கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 5,660 
 

அத்தியாயம்-1

வறுமைக் கோட்டிலே வாழ்ந்து வருவதே மிகவும் கஷ்டம்.அந்த வறுமை கோட்டின் கீழே வாழ்ந்து வந்த,வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் எத்தனையோ உண்டு.

அதில் ஒரு குடும்பம் தான் மணி ஐயர் குடும்பம்.அவர் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார்.பழைய மாம்பலத்தில் ஒரு சின்ன வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஒரே ஒரு சமையல் ரூம்,ஒரு முன் ஹால் பகுதிக்கு ஐனூறு ரூபாய் வாடகை கொடுத்து விட்டு,அவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவர் சம்பாதித்து கொண்டு வரும் சம்பளத்தில் அவர்,மணைவி சாந்தா,நாலு வயசு பிள்ளை கணேசன்,ரெண்டு வயசுப் பொண்ணு விமலா நாலு பேருக்கும் அரை வயிறு சாப்பாடு போட கூட முடியாமல் கஷடப் பட்டு வந்தார்.இந்த அழகில் அவர் மனைவி இன்னொரு உயிரை வயிற்றில் சுமந்து வந்தாள்.இதை மணி ஐயருக்கு சாந்தா ஐந்து மாசம் ஆகும் வரை சொல்லவே இல்லை.’வயிறு தொ¢ய ஆரம்பிச்சவுடன் அவள் தன் ஆத்துக்காரருக்கு இதைச் சொன்னால் போதும்’ என்று சொல்லா மல் சும்மா இருந்து வந்தாள்.கணவன் கொஞ்சம் சந்தோஷமாய் இருந்ததால் சாந்தா இந்த சமாசாரத் தைச் சொல்லலாம் என்று நினைத்து மெல்ல”விமலாவுக்கு ஒரு தங்கையோ,இல்லை ஒரு தம்பியோ இன்னும் கூடிய சீக்கிரத்லே நம்மாத்லே பொறக்கப் போறான்”என்று சொன்னாள்.

இதைக் கேட்டதும் மணிக்கு கோபம் கோபமாக வந்தது.”என்னடீ சொல்றே.நீ என்ன பொம்ம னாட்டீ.இப்படி வயித்தை சாச்சிண்டு வந்து மொள்ள சொல்றயே.நாம என்ன பணக்காராளா.மூனு குழந்தைகளே வளத்துவர.இப்பவே கைக்கும் வாய்க்கும் இருக்கு எனக்கு வரும் வருமானம்” என்று கத்தினார்.சாந்தா வாயைத் திறக்கவே இல்லை.தன் மனதில் ‘இதுக்கு நான் மட்டும் தானா காரணம். அவரும் தானே.இதை யோசிக்காமல் இவர் இப்படி கத்தறாரே’ என்று நினைத்து வருத்தப் பட்டாள் சாந்தா.சாந்தாவுக்கு ‘வயித்லே வளரும் குழந்தையை நாம் ஒன்னும் சொல்லக்கூடாது’என்று தோன் றியது.கொஞ்ச நேரம் கழிச்சு அவள் “வயித்லே இருக்கற குழந்தையை ஒன்னும் சொல்லாதீங்கோ. இந்த குழந்தை பொறக்கும் வேளை நம்ம கஷ்டம் எல்லாம் தீந்து,நாம சௌக்கியமா இருந்து வருவ மோ என்னவோ”என்று சொன்னதும் “ஆமாம்,இந்த குழந்தை பொறந்தவுடன்,நான் குபேரனா ஆகி விடபோறே னா என்ன.வீணா மனக் கோட்டை எல்லாம் கட்டிண்டு வராதே.”நாம ரெண்டு பேரும் இந்த குழந்தை வராம பாத்துண்டு இருக்கலாம்.ரெண்டு பேரும் தப்புப் பண்ணிட்டோம்.இப்ப சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லே”என்று கத்தி விட்டு தன் வேலைக்குக் கிளம்பினார் மணி.

மாதம் ஆகி விடவே மணி ஐயர் தன் மணைவி சாந்தாவை பக்கத்தில் இருந்த ஒரு கார்ப்பரே ஷன் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார்.அங்கு இருந்த டாக்டர் வேலைக்கு வர நேரம் ஆகி விட்டது.அங்கு இருந்த டாகடரின் உதவியாளர்களுக்கு என்ன பண்ணுவதே என்று தொ¢யவில்லை. டாக்டருக்கு போன் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் சாந்தாவுக்கோ வலி அதிகமாக ஆக வே அவள் கத்திக் கொண்டு இருந்தாள்.ஒரு வழியாக டாக்டர் வந்தவுடன் அங்கு இருந்த சிப்பந்திகள் சாந்தாவை ஆபரேஷன் அறைக்கு அழைத்து சென்றார்கள்.டாக்டர் எவ்வளவு முயற்சி பண்ணியும் குழ ந்தையை வெளியே எடுக்க முடியவில்லை.வலி அதிகமாகி சாந்தா மயக்கமாகி விட்டாள்.குழந்தை சாந்தா வயிற்றிலேயே இறந்து விட்டது.டாக்டரால் சாந்தாவையும் காப்பாற்ற முடியவில்லை.வெளியே காத்துக் கொண்டு இருந்த இருந்த மணியிடம் டாக்டர் வந்து ”நீங்க அந்த அம்மாவை ரொம்ப நேரம் கழிச்சு அழைச்சுகிட்டு வந்து இருக்கீங்க.குழந்தை அவங்க வயத்லேயே செத்துட்டது.அந்த அம்மா வையும் என்னால் காப்பாத்த முடியலெ”என்று சொல்லி விட்டு வேறு ஒரு பிரசவ ‘கேஸை’ கவனிக்கப் போய் விட்டார்.உடனே மணி “என்ன சொல்றேள்.நான் காலை மணி எட்டுக்கு எல்லாம் என் ஆத்துக் காரியே இங்கே அழைச்சுண்டு வந்து இருக்கேன்.நீங்கத் தான் ரொம்ப லேட்டா வந்தேள்.நீங்க லேட் டா வந்ததால் தான் அவ பிரசவத்தை உடனே பாக்க முடியலே.இதை விட்டுட்டு என்னை நேரம் கழிச் சு அழைச்சுண்டு வந்தேன்னு சொல்றேளே.நீங்க நேரத்தோடு வந்து இருந்தா,அவளையும் குழந்தை யையும் காப்பாத்தி இருக்க முடியும்”என்று சொல்லி கொண்டே டாக்டர் பின்னாலேயே ஓடினான்.

