திருமதி லலிதாமணி M.A,B.L

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 8,354 
 
 

அன்று கோர்ட்டில் அதிக வேலை இருந்தது, இரண்டு கேஸ் விசயமாக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது திருமதி லலிதாமணி அவர்களுக்கு! ஆகவே அக்கடாவென தன் அலுவலகத்தில் உட்கார்ந்தவர் தலைசாய்ந்து மெல்லிய குறட்டையுடன் நித்திரையில் மூழ்கிவிட்டார்.அப்பொழுது மணி பகல் இரண்டு இருக்கும். உள்ளே எட்டிப்பார்த்த அவரது குமாஸ்தா ரங்காச்சார்யார் அம்மையாரின் தூக்கத்தைக்கண்டு தொந்தரவு செய்யாமல் சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் வந்துவிடுவோம் என கிளம்பினார்.

யாரோ செருப்பை கழ்ட்டும் சத்தத்தை கேட்டதும் சுகமான நித்திரையிலிருந்த லலிதாமணி அவர்கள் படக்கென கண் விழித்து யாரெனப் பார்த்தார். வெகு வேகமாக உள்ளே வந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் நல்ல உடல்வாகு, களையான் முகம், ஆனால் முகத்தில் கோபம் கொப்பளித்தது.வெயிலின் தாக்கத்தால் முகம் சிறிது கருத்தும் இருந்தது.வணக்கம் மேடம் ! நித்திரை கலைந்தாலும் வந்திருப்பது கிளையன்ட் என தொ¢ந்ததால் லலிதாமணி அவர்களின் முகத்தில் மெல்லிய புன்முறுவலை காட்டி உட்காருங்க என்று இருக்கையை காட்டினார். அந்தப்பெண் உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள், இதற்குள் அந்தப்பெண்ணின் தோற்றம் மற்றும் அந்தப்பெண்ணின் நடவடிக்கைகளை கணிக்கத்தொடங்கிவிட்டார் லலிதாமணி அவர்கள்.

ஐந்து நிமிடங்கள் கழிந்தது உங்க பேரை தொ¢ஞ்சுக்கலாமா? என்று ஆரம்பித்தார் அந்தப்பெண் என் பெயர் சியாமளா, நாங்க ஆர்.எஸ்.புரத்துல இருந்து வரேன், எங்கப்பா பேர் நரசிம்மன், நாங்க மேட்டுப்பாளயம் ரோட்ல ஒரு டயர் கம்பெனி வச்சிருக்கோம் என்றாள். இந்த பெண்ணின் கழுத்தில் தாலி இருந்தும் முதலில் தன் தகப்பனை அறிமுகம் செய்ததால் பிரச்னையை ஓரளவு புரிந்துகொண்ட லலிதாம்பிகை மெல்ல உன் கணவர்…என்று இழுத்தார் அந்த பேச்சை எடுத்ததும் வந்திருந்த பெண்ணின் முகத்தில் கோபத்தின் சாயல் படிந்தது, ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் பேர் தனபால், ஒரு கம்பெனியில மானேஜரா இருக்கிறாரு, அந்த பிரச்னை பத்தித்தான் இப்ப நான் பேசனும்னு வந்திருக்கேன் என்றாள். சொல்லும்மா உன் பிரச்னை எனன? எனக்கு எப்படியாவது டைவர்ஸ் வாங்கி கொடுங்க! அந்த பெண் படபடப்புடன் சொன்னாள். ஓரளவு ஊகித்திருந்த லலிதாமணி அவர்கள் மெல்லிய புன்முறுவலுடன் சரிம்மா உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு, உன் கணவன் உனக்கு சொந்தமா, எல்லா விவரத்தையும் எங்கிட்ட சொல்லும்மா என்றார். அவரின் நிதானமான பேச்சு, சாந்தமான முகம் வந்திருந்த பெண்னின் முகத்தில் ஒரு நிம்மதி தென்பட்டது, அவர் என் அப்பாவின் அக்கா பையந்தான், அவங்க குடும்பம் எங்க குடும்பத்தை விட ரொம்ப வசதி குறைவு,
இருந்தாலும் எங்கப்பா சொன்னவுடனே அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார், அவர் வசதி கம்மி அப்படிங்கறதாலே என்னை எதுவும் செய்ய விட மாட்டேங்கறாரு, என்னை எங்கேயும் அனுப்ப மாட்டேங்கறாரு, என்னால இதுக்கு மேல தாங்க முடியல்ல இதுக்கு நீங்கதான் ஒரு முடிவு செய்யனும்.

இந்த பெண்ணின் பிரச்னை சாதாரணமானது என்றாலும் வளர விடும்போது பொ¢தாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து இந்தப்பெண் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதால் தற்போது எதுவும் பேச முடியாது என்று முடிவு செய்து கொண்டு உனக்கு கண்டிப்பா உதவி செய்யறேன், நீ இந்த முடிவை எடுத்துருக்கறது உன் அப்பாவுக்கு தொ¢யுமா? என்று கேட்டார், அப்பாவுக்கு எதுவும் தொ¢யாது, அவருக்கு என் வருத்தம்,துக்கம் எதுவும் தொ¢யாது, நானா கேட்டேன் அவரா ஒரு மாப்பிள்ளை முடிவு பண்ணாரு அதனால தினம் தினம் நான் நரகத்தில இருக்கறேன் அந்தப்பெண் விசும்பினாள்.

கவலைப்படாதே இப்ப நீ வீட்டுக்கு போ, உன் புருசன், உன் அப்பா நம்பரும் விலாசமும் எழுதிக்கொடுத்துட்டு போ, ¨தா¢யமா இரு நானே உன்னை கூப்பிடறேன் அந்தப் பெண் அவளது விலாசம், தந்தை விலாசம்,போன்எண்ஆகியவற்றை எழுதிக் கொடுத்துவிட்டு விடைபெற்றாள், அப்பொழுது சாப்பிட்டு விட்டு வந்த ரங்காச்சாரி இந்தப் பெண்ணின் முகத்தைப்பார்த்து அட இது தொழிலதிபர் நமசிவாயம் பொண்ணாச்சே என்று மனதுக்குள் நினைத்து லலிதாமணி அம்மையாரிடம் வந்து நின்றார். என்ன ஆச்சார்யாரே சாப்பிட்டாச்சா? சாப்பிட்டுட்டேன், ஆமா இந்த பொண்ணு இங்க ஏன் வந்துட்டு போகுது என்று கேட்டார். இந்த பொண்ணை உங்களுக்கு தொ¢யுமா? நல்லா தொ¢யும், இவங்க அப்பாவோட அப்பாவையும் நல்லா தொ¢யும், நல்ல கெளரவமான குடும்பம் என்றார். லலிதாமணி சிரித்துக்கொண்டே நீங்க இப்படி சொல்றீங்க இந்த பொண்ணு என்னடான்னா விவாகரத்து வாங்கிக்கொடுன்னு கேட்கிறாள். ரங்காச்சாரி அடக்கடவுளே! அந்தப்பையன் ரொம்ப நல்ல பையன், ஆனா இவங்க வசதிக்கு அவங்க ரொம்ப பொ¢ய இடம் இருந்தாலும் பொண்ணோட அப்பா பையனோட குணத்தை பார்த்துதான் கொடுத்தார். நான் அவங்க கல்யாணத்துக்கு கூட போயிருக்கேன்.

சரி முதல்ல அவங்கப்பாவையும் அவங்க புருசனையும் கூப்பிடுவோம், ரங்காச்சாரி விலாசத்தை வாங்கி அந்தப்பெண்ணின் தந்தைக்கு போன் செய்தார், எதிர்முனையில் போன் எடுக்கும் சத்தம் கேட்டவுடன் லலிதாமணியை பார்க்க அவர்கள் நீயே பேசு என் கண்ஜாடை காட்டினார். வணக்கம் சார் நாங்க லலிதாமணி வக்கீல் ஆபிசில இருந்து பேசுறோம் உங்களோட பேசனும்னு எங்க மேடம் பிரியப்படறாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா? வக்கீல் எதுக்கு ஏன் எங்கூட பேசனும்னு எதிரிலிருந்து கேட்டவுடன், ரங்காச்சாரியார் அவர் மகள் வந்த விவரத்தை தொ¢வித்தார், அவர் தானே நோ¢ல் வருவதாகவும் நான்கு மணி அளவில் அங்கிருப்பதாக தொ¢வித்தார்.அடுத்தாக அந்தப்பெண்ணின் கணவனுக்கு போன் செய்தார், இரு முறை கிடைக்காமல் மூன்றாவது முறை எதிர்முனையில் போனை எடுத்தனர்.தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரங்காச்சார்யார், உங்கள் மனைவி இங்கு வந்திருந்தார்கள் எனவும் வந்த விவரத்தையும் தொ¢வித்தார்.தானே அங்கு வருவதாக தொ¢விக்க நான்கு மணி அளவில் இங்கு இருந்தால் செளகர்யப்படும் எனவும் தொ¢வித்தார்.

லலிதாமணியின் முன்னால் திரு.நமசிவாயமும், அவரது மருமகன் தனபாலும் உட்கார்ந்திருந்தனர்.இருவர் முகமும் குழ்ப்பத்தில் இருந்தது, நமசிவாயம் தன் மகளின் எண்ணம் ஏன் இப்படி ஆனது என யோசித்துக்கொண்டிருந்தார்.தனபாலோ தன் மனைவியை தான் அதிக கட்டுப்பாடுகள் செய்து கொடுமைபடுத்திவிட்டோமோ என தவித்தான். ஆனால் இருவருமே அந்தப்பெண்ணின் மீது அன்புடன் இருப்பதை உணர்ந்துகொண்ட லலிதாமணி அவர்கள் தான் சொல்லும் யோசனைப்படி நடந்தால் அவள் மனதை மாற்றிவிடலாம் என்றார். அதன்படி நடப்பதாகவும், அவர் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதி கூறிச் சென்றனர்.

மாமா சியாமளா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுதான் என் முடிவும், அதுக்கு மேல பணம் வேணும்னா எங்கிட்ட கொஞ்சம் பணமாவும், நகையாவும், ஒரு 25 லட்சம் தேறும், அதைய வேணா எடுத்துக்குங்க என்ன சியாமளா சரிதானே என்றான். சியாமளாவுக்கு இது புதிதாக இருந்தது, தான் எது செய்தாலும், அது செலவு, இது செலவு என்பவன் அப்பாவுக்கு கஷ்டம் என்றவுடன் தன் கையிருப்பையும் தர தயாராயிருக்கிறானே! மனது சந்தோசப்பட்டது.

மாப்பிள்ளை இப்ப என்னால தனியா பிசினசை பார்க்க முடியல்ல, நீங்களாவது, இல்ல சியாமளாவாவது பொறுப்ப எடுத்துக்கணும் என்றார். மாமா இப்ப கம்பெனி நிர்வாகத்தை சியாமளா கவனிக்கட்டும், நான் அவளை எங்கேயும் அனுப்பாம வீட்டுலயே கட்டுப்பெட்டியா வைச்சுட்டேன்னு என் மேல கோபம் இருக்கும், அதனால உங்க கம்பெனியில அவளுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுங்க, நான் வழக்கமா போற கம்பெனிக்கே போறேன், எங்க குடும்பத்துக்கும் இரண்டு வருமானம் வரும், அதனால என்னை விட சியாமளாதான் பெஸ்ட் செலக்சன் என்றான்.

வொ¢குட் நாளையிலருந்து சியாமளா நீ எங்க கம்பெனி மேனேஜிங் டைரக்டரா அப்பாயிண்ட்மெண்ட் பண்றேன், உன்னை வீட்டுல இருந்து கூட்டிட்டு வர்ரதுக்கும், கொண்டு போய் விடறதுக்கும் எங்க கம்பெனி கார் ஏற்பாடு பண்றேன் என்ன சொல்ற! சியாமளா மகிழ்வுடன் தலையாட்டினாள்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடி விட்டன. லலிதாமணி அம்மையாரிடம், ரங்காச்சாரி மேடம் அந்தப்பெண் அதுக்கப்புறம் வரவேயில்லையே, வரமாட்டாள் என்றவர் அந்தப்பெண்ணுக்கு தலைக்கு மேல வேலையிருக்கும், எந்த பெண்ணையும் முடுக்கி விட்டால் போதும் அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்,இவளைப்பொருத்தவரை இவள் தந்தையும், கணவனும் நல்லவர்களாக இருந்ததால் நம் வேலை சுலபமாக முடிந்தது. என்று ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த புன்னகையுடன் சொன்னார், திருமதி.லலிதாமணி அம்மையார். M.A,B.L.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *