தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 5,419 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கறவன் எங்காவது காலி மைதானத்லே போய் தானே கத்துக்கணும் இப்படியா ஜனங்க நடந்து போகும்’ பிஸி’ ரோட்லே கத்துக்கறது” என்று சொல்லி வருத்தப் பட்டார் விசு.”எல்லாம் என் போறாத காலம்.படவேண்டிய ‘டயம் இது.மாவு கட்டுப் போட்டுண்டு உக்காந்து ண்டு இருக்கேன் விசு” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமு.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமு “விசு,இது தாண்டா சாக்குன்னு என் பையன் ‘அப்பா நீ ‘ஸ்வீட் மாஸ்டரா’ இத்தனை வருஷமா அந்த அடுப்படிலே வெந்தது போறும்.இனிமே நீங்க ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக்குப் போக வேணாம்.நான் தான் கை நிறைய சம்பாத்திக்கறேனே.நீங்க பேசாம ஆத்லே இருந் துண்டு ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வாங்கோ”ன்னு சொல்லி என்னை வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லி வரான்.எனக்கும் அவன் சொல்றது சரின்னு படறது.எனக்கும் வயசு ஒன்னு ரெண்டு குறைய எழுவது ஆறது.இந்த வயசிலே நெருப்படியிலே வெந்து வறது ரொம்ப சிரமா தான் இருக்கு.என் சம்சார மும் என்னேப் பத்து நீங்கோ வேலைக்கு போய் வந்தது போறும்.ஆத்லே இருந்துண்டு வாங்கோ.உங் களுக்கு மறுபடியும் ஒரு விபத்து ஆனா,நீங்க படுத்த படுக்கையா ஆயிட்டா நான் என்ன பண்ணுவே ன்’ன்னு சொல்லி கவலைப் படறா.அதனால்லே உனக்கு யாராவது நல்ல ‘ஸ்வீட் மாஸ்டரா’ தொ¢ஞ்சா எனக்குச் சொல்லேன்.நான் என் முதலாளி கிட்டே அவனை ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக்கு சிபாரிசு பண்றேன்”என்றார் ராமு.உடனே விசு “ராமு,உன் பையனும்,ஆத்துகாரியும்,சொல்றது ரொம்ப கரெக்ட். நீ இனிமே ஆத்லே சௌக்கியமா இருந்துண்டு வாயேன்.உனக்கு தான் பண கஷ்டம் இல்லையே.நீ இனிமே அந்த ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக்கு போக வேணாமே”என்று சொன்னவுடன் ராமு மாஸ்டர் “என்ன் விசு,நீ கூட இப்படி சொல்றே” என்று சொல்லி சிரித்தார்.

விசு யோஜனைப் பண்ணினார்.அவருக்கு திடீரென்று அவர் சிஷ்யன் கணேசன் ஞாபகம் வந்தது.உடனே அவர் ”ராமு,என் கிட்டே கணேசன்னு ஒரு பையன் வேலை கத்துண்டு வந்து இருக் கான்.இப்போ முழு ‘ஸ்வீட்மாஸ்டரா’ வேலை பண்ண எல்லா வேலையும் அவனுக்கு நன்னா வரும். நன்னாவும் எல்லா ‘ஸ்வீட்டும்’ போடுவான். அவனும் ‘ஸ்வீட்மாஸ்டர’ வெளியே போகப் பிரியப்படறான். நீ அவனை உன் வேலைக்கு சிபாரிசு பண்ண முடியுமா”என்று கேட்டார் விசு.“நீ சொன்னா நா ன் பேஷா அந்தப் பையனை சிபாரிசு பண்றேன் விசு”என்று சொன்னார் ராமு.உடனே விசு ”ராமு நான் ஒன்னு பண்றேன். நான்அந்தப் பையனை உன்னை வந்துப் பாக்கச் சொல்றேன்.நீ அவனை ‘டெஸ்ட்’ பண்ணிப் பாரு.அவன் ‘ஸ்வீட்மாஸ்டர்’ வேலைக்கு லாயக்கான்னு பார்.அவன் உன் ‘டெஸ்ட்லே’ பாஸ் பண்ணினா,நீ உன் வேலைக்கு சிபாரிசு பண்ணேன்”என்று கேட்டார்.”சரி விசு,நீ சொல்றது ரொம்ப நல்ல ஐடியா.நான் அவனை ‘டெஸ்ட்’ பண்ணி பார்த்துட்டு,அப்புறமா அவன் நான் சொல்ற ‘ஸ்வீட் டை’அவன் சரியா பண்ணும் அளவையும்,வழியையையும்,பதத்தையும் சொன்னான்னா, நான் அவ னை என் முதலாளிக்கு சிபாரிசு பண்றேன்” என்று சொன்னார் ராமு.கொஞ்ச நேரம் விசு ராமுவிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ராமு மணைவி கொடுத்த சீடையை சாப்பிட்டு விட்டு,அவள் கொடு த்த காபியையும் குடித்து விட்டு யோஜனைப் பண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்த நாள் கணேசன் வேலைக்கு வந்ததும்,அவனுக்கு விசு ‘ஸ்வீட் மாஸ்டர் ராமுவை’ப் பத்தி சொல்லி விட்டு, அவர் விலாசத்தைக் கொடுத்து,அவரைப் போய் பார்த்து,அவர் கேக்கும் கேள்வி க்கு எல்லாம் சரியாய் பதில் சொல்லி அவர் ‘டெஸ்ட்டில்’ பாஸ் பண்ணி,அவர் வேலையை மெல்ல வாங் கிக் கொள்ள முயற்சி பண்ணச் சொன்னார்.உடனே கணேசன் ”ரொம்ப தாங்க்ஸ் மாஸ்டர்.நான் அவர் கேக்கற கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில் சொல்லி,அவர் வேலையை நான் வாங்கி கொள்ள ‘ட்ரை’ பண்றேன்.நீங்க கவலைப்படாதீங்க.உங்க ‘டிரேனிங்க்’ எனக்கு இருக்கே மாஸ்டர்” என்று தை ரியமாக பதில் சொன்னான் கணேசன்.கணேசன் சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார் ‘ஸ்வீட் மாஸ்டர்’ விசு.