ஆனால் அங்கு இருந்த ஆட்கள் மணியை உள்ளே போகவிடாமல் தடுத்து “இனிமே ஓன்னும் பண்ண முடியாதுங்க.நீங்க அவங்க ‘பாடியை’ எடுத்துக்கிட்டு போங்க.இல்லேன்னா நாங்க அவங்க ‘பாடியை’ ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவோம்.அப்புறம் உங்களுக்கு அவங்க ‘பாடி’ கிடைக்க ரொம்ப நாளாகி விடும்.பணமும் செலவு பண்ண வேண்டி இருக்கும்.அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லி பயமுறுத்தினார்கள்.வேறு வழி இல்லாமல் மணி தன் மணைவியின் ‘பாடியை’ வாங்கிக் கொ ண்டு மயானத்திற்குப் போய் கொளுத்தி விட்டு,அவளுக்கு எல்லா ‘ஈமக் கிரியைகள்’ எல்லாம் செய்து விட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தார்.

வழி நெடுக ‘சாந்தா,நீ என்னமோ இந்த குழந்தை பொறக்கும் வேளை நம்ம கஷ்டம் எல்லாம் தீந்து நாம சௌக்கியமா வாழ்ந்து வருவோம்ன்னு கனவு கண்டுண்டு வந்தயே.ஆனா இந்த குழந்தை பொறக்கும் முன்னே உன்னையும் துணைக்கு அழைச்சுண்டு பரலோகம் போயிடுத்தே.நான் குடுத்து வச்சது அவ்வளவு தான்.இனிமே இந்த ரெண்டு குழந்தைகளையும் வச்சுண்டு நான் என்ன திண்டா டப் போறேனோ.அந்த பகவானுக்கு தான் தொ¢யும்.சாந்தா, நீ சௌக்கியமா பரலோகம் போய் சேந்திட் டே.உனக்கு ஒரு கஷ்டமும் இல்லே.இந்தக் குடும்பத்தை வச்சுண்டு கஷ்டப்படப் போறது எல்லாம் இனிமே நான் ஒருத்தன் தானே’ என்று மனதுக்குள் சொல்லி கொண்டு,மணி அழுது கொண்டே வீட் டுக்கு வந்து சேர்ந்தார்.

‘ரொம்ப நேரம் ஆகியும் அப்பா வீட்டுக்கு வரலையே’ என்று நினைத்து அவர் வரவுக்காக வாச லிலேயே காத்துக் கொண்டு இருந்தார்கள் கணேசனும்,விமலாவும்.அவர்கள் ரெண்டு பேரையும் பார் த்து ”உங்க அம்மாவை நான் கொளுத்திட்டு வந்து இருக்கேன்டா கணேசா.உங்க அம்மா நம்மை எல் லாம் அனாதையா தவிக்க விட்டுட்டு,இந்த லோகத்தே விட்டே போயிட்டாடா” என்று சொல்லி தலை யில் அடித்துக் கொண்டு ‘ஓ’வென்று அழுதார் மணி.கணேசனுக்கும் விமலாவுக்கும் அப்பா என்ன சொல்கிறார் என்றே புரியவில்லே.பேந்த பேந்த முழித்துக் கொண்டு இருந்தார்கள்.இருவரும் அப்பா வோடு சேர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் அழுதார்கள்.வீட்டுக்கு வந்த மணி ஐயர் கிணற்றடிக்குக் போய் தண்ணீர் சேந்தி,தன் தலையில் கொட்டிக் கொண்டார்.அவர் பத்து வாளி தண்ணி கொட்டிக் கொண்டும் அவர் உள்ளத்தில் இருந்த சூடு தணியவே இல்லை.அவர் உள்ளம் கொதித்துக் கொண்டு தான் இருந்தது.குழந்தைகளை மட்டும் சாப்பிடச் சொல்லி விட்டு,மணி பாயைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டார்.அவர் மனமும்,உடலும் சொல்ல முடியாத அளவுக்கு அசதியாக இருந்தது.அடுத்த நாள் மணி எழுந்து தன் குழந்தைகளுக்கு ‘ப்ரூ’ கா·பி போட்டு கொடுத்து விட்டு,தானும் குடித்து விட்டு வேலைக்கு கிளம்பினார்.சாந்தாவுக்கு வேறு ஒரு ‘காரியமும்’பண்ண அவா¢டம் பணம் இல்லை. அவகாசமும் இல்லை.’இந்த ஆத்லே மூனு பேருடைய பாழும் வயிறு இருக்கே.வேலைக்கு போனா தானே ஏதாவது சாப்பிடக் கிடைக்கும்.மாசம் ஆனா சம்பளமும் வரும்’ என்று நினைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்துக் கொண்டு ‘மெஸ்’ வேலைக்கு போய்க் கொண்டு இருந்தார் மணி.

‘மெஸ்’ வேலை முடிந்த பிறகு வீட்டுக்கு வரும் போது ‘மெஸ்ஸில்’ மீதி இருந்த சாதம்,சாம் பார்,கொஞ்சம் கறிகாயும் எடுத்துக் கொண்டு,வீட்டுக்கு வந்து கணேசனுக்கும்,தங்கை விமலாவுக்கும் சாப்பிடக் கொடுப்பார் மணி.இந்த ஒரு வேளைதான் ரெண்டு பேரும் வயிறார சாப்பிட்டு விட்டு தண் ணீர் குடிப்பார்கள்.அவ்வளவு தான்.இத்துடன் அடுத்த நாள் அவர் கொண்டு வரும் மீதி சாப்பாடு வரும் வரையிலும் பட்டினி தான் கணேசனுக்கும் விமலாவுக்கும்.மற்ற நேரங்களில் இருவரும் வெறுமனே ‘பிஸ்கட்டை’ சாப்பிட்டு விட்டு,பச்சை தண்ணீரை குடிப்பார்கள்.

