தாச்சண்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 13,233 
 

யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க.

நேரமும் வந்ஹ்டு அப்பிடி அமைஞ்சி போகுதே.

அடையிற நேரத்துக்குத் தான் காட்லெயிருந்து வர முடியுது. பின்னெ வந்து.. நாலும் பாத்து காச்சி முடிக்கணும்.

‘ம்; வாங்கெ ‘ என்று குரல் கொடுத்தாள்.

உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து புறப்பட்டார் நண்டு நாய்க்கர்.

நடமாடி வர்றமா.. தரித்தெறிஞ்சாலும் நாய்ககரின் காலுக்குப் பார்வை தெரியும்.

முன்னாலெ வந்து அமத்தலா உக்காந்து கும்பாவிலுள்ள கம்மஞ்சோத்து நடுவிலெ அமுக்கு அமுக்கி பள்ளம் செய்தார். மீனம்மா ஓரகப்பைக் கறியை கொண்டு வந்து அந்தப் பள்ளத்திலெ ஊத்தி ரெப்புனா. ஆளுக்கு ஓரகப்பைக் ககறிக்கு மேலே எப்பவுங்கெடயாது. பலசரக்கும் கறி புளியும் விக்கிற வெலையிலெ என்னமுஞ் செய்ய ஏலுதா.

இதுக்குள்ளெதான் ஒப்ப்பெத்தணும். மத்தப்படி.. மோரு தண்ணீங்கெற பெறப்பு எப்பவுங்கெடையாது.

புருசம் பெஞ்சாதி, மூணு பிள்ளெக. பிள்ளெக தீப்பெட்டி ஒட்டிச் சம்பாரிக்கி. அவ காட்லெ வேல கெடச்சா உண்டும்; இல்லாட்டி பிள்ளெகளோட பெட்டியடைக்க உக்காந்துருவ.

அவருக்கு இருப்பு வாசத் திண்ணெ தான். எப்படிக் கூடியும், ஓராளாவது நெல்யம் , பாக்க வந்துரும், கொஞ்சம் , வெத்திலைப் பாக்கு, ஒரு பொடிப்ப்ட்டை, கால்ரூவா தெச்சணை. கால்ரூவாதான் .. ண்ணாலும் சும்மாப்போகுதா ? கறிக்குத் தேங்கா வாங்கிக்கிடலாமில்லெ.

அந்தப் பொடிப் பட்டை தான் உசிரு.

காலைலெ சிலது நாளைக்கு, நீத்துப் பாகம் மட்டுந்தாம். ராத்திரிக்கு பருக்க மிஞ்சினா கலைலெ ஒருவா கஞ்சியும் கெடைக்கும்.பெறவு.. வெளக்கு வைக்கிற நேரத்துக்குச் சாப்பிடுற ஒரு நேரத்துச் சாப்பாடுதாம்.

துட்டு பெறண்டா மதியத்துக்குஒரு ‘சுடுதண்ணி ‘ கெடச்சாலுங் கெடைக்கும்.மித்த நேரமெல்லாம் நகள்ரது பல்லிலெ இள்கிற இந்த ஒரு சிமிட்டாப் பொடியிலெதாம்.

எப்படித் தாந் தொட்டுந்தொடாமலும் மந்திரிச்சாலும் கறி காங்க மாட்டேங்கு. கேட்டாலுங் கெடைக்காது. வழக்கமா செய்யிராப்லெ ‘மிச்ச சோத்துக்கு தண்ணியெ விட்டு கரைச்சி உப்புக் கல்லு ஒண்ணெ வாயிலெ போட்டுக் கடிச்சிக்கிட்டு கும்பாவோட தூக்கிக் குடிக்க வேண்டியது தானா.. இண்ணைக்கி யாரும் வர மாட்டாங்களா.. கடவுளே..

திடார்ண்ணு அங்கு விலாஸ் போயிலை வாடை வருது!; ‘வாருமய்யா சுப்பையாச் செட்டியாரே ‘

சாப்பிடுற பிள்ளைக தெகைஞ்சி திரும்பிப் பார்த்தா சுப்பையாச் செட்டியாரு வாசப் படியேறி வர்றது தெரியுது. ‘ வாங்க அண்ணாச்சி, வாங்க ‘ சம்பிரதாயத்துக்குச் சொன்னாள் மீனம்மா.

‘ஆமாம்மா ‘

பிள்ளையள் குறுஞ்சிரிப்பாணியா தலெயெக் கவுந்துக்கிருது.

‘ம் சாப்பாடு நடக்குதாக்கும்; நடக்கட்டும் நடக்கட்டும். ‘

‘உக்காருங்க அண்ணாச்சி ‘

வந்தவர் உரல்லெ உக்காந்துக்கிறார்.

‘மீனம்மா , கொஞ்சம் கறி ‘

வந்தவர் திரும்பி கும்பாவைப் பார்த்தார்.

மீனம்மா அரை அகப்பையோ காலகப்பையோ கொண்டாந்து கும்பாவுலெ ஒரு இடு வச்சி கறி ஊத்தினது, அது நண்டு நாய்க்கருக்கு மட்டுந்தா தெரியும்.

– டிசம்பர் 1983

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)