ரெண்டு நாள் கழித்து கணேசன் ’ஸ்வீட் மாஸ்டர் ‘ராமுவை போய் அவர் வீட்டில் பார்த்தான். ராமு ஸ்வீட் மாஸ்டர் கணேசனை பல கேள்விகள் கேட்டு ‘டெஸ்ட்’ பண்ணினார்.கணேசன் எல்லா கேள்விகளுக்கும் சரியாய் பதில் சொல்லி அவரை அசத்தி விட்டான்.மிகவும் சந்தோஷப் பட்ட ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமு,தன் முதலாளி கிட்ட போன் பண்ணீ ”சார்,எனக்கு கால்லே ஒரு ‘ஆக்சிடெண்ட் ஆயிடு த்து.நான் இனிமே வேலைக்கு வர முடியாத நிலைமைலே இருக்கேன்.என் நண்பர் தனக்கு தொ¢ஞ்ச ஒரு நல்ல ‘ஸ்வீட் மாஸ்டரை’ எனக்கு சிபாரிசு பண்ணி இருக்கார்.நான் அவரை உங்க கிட்ட அனுப்பட்டுமா” என்று கேட்டதும் அந்த முதலாளி “நீங்க அவரை அனுப்புங்க”என்று சொன்னார்.உடனே ராமு கணேசனுக்கு தான் வேலை செய்து வந்த கடையின் விலாசத்தை கொடுத்து “கணேசா, இந்த விலாசத் லே இருக்கிற கடைக்குப் போய்,அதன் முதலாளி சுப்பிரமணி என்பவரை பாத்து ‘ஸ்வீட்மாஸ்டர்’ ராமு அனுப்பினார்ன்னு சொல்லு.அவர் உன்னை வேலைக்கு வச்சுப்பார்” என்று சொல்லி அனுப்பினார். கணேசன் ராமு ‘ஸ்வீட் மாஸ்டருக்கு’ தன் நன்றியை சொல்லி விட்டு ரூமூக்கு வந்தான். அவன் மனம் ‘தனக்கு ஒரு ‘ஸ்விட் மாஸ்டர்’ வேலை கிடைக்க போறது’ என்கிற சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்து க் கொண்டு இருந்தது.

அடுத்த நாள் கணேசன் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ‘ஸ்வீட் மாஸ்டரு’க்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு ராமு ‘ஸ்வீட் மாஸ்டர்’ சொன்ன விலாசத்தில் இருந்த கடைக் கு போய் சுப்பிரமணி என்னும் முதலாளியை பார்த்து “மாமா,என் பேர் கணேசன்,ராமு ‘ஸ்வீட்மாஸ்டர்’ என்னை உங்களைப் பாக்க அனுப்பி வச்சார்”என்று சொல்லி விட்டு பவ்யமாக நின்றுக் கொண்டு இரு ந்தான்.“நீ தானா அந்த கணேசன்.உனக்கு எல்லாம் ‘ஸ்வீட்டும்’ நன்னா போட வருமா” என்று கேட் டார்.’ரொம்ப நன்னா வரும்”என்று ¨தா¢யமாகச் சொன்னான் கணேசன்.”சரி உள்ளே போய் அங்கு இருக்கும் ‘சீப் குக்’ சந்தானத்தைப் பாரு.அவர் நீ என்ன ‘ஸ்வீட்’ எப்போ போடணும்ன்னு சொல்லு வார்.அதன்படி நீ செஞ்சி வரணும் தொ¢யறதா”என்றார் அவர்.”சரி மாமா” என்று சொல்லி விட்டு சமை யல் அறைக்குள் போய்,கணேசன்.’சீப் குக்’ சந்தானத்தை போய் பார்த்தான்.அவர் சொன்ன ‘ஸ்வீட் டை’ கணேசன் பண்ண ஆரம்பித்தான்.ஒரு அரை மணிக்குள் கணேசன் அந்த ‘ஸ்வீட்டை’ செய்து முடித்தான்.முதலாளி சுப்பிரமணிக்கும்,’ சீப் குக்’ சந்தாதனத்துக்கு ரொம்ப சந்தோஷம்.உடனே முத லாளி ”ரொம்ப நன்னா பண்ணி இருக்கே கணேசா.நீ இனிமே நிரந்தரமா நம்ம கடையிலே வேலைப் பண்ணு”என்று சொல்லி அவனுக்கு சம்பளத்தையும் சொன்னார்.கணேசனு க்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.உடனே அவன் ’நாம இப்போது தானே ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலைக்கு சேரப் போறோம் முதலாளி சொன்ன சம்பளத்தை இப்போ ஒத்துக்கலாம்.அப்பு றமா மூனு மாசம் ஆனப்புறம் நாம் சம்ப ளம் ஒசத்தி கேக்கலாம்’என்று எண்ணி முதலாளி சொன்ன சம்பளத்துக்கு வேலையை ஒத்துக் கொண் டான் கணேசன்.

வேலையை முடித்துக் கொண்டு கணேசன் கடையில் நிறைய பூ,ஸ்வீட், காரம்,எல்லாம் வாங் கிக் கொண்டு வந்து ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமு கையில் கொடுத்து அவருக்கு நமஸ்காரம் பண்ணி அவர் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டான்.”நீ நன்னா வேலை பண்ணி முன்னுக்கு வரணும் கணேசா.நீ நன்னா வேலை பண்ணி வந்து,உன் குரு விசு ‘மாஸ்டருக்கு’ம் எனக்கும் பெருமை தேடித் தரணும்” என்று சொன்னார் ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமு.” நான் நிச்சியமா நன்னா வேலை செஞ்சு வருவேன் ‘மாஸ்டர்’ “என்று தைரியமாக சொல்லி விட்டு வந்தான் கணேசன்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.கணேசன் வேலை செய்து வந்த கடைக்கு லீவு.அவன் காலை லே சீக்கிரமா எழுந்து,குளித்து விட்டு,நன்றாக ‘டிரஸ்’பண்ணிக் கொண்டு,ரெண்டு கிலோ ஸ்வீட், ரெண்டு கிலோ காரம்,பத்து முழம் பூ,வெத்திலை பாக்கு,தேங்காய் ஐந்து,ஒரு தாம்பாளம் எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு தன் குரு ‘ஸ்வீட் மாஸ்டர்’ வீட்டுக்கு போனா ன்.கொஞ்சம் பயத்துடன் ‘காலிங்க் பெல்லை’ அமுத்தினான் கணேசன்.காலையில் புதிதாக இறக்கிய டிக்காக்ஷனில் சூடாகக் காபிப் போட்டுக் கொண்டு இருந்தாள் காயத்திரி.”காலிங்க் பெல் லை யாரோ அடிக்கிறாளே.யார்ன்னு பாரும்மா”என்று சொல்லி விட்டு,அவர் படித்து வந்த பேப்பரின் அடுத்த பக்கத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டு இருந்தார் ‘மாஸ்டர்’.”இதோ பாக்கறேம்ப்பா” என்று சொல்லி காபி போடுவதை நிறுத்தி விட்டு வாசல் கதவை திறந்தாள் காயத்திரி.கணேசன் கண்களை அவனா ல் நம்ப முடியவில்லை.அந்த காலை சிவந்த சூரிய ஒளி மேலே பட,ஒரு தங்க விக்ரகம் போல ஒரு பெண் நின்றுக் கொண்டு இருந்தாள்.அந்த சூரிய ஒளியில் இன்னும் அதிகமாக பிரகாசமாக ஜொலித் தாள் அவள்.

கணேசனும் எவ்வளவோ பெண்களைப் பார்த்து இருக்கான்.ஆனால் இது வரை இந்த தங்க விக் ரகம் போல ஒரு பெண்ணை அவன் பார்த்தே இல்லை.அவன் அப்படியே அசந்து நிற்கும் போது அந்த ப் பெண் “அப்பா,உங்களைத் தான் பாக்க யாரோ ஒருத்தர் வந்து இருக்கார்“ என்று சொல்லி விட்டு கணேசனைப் பார்த்து “உள்ளே வாங்கோ”என்று சொல்லி விட்டு அன்னம் நடப்பது போல அசைத்து, அசைந்து,மெல்ல நடந்து உள்ளே போனாள்.கணேசன் அவள் நடந்து போகும் போது அவள் அங்க அசைவுகளின் அழகை ரசித்தான்.அவன் மனம் வானில் பறந்தது.

“யாருப்பா உள்ளே வா” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார் ‘ஸ்வீட்மாஸ்டர்’ விசு. “நான் தான் மாஸ்டர் கணேசன்” என்று சொல்லி விட்டு தன் செருப்புகளை ஓரமாகக் கழட்டி வைத்து விட்டு,தான் வாங்கி வந்த எல்லாவற்றையும் ஒரு தாம்பாளத்தில் எடுத்து வைத்துக் கொண்டு உள்ளே வந்தான் கணேசன்.”என்னப்பா இது பொ¢ய தாம்பாளத்தில் வெத்திலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், ‘ஸ்வீட்’ பாக்கெட்டு எல்லாம்”என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ‘மாஸ்டர்’ விசு.”எல்லாம் உங்க ஆசீர்வா தம் தான் மாஸ்டர். நான் போய் ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமுவைப் பாத்தேன்.அவர் போனில் அவர் முதலாளி க்கு என்னை சிபாரிசு பண்ணினார் நானும் அவர் கொடுத்த விலாசத்தில் இருந்த கடைக்குப் போய் முதலாளியைப் பாத்தேன்.அவர் என்னை அன்னைக்கு வேண்டிய ‘ஸ்வீட்டை’ பண்ணச் சொன்னார். நான் அவர் சொன்ன ‘ஸ்வீட்டை’ நல்ல மாதிரியா பண்ணேன்.அந்த முதலாளி என்னை வேலையில் சேர சொல்லி,எனக்கு ஒரு சம்பளமும் போட்டு குடுத்து இருக்கார்.நான் நேத்திக்கு என் வேலையை முடிச்சவுடன் நிறைய பூ,ஸ்வீட், காரம்,எல்லாம் வாங்கிண்டு போய் ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமு கிட்ட குடு த்து அவருக்கு நமஸ்காரம் பண்ணி அவர் ஆசீர்வாதத்தை வாங்கிண்டேன்.அவர் உடனே ‘நன்னா வேலை பண்ணு நீ முன்னுக்கு வரணும் கணேசா.நீ நன்னா வேலை பண்ணி வந்து உன் குரு விசு ‘மாஸ்டருக்கும்’ எனக்கும் பெருமை தேடித் தரணும்’என்று சொன்னார்.நான் அதுக்கு ’நான் நிச்சியம் பண்னுவேன் மாஸ்டர்’ ன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்.எல்லாம் நீங்க குடுத்த ‘ட்ரெயினிங்க்’ தான்”என்று சொல்லி அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணினான் கணேசன்.

”எல்லாம் அந்த ஆண்டவன் ஆசீர்வாதம் கணேசா.நான் சொல்லிக் குடுத்த வேலையே நீ நன் னா கத்துண்டே.உனக்கு வேலை கிடைச்சு இருக்கு.எழுந்திரு”என்று கணேசன் தோளைத் தொட்டு எழுப்பினார் மாஸ்டர் விசு.அவர் கணேசனைப் பார்த்து “உள்ளே வாப்பா.உக்கார்.காயத்திரி,நம்ம கணே சனுக்கும் நல்ல ‘ஸ்டாங்கா’ ஒரு கப் காப்பி குடு.கணேசன் என் சிஷ்யன்.ஆனா இன்னைக்கு அவன் ஒரு ‘ஸ்வீட் மாஸ்டர்’ ”என்று சொல்லி சிரித்தார்.”அப்படி எல்லாம் சொல்லி,என்னை நீங்க ஒதுக்கிடா தீங்கோ ‘மாஸ்டர்’.நான் என்னைக்கும் உங்க சிஷ்யன் தான்.நீங்க என்னை நன்னா பழக்கி,என்னை ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரா’ ஆக்கி இருக்கேள்”என்றான் கணேசன் பவ்யமாக.

“காயத்திரி ஒரு டவரா டம்லா¢ல் காப்ப¨யி கொண்டு வந்து கணேசன் கிட்டே வைத்தாள். “கணேசா,காபி சூடு ஆறதுகுள்ளே,குடி.காபி எப்போதும் சூடாத் தான் குடிக்கணும்.தொ¢யுமோ உனக்கு.அதுவும் காயத்திரி காபி போல யாராலும் காபி போட முடியாது.அவ்வளவு நன்னா இருக் கும்” என்று சொல்லி காயத்திரி குடுத்த காபியைப் புகழந்தார் விசு.காயத்திரி கொடுத்த காபியைக் குடிக்க ஆரம்பித்தான் கணேசன்.காயத்திரி கொடுத்த காபி உண்மையாகவே சூப்ப்ரரா இருந்தது. காபியை குடித்து விட்டு டம்லரை டவராவில் வைத்தான் கணேசன்.உடனே மாஸ்டர் கணேசனைப் பார்த்து “எப்படி இருந்தது காபி சொல்லு கணேசா,என் பொண்ணு போட்டு இருக்காளேன்னு,நீ பொ ய் சொல்ல வேணாம்.உண்மையைச் சொல்லு”என்று கேட்டார் விசு.”மாஸ்டர்,நான் உண்மையைத் தான் சொல்றேன்.இந்த காபி சூப்பரா இருந்தது.நான் இந்த மாதிரி காபியை,இது வரைக்கும் குடிச் சதே இல்லே.என் அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் நான் பில்டர் காபி குடிச்சு வந்தேன்.அம்மா போன பிற்பாடு,என் அப்பா தனக்கு ‘ப்ரூ’ காபிப் போட்டு குடிச்சுட்டு,எனக்கும் ஒரு டம்ளர் குடுப் பார்.உங்களுக்கு தான் அவரை நன்னா தொ¢யுமே.அவரும் என் தங்கையும் அந்த ‘ஆக்சிடெண்ட்லே ’ செத்துப் போன பிறகு நான் காபி குடிக்கறதே விட்டுட்டேன்.ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா நான் இந்த காபி குடிச்சு இருக்கேன்” என்றான் கணேசன்.அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது.அதை கணேசன் தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டான்.கணேசன் சொன்னதைக் கேட்ட காயத்திரி அப்போது தான் தன் தலையைத் தூக்கி கணேசனைக் கவனித்தாள். நல்ல கட்டு மஸ்தான உடல் கட்டோடு உட்கார்ந்துக் கொண்டு இருந்தான் கணேசன்.

’பாவம் இவருக்கு அம்மா இல்லயா.அப்பாவும் தங்கையும் ஒரு ‘ஆக்ஸிடெண்ட்லே’ செத்துப் போயிட்டாளா.நம்ம அப்பா வேலை செஞ்சு வந்த ஹோட்டல்லே,இவருடைய அப்பாவும் வேலை செ ஞ்சு வந்தாரா.இவர் நம் அப்பா கிட்டே வேலை கத்துண்டு வந்து இருக்கார் போல இருக்கே’ என்று எல்லாம் எண்ணம் இட்டுக் கொண்டு இருந்தாள் காயத்திரி.அவள் எண்ணத்தை கலைப்பது போல ”அது சரி கணேசா.உனக்கு வேலை பிடிச்சு இருக்கா.எங்கே இருக்கு நீ வேலை செய்யற கடை”என்று கேட்டார் ‘மாஸ்டர்’.”திருவல்லிக்கேணிலே இருக்கு ‘மாஸ்டர்’”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது காலி டவரா டம்லரை எடுத்துப் போக வந்தாள் காயத்திரி.”இவ என் பொண்ணு பேர் காயத்திரி. இவளுக்கு அப்புறமா எனக்கு குழந்தையே பொறக்கலே.எனக்கு ஒரு பையன் வேணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.அந்த பகவான் அனுக்கிரஹம் எனக்கு இல்லே.பத்தாம் ‘க்லாஸ்’ படிச்சுண்டு இருக் கும் போது இவ அம்மாவுக்கு விஷ ஜுரம் வந்தது.’ஹாஸ்பிடல்லே’ அவ ஐஞ்சு நாள் வைத்தியம் பண் ணியும் அவ பிழைக்கலே.அவ நிம்மதியா கண்ணை மூடிட்டா. நான் காயத்திரியை அப்புறமா பள்ளிக் கூடமே அனுப்பலே.நான் அவ படிச்சது போதும்ன்னு ஆத்லேயே இருந்து வரச் சொல்லிட்டேன்.அவ ‘போய்’ இந்த தை மாசம் வந்தா நாலு வருஷம் முடியப் போறது”என்று சொல்லும் போது அவர் கண்க ளின் ஓரத்தில் நீர் துளித்ததை கவனித்தான் கணேசன்.’மாஸ்டர்’ தன் துண்டை எடுத்து அவர் கண் களைத் துடைத்துக் கொண்டார்.கணேசன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ‘மாஸட ரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

கணேசன் கிளம்பும் போது காயத்திரி கணேசன் கிளம்புவதை பார்த்துக் கொண்டு இருந்தாள். வழி நெடுக கணேசன் காயத்திரியின் அழகை எண்ணி எண்ணி அசை போட்டுக் கொண்டு இருந்தா ன்.’நம் ‘மாஸ்டருக்கு’ இவ்வளவு அழகான பொண்ணா.நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம ‘மாஸ்டரை’ சந்திப்பது போல் போய் காயத்திரியே பாத்துட்டு வரனும்.எப்படியாவது அவ மனசிலே இடம் பிடிக்கணும்’ என்று அவன் மனம் ஏங்கியது.கணேசன் ரெண்டு வாரத்திற்கு ஒரு தடவை ‘மாஸ் டர்’ வீட்டுக்கு போய் ஏதாவது சந்தேகம் கேட்பது போல் கேட்டு விட்டு,காயத்திரியை ஆசை தீர பார்த் து விட்டு வந்தான்.கணேசன் வந்தால் காயத்திரியும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதை கவனி க்கத் தவறவில்லை ‘ஸ்வீட் மாஸ்டர்’ விசு.

“அம்மா காயத்திரி,நான் கவனிச்சுண்டு தான் இருக்கேன்,கணேசன் நம்மாத்துக்கு வரும் போதெல்லாம் நீ அவனை பாத்துண்டு இருப்பதை நான் கவனிச்சுண்டு வறேன்.நான் கேக்கறேனே ன்னு நீ தப்பா எடுத்தாதே.கணேசனை உனக்குப் பிடிச்சு இருக்கா.நீ அவனை கல்யாணம் பண்ணிக் கொள் ள ஆசைப் படறயா.உன் மனசை என் கிட்டே சொல்லும்மா”என்று வெளிப் படையாகக் கேட்டார். காயத்திரிக்கு தன் அப்பா கேட்டது ரொம்ப ‘ஷாக்காக ‘இருந்தது.’நம் அப்பா நாம் அவரை பாத்துண் டு இருப்பதை கவனிச்சு இருக்காரே.இனி இவா¢டம் நாம பொய் சொல்லக் கூடாது.நம் மனசில் இருப் பதைச் சொல்லி விடலாம்’என்று எண்ணி ”அப்பா எனக்கு அவரைப் பிடிச்சி இருக்கு.நான் இல்லை ன்னு என்று சொல்லலே.ஆனா எனக்கு அவரைப் பத்தி ஒன்னும் தொ¢யாது.அவர் நல்லவரா,அவருக் கு ஏதாவது கெட்டப் பழக்கம் உண்டா,அவர் என்னை காலம் பூராவும் நல்லபடியா வச்சு காப்பாத்து வாரா,என்கிற எல்லா விஷயத்தையும்,நீங்க தான் தீர விசாரிச்சு,அவர் நல்லவர்ன்னு உங்களுக்கு பட் டதுன்னா,நீங்க எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணி வையுங்க.உங்களுக்கு அவர் குணாதசியமோ, நடவடிக்கையோ,பிடிக்காம இருந்தா,எனக்கு அவரை நீங்க கல்யாணமே பண்ணி வைக்காதீங்கோ. உங்களுக்கு பிடிச்ச மாப்பிள்ளையாயும் அவர் இருக்கணும்ப்பா.வெறுமனே இந்த வயசிலே எல்லா பொ ண்ணுக்கும் ஏற்படும் மோகத்திற்கு மட்டும் ஆசைப் பட்டு நான் அவரை கல்யாணம்பண்ணிக்க மாட் டேம்ப்பா” என்று தீர்மானமாகச் சொன்னாள் காயத்திரி.

தன் மகளின் தெளிவான எண்ணங்களைக் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார் ‘மாஸ்டர்.“நீ சொல்றது ரொம்ப சரி காயத்திரி.நான் அவனைப் பத்தி எல்லாம் விவரமாகக் கேட்டுண்டு தான் இந்த கல்யாணத்தைப் பண்ணி வைக்கப் போறேன் வெறுமனே இந்தப் பையனை உனக்குப் பிடிச்சி இருக் கான்னு தான் கேட்டேன்” என்று சொல்லி விட்டு எழுந்து வேறு வேலையைக் கவனிக்கப் போய் விட்டார் ‘மாஸ்டர்’.

காயத்திரி எவ்வளவு விவேகமானப் போண்ணு.ஒரு வயசுப் பொண்ணு ஒரு வயசுப் பையனைப் பாத்து ஆசைப் படுவது ரொம்ப சகஜம்.அதுவே காதலா மாறி,நான் அந்தப் பையனைத் தான் கல்யா ணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிப்பா இந்த காலத்து பொண்ணுங்க. நம்ப காயத்திரியும் பிடிவாத ம் பிடிச்சி கனேசனை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கோன்னு சொல்லி இருந்தா,நான் வேறே வழி இல்லாம,கணேசனுக்கே காயத்திரியை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய நிர்பந்தம் வந்து இருக்கும்.நான் அவ ஆசைப் படறதே நிராகா¢ச்சு இருக்க முடியாது.பின்னுட்டு கணேசன் எப்படி இரு ந்தாலும் ‘அது அவ தலை விதி.நாம ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சு என் தலை விதியை யும் அவ தலை விதியையும் நொந்துண்டு வாழ்ந்துண்டு இருக்க வேண்டியது தான்.ஆனா காயத்திரி என்னை ‘தீர விசாரிச்சுப் பண்ணுங்கோ’ன்னு சொல்லி இருக்கா.‘காயத்திரி பிடிவாதம் பிடிக்காம முழு பொருப்பையும் என் கிட்டே விட்டுட்டு இருக்காளே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டார் ‘மாஸ்டர்’. ’அந்த பொருப்பை ஏத்துண்டு கணேசனை பத்தின எல்லா சமாசரங்களையும் தீர விசரிச்சு வரணும்’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டார்.

காயத்திரியும் ‘நாம் பூரா பொறுப்பையும் நம் அப்பா கையிலே தந்துட்டோம்.அவர் தீர விசாரிச்சு எதை செய்யறாரோ அதை நாம ஏத்துக்குவோம்’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.

நாலைந்து முறை கணேசன் மாஸ்டரைப் பார்த்து விட்டுப் போனான்.இந்த முறை கணேசன் தன்னைப் பார்க்க வந்த போது மாஸ்டர் கணேசனை நிதானமாக கேட்டு விடவேண்டும் என்று எண் ணினார்.“கணேசா,நீ நம்மாத்துக்கு வரும் போதெல்லாம் அடிக்கடி காயத்திரியை வச்ச கண் வாங்காம பார்க்கிறதே நான் கவனிச்சுண்டு தான் இருக்கேன்.அது தப்பு இல்லை.இந்த வயசிலே அது ரொம்ப சகஜம்.ஆனா நான் காயத்திரியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா,நீ அவளை காலம் பூராவும் கண் கலங்காம வச்சுண்டு காப்பாத்துவாயா சொல்லு.அவ தாய் இல்லாத பொண்ணு. நான் அவளை ரொம்ப செல்லமா வளத்து வந்துண்டு இருக்கேன்.அவளை நீ வாழ் நாள் பூராவும் சந்தோஷமாய் வச்சு ப்பயா.எனக்கு நீ சத்தியம் பண்ணி குடு”என்று நோ¢டையாகக் கேட்டார் ‘மாஸ்டர்’.கணேசன் ஒரு நிமி ஷம் அசந்து போய் விட்டான்.’காயத்திரியை இவ்வளவு சீக்கிரமா எனக்கு கல்யாணம் பண்ணிக் குடு க்க முடிவு பண்ணி,காயத்திரியை காலம் பூராவும் அவளை கண் கலங்காம வச்சுண்டு காப்பாத்துவா யான்னு சத்தியம் பண்ண சொல்றாரே நம்ம ‘மாஸ்டர்’,இது உண்மையா இல்லை கனவா’என்று தன் னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.அவனுக்கு வலித்தது.அவன் சந்தோஷத்தில் திளைத்தான். ‘காயத்திரியை இவ்வளவு சீக்கிரமா நாம அடைஞ்சுட்டோமே’ என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தான் கணேசன்

”என்னப்பா கணேசா,நான் பாட்டுக்கு கேட்டுண்டு இருக்கேன்.நீ என்னடான்னா பேசாம எங் கேயோ பாத்துண்டு யோஜனைப் பண்ணீண்டு இருக்கே.’என்னடா இவர் சத்தியம் எல்லாம் பண்ணிக் கொடுக்கணும்ன்னு கேக்கறானேன்னு’ யோஜனைப் பண்றயா.அது ஒன்னும் இல்லே கணேசா.என் பொண்ணு காயத்திரி பேர்லே எனக்கு கொள்ளை ஆசை.அவ கல்யாணத்துக்கு அப்புறம் அவ கண் கலங்காம வாழ்க்கை நடத்தணும்ன்ற ஆசைலே தான்,நான் உன்னே சத்தியம் பண்ணிக் குடுன்னு கேட்டேன் கணேசா” என்று சொல்லும் போது அவர் கண் கலங்கி விட்டார்.

உடனே கணேசன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு “’மாஸ்டர்’ நான் உங்க உப்பைத் தின்னு வளந்தவன்.எனக்கு அப்பா அம்மா யரும் இல்லே.நீங்க பாத்து இந்த கல்யாணத்தைப் பண்ணி வச்சா நான் உங்களுக்குத் துரோகம் பண்ணவே மாட்டேன்.இன்னைக்கு நான் ‘ஸ்வீட் மாஸ்டரா’ வாழ்ந்து வருவது நீங்க எனக்குப் போட்டப் ‘பிச்சை’ தான்.நீங்க உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண் ணிக் குடுத்தா,நான் உங்க பொண்ணை காலம் பூராவும் கண் கலங்காம வச்சுக்குவேன்.எதிரே தொ¢யு ம் வெங்கடாஜலபதி சுவாமி சாட்சியா நான் சொல்றேன்.நான் சொல்றது சத்தியம்”என்று சொன்னான் கணேசன் கண்களில் கண்ணீர் தளும்ப.அவன் அந்த படத்தைப் பார்த்து தன் கன்னங்களில் போட்டு க் கொண்டு இருந்தான்.கணேசன் சொன்னதை கேட்ட காயத்திரிக்கு உள்ளூர சந்தோஷமாய் இருந் தது,”நீ சுவாமி பேர்லே சத்தியம் பண்ணி இருக்கே.நான் உன்னே பரிபூரணமா நம்பறேன்.என் பொண் ணு காயத்திரியை உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறேன்” என்று சொன்னார் ‘மாஸ்டர்’.

’ரொம்ப நல்லவரா இருப்பார் போல இருக்கே இவர்.நாம தான் வீணா இவரை சந்தேகப் பட்டோ ம் போல இருக்கே’என்று எண்ணி வருந்தினாள் காயத்திரி.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தா ன் கணேசன்.அவன் கிளம்பத் தயாரானான்.மாஸ்டர் “நான் போய் வரட்டுமா ‘மாஸ்டர்’”என்று கேட்டு விட்டு எழுந்தான் கணேசன்.

”ரொம்ப ‘தாங்க்ஸ்’ கணேசா.நான் வாத்தியாரைப் பாத்து,கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லச் சொல்றேன்.எனக்கு உறவுன்னு சொல்லிக் கொள்ள வேறு யாரும் இல்லே.என் தம்பி ஒருத்தன் தான் திருச்சியில் இருக்கான்.அவனுக்கு போனில் சொல்லி அவா ரெண்டு பேரையும் கல்யா ணத்துக்கு வரச் சொல்றேன்.நாம ‘சிம்பிளா’ கல்யாணத்தை சிவா விஷ்ணு கோவில்லே முடிச்சிடலாம் ன்னு நினைக்கிறேன்.வீணா பணத்தை சத்திரத்துக்கு எல்லாம் ‘வேஸ்ட்’ பண்ணவேணாமே.நீ என்ன சொல்றே கணேசா”என்று கேட்டார் ‘ஸ்வீட் மாஸ்டர்’.உடனே கணேசன் ”எனக்கு இதிலே சம்மதம் ‘மாஸ்டர்’.நாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை வீணா ‘வேஸ்ட்’ பண்ணக் கூடாதுன்னு நானும் நினைக்கறேன்”என்று சொல்லி விட்டு காயத்திரியை பார்த்தான்.அவ தன் கண்களால் ’எனக்கும் இந்தக் கல்யாணத்லே ரொம்ப சந்தோஷம்’ என்று சொல்வதைப் போல இருந்தது கணேசனுக்கு. ’தன க்கு ‘மாஸ்டரா’ இருந்த இந்த நல்லவர் இப்போது தனக்கு மாமனாரக போறாரே.பகவானே,உனக்கு நான் என்ன கைம்மாறு பண்ணப் போறேன்’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு,அவருக்கு மனமார தன் நன்றியைச் செலுத்தினான் கணேசன்.சந்தோஷமாக தன் ஹாஸ்டலுக்குப் போய்க் கொண்டு இருந்தான் கணேசன்.

கல்யாணத்துக்கு வேண்டிய கூரைப் புடவை,மாங்கல்யம்,காதுகளுக்கு சின்னதா வைரத்தோடு, மூக்குக்கு சின்னதா மூக்குத்தி,முக்கியமான வெள்ளிப் பாத்திரங்கள்,குடித்தனம் நடந்த முக்கியமான பாத்திரங்கள் எல்லாம் வாங்கினார் ‘மாஸ்டர்’.வாத்தியார் பர்த்து சொன்ன முஹ¥ர்த்த நாள் அன்றை க்கு தன் அருமை பெண் காயத்திரியை சிவா விஷ்னு கோவில்லே கணேசனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார் ‘மாஸ்டர்’.கணேசனும் காயத்திரியும் அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள். உடனே ’மாஸ்டர் ரெண்டு பேருடைய தோளையும் தொட்டு எழுப்பி “நீங்க ரெண்டு பேரும் ரொம்ப காலம் சந்தோஷமா வழ்ந்துண்டு வரணும்”என்று ஆசீர்வாதம் பண்ணினார்.அவர் கண்களில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.அவர் அதை தோள் மேலே போட்டுக் கொண்டு துண்டினால் துடைத்துக் கொண்டார்.

‘மாஸ்டர்’ பழைய மாம்பலத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன வீடா வாடகைக்குப் பார்த்து, அதற்கு ஆறு மாசம் ‘அட்வான்ஸ்’ கொடுத்தார்.கூடவே ‘காஸ் கனெக்ஷனும்,காஸ் அடுப்பும்,தன் பெண்ணும் மாப்பிள்ளையும் சௌக்கியமாய் வாழ்ந்து வர வேண்டிய மளிகை சாமான்கள் எல்லாம் வாங் கிக் கொடுத்தார்.ஒரு நல்ல நாள் பார்த்து ‘பால் காய்ச்சி’ குடித்து விட்டு,அந்த வீட்டுக்குள் குடி வந்தார் கள் காயத்திரியும்,கணேசனும்,’மாஸ்டரும்’ அவர்கள் கூட இருந்தார்.மதியம் சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் தூங்கி விட்டு, நாலு மணிக்கு காப்பிக் குடித்து விட்டு கிளம்ப தயாரானார் ‘மாஸ்டர்’.கணேசன் அவரைப் பார்த்து “நான் இனிமே உங்களை’ மாமா’ன்னு கூப்பிடட்டுமா.அப்படி உங்களை மாமான்னு நான் கூப்பிடுறதாலே,நம்ம உறவு இன்னும் நெருங்கி வரும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று சொன் னதும் உடனே ‘மாஸ்டர்’ ”தாராளமா கூப்பிடுங்கோ.நீங்க இப்போ என் மாப்பிள்ளையாகி இருக்கேள். இனிமே நானும் உங்களை ‘வாங்கோ’,’போங்கோ’ன்னு தான் கூப்பிடறேன்” என்று சொன்னார்.

பொண்ணுக்குக் கல்யாணம் ஆன பிறகு ‘மாஸ்டர்’ தனியாக இருந்துக் கொண்டு வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டு வந்து தன் செலவுக்குப் போக மீதி பணத்தை சேர்த்து வைத்துக் கொண் டு இருந்தார்.அடிக்கடி அவர் தன் பொண்ணு வீட்டுக்குப் போய் அவர்களைப் பார்த்து விட்டு,பொண் ணீடம் தன்னிடம் மீதி இருந்த பணத்தைக் கொடுத்து விட்டு வந்துக் கொண்டு இருந்தார்.ரெண்டு மூனு தடவையாக இதைப் பார்த்து வந்த கணேசன் தன் மாமனாரைப் பார்த்து “மாமா,நீங்க பாவம் இந்த வயாசன காலத்லே,அந்த அடுப்படியில் கஷ்டப் பட்டு பணம் சம்பாதிச்சுண்டு, உங்க செலவு போக மீதி பணத்தை காயத்திரி கிட்டே கொடுத்து வரேள்.எனக்கு என்னவோ அது சரியா படலே. நீங்க உங்களுக்குன்னு கொஞ்சம் பணத்தை சேர்த்து வச்சுண்டு வாங்கோ.இப்போ நானும் காயத்திரி யும் நீங்க குடுக்கற உபரி பணத்தை சின்னவாளா இருக்கிற நாங்க செலவு பண்ணிடுவோம் .அப்புறம் நாளைக்கே எனக்கும் காயத்திரிக்கும் குழந்தைகள் பொறந்து எங்களுக்கு செலவு அதிகமாகி வந்தா, அப்போ உங்களுக்கு ஒரு அவசரம்ன்னா,நாங்க உங்களுக்கு பண உதவி பண்ண முடியாம கஷ்டப் படுவோம்.அதனாலே நீங்க உங்க கிட்டே மீறுகிற பணத்தை ஒரு பாங்லே போட்டு வச்சுக்கோங்கோ. நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ.நான் எங்க சௌகா¢யத்துகாகத் தான் சொல்றேன்” என்று மாமனாரிடம் பவ்யமாக சொன்னான்.’மாஸ்டர்’ மனம் நெகிழ்ந்து விட்டார்.’பணம்ன்னா பொண ம் கூட வாயைத் தொறக்கும்’ என்று இருக்கற இந்த காலத்திலே,இந்த மாதிரி நல்ல மனசு உள்ள ஒரு பையன் நமக்கு மாப்பிள்ளையா கிடைச்சு இருக்காரே’ என்று சந்தோஷப் பட்டார் ‘மாஸ்டர்’.

ஒரு மாசம் தான் ஆகி இருக்கும்.”மாமா,உங்களுக்கு அந்த ஆத்லே யாரும் இல்லையே.பேசாம இங்க வந்து எங்க கூட தங்கி இருங்களேன்”என்றான் கணேசன்.உடனே காயத்திரியும் தன் அப்பா வைப் பார்த்து “ஆமாம்ப்பா,நீங்க எங்களோடவே இருந்து வாங்களேன்”என்று சொன்னாள்.அதற்கு சிரித்துக் கொண்டே ‘மாஸ்டர்’ “வேணாம்மா, நீங்க சின்னவா.நீங்க ’ப்ரீயாக’ இருந்து வாங்கோ” என் று சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

‘இன்னைக்கு வரலஷ்மி நோம்பு’ என்று காயத்திரி சொன்னது ஞாபகம் வந்தது கணேசனுக்கு. அதனால் கணேசன் முதலாளியிடம் போய் “சார் இன்னைக்கு வரலக்ஷ்மி நோம்பு.நான் ஆத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா போகட்டுமா” என்று கேட்டான்.”சரி,போய் வாப்பா”என்று அவர் சொன்னதும் வீட்டுக்குக் கிளம்பினான் கணேசன்.வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி.தன் கணவர் வந்ததும்,அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு அவருக்கு சாதம் போட்டாள் காயத்திரி.கணேசனும் காயத்திரியும் நகமும் சதையும் போல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

கணேசனுக்கு நாலு வருஷம் ஆகியும் குழந்தையே பிறக்கவில்லை.’மாஸ்டர்’ மிகவும் கவலைப் பட்டார்.மாப்பிள்ளையையும் பொண்ணையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருக்கும் கோவில் களுக்கு எல்லாம் அர்ச்சனை எல்லாம் பண்ணிக் கொண்டு வந்தார்.நிறைய ஜோஸ்யர்களைப் பார்த்து மாப்பிள்ளை,பொண்ணு ஜாதகங்களை எல்லாம் காட்டி என்ன தோஷம் இருக்கு,அதுக்கு என்ன பரி காரம் பண்ண வேண்டும் என்று கேட்டு வந்தார்.ஞாயித்துக் கிழமைகளில் வாத்தியாரை அழைத்து வந்து பரிகார பூஜை,ஹோமம் எல்லாம் பண்ணி வந்தார்.நிறைய ‘ர¨க்ஷகள்’ வாங்கி பொண்ணுக்குக் கட்டி வந்தார்.கணேசன் தன்னையும் காயத்திரியையும் டாக்டர் கிட்டே காட்டி ‘டெஸ்ட்’ பண்ணிணா ன்.டாக்டர் ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் இல்லை,சீக்கிரமா குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார்.கணேசனும் காயத்திரியும் நிம்மதியாக இருந்து வந்தார்கள்..

கணேசனுக்கும் காயத்திரிக்கும் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகி விட்டது.’நமக்கு ஒரு பிள்ளைக் குழந்தை வேணும்னு நாம் வேண்டாத தெய்வம் இல்லே.அது நடக்கவே இல்லை.இப்போ நம் பொண்ணுக்கு குழந்தையே பொறக்கலையே.இது என்ன சோதனை பகவானே’ என்று தினமும் பகவானை வேண்டிக் கொண்டு வந்தார் ‘மாஸ்டர்’.அவர் வேண்டுதல் வீண் போகவில்லை.ஏழு வரு ஷம் ஆனதும் காயத்திரி பிள்ளை உண்டானாள்.’மாஸ்டருக்கு’ சந்தோஷம் தாங்கவில்லை.சின்ன பையன் போல் குதித்து தன் சந்தோஷத்தைத் தொ¢வித்தார்.கணேசனுக்கும் ரொம்ப சந்தோஷம்.காய த்திரியை தவறாம டாக்டர் கிட்டே அழைச்சுப் போய் காட்டி ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு வந்தான்.

பத்து மாசம் ஆனதும் காயத்திரிக்கு ஹாஸ்பிடலில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தங்க விகரகம் போல் அவ்வளவு அழகாக இருந்தது.காயத்திரிக்கும் கணேசனுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.”நமக்கு இவ்வளவு அழகான குழந்தை பொறக்கும்ன்னு நாம கனவிலும் நினைக்கலே காயத்திரி”என்று தன் சந்தோஷத்தை அடக்க முடியாமல் சொன்னான் கணேசன். “ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. குழந்தை நிஜமாக ரொம்ப அழகாகவும் நல்ல கலரா கவும் இருக்கு”என்றாள் காயத்திரி.ஹாஸ்பிடலில் பிறந்து இருந்த குழந்தையைப் பார்த்து “குழந்தை ரொம்ப அழகாகவும்,நல்ல கலராகவும்,இருக்கு காயத்திரி.ஒரு தங்க விக்ரகம் போல இருக்கா” என்று சொல்லி சந்தோஷப் பட்டார் ‘மாஸ்டர்’.காயத்திரியும் கணேசனும் குழந்தைக்கு என்ன பேர் வைக்க லாம் என்று யோஜனைப் பண்ணினார்கள்.இருவருக்கும் ‘லதா’ என்கிற பேர் ரொம்ப பிடிச்சு இருந்த தால் குழந்தைக்கு ‘லதா’ என்று பேர் வைக்கலாம் என்று முடிவு பண்ணினார்கள்.மூன்று நாள் கழித்து கணேசன் காயத்திரியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆத்துக்கு வந்தான்.

குழந்தைப் பிறந்து பத்து நாள் ஆனதும்,’மாஸ்டர்’ தனக்கு தொ¢ந்த ஒருவா¢டம் போய் ஆவி வந்த ஒரு மரத் தொட்டிலை வாங்கிக் கொண்டு தன் பொண்ணு வீட்டுக்கு வந்தார்.நிறைய பூ,பலூன், ‘ஸ்வீட்’,காரம்,எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து தொட்டிலை பூவால் அலங்காரம் பண்ணி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு அன்று சாயங்காலம் குழந்தையை தொட்டிலில் போட் டு கொண்டாடினார்கள்.’மாஸ்டர் வந்து இருந்த எல்லோருக்கும் அவர் வாங்கிக் கொண்டு வந்த ‘ஸ்வீ ட்’ காரத்தைக் கொடுத்து சந்தோஷப் பட்டார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *