கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 12,510 
 
 

நாளைக்கு இந்நேரம் தெருவே அதிர்ந்து போய்விடும் பட்டாசு சத்தத்துல. அவா குடுக்குற நெய் முறுக்குக்காகவே தினம் தீபாவளி கொண்டாடலான்டிமா, ஆமா நேத்து காத்தால சுரேஷ் அழுதுண்டே இருந்தனே ஏண்டிமா. அவன் தீபாவளி டிரஸ்க்காக அழுதுட்டு இருந்தான் மாமி. இந்த மனுஷன் கொண்டுவர பணத்துல வயுத்த கழுவுறதே கஷ்டமா இருக்கு இதுல ரெண்டு பசங்க, இவனுக்கு படிப்பு செலவு வேற… போதுண்டிமா உன் புராணத்த கேட்ட கேட்டுண்டே இருக்கலாம். நான் போறேன் பொய் கார்த்திக்கு மதிய சாப்பாடு செய்து அத கொண்டுபோய் ஸ்கூல்ல குடுக்கணும். ஆமா நீ சுரேஷுக்கு சாப்பாடு கொண்டுபோரியோனோ அப்படியே கார்த்திக்கும் கொடுத்துடேன். ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான. செரி மாமி இன்னு ஒரு மணிநேரத்துல புறப்பற்றுவேன் சீக்கிரம் ரெடி பண்ணிடுங்க . சரி என்றபடி தலை அசைத்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தால் மாமி.

ஒரு மணி நேரம் கழித்து வள்ளி தன் இரெண்டாவது குழந்தை மூக்கில் ஒழுதுகொண்டு இருந்த சளியை தன் முந்தானையில் துடைத்துவிட்டு அதே முந்தானையில் தன் முகத்தையும் துடைத்தபின்பு, முந்தானையையும், குழந்தையையும் தன் இடுப்பில் சொருகிகொண்டு, சுவற்றில் தூங்கிகொண்டிருந்த பூட்டை எடுத்து தன் மாளிகையின் காவலுக்காக தொங்கவிட்டுவிட்டு விறு விறுவென பள்ளியை நோக்கி நடந்தால் தரைப்படை வீரர்களைப்போல.

பள்ளி காவலன் உட்புறத்திலிருந்து, முகமட்டும் பார்க்ககூடிய சிறிய கதவை திறந்து யாருமா வேணும் என்றான், சுரேஷ் “இரெண்டாம்” வகுப்பு “சி” பிரிவு என்றாள். மறுபடியும் அந்த சிறய கதவு மூடப்பட்டு ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய அளவுவுள்ள கதவை திறந்து, உள்ளே வா என்றான். அவள் தன் தலை குனிந்தவாறு அந்த கதவை கடந்து உள்ளே சென்றாள். சுரேஷும், கார்த்திக்கும் சேர்ந்தே வள்ளியை கூகி ஓடிவந்தனர். கார்த்திக்குக்கு இது ஒன்றும் புதியதல்ல சுரேஷ் அம்மா தனக்கு உணவு கொண்டுவருவது.

இருவரும் அவர்களுடைய உணவுக்கூடையை வாங்கிகொண்டு வழக்கமாக அமரும் இடத்தில் உடகார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். கார்த்திக் ஆரம்பித்தான், டேய் நாளைக்கு தீபாவளிக்கு எனக்கு ரெண்டு டிரஸ், ஒரு ச்பிதர் மென் டிரஸ் ,ஒரு ஜீன்ஸ், டி -ஷர்ட், அப்பறம் சரவெடி,பிஜிலி வெடி,லக்ஷ்மி வெடி கம்பி மத்தாப்பு,சங்கு சக்கரம், புஸ்வானம், எல்லாம் எங்க அப்பா வாங்கிட்டு வந்துருக்காரு. எங்க அக்க,அத்திம்பேர்லாம் வருவாங்க… ஜாலியா இருக்கும் தெரியுமா என்று புன்னகைத்தான். அதற்கு ஈடுகுடுக்கும் வகையில் எனக்கும் ரெண்டு டிரஸ்,பட்டாசுலாம் எங்க அப்பா வாங்கிட்டு வருவரே என்றான். தன் தந்தையின் நிதி நிலைமை தெரியாமல். கார்த்திக் அதை ஏளனம் செய்யும் வகையில், போடா போன வருஷமே நீ எங்க வீட்ல வந்து தான் வேடிக பார்த்த நாங்க பட்டாசு வெடிக்கறத, இந்த வருஷமும் அப்படிதான் என்று சொல்லி வில்லத்தனமாக சிர?!
??த்தான்.சுரேஷ் தன் முகத்தை வெகுளித்தனமாக வைத்துகொண்டு போன வருஷம் எனக்கு தம்பி பிறந்தான்ல அதன் அப்பாகிட காசு இல்ல பட்டாசு, டிரஸ் வாங்குறதுக்கு, ஆனா இந்ததடவை எனக்குதான் தம்பி பொறக்கலல அப்ப அப்பா கிட்ட காசு இருக்கும் என்று சொல்லி முடிக்கும்போது பெரிய மணி ஓசை உணவு இடைவேளை முடிந்ததை நினைவூட்ட. இருவரும் வகுபறி நோக்கி ஓடினார்கள் கை அலம்பிவிட்டு. வகுப்பறையிலும் இந்த வாதம் தொடர்ந்தது ஆசிரியரின் காதில் விழாமல் குசு குசு வென…. அன்றைய தினம் முடியும் பொழுது தீபாவளி வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்கள் வார்த்தையிலும், காகிதத்திலும்.