ஐந்து வயது வரை கணேசன் வீட்டில் தன் தங்கை விமலாவுடன் இருந்து வந்தான்.அவளை தூங்க வைப்பான்.அவள் எழுந்ததும் அவளுக்கு விளையாட்டு காட்டி அவள் அழாமல் பார்த்துக் கொள்வான்.ரொம்ப அழுதால் கணேசன் விமலாவை தூக்கிக் கொண்டு போய் அவன் அப்பா இருக் கும் ‘மெஸ்’ஸ¤க்குப் போய் அவா¢டம் காட்டுவான்.’இந்த ஜென்மத்லே இந்த ரெண்டு குழந்தைகளை யும் கடைத் தேத்தினா போதும்’ என்று நினைத்து,அவர் தன் கல்யாணஆசையை அடக்கி கொண்டு, இன்னொரு கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் ‘சன்னியாசி’ போல் வாழ்ந்து வந்தார் மணி ஐயர்.

ஆறு வயது ஆனதும் மணி கணேசனை பக்கத்தில் இருந்த ஒரு கார்பரேஷன் பள்ளியில் சேர் த்தார்.கணேசன் பள்ளிக்கு போக ஆரம்பித்தவுடன் மணி தன் பெண் விமலாவை பக்கத்து வீட்டில் இருக்கும் மாமியிடம் விட்டு விட்டுப் போய்,தனக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்.அதற்கு பிரதி உபகாரமாக தன் ‘மெஸ்’லே தரும் பழைய ‘ஸ்வீ ட்டுகளை அந்த மாமிக்குக் கொடுத்து வந்தார் மணி.பள்ளிக்குப் போய் வருவானே ஒழிய,கணேசனுக் கு படிப்பில் நாட்டமே போகவில்லை.எப்போதும் கோலி ஆடுவது,பம்பரம் ஆடுவது,இல்லை பக்கத்தில் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது என்று தன் பொழுதைப் போக்கி வந்தான் கணேசன்.மணி பல தடவை “கணேசா நன்னா படிடா,நன்னா படிடா,இல்லாட்டா,நீ என்னை போல ஒரு சர்வர் வேலைக்கு போக வேண்டி இருக்கும்.படிச்சா ஏதாவது நல்ல வேலை உனக்குக் கிடைக்கும்.நன்னா படி” என்று சொல்லி வந்தார்.ஆனால் கணேசன் கவலையே படாமல் விளையாட்டிலேயே தன் கவன த்தை செலுத்தி வந்தான்.நாலாம் வகுப்பு வரை பா¢¨க்ஷகள் இல்லாத்ததால் கணேசன் ‘பெயிலா’ ‘பாஸா’ என்று மணிக்குத் தொ¢யவில்லை.’பையன் நன்னா படிச்சு வறான்’என்று மணி நினைத்து வந் தார்.ஐந்தாம் வகுப்பு படித்து வந்த கணேசன் பள்ளிக்குப் போகாமல்,பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் டீ.வீ.கடையில் ஒளி பரப்பாகிக் கொண்டு வரும் ‘கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச்சைப்’ பார்த்துக் கொண்டு இருப்பான்.’மாட்ச்’ முடிந்ததும் அருகில் இருக்கும் கார்பரேஷன் மைதானத்தில் தான் பார்த்த கிரிக்கெ ட் ‘மாட்சில்’ ஆட்டக்காரர்கள் ஆடினபடி ஆடப் பழகுவான்.இவனைப் போன்ற ரெண்டு,மூனு,கிரிகெ ட் பயித்தங்கள் அங்கே இவனுடன் சேர்ந்து ஆட வரும்.ஆடி முடிந்து விட்டுப் பிறகு வீட்டுக்கு வந்தா ல் கணேசனுக்கு தூக்கம் தூக்கமாய் வரும்.பகல் பூராவும் நின்றுக் கொண்டு கிரிக்கெட் ‘மாட்ச்’ பார்த் து விட்டு,மறுபடியும் விடாமல் சாயங்காலமும் அவன் கிரிகெட் ஆடினால்,அவனுக்கு உடம்பில் அசதி ஏற்படாமலா இருக்கும்.அப்பா ‘மெஸ்ஸில்’ இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை பாதி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே கணேசன் தட்டிலேயே தூங்கி விழுவான்.அப்பா தூங்கினவுடன் கணே சனும் உடனே தன் பாடப் புஸ்தகங்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு தூங்கப் போய் விடுவான்.

‘கணேசன் பள்ளிக்கு சரியாகவே வருவதில்லை’ என்று அவன் ‘க்ளாஸ்’ வாத்தியார் அவன் புஸ்தகத்தில் எழுதி அனுப்புவார்.ஆனால் கணேசன் அதை தன் அப்பாவிடம் காட்டுவதே இல்லை. வருடாந்திர பா¢¨க்ஷகள் ஆரம்பித்தது.கணேசன் ஒரு பா¢¨க்ஷயும் சரியாக எழுதவில்லை.அப்பா கேட் டதற்கு “நான் பா¢¨க்ஷகளை எல்லாம் நன்னா எழுதி இருக்கேன்னு’ பொய் சொல்லி வந்தான்.ஸ்கூலி ¢ல் ‘ரிஸல்ட்’வந்தது.கணேசன் ‘பெயிலாகி’ இருந்தான்.இதை கேட்டதும் மணிக்கு கோவம் கோவமா க வந்தது.கோவத்தில் அவர் கணேசனை நன்றாக அடித்து விட்டார்.கொஞ்ச நேரம் போனதும் மணி மெ ல்ல அவனை சமாதானப் படுத்தி,”இந்த வருஷமாவது நன்னாப் படிச்சு பாஸ் பண்ணுடா.நீ படிச்சு ‘பாஸ்’ பண்ணா தாண்டா உனக்கு ஒரு நல்ல வேலைக் கிடைக்கும்”என்று சொல்லி அவனை மறுபடி யும் அவனை ஐந்தாம் வகுப்பில் சேர்த்தார்.இந்த வருஷமும் கணேசன் தன் பாடங்களை சரிவர படிக் காமல் சதா கிரிக்கெட் ஆடி வந்துக் கொண்டு இருந்தான்.

வருடாந்திர பா¢¨க்ஷகள் வந்தன.பாடங்கள் படித்து இருந்தால் தானே கணேசன் பரிக்ஷை நல்லா எழுத முடியும்.இந்த வருஷம் ‘ரிஸல்ட்’ வந்ததும் கணேசன் மறுபடியும் ‘பெயில்’ ஆகி இருந் தான்.மணி மறுபடியும் கோவத்தில் அவனை நன்றாக அடித்தார்.கணேசனை மூன்று நாள் பட்டினி போட்டார்.கணேசனும் ஒன்னும் சாப்பிடாமல் சுருண்டு படுத்துக் கொண்டு இருந்தான்.இதைப் பாத்த மணிக்கு மனசு கேட்கவில்லை.அவனை மெல்ல எழுப்பி,நன்றாகக் கண்டித்து,சாப்பாடும் போட்டு மறுபடியும் பள்ளியில் அதே ஐந்தாம் ‘க்ளாஸில்’ சேர்த்தார்.”இந்த வருஷம்,நீ பெயில் ஆனா நான் மறு படியும் உன்னை பள்ளிலே சேக்க மாட்டேன் கணேசா.எங்காவது வேலைக்கு தான் நீ போகணும். நீ ஒழுங்காகப் படிச்சு முன்னுக்கு வாடா.ஒழுங்காக படிடா” என்று நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை பள்ளிக்கு அனுப்பி வைத்தார் மணி.‘நாம ஒரு கிரிகெட் வீரனா ஆகி நன்னா சம்பாத்திச்சு வரலாம். இதை விட்டுட்டு யார் வருஷம் பூராவும் எல்லா பாடத்தையும் படிச்சு மார்க் வாங்கி பாஸ் பண்ணி, அடு த்த வருஷமும் படிச்சு பாஸ் பண்ணி,இப்படியே பண்ணண்டாவது ‘க்லாஸ்’ வரை ‘பாஸ்’ பண்ணிட்டு அப்புறமா ஒரு வேலை தேடி நாம முன்னுக்கு வந்தா மட்டும்,என்ன பொ¢சா சம்பளம் வரப் போறது’ என்று நினைத்து படிப்பின் மேல் அவனுக்கு அலுப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.இந்த வருஷமும் எல்லா பா¢¨க்ஷகளில் ‘பெயில்’ ஆனான் கணேசன்.

’இனிமேல் கணேசனைப் பள்ளிக்கு அனுப்புவது வீண் காரியம்’என்று எண்ணி மணி கணேச னை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார்.அவனுக்கு வயசு பதினாலு ஆகி விட்டது.நன்றாக ஆடி விட்டு,நிறைய உடல் பயிற்சி செய்து வந்ததினாலும்,அப்பா கொண்டு வரும் சாப்பாட்டை சாப்பிட்டு வந்ததினாலும் கணேசன் உடம்பு கட்டு மஸ்தாக இருந்தது.’இனிமேலே அவனை நாம அடிச்சு, மிரட்டி எல்லாம் பள்ளிக்கு அனுப்ப முடியாது’ என்கிற முடிவுக்கு வந்தார் மணி.அவர் யோஜனைப் பண்ணினார்.‘இவனை நாம ஒரு வேலைக்குத் தான் அனுப்பி,இவனை முன்னுக்குக் கொண்டு வர ணும்’ என்கிற முடிவுக்கு வந்தார் மணி.அவர் கணேசனை கேட்க்கவே இல்லை.ஒரு நாள் மணி தான் வேலை செய்யும் ‘மெஸ்’லே’ ‘ஸ்வீட்’போடும் ‘மாஸ்டரிடம்’ கணேசனை உதவி ஆளாக வேலைக்கு சேர்த்து விட்டார்.வேண்டா வெறுப்புடன் அந்த ‘ஸ்வீட் மாஸ்டரிடம்’ வேலைக்குப் போய் வந்துக் கொண் டு இருந்தான் கணேசன்.அவனுக்கு நாள் பூராவும் நெருப்படியில் வேலை செய்து வருவது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.’இப்போ எனக்கு கிரிகெட் ஆட நேரம் கிடைக்கலே.படிப்பும் இல்லேன்னு ஆயிடுத்து.நாள் பூராவும் நெருப்படியில் இருந்து வறது தான் மிச்சம்.மாசம் முடிஞ்சதும் ஏதோ கைலே கொ ஞ்சம் சம்பளம் வறது.அந்த திருப்தி தானே நமக்கு மிஞ்சியது’ என்று நினைத்து வருத்தபட்டான் கணேசன்.’தன் பிள்ளை தான் படிக்கலே,விமலாவையாவது நாம படிக்க வைக்கலாம்’என்று எண்ணி விமலாவை பள்ளியிலே சேர்த்தார் மணி.விமலா நன்றாகப் படித்து வந்தாள்

”விமலாவுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணிட்டு,நீ நன்னா படிச்சு,ஒரு நல்ல வேலையும் உனக் கு கிடைச்சு இருந்தா,உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து ஒரு கல்யணத்தே பண்ணிட்டு,என் வயசான காலத்லே நிம்மதியா ஆத்லே உக்காந்துண்டு,ரெண்டு வேளை வயிராற சாப்பிட்டுண்டு வரலாம்ன்னு நான் நினைச்சேன்.அது எனக்கு இல்லாம பண்ணிட்டயேடா கணேசா.இப்ப நான் உழைச் சா தானே நாம மூனு பேரும் சாப்பிடமுடியும்.விமலா கல்யாணம் பண்ணீண்டு வேறே ஆத்துக்கு போ றவ தானே”என்று அலுத்துக் கொள்வார் மணி.கணேசன் எதையும் தன் காதில் போட்டுக் கொள்ளமல், தன் விதியை நொந்துக் கொண்டு ஒரு ‘மெஷின்’ போல வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந் தான்.

விமலாவுக்கு பள்ளி லீவு.அப்போது.வீட்டிலேயே வெறுமனே அவள் இருந்து வந்தாள்.அன்று ஞாயிற்றுக் கிழமை.கணேசன் கிரிக்கெட் ஆடப் போய் இருந்தான்.மணிக்கு அன்னைக்கு ஹோட்டல் லீவு.அவருக்கு யாரோ ஒரு ‘·ப்ரெண்ட்’வீட்டுக்கு அவசரமாக போக வேண்டி இருந்தது.’விமலா ஆத் லே தனியாத் தானே இருக்கா,அவளையும் சைக்கிள்ளே அழைச்சுண்டு போய் வரலாமே’ என்று மணி நினைத்தார்.விமலாவை சைக்கிளின் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு மணி ‘·ப்ரெண்ட்’ வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார்.அவர் தெரு முனைத் திருப்பத்தில் போய்க் கொண்டு இருக்கும் போது பின்னாலே இருந்து வந்த ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்து,சைக்கிள் மீது மோதி மணியையும், விமலாவையும் கீழே தள்ளிவிட்டது.மோதின பிறகு டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டு போய் விட்டான்.அடிப்பட்ட இடத்திலேயே மணியும்,விமலாவும் ரத்த வெள்ளைத்தில் பா¢தாபமாக இறந்து விட்டார்கள்.அங்கு இருந்தவர்கள் மணி ‘பாடி’யையும்,விமலா ‘பாடி’யையும் ‘அமரர் கிடங்கு’ க்கு அனுப்பி விட்டார்கள்.விஷயம் கேள்விப் பட்டு கணேசன் விபத்து நடந்த இடத்திற்கு ஓடிப் போய் பார்த்தான்.விபத்து நடந்த இடத்தின் எதிரே இருந்த ஒரு பெட்டிக் கடைகாரர்,மணி ஓடிவந்து அங்கு இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்து “யாரு தம்பி நீ”என்று கேட்டார்.மணி தன் பேரை சொல்லி விட்டு “இப்போ இங்கே ‘ஆக்சிடெண்ட்’ நடத்தவா¢ன் பையன்”என்று சொன்னதும் அந்த பெட்டி கடைக்காரர் மணி இடம்“அவங்க ரெண்டு பேர் உடம்பையும் ‘அமரர் கிடங்கு’க்குப் அனுப்பி விட்டாங்க”என்று சொன்னார்.கணேசனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

கணேசன் கவலைப் பட்டு அங்கு இருந்து கிளம்பி ‘அமரர் கிடங்கு’க்குப் போய்,அவர்கள் கே ட்ட பணத்தைக் கொடுத்து விட்டு,அப்பா உடலையும்,தங்கையின் உடலையும்,வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த மயானத்துக்கு போய் ரெண்டு பேர் உடலையும் ‘தகனம்’ பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தான்.

அவன் அப்பாவையும் தங்கையையும் கொன்ற தண்ணீர் லாரி டிரைவர் யார் என்று கணேசனால் கண்டு பிடிக்கவே இல்லை.அவன் போலீஸில் ஒரு புகார் கொடுக்கப் போனான்.அவன் புகாரை போலீ ஸ் எடுத்துக் கொள்ள மறுத்தது.‘விபத்து நடந்த இடம் இந்த போலீஸ் ஸ்டேஷனின் எல்லைலே இல் லே.பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைலே இருக்குது’ என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.உட னே கணேசன் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகாரைக் கொடுத்தான்.அவர்களும் அந்தப் புகாரை வாங்காமல் வேறு ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்தார்கள்.கணேசனுக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.’ஒரு வேளை அந்த தண்ணீர் லாரி டிரைவர் விலாசம் நமக்கு கிடைச்சா அப்பா,தங்கை,இரண்டு பேரையும் கொன்னதுக்கு ஏதாவது ‘காம்பென்ஷேன்’ கிடைக்குமே’ என்று நப்பாசைப் பட்டு கணேசன் அந்த லாரி டிரைவரைத் தேடித்,தேடி அலைந்தான்.ஆனால் அந்தத் தண் ணீர் லாரியைப் பத்தின எந்த விவரமும் அவனுக்குக் கடைசி வரை கிடைக்கவே இல்லை.

கணேசன் அடிக்ககடி லீவு போட்டு கணேசன் இரண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலையாய் அலைந்து வந்தான்.கணேசன் கஷ்டப் படுவதைப் பார்த்த ஒரு போலீஸ் ஸ்டேஷன்,அவன் கொடுத்த புகாரை ஏற்றுக் கொள்ள முன் வந்தது.கணேசன் மிகவும் சந்தோஷப் பட்டான்.ஆனால் அவர்கள் கணேசனிடம் ஆயி ரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டார்கள்.கணேசனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால் அவன் போலீஸ் ஸ்டேஷன் போவதை நிறுத்தி விட்டான்.லாரி தேடுவதையும் விட்டு விட்டான்.

‘வரும் கொஞ்ச சம்பளத்தில் 500 ருபாய் கொடுத்து அவன் இருக்கும் வீட்டை இனிமே வைத் துக் கொள்ள முடியாது’ என்று எண்ணினான் கணேசன்.அந்த வீட்டை காலி பண்ணி விட்டு, ஒரு ஆண்கள் தங்கும் ‘ஹாஸ்டலில்’ ஒரு ‘ரூமை’ வாடகைக்கு பார்த்தான்.அங்கும் வாடகை அதிகமாக இருக்கவே கணேசன்,ரெண்டு பேர் தங்கும் ஒரு அறையை 100 ரூபாய் வாடகைக்கு எடுத்துக் கொ ண்டான்.கணேசன் அந்த ‘ரூமில்’இன்னொருவனுடன் இருந்து வந்தான்.தனக்கு வந்த சம்பளத்தில் நூறு ரூபாயை வாடகைக்கு கொடுத்து விட்டு,சிக்கனமாக செலவு செஞ்சி வந்து,மீதி சம்பளத்தை பாங்கில் போட்டு வைத்து சேர்த்து வைத்துக் கொண்டு வந்தான்.கணேசன் அடிக்கடி லீவு எடுத்ததா லும்,வேலையில் அதிக கவனம் இல்லாமல் வந்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த ‘மெஸ்’ முதலா ளீக்கு கோவம் வந்தது. ஒரு நாள் காத்தாலே கணேசன் ‘மெஸ்’ வேலைக்கு வந்த போது,அந்த முத லாளி கணேசனை உள்ளே போக விடாமல் நிறுத்தி “இது பார் கணேசா.நான் இங்கே ஒரு ‘மெஸ்’ நடத்தி வரேன்.இது தர்ம சத்திரம் இல்லே.நீ ஒழுங்கா வேலைப் பண்ணு.இல்லாட்டா நான் வேறு ஆளை இங்கே வேலைக்கு வச்சுக்கப் போறேன்.ஏதோ உங்க அப்பா சொன்னாரேன்னு தான் நான் உன்னை வேலைக்கு வச்சுண்டேன்.நீ அடிக்கடி லீவு எடுக்கறே.வேலையிலே துளிக்குட அக்கறை கா ட்டறது இல்லே.உங்க ‘மாஸ்டர்’ என் கிட்டே,உன்னே வேலைலே இருந்து எடுத்து விட்டு வேறே ஆளைப் போட சொன்னார்”என்று சொல்லி மிரட்டினார்.கணேசன் மிகவும் பயந்து விட்டான்.

‘இந்த வேலையும் போய் விடப் போறதே’ என்று பயந்து ”இல்லே மாமா,நான் இனிமே ஒழுங்கா வேலை பண்ணி வறேன்.நான் லீவு அதிகமா எடுக்க மாட்டேன்.வேலைக்கு சரியா வறேன்.என்னை மன்னிச்சுக்கோங்கோ.என்னை வேலைலே இருந்து மட்டும் எடுத்து விடாதீங்கோ.எனக்கு நீங்க சம் பளம் குடுத்தா தான் நான் வாழ்ந்துண்டு வர முடியும்”என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ் சினான்.”சரி, நீ இனிமே ஒழுங்கா வேலைக்கு வரணும் தொ¢யறதா.வேலைலே இன்னும் அதிக கவனம் செலுத்தி வந்து ‘ஸ்வீட்’ போடற வேலைகளே எல்லாம் கத்துண்டு வரணும்” என்று கடுமையாகச் சொல்லி கணேசனை உள்ளே வேலைக்குப் போக அனுமத்தித்தார்.

’அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே கணேசன் உள்ளே வேலைக்குப் போனான். ‘இது வரைக்கும் ‘மெஸ்’ முதலாளி தன்னை வெளியே போக சொல்லாம,மறுபடியும் வேலை குடுத்தா ரே என்று சந்தோஷப் பட்டான் கணேசன்.இதற்காக அவன் கடவுளை வேண்டிக் கொண்டான். ‘அனாதையா இருக்கும் நமக்கு இந்த வேலையும் இல்லேன்னா,நம்ம கதி என்ன ஆறது’ என்ற பயம் கணேசனுக்கு வந்து விட்டது.பதில் ஒன்றும் பேசாமல் முதலாளி சொன்ன எல்லா வேலைகளையும் முகம் கோணாமல் செய்து வந்தான் கணேசன்.அவனுக்கு வாழக்கையே வெறுத்து விட்டது.நடைப் பிணம் போல் வேலைக்குப் போய் வந்தான்.லீவு நாட்களில் அவன் நண்பர்கள் அவனை கிரிக்கெட் ஆடக் கூப்பிட்டார்கள்.ஆனால் அவனுக்கு இப்போது கிரிகெட் ஆடவேப் பிடிக்கவில்லை.

‘அப்பா நம்மைப் பாத்து படிக்கலையேடா,படிக்கலையேடான்னு சொல்லி வருத்தப் பட்டார். நான் படிச்சுட்டு வேலைக்குப் போனா,அவர் வயசான காலத்லே நிம்மதியா உக்காந்து சாப்பிடலாம் ன்னு தானே ஆசைப் பட்டார்.அவர் ஆசைப்பட்டதிலே எந்த தப்பும் இல்லையே.நான் தானே பாழும் கிரிக்கெட்டை ஆடி வந்து,என் பாடங்களே படிக்காம அவரை ஏமாத்தினேன்.நான் படிக்காம சதா கிரி கெட் ஆட்டமே என் ‘உயிர் நாடி’ன்னு நினைச்சு,என் வாழ்க்கையே நாசம் பண்ணிண்டு வந்தேன். அவர் ஆசைலே மண்ணை அள்ளிப் போட்டுட்டேன்.ஓரு வேளை நான் நன்னா படிச்சு இருந்தா, அவர் அந்த சந்தோஷத்லே,என்னோட இன்னும் நிறைய வருஷங்க வாழ்ந்துண்டு வந்து இருப்பாரோ என்னவோ.அவர் சாவுக்கு நான் படிக்காம இருந்து வந்தது ஒரு காரணமா இருக்கும்’என்று நினைத்து கணேசன் அன்றில் இருந்து கிரிக்கெட் ஆடப் போகவில்லை.’என் அப்பா எனக்கு வாங்கிக் குடுத்த வேலைலே நான் மும்முறமா இருந்துண்டு,எல்லா வேலைகளையும் நன்னா கத்துண்டு வாழ்க்கைலே நான் முன்னுக்கு வர பாடு படப் போறேன்.இந்த சங்கல்பத்தை பண்ணிண்டு வாழ்ந்து வந்து,என் வாழ் க்கைலே முன்னுக்கு வருவேன்’என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் கணேசன்.அவன் மனம் இப் போது நி¢ம்மதியாக இருந்தது.அவன் தான் வேலை செய்து வந்த ‘ஸ்வீட் மாஸ்டரிடம்’ மிக அடக்கமா கவும் மா¢யாதையாகவும் நடந்துக் கொண்டு வர ஆரம்பித்தான்.

கணேசன் இப்படி தலை கீழாக மாறி மிகவும் நல்ல பையன் போல் நடந்து வந்ததை கவனித்த ‘ஸ்வீட் மாஸ்டர்’ கணேசனைப் பாத்து “கணே சா,நீ முன்னே போல் ஏனோ தானோன்னு இல்லாம, இப்போ ரொம்ப மாறி இருக்கியே. ஏம்ப்பா இந்த மாத்தம் உன் கிட்டே”என்று ஆச்சரியத்துடன் கேட் டார்.“நான் உங்க கிட்டே உண்மையே சொல்றேன் ‘மாஸ்டர்’.என் அப்பாவும்,தங்கையும் விபத்துலே செத்துப் போன பிறகு எனக்குன்னு யாரும் இல்லை ன்னு ஆயிடுத்து.இனிமே நான் என் கால்லே தான் நிக்கணும்.எனக்கு படிப்பும் ஏறலே அதனாலே இந்த ‘ஸ்வீட்’ போடும் வேலையே கவனமாக கத்துண்டு,முன்னுக்கு வரணும்ன்னு நான் தீர்மானம் பண்ணிட்டேன்.நீங்க தான் எனக்கு எல்லா ‘ஸ்வீட்டுகள்’ போடும் விதத்தை கத்து தரணும்.இனிமே நீங்க தான் என் குரு”என்று சொல்லி விட்டு அழுக்கு நிறைந்த சமையல் அறை என்று கூடப் பார்க்காமல் அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணினான் கணேசன்.அவன் தோ¨ளை த் தொட்டு எழுப்பினார் ‘ஸ்வீட் மாஸ்டர்’.கணேசன் சொன்ன வார்த்தைகள் அவர் மனதை வெகுவாக பாத்தித்து விட்டது.அவர் கண்கள் குளமாயிற்று.

“கணேசா,எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீஒன்னும் கவலைப் படாதே.நான் உன்னை இன்னும் ஐஞ்சு வருஷத்லே ஒரு நல்ல ‘ஸ்வீட் மாஸ்டராக’ ஆக்கிக் காட்டறேன்.நான் சொல் வதை எல்லாம் மிக கவனமாக கேட்டுண்டு வரணும்.நீ ஒரு 200 பக்க நோட்டு ‘புக்’ வாங்கிண்டு வா. நான் சொல்லும் எல்லா விஷயங்களையும் அந்த நோட்டு புக்லே எழுதிண்டு வா.எனக்கு பையன் யா ரும் இல்லை.ஒரு சின்னப் பொண்ணு தான்.அவ இந்த ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக்கு வர முடியாது. எனக்கும் வயசு ஆயிண்டு வருது.எனக்கு அப்புறம் இந்த தொழில் நுணுக்கங்கள் எல்லாம் என்னோடு போயிடும்.உனக்கு நான் அவைகளை எல்லாம் நான் நன்னா கத்துக் குடுத்தா,நீயாவது எனக்கு அப்பு றமா இந்த தொழிலை செஞ்சு வருவே.எனக்கே மூனு மாசம் முன்னாடி ரொம்ப வருத்தமா இருந்தது.நீ எனக்கு உதவி ஆளாக வந்தும்,நான் செய்யும் எந்த வேலையையும் நீ கவனிக்காம உன் பாட்டுக்கு இருந்துண்டு சம்பளம் மட்டும் வாங்கிண்டு இருந்தே.நான் ‘மெஸ்’ முதலாளி கிட்டே ரெண்டு வாரம் முன்னால் கூட ‘முதலாளி,என் கிட்டவேலை செய்யும் கணேசன் என்கிற பையன் வேலைலே துளிக் கூட இஷ்டம் இல்லாம வேலை செஞ்சு வரான்.எனக்கு வேறு ஒரு நல்ல பையனாக உதவிக்கு போடு ங்க.அவனாவது இந்த ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலையே ஒழுங்காவும்,இஷ்டபட்டும்,கத்துண்டு வருவான். எனக்கு அப்புறமா அவன் உங்களுக்கு அவன் ‘ஸ்வீட் மாஸ்டராக’ வேலை பண்ணி வர உபயோகப் படுவான்.இந்த பையனை மாத்திடுங்க.எனக்கும் வயசு ஆயிண்டு வருது.நான் இந்த தொழிலை யாரா வது ஒரு புது பையனுக்கு கத்துக் குடுக்கறேன்’ன்னு சொன்னேன்.அவரும் ‘சரி ‘மாஸ்டர்’,நான் உங்க ளுக்கு வேறு நல்ல பையனை இன்னும் பத்து நாள்ளே ஏற்பாடு பண்றேன்”ன்னு சொன்னார்.ஆனா நான் இப்போ அவர் கிட்டே போய் ‘முதலாளி எனக்கு வேறு பையன் வேணாம். கணேசனே எனக்குப் போறும்.அவன் இப்போ மனம் திருந்தி என் கிட்டே வேலைகளையும் கத்துக்கறேன்’ என்று சொல்லி ட்டான்.நான் அவனுக்கே என் வேலைகளே எல்லாம் சொல்லிக் குடுக்கறேன்’ன்னு சொல்லிடறேன் கணேசா” என்று சொன்னதும் கணேசனுக்கு அவர் வார்த்தைகள் சந்தோஷத்தைக் கொடுத்தது.

”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாஸ்டர்”என்று தன் நன்றியைத் தொ¢வித்தான் கணேசன்.அவன் தினமும் ‘ஸ்வீட் மாஸ்டர்’ சொன்னது போல ஒரு 200 பக்க நோட்டு புக்கில்,’மாஸ்டர்’ ஒவ்வொரு ‘ஸ்வீட்டுக் கும்’ என்ன சாமான்,என்ன அளவு போடுகிறார் என்று கவனமாக எழுதிக் கொண்டு வந்தான்.அவன் கவனமாக வேலை செய்து வந்து,எல்லா விதமான ‘ஸ்வீட்டுகள்’ பண்ணும் விதத்தை நன்றாகக் கற்று வந்தான்.

ஒரு வருஷம் போனதும் ‘ஸ்வீட் மாஸ்டர்’ கணேசனை ஒரு ஸ்வீட்டை கொஞ்ஜமாக பண்ணச் சொன்னார்.கணேசன் ‘ஸ்வீட்மாஸ்டர்’ சொன்ன ‘ஸ்வீட்டை’அவரே மெச்சும் படி மிக நன்றாக செய்து காட்டினான்.’ஸ்வீட்மாஸ்டருக்கு’ மிகவும் சந்தோஷமாய் இருந்தது.கணேசனை மிகவும் பாராட்டினார். ஒரு ‘ஸ்வீட்’ செய்யும் போது,ஏதாவது கொஞ்சம் தப்பு வந்து,அந்த ‘ஸ்வீட்’ சரியாக வரா விட்டால், என்ன செய்து அந்த ‘ஸ்வீட்டை’ சரி செய்வது,மறுபடியும் அந்த ‘ஸ்வீட்டுகளை’ கொஞ்சம் மாத்திப் பண்ணி வேறே ‘ஸ்வீட்’ பண்ணுவது எப்படி,போன்ற எல்லா நுணுக்கங்களையும் கணேசனுக்குக் கற்றுத் தந்தார் அந்த ‘ஸ்வீட் மாஸ்டர்’.கணேசன் அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் கவனமாகக் கற்றுக் கொண்டு வந்தான்.மாஸ்டருக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

ஐந்து வருஷங்கள் ஆகி இருக்கும்.எல்லா வேலைகளையும் நன்றாக கற்று கணேசன் ஒரு முழு ‘ஸ்வீட்மாஸ்டராக’ ஆகி விட்டான்.தான் தனியே ‘ஸ்வீட் மாஸ்டராக’ வேலை செய்யும் நம்பிக்கை அவனுக்கு வந்து விட்டது.இந்த ‘மாஸ்டரிடம்’ இருந்துக் கொண்டு கம்மி சம்பளம் வாங்கி வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை.‘ஏன் நாம் தனியாக போய் ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலை செய்யக்கூடாது.நாம இதை ஏன் நம்ம ‘மாஸ்டரிடம்’ கேக்கக் கூடாது’ என்று எண்ணினான் கணேசன்.¨தா¢யத்தை வர வழைத்து கொண்டு,ஒரு நாள் கணேசன் ‘ஸ்வீட் மாஸ்டரிடம்’ “மாஸ்டர்,நான் கேக்கறேன்னு நீங்க தப் பா எடுத்துக்காதீங்கோ.நான் எத்தனை நாள் இப்படி கம்மி சம்பளத்துக்கு வேலை செய்யறது.நான் ஒரு ‘ஸ்வீட்மாஸ்டரா’ வேறு எங்காவது வேலைக்கு சேந்தா,எனக்கு இன்னும் அதிகமா சம்பளம் வருமே. நான் வேறே இடத்லே ‘ஸ்வீட் மாஸ்டரா’ சேர ‘ட்ரை’ பண்ணட்டுமா” என்று கேட்டு விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.சிரித்துக் கொண்டே அந்த ‘ஸ்வீட்மாஸ்டர் “நீ சொல்றது ரொம்ப சரி கணேசா. எனக்கு ஒரு ஆ§க்ஷபணைமும் இல்லேப்பா.நீ ‘ட்ரை’ பண்ணு.உனக்கு ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலை கிடைச்சா,நீ தாரளமா அங்கே வேலை செஞ்சு வா.நீயும் வாழ்க்கைலே முன்னுக்கு வர வேனாமா சொ ல்லு“ என்று சொன்னார்.‘ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாஸ்டர்.நான் நாளைளே இருந்து ‘ட்ரை’ப் பண்றேன் வேறே வேலைக் கிடைச்சா உங்க ஆசீர்வாதத்தோடு,நான் அங்கே போய் வேலை செய்றேன்” என்றான் பணிவோடு கணேசன்.

ரெண்டு வாரம் போய் இருக்கும்.’மாஸ்டரை’ப் பார்க்க வந்த ஒருத்தருடன் பேசிக் கொண்டு இரு ந்த போது அவர் தன் நண்பன் ராமு ‘ஸ்வீட் மாஸ்டரை’ ப் பற்றி விசாரித்தார்.வந்த நண்பர் ‘ஸ்வீட் மாஸ்டரிடம்’ “உங்களுக்கு விஷயமே தொ¢யாதா,பத்து நாளைக்கு முன்னாலே அவர் வேலைக்குப் போ கும் போது ‘ஸ்கூட்டர்’ ஓட்டி வந்த ஒருத்தன் அவர் கால்லே’ஸ்கூட்டரை’ ஏத்திட்டான்.அவர் முன் கால்லே எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் இப்போ மாவு கட்டு போட்டுண்டு ஆத்லே தான் இருக்கார். அவர் இப்போ ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக்கு போறதில்லே” என்று சொன்னார்.”அடப் பாவமே அப்படி யா சமாச்சாரம்.அவருக்கு இப்படி ஒரு விபத்து ஆயிடுத்தா” என்று சொல்லி வருத்தப் பட்டார் ‘மாஸ் டர்’.வந்த நண்பர் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

‘மாஸ்டருக்கு’ அன்னைக்கு லீவு நாள்.‘நாம கால்லே அடிப் பட்டு இருக்கும் ராமுவைப் போய் பார்த்துட்டு வரலாம்’ என்று நினைத்து ‘மாஸ்டர்’ தன் நண்பன் ராமுவை போய் பார்த்து வரப் போனார். ‘ஸ்வீட் மாஸ்டர்’ ராமு வாசலிலேயே காலில் பொ¢ய மாவு கட்டுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார். தன் நண்பன் விசுவைப் பார்த்தவுடன் “வாப்பா,விசு,எங்கே இவ்வளவு தூரம்” என்று விசாரித்தார்.விசு ராமுவைப் பார்த்து “மூனு நாளைக்கு முன்னாடி வரதன் என் ஆத்துக்கு வந்து இருந்தான்.அவன் உன க்கு ஆன விபத்தைப் பத்தி சொல்லி,நீ மாவுக் கட்டுப் போட்டுண்டு ஆத்லே இருப்பதா சொன்னான். எனக்கு இன்னைக்கு லீவு.அதான் உன்னைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு தான் நான் வந்தேன். இப் போ எப்படி இருக்கே ராமு.எப்படிப்பா இந்த விபத்து ஆச்சு உனக்கு”என்று விசாரித்தார்.

”அதை ஏன் கேக்கறே விசு.என் போறாத காலம் பாரு.நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒரு ஓரமா போயிண்டு இருந் தேன்.புதிசா ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கற ஒரு சின்ன பையன் வண்டியை வேகமாக ஒட்டிண்டு வந்து என் கால் மேலே மோதி என்னை கீழே தள்ளிட்டு,அவனும் என் மேலே விழுந்துட் டான் பாவி.என் வலது கால்லே தொடைலே இருந்து கனுக்கால் வரைக்கும் மூனு எலும்பு முறிவு ஆயி டுத்து.அதான் மாவு கட்டு போட்டுண்டு நான் இப்படி உக்காந்துண்டு இருக்கேன்” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமு.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *