தாலி காத்த அம்மன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 4,944 
 
 

திருமணம் முடித்த சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. எப்போதும் அவள் புதுப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக நினைக்கிறானோ என்னவோ, பல பெண்களுடைய வாழ்க்கை தொடங்கிய உடனேயே முடிவுக்கு வந்து விடுகிறது, ஆண்டவன் எதற்கும் குழந்தைப்பேறுக்கான உடலமைப்பை ஆண்களுக்கும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடவுள்களுக்கும் ஒரு கறாரான நீதிபதி இருந்திருந்திருந்தாள் இதுகூட நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அனிதாவின் வாழ்க்கையும் இப்படித்தான் அலங்கோலம் ஆகிப் போனது. இரண்டு குழந்தைகளோடு விரட்டப்பட்ட அவள் பிறந்த வீட்டில் வாசம் செய்து வருகிறாள். அறை வாங்கி காய்த்துப் போன கன்னங்களோடு வந்தவள், ஆரம்பத்தில் அலங்கரித்துக் கொள்ளாமலும் மஞ்சள் பூசிக்கொள்ளாமலும் ஒரு வறிய விதவையைப் போல நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

குளிக்கப்போகும்போது ஊருணிக்கரையிலும், தண்ணீர் பிடிக்கும் போது குழாயடியிலும், அனிதாவின் நிலையை நினைத்து அவளுடைய மாப்பிள்ளையைத் திட்டித் தீர்த்தவர்களின் எண்ணிவிட முடியாது. அந்த அளவுக்கு சொந்த ஊரில் அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருக்கிறாள் அனிதா.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பிறந்த வீட்டில் விவசாயம் பார்த்து அதில் வரும் வருமானத்தில் குழந்தைகளைப் படிக்க வைத்து கொண்டிருந்தாள். ஒரு புதிய முயற்சியாக தனது குலதெய்வக் கோவிலான காத்தாயி அம்மன் கோவிலை புனருத்தாரணம் செய்து புதிதாக கட்டி முடித்தாள். அதற்கான குடமுழுக்கு விழாவ்க்கு நாள் பார்த்த அனிதா. நோட்டீஸ் அடித்து விநியோகிக்கத் தொடங்கி விட்டார்.

கொஞ்ச காலத்துக்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்டவர்கள் இப்போது ஆச்சிரியப்பட்டார்கள். விடிந்தால் எழுந்திரித்தால் கோவில் காரியங்களில் ஈடுபடுவதால் ஒரு பெண் சாமியாரைப் போல மாறிப்போனாள். அப்போது அவருக்காகப் பர்ந்து பேசியவர்கள் இப்போது விபூதி குங்கும ம் வாங்கிக் கொண்டு ஆசீர்வதிக்கச் சொல்கிறார்கள். ஆகையால் பழைய வாழ்க்கையையும் தாம்பத்ய இம்சைகளையும் மறந்து போய் புனிதமாகிக் கொண்டிருக்கிறாள்.

குடமுழுக்கு விழா நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் வந்து அனிதாவை வாழ்த்திச் சென்றனர். இது நடந்து முடிந்த இரண்டு நாள் கடந்த நிலையில், கணவன் மீது தொடுத்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்தது. அனிதா இதற்காகப் புறப்பட்டு நீதிமன்றத்துக்குச் சென்றாள். தீர்ப்பு வாசிக்கப்பட்டது. வாழ்வை இழந்த அனிதாவுக்கு 7 லட்சரூபாய் வழங்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையில் கல்விச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் செலவுத் தொகை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது.

ஆனால் தீர்ப்பை நிறைவேற்ற முன்வராத கணவனின் குடும்பத்தார் ‘;…உன்னோட புள்ளையை படிக்க வைக்கிறத பாக்குறேன்…” என்று சவால் விட்டார்கள். இதையெல்லாம் வைராக்கியமாக நினைத்த அனிதா. பெரிய மகனை அவன் விரும்பிய சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டுள்ளார், இப்போது நன்றாகப் படிப்பதால் பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருவதாக அனிதாவின் காதுகளுக்கு எட்டியது.

“…இதெல்லாம் காத்தாயியோட அருள்தான்… அந்தக் கோயிலுக்கு நீ என்ன செஞ்சாலும் அது உனக்கேதான் திரும்ப வரும்… தெரிஞ்சதா…” என்று அனிதாவைப் பார்த்த பெண்கள் அவரிடம் ஆறுதலாகச் சொல்லிச் சென்றார்கள்.

மீண்டும் கோவிலே கதி என்று ஆரம்பித்து விட்டார் அனிதா. அங்கு நடக்கும் திருமணங்களில் புரோகிதர் மந்திரம் ஓத, தாலி எடுத்துக் கொடுக்கும் அனிதா, “…எந்த நேரத்திலும் கைவிட மாட்டேன்..” என்று பாலில் சத்தியம் வாங்கிக் கொண்டுதான் தாலி கட்டச் சொல்கிறார், இதுதான் அந்த சுற்றுவட்டாரத்தில் இப்போது அடிபடும் பேச்சு.

இதனாலோ என்னவோ மகளைப் பெற்றவர்கள் அனைவரும் காத்தாயி அம்மன் கோவிலில்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அனிதாவின் இந்த அணுகுமுறை பெண்பிள்ளை பெற்றவர்களின் மனங்களில் புதிய குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *