(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிந்தனையில் ஆழ்ந்திருந்த ரஹீம் எப்படியாவது இன்று பணத்தை புரட்டி மகள் ரசித்தாவிடம் கொடுத்துவிட வேண்டும். அவள் கவனம் கல்வியில் இருக்கவேண்டுமே ஒழிய பணத்தைப் பற்றிய கவலை மகளுக்கு வரவே கூடாது என உறுதியுடன் நினைத்துக் கொண்டு, வழக்கமாக அவர் கடையில் மீன் வாங்கும் உணவுக்கடை முதலாளியிடம் போய் நின்றார்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அந்த உணவுக் கடையில் வியாபாரம் அமோகமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது மாலை மணி ஆறு. சீன முதலாளியான திரு. டான் ஏனோ கடந்த ஒரு மாதமாக ரஹீமை அலைய விட்டு வேடிக்கை பார்த்தான். பணத்தை நாளை தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன், என இழுத்தடிததானே தவிர, ரஹீமின் கண்ணில் பணத்தை காட்ட மறுத்தான்.
மருத்துவதுறையில் நான்காம் ஆண்டு மாணவியான ரசிதா, ரஹீமிடம் “பணத்தை கட்ட நாளைதான் கடைசி நாள்’’ என எச்சரித்து விட்டு சென்றது ஞாபகம் வந்தது ரஹீமுக்கு. இன்று எப்படியவது திரு. டானிடம் பணத்தை வாங்கிவிட்டே செல்வது என திரு. டானுக்காக காத்திருந்தார்.
உணவுக்கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் திரு. டான் சற்று நேரத்தில வந்து விடுவார் என உறுதியுடன் கூறியதால், ரஹீம் அங்கே டீக்கடை மாமாவிடம் ‘ஒரு தேநீர்’ என கூறிவிட்டு வட்டமான சாப்பாட்டு மேஜைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்தார். மாலை வெயிலில் (கூட) வேகமாக நடந்து வந்ததால் வியர்வை முத்துக்கள் ஒன்று சேர்ந்து அவர் உடம்பில் வடியத் தொடங்கின. மின் விசிறி தலைக்கு மேலே சுழன்று கொண்டு இருந்த போதும், அவன் அந்த சுகந்த காற்றை அனுபவிக்காமல் தன் குடும்ப பாரத்தை எண்ணிப் பார்த்தார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரஹீமுக்கு வயது ஐம்பது. அவர் ஒரு மீன் வியாபாரி. நேர்மை மிக்க ரஹீமுக்கு பணத்தை காண்பது எட்டாக் கனியாகவே இதுநாள் வரை இருந்து வருகிறது. ரஹீமின் மனைவி மும்தாஜ் அரசு மருத்துவமனையில் ஆயாவாக பணி புரிகிறாள்.
ரஹீம் மும்தாஜ் இருவருக்கும் மூன்று பெண் முத்துக்கள். திருமணத்திறகுப் பிறகு ரஹீம்-மும்தாஜ் இருவரும் நிம்மதி என்பதை இதுநாள் வரை காணவில்லை.
சந்தையில் மீன் விற்பனை செய்யும் ரஹீம் தன் தொழிலை நேர்மையுடனும் பொறுப்புடனும் கவனித்து வந்தார். ஆனால் நடுத்தர ஏழை மக்கள் வாழும்’ பகுதியில் வசித்து வந்த ரஹீமின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கடன் சொல்லித்தான் மீனை வாங்கிச் சென்றனர்.
பின்னிரவு ஒரு மணிக்கு எழுந்து தினமும் ரஹீம் தன் அருகிலுள்ள புக்கிட் பாஞ்சாங் மொத்த சந்தைக்குச் சென்று வஞ்சல மீன், கொடுவா மீன், இரண்டு பெரிய பெட்டிகளும், பெரிய இறால் இரணடு பெட்டிகளும் மொத்தமாக வாங்கி வந்து தன் கடையில் அழகாக வரிசை படுத்தி பரப்பி வைத்து விடுவார். அதிகாலை ஐந்து மணிக்கே வியாபாரம் துவங்கி விடும்.
வாடிக்கையாளர்கள் ரஹீமின் கடையை தேடி வந்து வாங்குவதற்கு காரணம், ரஹீமின் கடையில் அனைத்து மீன்களும் புத்தம் புதியது. மீன்கள் பளபளப்புடன், வைரக்கற்களின் ஒளியைப் போல கணகள மின்னிக் கொண்டு பார்ப்பவர்களை சுண்டி இழுத்து அழைக்கும் தன்மை கொண்டவை. வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்கு பதமாக பாங்காக வெட்டி அளவைக் குறைக்காமல் சிரித்த முகத்துடன் வியாபாரம் நடத்தி வந்தார் ரஹீம்.
சில உணவுக்கடைகளுக்கு ரஹீம் தினமும் மொத்தமாக மீன்களை துண்டு போட்டு, மீன் தலைகளை சுத்தப்படுத்தி கொடுத்தார்.
மொத்தமாக மீன் வாங்கிச் செல்லும் உணவுக்கடை உரிமையாளர்கள் சில நேரங்களில் பணத்தை உடனே கொடுத்தனர். பல நேரங்களில் ரஹீமிடம் கடன் சொல்லிச் சென்றனர்.
இதனால் ரஹீம் எதிர்பார்த்த பணத்தை, லாபத்தை கண்ணால் காண்பதே அரிதாக இருந்தது. வாடிக்கையாளர்களை ரஹீம் நேசத்துடன் மனம் ஒன்றி சகோதரத்துடன் நடத்தி வந்தார். இதனால் ரஹீமுக்கு மனித உறவு கிடைத்த(து)தேயன்றி பணம் வந்து சேராது. ரஹீம் இதற்காக பெரிதும் கவலைப்பட்டதும் கிடையாது. எல்லாம் இறைவன் செயல் என இறைவனையே பெரிதும் நம்பி வந்தார்.
ரஹீமின் மனைவி மும்தாஜ் வீட்டில் பிள்ளைகளை காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செயதுவிட்டு தன வேலைககுச சென்று வந்தாள். ரஹீமின் தாய்தான் வீட்டில் எல்லோருக்கும் சமைத்து விடுவார். ரஹீம் தன் தாய் மைமூனா மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருந்தார்.
ரஹீமின் பிள்ளைகள் மூவரும் உயர்கல்வியில் கற்றுக் கொண்டிருந்தனர். பெற்றவர்கள் படும் கஷ்டங்களை நேரில் கண்ட பிள்ளைக் மூவரும் தாங்கள் மூவரும் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என உறுதி கொண்டதோடு நல்ல சிறப்பு தேர்ச்சியில் வெற்றியும் பெற்று வந்தனர்.
இறைவன் ஒரு வாசலை அடைத்தால் ஒன்பது வாசலை திறந்து வைப்பான் என்ற மொழி பொய்யாகுமா?
மூன்றும் பெண் குழந்தையாகிவிட்டதே என ரஹீமும், மும்தாஜும் கவலைப் படாத நாளே இல்லை. பிள்ளைகளின் படிப்பை கவனிக்க பெற்றவர்களுக்கு நேரமும் கிடையாது. தெரியவும் தெரியாது. துணைப்பாட வகுப்புக்கு அனுப்ப பண வசதியும் கிடையாது. ஆனாலும் ரஹீமின் பிள்ளைகள் ரசிதா, பர்வீன், பானு ழூவரும் போட்டி கொண்டு படித்து வளர்ந்தார்கள். பொறுப்புடன் நடந்து கொண்டார்கள்.
பாட்டி மைமூனா பள்ளியிலிருந்து திரும்பும் பேத்திகளுக்கு மலர்ந்த முகத்துடன், பாசததுடன சமைதத உணவை அமுதமாக்கி ஊட்டி வளர்த்தார்.
ரஹீம் பிற்பகல் மூன்றும் மணிக்கு சந்தையிலிருந்து வீடு திரும்பி தன தாயில் கையால் உணவு பரிமாற மீன் கறியை சுவைத்து உண்டு மகிழ்ந்து அசதியில் படுத்தால் இரவு ஏழு மணிக்கு எழுந்து விடுவார்.
ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்து வந்த ரஹீமை இறைவன் அதிகமாக சோதித்து வதைத்தது ஏன் என்றே புரியவில்லை. காரியத்தோடுதான் இறைவன் எதையும் செய்வான் என்ற இறை நம்பிக்கை ரஹீமை பெரிதும் பாதிக்கவில்லை. தன் கடமையை சிரத்தையோடு செய்தார் ரஹீம். அவன் மனைவி மும்தாஜ் கணவனின் நேர்மையை பாராட்டிய போதும் மற்றவர்களைப் போல பிழைக்கத் தெரியவில்லையே என அங்கலாய்த்தாள்.
ரஹீம் சில நேரங்களில் சற்று அதிகம் பணத்தை செலவு செய்து விடுவார். யாராவது ரஹீமிடம் பணம் கடன் கேட்டால் மனம் கசிந்து ஐம்பது நூறு வெள்ளியை கொடுத்து விடுவார். தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதை மறந்து அவர் மனசாட்சி கூறியபடி வாழ்ந்து வந்தார். நேர்மை மிக்கவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ முடியுமா?
வீட்டில் தன் சொந்தப் பிள்ளைகள் சில நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்பட்டனர். இதெல்லாம் என்று தீருமோ? என மும்தாஜ் இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். சில நேரங்களில் ரஹீமிடம் பேசி சண்டையும் போட்டாள். இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றி அவ்வுப்போது சண்டை ஏற்படும். ஆனால், இருவருக்கும் ஏறபடும மனப போராடடததை அதிக நாள் நீடிக்க விடாமல் அவ்வப்போது நேசமாகி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். மும்தாஜ். வீட்டில் தன் பிள்ளைகளின் மனம் அதிக கவனம் எடுத்துக் கொண்டாள். ஆனாலும் மூத்த மகள் தன் அன்னை மும்தாஜின் முக சலனத்தைப் பார்த்து “அம்மா, என்னாச்சு, ஏன் இப்படி சோர்வா இருக்கீங்க? கவலைப் படாதீங்கம்மா, எல்லாம் சரியாயிடும்”, என ஆறுதல் மொழி கூறுவதை கேட்டு மும்தாஜின் புண்பட்ட மனதிற்கு மருந்து தடவியதைப்போல காணப்படும்.
அந்த ஆண்டு ரசிதா தொடக்கக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் சிறப்புத் தேர்ச்சியில் வெற்றி பெட்ரா செய்தி அறிந்து தாய் மும்தாஜ் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தாள். அவள் பட்ட கஷ்டமெல்லாம் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வரும் போது பஞ்சாகப் பறந்து விடும்.
பணத்திற்கு திண்டாடும் ரஹீமின் பிள்ளைகளுக்கு இறைவன் படிப்பை வாரி வழங்கினான்.
ரசிதாவுக்கு மருத்துவத்துறையில் படிப்பதற்கு’ வாய்புபு தேடி வந்தது. ஆனால், ரஹீம் “பெண் பிள்ளைகளுக்கு இவ்வளவு படிபபு போதும “, என கூறிய ரஹீமின் வ்யை அடைத்தாள் மும்தாஜ்.
“ரசிதா படிக்கட்டும், கல்வி பிள்ளைகளை எப்படியும் காப்பாற்றி விடும்” என முன்மொழிந்தாள்.
“மருத்துவம் படிக்க வைக்க எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏது?” எனத ரஹீம் கேட்டபோது மும்தாஜ் விடவில்லை. அரசின் உதவியோடு உதவித தொகையை பெற்றதுடன், வங்கியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி மகளை படிக்க வைக்க துணிந்தாள்.
ரஹீம் “இதெல்லாம் சரி வருமா, அகலக்கால் வைக்கிறே பார்த்துக்கோ” என கூறிச் சென்றுவிட்டார்.
மும்தாஜ் கணவனிடத்தில் வேகத்தோடு பேசிவிட்டாளே தவிர, அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழாமலில்லை. மருத்துவ படிப்பை முடித்து வெளியே வர ஆறு ஆண்டுகள் ஆகும். பணம் தண்ணீர் பட்டபாடு ஆகும் என எண்ணி கலக்கம் அடைந்தாலும், மன தைரியத்தை இழக்கவில்லை.
மகள் ரசிதாவும் தான் டாக்டர் படிப்பை தொடர்வதில் மிக உறுதியாக இருந்தாள், இறைவன் எழுதிவிட்ட தலையெழுத்தை யாரால் அழிக்கமுடியும்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் மாணவியாக சேர்ந்தாள்: படித்தாள். அரசு உதவித் தொகை ஓரளவு கிடைதத போதும் ரஹீம் தன் மீன் வியாபாரத்தில் வரும் பணம மும்தாஜின சம்பளம எல்லாம் தண்ணீராக கரைந்தது. காற்றாக பறந்தது. இரவு, பகல் என ரஹீம் கடையில் உழைத்தார். ஆண்டுகள் சென்றன.
அந்த நேரத்தில் ரஹீமின் இரண்டாவது மகள் பர்வீனுக்கும் மருத்துவத் துறையில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிள்ளையை படிக்க வைப்பதே குதிரைக் கொம்பாக இருந்த நேரத்தில் இப்போது இரணடாவது மகளுக்கும் செலவு. ரஹீம் மனம் தளர்ந்தபோது முமதாஜ ஊககம கொடுத்தாள்.
தன் பிள்ளைகளுக்கு கல்விதான் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தாள். தன் பிள்ளைகளை எப்படிய வது மருத்துவராக காண வேண்டும் என ஆசைப்பட்டாள்.
கடல் மீன்களை அதிகம் வியாபாரம் செய்யும் ரஹீம் அந்த மீன்களைப் போலவே அலைகடலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ரசிதா நான்காம் ஆண்டு படிக்கும் போது மும்தாஜுக்கு சத்திய சோதனை ஏற்பட்டது. ஆம்.
குடும்பத்தலைவன் ரஹீம் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றது. ஏற்கனவே பற்றாக்குறை குடும்பம் நடத்தும் மும்தாஜ் தன் கணவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என ஆண்டவனை வேண்டிக்கொண்டு, மருத்துவமனைக்குச் சென்று, அவசர பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு படுக்கையில் படுக்கையில் மயக்க நிலையில் காய்ந்த கொடியாக கிடந்த கணவனைக் கண்ட மும்தாஜுக்கு கண்ணில் கண்ணீர் ஆறாக சுறுசுறுப்பாக இயங்கும் கணவன் இப்படி ஆகிவிட்டாரே என மும்தாஜ் அழுதாள்.
ரஹீமின் தாய் மைமூனா மருமகளுக்கு ஆறுதல் கூறியதுடன், மகன் ரஹீமை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.
மருத்துவர் உடனே ரஹீமுக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறியதுடன் பணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யச் சொன்னார். ரஹீம் ஒரு மீன் வியாபாரி என்பதால் மத்திய சேமநிதியில் பணம் கிடையாது. ‘மெடிசேவ்’விலும் பணம் இல்லை. மும்தாஜின் சேமநிதிப் பணம் வீட்டுக்கடன் கட்ட பயன்பட்டது. மும்தாஜின் மெடிசேவிலும் பணம் குறைவாகவே இருந்தது.
ஆறடி ஆறங்குல உயரமும், ஆஜானுபாகுவான உடலும் கொண்ட ரஹீம் படுக்கையில் மூச்கத் திணறலுடன் கஷ்டப்படுவதைக் கண்ட மும்தாஜ், கடன் வாங்கி கணவன் ரஹீமின் இதய அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டாள். உயிர் பிழைத்து எழுந்தார் ரஹீம். தந்தையைக் கண்ட பிள்ளைகள் மூவரும் மனதில் வேதனையடைந்தனர். ஆனால், படிப்பில் கவனத்தை விடாமல் இன்னும் சிரத்தையுடன் படித்தனர். வீட்டில் சோதனைகள், பணப்பிரச்சனைகள் தோன்றிய போதெல்லாம் ரசிதாவுக்கு கல்வியில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியமே தோன்றியது.
பிள்ளைகளின் படிப்பு பாதித்து விடக்கூடாது என மும்தாஜ் தன் உழைப்பை கொட்டியதுடன், பிள்ளைகளுடன் மனம் தளரக்கூடாது என ஆறுதல் கூறி எல்லா வலியையும் அவளே ஏற்றுக் கொண்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்தாள்.
மருத்துவ சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தில் வீடு திரும்பிய ரஹீம் போதிய ஓய்வு எடுக்காமலேயே மீண்டும் தன் மீன் வியாபாரத்திற்குச் சென்றார். மனைவி மும்தாஜ் எவ்வளவோ எடுத்துச் சொன்னாள், ஓய்வு எடுத்துக் கொள்ள ஆனால் ரஹீம் “நான் கடைக்குப் போகாட்டி வாடிக்கையாளர்ங்க போயிடுவாங்க. அப்புறம் பணம் எங்கிருந்து வரும்”, எனக் கேட்டதுடன், உடனே தனக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்க கிளம்பியும் விட்டார்.
“ஹாய் ரஹீம்” என்ற குரல் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டு எதிரில் திரு. டான் நிற்பதைப் பார்த்தான். ரஹீம் மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விபட்ட உணவுக் கடை முதலாளியான திரு. டான் ரஹீமுக்கு கொடுக்க வேண்டிய ஐநூறு வெள்ளி பணத்தையும் கையில் கொடுத்தான். பணத்தை கையில் வாங்கிய ரஹீம் மகிழ்ச்சியுடன் திரு.டானுக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினார். மேலும் வர வேண்டிய பாக்கி பணத்தை நாளை வசூலிக்க திட்டமிட்டதுடன் மகள் ரசிதாவிடம் பணத்தைக் கொடுத்து உடனே கல்விக்கான கட்டணத்தை கட்டச் சொன்னார்.
இறைவன் அருளால் அந்த ஆண்டுடன் ரசிதாவின் மருத்துவ படிப்பு முடிந்தது. சிறப்புத் தேர்ச்சியில் வெற்றி பெற்ற ரசிதா தன் தாய் தந்தையின் ஆசீர்வாதத்துடன் இறையருளைப் பெற்று ஹவுஸ் சர்ஜனாக பணியைத் தொடங்கினாள்.
மகள் ரசிதாவை இந்த மருத்துவர் கோலத்தில் காண கனவு கண்ட தாய் மும்தாஜ் தன் இதயங்கனிந்த நன்றியை இறைவனுக்கு தெரிவித்ததுடன் ஆனந்தக் கண்ணீரையும் வடித்தாள். ஆனால், ரஹீம் உணர்ச்சியில்லாதவன் போல காணப்பட்டார். ரஹீம் தன் மகளை மணக் கோலத்தில் காணவே விரும்பினார். தன் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பி அவள் இல்லறத்தை பேணிக்காத்து வாழ வேண்டும் என்பதே ரஹீமின் ஆசையாக இருந்தது. தன்மானம் நிறைந்த ரஹீம் தன் மகளுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை திருமணமே என உறுதியாக நினைத்தார்.
இறைவனின் அருளால் அந்த நேரத்தில் டாக்டர் மாப்பிள்ளை ரஃபி என்பவனுக்கு ரசிதாவை பெண் கேட்டனர் ரஃபியின் பெற்றோர். மிகுந்த மகிழ்ச்சியுடன் ரஹீம் தன் மகள் ரசிதாவிடம் பேசிய போது ரசிதா கூறிய பதில் ரஹீமை திகைக்க வைத்தது.
ரசிதா தான் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து பெற்றோருக்கு உதவிக்கரம் நீட்டிய பிறகு கல்யாணம் செய்துக் கொள்வதாக உறுதியாகக் கூறினாள்.
ஆனால், ரஹீம் தன் மகள் ரசிதாவின் வருமானத்தை சிறிதும் எதிர்பார்க்காமல், உடனே ரசிதாவுக்கு திருமணம் முடிக்க மாப்பிள்ளை வீட்டாருக்கு சம்மதம் கூறியதுடன் அதற்கான ஏற்பாட்டையும் விரைந்து கவனித்தார்.
வேறு வழியின்றி மும்தாஜும் மகளின் திருமணக் கோலத்தைக் காண ஆவல் கொண்டதுடன் மகள் ரசிதாவிடம், “உன் ஆசைகளை உன் கணவன் ரஃபியுடன் சேர்ந்தே நீ காணலாம்”, என்று கூறி சம்மதிக்க வைத்தாள்.
பிள்ளைகள் படித்து பெற்றோர்களை காப்பாற்றும் என் எண்ணும் மற்ற மனிதர்களை போல் எண்ணாமல் ரஹீம் நடந்து கொண்ட விதம் ஊரில் பலரை ஆச்சரியப்பட வைத்தது.
பெரிய படிப்பு படித்து டாக்டராகிவிட்டால் கார், பங்களா என் வசதிகளுடன் வாழ நினைக்கும் தந்தைகளுக்கு மத்தியில் ரஹீம் சிகரம் போல உயர்ந்து நின்றார். ரஹீம் தன் மகள்களுக்கு அந்தந்த நேரத்தில் திருமணத்தை முடிக்கவே திட்டமிட்டார்.
ரஃபியின் பெற்றோர்களும் பெண் ரசிதாவின் படிப்பை களாகவே அமைந்தது அவள் பெற்ற பாக்கியம் ரஃபியின் வீட்டில் எந்த சீரும் எதிர்பார்க்கவில்லை.
தன் பிள்ளைகள் சிறப்பாக வாழ்ந்தால் போதும் தனக்கு எதுவும் வேண்டாம் என நினைத்தார் ரஹீம். மனிதரில் மாணிக்கமாக விளங்கும் ரஹீமை அவன் மனைவி மும்தாஜால் கூட புரிந்து கொள்ள இயலவில்லை.
தந்தை ரஹீமின் விருப்பத்திற்கு இணங்கி திருமணத்திற்கு சம்மதித்தாள் மகள் ரசிதா. மாப்பிள்ளை மனிதாபிமானம் நிறைந்தவனாகவும் தன்னடக்க மிக்கவனாகவும் இருந்தது ரசிதாவுக்கு மிகுந்த மனா நிறைவைத் தந்தது.
திருமணம் எளிய முறையில் நடந்தால் போதும் என கூறிவிட்டாள் ரசிதா, தன் சேமிப்பை பயன்படுத்தி மும்தாஜ், மகள் ரசிதாவுக்கு ஆடைகள், நகை என்று கொஞ்சம் வாங்கினாள்.
ரஃபி-ரசிதா திருமணம் முக்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்து எளிய முறையில் நடைபெற்றது. மகள் ரசிதா ரஃபியுடன் திருமணக் கோலத்தில் நின்ற காட்சியைக் கண்ட ரஹீம் மகிழ்ச்சிக் கடலில் குளித்தார். வந்தவர்கள் மணுமக்களை வாயார வாழ்த்தி விட்டு, இரவு விருந்தை முடித்து வீடு திரும்பினார்கள்.
அன்று இரவு ரஹீமுக்கு தூக்கம் வரவில்லை. வழக்கம் போலவே பின்னிரவு இரண்டு மணிக்கு எழுந்து புக்கிட் பாஞ்சாங் சந்தைக்குச் சென்று மீன்களை வாங்கச் சென்றார்.
அடுத்த மகள் பர்வீன் படிப்பிற்காகவும், மூன்றாவது மகள் பானு அப்போதுதான் மருத்துவ படிப்பிற்குச் சென்றிருந்தாள். அவர்களின் கல்விக்காக தன் உழைப்பை கொடுத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். டாக்டரின் தந்தை என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் கசங்கிய சட்டையை அணிந்து கொண்டு மீன்களை துண்டு போட்டு வெட்டி தன் கடையில் அடுக்கி வியாபாரத்தைக் கவனித்தார்.
அப்போது மகன் ரஹீம் மீதும், பேத்திகள் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்த தாய் மைமூனா திடீரென நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார். எதற்குமே மனம் கலங்காத ரஹீம் தன் தாய் மைமூனாவின் பிரிவைத் தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதார். மனைவி மும்தாஜ் ரஹீமுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தார்.
ரஹீம் தன் மீன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு கஷ்டப் படுவதைக் கண்ட மகள் ரசிதா “அப்பா நீங்க இனிமே மீன் கடையிலே வியாபாரம் பண்ண வேண்டா, நானே மாசா மாசம் உங்களுக்கு பணம் தர்ரேன்” என கூறினாள். ரஹீம் தன் மகள் ரசிதாவின் தலையை அன்புடன் தடவிக் கொடுத்து,
“ரசிதா என்னை ஆண்டவன் கைவிட மாட்டான். இப்போ எனக்கு உழைக்க வலு இருக்கு, தைரியம் இருக்கு, என்னால வீட்ல சும்மா இருக்க முடியாது, மீன் வாசத்துல வேலை செஞ்சு பழகிட்டேன், செய்யறேன். வயசான காலத்துல உதவி தேவைப்பட்டா அப்ப பார்த்துக்கலாம்” என சாதாரணமாகப் பேசினார் ரஹீம். தந்தையின் தன்மான உணர்ச்சிகளை புரிந்து கொண்ட ரசிதா தன் தங்கையின் கல்விக்கு உதவி செய்ய எண்ணினாள்.
ரஹீம் தன் உழைப்பை மட்டுமே தன் எதிர்காலமாக நினைத்து மீன் வியாபாரத்தை முன்னைவிட இன்னும் அதிக சிரத்தை எடுத்து செய்வதை பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர்.
உண்மையுடன் உழைத்து வாழும் ரஹீம் எல்லோருக்கும் நல்ல முன்மதிரியாக விளங்கினார் .வாழும் சரித்திரம் படைத்தவர்களில் ரஹீமும் ஒருவர். மகளிடம் கைநீட்டி காசு வாங்க ரஹீமின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
– தமிழ் முரசு, 28.06.2003.
– பிரகாசம் சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு: மே 2006, சிங்கப்பூர்.