பள்ளியில் இருந்து இருவரும் வீடு திரும்பினார்கள் அதே விவாதத்தோடு. சுரேஷ் தன் புத்தகப்பையை விசிறியபடி வீட்டினுள் நுழைந்தான். சுரேஷ் எத்தனைமுற சொல்லிருக்கேன் பேக்கை தூக்கிபோடத அத ஒழுங்க எடுத்துவைன்னு. வழக்கம்போல் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் வள்ளியை நோக்கி சென்றான். அம்மா எங்க என் தீபாவளி டிரஸ் பட்டாசெல்லாம் என்று கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்தான், ஒரு புறம் குழந்தையும் அழுதது மறுபுறம் ஏழு மணி சங்கும் அழ தொடங்கியது. இதுங்க பத்தாதுன்னு இவன்னுங்க வேற என்று அலுத்துகொண்டாள். ஒரு வழியாக இரண்டாவது குழந்தையை சமாதானம்படுத்தினாள். இதற்க்கிடையில், சுரேஷ் அழுத சோர்வில் இரவு உணவு சாப்பிடாமலே தூங்கிட்விட்டான்.

சேவல் கூவலுக்கு மாறாக வெடி சத்தத்தில் அன்றைய தினம் விடிந்தது. தெருக்களில் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்தை பகிர்ந்துகொண்டிருந்தார்கள். திடிரென்று ஒரு வெடி தன் காதருகில் வெடித்ததுபோல் இருந்தது. தூக்கம் களைந்து எழுந்தவன் நேராக தெருவுக்கு சென்று பார்த்தான். பட்டாசு பேபர்கள் தெருவில் சிதறிக்கிடந்தன, அம்மா ஒருபுறம் அடுப்படியில் ஏதோ பரபரப்பாக செய்துகொண்டிருந்தாள்.

டேய் சுரேஷ், போய் பல் விலக்கு, தலைக்கு குளிக்கணும், சாமி கும்படனும் என்று பட்டியல்லிட்டாள்.அவன் சற்றும் தளராமல் திரும்ப ஆரம்பித்தான் எனக்கு புது டிரஸ், பட்டாசு வாங்கிகொடுத்தாதன் குளிப்பேன் என்று அழ ஆரம்பித்தான். அப்ப அடுத்த தீபாவளிக்கும் குளிக்க வாய்ப்பில்லை என்பது போல அவன் அம்மா அவனை முறைத்து பார்த்தாள். சுரேஷ் நல்ல நாள் அதுவுமா அடிவாங்காத வந்து குலி என்றாள். அவன் அழுதபடியே நின்று கொண்டுஇருந்தான். அவனை ஒருவழியாக சமாதானபடுத்தி குளிக்கவைத்து காலை உணவும் குடுத்தாள்.

பட்டாசு சத்தம் அவன் காதுகளை துழைத்து என்னை வந்து பார் என்பதுப்போல் அவனுக்கு தொந்தரவு கொடுத்தது. வெளியே சென்றால் கார்த்திக் ஏளனம் செய்வான் இருந்தும் வெளியே சென்றான். டேய் சுரேஷ் பாத்தியா நான் சொன்னேன்ல spiderman டிரஸ், ஜீன்ஸ் பாருடா என்றபடி தன் உடம்பை சுழற்றமுடியாமல் சுழற்றிகாட்டினான், பிறகு தன் கையில் இருந்த பிஜிலி வெடியை பற்ற வைத்து சுரேஷ் மேல் போடுவது போல் பாவனை காட்டி கீழும் மேலும் போடு விளையாடினான் போதாகுறைக்கு சுரேஷ்யை வெறுப்பேத்தும் வகையில் இதான் உனோட புது டிரெஸ்ஸ என்று கேலி செய்துகொண்டிருந்தான்.

சுரேஷ் கோபத்தோடு அழுதபடியே வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் புராணம் ஆரம்பித்தான். வள்ளி மறுபடியும் அவனை சமாதானபடுத்தினாள் அப்பா வங்கி வருவதாக. நேத்துல இருந்து இததான் சொல்ற அப்பா எப்ப வருவாரு என்று கைகளை தரையில் அடித்தபடி அழுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவளிக்கு வருவதாக சொல்லிட்டு போனாரு மனுஷன் எங்க இருக்கார்னு தெரில என்று மனதில் நினைத்துக்கொண்டிருக்கும்போதே சுரேஷ் தன் வீட்டின் தெருமுனைக்கு சென்று தனியாக நின்றுகொண்டிருந்த மின் கம்பத்துக்கு துணையாக அதை கட்டிபிடித்தபடி தன் தந்தையின் வரவை நோக்கி காத்துக்கொண்டிருந்தான். அவன் அம்மா சுரேஷ் சுரேஷ் என்று பலமுறை அழைத்ததும் அவன் காதுகளில் விழவில்லை.அவன் பார்வை முழுவதும் தெருவின் மேல் இருந்தது தன் மதிய உணவையும் மறந்து.

கதிரவன் மறையும் முன்பு தன் தந்தை தெருவில் தோன்றியதை கண்ட அவன், கம்பத்தை விட்டுவிட்டு அதிவேகமாக ஓடிபோய் அவன் தந்தையின் கால்களை கடிகொண்டன் அவன் நடக்க வழி இல்லாமல். சேகர் சுரேஷின் தந்தை அவனை சந்தோஷத்தோடு தூக்கி தோலில் போட்டுகொண்டு வீட்டுக்குள் நுழைத்தான். தன் தந்தை கொண்டு வந்த பைகளை களைந்து ஆராய்ந்தான் அவனுக்கு தேவையான ஒன்றும் கிடைக்கவில்லை என்றவுடன் விரத்தியில் அழ தொடங்கினான். சமாதானம் படுத்தும் முயற்சியில் இறங்கிய சேகர், முடிவில் முயற்சியை கைவிட்டுவிட்டு ஓர் அறைவிட்டான். தன் கன்னத்தில் கைவைத்தபடி அழுதுகொண்டே சுரேஷ் தன் தாயிடம் சென்று தேம்பி தேம்பி அழுதான் அவளின் மடியில் படுத்துக்கொண்டு.

வள்ளி தன் கணவனிடம் புலம்ப ஆரம்பித்தாள். நல்ல நாள் அதும புள்ளைய அடிச்சிட்டு. அவன் அப்படி என்ன கேட்டுட்டான். ஒரு நல்ல நாள் அதும புது டிரஸ் உண்டா, பட்டாசு உண்டா, பலகாரம் உண்டா…. இந்த புலம்பல்கள் கேட்காத தூரம் ஓட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அவன் கடன் வாங்காத ஆளும் இல்லை .இருந்தும் முயற்சிப்போம் என்று தெரிந்தவர்களை காண சென்றான். பல முயற்சிகளின் தோல்விகளுக்கு பிறகு அவனுக்கு 20 ருபாய் கிடைத்தது. அந்த பணத்திற்கு ஒரு சின்ன சரவெடி வங்கி கொண்டு புன்னகையுடன் வீட்டுக்கு சென்றான்.

வள்ளி, சுரேஷ், என்று வாசலில் இருந்து இரண்டு முறை கத்தினான் சந்தோசத்தில். அவள் வழக்கம்போல் அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தாள். சேகர் உள்ளே சென்று சுரேஷ்யை தேடினான். சுரேஷ் அழுத களைப்பில் உறங்கிவிட்டான். உறங்கியவனை எழுப்பி அப்பா என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு என்றான். தன் கண்களை தேய்த்துகொண்டே பார்த்தவனுக்கு மிகுந்த சந்தோஷம், வள்ளியும் ஓடி வந்து பார்த்தாள். சுரேஷின் கைகளை பிடித்து கொண்டு வா என்று வெளியே கூட்டிசென்றான். துள்ளி குதித்தபடி தன் தந்தையை பின் தொடர்ந்தான் சுரேஷ்.

தன் தந்தையிடம் இருந்த சரவெடியை வாங்கிகொண்டு. அருகில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்த கார்த்திக்கிடம் இரண்டு,மூன்று முறை காண்பித்து சந்தோசபட்டுகொண்டான்.

டேய், ” இங்க பாத்தியா, என் கையில சரவெடி இருக்கே…

தன் பையில் இருந்த தீபட்டியை எடுத்து சுரேஷிடம் குடுத்தான் சேகர்.

டேய் திரிய பிரிச்சிட்டு வைடா என்றாள் வள்ளி. தெரியும் மா என்று திரியியை கிள்ளிவிட்டு. வெடியை தரையில் வைத்தான். தீபடியினுள் இருந்த இரு தீக்குசிகளில் ஒன்றை எடுத்து ஏறிய விட்டு, திரியை நோக்கி நீட்டினான். தீ பற்றியதும், ஓடி போய் தன் தந்தையிடம் நின்றுகொண்டான். இவர்களின் புன்னகைக்கு ஏற்ப, திரியிம் சிரித்துகொண்ட வெடியை நோக்கி சென்றது. வெடி, வெடிக்க தயாராகி கொண்டிருக்கும் வேலையில்..

மழை ஜோ வென பெய்தது…. 🙁

Print Friendly, PDF & Email

1 thought on “தீபாவளி

  1. எனது முதல் படைப்பை பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி. வாசகர்களே தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *