தறுதலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 2,491 
 
 

அறுநூறுக்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும பெரிய கிராமம்தான், வெட்டிவயல். மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பேரூராட்சிக்கு தகுதியானதுதான் என்றாலும், கிராமம் என்ற தகுதியை தாண்டாமலேயே இருக்கிறது. விதவிதமான நாகரீக உடைகளை அணிந்து கொண்டாலும், கிராமவாசி என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள் என்று அலங்காரங்களை விரும்பி அணிந்து செல்பவர்கள். இது பிறவிப்புண்ணியமாக இருக்கலாமோ, இருக்கட்டும் இருக்கட்டும் என்று ஆதங்கத்தில் அதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இதனால்தான் ஊராட்சி பிரஸிடெண்ட் பதவியும் எழுதிக் கொடுத்துவிட்டதைப் போல் ஆகிவிட்டது. இந்தப் பதவிக்கும் மற்றவர்களைக் கண்ணுக்குத் தெரியாத அந்த ஊர் மக்கள், ஒரே குடும்பத்திலிருந்துதான், வழிவழியாக ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள். அந்த அளவுக்கு இருந்தருக்கிறது, ஜனநாயகம் மற்றும் தேர்தல் பற்றிய வைட்டிவயல்வாசிகளின் அறிவின் விசாலம். இல்லையி்ல்லை விசால அறிவு.

முப்பது ஆண்டுகளுக்குமேல், அந்த ஊராட்சியின் ப்ரஸிடெண்டாக இருந்த முத்தண்ணன் என்ற அந்த வயோதிகனால், ஊராடசிக்கு வசதி வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ, மக்கள் தொகைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அடிப்படை வசதிகள், முன்னேற்றம் என்பதில் பின்தங்கி இருந்தாலும், மக்கள் தொகைப் பட்டியலை நல்ல எண்ணக்கையில் பூர்த்தி செய்வதாக அமையப் பெற்றிருந்தது கிராமத்தின் இனப்பெருக்கத் தகுதி. ‘இது மட்டுமா. என்று கேட்டால், தட்டிக் கழித்துவிட முடியுமா ..?

முத்தண்ணன் வீட்டிலும் தன்பங்குக்கு, இரண்டு வயது வித்தியாசத்தில் எட்டுக் குழந்தைகள் இருந்தன. ஆனால் பழம்பெருமை பேசுவதிலேயே, காலத்தை கழித்த அத்தனை குழந்தைகளுக்கும், கல்வி அறிவு கிடையாது. வெறும் மக்குகளாக மக்கிப் போயிருந்தனர். அந்த ஊரில் படித்த பல இளைஞர்கள், பணி செய்து சொந்தமாக சம்பாதித்து குடும்ப வரவு செல்வுகளைக் கவனிப்பவர்களாக இருந்தனர். .. முத்தண்ணனுக்கு மூத்தவனாய்ப் பிறந்த ராஜவேல்சாமி, கோவிலின் நான்கு எபபோதும் சுற்றி வரும் கோவில்காளையாகவும், ஏழாவதாகப் பிறந்த குழந்தைக்கு வித்யாகலை இருந்ததை எப்படி உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை, எதிர்காலத்தில் செல்வாக்குப் பெறுவான் என்று கருதி, ராஜதுரை என்று பெயர் வைத்தார்கள். பெயர் சூட்டும் விழா, ஒரு திருவிழாவைப் போல் நடந்ததாக, இப்போதும் சொல்லக்கூடிய அந்தக்காலத்து மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்றோரின் அந்த நம்பிக்கையைப் படித்துத்தான் காப்பாற்றிருக்க வேண்டும் என்று இல்லைதான். பக்குவமாக நடந்து கொண்டாவது நான் அவர் மகன் என்று பெயர் வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி அவன் நடந்து கொள்ளவில்லை. தூக்கத்தைத் தவிர எஞ்சிய நேரங்களில் போதையிலேயே இருந்தான். அண்ண்ன் கோவிலைச் சுற்றி வந்தால், இவன் ஊரைச் சுற்றி வருகிறான். ‘ ஏங்க தொரையைப் பாத்தீங்களா? என்று யாராவது கேட்டால் யாரது ஊர்மாடா எங்கெ இருக்குதுன்னு தெரியலையே என்றுதான் சொன்னார்கள். அந்த லட்சணத்தில் ராஜதுரையின் போக்கு இருந்து வந்துள்ளது.

முத்தண்ணனின் பேத்தியும், செல்லமணியின் மகளுமான ரோஸூக்கு திருமண வயது வந்தது. திருமணம் முடித்த ராமசுந்தரம், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவளை அழைத்துக் கொண்டு, சென்னை சென்றான். அவனது இரண்டு குழந்தைகளும் அங்கே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். முத்தண்ணன் குடும்பத்திலேயே முதன்முதலாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்தாண்டி வசிப்பவள் ரோஸ். ஊருக்கு வந்தால், அவள் அணியும் ஆடையும், நகைகளும் உற்றார் கண்ணுக்கு விருந்தாக இருந்தாலும், அவளுடைய பங்காளிகள் விரும்பவில்லை. திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட அவளை, அவளுடைய அக்கா, பாத்தியளாடி அவளுக்கு வந்த பகுஷியை என்று கரித்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை தாத்தா பெருமைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்த வாய்கள், ரோஸை நோக்கி வஞ்சனைக் கணையையை ஏவத் தொடங்கியது. அடுக்களை்யில் வெந்து உலழும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவளுடன் செல்போனில் கதைக்கத்தொடங்கினர்.

அலுவலகம் செல்லும் கணவனுக்குப் பணிவிடை செய்யக்கூட, ரோஸூக்கு நேரம் இல்லாமல் போனது. பாவம் அவள் என்ன செய்வாள் உற்றார் உறவினர்களிடம் பேசித்தானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்ட கணவன், இரண்டு வேளை உணவை, அலுவலகம் செல்லும் வழியிலேயே முடித்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான். ஒருநாள் வீடு திரும்பிய அவனது காதில், சிரிப்புடன் பேச்சில் வீராப்பும் கேட்டது. வீட்டு வாயிலுக்கு வெளியே செருப்பைக் கழற்றிய அவன், உள்ளே செல்லாமல் வெளியே நின்றான். அப்போது” அதானே ஊருக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே..’ என்று மனைவி ஆவேசமாகச் சொன்னாள்.நாட்கள் கடந்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரோஸ் வீட்டுக்கு வந்த தினகரன், ‘ என்னாச்சு, வீடு பார்க்கப் போலாமா’ என்றான்.’… இந்தா வந்திரேன்’ என்று புறப்பட்டு வந்த ரோஸ் , தினகரனின் பைக்கில் ஏறி உட்கார்ந்தாள். அப்போது எதிரே அலுவலகத்திலிருந்து திரும்பிய ரோஸிரோஸின் கணவன், ‘எங்கே கிளம்பியாச்சு’ என்றான். அதுவரை டூவீலர் பக்கத்திலிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த ரோஸ், தினரனின் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு, எதிர்திசையில முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விடுமுறை காரணமாக, வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்த ராம்சுந்தர், சுமார் ஏழரை மணி வாக்கில் எழுந்து உட்கார்ந்தான். “அத்தாட்சி நல்லா இருக்கீங்களா, ப்ரியா எப்டிக்கீறா என்றாள் என்று ரோஸ் சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். . .இதனைக் கேட்டுக் கொண்டிருந்த வேளையில், ராமசுந்தரத்தின் தொலைபேசி அழைத்தது. அலுவலகத்திற்கு வந்த அழைப்பு. புறப்பட்டு . பத்தரை மணிவாக்கில் வாசலுக்கு வந்த அவனை, ‘ கொஞ்ச நில்லுங்க’ என்ற குரல் அவனை நின்று திரும்பிப் பார்க்க வைத்தது. ‘ ஏங்க நா வீட்டைக்காலி பண்ணப்போறேன். மாலதி அண்ணியும், அண்ணன்னுங்கூடச் சொல்லிட்டாங்க..’ என்றாள், ‘அவங்கதான் இப்ப பேசுனாங்க , பெரியவங்க பேச்சுக்கு மரியாதை தருவீங்கன்னு நினைக்கிறேன் என்றாள். ” அப்ப நா என்ன செசய்ய’ என்றான் ராமசுந்தரம். நீங்க ரூம்ல இருந்துக்கோங்க’ என்னோட முடிவு இதான்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

அலுவலகத்திலிருந்து வீடு வீடு திரும்பிய ராமசுந்தரம் ஊருக்குப் புறப்பட்டு விட்டான். ஊருக்கு வந்ததும், எடுத்து வைத்த பொருட்களை சரிபார்த்து, அடுக்கி வைத்தான் அதில் சில சட்டைகளும், பேங்க் பாஸ்புக்கும் மாயமாகி இருந்தன. வழக்கம்போல நடந்து வரும் ஒன்றுதான் இதுவும் என்பதால், அதிர்ச்சி அடைவில்லை. சில நாட்களுக்குப் பின், குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கியதால், சொந்த ஊர் வந்து. இறங்கினாள் ரோஸ். அப்போது சந்திக்க வந்த தாய்மாமன் மகள், ”அத்தாச்சி கவலைப்படாதீங்க, நம்ம குடும்பம், இது மாதிரி பிரச்சினைகளை, சந்திக்கிறது வழக்கந்தான். எனக்கும் கூட அண்ணந்தம்பியெ இருக்காங்கெ, பாத்துக்கலாம்’ என்றாள்.

“என்னடி சொல்றே?”என்று கேட்டாள் ரோஸ்

“ஆமா அத்தாச்சி இது இதோட போறதில்லை. அதனாலெ ஆட்டைத் தூக்கி குட்டியிலெ போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டுலெ போடுறதுதான் சரியா இருக்குங்கிறேன்” . நாஞ்சொன்ன முடிவு புடிக்கலேன்னா சொல்லிரு, அப்பாட்டெ சொல்லி, வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்’ என்றாள் மாமன் மகளின் ஆறுதல் வார்த்தையைக் கேட்ட ரோஸ், புதுச் சரக்கைப் பரிமாறிக் கொள்ளப் போகும் திருப்தியில், மனதிற்குள் சந்தோசமடைந்தாள். இது அவர்கள் சொந்தபந்தங்களுக்குத் தெரிய வந்தது. அக்கா வீட்டிலும், தாத்தா பிறந்த வீட்டிலும் ஏக சந்தோசம். எப்போதும் ஐந்துமணி. வாக்கில் பஜ்ஜி போடும் அவர்கள், அவர்களுக்குத் தெரிந்த, நாக்குக்குப் பழகிப் போன குழிப்பணியாரம் போட்டு சாப்பிட்டார்கள். இந்த சந்தோசத்தை தனது சம்பந்தி வீட்டுக்கும் குழிப்பணியாரமாக அனுப்பி, இன்பத்தில் திளைத்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *