதற்கு அப்பு றமா நானும், உன் அப்பாவும் மத்ததைக் கவனிச்சுக்குறோம்.நான் ‘போன்’ பண்ணட்டுமா”என்று கேட்டாள் லலிதா.அம்மா சொல்வதை நின்று கூடகேட்கவில்லை சுரேஷ்.வெளியே கிளம்பி போய்க் கொண்டே”எனக்கு ஒரு பொண்ணும் நீங்க பாக்க வேணாம்.நீங்க சொல்ற பொண்ணை,நீங்களே போய் பாத்துட்டு, உங்களுக்கு பிடிச்சி இருந்தா,நீங்களே அவளை கல்யாணம் பண்ணிக்கோங்கோ” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.சுரேஷ் சொன்னதைக் கேட்டு அசந்து விட்டாள் லலிதா .அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.தன் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் சுரேஷ் குளிச்சு விட்டு சுவாமி ரூமுக்குப் போய் எல்லா மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு வந்தான்.அவன் ஹாலுக்கு வந்ததும் பெரியவர் அவனைப் பாத்து ”சுரேஷ், நேத்து நீ அம்மாவை பாத்து அப்படிப் பேசி இருக்கக்கூடாது.உன்னை விட அம்மா வயசிலே பெரியவ. இது நாகரீகம் இல்லை..நீ பேசினது ரொம்ப தப்புடா.அம்மா கிட்டே உன் ‘அபாலஜியை’ சொல்லு. இனிமே அம்மாவை எல்லாம் இப்படி பேசாதே” என்று கடுமையாகச் சொன்னார்.சற்று நேரம் கழித்து சுரேஷ் “சாரிம்மா,எனக்கு எந்தப் பொண்ணும் நீங்க பாக்க வேணாம்மா. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீங்க ஆசைப் பட்டா லதாவை கல்யாணம் பண்ணி வையுங்க. இல்லாட்டா எனக்கு வேறு எந்தப் பொண்ணும் வேணாம் என்கிற கோவத்லே தான் நான் அப்படி பேசினேன்”என்று சொன்னான்.
அப்புறமா லலிதா,பெரியவர்,சுரேஷ்,ரமேஷ் நிறைய பேசி கொண்டு இருந்தார்கள்.சமையல் கட்டில் ஹாலில் நடந்து வந்த பேச்சு வார்த்தைகளை எல்லாம் ஒன்னு விடாம கேட்டு கொண்டு வந்து லதா ‘இப்படி அம்மாவும் அப்பாவும் மாறி,மாறி,அவரை ‘நீ லதாவை மறந்துடு’,அவ ஏழை பொண்ணு, நம்ம அந்தஸ்துக்கு சரிப்பட்டு வர மாட்டா’ன்னு சொல்லி அவர் மனசை கலைக்க பாக்கறாளே.ஒரு வேளை அவர் அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு அவர் என்னை மறந்து விடுவாரோ. அவா சொல் றதை போல ஒரு பணக்கார,படிச்ச ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிண் டு விடுவாரோ. நம்மை ‘அம்போ’ன்னு விட்டுவிடுவாரோ’என்று எண்ணி கவலைப்பட்டாள்.‘எப்படியோ சுரேஷ் அவ அப்பா அம்மா சொன்னதை கேட்டு,மனசு மாறி,நல்ல ஒரு பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி ண்டு, லதாவை மறந்தா போதும்’ என்று நினைத்து சுவாமியை வேண்டிக் கொண் டாள் காயத்திரி.
காயத்திரி வேலைக்கு சேர்ந்து மூனு வருஷம் பூர்த்தி ஆகி விட்டது.அன்று சனிகிழமை எல்லா வேலைகளையும் காயத்திரி செய்து முடித்து விட்டு இரவு வீட்டுக்கு கிளம்பத் தயாரானாள்.அப்போது லலிதா ஹாலுக்குவந்து ”காயத்திரி,நானும்,அவரும்,சுரேஷூம் நாளைக்கு வெடி காத்தாலேயே கிளம்பி திருப்பதிக்கு ஒரு கல்யாணத்துக்கு போகப் போறோம்.ரமேஷ் தான் ஆத்லே இருப்பான்.அதனாலே நீ காத்தாலே வந்து அவனுக்கு காபி போட்டுக் குடு.அதுக்கு அப்புறமா அவன் ஆத்லே சாப்பிடறேன் ன்னு சொன்னா,நீ ‘டிபன்’,மதியம் சமையல்,எல்லாம் பண்ணி குடு.இல்லை அவன் நான் ‘என் ‘பிர ண்ட்ஸ¤டன்’ வெளியே போறேன்’ன்னு சொன்னா,நீ ஒன்னும் சமைக்க வேனாம்.நாங்க புதன் ராத்திரி தான் திரும்பி சென்னைக்கு வருவோம்ன்னு நினைக்கிறேன்.நான் வந்ததும் உனக்கு போன் பண்ணி சொல்றேன்.நீ அப்புறமா வேலைக்கு வந்தாப் போதும்”என்று சொன்னாள்.
உடனே காயத்திரி ”சரி மேடம்,நான் நாளைக்கு காத்தாலே வேலைக்கு வந்து ரமேஷ் என்ன சொல்றாரோ,அதன் படி பண்ணிட்டு,நாங்கோ ஆத்துக்கு போறோம்.அப்புறமா நீங்க போன் பண்ணி ன அப்புறமா நான் மறுபடியும் வேலைக்கு வறேன்”என்று சொல்லிட்டு காயத்திரி லதாவை அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.இரவு லேட்டாக வந்து தன் ரூமுக்கு போய் படுக்க போனான் ரமே ஷ்.அவனுக்குத் தூக்கமே வரவில்லை.படுத்து கொண்டு இருந்த ரமேஷூக்கு என்னமோ திடீரென்று லதாவின் ஞாபகம் வந்தது.‘அந்த அழகு பொம்மையை அனுபவிக்க சுரேஷூக்கு அதிர்ஷ்டம் இல்லே. லதா ஒரு ‘வேலி இல்லாத பசுமையான புல்’.இந்தப் ‘பசுமையானப் புல்லை’ன்எவனோ ஒரு ஏழைப் பையன் தானே அனுபவிக்கப் போறான்.அதுக்கு முன் அந்த ‘பசுமையான புல்லை’ நான் ஆசை தீர அனுபவிச்சா என்ன’என்று அவன் ‘மிருக ஆசை’அவனைத் தூண்டியது.
லதாவின் இளமைப் பூரிப்பும்,அவள் உடல் அழகும்,வட்டமான வெளுத்த முக அழகும் ரமே ஷை ரொம்ப நாட்களாக மிகவும் கவர்ந்து வந்தது.நாளைக்கு நம்ம அம்மா,அப்பா,சுரேஷ்,யாரும் ஆத் லே இருக்க போறது இல்லே.அந்த சமையல்கார மாமியும்,லதாவும் நிச்சியம் வேலைக்கு வருவா.இந்த சந்தர்ப்பத்தை நாம் உபயோக படுத்திண்டு லதாவை நாம ஆசை தீர அனுபவிச்சா என்ன’ என்று அவ ன் யோஜனைப் பண்ணினான்.அதை செய்து முடிக்க தீர்மானம் பண்ணினான் ரமேஷ்.‘நாம அனுபவி ச்ச,அப்புறமா லதாவுக்கு ஏதாவது ‘இசகு’ ‘பிசகாக’ ஆயிடுத்துன்னா,நாம இந்த பழியை சுரேஷ் மேலே போட்டுடலாம்.அவன் தானே லதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்ன்னு பிடிவாதமா,அப்பா அம்மா கிட்டே கெஞ்சி இருக்கான்.’இதனாலே நாம மாட்டி கொள்ள மாட்டோம்’ என்று எண்ணினான் அவன்.அந்த ‘ப்ளான்’ படி செய்து முடிக்க ‘வேண்டியதை’ தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே போய் வாங்கி வந்து வைத்துக் கொண்டான் ரமேஷ்.
காலை மணி ஆறடித்ததும் மேடம்,பெரியவர்,சுரேஷ் மூவரும் நன்றாகக் குளிச்சு¢ட்டு நன்னா டிரஸ் பண்ணிண்டு திருப்பதி கிளம்பத் தயாரானர்கள்.லலிதா ரமேஷ் ‘பெட் ரூமை’த் தட்டி“ ரமேஷ் நாங்க கிளம்பறோம்” என்று சொன்னாள்.ரமேஷ் ரூமுக்குள் படுத்துக் கொண்டே“சரி நீங்க ஜாக்கிற தையா போயிட்டு வாங்க”என்று பதில் சொன்னான்.பிறகு மூவரும் தங்கள் ‘இன்னோவா’ காரில் ஏறிக் கொண்டு திருப்பதிக்குக் கிளம்பிப் போனா¡ர்கள்.மணியைப் பார்த்தான் ரமேஷ்.மணி ஏழு அடிக்க ஐந்து நிமிஷம் பாக்கி இருந்தது.’இன்னும் ஐஞ்சு நிமிஷத்லே லதாவும்,அவள் அம்மாவும் வந்துடுவா’ என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான்.மணி ஏழு அடித்தது.லதாவை அழைச்சுண்டு வந்து வீட்டு ‘காலிங்க் பெல்லை’அமுத்தினாள் காயத்திரி.‘காலிங்க பெல்’ அடிக்கும் ஓசை கேட்கவே ரமேஷ் தன் ரூமை விட்டு வெளியே வந்து வாசக் கதவைத் திறந்தான்.அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.வாழைத் தண்டு போல் இருந்த லதாவின் வலது கையின் மீதும்,வட்டமான முகத்தின் வலது பக்கத்திலும் அந்த சிவப்புக் கிரணங்கள் விழுந்து அவளை இன்னும் அழகு தேவதையாக காட்டிக் கொண்டு இருந்தது.அப்போது தான் லதா குளித்து விட்டு வந்த ‘லக்ஸ்’ சோப்பின் வாசம் ரமேஷின் மூக்கைத் துளைத்தது.அவள் முதுகின் பின் பக்கமும்,கழுத்துக்கும்,தன் முகத்துக்கும் போட்டு இருந்த ‘குட்டிக்குரா’ பவுடரின் வாசனை அவன் மூக்கை துளைத்தது அந்த வாசத்தை கொஞ்சம் நேரம் அனுபவித்தான் ரமேஷ்.கொஞ்ச நேரம் கழித்து ”வாங்கோ மாமி.நான் என்னமோ யோஜனைப் பண்ணிண்டு இருந்துட்டேன்,சாரி “என்று சொல்லி அவர்களை உள்ளே வர சொன்னான் ரமேஷ்.அவர்கள் இருவரும் உள்ளே வந்த சில நிமிஷத்துக்கு எல்லாம் வேலைக்கரன் ஆறுமுகம் உள்ளே வந்தான்.அவன் வேலைக்கு வந்ததும் மேடம்,பெரியவர்,சுரேஷ் இவர்கள் கழட்டிப் போட்டு இருந்த பழைய டிரஸ்களை எல்லாம் எடுத்து வந்து ‘வாஷிங்க மெஷினில்’ துவைக்கப் போட்டான். பிறகு அவனுக்கு என்று இருந்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தான்.
சமையல் ரூமுக்குள் போன காயத்திரி பில்டா¢ல் காபித் தூள் போட்டு வென்னீரைக் காய்ச்சி பில்டா¢ல் விட்டு ‘டிக்காக்ஷனை’ இறக்கினாள்.பிறகு பாலைக் காய்ச்ச பால் பாக்கெட்டை உடைத்து பாலை பால் பாத்திரத்தில் விட்டு காய்ச்சினாள்.லதாவுக்கு சுரேஷ் இல்லாத அந்த வீடு சூன்யமாக இருந்தது.பில்டரில் ‘டிக்காக்ஷன்’ இறங்கியதும் காயத்திரி தனக்கும் லதாவுக்கும் காப்பிப் போட்டாள். ’”லதா,இந்தா காபி குடி” என்று சொல்லி காப்பி டவரா டம்ளரை அவளிடம் நீட்டினாள் காயத்திரி. லதா காபியை வாங்கிக் குடித்தாள்.காயத்திரி தினமும் தருவது போல இன்னைக்கும் ஆறுமுகத்தை கூப்பிட்டு “ஆறுமுகம் இந்தா காபி” என்று சொல்லி காப்பியைக் கொடுத்தாள்.ஆறுமுகமும் காயத் திரி கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான்.துவைத்து முடிந்தவுடன் ‘வாஷிங்க் மெஷினில்’ போட்ட துணிகளை எல்லாம் எடுத்து வாசலில் கட்டி இருந்தக் கொடியில் உலர்த்தி விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.
மணி எட்டடித்தது.சோம்பல் முறித்துக் கொண்டே தன் பெட் ரூமில் இருந்து வெளியில் வந்தா ன் ரமேஷ்.வந்ததும் அவன் தன் ‘ப்ளான்’ படி செய்ய எண்ணினான்.முதலில் ரமேஷ் ஆறுமுகத்தைக் கூப்பிட்டான்.ஆறுமுகமும் ரமேஷ் முன்னாடி கையை கட்டிக் கொண்டு வந்து நின்றான். ஆறுமுகத் தைப் பார்த்து “ஆறுமுகம்,நான் இன்னிக்கு பூராவும் வெளியே போய் விடப் போறேன்.அதனாலே நீ இன்னைக்கு லீவு எடுத்துக்கோ.நீ நாளைக்கு காலையில் வந்தா போதும்”என்று சொன்னான்.ஆறுமு கத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை.அவன் உடனே “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று சொல்லி விட்டு உடனே போயிட்டான்.’அப்பாடா நாம் ஆறுமுகத்தை அனுப்பி விட்டோம்,இனி நான்,லதா,மாமி, மட்டும் தான் இந்த பங்களாவிலே’ என்று நினைத்து ஒரு பெரு மூச்சு விட்டுக் கொண்டான் அவன். ரமேஷ் குரல் ஹாலில் கேக்கவே காயத்திரி சமையல் ரூமை விட்டு வெளியே வந்து தயங்கி தயங்கி “நான் இன்னைக்கு உங்களுக்கு என்ன சமையல் பண்ணட்டும் சொல்லுங்க அதற்கு தகுந்தார் போல் நான் ஆறுமுகத்தை காய்கறி வாங்கி வர சௌகரியமா இருக்கும்”என்று பயத்துடன் கேட்டாள்.
ரமேஷ் கொஞ்ச நேரம் பேசாமல் சும்மா இருந்தான்.தான் ஒரு நல்ல பிள்ளையே போல, அவர் கள் இருவருடனும் பேசி வரணும் என்று எண்ணி பட்டென்று “மாமி,நீங்களும், லதாவும் காபிக் குடிச்சேளா”என்று கேட்டான்.”நாங்க ரெண்டு பேரும் காபி குடிச்சிட்டோம். ஆறுமுகத்துக்கும் காபி குடுத்துட்டேன்.உங்களுக்குத் தான் தரணும்.லதா கிட்டே நான் காப்பியை குடுத்து அனுப்பட்டுமா” என்று கேட்டாள் காயத்திரி.“இப்போ எனக்கு அவசரம் இல்லே மாமி.எனக்கு ஒத்தனுக்காக நீங்க பாவம் சமைக்க வேணாம்.இன்னிக்கு நீங்களும் லதாவும் ‘ரெஸ்ட்’ எடுத்துக்கோங்கோ.என் ‘ப்ரெண் ட்’ ஒருத்தனுக்கு ‘பர்த்டே’ இன்னைக்கு.நான் அவனைப் பாத்து ‘விஷ்’ பண்ணிட்டு ,அப்புறமா என் ‘ப்ரெண்ட்ஸ்களுடன்’ வெளியில் சாப்பிட்டுக் கொள்றேன்.இன்னைக்கு ஒரு நாளாவது நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போய் ‘ரெஸ்ட்’ எடுத்துகோங்கோ” என்றான் ரமேஷ்.அவர்களை ‘இன்னிக்கு நீங்க சமைக்க வேணாம்.இன்னிக்கு ஆத்துக்குப் போய் ‘ரெஸ்ட்’ எடுத்துக்கோங்கோ’ என்று சொல்வதால், அவர்கள் ரெண்டு பேரும் நம்மை ‘ரொம்ப நல்லவன்’என்று நினைத்துக் கொள்வார்கள் என்று எண் ணினான் ரமேஷ். பிறகு ஏதோ வேலையா தன் ரூமுக்கு போனான் ரமேஷ்.காயத்திரிக்கு ‘இந்த பை யன் பாக்கத் தான் கெட்டவன் போல இருக்கான்.ஆனா பழகினா நல்லவன் போல இருப்பான் போல இருக்கே.இவ்வளவு நல்ல விதமாகப் பேசுகிறானே”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் ரூமை விட்டு வெளியே வந்து சோபாவில் உட்கார்ந்தான் ரமேஷ். “மாமி காப்பித் தரேளா”என்று அவன் குரல் கொடுத்தான்.உடனே காயத்திரி ‘ஸ்டாங்கா டிக்காக்ஷ னை’ கப்பில் விட்டு,சக்கரைப் போட்டு,திட்டமா பாலும் விட்டு,நன்றாக நுரை வரும் வரை அதை ஆத்தி,லதாவிடம் கொடுத்து ரமேஷிடம் தருமாறு சொன்னாள்.லதாவும் அந்த காபிக் கப்பை கையில் எடுத்துக் கொண்டு அன்ன நடைப் போட்டு மெல்ல நடந்து வந்து அவன் எதிரில் இருந்த ‘ஸைட் டேபிளில்’ மெல்ல வைத்தாள்.லதா கொண்டு வந்து வைத்த காபியை கையில் எடுத்துக் கொண்ட ரமேஷ் “தாங்க்ஸ் லதா”என்று சொன்னான் ரமேஷ்.
சற்று நேரம் கழித்து ரமேஷ் “லதா,லதா”என்று குரல் கொடுத்தான்.சமையல் ரூமில் இருந்த லதா ரமேஷ் கூப்பிடுவதைக் கேட்டு ஹாலுக்கு வந்து அவன் எதிரில் நின்றாள்.”லதா,நீ எனக்கு ஒரு சின்ன ‘ஹெல்ப்’ பண்ண முடியுமா”என்று கொஞ்சலாகக் கேட்டான் ரமேஷ்.”சொல்லுங்கோ,என்ன ‘ஹெல்ப்’ வேணும்”என்றாள் அவள்.அவள் குரலுக்குக் கூட இத்தனை வசீகரம் இருக்குமா.இத்தனை நாளா நாம் இவளிடம் பேசாம,இவ ‘ஸ்வீட் வாய்ஸ்ஸை’ கேக்காம இருந்து விட்டோமே’ என்று நினை த்து வருத்தப் பட்டான் ரமேஷ்.”ஒன்னும் இல்லே லதா,நான் என் ‘ப்ரெண்டு’ ‘பர்த் டேக்கு’ ஒரு’ பொக்கே’த் தரணும்.நீ எனக்கு நம் பங்களாவின் பின் பக்கம் இருக்கும் ரோஜா செடிகளில் இருந்து மூனு சிவப்பு ரோஜா,மூனு மஞ்சள் ரோஜா,மூனு‘பிங்க்’ ரோஜா,மூனு வெள்ளை ரோஜா தண்டோடு கொஞ்சம் நறுக்குக் கொண்டு வர முடியுமா”என்று கேட்டான்.பாவம் லதா அவன் சொன்னது உண் மை என்று நம்பி “சரி,பங்களாவின் பின் பக்கம் இருக்கும் ரோஜா செடிகளில் இருந்து நீங்க சொன்ன கலர்களில் நான் ரொஜாப் பூக்களைப் பறிச்சுண்டு வரேன்”என்று சொல்லி விட்டு லதா சமையல் ரூமுக்குப் போய் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு போய் ரோஜாக்களைப் பறித்து வரப் போனாள்.அவள் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு போனவுடன் ரமேஷ் சட்டென்று தன் ரூமுக்குப் போய் ஒரு பெரிய கைக் குட்டையில்,அவன் ராத்திரி வாங்கி வந்த மயக்க மருந்தைக் கொட்டிக் கொண்டு, தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சமையல் ரூமுக்கு வந்தான்.காயத்திரி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மேலே இருக்கும் ‘ஷெல்பில்’ ஏதோ எடுத்துக் கொண்டு இருந்தாள்.
ரமேஷ் தன் பாக்கெட்டில் இருந்து அந்த மயக்க மருந்து கைகுட்டையை எடுத்து காயத்திரியின் மூக்கில் வைத்து அழுத்தினான்.காயத்திரி ரெண்டு நிமிஷத்துக்கு எல்லாம் மயக்கமாகி ரமேஷின் மேலேயே சாய்ந்து விட்டாள்.ரமேஷ் உடனே காயத்திரியை கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு பக் கத்தில் இருந்த ‘ஸ்டொர்’ ரூமில் படுக்க வைத்து விட்டு ஸ்டோர் ரூமை கதவை ஓசைப் படாமல் சாத்தி விட்டு தன் ‘பெட்’ ரூமுக்கு வந்து விட்டான்.லதா ரமேஷ் சொன்னது போல சிவப்பு,மஞ்சள், பிங்க்,வெள்ளை ரோஜாக்களை தண்டொடு பறித்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள்.லதா உள்ளே வருவதை தன் பெட் ரூமில் இருந்துப் பார்த்துக் கொண்டு இருந்த ரமேஷ் “லதா,நான் பெட் ரூமில் இருக்கேன்.தயவு செஞ்சி இங்கே வந்து ரோஜாவை எல்லாம் குடுக்க முடியுமா ”என்று கெஞ்சலாகக் கேட்டான்.லதா ரமேஷ் சொன்னது போல ரோஜாக்களை எடுத்துக் கொண்டு ரமேஷ் ‘பெட் ரூமு’க்குப் போனாள்.’பெட் ரூமில்’ நுழைந்த லதா அந்த ரூமில் இருந்த கட்டி லைப் பார்த்தாள்.’அடேயப்பா, இவ்வளவு பெரிய கட்டிலா ஒருத்தர் படுத்துக் கொள்றதுக்கு.நாலு பேர் தாரளமாய் படுத்துக்கலாம் போல் இருக்கே’என்று வியந்தாள்.ரூமில் அடித்து இருந்த ‘சென்ட்’ வாசனை அவள் மூக்கைத் துளைத்தது.அந்த வாசனையை முகர்ந்த அவள் ’அடேயப்பா,எவ்வளவு வாசனையா இருக்கு இந்த சென்ட்.இந்த மாதிரி ‘சென்ட்’எல்லாம் நல்ல பணக்காரா தான் வாங்கி உப யோகப்படுத்த முடியும்.இவாளுக்கு என்ன பணத்துக்கா பஞ்சம்.’ரூம்’ பூராவும் அடிச்சு இருக்கார்’ என்று ஆச்சரியப் பட்டாள்.
அவள் அப்படி ரூம் பூராவையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் அவ ளைப் பாத்து ”லதா,நீஅந்த ரோஜாவை எல்லாம்,அதோ அந்த ‘டேபிளின்’ மேலே வச்சுடு.நான் எழு திக் கொண்டு இருக்கும் லெட்டரை முடிச்சுட்டு வந்து ‘பொக்கே’ பண்ண வசதியாய் இருக்கும்” என்று சொன்னான்.ரமேஷ் சொன்னது போல லதா ரூமின் கோடியில் இருந்த டேபிளின் மீது அந்த ரோஜாக் களை வைக்கப் போனாள்.அவள் ரோஜாக்களை ‘டேபிள்’ மேல் வைத்துக் கொண்டு இருக்கும் போது, ரமேஷ் சட்டென்று தன் பாக்கெட்டில் இருந்து அந்த மயக்க மருந்து கொட்டின கைகுட்டையை எடு த்து,லதாவின் மூக்கை இறுக்க மூடினான்.ரோஜா பூக்களோடு லதா ரமேஷின் மேலே சாய்ந்து விட் டாள்.ரமேஷ் அவளை கை தாங்கலாக அணைத்து கொண்டு போய் தன் கட்டிலில் படுக்க வைத்தான். அவன் மனம் குதுகூலித்தது.அவள் எழுந்து இருக்காமல் இருக்க அடிக்கடி மயக்க மருந்து கைக் குட் டையை அவள் மூக்கில் வைத்து மயக்கம் தெளியாமல் பார்த்து கொண்டான்.அவன் லதாவை ‘ஆசை’ தீர அனுபவித்தான்.பிறகு அவள் மேலே அவள் கட்டி இருந்த புடவையால் அவளை மூடி விட்டான்.
மயக்க மருந்து மூன்று மணி நேரம் தான் வேலை செய்யும் என்பது ரமேஷூக்கு ஞாபகம் வரவே தன் பாத் ரூமுக்குப் போய் நன்றாய் குளி¢த்து விட்டு டிரஸ் பண்ணிக் கொண்டு ‘பெட்’ ரூமை விட்டு வெளியே வந்தான்.’நாம வாசல் கதவைப் பூட்டிண்டு போயிட்டோம்ன்னா,லதாவும்,அவ அம்மாவும் மயக்கம் தெளிஞ்ச பிறகு எப்படி வெளியே போவா.அதனாலே நாம வாசல் கதவைப் பூட்டாம ஆத்து சாவியை வாசலில் இருக்கும் கூர்க்காவிடம் கொடுத்துட்டு,லதாவும் அவ அம்மாவும் பங்களாவை விட்டுப் போன பிறகு அவனை பூட்டி சாவியை வச்சுக் கொள்ள சொல்லாம்’ என்று ‘ப்ளான்’ பண்ணி னான் அவன்.மறக்காமல் மயக்க மருந்து பாட்டிலையும்,அவன் உபயோகப் படுத்தின கை குட்டை யையும் எடுத்துக் கொண்டு,வாசலுக்கு வெளியே வந்து அவன் ‘காரேஜ்’க்குப் போய் தன் காரை எடுத்துக் கொண்டு ஒட்டி வந்து வாசலில் நின்றுக் கொண்டு இருந்த கூர்ர்காவை கூப்பிட்டான்.உடனே வாசலில் இருந்த கூர்ர்கா ஓடி வந்து “சலாம் ஷார்’ என்று ஒரு பெரிய ‘சல்யூட்’ அடித்தான். ரமேஷ் தன் காரில் இருந்த படியே “ராம் சிங்க்,சமையல் பண்ற மாமியும்,அவங்க பொண்ணும்,அவா வேலைகளே எல்லாம் செஞ்சி முடிச்சப் பிறகு அவா ஆத்துக்கு போவா.அவா போன பிறகு நீ வாசல் கதவை நல்லா ப் பூட்டி விட்டு,சாவியே நீயே வச்சுக்கோ.சாயங்காலம் வரும் கூர்க்கா கிட்டே சாவியை குடுத்துட்டுப் போ.நான் ராத்திரி தான் பங்களாவுக்கு வருவேன்.நான் வந்த பிறகு அவன் கிட்டே இருந்து பங்களா சாவியை வாங்கிக்கறேன்.பங்களா சாவி பத்திரம்.ஜாக்கிறததையா வச்சுக்கோ என்ன” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொன்னான் ரமேஷ்.
கூர்க்கா ராம் சிங்கும் “சரி சார்,அந்த சமையல் கார மாமியும் அவங்க பொண்ணும் வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு போனதும்,நான் பங்களாவை நல்லா பூட்டி சாவியை ஜாக்கிறதையா வச்சுக்கிறேன்.சாயங்காலம் வர கூர்க்கா கிட்டே நான் பங்களா சாவியை எல்லாம் கொடுத்து விட்டு போறேன் சார்,சலாம் சார்”என்று சொல்லி விட்டு ரமேஷ் கொடுத்த சாவியை வாங்கிக் கொண்டான் ராம் சிங்க்.பங்களா சாவியை கூர்க்கா ராம் சிங்க் வாங்கிக் கொண்டவுடன் ரமேஷ் தன் காரில் பறந்தான் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு ‘டஸ்ட் பின்னில்’ மயக்க மருந்து பாட்டிலையும்,அவன் உபயோகப் படுத்தின கைக் குட்டையையும் வீசி ஏறிந்தான்.
மயக்கம் கொஞ்சம் தெளிந்தவுடன் காயத்திரி தன் கண்களை கசக்கி கொண்டு மெல்ல திறந்து பார்த்தாள்.எல்லாமே மங்கலாகத் தொ¢ந்தது அவளுக்கு.சட்டென்று தன் பொண்ணு லதா ஞாபகம் வரவே, தன் கண்களை மெல்லத் திறந்துக் கொண்டு எழுந்தாள்.கொஞ்சம் பச்சைத் தண்ணீரை எடுத் து தன் முகத்தில் வாரி இறைத்துக் கொண்டாள்.புடவைத் தலைப்பால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள்.தன் புடவையை சரி படுத்திக் கொண்டு ”லதா,லதா” என்று கத்தி கொண்டே ‘கிச்சன்’ ரூமை’ விட்டு வெளியில் ஓடி வந்தாள்.ஹாலுக்கு வந்த காயத்திரி ஹால் வெறிச் சோடி இருந்ததைக் கவனித்தாள்.ஹால் நிசப்தமாக இருந்தது அவளுக்கு இன்னும் பயத்தைக் கொடுத்தது.’லதா எங்கே இருப்பா.அவ ளுக்கு என்ன ஆச்சோ,அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்கக் கூடாதே பகவானே’ என்று பயந்துக் கொண்டே தேட ஆரம்பித்தாள்.ஹாலில் இருந்த ரமேஷ் ‘பெட் ரூம்’ மட்டும் திறந்து இருந்தத தைப் பார்த்த காயத்திரிக்கு தூக்கி வாரிப் போட்டது.அது ரமேஷ் ‘பெட் ரூம்’ஆச்சே,நாம அந்த ‘பெட் ரூமு’ க்கு போகலாமோ கூடாதோ’ என்று பயந்தாள்.
”லதா,லதா,நீ எங்கே இருக்கே சீக்கிரமா வா லதா” என்று கத்தினாள் காயத்திரி.லதாவுக்கு அம்மா ‘லதா’‘லதா’ ன்னு கத்தறது எங்கோ கிணத்துக்கு அடியிலே இருந்து கேட்பது போல கேட்டது. லதா மெல்ல முனகினாள்.காயத்திரி ரமேஷ் ‘பெட்’ ரூமுக்கு கிட்ட வந்த போது லதாவின் முனகல் சத்தம் கேட்கவே, உடனே ரமேஷ் ‘பெட்’ ரூமுக்குள் ¨தா¢யமாக போனாள்.அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.வெறுமனே ஒரு புடவையோடு ரமேஷின் ‘பெட்டில்’ படுத்துக் கொண்டு இருந்தாள் லதா. லதாவை இந்த கோலத்தில் பார்த்த காயத்திரிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.”இத்தனை வரு ஷமா நாம நம்ப பொண்னு லதாவை,அவ மேலே காத்து கூட படாம பாதுகாத்து வந்தோமே இப்போ எல்லாம் கடல்லே கரைச்ச பெருங்காயமா ஆயிடுத்தே.என் பொண்ணு வாழ்க்கை இப்படி பாழாயிடுத் தே.நான் என்ன பண்ணுவேன் பகவானே”என்று கத்திக் கொண்டே ஓடி போய் லதாவை உலுக்கி, உலுக்கி “லதா,இது என்ன லதா.என்ன நடந்தது உனக்கு.எல்லாம் கொள்ளை போயிடுத்தே.எழுந்திரி. யாருடீ உன்னை இப்படி பண்ணினவன்” என்று கத்தினாள்.காயத்திரி கத்திக் கொண்டு தன்னை உலுக்கியதால் லதா மெல்ல தன் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தரிக்க முயற்சி பண்ணினாள்.
காயத்திரி அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தன் கையில் விட்டுக் கொண்டு லதா முகத்தில் வீசினாள்.’சில்’லென்று தன் முகத்தில் தண்ணீர் வந்து விழவே லதா தன் முகத்தை துடைத்துக் கொண்டு,தன் தலையை தொங்க போட்டு கொண்டு ‘ஒ’ வென்று அழதாள்.தன் மீது போட்ட புடவையை இறுக்கப் போர்த்திக் கொண்டாள் லதா.என்ன ‘நடந்தது’ என்று அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது.அவள் முகம்,கழுத்து,உடம்பு,என்று எல்லா இடத்திலிருந்தும், ரமேஷ் போட் டுக் கொண்டு இருந்த ‘சென்ட்’வாசனை அடித்துக் கொண்டு இருந்தது.’இப்படி அலங்கோலப் படுத்தி தன் ‘கற்ப்பை’ சூரை ஆடிட்டானே அந்தப் பாவி’ என்று நினைக்கும் போது அவள் அழுகை இன்னும் அதிகம் ஆகியது.“உன்னை இப்படி ‘பாழா’ப் போக விட்டுட்டேனேடீ,நான் பாவிடீ” என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் காயத்திரி.
ஒரு பத்து நிமிஷம் இருவரும் அழுது இருப்பார்கள்.’எது லதாவுக்கு நடக்கக் கூடாதுன்னு நாம் நினைச்சோமோ,அது நடந்துட்டது.என்ன பண்றது.நடந்தது நடந்துப் போச்சு.இனிமே மேலே ஆக வேண்டியத்தை நாம் கவனிக்கணும்’என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு காயத்திரி தன்னை சுதாரித்துக் கொண்டாள்.”எழுந்திரு லதா.உன் ‘டிரஸ்’ எல்லாம் போட்டுக்கோ.வெறுமனே நாம இங்கே அழுதுண்டு இருந்தா,ஒன்னும் பிரயோஜனம் இல்லே.இந்தப் பாவி ரமேஷ்,நல்லவன் போல் நடிச்சு எனக்கும் உனக்கும் மயக்கம் கொடுத்து விட்டு உன்னை இப்படிக் ‘கெடுத்து’ இருக்கான்.நாம ஏமாந்து போயிட்டோம்.இனி ஒரு நிமிஷம் கூட நாம இங்கே இருக்க கூடாது.வா நாம ஆத்துக்கு போகலாம்” என்று கத்தினாள் காயத்திரி.லதாவுக்கு வெக்கம் ஒரு பக்கமும்,கோபம் ஒரு பக்கமும் வந்தது.”என் னை லதா,லதான்னு கொஞ்சலா கூப்பிட்டுட்டு,அந்த நாகப் பாம்பு என்னை தீண்டிடுத்தே.நான் ஏமா ந்து போயிட்டேனே.அந்த ரமேஷை மட்டும் நான் நேர்லே பாத்தா அவன் கழுத்தை நொ¢ச்சி கொன்னு ட்டு நானும் ஜெயிலுக்குப் போவேன்ம்மா” என்று ஆத்திரம் தீர கத்தினாள் லதா.
அம்மா வெறுமனே சொல்லவே மெல்ல எழுந்து தன் உள்ளாடைகளை எல்லாம் போட்டுக் கொண்டு,தன் புடவை,ஜாக்கெட்டையும் போட்டுக் கொண்டாள்.தன் கண்களை துடைத்துக் கொண்டு தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள் லதா.கொஞ்ச நேரம் ஆனதும் லதாவை அழைத்துக் கொண்டு ‘கிடு’ ‘கிடு’ என்று பங்களாவை விட்டு வெளியே வந்தாள் காயத்திரி.ரெண்டு பேரும் இன்னும் அழுதுக் கொண்டே கூர்க்கா ரூமைத் தாண்டி வெளியே வந்தார்கள்.காயத்திரியை விட லதா விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தாள். கூர்க்கா அவர்கள் அழுது கொண்டு போவ தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.அவர்கள் பங்களாவை விட்டு போனதும்,அவன் பங்களாவை பூட்டி விட்டு சாவியை வைத்து கொண்டான்.மழை இருட்டிக் கொண்டு வந்தது.’இந்த மழை பெய்யற துக்கு முன்னாடி லதாவையும் கூட்டிண்டு, ஆம் வந்து சேரணுமே’ என்கிற கவலை வந்தது காயத்திரி க்கு.பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ் வருதா,பஸ் வருதா என்று அவள் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒரு வழியாக பஸ் வந்து அவளும் லதாவும் ஏறிக் கொண்டார்கள்.பஸ் காலியாக இருந்தால் காயத்திரி லதாவை ஜன்னலோர சீட்டில் உட்கார வைத்து விட்டு,தானும் பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டாள் ரெண்டு பேருக்கும் பழைய மாம்பலத்திற்கு டிக்கட் வாங்கினாள்
பஸ்ஸில் உட்கார்ந்த காயத்திரி அந்த பங்களாவில் நடந்ததை போய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கலாமா என்று யோசித்தாள்.’புகார் குடுத்தா பிரயோஜனம் இருக்குமா.இந்த சம்பவத்தை நிரூபிக்க நம்மிடம் என்ன சாட்சி இருக்கு.போதுமான சாட்சிகள் இருந்தாலே,இந்த போலீஸ் பெரிய பணக்காரா மேலே எந்த விதமான வழக்கும் போடப் பயப்படுவாளே.அவா பண பலத் தாலே இந்த போலீஸ் மொத்தத்தையும் வாங்கிடுவாளே.நாம ஏழை.ரெண்டு வயசு வந்த பையன்க இரு க்கிற ஆத்லே நாம தானே சமையல் வேலை செஞ்சு வர சம்மதிச்சு,இத்தனை வருஷமா கை நிறைய சம்பளமும்,வாய்க்கு ருசியான சமையலும் சாப்பிட்டு வந்து இருக்கோம்.தவிர ஊருக்கு பூரா இந்த விஷயம் பரவி விடுமே.இந்த விஷயம் என்ன ஊர் பூரா டமாரம் போடற விஷயமா.லதா என்னச் சொல் வா.‘ஏம்மா இப்படி போலீஸ்க்கு போய் புகார் குடுத்தே.இப்ப என்ன ஆச்சு.போலீஸ் ஒன்னும் பண்ண லே.வீணா என் ‘மானம்’கப்பல் ஏறினது தான் மிச்சம்.நீ சும்மா இருந்து இருக்க கூடாதாம்மா.உன்னை யார் அம்மா போலீஸ்க்கு புகார் குடுக்கச் சொன்னா.உனக்கு புத்தி எங்கே போச்சும்மான்னு கேப்பாளே’ என்று தோன்றியதும் காயத்திரி சும்மா இருந்து விட்டாள்
யோசனை பண்ணிக் கொண்டு இருந்த போது ‘பஸ்’ பழைய மாம்பலத்தை அடைந்து விட்டது. பஸ் கண்டகடர் ”பழைய மாம்பலம் இறங்குங்க”என்ற குரல் கேட்டு காயத்திரி எழுந்து லதாவையும் எழுப்பி பஸ்ஸை விட்டு கீழே இறங்கினாள்.வானம் ‘ஜோ’ வென்று மழையைக் கொட்ட ஆரம்பித்தது. ‘கையில் குடையும் இல்லாம நாம இந்த மழைலே எப்படி நடந்து ஆத்துக்கு போகப் போறோம்’ என்று கவலைப் பட்டாள் காயத்திரி.தெருவில் ஒருவர் கூட நடந்துப் போகவில்லை.எல்லோரும் கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்றுக் கொண்டு இருந்தார்கள்.பஸ்ஸை விட்டு இறங்கின லதா ”இனிமே என்ன இருக்கு நமக்கு.வாம்மா,இந்த மழைலே நடந்து போய் ஆத்துக்கு போய் சேருவோம்”என்று கத்தி தன் அம்மாவின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தாள் லதா.காயத்திரியும் ஒன்னும் சொல்லாமல் லதா பின்னாலேயே போனாள்.வீடு வந்து சேருவதற்குள் லதாவும் காயத்திரியும் தொப்ப மாக நனைந்து விட்டார்கள்.இருவரும் தங்கள் தலையை நன்றாக துவட்டிக் கொண்டு,தங்கள் துணி கள மாற்றிக் கொண்டார்கள்.
காயத்திரி தன் கணவர் படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு ‘நீங்க எங்களோடு இருந்து இருந்தா இந்த ‘அவமானம்’ நம்ப பொண்ணுக்கு ஆகி இருக்காதே.நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்கோ.அவ அழறதேப் பாத்தேளா.அவளை என்னால் சமாதானமே பண்ண முடியலேயே. பாவம் அவ ஒரு கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா வாழ வேண்டிய இந்த வயசிலே,இப்படி ஒரு ‘கஷ்டம்’அவளுக்கு ஏற்பட்டு இருக்கே.நீங்க தான் தெய்வமா இருந்துண்டு, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கூடிய சீக்கிரமா அமைச்சுக் குடுக்க வழி பண்ணனும்.ஒரு நல்ல பையனா அவளுக்கு கிடைக்க சீக்கிரம் வழி பண்ணுங்கோ’ என்று மனதில் சொல்லிக் கொண்டு நமஸ்காரம் பண்ணினாள். மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள் லதா.கொஞ்ச நேரம் போனதும் தன் பாயைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள் லதா.அசதியாலும்,வெறுப்பாலும், அவள் மரவட்டையைப் போல் சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.அவள் அழும் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டு கொண்டு இருந்தது காயத்திரிக்கு.அவளும் பாயை போட்டு கொண்டு லதாவின் பக்கத்திலேயே படுத்து கொண்டாள்.
சின்ன வயசில் இருந்தே ரமேஷூக்கு தெய்வ பக்தியோ,நல்ல நண்பர்கள் சகவாசமே கிடையாது. அவன் போய் படித்த அமொ¢க்காவில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து குடி,சிகரெட் பழக்கத்தை ஏற்ப டுத்திக் கொண்டு இது வரை வாழ்ந்து வந்து இருக்கான்.ஆனால் அவன் இது வரை எந்த பெண்ணை யும் ‘கெடுத்தது’ கிடையாது.அவன் பண்ண இந்த ‘பெரிய தப்பு’அவன் மனதை மிகவும் வாட்டியது. ’குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது’ என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லி இருப்பார்கள்.ரமேஷ் இதற்கு ஒரு விதி விலக்கு இல்லையே.காரில் போய்க் கொண்டு இருந்த ரமேஷூ க்கு அவன் பண்ண ‘தப்பு’ அவன் மனதை அறித்துக் கொண்டு இருந்தது.’சமையல் வேலை செஞ்சு வரும் அந்த மாமியின் பொண்ணைக் ‘கெடுத்து’ விட்டோமே.நாம செஞ்சது ரொம்ப பெரிய தப்பு.லதா அழகிலே ரொம்ப ஆசைப் பட்டு இந்த பண்ணக் கூடாத தப்பை,ஒரு பத்து நிமிஷத்துக்கு உள்ளே பண்ணிட்டோமே.அப்பா,அம்மா,சுரேஷூக்கு இந்த விஷயம் தொ¢ய வந்தா நம்மை பத்தி என்ன நினைப்பா.நாம மறுபடியும் எப்படி நம்ம பங்களா குள்ளே போறது,நம்ம ‘பெட் ரூமு’க்குள்ளே போறது’ என்று மிகவும் பயந்தான்.திடீரென்று தனக்கு இருந்த ஒரு தெய்வ பகதி உள்ள ஒரு நண்பன் வரதன் ஞாபகம் வந்தது.’நாம செய்த இந்த ‘தப்பை’ தனியா அவனிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லி,இதுக்கு ஒரு வழி கேக்கலாமா’என்று தோன்றியது.நிச்சியமா வரதன் இதுக்கு ஒரு வழி சொல்லுவான்’ என்று தோன்றியது அவனுக்கு.
வரதனிடன் நடந்த எல்லாத்தையும் மறைக்காம சொன்னான் ரமேஷ்.ஒரு பத்து நிமிஷம் யோஜ னைப் பண்ணினான் வரதன்.”நீ பண்ண இந்த ‘தப்புக்கு’ ஒன்னும் பண்ண முடியாது.இது பண்ணத் தகாத ‘மஹா பெரிய தப்பு’ தான்.அந்த பொண்ணு லதா கர்ப்பத் தடை மாத்திரைகளை போட்டுண்டு இருந்தா நல்லது.ஒரு வேளை அவள் போட்டுக்காம இருந்தா,அவ கர்ப்பமாகி விடலாமே ரமேஷ். அப் படி ஆனா அந்த பொண்ணு கதி என்ன சொல்லு பார்க்கலாம்.அவளுக்கோ அப்பா இல்லைன்னு நீ சொல்றே.ஏழை சமையல்கார அம்மா தான் கூட தானே அவ இருந்து வறா” என்று கேட்டான் வரதன். தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு “ஆமாம் வரதா” என்று வெட்கபட்டு கொண்டே சொன் னான் ரமேஷ்.”எனக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலையே.கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு கர்ப்ப மாகி இந்த உலகத்தின் கண் முன்னாலே வாழவே முடியாது.முதல்லே அந்த பொண்னு தற்கொலை பண்ணிக்காம இருந்து வரணும்.ரெண்டாவதா,நீ முடிஞ்ச போது எல்லாம் அவளை முழு மூச்சோடு தேடி வந்து,உனக்கும் அதிர்ஷ்டம் இருந்து,ஒரு வேளை அவ உன் கண்லே தென்பட்டா,அவ கிட்டே, நீ பண்ணத் ‘தப்பை’ச் சொல்லி மன்னிப்புக் கேட்டு அவளுக்கும்,அவ குழந்தைக்கும்,ஒரு நல்ல வாழ் க்கையை அமைச்சுக் குடு ரமேஷ்.இப்போ இதைத் தவிர எனக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலே” என்று ஒரு பெரிய லெக்சரே கொடுத்தான் வரதன்.
வரதன் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.“ரொம்ப தாங்க்ஸ் வரதா.நீ ரொம்ப நல்லவன்.உனக்கு எந்த கெட்ட குணமும் கிடையாது.நிறைய படிச்சும் இருக்கே.நீ நிறைய தெய்வ பக்தி உள்ளவன் கூட.அந்த பகவானை எனக்காக தினமும் வேண்டிண்டு வா.நீ பகனானை தினமும் வேண்டி வந்தா,அவளுக்கு தற்கொலை பண்னிக் கொள்ளும் எண்ணத்தை நிச்சியமா அந்த பகவான் தர மாட்டார்” என்றான் ரமேஷ்.அவன் கண்கள் குளமாயின.“கண்ணைத் துடைச்சுக்கோ ரமேஷ்.நான் தினமும்,அந்த பகவானை மனதார உனக்காக வேண்டிண்டு வறேன்” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான் வரதன்.ரமேஷ் வரதன் கைகளை பிடிச்சுண்டு கண்களீல் கண்ணீர் தளும்ப நன்றி சொன்னான்.
பசிக்கு எத்தனை பலம்.வயறு காலியா இருந்தா அது தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடுகிறது.முதலில் லேசாக மணியை அடித்து பார்க்கிறது.நாம அதுக்கு செவி சாய்க்காட்டால்,அந்த மணியே பலமா அடித்து வயித்தை இழுத்து பிடித்து கொள்ள வைக்கிறது.நடை தள்ளாட வைக்கிறது கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது.அப்போ து நம் வயிற்றுக்கு ஏதாவது போட்டு அந்த ‘பசி’ என்னும் இரண்டு எழுத்துக்கு அடிமை ஆகி விடுகிறோம் இல்லையா.
– தொடரும்